தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 12, 2008

பாட்டிகளை சமாளிப்பது எப்படி???

எங்க பாட்டி சமையல் மாதிரி வராது.

அவுங்களுக்கு அவுங்க கையால சமைச்சி போட்டா தான் திருப்தியா இருக்கும். எங்க அம்மா செஞ்சா அவ்வளவு திருப்தியா அவுங்களுக்கு இருக்காது.

எங்க வீடே எங்க பாட்டி கண்ட்ரோல் தான். அவுங்களுக்கு தான் யார் யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி அவுங்களால தான் செய்ய முடியும்.

இந்த மாதிரி நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அதே மாதிரி சில வீடுகளுக்கு போகும் போது அங்க அந்த மாதிரி பாட்டிகள் சமையல் செய்யறதும், காப்பி போட்டு கொண்டு வருவதும் பார்த்திருக்கேன். நிறைய பேரன்களுக்கு பாட்டி சமையல் தான் பிடிக்கும். ஆனா அந்த ஒரு காரணத்திற்காக எழுபது, எண்பது வயதிலும் அவர்கள் இப்படி வேலை செய்யத்தான் வேண்டுமா?

இந்த மாதிரி கேள்விப்படற சமயத்துல நான் நிறைய சண்டை போட்டிருக்கேன். கேட்டா, அவுங்களுக்கு அவுங்களே செஞ்சா தான் சந்தோஷம். எங்களுக்கு சமைக்கறது தான் அவுங்களுக்கு திருப்தி இப்படி பதில் வரும். அதை கேட்கும் போது எனக்கு இன்னும் கோபம் வரும். வயதான காலத்தில் எங்க நம்ம அவுங்களுக்கு சுமையா இருக்கோமோனு நினைப்புல அவுங்க செய்யறதை நாம இப்படி அநியாயமா பயன்படுத்திக்கறமோனு தோணுது.

அதுக்காக அவுங்களை சமைக்க வேண்டாம்னு சொன்னா அவுங்களை மதிக்காத மாதிரி நினைச்சிக்கறாங்க. நான் இங்க எதுக்கும் பயனில்லாம எதுக்கு உங்களுக்கு தண்டமா இருக்கேனு சொல்றாங்க. இதை ஹேண்டில் பண்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் போல இருக்கு. சரி அவுங்களை மொத்தமா ஒதுக்கிட வேண்டாம், உப்பு, காரம் எப்படி இருக்குது அவுங்க பார்த்து சொல்லட்டும். ஒரு சீஃப் செஃப் மாதிரி இருக்கட்டும்னு சொன்னா, "இப்படி உப்பு, காரமெல்லாம் தெரியாம சமைக்கறதுக்கு நானே செய்யறனு சொன்னா கேக்கறீங்களா?" அப்படி கேக்கறாங்களாம்.

என்னை பொருத்த வரை எந்த காரணத்திற்காகவும் அவர்களை வேலை வாங்க கூடாது. அதே சமயம் அவுங்க மனசும் கஷ்டப்படாம அவுங்களை வெச்சிக்கனும்.

அனுபவஸ்தர்கள் அட்வைஸ் ப்ளீஸ்...

அதே மாதிரி தாத்தா, பாட்டியானவங்க, இந்த மாதிரி வேலையெல்லாம் விரும்பி தான் செய்யறீங்களா இல்லை இந்த மாதிரி வேலை செய்யலனா குற்றவுணர்ச்சியா இருக்குதுனு (இது நிச்சயம் தேவையில்லைங்கறது என்னோட அபிப்பிராயம்) செய்யறீங்களானு கொஞ்சம் சொல்லுங்களேன்...

39 comments:

ஆயில்யன் said...

/என்னை பொருத்த வரை எந்த காரணத்திற்காகவும் அவர்களை வேலை வாங்க கூடாது. அதே சமயம் அவுங்க மனசும் கஷ்டப்படாம அவுங்களை வெச்சிக்கனும்//

இதுதான் கரீக்ட்டு :)

இப்படித்தான் மனசு கஷ்டப்படுத்தாம வைச்சுக்கணும்!

ஆயில்யன் said...

//நான் இங்க எதுக்கும் பயனில்லாம எதுக்கு உங்களுக்கு தண்டமா இருக்கேனு //

ஒரு ஸ்டேஜில் அவர்கள் தாங்களே தங்கள் புறக்கணிக்கப்படுவதாய் கருதுவதில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம்!

