தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, October 16, 2008

கொத்தனாரை போட்டு தாக்குவோம் மக்கா!!!

நம்ம கொத்தனார் மாசம் மாசம் அட்டகாசமான புதிர் ஒண்ணு போடறார்.

போன மாசம் அவர் புதிர் போட்ட அன்னைக்கு எண்விராண்மெண்ட் டவுன். சும்மா இருந்ததால என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும் போது இந்த புதிரை பார்த்தேன். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமானு களம் இறங்க ஆரம்பிச்சிட்டேன்.

முதல் கேள்வி

இடமிருந்து வலம்

3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3) .

"ப"ல தொடங்கனும் "நி" வரும். தெய்வம் காட்சி அளிப்பது. உடனே "பழநி" வந்துடுச்சு. இதுக்கு அவர் ஈசியா பேரரசு கடைசி படம்னு சொல்லியிருந்தா இன்னும் சுலபமா இருக்கும் ;)

5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)

கா, த, லை,க் போட்டு ஜம்புல் பண்ணியிருக்காரு. ச,ரி,க,ம,ப,த,நி இதுல ஒரு வார்த்தையை சேர்க்கனும். அப்படி சேர்த்தா உறுதியில்லாதனு வரும். அப்படி யோசிக்கும் போது வந்தது தான் "நிலைக்காத"

6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)

இதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இதோட முதல் எழுத்து லா தெரிஞ்சும் (மே.கி - நிலா) கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டமா போயிடுச்சு.

7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)
தானா வரது சுயம்பு. அது முடியாம போனா "சுயம்".

8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)
க,ச,மா,ற,வை. "க"ல ஆரம்பிக்கும். "ச"ல முடியும். அதுக்குள்ள மா,ற,வை வரணும். அப்ப தான் கறவைமாசனு வந்துச்சு. அதை கறவைமாடுனு மாத்திட்டேன்.
பால் தறது கறவை மாடு தானே ;)

கசப்புக்கு "கடு"னு ஒரு அர்த்தம் இருக்குனு பின்னாடி தெரிஞ்சிக்கிட்டேன்.

இப்படி ஒண்ணு ஒண்ணா கண்டுபிடிச்சாச்சு. செம்ம இண்ட்ரஸ்டிங்கான போட்டி.

இந்த மாசமும் போட்டிருக்கார். அடிச்சி ஆடுங்க மக்கா...

28 comments:

இலவசக்கொத்தனார் said...

இளைஞர் அணி மாநாடுக்கு போஸ்டர் ஒட்டற மாதிரி நம்ம புதிருக்குப் போஸ்டர் ஓட்டியதற்கு நன்னி தல! :)

ஆயில்யன் said...

//கொத்தனாரை போட்டு தாக்குவோம் மக்கா!!!"/


மீ த பர்ஸ்ட்டூ :)))

ஆயில்யன் said...

//போன மாசம் அவர் புதிர் போட்ட அன்னைக்கு எண்விராண்மெண்ட் டவுன். சும்மா இருந்ததால என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும் போது இந்த புதிரை பார்த்தேன். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமானு களம் இறங்க ஆரம்பிச்சிட்டேன்.//


ரொம்ப இண்ட்ரஸ்டீங்கா இருக்கு!

கொஞ்சம் காலத்துக்கு முன்னாடி தினமலர் வாரமலர் குறுக்கெழுத்துப்போட்டி டிரைப்பண்ணியப்ப இருந்த அதே இண்ட்ரஸ்ட் திரும்ப ரிடர்ன் ஆகிடுச்சு :))

ஆயில்யன் said...

//கசப்புக்கு "கடு"னு ஒரு அர்த்தம் இருக்குனு பின்னாடி தெரிஞ்சிக்கிட்டேன்//

ஆமாம் இது பேச்சு வழக்கில நாம பயன்படுத்தறதுதான்!

ஏம்ப்பா கடு கடுன்னு இருக்க? கடுப்பா இருக்கன்னு சொல்றது இது மாதிரி கசப்பா இருக்கேன்னு கேக்கறதாம்!

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
இளைஞர் அணி மாநாடுக்கு போஸ்டர் ஒட்டற மாதிரி நம்ம புதிருக்குப் போஸ்டர் ஓட்டியதற்கு நன்னி தல! :)
//

என்னது? இளைஞர் அணி மாநாட்டுக்கா???

திஸ் இஸ் ய டூ மச் :)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//கொத்தனாரை போட்டு தாக்குவோம் மக்கா!!!"/


மீ த பர்ஸ்ட்டூ :)))
//

கொத்தனாரை கணக்குல சேர்த்துக்க வேண்டாம்.. நீங்க தான் முதல் ஆள் :)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//போன மாசம் அவர் புதிர் போட்ட அன்னைக்கு எண்விராண்மெண்ட் டவுன். சும்மா இருந்ததால என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருக்கும் போது இந்த புதிரை பார்த்தேன். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமானு களம் இறங்க ஆரம்பிச்சிட்டேன்.//


ரொம்ப இண்ட்ரஸ்டீங்கா இருக்கு!

