தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, November 26, 2008

வெட்டி பேச்சு - ந‌வ‌ம்ப‌ர் 26

ஒரு வழியா ஆபிஸ்ல இருந்து யுனிகோட்ல டைப் பண்ற வழியை கண்டுபிடிச்சாச்சி. இனிமே அடிக்கடி சந்திக்கலாம்னு நினைக்கிறேன்.

பாப்பாக்கு பர்மிதானு பேர் வெச்சிருக்கோம். அவுங்க அம்மா செலக்ஷன். ப்ரஜ்னானு முதல்ல யோசிச்சாங்க. அது எல்லார் வாய்லயும் பிரச்சனைனு வந்ததால அந்த பேர் ரிஜக்ட் ஆகிடுச்சி. நான் சொன்ன பேர் (பவித்ரா, பாரதி, பாவனா) எல்லாம் முதல் சுற்றுலயே எல்லாரும் ரிஜக்ட் பண்ணிட்டாங்க.

சரி யோகிதானு வைங்கனு சொன்னா, அது அட்டெண்டன்ஸ்ல கடைசில வரும்னு சொல்லி ரிஜக்ட் பண்ணிட்டாங்க.

ச‌ரி ந‌ம்ம‌ சொன்ன‌ பேர் எல்லாம் அடுத்து ந‌ம்ம‌ க‌தைல‌ வ‌ர‌ நாய‌கிக‌ளுக்கு வெச்சிட‌லாம்னு முடிவு ப‌ண்ணிட்டேன். அங்க‌ யாரும் ரிஜ‌க்ட் ப‌ண்ண‌ முடியாதே ;)

...........................

இங்க பெங்களூர்ல நண்பர்களோட மாரத்தஹல்லி (மாரத்தல்லி)ல தங்கியிருக்கேன். அங்க இருந்து ஆபிஸ்க்கு வரதுக்கு 45 நிமிஷத்துல இருந்து ஒரு மணி நேரமாகுது. இருந்தாலும் பஸ் பயணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த நேரத்துல ஏதாவது படிக்கிறேன். (வந்த புதுசுல சுஜாதா அறிவியல் சிறுகதைகள், இப்ப சர்டிபிகேஷன்)

பெங்க‌ளூர்ல‌ இன்னைக்கு எல்லாம் குளூரு பின்னி பெட‌லெடுக்குது. த‌மிழ்நாட்ல‌ ம‌ழை பின்னி பெடுலெடுக்குது போல‌.

............................

வார‌ணம் ஆயிர‌ம் ப‌த்தி எல்லாரும் பிரிச்சி மேஞ்சிட்டாங்க‌. இருந்தாலும் ந‌ம்ம‌லும் ஏதாவ‌து சொல்ல‌னுமில்லை.

அப்பா கேர‌க்ட‌ர்ல‌ வேற‌ யாராவ‌து ந‌டிச்சிருக்க‌லாம். தேவ‌ர் ம‌க‌ன்ல‌ சிவாஜி சார் ரோலை க‌ம‌ல் ப‌ண்ணிருந்தாலும் ந‌ல்லா தான் ப‌ண்ணிருப்பாரு. ஆனா ப‌ட‌ம் எப்ப‌டி இருந்திருக்கும்?

ரெண்டாவ‌து பாஆஆஆஆஆஆஆஆதி ஏன் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல்னு தெரிய‌ல‌. முத‌ல் பாதி என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருந்த‌து. ஆனா அதுல‌யும் மெக்கானிக்க‌ல் ப‌ச‌ங்க‌னா ந‌ல்லா ப‌டிக்காம‌ ர‌வுடியா சுத்துவாங்க‌னு சொன்ன‌து க‌டுப்பை தான் வ‌ர‌ வெச்ச‌து. ந‌ல்ல‌ ப‌ர்சென்டெஜ்ல‌ பார்த்தா க‌ம்ப்யூட்ட‌ர் ப‌ச‌ங்க‌ளை விட‌ மெக் தான் அதிக‌மா இருப்பாங்க‌.