என்னதான் கோபம் சச்சரவுகள் வந்தாலும் நாம் ஆசையோடு அணுகினால் போதும் ஆனந்தமாய் ஏற்றுக்கொள்வார்கள் எந்த தாத்தா பாட்டிகளும்!

ஆயில்யன் said...

தாத்தா பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் கூடுமான வரையிலும் அவர்களை புறக்கணிக்க முயற்சிக்காதீர்கள்!

வாழ்ந்தவர்கள் அவர்கள்!
சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்!

வாழ்க்கை இன்பமாய் இருக்கும்!

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

//நான் இங்க எதுக்கும் பயனில்லாம எதுக்கு உங்களுக்கு தண்டமா இருக்கேனு //

ஒரு ஸ்டேஜில் அவர்கள் தாங்களே தங்கள் புறக்கணிக்கப்படுவதாய் கருதுவதில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம்!

என்னதான் கோபம் சச்சரவுகள் வந்தாலும் நாம் ஆசையோடு அணுகினால் போதும் ஆனந்தமாய் ஏற்றுக்கொள்வார்கள் எந்த தாத்தா பாட்டிகளும்!//

இருந்தாலும் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்னு வருத்தப்படறாங்களே :(

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

தாத்தா பாட்டிகள் இருக்கும் குடும்பங்களில் கூடுமான வரையிலும் அவர்களை புறக்கணிக்க முயற்சிக்காதீர்கள்!

வாழ்ந்தவர்கள் அவர்கள்!
சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்!

வாழ்க்கை இன்பமாய் இருக்கும்!//

மிகச்சரி...

இருக்கவங்களுக்கு மனமில்லை...
மனமிருப்பவருக்கு வாய்ப்பில்லை :((

உண்மை said...

Any small work they do at home keep them going for ages. They are occupied, they are getting exercise, they keep themselves busy and they keep their mind busy. Thats the secret of longevity.

கப்பி | Kappi said...

எங்க தாத்தாவும்கூட "உங்க பாட்டிய சமாளிக்கவே முடியலடா"ன்னு அப்பப்ப என்கிட்ட புலம்புவாரு..அவருக்கும் ஏதாவது ஐடியா கொடுங்கண்ணே :))

G.Ragavan said...

பாலாஜி, இது ஒரு பொதுப்பிரச்சனையாத் தெரியலை. எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒரு வயசுக்கு மேல பெரிய வேலையெல்லாம் செய்யலை. அம்மாவே செஞ்சிருவாங்க. ஆனாலும் கீரை ஆயுறது. மோர் சிலுப்புறது (ஹார்லிக்ஸ் பாட்டில்ல பழைய மோரை ஊத்தி குலுகுலுன்னு குலுக்குனா வெண்ணெய் தெரண்டு வரும்)...மாதிரியான ஒவ்வொரு வேலைகள் பாட்டிக்கும் போகும். அவங்களேயும் பாப்பாங்க. அவங்க அனுபவங்களைக் கேட்டுக்கிறதும் நல்லதுதான். அவங்களைச் சும்மாவும் வெச்சிருக்கக் கூடாது. அப்பப்ப முடிஞ்ச வேலையைக் குடுக்கனும்.

நாதஸ் said...

/எங்க தாத்தாவும்கூட "உங்க பாட்டிய சமாளிக்கவே முடியலடா"ன்னு அப்பப்ப என்கிட்ட புலம்புவாரு..அவருக்கும் ஏதாவது ஐடியா கொடுங்கண்ணே :))
//

ha ha ha :)

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

Any small work they do at home keep them going for ages. They are occupied, they are getting exercise, they keep themselves busy and they keep their mind busy. Thats the secret of longevity.//

hmmmm

வெட்டிப்பயல் said...

//கப்பி | Kappi said...

எங்க தாத்தாவும்கூட "உங்க பாட்டிய சமாளிக்கவே முடியலடா"ன்னு அப்பப்ப என்கிட்ட புலம்புவாரு..அவருக்கும் ஏதாவது ஐடியா கொடுங்கண்ணே :))//

நானே ஐடியா கேட்டு தான் பதிவு போட்டிருக்கேன்... இப்படியே வந்து பக்கத்துக்கு உட்காரு :)

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...

