தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, January 10, 2009

வெட்டி பேச்சு - Jan 11

மறுபடியும் அமெரிக்கா வந்தாச்சு. 

வலைப்பதிவுல எழுதி ஐம்பது நாளுக்கு மேல ஆகுது. போன பதிவுல பின்னூட்டம் போட்டவங்க எல்லாருக்கும் நன்றி. அதுல நீங்க கொடுத்த லிஸ்ட்ல இருந்து ஓரளவிற்கு புத்தகங்களை வாங்கி படிச்சிட்டேன். பெரும்பாலும் சுஜாதா புத்தகங்கள் தான் படிச்சேன். பாலகுமாரன் புத்தகத்துல இரும்பு குதிரைகளும், மெர்க்குரி பூக்களும் படிச்சேன். இரும்பு குதிரை ரொம்ப பிடிச்சிருந்தது. குறிப்பா குதிரை கவிதைகள். ஆனா மனுசன் ரொம்ப தத்துவம் பேசி கொல்லறாரு. தாங்க முடியல.

சுஜாதா புத்தகங்கள் எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்தது. குறிப்பா பிரிவோம் சந்திப்போம். அதுலயும் குறிப்பா முதல் பாகம். இரண்டாவது பாகம் ஏமாத்திடுச்சி. அதோட தொடர்ச்சி எழுதலாமானு ரெண்டு நாளா ஒரு சிந்தனை ஓடிட்டு இருக்கு. இப்ப அடுத்த ஜெனரேஷன் வந்திருக்கும். பார்க்கலாம்...

தொடர்ந்து நிறைய புத்தகங்களை படிச்சதுக்கப்பறம் இத்தனை நாளா நாம எல்லாம் ஏன் இப்படி குப்பையா எழுதி தள்ளிட்டு இருந்தோம்னு ரொம்ப வருத்தமா இருக்கு. ரெண்டரை வருஷத்துக்கு மேல எழுதனதுல சொல்லிக்கற மாதிரி எழுதனது ஒரு பத்து பக்கம் தான் வரும்னு தோணுது. க்வாலிட்டி ரைட்டிங் என்பது இனிமே வருமானு தெரியல.

........................................

ரெசஷன் சமயத்துல சத்யம் பிரச்சனை இப்படி பூதகரமா வெடிச்சது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா எலக்‌ஷன் சமயம் என்பதால் இந்திய அரசாங்கம் எப்படியும் உதவும் என ஒரு நம்பிக்கையிருக்கிறது. புதுசா படிச்சிட்டு வரவங்க நிலைமையும் கவலைக்கிடமாத்தான் இருக்கு.

நிறைய வதந்திகள் கிளம்பிட்டு இருக்கு. முடிஞ்ச வரை நாம எதையும் பரப்பாம\பேசாம இருக்கறது நல்லது. 

.......................................


குளிர்ல இருந்து தப்பி போகறோம்னு நினைச்சிட்டு போனேன். மறுபடியும் குளிர்ல வந்து சிக்கி கொண்டேன். வழக்கம் போலவே குளிர் பின்னி பெடலெடுக்குது. மறுபடியும் ஃப்ரோசன் ஃபுட் தேசத்திற்கு வந்து ஃப்ரோசன் ஃபுட் சாப்பிட ஆரம்பிச்சாச்சி.  India was good. ரெண்டு மாசத்துல ஒரு நாள் கூட நான் சமைக்கல. 

இந்தியால இருந்து வரும் போது அடையார் Grand Sweetsல இருந்து வத்தக்குழம்பு மிக்ஸ், புளிக்காய்ச்சல் மிக்ஸ் எல்லாம் கொண்டு வந்தேன். ரெண்டுமே நல்லா இருக்கு. ஆன்சைட் வரவங்க தாராளமா வாங்கிட்டு வரலாம். 


அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!!


34 comments:

SanJaiGan:-Dhi said...

Welcome Back Vetti :)

SanJaiGan:-Dhi said...

//பாலகுமாரன் புத்தகத்துல இரும்பு குதிரைகளும், மெர்க்குரி பூக்களும் படிச்சேன்.//

ஒருகாலத்துல தூர்தர்ஷன்ல இரும்புக் குதிரைகள் தொடராக வந்தது. ஓரளவு தொடர்ந்து பார்த்தேன். அப்போ அதில் வரும் கவிஞர் கதாபாத்திரம் (என்று நினைக்கிறேன்) சொன்ன கவிதை ஒன்று இன்றும் மறக்கவில்லை.
“ நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறென்..
என் மகன் தீப்பெட்டிப் படங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறான் “

..இது பாலகுமாரன் எழுதியதா?

அப்போ எனக்கு இது புரியலை.. ரொம்ப கேவலமா பார்த்தேன்.. இதெல்லாம் கவிதையா என்று.. பிறகு தான் புரிந்தது. இன்று வரை எனக்கு பிடித்த கவிதை இதுவே. :)

வெட்டிப்பயல் said...