இப்ப‌ என் கூட‌ ரூம்ல‌ இருக்குற‌ ப‌ச‌ங்க‌ ரெண்டு பேருமே மெக் தான். ரெண்டு பேருமே 80%க்கு மேல‌. க‌ம்ப்யூட்ட‌ர் ச‌யின்ஸ்ல‌ பொண்ணுங்க‌ தான் அதிக‌ ப‌ர்ச‌ன்டேஜ் வெச்சிருப்பாங்க‌ ;)

சூர்யா ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் நிச்ச‌ய‌மா ச‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. கௌத‌ம் மேன‌ன்... சூர்யாவை விட‌ நீங்க‌ தான் அதிக‌மா உழைக்க‌ணும். எனக்கு அஞ்சலை பாட்டு தான் ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ பாட்ல எப்பவும் அந்த பாட்டு தான்

ச‌மீரா ரெட்டியை இவ்வ‌ள‌வு அழ‌கா காட்ட‌ முடிஞ்ச‌து ஆச்ச‌ரிய‌மா இருந்த‌து. அவுங்க‌ உட‌ல் வாகு ஒரு ப‌யில்வான் மாதிரி இருக்கும். தெலுகு ப‌ட‌த்துல‌ ஜுனிய‌ர் என்.டி.ஆரோட‌ குத்து பாட்டு ஆடும் போது ந‌ல்லா தெரியும். இதுல‌ அவுங்க‌ ஸ்மைலை ம‌ட்டும் வெச்சி ஓட்டனதுக்காக‌ வேணா கௌத‌மை பாராட்ட‌லாம்.

அப்ப‌ற‌ம் நான் சென்னைல‌ பார்த்த‌ முத‌ல் ப‌ட‌ம் இது தான். காசி தியேட்ட‌ர்ல‌ பார்த்தேன். அதுவும் முத‌ல் ரோல‌ உட்கார்ந்துட்டு. நடு சீட்டு ந‌டு சீட்டுனு அவ‌ன் டிக்கெட் கொடுக்கும் போது (ப்ளாக்ல) சொன்ன‌து உள்ள‌ போய் பார்த்த‌ போது தான் புரிஞ்சிது.

...................................

சுஜாதா எழுத‌ன‌துல‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளும், பால‌ குமார‌ன் எழுத‌ன‌துல‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளும் கொஞ்ச‌ம் சொல்லுங்க‌. இனிமேவாது த‌மிழ் புத்த‌க‌ங்க‌ளை ப‌டிக்க‌ ஆர‌ம்பிப்போம்... அப்ப‌டியே எங்க‌ வாங்க‌ற‌துனும் சொல்லுங்க‌. நான் ஸ்பென்ச‌ர், ஹிக்கின்போத்த‌ம்ஸ்னு தேடி பெருசா எதுவும் கிடைக்க‌ல‌.

64 comments:

Anonymous said...

//க‌ம்ப்யூட்ட‌ர் ச‌யின்ஸ்ல‌ பொண்ணுங்க‌ தான் அதிக‌ ப‌ர்ச‌ன்டேஜ் வெச்சிருப்பாங்க‌//
In most of the colleges there wont be even a single girl in the mechanical department. That might be the reason. This very reason also attributes to the bullying nature of the mechanical 'guys'.

Cheers,
--Nokia Fan

வெட்டிப்பயல் said...

நீங்க சொல்றது உண்மை தான். ஆனா நான் சொல்ல வரது கம்ப்யூட்டர் சயின்ஸ் பசங்களுக்கு எந்த விதத்துலயும் படிப்புல மெக்கானிக்கல் பசங்க குறைவில்லாம இருப்பாங்கனு தான்.

அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு?

நசரேயன் said...

வாழ்த்துக்கள்
மீண்டும் வருக

சின்னப் பையன் said...

பர்மிதா - நல்லா வித்தியாசமா இருக்கு... வாழ்த்துக்கள் வெட்டி...

Divyapriya said...

back with a bang!!! super anna...இனிமே ஆபீஸ்ல சீரியஸா ஒரு word document open பண்ணி வச்சிட்டு பதிவ type பண்ணுங்க :))

பர்மிதா, அட இந்த பேரு ரொம்ப நல்லா இருக்கே...

தமிழ் புக்ஸ் வாங்கணும்னா, ஏதாவது பதிப்பகத்துக்கு போங்க (விஜயா பதிப்பகம், வானதி பதிப்பகம்) ஆனா சென்னை ல இதெல்லாம் எங்க இருக்குதுன்னு தெரியாது...

Divyapriya said...