பாலாஜி, இது ஒரு பொதுப்பிரச்சனையாத் தெரியலை. எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒரு வயசுக்கு மேல பெரிய வேலையெல்லாம் செய்யலை. அம்மாவே செஞ்சிருவாங்க. ஆனாலும் கீரை ஆயுறது. மோர் சிலுப்புறது (ஹார்லிக்ஸ் பாட்டில்ல பழைய மோரை ஊத்தி குலுகுலுன்னு குலுக்குனா வெண்ணெய் தெரண்டு வரும்)...மாதிரியான ஒவ்வொரு வேலைகள் பாட்டிக்கும் போகும். அவங்களேயும் பாப்பாங்க. அவங்க அனுபவங்களைக் கேட்டுக்கிறதும் நல்லதுதான். அவங்களைச் சும்மாவும் வெச்சிருக்கக் கூடாது. அப்பப்ப முடிஞ்ச வேலையைக் குடுக்கனும்.//

ஜி.ரா,
நான் இதோட நிறைய இடத்துல பார்த்துட்டேன்... இப்ப கூட நெருங்கிய உறவினர் ஒருத்தர் வீட்ல 85 வயசு பாட்டி தான் சமைக்கறாங்களாம். கேட்டா எங்க பாட்டி சமையல் தான் எனக்கு பிடிக்கும்னு சொன்னாராம். எங்க அம்மா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாங்க. அவரும் ரொம்ப நல்லவர் தான். ஆனா எனக்கு அது தப்பா தான் படுது. 85 வயசுல எல்லா சமையலும் செய்யறது. அதான் இங்க கேட்டா நிறைய பேர் அனுபவங்களை சொல்வாங்களேனு கேட்டு போட்டிருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//nathas said...

/எங்க தாத்தாவும்கூட "உங்க பாட்டிய சமாளிக்கவே முடியலடா"ன்னு அப்பப்ப என்கிட்ட புலம்புவாரு..அவருக்கும் ஏதாவது ஐடியா கொடுங்கண்ணே :))
//

ha ha ha :)//

நாதஸ்,
உங்க கூட அண்ணா யுனிவர்சிட்டில படிச்ச பையன் தான் இப்ப என் ரூமேட்டா இருக்கான்... அவன் ECE. பேரு தனபாலன் :)

துளசி கோபால் said...

எங்க வீட்டுலே பாட்டிக்கு முக்கியமான ஒரு வேலை இருக்குன்னா அது பூஜை செய்வது மட்டும்தான். அதுக்குண்டான விளக்குகளைத் தேய்ச்சு எண்ணெய் ஊத்தும்வேலை எல்லாம் நாங்கள் செஞ்சுதருவோம். பூக்கட்டும் வேலையும் பாட்டிக்குத்தான். பூப்பறிச்சுத் தருவது எங்க வேலை.

வீட்டில் எது நடந்தாலும் பாட்டியின் ஆலோசனைப்படிதான் நடக்கும்.

இப்ப நான் இன்னும் பாட்டி ஆகலைன்னாலும், என்னையே யாராவது பாட்டியா தத்து எடுத்துக்கிட்டு ஆக்கிப்போட மாட்டாங்களான்னு இருக்கு(-:

பாட்டி வேணுமா பாட்டி? சீக்கிரம் சொல்லுங்கப்பா.

நாதஸ் said...

/உங்க கூட அண்ணா யுனிவர்சிட்டில படிச்ச பையன் தான் இப்ப என் ரூமேட்டா இருக்கான்... அவன் ECE. பேரு தனபாலன் :)//

yaaru namba Dhanava? bayangara padippaali aache ?
jooberu :)

MSATHIA said...

