"முருகேசன்" தமிழ்நாட்டின் வறண்ட பூமியை நமக்கு வளமையான பூமியாக மீட்டு தந்தவர். நமது பாரம்பரிய அணுகுமுறையின் மூலம் வறண்ட ஆறுகளை வற்றாத ஜீவநதியாக்கியவர். இந்த வருடத்தின் ஆசிய அமைதிக்கான விருதை வாங்கியவர். அரசாங்கத்துடன் கருத்து மோதல்களுக்கு பெயர் பெற்றவர். அதிகம் படிக்காதவர். இங்கே ஓடிக்கொண்டிருக்கும் தென்பெண்ணை தான் இவர்களால் ஜீவ நதியாக்கப்பட்ட முதல் ஆறு. இதோ அவருடன் ஒரு நேர்காணல்
ஆசியாவின் அமைதிக்கான விருதை பெற்றதுக்கு வாழ்த்துகள். இது உங்க இருபது வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றினு வெச்சிக்கலாமா?
ஆமாங்க. எல்லாம் என் உழைப்பு தான். அதோ தெரியுது பாருங்க குளம். அது நான் ஒருத்தனே தோண்டினது.
என்னங்க நிஜமாவா சொல்றீங்க?
இது எப்படி நான் தனி ஆளா உருவாக்கனதுனு சொன்னது உண்மையா இருக்க முடியாதோ. அது மாதிரி தாங்க அந்த விருது என் தனி ஒருத்தன் உழைப்புக்கு கிடைச்சதும்னு சொல்றதும் உண்மையில்லை. அது எங்க கூட சேர்ந்து வேலை பார்த்த அனைவருக்கும் சேர்த்து கொடுத்தது.
சொல்லிவிட்டு முருகேசன் சிரித்தார்.
வறண்ட நதிகளை வற்றாத ஜீவநதியாக்கியது எப்படி சாத்தியமானது?
முதல்ல நாங்கள் நதிகளை சரி செய்ய முயற்சி பண்ணலைங்க. பாரம்பரிய முறைகளை பின்பற்றி எங்க கிராமத்துக்கு தேவையான தண்ணியை சேமிக்கணும், எப்பவும் விவசாயம் செய்ய தண்ணி தடையா இருக்க கூடாதுனு ஆரம்பிச்சது தான் எங்களோட இந்த இயக்கம். முதல்ல நாங்க கட்டின குளங்கள் மழை தண்ணியை சேமிச்சி வைச்சி வருஷம் முழுசும் கிடைக்கிற மாதிரி எங்களுக்கு உதவுச்சு. அது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துச்சு. அது தான் இன்னைக்கு நாம பார்க்கிற இந்த மாற்றத்துக்கு காரணம். அதோ கிழக்கால அங்க தெரியுது பாருங்க. அது தான் நாங்க கட்டின முதல் குளம்.
அவர் காட்டிய குளத்தை சுத்தி பச்சை பசேலன மரங்களும், முக்கால்வாசிக்கு மேல் தண்ணீரும் இருந்தது. சிறுவர்கள் தூண்டில் போட்டு மீனுக்காக காத்திருந்தனர்.
இந்த இயக்கத்தை ஆரம்பிக்கனும்னு உங்களுக்கு எப்படி எண்ணம் ஏற்பட்டது?
நான் அதிகம் படிக்காதவங்க. பத்தாவது கூட படிக்கல. எப்படியும் நிலம் இருக்கு விவசாயம் பண்ணி பிழைச்சிக்கலாம்னு இருந்துட்டேன். 2009வது வருஷம், எனக்கு இருபத்தி ஏழு வயசிருக்கும். எங்க மாமன் மகள் செண்பகத்தை எனக்கு கட்டி வைக்கலாம்னு எங்க ஆத்தா என் மாமன் வீட்டுக்கு பொண்ணு கேக்க போச்சு. அப்ப என் மாமன், எதுவும் படிக்காத உன் பையனுக்கு எப்படி என் பொண்ணை கொடுக்கறதுனு சண்டை போட்டிருக்கு.
என் அம்மாவும் எங்களுக்கு நிலமிருக்கு, வெவசாயம் பண்ணி பொழைச்சிக்குவேனு சொல்லிருக்கு. ஊருல தண்ணி இல்லை, கூலிக்கு ஆள் இல்லை, எல்லா சின்ன பையலுங்களும் பங்களூரு, மெட்ராசுனு கொளுத்து வேலைக்கு போயிட்டானுங்க. இருக்கறவங்களும் ரெண்டு ரூபாய்க்கு அரிசி கெடைக்குதுனு வாங்கி தின்னுட்டு வேலைக்கு வர மாட்றானுங்க. இதுல எங்க இருந்து உன் பையன் வெவசாயம் பாப்பான்னு சொல்லி அனுப்பிட்டாரு.
அப்பறம்?
எங்க ஆத்தா என் கிட்ட வந்து இதை சொல்லி கஷ்டப்பட்டுச்சு. செண்பகத்துக்கும் என் மேல உசுரு. எனக்கும் தான். சரி நாமலே நேர்ல போய் மாமன் கிட்ட பேசி பார்க்கலாம்னு போய் பேசனேன். என் கிட்டயும் அதையே சொல்லிடுச்சு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. பம்பு செட்டுக்கு நேரா போய் மருந்து எடுத்து குடிக்க போனேன். அங்க ஏதேச்சையா வந்த என் தாத்தா அதை பார்த்து தடுத்துட்டாரு. அப்பறம் நடந்ததெல்லாம் சொல்லி அழுதேன்.
அவருக்கு என் மேல ரொம்ப கோபம் வந்துடுச்சு. "உன் வயசு பசங்க எல்லாம் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்துக்கு இப்படி முடிவெடுக்கறதால தான் ஊரு இப்படி இருக்கு. உங்களுக்கு எல்லாம் இந்த வயசுலயே உழைக்க கஷ்டமா இருக்கு. சினிமா, டீவினு சுகமா வாழ பழகிட்டீங்க" அப்படினு சொல்லி திட்னாரு. எனக்கு அழுகையும் கோபமும் வந்துச்சு. நான் மட்டும் உழைச்சா எப்படி விவசாயம் பண்ண முடியும்? தண்ணிக்கு எங்க போவேனு? கேட்டேன் அப்ப அவர் சொன்னது தான் இந்த திட்டம்.