வெட்டிப்பயல் said...
//அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு//

அட ஆமால்ல...ஆனா ஒரு வேளை மெக்கு பசங்க கெத்து பசங்கன்னு சொல்றாரோ என்னவோ ;)

rapp said...

//அப்பா கேர‌க்ட‌ர்ல‌ வேற‌ யாராவ‌து ந‌டிச்சிருக்க‌லாம். தேவ‌ர் ம‌க‌ன்ல‌ சிவாஜி சார் ரோலை க‌ம‌ல் ப‌ண்ணிருந்தாலும் ந‌ல்லா தான் ப‌ண்ணிருப்பாரு. ஆனா ப‌ட‌ம் எப்ப‌டி இருந்திருக்கும்?
//

இதே உதாரணத்தை தான் சுரேஷ் கண்ணன் சார் கூட சொல்லிருந்தார். கரெக்டா சொல்லிருக்கீங்க:):):)

கபீஷ் said...

ஹாய் நியூ ஃபாதர்!


//அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு?//

கூல்

rapp said...

பாப்பா பேரோட அர்த்தம் என்ன?

rapp said...

நெறைய எழுதுங்க மறுபடியும்:):):) வாழ்த்துக்கள்:):):)

தீரன் said...

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர்வதற்கு மெக்கை விட கூடுதல் மதிப்பெண்கள் தேவை. விருப்பட்டு மெக் எடுப்பவர்கள் மிகவும் குறைவு. அதன் அடிப்படையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர்பவர்கள், இயல்பாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களாகவும் அமைந்து விடுகின்றனர்.

கிருஷ்ணா said...

கௌத‌ம் மெக்கானிகல் தான்

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

>>சுஜாதா எழுத‌ன‌துல‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளும், பால‌ குமார‌ன் எழுத‌ன‌துல‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளும் >>

சுஜாதா:
கடவுள்களின் பள்ளத்தாக்கு-கட்டுரைகள்*
வானமெனும் வீதியிலே*
மீண்டும் ஜீனோ
என் இனிய இயந்திரா
இருள் வரும் நேரம்
தீண்டும் இன்பம்*
கொலையுதிர் காலம்
இரத்தம் ஒரே நிறம்*
எப்போதும் பெண்*
கனையாழியின் கடைசிப்பக்கம்*
காந்தளூர் வசந்தகுமாரன் கதை*
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்
கற்றுதும் பெற்றதும்*
தலைமைச்செயலகம்*
ஆ*
இரண்டாவது காதல் கதை*

இப்போதைக்கு நினைவுக்கு வருவது இதுதான்.

பாலகுமாரன்??? ஏதாவது ஒன்னு போதும்,எல்லாமே அதே மாதிரிதான் இருக்கும் !

வெட்டிப்பயல் said...

Parmitha - Goddess Saraswathi.

விஜய் ஆனந்த் said...

:-)))...

பேர் அருமையா இருக்கு!!!

Anonymous said...

அப்பா கேரக்டருக்கு ரகுவரனைப்போடலாம்னு இயக்குனர் இருந்திருப்பார்னு நினைக்கிறேன். பல முறை ரகுவரனை ஞாபகப்படுத்தறார் அப்பா சூர்யா.

பாலகுமாரன் கதைகள்ல்ல பழைய கதைகள் படிங்க, பயணிகள் கவனிக்கவும், பந்தயப்புறா, கண்ணாடி கோபுரங்கள், செந்தூர சொந்தம் எல்ல்லாம் நல்லா இருக்கும்

TBCD said...

மாரத்தகல்லியா..பக்கமா தான் இருக்கீங்க..வெட்டியா ஒரு சந்திப்பு போட்டுறுவவோமா... :)

MSATHIA said...

சுஜாதா , பாலகுமாரன் புத்தகங்கள் chennai central stationல இருக்கற higgin bothams புத்தக கடையில கிடைக்கும்.

DHANS said...

என்னுடன் மெக்கனிக்கல் துறையில் மூன்று பெண்கள் ஆனாலும் அவர்களை விட பையன்களே அதிக மதிபெண்கள் எடுத்திருந்தனர். nokia Fan சொல்வது போல எல்லாம் இல்லை, எனக்கு முந்தைய செட்டில் ஏழு பெண்கள் அங்கேயும் நிலைமை இப்படியே.

