நேத்து ஃபிரெண்ட் ஒருத்தன் கிட்ட பேசிட்டு இருக்கும் போது ஒரு விஷயம் சொன்னான். 2020 ஒலிம்பிக்ஸ்ல 20 - 20 மேட்ச் சேர்க்க போறாங்களாம். எப்படியும் இந்தியா அப்ப ஒரு வெள்ளி பதக்கம் வாங்கிடும், சச்சின் செமி ஃபைனல் வரைக்கும் விளையாடி இந்தியாவை ஜெயிக்க வெச்சிடுவார்னு.
அடப்பாவிகளா! இன்னுமா நீங்க திருந்தலனு சொல்லிட்டு வந்துட்டேன்.
அப்பறம் யோசிக்கும் போது தான் தோணுச்சு, எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியர்ஸை திட்றாங்களே. அதுக்கு இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் ஒலிம்பிக்ஸ்ல சேர்த்தா எப்படியும் தங்கம், வெள்ளி, வைரம், மாணிக்கம்னு எல்லா பரிசையும் வாங்கிட்டு வந்திடுவாங்களேனு. என்ன என்ன விளையாட்டுனு பார்க்கலாமா?
C&P :
அதாவது காப்பி பேஸ்ட். ஒரு நிமிஷத்துல எவ்வளவு காப்பி பேஸ்ட் பண்றதுனு போட்டி. இதை வெச்சா எப்படியும் நம்ம டெவலப்பர்ஸ் காம்பிட்டீஷனே இல்லாம பதக்கத்தை வாங்கிட்டு வந்துடுவாங்க.
Continous Phonela Talking போட்டி:
தொடர்ந்து எவ்வளவு நேரம் ஃபோன்ல பேசறாங்கனு போட்டி. இதை வெச்சா நம்ம ஆளுங்களை அடிச்சிக்க ஆளே இல்லை. ஆனா ஒரே கண்டிஷன் அது பசங்களுக்கு பொண்ணுங்களுக்குனு தனி தனி போட்டியா வைக்க கூடாது. பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறது தான் போட்டியோட விதி. நம்ம பசங்க தோக்கற மாதிரி இருந்தாலும் பொண்ணுங்களை நம்பி இந்த போட்டிக்கு அனுப்பலாம். தொடர்ந்து ஒரு ஒலிம்பிக்ஸ்ல இருந்து அடுத்த ஒலிம்பிக்ஸ் வரைக்கும் பேசி கின்னஸ் சாதனை பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.
Multi-tasking போட்டி:
ஒரே நேரத்துல எவ்வளவு வேலை செய்ய முடியுங்கற போட்டி. இதுல சொல்லவே தேவையில்லை. ஆபிஷியல் சேட், பர்சனல் சேட், ஃபார்வேர்ட் மெயில் படிக்கிறது, ப்ளாக் படிக்கறது, ஆர்குட்ல ஸ்க்ரேப் பண்றது, ட்விட்டர்ல ஸ்டேடஸ் போட்டிருக்கற எவனயாவது கலாய்கறதுபக்கத்து சீட்டு ஃபிகரோட கடலை போடறது, ப்ளாக்ல கும்மி அடிக்கிறது, , ஃபோன்ல எவனையாவது கூப்பிட்டு கலாய்ச்சிட்டு இருக்கறது, அப்படியே ஆபிஸ் வேலையும் செய்யறது. இது எல்லாத்தையும் ஒட்டுகா செஞ்சி தங்கத்தை தட்டிட்டு வந்துடுவாங்க. (தங்கம் is not a figure name... Here தங்கம் means Gold)
All meetings attending போட்டி:
நிறைய மீட்டிங் வைப்பாங்க. எத்தனை மீட்டிங் அட்டண்ட் பண்ணி பேசறோங்கறனு போட்டி: நம்ம ப்ராஜக்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்றோமா இல்லை பக்கத்து ப்ராஜக்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்றோமானே தெரியாம ஒரு மணி நேரம் மீட்டிங்ல பேசிட்டு வர அளவுக்கு திறமையிருக்குற நம்ம டேமஜர்ஸை சாரி சாரி மேனஜர்ஸை அனுப்பினோம்னா அப்படியே அள்ளிட்டு வந்துடுவாங்க.