அந்த திட்டத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
எங்க தாத்தாவுக்கு அப்பயே வயசு 80 சொச்சம். அவர் அதுக்கு முன்னாடி இந்த ஊர்ல வெவசாயம் பார்க்கும் போது அவுங்களுக்கு எப்படி தண்ணி கஷ்டம் இல்லாம இருந்தாங்கனு எனக்கு விளக்க ஆரம்பிச்சாரு. ஊருல அதுக்கு முன்னாடி எங்க எல்லாம் குளம் இருந்துச்சுனு அவர் சின்ன வயசுல கேட்டது, பார்த்ததை வெச்சி சொன்னாரு.
அந்த இடம் எல்லாம் சும்மா அவுங்க இஷ்டத்துக்கு கட்டினதில்லை. ஊர்ல மழை பெஞ்சா தண்ணி எங்க வந்து தங்கும்னு பார்த்து அங்க இருக்கறவங்க கட்டின குளங்கள். அதே இடத்துல மறுபடியும் எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டி முதல்ல மழை தண்ணிய சேர்ப்போம். அப்படி சேர்ற தண்ணிய ஒரு ரெண்டு, மூணு வருஷத்துக்கு பயன்படுத்தாம அப்படியே விடணும்னு சொன்னாரு. அப்ப தான் நிலத்தடி நீர் உயரும்னு சொன்னாரு. அதை தான் செஞ்சோம்.
ஊருல மக்கள் எப்படி அதுக்கு உதவனாங்க?
நானும், என் சிநேகிதக்காரவங்களும் சேர்ந்து தான் இதை ஆரம்பிச்சோம். மொத்தம் நாங்க பதினாலு பேரு. கிரிக்கெட் டீமா இருந்து அப்படியே நண்பர்கள் ஆகிட்டோம். முதல் குளத்தை நானும் அவுங்களும் தான் ஆரம்பிச்சோம். ஒரு மாசமா வெட்டி கூட எங்களால வெட்டி முடிக்க முடியல.
ஒரு குளம் தோராயமா பதினாறு அடில இருந்து முப்பது அடி ஆழமும், நானூறுல இருந்து அறு நூறு சதுர அடியும் இருக்கும். நாங்க பாதி வெட்டும் போதே எங்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பிச்சுது. அப்ப தான் பொங்கல் வந்துச்சு. சரியா எல்லா பசங்களும் ஊருக்கு வர ஆரம்பிச்சானுங்க.
நாங்க பண்றதை பார்த்துட்டு எல்லாரும் எங்க கூட இறங்கிட்டானுங்க. அத்தனை பேரும் சேர்ந்து அதை ஒரு வாரத்துல முடிச்சோம். இப்ப நினைச்சா கூட எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ராத்திரி பகல்னு பார்க்காம பண்ணது அது. முதல் குளம் வெட்டி முடிச்சதுக்கு அப்பறம் ஊர்ல இருக்கற எல்லா பெரியவங்களும் எங்களுக்கு உதவ ஆரம்பிச்சிட்டாங்க. அது தான் எங்களுக்கு உத்வேகமா அமைஞ்சது.
அந்த வருஷம் முடியறதுக்குள்ள ஊரை சுத்தி பதினோரு குளம் வெட்டி முடிச்சோம். முதல் வருஷம் கார்த்திக தீபத்தன்னைக்கு தான் எல்லா குளமும் ரொம்புச்சு. அது தான் என் வாழ்க்கைலயே சந்தோஷமான நாள்.
முருகேசன் கண்களில் நீர் எட்டி பார்த்தது.
இந்த மாதிரி ஒரு குளம் வெட்டறதுக்கு எவ்வளவு செலவு ஆகும்?
இந்த மாதிரி குளம் வெட்ட அம்பது ஆயிரத்துல இருந்து ரெண்டு லட்சம் வரைக்கும் அன்னைக்கு தேதிக்கு ஆச்சுங்க. இன்னைக்கு தேதிக்கு பார்த்தா இருபதுல இருந்து நாப்பது லட்சம் ஆகுங்க. ஆனா எங்களுக்கு லேபர் செலவு இல்லைங்க. மெஷினுக்கு ஆகறது தான். எல்லாமே எங்க மக்களோட உழைப்பு தாங்க. அதனால எல்லாருக்குமே அதுல பங்கு இருக்கு.
நாங்க இந்த மாதிரி பசுமையாக்குன புதுசல எல்லா ரியல் எஸ்டேட் காரங்களும் எங்களுக்கு வலை விரிச்சாங்க. ஆனா நாங்க யாருமே நிலத்தை விக்க முடியாதுனு சொல்லிட்டோம். சோறு போடற நிலத்துல வீடு கட்டினா எதை தின்னுவானுங்கனு தெரியல? அதே மாதிரி நாங்க குளம், ஏரி, ஆறு அதை எல்லாம் சுத்தி நிறையா மரமும், வெட்டி வேரும் வளர்க்க ஆரம்பிச்சோம். அதுவும் எங்களுக்கு நிலத்தடி நீரை அதிகமாக்க உதவுச்சு.
இந்த மாதிரி குளம் கட்டினதால ஏற்பட்ட மாற்றங்கள் என்னனு கொஞ்சம் சொல்லுங்களேன்
இருங்க. கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பேசலாம்.
இந்தாங்க இந்த ஊத்து தண்ணிய குடிச்சி பாருங்க. எங்க எல்லாரோட வேர்வையும் இதுல இருக்கு. ஆனா உப்பு கரிக்காதுங்க. சொல்லிவிட்டு
சிரித்தார்.
தண்ணிர் சர்க்கரை போல இனித்தது.
சரி இப்ப கேள்வி கேளுங்க
இந்த மாதிரி குளம் கட்டினதால ஏற்பட்ட மாற்றங்கள் என்னனு கொஞ்சம் சொல்லுங்களேன்
முதல்ல நிலத்தடி நீர் மூணே வருஷத்துல 10 அடிக்கு மேல வர ஆரம்பிச்சிது. அது கொஞ்ச கொஞ்சமா ஆத்து பக்கத்தலயும் மேல ஏற ஆரம்பிச்சிது. பெண்ணையாத்துல தண்ணிக்கு பதிலா மண்ணு லாரி தான் ஓடிட்டு இருந்தது. நாங்க செஞ்ச மாற்றத்தால ஆத்து பக்கத்துல ஊத்து எல்லாம் திரும்ப வர ஆரம்பிச்சிது.