அனாலும் மெக்கனிக்கல் பையன்கள் கொஞ்சம் ஜோல்ல்யகதான் இருப்பார்கள், அதற்க்கு காரணம் அப்படியே பழக்கப்பட்ட சூழ்நிலை,

சூர்யாவை விட கௌதம் நன்றாக உழைத்திருக்க வேண்டும் என்பது உண்மை

Venkatramanan said...

You can get books of both the authors from udumalai.com or AnyIndian.com ordering online. (Keerthi of http://avyukta.blogspot.com/ had already written about purchasing in udumalai.com - http://avyukta.blogspot.com/2008/03/blog-post_29.html) I have got books from AnyIndian. They have a fantastic customer support for online purchase!

Regards
Venkatramanan

SurveySan said...

வெல்கம் பேக்!

கைப்புள்ள said...

பர்மிதா - பேரு வித்தியாசமா இருக்கு. நான் முதல்முறையா கேள்வி படறேன். நல்லாருக்கு.

மறுபடியும் எழுத ஆரம்பிச்சதுல சந்தோஷம். ஒரு நாள் பெங்களூர்ல பாக்க முயற்சி பண்ணலாம்.
:)

Poornima Saravana kumar said...

//பாப்பாக்கு பர்மிதானு பேர் வெச்சிருக்கோம்.//

பெயர் சூப்பர்..

//அவுங்க அம்மா செலக்ஷன்.//

இனி எல்லாமே இப்படி தான்:))

குட்டி பாப்பா சௌக்கியமா?
இந்த அத்தை கேட்டாங்கனு சொல்லுங்க..

பாபு said...

இரும்பு குதிரைகள்,மெர்குரி பூக்கள்,கரையோர முதலைகள்,பயணிகள் கவனிக்கவும்
நிறைய இருக்கு
லக்கி லுக் கின் இரும்பு குதிரைகள் பற்றிய பதிவு சமீபத்தில் ஒன்னு வந்தது பாருங்க,அதில் நிறைய பேர் நிறைய suggestions கொடுத்து இருக்காங்க


பல்சுவை நாவலில் அவருடைய நிறைய கதைகள் மலிவு பதிப்பாக வந்தது
அவங்க addrass க்கு எழுதினா எல்லா புத்தகமும் கிடைக்கும்
மௌன்ட் ரோடு ல பாதி விலைக்கு இந்த பல்சுவை novel கிடைக்கும்

பரிசல்காரன் said...

வெல்கம் பாலா-ஜி!

சுஜாதாவோட கணையாழியின் கடைசிப் பக்கங்கள் முழுத் தொகுப்பும் (ரு. 450? 500?)வந்திருக்கு. மிஸ் பண்ணாதீங்க.

பாலகுமாரனின் சிறுகதைத் தொகுப்பு வாங்கிப் படிங்க. வீட்டுக்குப் போய் குறுஞ்செய்தி அனுப்பறேன்.

வெட்டிப்பயல் said...

//நசரேயன் said...
வாழ்த்துக்கள்
மீண்டும் வருக
//

Thx a lot Nasareyan :)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
பர்மிதா - நல்லா வித்தியாசமா இருக்கு... வாழ்த்துக்கள் வெட்டி...
//

மிக்க நன்றி தல‌

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
back with a bang!!! super anna...இனிமே ஆபீஸ்ல சீரியஸா ஒரு word document open பண்ணி வச்சிட்டு பதிவ type பண்ணுங்க :))

பர்மிதா, அட இந்த பேரு ரொம்ப நல்லா இருக்கே...

தமிழ் புக்ஸ் வாங்கணும்னா, ஏதாவது பதிப்பகத்துக்கு போங்க (விஜயா பதிப்பகம், வானதி பதிப்பகம்) ஆனா சென்னை ல இதெல்லாம் எங்க இருக்குதுன்னு தெரியாது...
//

வேர்ட் டாக்குமெண்ட் எல்லாம் இல்லைமா. நான் இதை பயன்படுத்தறேன்.
http://www.higopi.com/ucedit/Tamil.