Mail Forwarding போட்டி:
ஒரு நாளைக்கு எத்தனை மெயில் ஃபார்வேர்ட் பண்றாங்கங்கற போட்டி. இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)
கடலை Frying போட்டி:
எப்படி துப்பாக்கி சுடறது, வில்லுல அடிக்கிறதுனு ரெண்டு போட்டி இருக்கோ. அதே மாதிரி ஃபோன்ல கடலை போடற போட்டி அண்ட் நேர்ல கடலை ஃபிரைங் போட்டியும் வித்தியாசமான போட்டி தான். ரெண்டு பேரும் பார்த்து பேசிக்கிறதுல கொஞ்சம் த்ரில் அதிகம். அட்டு ஃபிகரா இருந்தாலும் விட்டு கொடுக்காம கடலை போட்டு வாங்கிட்டு வந்துடுவாங்க நம்ம பசங்க.
24*7 வொர்க்கிங் போட்டி:
ப்ராஜக்ட் டெட் லைன், டெலிவரினு வந்துட்டா அசராம வேலை பார்க்கறதுல நம்ம ஆளுங்களை அடிச்சிக்க முடியாது. ஒரு வாரம் வீட்டுக்கு போகாம வேலை பார்த்து முடிச்சிட்டு தான் கிளம்புவானுங்க. இதுல நமக்கு சைனா போட்டியா இருந்தாலும், நம்ம ஆளுங்களை தயங்காம போட்டிக்கு அனுப்பலாம். தங்கம் இல்லைனா வெள்ளி உறுதி.
இதுக்கு மேலயும் நிறையா இருக்கு... அதை வேற பதிவுல போடறேன் ;)
58 comments:
மீ த பர்ஸ்ட் !
/
கோவி.கண்ணன் said...
மீ த பர்ஸ்ட் !
/
பாருங்க ஒருத்தர் இப்பவே போட்டிக்கு பேர் குடுத்திருக்கார் என்ரோல் பண்ணிக்கங்க!
:)))
மீ தி செகண்ட்!
me the nexttu
/
C&P :
Continous Phonela Talking போட்டி:
Multi-tasking போட்டி:
All meetings attending போட்டி:
Mail Forwarding போட்டி:
கடலை Frying போட்டி:
/
இது எல்லாத்துலயும் நான் தங்கம் கெலிச்சி குடுக்கிறேன்யா இந்தியாவுக்கு நான் கெலிச்சி குடுக்கிறேன்
:)))))
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)//
ஹி ஹி ஹி ரொம்ப கடுப்பாகிட்டீங்க போல :-))))
ஹா ஹா ஹா :D
வி.வி.சி :)
\\அதாவது காப்பி பேஸ்ட். ஒரு நிமிஷத்துல எவ்வளவு காப்பி பேஸ்ட் பண்றதுனு போட்டி. இதை வெச்சா எப்படியும் நம்ம டெவலப்பர்ஸ் காம்பிட்டீஷனே இல்லாம பதக்கத்தை வாங்கிட்டு வந்துடுவாங்க.
\\
Copy Paste செய்து வாழ்வாரேவாழ்வர்
மற்றாரெல்லாம் எழுதியே சாவர்!!
சும்மாவா சொல்லிருக்காங்க!
இதுக்கு பேரு Reusability-ஆம்..சரிங்களாண்னே ;)
Multi-tasking போட்டி
இது போட்டிங்கிறது.. Alt+Tab Press பண்ணி அசராம Keyboard தேயவெச்சிடமாட்டோம் !
மேலும் இதை பத்தியும் சொல்லுங்க
1.Appraisal Essay Writing Competition.