கொஞ்சம் காலத்துக்கு முன்னாடி தினமலர் வாரமலர் குறுக்கெழுத்துப்போட்டி டிரைப்பண்ணியப்ப இருந்த அதே இண்ட்ரஸ்ட் திரும்ப ரிடர்ன் ஆகிடுச்சு :))
//

ஆமாம் ஆயில்ஸ்...

ஒண்ணு ஒண்ணா கண்டுபிடிக்க கண்டுபிடிக்க ஜாலியா இருந்துச்சு :)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//கசப்புக்கு "கடு"னு ஒரு அர்த்தம் இருக்குனு பின்னாடி தெரிஞ்சிக்கிட்டேன்//

ஆமாம் இது பேச்சு வழக்கில நாம பயன்படுத்தறதுதான்!

ஏம்ப்பா கடு கடுன்னு இருக்க? கடுப்பா இருக்கன்னு சொல்றது இது மாதிரி கசப்பா இருக்கேன்னு கேக்கறதாம்!
//

ஆமாமில்ல...

நான் இது யோசிக்கவே இல்லை :(

பாதிக்கு பாதி கெஸ் ஒர்க் தான் பண்ணேன். ஒரு வழியா எல்லாம் சரியாகிடுச்சி :)

rapp said...

me the 9th?:(:(:(

rapp said...

oh ok ok

வெட்டிப்பயல் said...

// rapp said...
me the 9th?:(:(:(
//

No.. u the 2nd :)

(Exclude Koths and Me :) )

Sridhar Narayanan said...

தலைப்பைப் பாத்துட்டு ஆசை ஆசையா ஓடி வந்தேன்... ஏமாத்திபுட்டீங்களே :((

இலவசக்கொத்தனார் said...

//கொஞ்சம் காலத்துக்கு முன்னாடி தினமலர் வாரமலர் குறுக்கெழுத்துப்போட்டி டிரைப்பண்ணியப்ப இருந்த அதே இண்ட்ரஸ்ட் திரும்ப ரிடர்ன் ஆகிடுச்சு//

ஆயில், எதாவது பிரச்சனை இருந்தாப் பேசித் தீர்த்துக்கலாம். அதுக்காக இப்படி பப்ளிக்ல அசிங்கமாவா பேசறது? :(

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் பதிவு போட்டுட்டு இந்த மாசப் புதிர் பக்கம் வராத வெட்டியை என்ன செய்யலாம்? :)

இலவசக்கொத்தனார் said...

//தலைப்பைப் பாத்துட்டு ஆசை ஆசையா ஓடி வந்தேன்... ஏமாத்திபுட்டீங்களே :((//

வருவீரு வருவீரு. இப்படி எல்லாம் குருநிந்தனை செய்யறதுனாலதான் உமக்கு இந்த மாசப் புதிர் ததிகிணத்தோம் போடுது!! :))

மதுரையம்பதி said...

//தலைப்பைப் பாத்துட்டு ஆசை ஆசையா ஓடி வந்தேன்... ஏமாத்திபுட்டீங்களே :((//

நானும் அப்படித்தான் வந்தேன், ஏமாந்தேன்...இதுக்கு சொன்ன பதிலைப் பார்த்தா இன்னும் பயமாயிருக்கு... :)

வடகிழக்குமாநில தமிழன் said...

கலக்கிட்ட தல

பாலசந்திரன்

coolzkarthi said...

இதையும் ட்ரை பண்ணி பாருங்களேன்....

சில கேள்விகள் பார்க்க ஒன்றும் இல்லாதவை போல் தோன்றினாலும்,அதன் ஆழம் நம்மை வியக்க வைக்கும்,பிறகு தான் நம் தவறு நமக்கு புரியும்,அவற்றில் சில,

1.மேரி இன் அப்பாவிற்கு நான்கு குழந்தைகள்,
முதல் குழந்தையின் பெயர் AIBQ


இராண்டாவது குழந்தையின் பெயர் BJCR


மூன்றாவது குழந்தையின் பெயர் CKDS


எனில் நான்காம் குழந்தையின் பெயர்?