எல்லாம் அண்ணி செலக்ஷன் தான் :)

ஹிம்ம்ம்... முதல்ல‌ கிழக்கு பதிப்பகத்துக்கு ஒரு விசிட் விட்டுட வேண்டியது தான் :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
வெட்டிப்பயல் said...
//அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு//

அட ஆமால்ல...ஆனா ஒரு வேளை மெக்கு பசங்க கெத்து பசங்கன்னு சொல்றாரோ என்னவோ ;)//

கெத்துனா ப‌டிப்புல‌யும் கெத்துனு காட்ட‌னுமில்லையா? மின்ன‌லேல‌ ம‌ட்டும் அரிய‌ர் இருக்குற‌ மாதிரி சொன்னா ஓகே. இதுல‌யும் அப்ப‌டி ஏன் காட்ட‌ணும்?

வெட்டிப்பயல் said...

//rapp said...
//அப்பா கேர‌க்ட‌ர்ல‌ வேற‌ யாராவ‌து ந‌டிச்சிருக்க‌லாம். தேவ‌ர் ம‌க‌ன்ல‌ சிவாஜி சார் ரோலை க‌ம‌ல் ப‌ண்ணிருந்தாலும் ந‌ல்லா தான் ப‌ண்ணிருப்பாரு. ஆனா ப‌ட‌ம் எப்ப‌டி இருந்திருக்கும்?
//

இதே உதாரணத்தை தான் சுரேஷ் கண்ணன் சார் கூட சொல்லிருந்தார். கரெக்டா சொல்லிருக்கீங்க:):):)
//

ஓ... எனக்கு படம் பார்க்க ஆரம்பிச்சவுடனே அது தோன ஆரம்பிச்சிடுச்சி. அப்பா ரோலுக்கு கார்த்திக்கை போட்டிருக்கலாமோ?

வெட்டிப்பயல் said...

//கபீஷ் said...
ஹாய் நியூ ஃபாதர்!
//
சொல்லுங்க‌ நியூ ப்ளாக‌ர் ;)


//அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு?//

கூல்
//

எப்பவுமே கூல் தான் ;)

வெட்டிப்பயல் said...

//rapp said...
நெறைய எழுதுங்க மறுபடியும்:):):) வாழ்த்துக்கள்:):):)

9:32 AM
//

நிச்சயமா முயற்சி செய்யறேன் :)

வெட்டிப்பயல் said...

//தீரன் said...
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர்வதற்கு மெக்கை விட கூடுதல் மதிப்பெண்கள் தேவை. விருப்பட்டு மெக் எடுப்பவர்கள் மிகவும் குறைவு. அதன் அடிப்படையில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் சேர்பவர்கள், இயல்பாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களாகவும் அமைந்து விடுகின்றனர்.
//

ஹா ஹா ஹா...

கம்ப்யூட்டரை விருப்பப்பட்டு சேர்பவர்களை விட காசுக்காக கம்ப்யூட்டர் சேர்பவர்கள் தான் அதிகம். பள்ளி கூடத்துல மார்க் எடுத்துட்டு வந்து காலேஜ்ல மார்க் எடுக்காதவங்க ரொம்ப அதிகம். ஆனா ஒவ்வொரு படத்துலயும் மெக்னா அரியரோட சுத்துவாங்கனு காட்றது சரியில்லை.

வெட்டிப்பயல் said...

//கிருஷ்ணா said...
கௌத‌ம் மெக்கானிகல் தான்
//

ஓ.. அந்த அரியரோட சுத்துற நாயகர்கள் எல்லாம் அவரோட சாயல் தானா?

வெட்டிப்பயல் said...

//அறிவன்#11802717200764379909 said...
>>சுஜாதா எழுத‌ன‌துல‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளும், பால‌ குமார‌ன் எழுத‌ன‌துல‌ ந‌ல்ல‌ புத்த‌க‌ங்க‌ளும் >>

சுஜாதா:
கடவுள்களின் பள்ளத்தாக்கு-கட்டுரைகள்*
வானமெனும் வீதியிலே*
மீண்டும் ஜீனோ
என் இனிய இயந்திரா
இருள் வரும் நேரம்
தீண்டும் இன்பம்*
கொலையுதிர் காலம்
இரத்தம் ஒரே நிறம்*
எப்போதும் பெண்*
கனையாழியின் கடைசிப்பக்கம்*
காந்தளூர் வசந்தகுமாரன் கதை*
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்
கற்றுதும் பெற்றதும்*
தலைமைச்செயலகம்*
ஆ*
இரண்டாவது காதல் கதை*

இப்போதைக்கு நினைவுக்கு வருவது இதுதான்.
//
மிக்க‌ ந‌ன்றி அறிவ‌ன். இது எல்லாமே வாங்கிட‌லாம்.