எங்களை பார்த்துட்டு சுத்து பத்துல இருக்கற கிராமங்கள்ல இருந்து எல்லாம் ஆள் வர ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு ஊரா எங்க கிராமத்துல இருக்கற எல்லாரும் போய் வேலை செய்ய ஆரம்பிச்சோம். எங்களோட வெற்றி அவுங்களுக்கு ஒரு உந்துதலா இருந்துச்சு. ரெண்டு ரூபாய்க்கு கொடுத்த அரிசி எங்களுக்கு அப்ப ரொம்ப உதவியா இருந்துச்சு. சாப்பாடு சுலபமா கிடைச்சுது. நாங்க உழைக்க தயாரா இருந்தோம். ஊரு முழுக்க மாற்றம் ஏற்பட்டது.
அஞ்சே வருஷத்துல எங்க ஊர்ல மூணு போகமும் வெளைய வெச்சோம். இங்க இருந்து கொளுத்து வேலைக்கு போனவங்க எல்லாம் இந்த கிராமத்து காத்தும், நல்ல தண்ணியும் கிடைச்சா போதும்னு வர ஆரம்பிச்சாங்க. தமிழ் நாட்ல இப்ப நிறைய கிராமத்துல இதை பண்ணிட்டோம். இன்னைக்கு கிராமத்துல தான் அதிக பேர் இருக்காங்க.
நகரத்துல இருக்கறதை விட கிராமத்துல இருக்கறதை தான் மக்கள் விரும்பறாங்க. வேற வழி இல்லாதவங்க தான் அங்க இருக்காங்க. பெண்ணையாறு, பாலாறு, அரிசிலாறு, கடனா நதி அது நாலுத்தையும் இது வரைக்கும் ஜிவநதிகளா மாத்தியிருக்கோம். இன்னும் பத்து வருஷத்துல எல்லா ஆத்தையும் மாத்தி காட்டுவோம்.
உங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இவ்வளவு சண்டை ஏற்பட காரணம் என்ன?
வேற என்னங்க? பயம் தான். முதல்ல குளம் கட்டும் போது எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்து ஆறு மாசத்துல பன்னெண்டு குளம் வெட்டினோம். உடனே அரசாங்கத்துல இருந்து ஆள் வந்துட்டாங்க. குளம், ஏரி, ஆறு எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தமானது. அவுங்க அவுங்க இஷ்டத்துக்கு வெட்ட கூடாது. அதுக்கு எல்லாம் ஒரு கணக்கு இருக்கு. இப்படி இஷ்டத்துக்கு வெட்டினா மண் அரிப்பு வரும்னு சண்டை போட்டாங்க. இத்தன நாளா இல்லாத அரிப்பு நாங்க குளம் வெட்றதால தான் வர போதானு சண்டை போட்டேன். உனக்கு விஞ்ஞானம் தெரியாதுனு சொன்னான்.
வெள்ளக்காரன் சொல்லி கொடுத்தது தான் விஞ்ஞானம்னா இங்க மூவாயிரம் வருஷம் மனுசன் எதைங்க தின்னுட்டு இருந்தான். வெள்ளைக்காரன் வரதுக்கு ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்க விவசாயம் பண்ணிட்டு தானே இருந்தோம். முதல்ல நம்ம ஊர்ல எப்படி வெவசாயம் பண்ணிட்டு இருந்தோம்னு படி. அப்பறம் அதுல என்ன தப்பு இருக்குனு சொந்தமா யோசிச்சி சொல்லு. அப்ப ஒத்துக்கறேன் உன் விஞ்ஞானத்த. அதை விட்டுட்டு அவன் அங்க டேம் கட்டினானு அதனால நானும் கட்டுவேனு சொல்றது விஞ்ஞானமில்ல.
அப்பறம் மணல் கொள்ளை. எவ்வளவு சொல்லியும் கேக்காம மினிஸ்டர் ஆளுங்க மண்ணை திருடினானுங்க. ஒரு நாள் இராத்திரி எல்லாரும் சேர்ந்து பதினஞ்சி லாரிய மடக்கி எல்லா டிரைவரையும் அடிச்சி கைய காலை உடைச்சிட்டோம். அதுக்கு போலிஸ் அரெஸ்ட் பண்ணாங்க. ஊர்ல இருக்கற எல்லாரும் பேசி எங்களை வெளிய எடுத்தாங்க. ஆனா அதுக்கு அப்பறம் ஊர் பக்கம் எவனும் மண் அள்ள வரல. நாங்களாவது அடிச்சதோட விட்டோம். மணமுண்டில பன்னெண்டு லாரியை எரிச்சானுங்க. அந்த பிரச்சனைல அரெஸ்ட் ஆனவர் தான் இப்ப அமைச்சரா இருக்காரு. சொல்லிவிட்டு சிரித்தார்.
சரி இன்னும் அரசாங்கத்தோட உங்களுக்கு பிரச்சனை தொடருதே?
தண்ணி அரசாங்கத்தோட சொத்துனு சொல்ற வரைக்கும் அது தொடர்ந்துகிட்டே தான் இருக்கும். மண்ணை ஜெயிச்ச எந்த ராஜாதி ராஜனும் தண்ணிய சொந்தம் கொண்டாடினது இல்லை. தண்ணி என்னைக்குமே மக்களுக்கு சொந்தமானது. ஒவ்வொரு உயிருக்கும் அதை கிடைக்க வைக்க வேண்டிய கடமை மட்டும் தான் அரசாங்கத்துக்கு இருக்கு. மனுசன்னு மட்டும் இல்லை. மரம், செடி, ஆடு, மாடுனு எல்லாத்துக்குமே தண்ணி சொந்தம். மலைங்க எல்லாம் பூமி தாயின் மார்பு, தண்ணி அதுல வர தாய்ப்பால், நாம எல்லாரும் பூமி தாயின் குழந்தைகள்னு படிச்சிருக்கேன். அது எவ்வளவு உண்மை.