2.இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...
3.typical classical question இது,
ஒரு வித்தியாசமான அல்லி செடி ஒரு நாளில் இரண்டு மடங்காக பெருகும்,அந்த செடிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு குளத்தை மூட நூறு நாட்கள் எடுத்து கொண்டன எனில்,அந்த குளத்தில் பாதியை மூட எத்தனை நாட்கள் எடுத்து கொண்டிருக்கும்?
4.நீங்கள் ஒரு சிறிய குளத்தில் ஒரு படகில் போகும் போது கடுமையான மழை வந்து விடுகிறது,உங்கள் படகில் இருந்து ஒரு கயிறு 50 cm கீழே நீட்டி கொண்டிருக்கிறது,அதில் குளத்தில் 25 cm உள்ளது எனில் முழு 50 cm குளத்தில் மூழ்க எவ்வளவு நேரம் ஆகும்?மழை குளத்தை நிமிடத்திற்கு இரண்டு cm என்ற நிலையில் நிரப்பி கொண்டு வருகிறது....
5.ஒரு physics question,ஒரு பாத்திரம் நிரம்ப தண்ணீர் ஊற்றி ஒரு சின்ன படகு போன்ற பொருளை மிதக்க விடுகிறிர்கள்,அந்த படகில் ஒரு கல்,இரண்டு இரும்பு துண்டு உள்ளது,அந்த படகு கஷ்ட பட்டு மிதக்கிறது,இப்பொழுது நீங்கள் அந்த கல்லையும் இரும்பையும் படகில் இருந்து எடுத்து அது மிதக்கும் தண்ணீரிலேயே போட்டு விடுகிரிர்கள் இப்பொழுது அந்த பாத்திரத்தை நிரம்பி இருந்த தண்ணீரின் level குறையுமா கூடுமா?

coolzkarthi said...

it's very interesting....thank u...

குட்டிபிசாசு said...

வெட்டியண்ணே,

சினிமா கேள்வி-பதில் தொடர் விளையாட்டாம், நீங்களும் வாங்கோ!!

http://kuttipisasu.blogspot.com/2008/10/blog-post.html

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
தலைப்பைப் பாத்துட்டு ஆசை ஆசையா ஓடி வந்தேன்... ஏமாத்திபுட்டீங்களே :((
//

நீங்க வருவீங்கனு நிச்சயம் தெரியும். அதான் இப்படி ஒரு வலை விரிச்சி வெச்சிருந்தேன் :)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
இப்படி எல்லாம் பதிவு போட்டுட்டு இந்த மாசப் புதிர் பக்கம் வராத வெட்டியை என்ன செய்யலாம்? :)
//

கொத்ஸ்,
நிலவரம் கலவரமா இருக்கு... எனக்கு பதில் இந்த பதிவை படிச்ச யாராவது ரெண்டு பேர் வந்து கலந்துக்குவாங்க :)

வெட்டிப்பயல் said...

//மதுரையம்பதி said...
//தலைப்பைப் பாத்துட்டு ஆசை ஆசையா ஓடி வந்தேன்... ஏமாத்திபுட்டீங்களே :((//

நானும் அப்படித்தான் வந்தேன், ஏமாந்தேன்...இதுக்கு சொன்ன பதிலைப் பார்த்தா இன்னும் பயமாயிருக்கு... :)
//

அதெல்லாம் பயப்படாதீங்க. நம்ம கொத்ஸ் தான் :)

வெட்டிப்பயல் said...

//வடகிழக்குமாநில தமிழன் said...
கலக்கிட்ட தல

பாலசந்திரன்
//

எல்லா புகழும் கொத்ஸுக்கே :)

வெட்டிப்பயல் said...

//coolzkarthi said... //

1. மேரி

//இது situation handling என்ற வகையறாவை சேர்ந்தது,

நீங்கள் உங்கள் காதலியுடன் ஒரு சிறிய காரில் சென்று கொண்டு இருக்கிறீர்கள், அந்த கார் இரண்டு பேரை மட்டுமே சுமக்க வல்லது,போகும் வழியில்,சற்றே தூரத்தில் நீங்கள் ,உங்கள் அப்பா மற்றும் உங்கள் நெருங்கிய, உங்களுக்கு கார் ஓட்ட கத்துகொடுத்த நண்பன் ஆகியோரை பார்கிறிர்கள் அவர்களை காரில் கடந்து போனால் வீண் கசப்பு வரும் என்கின்ற நிலையில்,நீங்கள் என்ன செய்வீர்கள்...//

நான் அப்படியெல்லாம் போக முடியாது. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி :)

இதுக்கு எல்லாரும் சொல்ற பதில், கார் ஓட்டுற நண்பன் கூட அப்பாவை ஏற்றிவிட்டுட்டு நடந்து போவேன் :)

3. 99 நாள்

4. அப்படியே இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//coolzkarthi said...
it's very interesting....thank u...

3:27 AM
//

மிக்க நன்றி கார்த்தி :)

வெட்டிப்பயல் said...

//குட்டிபிசாசு said...
வெட்டியண்ணே,

சினிமா கேள்வி-பதில் தொடர் விளையாட்டாம், நீங்களும் வாங்கோ!!

http://kuttipisasu.blogspot.com/2008/10/blog-post.html
//

தம்பி,
நம்ம ஏற்கனவே விளையாடியாச்சே.. இருந்தாலும் அழைத்ததற்கு மிக்க நன்றி :)

coolzkarthi said...

மற்ற பதில்கள் மிக்க சரி...ஆனால் தண்ணீரின் நீர் மட்டம் குறையும் என்பதே அந்த நான்காம் கேள்வியின் பதில்....ஐந்தாவது,
நீர் மட்டத்தோடு படகும் மேல் ஏறுவதால் கயிறின் மூழ்கி இருக்கும் நீளம் மாறாது......
விடை சொன்னமைக்கு நன்றி.....