2.வேலை செய்யறோமோ இல்லியோ ,Team Lunch/Onsite Returnees Treat/Promotees Treat Organize பண்ணறது
3.Onsite- ஆப்புஷோர் சீ Offshore Calls சண்டை - கராத்தே, ஜூடோ எல்லாம் பிச்சை வாங்கனும் இந்த குடுமி பிடி சண்டைலேர்ந்து
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)///
:))))))))))))))))
//தொடர்ந்து ஒரு ஒலிம்பிக்ஸ்ல இருந்து அடுத்த ஒலிம்பிக்ஸ் வரைக்கும் பேசி கின்னஸ் சாதனை பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.///
:))))))))
சூப்பரு
சுபாஷ்
:)))
:-))))....
//கோவி.கண்ணன் said...
மீ த பர்ஸ்ட் !//
ஆமாம்னே நீங்க தான் ஃபர்ஸ்ட் :-)
// மங்களூர் சிவா said...
/
கோவி.கண்ணன் said...
மீ த பர்ஸ்ட் !
/
பாருங்க ஒருத்தர் இப்பவே போட்டிக்கு பேர் குடுத்திருக்கார் என்ரோல் பண்ணிக்கங்க!
:)))//
அப்ப நீங்க போட்டில ரெண்டாவதா பேர் கொடுத்திருக்கீங்க :-)
//நெல்லை காந்த் said...
me the nexttu//
சூப்பரு...
//மங்களூர் சிவா said...
/
C&P :
Continous Phonela Talking போட்டி:
Multi-tasking போட்டி:
All meetings attending போட்டி:
Mail Forwarding போட்டி:
கடலை Frying போட்டி:
/
இது எல்லாத்துலயும் நான் தங்கம் கெலிச்சி குடுக்கிறேன்யா இந்தியாவுக்கு நான் கெலிச்சி குடுக்கிறேன்
:)))))//
இதுல எப்படியும் அந்த கடலை ஃப்ரையிங் போட்டிஸ்ல நீங்க தங்கம் வாங்கி கொடுத்துடுவீங்கனு எங்களுக்கும் நம்பிக்கை இருக்கு சிவா. ஆனா பதக்கத்துல பாதி ஜெர்மனிக்கு கொடுக்க வேண்டியது இருக்குமாமே. அப்படியா? ;)
// Ramya Ramani said...
ஹா ஹா ஹா :D
வி.வி.சி :)
\\அதாவது காப்பி பேஸ்ட். ஒரு நிமிஷத்துல எவ்வளவு காப்பி பேஸ்ட் பண்றதுனு போட்டி. இதை வெச்சா எப்படியும் நம்ம டெவலப்பர்ஸ் காம்பிட்டீஷனே இல்லாம பதக்கத்தை வாங்கிட்டு வந்துடுவாங்க.
\\
Copy Paste செய்து வாழ்வாரேவாழ்வர்
மற்றாரெல்லாம் எழுதியே சாவர்!!
சும்மாவா சொல்லிருக்காங்க!
இதுக்கு பேரு Reusability-ஆம்..சரிங்களாண்னே ;)//
சூப்பரு...
அது
CopyPaste செய்து வாழ்வாரேவாழ்வர்
மற்றாரெல்லாம் "Code" எழுதியே சாவர்!! ;)
//கிரி said...
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)//
ஹி ஹி ஹி ரொம்ப கடுப்பாகிட்டீங்க போல :-))))//
அப்படியெல்லாம் இல்லை கிரி... ஒரு நம்பிக்கை தான் :-)
/
வெட்டிப்பயல் said...
இதுல எப்படியும் அந்த கடலை ஃப்ரையிங் போட்டிஸ்ல நீங்க தங்கம் வாங்கி கொடுத்துடுவீங்கனு எங்களுக்கும் நம்பிக்கை இருக்கு சிவா. ஆனா பதக்கத்துல பாதி ஜெர்மனிக்கு கொடுக்க வேண்டியது இருக்குமாமே. அப்படியா? ;)
/
ஆஹா விஷயம் அமெரிக்கா வரைக்கும் வந்திருச்சா!!