பயங்கர குழப்படியான ஒரு சங்கதிங்க இது. மொத்தமா சொல்லப்போனா தாத்தா பாட்டீங்க குழந்தைங்க மாதிரி தான். எப்போ எப்படி எதிர்வினை இருக்கும்னு சொல்லமுடியாது. ரொம்ப வேலை குடுத்தா நமக்கு மனசு சங்கடப்படும். குடுக்கவே இல்லைன்னா அவங்க ஒதுக்கறாங்களோன்னு சங்கடப்படுவாங்க. இதுக்கு ஒரு பயங்கர strategy என்னன்னா பாட்டிங்களுக்கு பேரன் பேத்திகள் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன பொறுப்புகள். தாத்தாவுக்கு ஒரு திட்டமிட்ட preplanned வெளிவேலைகளை குடுத்துட்டு மத்தபடி அவங்களா எதுல பங்கேற்கறாங்களோ அதுல ஒதுக்ககூடாது. அதிகமா வேலைகுடுக்கறது தப்புங்க.
மிக மிக முக்கியமா எல்லா முக்கிய சங்கதிகளுக்கும் அவங்க ஆலோசனையை உண்மையா கேக்கணும். அப்புறம் குழந்தைங்க மாதிரி அவங்களோட உக்காந்து பேசறத காது குடுத்து கேக்கணும்.

மத்தபடி இதெல்லாம் வீட்டுக்க வீடு மாறுபடும் சங்கதி.

Vishnu... said...

// என்னை பொருத்த வரை எந்த காரணத்திற்காகவும் அவர்களை வேலை வாங்க கூடாது. அதே சமயம் அவுங்க மனசும் கஷ்டப்படாம அவுங்களை வெச்சிக்கனும்.//

நூத்துல .இல்ல இல்ல ஆயிரத்துல ஒரு வார்த்த...
உண்மையை சொன்னிங்க ...

நல்லா இருக்கு உங்க பதிவு... அண்ணே ...

வாழ்த்துக்களுடன் ...

வல்லிசிம்ஹன் said...

துளசி சொல்றதுதான் சரின்னு படுது பாலாஜி.
எங்க வீட்டு வயசானவங்க ஒருத்தர், அவங்க கீழ விழுந்து உடல் நலம் கெடும் வரை அவங்களே எல்லாம் செய்ய்தாங்க,. எங்களையும் வேலை வாங்கினாங்க:)
இன்னோருத்தவங்க என்னை விட்டுடு,முடியாதுன்னாட்டாங்க. இன்ன்னொருத்தவங்க முடியலைன்னாலும்ம் செய்து இருந்தாங்க.
நாம அவங்களை வேலை வாங்கக் கூடாது. அதே சமயம் அவங்களோடு பேசி அவங்களை இன்வால்வ் செய்ய்யணும். ரொம்ப முக்கியம் ,செய்யக் கூடாதது அவங்களை அலட்சியம் செய்யறதுதான்.
அது அவங்கள மெதுவா.....
சாமி! பாட்டிகளைக்காப்பாத்து.

//என்னதான் கோபம் சச்சரவுகள் வந்தாலும் நாம் ஆசையோடு அணுகினால் போதும் ஆனந்தமாய் ஏற்றுக்கொள்வார்கள் எந்த தாத்தா பாட்டிகளும்!///
ஆயில்யன்.வாழ்த்துகள்!!

RATHNESH said...

வெட்டிப்பயல்சார்,

ராகவன் சார் சொல்வது போல் இது பொதுப் பிரச்னை அல்ல; ஒவ்வொரு வீட்டுப் பாட்டிக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை இருக்கும். அந்தந்த வீட்டார் அவர்களுடைய மனநிலை அறிந்து ஹாண்டில் செய்ய வேண்டும். "என் பாட்டியின் சமையல் தான் எனக்குப் பிடிக்கும்" என்கிற வார்த்தை அவரை சமையல் செய்ய வைக்க வற்புறுத்தும் வார்த்தையா அல்லது அவர் சுய ஆசையில் செய்யும் சமையல் வேலைக்குத் தெரிவிக்கும் ஊக்க உரையா என்பதைப் பொருத்துத் தான் இதனை மனித நேயக் கோணத்தில் அலச முடியும்.

உங்க அக்கறைக்குப் பாராட்டுக்கள்.

(நாற்பது வயதுக்குள் சமையலறையில் இருந்து ஒதுங்கி விடும் அடுத்த தலைமுறைக்கும்; சமையலறை இருக்கும் திசையே தெரியாத இன்றைய இளைய தலைமுறைக்கும் இதுவெல்லாம் நம்ப முடியாத செய்தியாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நிஜம்).

RATHNESH said...

ஓவர் டூ நியூஸிலாந்து

//இப்ப நான் இன்னும் பாட்டி ஆகலைன்னாலும், என்னையே யாராவது பாட்டியா தத்து எடுத்துக்கிட்டு ஆக்கிப்போட மாட்டாங்களான்னு இருக்கு(-:

பாட்டி வேணுமா பாட்டி? சீக்கிரம் சொல்லுங்கப்பா.//

ஜூனியர் ரத்னேஷுக்கு பாட்டி வேண்டும். MOST WELCOME.