மிக்க நன்றி சஞ்சய்...

இரும்பு குதிரைகள் நாடகம் வந்துச்சானு தெரியல. நான் சொல்றது அந்த கவிதை இல்லை. நான் சொன்னது குதிரை கவிதைகள். குதிரைக்கும் கதாநாயகன் குணத்தையும் சேர்த்து விளக்கும் கவிதைகள். அந்த கவிதைகளுக்காகவே அந்த புத்தகம் எடுத்துட்டு வரணும்னு நினைச்சேன். டென்ஷன்ல மறந்துட்டேன்.

குதிரைகள் கடவுள் ஜாதி
அதை வணங்குதல் மனித நீதி

அப்படினு ஆரம்பிக்கும். போக போக பட்டையை கிளப்பும். எனக்கே பிடிச்சிருந்துதுனா பார்த்துக்கோங்களேன் :)

நிச்சயமா படிக்கலாம் :)

முரளிகண்ணன் said...

வாங்க வாங்க

Divya said...

Welcome back anna:)))

துளசி கோபால் said...

நல்வரவு.

சமையல் குறிப்புக்கு நன்றி:-)))

இராம்/Raam said...

இரும்புக்குதிரைகள் என்னை நெம்பவே கவர்ந்த கதாபாத்திரம் காயத்ரி தான்.... நாவலோட இறுதி காட்சிகளிலிலே அவ பேசுறதுவும் பிடிச்சிருந்தது...

அப்புறம் சின்ன ரெக்கமண்டெசன்... cliched'ஆ படிக்கிறதே விட்டுட்டு வாசிப்புதளத்தை வேறு பக்கமா கொண்டுவாப்பா... :)

ஆயில்யன் said...

நல்வரவு :)

ஆயில்யன் said...

//அடையார் Grand Sweetsல இருந்து வத்தக்குழம்பு மிக்ஸ், புளிக்காய்ச்சல் மிக்ஸ் எல்லாம் கொண்டு வந்தேன். ரெண்டுமே நல்லா இருக்கு. ஆன்சைட் வரவங்க தாராளமா வாங்கிட்டு வரலாம். //

பயனுள்ள தகவல் !

வரப்ப வாங்கிட்டு வரணும் :))

வேத்தியன் said...

ரொம்ப நாளுக்குப் பிறகு உங்க பதிவு...
தொடர்ந்து எழுதுங்க...

PoornimaSaran said...

//சுஜாதா புத்தகங்கள் எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்தது. குறிப்பா பிரிவோம் சந்திப்போம்//

ரொம்ப நாட்களா நான் படிக்கனும்னு நினைத்திட்டிருக்கும் புத்தகம் இது.. அப்புறம் குட்டி பாப்பா நலமா??

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனா மனுசன் ரொம்ப தத்துவம் பேசி கொல்லறாரு. தாங்க முடியல//

:)))
வெல்கம் பேக்!

நீங்க பேசின தத்துவம் எல்லாம் கூட ஒருத்தர் கணக்கெடுத்து வச்சிருக்காரு! :)

Boston Bala said...

வாங்க! :)

Divyapriya said...

welcome back அண்ணா...மறுபடியும் நல்ல கதைகளை எதிர்பாக்கலாம்னு சொல்லுங்க :)

குமரன் (Kumaran) said...

வாங்க பாலாஜி.

தனியா வந்திருக்கீங்களா? குழந்தை எப்படி இருக்கு?

கப்பி | Kappi said...

welcome back :)

வெட்டிப்பயல் said...

//
முரளிகண்ணன் said...
வாங்க வாங்க//

மிக்க நன்றி மு.க...

வழக்கம் போல பட்டையை கிளப்பிட்டு இருக்கீங்க :)

வெட்டிப்பயல் said...

//Divya said...
Welcome back anna:)))//

மிக்க நன்றி தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//
துளசி கோபால் said...
நல்வரவு.

சமையல் குறிப்புக்கு நன்றி:-)))//

மிக்க நன்றி டீச்சர் :)

யாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இவ்வையகம் :)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...
இரும்புக்குதிரைகள் என்னை நெம்பவே கவர்ந்த கதாபாத்திரம் காயத்ரி தான்.... நாவலோட இறுதி காட்சிகளிலிலே அவ பேசுறதுவும் பிடிச்சிருந்தது...
//
என்னை கவர்ந்தது ராவுத்தர் கதாபாத்திரம் தான்... அடுத்து கௌசல்யா பாத்திரம்... காயத்ரி என்னை பெருசா இம்ப்ரஸ் பண்ணல.