//பாலகுமாரன்??? ஏதாவது ஒன்னு போதும்,எல்லாமே அதே மாதிரிதான் இருக்கும் !
//
ஆஹா... நிஜ‌மாவா சொல்றீங்க‌?


மெட்ராஸ்ல‌ எங்க‌ வாங்க‌லாம்னு கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ளேன் :)

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

வெட்டி சார்,

தேவதை வருகைக்கு என் வாழ்த்துக்கள். நல்ல பேர். புக்ஸ் வாங்க பெஸ்டு சென்னை புத்தக விழா தான். ஜனவரி முதல் வாரத்துல நடக்கும். எல்லா பதிப்பக ஸ்டாலும் இருக்கும். போனஸா 10% கழிவு உண்டு. எப்படியும் ஒரு வாரம் நடக்கும். பொதுவா இந்த பிரபல ஸ்டோர்ஸ்ல அவ்வளவு நல்ல கலெக்ஷ்ன் இருக்காது.

கிருஷ்ணா

வெட்டிப்பயல் said...

//TBCD said...
மாரத்தகல்லியா..பக்கமா தான் இருக்கீங்க..வெட்டியா ஒரு சந்திப்பு போட்டுறுவவோமா... :)
//

Thala,
Sure... Freeya irukum pothu intha numberuku callungalen 09611722335

நாகை சிவா said...

வித்தியாசமான பெயர், ஆனா நல்லா இருக்கு :)

வெல்கம் பேக் வெட்டி...

மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிக்கவும் :)

குமரன் (Kumaran) said...

பர்மிதாவுக்கு வாழ்த்துகள் பாலாஜி.

நான் வழக்கமாக பாலகுமாரனின் மாத நாவல்களைப் பழைய புத்தகக் கடையில் தான் வாங்குவேன். பாதிவிலைக்கு. தி.நகரில் பேருந்து நிலையம் அருகில் சிவா விஷ்ணு கோவில் எதிரில் ஒரு தெருவோரக் கடையின் வாடிக்கையாளன். :-)

Silly Village Girl said...

I was about to say that girls score good in comp sci. However you have mentioned in next line itself

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இங்கிட்டு திருப்பி வந்தீங்கன்னா Perm-ita-ன்னு ஆக்கீருவானுங்க வெள்ளைக்காரப் பசங்க! :)
*********************
//ச‌ரி ந‌ம்ம‌ சொன்ன‌ பேர் எல்லாம் அடுத்து ந‌ம்ம‌ க‌தைல‌ வ‌ர‌ நாய‌கிக‌ளுக்கு வெச்சிட‌லாம்னு முடிவு ப‌ண்ணிட்டேன்//

ஹைய்யா!
அப்போ இனி வெட்டி கதைகளில், கதாநாயகிகள் எல்லாம் சந்தோஷமான முடிவாத் தான் இருக்கும்! :))
*********************

Welcome Back Permi-thaa :)
நல்வரவு பர்மிதா!

//வெட்டிப்பயல் said...
Parmitha - Goddess Saraswathi//

இப்படி ஒத்தை வரில எல்லாம் சொல்லாம, ஒரு நல்ல விளக்கமா, தகுந்த பாடல்களோடும் சுலோகங்களோடும் பெயர்க் காரணப் பதிவைப் போடச் சொல்லும்மா, உங்கப்பாவை! :)

திவாண்ணா said...

பர்மிதா -p ஆ, b ஆ, இல்லை bhஆ?

வெட்டிப்பயல் said...

//திவா said...
பர்மிதா -p ஆ, b ஆ, இல்லை bhஆ?
//

Dhiva sir,
Its Parmitha (Parmita)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்!

பாலகுமாரனோட ஆரம்பகால புத்தகங்கள் நல்லாருக்கும். என்னோட பரிந்துரைகள்,

மௌனமே காதலாக - சிறுகதை தொகுப்பு

பச்சை வயல் மனது - சின்ன நாவல்.

படிச்சுட்டு சொல்லுங்க!!