Divyapriya said...

நல்ல பதிவு அண்ணா...சில சமயம் எனக்கு தோன்றும், தாத்தக்கள் எப்பயோ retire ஆகிட்டாங்க...ஆனா, இந்த பாட்டிகளுக்கு எப்ப தான் retirement ன்னு...
ஆனாலும், எதாவது ஒரு வேலை செய்யல்லன்னா, பாட்டிகளுக்கு தூக்கமே வராதுங்கறது தான் உண்மை...இந்த மாதிரி பாட்டிகள பக்குவமா தான் சமாளிக்கனும்...

Ramya Ramani said...

இப்படி பண்ற பாட்டி தாத்தாவ ஹேன்டல் பண்ண பெஸ்ட் பேத்தி பேரன் தான்.

நாமளே அவங்க கிட்ட போயிட்டு, பாட்டி நீங்க அன்னிக்கி எப்படி பண்ணீங்கன்னு சொல்லுங்களேன் நானும் கத்துக்கறேன்னு களத்துல குதிக்கவேண்டியது தான் :).

நாம இப்படி தான் பண்றது ..நல்லா வொர்க் அவுட் ஆகுது ;)

சரவணகுமரன் said...

வெட்டிப்பயல், ஞாநி கட்டுரை மாதிரி இருக்கு :-)

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

எங்க வீட்டுலே பாட்டிக்கு முக்கியமான ஒரு வேலை இருக்குன்னா அது பூஜை செய்வது மட்டும்தான். அதுக்குண்டான விளக்குகளைத் தேய்ச்சு எண்ணெய் ஊத்தும்வேலை எல்லாம் நாங்கள் செஞ்சுதருவோம். பூக்கட்டும் வேலையும் பாட்டிக்குத்தான். பூப்பறிச்சுத் தருவது எங்க வேலை.

வீட்டில் எது நடந்தாலும் பாட்டியின் ஆலோசனைப்படிதான் நடக்கும்.
//
hmmm

ஆனா எனக்கு தெரிஞ்சு தினமும் இந்த மாதிரி பூஜை எல்லாம் எங்க வீட்ல செய்ய மாட்டாங்களே. ஏதாவது விசேஷம்னா தான் அதெல்லாம் இருக்கும்.

// இப்ப நான் இன்னும் பாட்டி ஆகலைன்னாலும், என்னையே யாராவது பாட்டியா தத்து எடுத்துக்கிட்டு ஆக்கிப்போட மாட்டாங்களான்னு இருக்கு(-:

பாட்டி வேணுமா பாட்டி? சீக்கிரம் சொல்லுங்கப்பா.//

சீக்கிரம் சொல்றேன் :))

வெட்டிப்பயல் said...

//nathas said...

/உங்க கூட அண்ணா யுனிவர்சிட்டில படிச்ச பையன் தான் இப்ப என் ரூமேட்டா இருக்கான்... அவன் ECE. பேரு தனபாலன் :)//

yaaru namba Dhanava? bayangara padippaali aache ?
jooberu :)//

ஆமாம்... ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட ஒரு சர்டிபிகேஷன் எழுதி முடிச்சான் :)

வெட்டிப்பயல் said...

// Sathia said...