சரி இவ்வளவு போராடிருக்கீங்க. இதுல நீங்க ரொம்ப கஷ்டமா நினைச்சது எது?
2009 கார்த்திகை தீபத்தன்னைக்கு நாங்க வெட்ன குளத்துல எல்லாம் தண்ணி ரொம்பிடிச்சினு ரொம்ப சந்தோஷமா இருந்தேன். என் வாழ்க்கைல பெருசா சாதிச்ச மாதிரி இருந்தது. அன்னைக்கு ராத்திரியே செண்பகம் நான் வெட்டின குளத்துலயே விழுந்து செத்துடுச்சு. நான் ஆத்து மணல் அள்ளற பிரச்சனைல ஜெயிலுக்கு போயிருக்கேனு என் மாமன் செண்பகத்தை வேற ஒருத்தனுக்கு கண்ணாலம் பண்ணி வைக்க பார்த்திருக்காரு. அதுக்கு பயந்து அவ அந்த முடிவ எடுத்துட்டா. என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம். வறண்ட பூமியையே மாத்தலாம்னு போராடிக்கிட்டு இருக்கறவனால என் மாமன் மனச மாத்த முடியாமலா போயிருக்கும்?
அவர் கண்களில் மீண்டும் நீர் எட்டி பார்த்தது.
இந்த மண்ணுல விவசாயம் பார்க்க முடியாதுங்கற காரணத்தால எந்த உயிரும் போக கூடாதுனு இன்னும் உத்வேகமா உழைக்க ஆரம்பிச்சேன். இருபது வருஷமானதே தெரியல. எப்படியும் இன்னும் பத்து வருஷத்துல தமிழ்நாட்ல இருக்கற எல்லா ஆத்துலயும் வருஷம் முழுசும் தண்ணி இருக்கற மாதிரி பண்ணுவோம். அது தான் இப்ப என் லட்சியம்.
அவர் கண்களில் நம்பிக்கை ஒளி தெரிந்தது.
145 comments:
Cyril Alex போட்டிக்காக எழுதிய கதை... இது வோர்க் அவுட் ஆகலைனா அடுத்து ஒரு ஏலியன் கதை எழுதலாம்னு இருக்கேன் ;)
முதல்வன் படம் பார்த்த மாதிரி ஜிவ்வுனு இருக்கு.
2009 ரஜினிக்கு ஹீரோயின் யாரு 'சுப்பிரம்ணியபுரம்' சுவாதி?
(படிச்சா அனுபவிக்கனும்... அறிவியலத் தேடக்கூடாது என்பதால், ஜூட்ட்ட் :)
நல்ல கரு :)) கதை கொண்டு சென்ற விதமும் நல்லா இருக்கு.வெற்றி பெற வாழ்த்துக்கள் :))
//Boston Bala said...
முதல்வன் படம் பார்த்த மாதிரி ஜிவ்வுனு இருக்கு.
2009 ரஜினிக்கு ஹீரோயின் யாரு 'சுப்பிரம்ணியபுரம்' சுவாதி?
(படிச்சா அனுபவிக்கனும்... அறிவியலத் தேடக்கூடாது என்பதால், ஜூட்ட்ட் :)//
பாபா,
இது என்னுமோ நான் புதுசா கண்டுபிடிச்சி எழுதன விஷயமில்லை. 20 வருஷமா ராஜாஸ்தான்ல நடந்துட்டு இருக்கற ஒரு புரட்சி...
அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)
மேலும் பார்க்க
//Ramya Ramani said...
நல்ல கரு :)) கதை கொண்டு சென்ற விதமும் நல்லா இருக்கு.வெற்றி பெற வாழ்த்துக்கள் :))//
மிக்க நன்றி ரம்யா :-)
Wow...!!! Kalakkal Vetti...
Oru Puratchiyeee Pannitteenga...
Vazhthugal Vetti...
நல்ல கருத்துள்ள கதை,
உரையாடலை மிக மிக சுவாரஸியமாக கொண்டு சென்ற விதம் அருமை!!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்:))
//முதல்வன் படம் பார்த்த மாதிரி ஜிவ்வுனு இருக்கு. //
பாபா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்..
என்னமா யோசிச்சு இருக்கீங்க வெட்டி...டபுள் சல்யுட் :-)
(இம்சை அரசனில் அடை பெயர் கொடுப்போர் பாணியில்)
இவ்வளவு புரட்சிகரமான பதிவு போட்டதால் இன்றிலிருந்து இந்த வலையுலகம் தங்களை "புரட்சி பையல்" என்று அன்போடு அழைக்கட்டும்...
:))))
நல்ல பதிவு....போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்....
முருகேசன் அப்படியே "உன்னால் முடியும் தம்பி" படத்தில் வர நல்ல தம்பி மாதிரி!
அருமையான கருத்து! இதெல்லாம் நெஜமாவே நடந்தா நல்லா தான் இருக்கும். எங்க நடக்க போவுது? இருக்குற குலங்களையே மூடிட்டு மேல வீட்ட கட்றாங்க.
//மலைங்க எல்லாம் பூமி தாயின் மார்பு, தண்ணி அதுல வர தாய்ப்பால், நாம எல்லாரும் பூமி தாயின் குழந்தைகள்னு படிச்சிருக்கேன்.//
என்ன ஒரு சிந்தனை! ரொம்ப டச்சிங்!
hey, good story and usefull information.
//ரெண்டு ரூபாய்க்கு கொடுத்த அரிசி எங்களுக்கு அப்ப ரொம்ப உதவியா இருந்துச்சு. சாப்பாடு சுலபமா கிடைச்சுது. //
but cycle gapla auto otitinga. :)
நான் கூட ஏதோ நிஜ பேட்டின்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சேன்.. பிறகுதான் தெரிஞ்சது :) இயல்பான நடையில அரிதான கருவெடுத்து பயனுள்ள செய்திகளைத் தந்திருக்கீங்க. வாழ்த்துகள்.
Simply superb except rendu roopa rice
Simply Superb!!!
(Except the jaalraa to 2 Rs rice)
---deepa.shiva@gmail.com
// Sen22 said...