//
அப்புறம் சின்ன ரெக்கமண்டெசன்... cliched'ஆ படிக்கிறதே விட்டுட்டு வாசிப்புதளத்தை வேறு பக்கமா கொண்டுவாப்பா... :)//
இப்ப தான் நான் படிக்கவே ஆரம்பிக்கறேன்... அதுக்குள்ள வாசிப்பு தளமா??? :)))

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//அடையார் Grand Sweetsல இருந்து வத்தக்குழம்பு மிக்ஸ், புளிக்காய்ச்சல் மிக்ஸ் எல்லாம் கொண்டு வந்தேன். ரெண்டுமே நல்லா இருக்கு. ஆன்சைட் வரவங்க தாராளமா வாங்கிட்டு வரலாம். //

பயனுள்ள தகவல் !

வரப்ப வாங்கிட்டு வரணும் :))//

கண்டிப்பா வாங்கலாம்... நல்லா உபயோகப்படுது :)

வெட்டிப்பயல் said...

//வேத்தியன் said...
ரொம்ப நாளுக்குப் பிறகு உங்க பதிவு...
தொடர்ந்து எழுதுங்க...

4:20 AM//

மிக்க நன்றி வேத்தியன்... நிச்சயம் முயற்சி செய்யறேன் :)

வெட்டிப்பயல் said...

//PoornimaSaran said...
//சுஜாதா புத்தகங்கள் எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்தது. குறிப்பா பிரிவோம் சந்திப்போம்//

ரொம்ப நாட்களா நான் படிக்கனும்னு நினைத்திட்டிருக்கும் புத்தகம் இது.. அப்புறம் குட்டி பாப்பா நலமா??//

கண்டிப்பா படிங்க பூர்ணிமா சரண்... நல்ல கதை :)

பப்பா சூப்பரா இருக்கா :)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆனா மனுசன் ரொம்ப தத்துவம் பேசி கொல்லறாரு. தாங்க முடியல//

:)))
வெல்கம் பேக்!

நீங்க பேசின தத்துவம் எல்லாம் கூட ஒருத்தர் கணக்கெடுத்து வச்சிருக்காரு! :)
//

யார் அந்த ஒருத்தர்... அந்த தத்துவத்தை எல்லாம் எனக்கு அனுப்பி வைக்க சொல்லுங்க :)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...
வாங்க! :)//

வந்தாச்சி :)

ச்சின்னப் பையன் said...

வருக வருக...

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
welcome back அண்ணா...மறுபடியும் நல்ல கதைகளை எதிர்பாக்கலாம்னு சொல்லுங்க :)

12:49 PM//

மிக்க நன்றி தங்கச்சி... ஆனா நல்ல கதை கிடைக்குமானு சொல்ல முடியாது :)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...
வாங்க பாலாஜி.

தனியா வந்திருக்கீங்களா? குழந்தை எப்படி இருக்கு?//

நன்றி குமரன்...

ஆமா குமரன். தனியாதான் வந்திருக்கேன். பாப்பா நல்லா இருக்கா...

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...
welcome back :)

7:08 PM//

வரவேற்பிற்கு நன்றிப்பா...

வெட்டிப்பயல் said...

//
ச்சின்னப் பையன் said...
வருக வருக...//

மிக்க நன்றி ச்சி.பை

இலவசக்கொத்தனார் said...

வாங்க, மீண்டும் பாஸ்டந்தானா? பாப்பா போட்டோ எல்லாம் அனுப்புங்க.

Anonymous said...

Thalaivare,
Unga kadhaigalai kuraiva ninaikaatheenga... U did a neat job in the past. Hope u will continue to....
I would like to suggest 2 books for you. Check whether u get the books.
1) Dharmangal Sirikindrana by Ra.Ki.Rangarajan
2) Geethamadi Nee Enaku by Indhumathi.
Both are romantic... Neenga padichitu andha kadhaigalai pathiyum padhivu pannunga.....

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
வாங்க, மீண்டும் பாஸ்டந்தானா? பாப்பா போட்டோ எல்லாம் அனுப்புங்க.

10:50 PM//

ஆமாம் கொத்ஸ்.. அதே இடம் தான்...

கண்டிப்பா :)

வெட்டிப்பயல் said...

// BHASKAR said...
Thalaivare,
Unga kadhaigalai kuraiva ninaikaatheenga... U did a neat job in the past. Hope u will continue to....
I would like to suggest 2 books for you. Check whether u get the books.
1) Dharmangal Sirikindrana by Ra.Ki.Rangarajan
2) Geethamadi Nee Enaku by Indhumathi.
Both are romantic... Neenga padichitu andha kadhaigalai pathiyum padhivu pannunga.....//

மிக்க நன்றி பாஸ்கர்...

இப்ப அந்த புத்தகமெல்லாம் இங்க வாங்க முடியாதே :(

இந்தியா வந்ததும் படிச்சிட்டு நிச்சயம் எழுத முயற்சி செய்யறேன்...