:)))
:) நல்லா இருக்கு.
/இதுல எப்படியும் அந்த கடலை ஃப்ரையிங் போட்டிஸ்ல நீங்க தங்கம் வாங்கி கொடுத்துடுவீங்கனு எங்களுக்கும் நம்பிக்கை இருக்கு சிவா. ஆனா பதக்கத்துல பாதி ஜெர்மனிக்கு கொடுக்க வேண்டியது இருக்குமாமே. அப்படியா? ;)
/
ஆஹா விசயம் இம்பூட்டு சீக்கிரமே அவ்ளோதூரத்துக்கு போயிச்சா!
மத்தபடி சூப்பர் பதிவு //Multi-tasking போட்டி:
//
இதுல நம்ம பதிவுலகத்துலேர்ந்து நிறைய பேரு போய் தங்கம் சொர்ணா எல்லாரையும் தூக்கிட்டு வருவாங்க! :))
ஆஹா தப்பாயிடுச்சே அது சொர்ணா இல்ல சொர்ணம் என் கனவு தேசத்து பாஷையில சொல்லிப்புட்டேன் :)
ஹிஹி... அந்த மல்டி டாஸ்கிங்லே -ஏற்கனவே இருக்கற லிஸ்டோட நான் செய்யற காபி குடிக்கறது, சுடோகு விளையாடறது - இது ரெண்டும் விட்டுப் போயிடுச்சு....:-))))
office supplies (pen, pencil, lubber, led, paper) ellaam abes seyyum potti?
:)
அட பாசக்கார பயபுள்ளைகளா! அண்ணாத்த நான் செயிக்கனும்னே இத்தன போட்டிகளா! நல்லா இருங்கப்பா, நல்லா இருங்க!!! எப்படி நன்றி சொல்லுவேன் ராசா எப்படி சொல்லுவேன்! நல்லா இருடே!!
// Ramya Ramani said...
Multi-tasking போட்டி
இது போட்டிங்கிறது.. Alt+Tab Press பண்ணி அசராம Keyboard தேயவெச்சிடமாட்டோம் !//
அதானே ;)
போட்டிக்கு இன்னொரு ஆள் ரெடி ;)
//Ramya Ramani said...
மேலும் இதை பத்தியும் சொல்லுங்க
1.Appraisal Essay Writing Competition.
2.வேலை செய்யறோமோ இல்லியோ ,Team Lunch/Onsite Returnees Treat/Promotees Treat Organize பண்ணறது
3.Onsite- ஆப்புஷோர் சீ Offshore Calls சண்டை - கராத்தே, ஜூடோ எல்லாம் பிச்சை வாங்கனும் இந்த குடுமி பிடி சண்டைலேர்ந்து//
இதெல்லாம் அடுத்த பகுதில சேர்த்திடலாம்மா ;)
//hisubash said...
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)///
:))))))))))))))))
//தொடர்ந்து ஒரு ஒலிம்பிக்ஸ்ல இருந்து அடுத்த ஒலிம்பிக்ஸ் வரைக்கும் பேசி கின்னஸ் சாதனை பண்ணாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.///
:))))))))
சூப்பரு
சுபாஷ்//
டாங்க்ஸ் சுபாஷ் :-)
// கவிநயா said...
:)))
விஜய் ஆனந்த் said...
:-))))..//
மிக்க நன்றி கவிநயா, விஜய் ஆனந்த் :)
//மங்களூர் சிவா said...
/
வெட்டிப்பயல் said...
இதுல எப்படியும் அந்த கடலை ஃப்ரையிங் போட்டிஸ்ல நீங்க தங்கம் வாங்கி கொடுத்துடுவீங்கனு எங்களுக்கும் நம்பிக்கை இருக்கு சிவா. ஆனா பதக்கத்துல பாதி ஜெர்மனிக்கு கொடுக்க வேண்டியது இருக்குமாமே. அப்படியா? ;)
/
ஆஹா விஷயம் அமெரிக்கா வரைக்கும் வந்திருச்சா!!