Wow...!!! Kalakkal Vetti...
Oru Puratchiyeee Pannitteenga...
Vazhthugal Vetti...//
மிக்க நன்றி செந்தில்...
//Divya said...
நல்ல கருத்துள்ள கதை,
உரையாடலை மிக மிக சுவாரஸியமாக கொண்டு சென்ற விதம் அருமை!!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்:))//
ரொம்ப நன்றிம்மா...
//இதை சாதிச்ச ராஜேந்திர சிங்கிற்கு 2001ஆம் ஆண்டு ராமன் மெகசேசே அவார்ட் கிடைச்சிருக்கு. இதை சாதிக்க ரஜினி காந்தோ, விஜய காந்தோ வருவார்கள்னு காத்திட்டு இருக்கற தமிழர்களை பத்தி சொல்ல ஒண்ணுமில்லை :-)//
இது தான் டாப்பு :-)
//Syam said...
//முதல்வன் படம் பார்த்த மாதிரி ஜிவ்வுனு இருக்கு. //
பாபா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்..//
ரொம்ப டாங்ஸ் நாட்டாமை :-)
//Syam said...
என்னமா யோசிச்சு இருக்கீங்க வெட்டி...டபுள் சல்யுட் :-)//
மிக்க நன்றி நாட்டாமை :-)
//தமிழினி..... said...
(இம்சை அரசனில் அடை பெயர் கொடுப்போர் பாணியில்)
இவ்வளவு புரட்சிகரமான பதிவு போட்டதால் இன்றிலிருந்து இந்த வலையுலகம் தங்களை "புரட்சி பையல்" என்று அன்போடு அழைக்கட்டும்...
:))))
நல்ல பதிவு....போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்....//
ஆஹா...
பட்டையை கிளப்பறீங்களே தமிழினி...
வாழ்த்திற்கு மிக்க நன்றி :-)
//Sathiya said...
முருகேசன் அப்படியே "உன்னால் முடியும் தம்பி" படத்தில் வர நல்ல தம்பி மாதிரி!
//
நம்ம உதய மூர்த்தி மாதிரியா? :-)
ஆனா நான் எழுத ஆரம்பித்தது ராஜேந்திர சிங் என்பவரை மனதில் வைத்து :-)
//
அருமையான கருத்து! இதெல்லாம் நெஜமாவே நடந்தா நல்லா தான் இருக்கும். எங்க நடக்க போவுது? இருக்குற குலங்களையே மூடிட்டு மேல வீட்ட கட்றாங்க.
//
அந்த ஆசைல தான் இந்த கதை எழுதினது... பாலைவனத்தையே மாத்தியிருக்காங்க... மூணு போகம் விளைஞ்ச மண்ணை.......
// //மலைங்க எல்லாம் பூமி தாயின் மார்பு, தண்ணி அதுல வர தாய்ப்பால், நாம எல்லாரும் பூமி தாயின் குழந்தைகள்னு படிச்சிருக்கேன்.//
என்ன ஒரு சிந்தனை! ரொம்ப டச்சிங்!//
மிக்க நன்றி :-)
// Thiyagarajan said...
hey, good story and usefull information.//
மிக்க நன்றி...
//
//ரெண்டு ரூபாய்க்கு கொடுத்த அரிசி எங்களுக்கு அப்ப ரொம்ப உதவியா இருந்துச்சு. சாப்பாடு சுலபமா கிடைச்சுது. //
but cycle gapla auto otitinga. :)//
இதுக்கு முன்னாடி //ரெண்டு ரூபாய்க்கு அரிசி கெடைக்குதுனு வாங்கி தின்னுட்டு வேலைக்கு வர மாட்றானுங்க//
இதை படிக்கலயா???
எல்லாத்தையும் நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கறது நம்ம கைல தான் இருக்குனு கதை சொல்றது நிஜமாலுமே புரியலையா? :-(
//கவிநயா said...
நான் கூட ஏதோ நிஜ பேட்டின்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சேன்.. பிறகுதான் தெரிஞ்சது :) இயல்பான நடையில அரிதான கருவெடுத்து பயனுள்ள செய்திகளைத் தந்திருக்கீங்க. வாழ்த்துகள்.//
மிக்க நன்றி கவிநயா :-)
சுவராசியமா படிச்சிட்டு வந்தேன்.கடைசியில் கதைன்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே:)பெருமூச்சுதான் இப்ப வருது.
//Anonymous said...
Simply Superb!!!
(Except the jaalraa to 2 Rs rice)
---deepa.shiva@gmail.com//
முன்னாடி ஒருத்தருக்கு சொன்னது தான்.
//
இதுக்கு முன்னாடி //ரெண்டு ரூபாய்க்கு அரிசி கெடைக்குதுனு வாங்கி தின்னுட்டு வேலைக்கு வர மாட்றானுங்க//
இதை படிக்கலயா???
எல்லாத்தையும் நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கறது நம்ம கைல தான் இருக்குனு கதை சொல்றது நிஜமாலுமே புரியலையா? :-(
//Syam said...
//இதை சாதிச்ச ராஜேந்திர சிங்கிற்கு 2001ஆம் ஆண்டு ராமன் மெகசேசே அவார்ட் கிடைச்சிருக்கு. இதை சாதிக்க ரஜினி காந்தோ, விஜய காந்தோ வருவார்கள்னு காத்திட்டு இருக்கற தமிழர்களை பத்தி சொல்ல ஒண்ணுமில்லை :-)//
இது தான் டாப்பு :-)//
ஹி ஹி ஹி...
டாங்க்ஸ் தல :-)
நாந்தான் பர்ஸ்ட்டூ :(
//ராஜ நடராஜன் said...
சுவராசியமா படிச்சிட்டு வந்தேன்.கடைசியில் கதைன்னு சொல்லி ஏமாத்திட்டீங்களே:)பெருமூச்சுதான் இப்ப வருது.//
இதெல்லாம் நடுந்துடாதானு ஒரு ஆதங்கத்துல எழுதனது தான் இந்த கதை.
கோவைல சிறுதுளி ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துவிட்டது என்பது மகிழ்ச்சியான தகவல் :-)
எங்க தென் பெண்ணையாறு :-(
//(படிச்சா அனுபவிக்கனும்... அறிவியலத் தேடக்கூடாது என்பதால், ஜூட்ட்ட் :)//
RPEEEEEEEEEEET
// புதுகைச் சாரல் said...