Unknown said...

thala, chennaila irukengala.. aiyoo... ungala pakkamudiyalaiyea.

by the way, nan rombo nala ungaloda blog reader. Introduced by sujatha article from vikatan.

neenga appa anathai ketu rombo santhosam. vazhthukkal.

apparam, chennaila from January 2nd week till pongal Book fair naduthuvanga.. paperla varum venue enga nu.

anga namma sujatha,vairamuthu,balakumaran,rajanarrayanan,vaali eppadi palaroda specialized stalls iruku. poi parunga.

meendum santhikumvari.

Suresh Babu

Karthik said...

//க‌ம்ப்யூட்ட‌ர் ச‌யின்ஸ்ல‌ பொண்ணுங்க‌ தான் அதிக‌ ப‌ர்ச‌ன்டேஜ் வெச்சிருப்பாங்க‌ ;)//

naan aamodikiren.. ippadiku Virus maanavan

பர்மிதா-- vidyaasamana pearu thaan.. artham ennanga??

//ரெண்டாவ‌து பாஆஆஆஆஆஆஆஆதி ஏன் இவ்வ‌ள‌வு சொத‌ப்ப‌ல்னு தெரிய‌ல‌.//

Naa nalla thoongunen.. Neenga thoongala??

//சூர்யா ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ம் நிச்ச‌ய‌மா ச‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை.//


All efforts for no cause

//எனக்கு அஞ்சலை பாட்டு தான் ரொம்ப பிடிச்சிருக்கு.//

neakum neakum

சுஜாதா, பால‌ குமார‌ன் books la moor market la kidaikum.. aana palasu.. pudusu venumna Central Higginbothams la irukum..

Anonymous said...

Welcome Back thala.
Check for Balakumaran and Sujatha novells @ Higgin bothams at MG Road. There they have a seperate section for tamil . Try it

Wishes and regards to பர்மிதா

Anbu

மேவி... said...

//அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு//

may be gautam might have kept many arrears during his college days. he is a mec student only

மேவி... said...

//அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு//

might be gautam may hav kept many arrears during his college days.
he s mec student oly

Anonymous said...

Hello Vetti. I have been reading your writings and admire sometimes. But, really surprised to know that you haven't read Sujatha's and Balakumaran's most of stories. These writers are revolutionists of modern Tamil writing...you MUST read them. Then, JanakiRaman, Kalki, Devan...man, you have long way to go...! Don't miss these greats

பொன்ஸ்~~Poorna said...

//பெங்க‌ளூர்ல‌ இன்னைக்கு எல்லாம் குளூரு பின்னி பெட‌லெடுக்குது. //
உங்க பாஸ்டனை விடவாண்ணா? ;)

ஆமாம், பர்மிதாவுல பி for பாய்ஆ? இல்லை பி for பீட்டரா? ;-)

முரளிகண்ணன் said...

welcome back.

Anonymous said...

nalla irukku site
www.kts-news.blogspot.com

Subramanian Vallinayagam said...

Hi Balaji,

best wishes for ur kid.

I am one of the gr8 fans of balakumaran, I used to buy balakumaran books in the old book shops in chennai.

- moor market neat central station chennai.
- T nagar lending library ; they will sell books for 1/2 rate. I hope that name is 'shakthi'..

http://answers.yahoo.com/question/index?qid=20080319153013AA1cfDS


I recommend these Balakumaran Books,

1) பயணிகள் கவனிக்கவும்
2) இனி எல்லாம் சுகமே
3) தலயணை மந்திரம்
4) ஆலமரம்
5) உள்ளங்கவர் கள்வன்
6) சரஸ்வதி

still i can list many books, but for now pls try to read these stories.

If u want to borrow bala books pls mail me .. I am in bangalore only (in madiwala maruthinagar)

vnsmanian2006@gmail.com


-

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

சுஜாதாவோட ரொம்பக் குட்டி நாவல்ல ஒன்னு ஆனா ரொம்ப அருமையான நாவல்களில் ஒன்னு விட்டுப் போச்சு...
பொதுவா நாவல்களே எல்லாம் எந்த மனநிலை மாறுபாடுகளும் இல்லாமல் என்னால் படிக்க முடியும்.ஆனா இந்த நாவல் கொஞ்சம் கண் கலங்க வச்சது..
மிஸ் பண்ணாதிங்க...

பதினாலு நாட்கள்

Boston Bala said...