:)))//
அமெரிக்காவா? மார்ஸ் வரைக்கும் விஷயம் போயிடுச்சாம் ;)
//Sundar said...
:) நல்லா இருக்கு.//
மிக்க நன்றி சுந்தர் :)
//Blogger ஆயில்யன் said...
ஆஹா தப்பாயிடுச்சே அது சொர்ணா இல்ல சொர்ணம் என் கனவு தேசத்து பாஷையில சொல்லிப்புட்டேன் :)//
ஹி ஹி ஹி...
ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன் :-)
//ச்சின்னப் பையன் said...
ஹிஹி... அந்த மல்டி டாஸ்கிங்லே -ஏற்கனவே இருக்கற லிஸ்டோட நான் செய்யற காபி குடிக்கறது, சுடோகு விளையாடறது - இது ரெண்டும் விட்டுப் போயிடுச்சு....:-))))//
ஹி ஹி ஹி...
எப்படியும் பரிசு நமக்கு தானு உறுதியாயிடுச்சி ;)
// SurveySan said...
office supplies (pen, pencil, lubber, led, paper) ellaam abes seyyum potti?
:)//
சர்வேஸ்,
இதுல எப்படியும் நம்ம கவர்மெண்ட் ஆபிஸர்ஸ் லீடிங்ல இருக்க மாட்டாங்க ;)
//அபி அப்பா said...
அட பாசக்கார பயபுள்ளைகளா! அண்ணாத்த நான் செயிக்கனும்னே இத்தன போட்டிகளா! நல்லா இருங்கப்பா, நல்லா இருங்க!!! எப்படி நன்றி சொல்லுவேன் ராசா எப்படி சொல்லுவேன்! நல்லா இருடே!!//
அண்ணே,
எப்படியோ பரிசு நம்ம ஊருக்கு வந்தா சரி தான் ;)
நீங்க அண்ணி முன்னாடியும், சின்ன அண்ணி முன்னாடியும் வாயவே திறக்க மாட்டீங்களாமே... நிஜமாவா?
:))
kalakkal... enakku therinjathu only multi - tasking mattumthan...
போனில் நம்ம ஊர் பொண்ணுங்களால நாலே நாலு வருஷம்தான் பேசுவாங்க என்ற உம் நினைப்பில் உம்ம ஈயம் பித்தளை எல்லாம் இளிக்குது! :)
இந்த போட்டி எல்லாம் வச்சா, தங்கம் மட்டும் இல்ல, வெள்ளி, வெண்கலம் என்று முதல் மூன்று இடமும் நமக்குத்தான். பதக்க பட்டியலில் முதலில் வந்தா கூட ஆச்சரியப்படறதுகில்ல.
இந்த போட்டி எல்லாம் வச்சா, தங்கம் மட்டும் இல்ல, வெள்ளி, வெண்கலம் என்று முதல் மூன்று இடமும் நமக்குத்தான். பதக்க பட்டியலில் முதலில் வந்தா கூட ஆச்சரியப்படுறதுகில்ல.
:)))))))))))
நல்லா தான் யோசிக்கறீங்க :D
I will participate in the C&P and Meetings attending competns...
:)))))))))))))))))))))))
ஹா ஹா ஹா :-D
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)//
இது என்னவோ உண்மை தான்...உங்க கதையே முதல்ல, mail forward யில் தான் அறிமுகம்...அதுக்கு அப்புறம் நாங்க கூகில்ல தேடி, உங்க link கண்டுபிடிச்சோம்...ஹ்ம்ம், இப்ப தான் நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஒடி போச்சு :))
ஏனுங்கோ! பின்னூட்ட போட்டி கெடயாதா?
(1) Staring at the monitor potti : Veleye illenalum evlavu neram nalum vele seyra mari monitoraye pakkura potti.