நாந்தான் பர்ஸ்ட்டூ :(//
புதுகைல வெயில் அதிகமோ :-))
ஜீலை மாசமாச்சே :-)
//புதுகைச் சாரல் said...
//(படிச்சா அனுபவிக்கனும்... அறிவியலத் தேடக்கூடாது என்பதால், ஜூட்ட்ட் :)//
RPEEEEEEEEEEET//
இன்னைக்கு பூரா வானத்தை பார்த்து கொண்டே இருக்கவும் :-)
//**
//
//ரெண்டு ரூபாய்க்கு கொடுத்த அரிசி எங்களுக்கு அப்ப ரொம்ப உதவியா இருந்துச்சு. சாப்பாடு சுலபமா கிடைச்சுது. //
but cycle gapla auto otitinga. :)//
இதுக்கு முன்னாடி //ரெண்டு ரூபாய்க்கு அரிசி கெடைக்குதுனு வாங்கி தின்னுட்டு வேலைக்கு வர மாட்றானுங்க//
இதை படிக்கலயா???
எல்லாத்தையும் நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கறது நம்ம கைல தான் இருக்குனு கதை சொல்றது நிஜமாலுமே புரியலையா? :-(
**//
hey, sorry for the mistake :). If my previous comment hurted you i'm sorry.
// Thiyagarajan said...
//**
//
//ரெண்டு ரூபாய்க்கு கொடுத்த அரிசி எங்களுக்கு அப்ப ரொம்ப உதவியா இருந்துச்சு. சாப்பாடு சுலபமா கிடைச்சுது. //
but cycle gapla auto otitinga. :)//
இதுக்கு முன்னாடி //ரெண்டு ரூபாய்க்கு அரிசி கெடைக்குதுனு வாங்கி தின்னுட்டு வேலைக்கு வர மாட்றானுங்க//
இதை படிக்கலயா???
எல்லாத்தையும் நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கறது நம்ம கைல தான் இருக்குனு கதை சொல்றது நிஜமாலுமே புரியலையா? :-(
**//
hey, sorry for the mistake :). If my previous comment hurted you i'm sorry.//
np :-)
Thx a lot for your concern.
Since I have got the same comment from 2 people I felt bad. I didnt want to divert the topic :-)
செந்தழல் ரவி அண்ணே,
உங்க கேள்விக்கு பதில் ஆமாம்... இதுக்கு மேல மெயில்ல பேசலாம் :-))
அற்புதமான கதை வெட்டி..வித்தியாசமான சிந்தனை. நீங்கள் சரி..டைம் மிசினும், ஏலியனும், எதிர்கால வாழ்க்கையும் மட்டுமே அறிவியல் அல்ல.
குளம் 'வெட்டி' பயல் என பெயரை மாற்றிரலாமா? :)
கதை, கரு எல்லாமே நல்லாயிருக்குது. ஆனா ஏலியன், டைம் மஷின் கதை எழுதுறவங்களை குறை சொல்லுறீங்க பாருங்க :)
பொதுவா இந்தப் புரட்சிக்காரங்க செய்யுறது இதுதான் தன் புரட்சிதான் மேலானது.. தன் நம்பிக்கைதான் சரியானது.. ஏண்டா எல்லாரும் என் பின்னால வராம வேறெதையோ செஞ்சிட்டிருக்கீங்க'ண்ற மாதிரியான மனப்பாங்கு. சில கிறீத்துவ மிஷனரிகள் இப்படித்தான் உயிரையே விட்டிருக்காங்க.
புரட்சிண்ணதுமே சிலிர்ப்பு வரத்தான் செய்யுது :)
//பொதுவா இந்தப் புரட்சிக்காரங்க செய்யுறது இதுதான் தன் புரட்சிதான் மேலானது.. தன் நம்பிக்கைதான் சரியானது.. ஏண்டா எல்லாரும் என் பின்னால வராம வேறெதையோ செஞ்சிட்டிருக்கீங்க'ண்ற மாதிரியான மனப்பாங்கு. சில கிறீத்துவ மிஷனரிகள் இப்படித்தான் உயிரையே விட்டிருக்காங்க.
புரட்சிண்ணதுமே சிலிர்ப்பு வரத்தான் செய்யுது :)//
சிறில்,
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க பார்த்தீங்களா. ஏலியன், டைம் மிஷின் எழுதறவங்களை நான் குறை சொல்லல. அது மட்டுமே அறிவியல்னு சொல்றவங்களை மட்டும் தான் குறை சொல்றேன் :-)
அதுக்கு கை தட்டிட்டு நம்ம ஊர்க்காரன் சொல்றதை பார்த்து கை தட்டி சிரிக்கறதை என்னால ஏத்துக்க முடியல. அவ்வளவு தான்
இங்க அறிவும் இருக்கு அறிவியலும் இருக்குனு சொன்னா நம்ப மறுக்கறவங்களை பார்த்தா தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு :-(
நான் புரட்சிக்காரன் கதை எழுதல. சாதாரண பொது ஜனம் செஞ்ச புரட்சியை பத்தி எழுதியிருக்கேனு நினைக்கிறேன்
//வெண்பூ said...
அற்புதமான கதை வெட்டி..வித்தியாசமான சிந்தனை. நீங்கள் சரி..டைம் மிசினும், ஏலியனும், எதிர்கால வாழ்க்கையும் மட்டுமே அறிவியல் அல்ல.//
மிக்க நன்றி வெண்பூ...
டைம் மிசினும், ஏலியனும், எதிர்கால வாழ்க்கையும் "மட்டுமே" அறிவியல் அல்ல.
சரியா புரிஞ்சிக்கிட்டீங்க...
Cyril,
If you feel this doesnt suite your competition, I will move out...
Please let me know...
புதுமை=வெட்டி!:)
கமல்-ஸ்ரீதேவி..ரெண்டு பேரும் பேசிக்கறாங்க! ரெண்டு பேரு பேசிக்கறது எப்படிங்க பாட்டாகும்?
னனன-னனா
Come on. Say it once again!