பயங்கர குழப்படியான ஒரு சங்கதிங்க இது. மொத்தமா சொல்லப்போனா தாத்தா பாட்டீங்க குழந்தைங்க மாதிரி தான். எப்போ எப்படி எதிர்வினை இருக்கும்னு சொல்லமுடியாது. ரொம்ப வேலை குடுத்தா நமக்கு மனசு சங்கடப்படும். குடுக்கவே இல்லைன்னா அவங்க ஒதுக்கறாங்களோன்னு சங்கடப்படுவாங்க. இதுக்கு ஒரு பயங்கர strategy என்னன்னா பாட்டிங்களுக்கு பேரன் பேத்திகள் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன பொறுப்புகள். தாத்தாவுக்கு ஒரு திட்டமிட்ட preplanned வெளிவேலைகளை குடுத்துட்டு மத்தபடி அவங்களா எதுல பங்கேற்கறாங்களோ அதுல ஒதுக்ககூடாது. அதிகமா வேலைகுடுக்கறது தப்புங்க.
மிக மிக முக்கியமா எல்லா முக்கிய சங்கதிகளுக்கும் அவங்க ஆலோசனையை உண்மையா கேக்கணும். அப்புறம் குழந்தைங்க மாதிரி அவங்களோட உக்காந்து பேசறத காது குடுத்து கேக்கணும்.
//
ஹிம்ம்ம்...
என் பாட்டிக்கு என்னை ரொம்ப பிடிக்கறதுக்கு காரணமே, நான் அவுங்க பேசறதை காது கொடுத்து கேக்கறது தான். அவுங்கனு இல்லை, யாரா இருந்தாலும் பேசறதை நான் கேட்டுக்கவேன். அதை ஃபாலோ பண்ணுவனானு சொல்ல முடியாது :))

//
மத்தபடி இதெல்லாம் வீட்டுக்க வீடு மாறுபடும் சங்கதி.//

அதுவும் சரி தான் :)

வெட்டிப்பயல் said...

// Vishnu... said...

// என்னை பொருத்த வரை எந்த காரணத்திற்காகவும் அவர்களை வேலை வாங்க கூடாது. அதே சமயம் அவுங்க மனசும் கஷ்டப்படாம அவுங்களை வெச்சிக்கனும்.//

நூத்துல .இல்ல இல்ல ஆயிரத்துல ஒரு வார்த்த...
உண்மையை சொன்னிங்க ...

நல்லா இருக்கு உங்க பதிவு... அண்ணே ...

வாழ்த்துக்களுடன் ...//

மிக்க நன்றி விஷ்ணு :)

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

துளசி சொல்றதுதான் சரின்னு படுது பாலாஜி.
எங்க வீட்டு வயசானவங்க ஒருத்தர், அவங்க கீழ விழுந்து உடல் நலம் கெடும் வரை அவங்களே எல்லாம் செய்ய்தாங்க,. எங்களையும் வேலை வாங்கினாங்க:)
இன்னோருத்தவங்க என்னை விட்டுடு,முடியாதுன்னாட்டாங்க. இன்ன்னொருத்தவங்க முடியலைன்னாலும்ம் செய்து இருந்தாங்க.
நாம அவங்களை வேலை வாங்கக் கூடாது. அதே சமயம் அவங்களோடு பேசி அவங்களை இன்வால்வ் செய்ய்யணும். ரொம்ப முக்கியம் ,செய்யக் கூடாதது அவங்களை அலட்சியம் செய்யறதுதான்.
அது அவங்கள மெதுவா.....
சாமி! பாட்டிகளைக்காப்பாத்து.
//
ஹிம்ம்ம்... அப்ப ஓரளவு அவுங்க வேலை செஞ்சாலும் ஓகே. ஆனா அலட்சியப்படுத்த கூடாது சொல்றீங்க... நான் புரிஞ்சிக்கிட்டது சரியா?

வெட்டிப்பயல் said...

// RATHNESH said...

வெட்டிப்பயல்சார்,

ராகவன் சார் சொல்வது போல் இது பொதுப் பிரச்னை அல்ல; ஒவ்வொரு வீட்டுப் பாட்டிக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை இருக்கும். அந்தந்த வீட்டார் அவர்களுடைய மனநிலை அறிந்து ஹாண்டில் செய்ய வேண்டும். "என் பாட்டியின் சமையல் தான் எனக்குப் பிடிக்கும்" என்கிற வார்த்தை அவரை சமையல் செய்ய வைக்க வற்புறுத்தும் வார்த்தையா அல்லது அவர் சுய ஆசையில் செய்யும் சமையல் வேலைக்குத் தெரிவிக்கும் ஊக்க உரையா என்பதைப் பொருத்துத் தான் இதனை மனித நேயக் கோணத்தில் அலச முடியும்.
//

சார் எல்லாம் வேண்டாமே :)

நீங்க சொல்ற மாதிரி இது ஒவ்வொரு வீட்டிலும் வேறுபடும்னு தான் நினைக்கிறேன் :)

//
உங்க அக்கறைக்குப் பாராட்டுக்கள்.