(2) Cubiclemate mails/payslip ellam ora kannala padikira potti :
Idha pannadha software engineerse kedayadhu.
(3) Network neighbourhoodla poi irukura computer ellam open panni enna share panni irukanganu pakra potti : Freshersku GOLD.
(4) Information Bank potti : All gals information, managers pay/role information vechikardu.
(5) Getting offers potti : Office daily vandhu pora irukum. But papers potutu "anju offer vechiruken, ezhu offer vechiruken"nga vendiyadu!
(6) Visiting Maximum number of malls in a weekend
(7) Most number of FORUM mall visits
Ipdi pala pala pottigalla nambaal thanya thangam!!
-> Hermione
//
நீங்க அண்ணி முன்னாடியும், சின்ன அண்ணி முன்னாடியும் வாயவே திறக்க மாட்டீங்களாமே... நிஜமாவா?//
பொது இடத்திலே அப்டீல்லாம் பேசப்பிடாது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...டோட்டல் டேமேஜ் ஆகிபூடுச்சே! எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ வீட்டுக்குள்ள நடக்குறத:-))))
//Divyapriya said...
ஹா ஹா ஹா :-D
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)//
இது என்னவோ உண்மை தான்...உங்க கதையே முதல்ல, mail forward யில் தான் அறிமுகம்...அதுக்கு அப்புறம் நாங்க கூகில்ல தேடி, உங்க link கண்டுபிடிச்சோம்...ஹ்ம்ம், இப்ப தான் நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஒடி போச்சு :))
//
ரிப்பீட்டே...
//சென்ஷி said...
:))
kalakkal... enakku therinjathu only multi - tasking mattumthan...//
சென்ஷி,
ஒரு தங்கமாவது வாங்கி கொடுக்கறமேனு அபினவ் மாதிரி திருப்தி பட்டுக்க வேண்டியது தான் ;)
// இலவசக்கொத்தனார் said...
போனில் நம்ம ஊர் பொண்ணுங்களால நாலே நாலு வருஷம்தான் பேசுவாங்க என்ற உம் நினைப்பில் உம்ம ஈயம் பித்தளை எல்லாம் இளிக்குது! :)//
கொத்ஸ்,
நாலு வருஷத்துக்கு அப்பறம் அடுத்த போட்டில தங்கம் வாங்கறதுக்காக நிறுத்தி தானே ஆகனும் ;)
//R A J A said...
இந்த போட்டி எல்லாம் வச்சா, தங்கம் மட்டும் இல்ல, வெள்ளி, வெண்கலம் என்று முதல் மூன்று இடமும் நமக்குத்தான். பதக்க பட்டியலில் முதலில் வந்தா கூட ஆச்சரியப்படறதுகில்ல.//
நீங்க சொல்றத பார்த்தா நம்ம பேர் மட்டும் தான் பதக்க பட்டியல்ல இருக்கும் போல ;)
// G3 said...
:)))))))))))
நல்லா தான் யோசிக்கறீங்க :D//
டாங்ஸ் G3 அக்கா... தொடர் கதை படிக்கறீங்களா ;)
//தமிழினி..... said...
I will participate in the C&P and Meetings attending competns...
:)))))))))))))))))))))))//
சரி பேரை சேர்த்தாச்சு.
/Divyapriya said...
ஹா ஹா ஹா :-D
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)//
இது என்னவோ உண்மை தான்...உங்க கதையே முதல்ல, mail forward யில் தான் அறிமுகம்...அதுக்கு அப்புறம் நாங்க கூகில்ல தேடி, உங்க link கண்டுபிடிச்சோம்...ஹ்ம்ம், இப்ப தான் நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஒடி போச்சு :))//
கூகுள்ல தேடி கண்டுபிடிச்சீங்களா???
அவ்வளவு நல்லவங்களா நீங்க...
அவ்வ்வ்வ்வ்
//திவா said...