னனன-னனா
சிரி-க்கும் சொர்க்கம்
தர-னனா தரர-னானா
தங்கத்-தட்டு எனக்கு-மட்டும்
அங்க இன்டர்வியூ ஸ்டைல் பாட்டும் ஹிட்!
உங்க இன்டர்வியூ ஸ்டைல் கதையும் ஹிட் தான் பாலாஜி!
போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!
அதை விட இந்தக் கதை,
கதையல்ல நிஜமாக, வாழ்த்துக்கள்! வேண்டல்கள்!
/*
Cyril Alex போட்டிக்காக எழுதிய கதை... இது வோர்க் அவுட் ஆகலைனா அடுத்து ஒரு ஏலியன் கதை எழுதலாம்னு இருக்கேன் ;)
அறிவியல்னா வானத்துல இருந்து ஏலியன் வரதும், டைம் மிஷினும்னு தான் நினைக்கற இடத்துல நான் என்ன பண்றது :-)
வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))
சிறில்,
தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க பார்த்தீங்களா. ஏலியன், டைம் மிஷின் எழுதறவங்களை நான் குறை சொல்லல. அது மட்டுமே அறிவியல்னு சொல்றவங்களை மட்டும் தான் குறை சொல்றேன் :-)
டைம் மிசினும், ஏலியனும், எதிர்கால வாழ்க்கையும் "மட்டுமே" அறிவியல் அல்ல.
சரியா புரிஞ்சிக்கிட்டீங்க...
*/
Dear VettiPaiyal...
I very very STRONGLY CONDEMN that in these comments you spitted some thoughts on some poor guyz like me, who can write only alien stories and vellaikkaran concepts.
I didnot expect these type of comments from a guy like you. You forgot each and everyone has their own thoughts. I accept your expectations in this (seems) story, but not your words on alien writers.
I avoid to write in tamil here, so that i can write very very decently.
Sorry for this :: ச்சீ.....
//சிறில் அலெக்ஸ் said...
குளம் 'வெட்டி' பயல் என பெயரை மாற்றிரலாமா? :)//
ஹிஹி
புரட்-சிறில் அலெக்ஸ் என பெயரை மாற்றிரலாமா? :)
//பொதுவா இந்தப் புரட்சிக்காரங்க செய்யுறது இதுதான் தன் புரட்சிதான் மேலானது.. தன் நம்பிக்கைதான் சரியானது..//
சிறில் அண்ணாச்சி
வெட்டி, "கதையில்" இது பெரிய புரட்சி ன்னு எல்லாம் எதுவும் சொல்லிக்கலை!
அவரு எதையும் கிண்டல் செய்யலைன்னு தான் நினைக்கிறேன்! வெறும் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த சூத்திரங்கள் "மட்டுமே" அறிவியல் இல்லை!
அன்றாட வாழ்வில் காணலாகும் வண்டிச் சக்கரம், தாழ்ப்பாள் கூட அறிவியல் தான் என்று சொல்ல வந்தாரு போல! - 3 classes of lever-simple machines-ன்னு பேரு வச்சி நாம படிச்சிட்டோம்! அப்படிப் படிக்காத முருகேசன், நடைமுறையா அறிவியலைக் காட்டுறாரு கதையில்! அம்புட்டு தான்!
அறிவியல் பல பரிமாணங்களைக் கொண்டது! nth dimension!
Alien-Predator ஒரு பரிமாணம் என்றால், புகைப்படக் கலை இன்னொரு பரிமாணம். பாட்டி வடாம் போடுவது ஒரு பரிமாணம் என்றால், sun dried tomato இன்னொரு பரிமாணம்!
(சைக்கிள் கேப்பில் இதையும் சொல்லிக்கறேன்: ஆன்மீகத்தில் அறிவியலும் இன்னொரு பரிமாணம்!:-)
//(படிச்சா அனுபவிக்கனும்... அறிவியலத் தேடக்கூடாது என்பதால், ஜூட்ட்ட் :)//
பாபா
இது வேளாண் அறிவியல்!
கோவை வேளாண் பல்கலையில், வெட்டி எழுதினது எல்லாம் சிலபஸில் இருக்கு!
வேணும்னா சில-பஸ்ஸில் ஒரு பஸ்ஸைக் கொளுத்தட்டுமா? :))))
//வெட்டிப்பயல் said...
Cyril,
If you feel this doesnt suite your competition, I will move out...
Please let me know...//
பாலாஜி
உணர்ச்சி வசப்படாதீங்க!
ஒழுங்கா பின்னூட்டத்தில் குளம் வெட்டுங்க!
சிறில் அண்ணாச்சி அப்படி எல்லாம் சொல்ல வரல! His was a casual observation-same like yours!
நீங்க போட்டியில் இருக்கீங்க! இருக்கீங்க! இருக்கீங்க!
ஏலியனும் போட்டியில் இருக்குது! இருக்குது! இருக்குது! :)
வசந்த குமார்,
தப்பா நினைச்சிட்டீங்க போல.
நான் சொல்ல வந்தது. அது அறிவியல்னு சொன்னவுடனே ஏத்துக்கற நம்ம மனசு, இதை ஏன் ஏத்துக்க மாட்டிங்குதுனு தான். அதனால அது அறிவியல் இல்லைனு நான் சொல்றேனு அர்த்தமில்லை. நான் சொல்றது இதுவும் அறிவியல் தான்.
பதினஞ்சி நாலா உக்கார்ந்து தேடி கதை எழுதினா வர முதல் கமெண்ட்
//(படிச்சா அனுபவிக்கனும்... அறிவியலத் தேடக்கூடாது என்பதால், ஜூட்ட்ட் :)//
நான் ஏலியன், டைம் மிஷின் எழுதறவங்களை எதுவும் தப்பா சொல்லலைனு மேலயே சொல்லிட்டேன்.
அதை ஏத்துக்கிற வாசகர்களோட மனசு, நம்ம ஊர்ல இருக்குற அறிவியலை சொன்னா "நக்கல்" செய்வதை தான் சொல்றேன்.
உங்களை ஏதாவது தவறாக சொல்வதாக பட்டால் மன்னிக்கவும்.