(நாற்பது வயதுக்குள் சமையலறையில் இருந்து ஒதுங்கி விடும் அடுத்த தலைமுறைக்கும்; சமையலறை இருக்கும் திசையே தெரியாத இன்றைய இளைய தலைமுறைக்கும் இதுவெல்லாம் நம்ப முடியாத செய்தியாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நிஜம்).//

அதுவும் சரிதான்... இன்னும் வர போகிற ஜெனரேஷனுக்கும் இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கும் உறவு எப்படி இருக்கப்போகுதுனு தெரியல :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

நல்ல பதிவு அண்ணா...சில சமயம் எனக்கு தோன்றும், தாத்தக்கள் எப்பயோ retire ஆகிட்டாங்க...ஆனா, இந்த பாட்டிகளுக்கு எப்ப தான் retirement ன்னு...
ஆனாலும், எதாவது ஒரு வேலை செய்யல்லன்னா, பாட்டிகளுக்கு தூக்கமே வராதுங்கறது தான் உண்மை...இந்த மாதிரி பாட்டிகள பக்குவமா தான் சமாளிக்கனும்...//

நீ சொல்றது சரி தான்மா... தாத்தாக்கள் ஓரளவு பேசிக்கிட்டே கூட காலத்தை ஓட்டிடுவாங்க... பாட்டிகள் தான் கஷ்டம்னு நினைக்கிறேன்.

நான் பிறக்கறதுக்கு முன்னாடியே ரெண்டு தாத்தாவும் இறந்துட்டாங்க. அதனால தாத்தாக்களை பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது :(

வெட்டிப்பயல் said...

//Blogger Ramya Ramani said...

இப்படி பண்ற பாட்டி தாத்தாவ ஹேன்டல் பண்ண பெஸ்ட் பேத்தி பேரன் தான்.

நாமளே அவங்க கிட்ட போயிட்டு, பாட்டி நீங்க அன்னிக்கி எப்படி பண்ணீங்கன்னு சொல்லுங்களேன் நானும் கத்துக்கறேன்னு களத்துல குதிக்கவேண்டியது தான் :).

நாம இப்படி தான் பண்றது ..நல்லா வொர்க் அவுட் ஆகுது ;)//

பேரன் பேத்தி நைசா எஸ்கேப் ஆகிடறாங்களே... என்ன பண்ணறது :(

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...

வெட்டிப்பயல், ஞாநி கட்டுரை மாதிரி இருக்கு :-)//

ஹா ஹா ஹா :)

துளசி கோபால் said...

//ஜூனியர் ரத்னேஷுக்கு பாட்டி வேண்டும். MOST WELCOME.//
ரத்னேஷ் சீனியர்,

ஆஹா... வந்துருவேன். ஆமாம். கூடவே ஒரு இலவச இணைப்பா ஒரு தாத்தாவும் வருவார். பரவாயில்லையா?

அப்புறம் 'இந்தப் பாட்டி' கொஞ்சம் அடங்காதது. சமாளிச்சுருவீங்கதானே? ;-))))

RATHNESH said...

வெட்டிப்பயல்,,

//அதுவும் சரிதான்... இன்னும் வர போகிற ஜெனரேஷனுக்கும் இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கும் உறவு எப்படி இருக்கப்போகுதுனு தெரியல :)//

அது ஒருபக்கம் இருக்கட்டும்; நான் சொல்ல வந்தது இந்த தலைமுறைகளுக்கும் சமையலறைக்குமான உறவுகளைப் பற்றி.

வெட்டிப்பயல் said...

// RATHNESH said...

வெட்டிப்பயல்,,

//அதுவும் சரிதான்... இன்னும் வர போகிற ஜெனரேஷனுக்கும் இப்ப இருக்கிற ஜெனரேஷனுக்கும் உறவு எப்படி இருக்கப்போகுதுனு தெரியல :)//

அது ஒருபக்கம் இருக்கட்டும்; நான் சொல்ல வந்தது இந்த தலைமுறைகளுக்கும் சமையலறைக்குமான உறவுகளைப் பற்றி.//

நான் இங்க பார்க்கிற வரைக்கும் நிறைய பேர் நல்லா தான் சமைக்கிறாங்க. இந்தியாலயும் எனக்கு தெரிஞ்சி இந்த ஜெனரேஷன்ல நல்ல வித விதமா சமைக்கிறாங்க. ஆனா விசேஷ தினங்கள் எல்லாம் எப்படி போகும்னு தெரியல...