கொஞ்சம் தாமதமான வரவேற்பு... வாங்க :)

புத்தகம் வாங்குவதற்கு 'சென்னை புத்தகக் கண்காட்சி' வரை காத்திருக்கவும். நிறைய தள்ளுபடி கிடைக்கும். பதிவர் சந்திப்பும் நடக்கும் ;)

Anonymous said...

பாலாஜி,

பாலகுமாரன் எழுதிய "உடையார்" படிச்சுப்பாருங்க. மொத்தம் 6 பாகம்.
பொன்னியின் செல்வன் மாதிரி.

நான், Chennai Citycentre la இருக்கிற Landmark ல வாங்கினேன்.

Kathir.

கிருஷ்ணா said...

//கிருஷ்ணா said...
கௌத‌ம் மெக்கானிகல் தான்


ஓ.. அந்த அரியரோட சுத்துற நாயகர்கள் எல்லாம் அவரோட சாயல் தானா? //

இல்ல சார்

அவரொட செட்லெ இளமாறன் எல்லாம் 100 மார்க் பசங்க

கௌதம் எனக்கு கல்லூரியில் 2 ஆண்டு இளையவர்

கா.கி said...

இன்னும் ஒரு மாசம் wait பண்ணா புத்தக கண்காட்சி வரும்... அதுல உங்களுக்கு எல்லா புத்தகங்களுமே கிடைக்கும்...
நான் உங்களுக்கு recommend பண்ற சுஜாதா புத்தகங்கள்,

1. கனவு தொழிற்சாலை - சினிமா உலகத்த பற்றி ஒரு நாவல்
2. பதவிக்காக - அரசியல் உலகத்த பற்றி ஒரு நாவல்
3. சிறுகதை தொகுப்பு - இது 3 பிரிவுகளா இருக்கும்.. ரெண்டு புத்தகம் சாதாரண சிறுகதைகள்.. ஒண்ணு விஞ்ஞான சிறுகதைகள்...
4. கணேஷ் வசந்த் நாவல்கள்ல சிலது நல்லா இருக்கும் - மூன்று நிமிஷம் கணேஷ் எனக்கு பிடிச்சதுல ஒண்ணு..
5. ரத்தம் ஒரே நிறம் - முதல் சுதந்திர போராட்டத்த base பண்ணி ஒரு நாவல்..
6. கட்டுரைகள்ல, கற்றதும் பெற்றதும் & கணையாழியின் கடைசி பக்கங்கள்..
7. முக்கியமா, "விளிம்பு" அப்படீன்னு ஒரு சின்ன கதை இருக்கு.. கிடைச்சா படிங்க.. படிச்சு நான் அப்படியே ஷாக் ஆய்ட்டேன்... முதல் முறை படிச்ச அப்பறம் கிடைக்கவே இல்ல... still searching..

இன்னும் நிறைய நல்ல புத்தகங்கள் இருக்கு.. நானும் படிச்சிருக்கேன்.. ஆனா இதெல்லாமே எனக்கு பிடித்த சுஜாதாவின் படைப்புகள்.. பாலகுமாரன் கதைகள் படிக்கறதில்ல, ஆனா "உடையார்" நல்லா இருக்கும்னு கேள்விப் பட்டிருக்கேன்.. தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்த சுற்றி பின்னப்பட்ட கதைனு நினைக்கறேன்..

கா.கி said...

முக்கியமான ஒரு லவ் ஸ்டோரி விட்டுட்டேன்...
பிரிவோம் சந்திப்போம், இரண்டு பாகம்...

Anonymous said...

One of best of best from Ganesh and Vasanth is 'Nirvana Nagaram'...
you can't predict climax...
And few of you mentioned about Chennai annual book exhibition, am I right? If so, could you please share the exhibition period for 2009- I will be in India in first three weeks of Jan and aiming to visit the exhibition

கா.கி said...

@essex siva
i dunno the xact date, but it s usually during pongal holidays...

நாகராஜன் said...

வணக்கம் பாலாஜி. பாப்பாக்கு நல்ல பெயர் தேர்வு. பர்மிதாவுக்கு வாழ்த்துக்கள்.

SUBBU said...

""அது ஏன் இப்ப‌வும் கௌத‌ம் ப‌ட‌த்துல‌ மெக் ப‌ச‌ங்க‌னா அரிய‌சர்ஸோட‌ இருக்க‌ற‌ மாதிரி ம‌ட்டுமே காட்ட‌றாரு?""

ha ha... And your baby name very nice