ஏனுங்கோ! பின்னூட்ட போட்டி கெடயாதா?//
அது வலைப்பதிவர்களுக்கான போட்டி. நாளைக்கு வரும் ;)
// Anonymous said...
(1) Staring at the monitor potti : Veleye illenalum evlavu neram nalum vele seyra mari monitoraye pakkura potti.
(2) Cubiclemate mails/payslip ellam ora kannala padikira potti :
Idha pannadha software engineerse kedayadhu.
(3) Network neighbourhoodla poi irukura computer ellam open panni enna share panni irukanganu pakra potti : Freshersku GOLD.
(4) Information Bank potti : All gals information, managers pay/role information vechikardu.
(5) Getting offers potti : Office daily vandhu pora irukum. But papers potutu "anju offer vechiruken, ezhu offer vechiruken"nga vendiyadu!
(6) Visiting Maximum number of malls in a weekend
(7) Most number of FORUM mall visits
Ipdi pala pala pottigalla nambaal thanya thangam!!
-> Hermione//
பட்டையை கிளப்பீட்டீங்க... இதையே ஒரு பதிவா எழுதலாம் போல :-)
//அபி அப்பா said...
//
நீங்க அண்ணி முன்னாடியும், சின்ன அண்ணி முன்னாடியும் வாயவே திறக்க மாட்டீங்களாமே... நிஜமாவா?//
பொது இடத்திலே அப்டீல்லாம் பேசப்பிடாது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...டோட்டல் டேமேஜ் ஆகிபூடுச்சே! எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ வீட்டுக்குள்ள நடக்குறத:-))))//
அண்ணே,
இந்த ரகசியத்தை தான் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு ஊர் முழுக்க சொல்லி வெச்சிருக்கீங்களே ;)
// Raghav said...
//Divyapriya said...
ஹா ஹா ஹா :-D
//இதுல நம்ம ஆளுங்க திறமைக்கு சாட்சியா நீங்க இந்த பதிவையே மெயில்ல கொஞ்ச நாள்ல படிப்பீங்க பாருங்க ;) (ஆனா யார் எழுதானாங்கனு அதுல பேர் இருக்காது)//
இது என்னவோ உண்மை தான்...உங்க கதையே முதல்ல, mail forward யில் தான் அறிமுகம்...அதுக்கு அப்புறம் நாங்க கூகில்ல தேடி, உங்க link கண்டுபிடிச்சோம்...ஹ்ம்ம், இப்ப தான் நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஒடி போச்சு :))
//
ரிப்பீட்டே...//
நீங்களும் கூகுள் பண்ணியா கண்டுபிடிச்சீங்க???
போடு ங்கொய்யாலே அப்படி....
இன்னும் நெறையா போட்டி இருக்கு...புடிச்சிக்கோ...
அரசியல் வாதிகளுக்கு, சூட் கேஸ் வாங்குற போட்டி..
பதிவர்களுக்கு மொக்கை பதிவு போடுற போட்டி
பின்னூட்டாளர்களுக்கு அதிகப்படி பின்னூட்டம் போடுற போட்டி (மங்களூர் சிவா, உண்மை தமிழன் மாதிரி.. :))
ப்ரீ அட்வைஸ் (இலவச ஆலோசனை) குடுக்குற போட்டி ..டோண்டு சார் வலை பதிவு மாதிரி..
நல்ல ஐடியாக்கள்.
எப்படியாவது நம்ம வலையுலக மக்களை தங்கப்பதக்கம் வாங்கி தங்கப்பதக்கம் சிவாஜின்னு பட்டம் கொடுக்க முடிவு செஞ்சுட்டீங்க வெட்டி. :))))))))))
அக்மார்க் உங்க ஸ்டைல் ஐடியாக்கள்.
படித்தேன், ரசித்தேன்.
ஆமாம் கும்மி மெயில் அனுப்பறது, கும்மி த்ரெட்டில் கோத்து 1000 மெயில் வரைக்கும் அனுப்பறதை எல்லாம் விட்டூடீங்களே!
Post a Comment