எங்க அம்மா தீபாவளினா எவ்வளவு பலகாரம் செய்வாங்க. அதுவும் சந்தோஷமா. ஆனா என் அக்கா அந்த மாதிரி எதுவும் செஞ்சி நான் பார்த்ததில்லை. எல்லாம் ஸ்வீட் ஸ்டால்ல வாங்கறது தான். மீதி எங்க அம்மாவே செஞ்சி கொடுக்கறது தான்...

இந்த வருஷம் தான் நமக்கு தலை தீபாவளி... அதனால நம்ம வீட்டம்மணி என்ன செய்வாங்கனு தெரியல. ஆனா போக போக எல்லாத்தையும் கத்துக்கனும்னு சொல்லிருக்கேன்...

//நாற்பது வயதுக்குள் சமையலறையில் இருந்து ஒதுங்கி விடும் அடுத்த தலைமுறைக்கும்;//

இதுவும் ரொம்ப உண்மை தான்... நிறைய பேர் ஹோம்ல சேர்த்து விடுனு சொல்றாங்களாம்... வீட்டை பார்த்துக்க முடியறதில்லை. பேசாம எங்க ரெண்டு பேரையும் ஏதாவது ஹோம்ல சேர்த்து விட்டுடுனு. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு :(((

Sathiya said...

காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா? துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

என்ன பாலாஜி, பாட்டிகளை சமாளிப்பது எப்படினு நீங்க சொல்லி இருக்கீங்க போலன்னு படிக்க வந்தா இப்படி படிக்க வந்த எங்களை போய் இதெல்லாம் கேட்டா, நாங்க எங்கிட்டு போவோம்?

goma said...

பாட்டிகளைப் பற்றி அனைவரது கருத்துக்களையும் கேட்டிருந்தீர்கள்.
சிறுமியாக இருந்தபோதும் என் வீட்டில் ஆச்சிகள் கிடையாது,இல்லத்தரசியான பின்னும் பார்த்ததில்லை.இருந்தாலும் சொல்கிறேன் ,அடுத்தவர் உணர்வுகளை மதித்து,அவரவர் எல்லக் கோட்டை அழகாக நிர்ணயித்துக் கொண்டு அதனை மீறாமல் நடக்க வேண்டும் என்ற பொதுவான ஆலோசனைதான் இந்த சூழ்நிலைக்கும் பொருந்தும்.

பொன்ஸ்~~Poorna said...

வெட்டி,
நல்ல கேள்வி கேட்டிருக்கீங்க. ஒரு வயசுக்கு மேல ரிடையரானவங்க எப்படி தன்னைப் பத்தி உலகம் கவலைப்படலைன்னு வருந்துவாங்களோ அது மாதிரி ஆகிடறாங்க பாட்டி எல்லாம். கூடியவரை அவர்களை activeஆ வச்சிக்கணும். முழு சமையலும் நான் தான் செய்வேன்னு நின்னா கூடியவரை உதவ முயற்சி பண்ணனும். அவங்க கூடவே அடுக்களையில் நின்னு, அவங்க கோபப்பட்டாலும் நம்ம நிதானம் இழக்காமல், 'இதை நான் கொஞ்சம் கிளறவா?', 'இந்த உருளைக்கிழங்கு பொரியல் மட்டும் எனக்கு வரவே மாட்டேங்குது பாட்டி, கொஞ்சம் சொல்லித் தாங்களேன்னு' ஐஸ் வச்சி = அப்படி இப்படித் தான் நம்ம காரியத்தை நடத்திக்கணும் :)

ஜே கே | J K said...

நாம வேலை கொடுக்காவிட்டாலும் அவங்களால சும்மா இருக்க முடியாது.

தோட்டத்துல எப்பவும் எதாவது வேலை செஞ்சுட்டே இருக்கும் எங்க தாத்தா ரெண்டு நாள் எந்த வேலையும் செய்யாம வீட்ல இருந்துட்டு என்னால முடியல கை, காலெல்லாம் வலிக்குதுனு தோட்டத்துக்கே போயிட்டார்.

எப்பவுமே எதாவது செஞ்சுட்டே இருந்தவங்கள திடீர்னு எதுவும் செய்யாதேனு நாம தடுத்தாலும் அவங்களால செய்யாம இருக்க முடியாது.