வெட்டி,
எப்படி ஒரு கதை எனக்குப் புரியலைங்கிறதுக்காக விலக்கிட முடியாதோ அதுபோல என் பார்வைக்கு அதில அறிவியல் இல்லைண்ணாலும் அதை விலக்கிட முடியாது.
ஆனா உங்கள் கதையில அனுபவ அறிவியல், Practical science பற்றி சொல்லியிருக்கீங்க. கதையில் அறிவியல் இல்லைண்ணாலும் பரவாயில்ல சில கதைகளில் அறிவே இல்லையே. :) - போட்டிக்கு வந்தவைகளைச் சொல்லல.
உங்க கதை போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும். ரெம்ப சாதாரண போட்டி.
அறிவியல் என்பது மொத்த மானுடத்துக்கும் சொந்தமானது. அதை வெள்ளைக்காரன் மொழியில படிக்கவேண்டியதாயிடிச்சு இப்ப. படிப்படியா பல கலாச்சாரங்களும் அளித்த பங்களிப்பின் மொத்தமும்தான் அறிவியல் இதை யாருமே மறுக்க முடியாது.
சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் வாழ்கை பழயபடி இருந்தாலே நல்லாயிருக்கும்ணு தோணுறதே பெரிய விஷயம். அதிலேஏஎ அறிவியல் இருக்குது :)
பதிவில் அடியேன் கண்ட அறிவியல்:
1.//பாரம்பரிய முறைகளை பின்பற்றி எங்க கிராமத்துக்கு தேவையான தண்ணியை சேமிக்கணும்//-Traditional Water Harvesting
2. //ஊருல அதுக்கு முன்னாடி எங்க எல்லாம் குளம் இருந்துச்சுனு அவர் சின்ன வயசுல கேட்டது, பார்த்ததை வெச்சி சொன்னாரு// - Geological water bore identification
3. //அதே மாதிரி நாங்க குளம், ஏரி, ஆறு அதை எல்லாம் சுத்தி நிறையா மரமும், வெட்டி வேரும் வளர்க்க ஆரம்பிச்சோம்// - Bank Strengthening and Flood prevention
4. //முதல்ல நிலத்தடி நீர் மூணே வருஷத்துல 10 அடிக்கு மேல வர ஆரம்பிச்சிது. அது கொஞ்ச கொஞ்சமா ஆத்து பக்கத்தலயும் மேல ஏற ஆரம்பிச்சிது// - Water Table Measurement
innum irukku....:)
வசந்தகுமார், வெட்டி
சில சமயங்களில் வெறும் வார்த்தைகளில், தங்கள் தங்களை வைத்துப் பார்த்து விடுகிறோம்! தவறல்ல! இது இயல்பு தான்!
ஆனா அது உடனே பத்திக்குது! அதனால் நோக்கம் ஆறிப் போகுது!
இந்த விவாதத்தை இத்துடன் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்! (வெட்டி பதிவில் பின்னூட்டத்தைக் குறைக்க வழி செய்கிறேன் :-)
வெட்டி
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று!
கீழ்க் கண்ட பின்னூட்டப் பகுதியை அழித்து விடுங்க!
//வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))//
வசந்த குமார்: வ-சாந்த குமார் ஆகுங்க! :)
முதல்ல ஒரு சில விஷயங்கள். இந்த கதைல அறிவியல் எங்க இருக்குனு கேக்கறவங்களுக்கு.
ஆறுகளை மீண்டும் வளப்படுத்தனும்னா மணல் கொள்ளையை தடுக்கனும் இல்லைனா மண் அறிப்பு ஏற்பட்டு நீர் சீக்கிரம் வற்றிவிடும். அதனால அதை தடுக்கனும்.
ஆறுகளின் கரைல வெட்டி வேர் நடறது செடி மரம் வளர்க்கறது கரைகளை பலப்படுத்தும். வெட்டிவேரின் மகத்துவத்தை மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
இந்த மாதிரி குளம், ஏரினு நீர் நிலைகளை பலப்படுத்தனும். அது தான் நிலத்தடி நீரை உயர்த்தவும், ஆற்றை சுற்றி ஊற்று நீரை உருவாக்கவும் உதவும்.
இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கானு கேட்டீங்கனா...
இதெல்லாம் ராஜஸ்தான்ல 20 வருஷமா நடந்துட்டு வருது. நாலு ஆறுகளை வற்றாத ஜிவநதிகளா மாத்தியிருக்காங்க. நம்ம கோவை சிறுதுளி அமைப்புக்கு கூட அவுங்க ஐடியாஸ் நிறைய சொல்லியிருக்காங்க.
இதை சாதிச்ச ராஜேந்திர சிங்கிற்கு 2001ஆம் ஆண்டு ராமன் மெகசேசே அவார்ட் கிடைச்சிருக்கு. இதை சாதிக்க ரஜினி காந்தோ, விஜய காந்தோ வருவார்கள்னு காத்திட்டு இருக்கற தமிழர்களை பத்தி சொல்ல ஒண்ணுமில்லை :-)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
வசந்தகுமார், வெட்டி
சில சமயங்களில் வெறும் வார்த்தைகளில், தங்கள் தங்களை வைத்துப் பார்த்து விடுகிறோம்! தவறல்ல! இது இயல்பு தான்!
ஆனா அது உடனே பத்திக்குது! அதனால் நோக்கம் ஆறிப் போகுது!
இந்த விவாதத்தை இத்துடன் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்! (வெட்டி பதிவில் பின்னூட்டத்தைக் குறைக்க வழி செய்கிறேன் :-)
வெட்டி
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று!
கீழ்க் கண்ட பின்னூட்டப் பகுதியை அழித்து விடுங்க!
//வெள்ளக்காரன் சொல்றது தான் அறிவியல்னு வானத்தை பார்த்துட்டு ஏலியன் எப்ப வருவானு யோசிட்டு இருக்கவங்களுக்கும், டைம் மிஷின்ல ஏறி போகலாம்னு யோசிச்சிட்டு இருக்கவங்களும் என்னை மன்னிப்பீர்களாக :-))//
வசந்த குமார்: வ-சாந்த குமார் ஆகுங்க! :)//
Done :-)
I have removed those words... but that was meant to Boston Bala :-)
//சிறில் அலெக்ஸ் said...
வெட்டி,
எப்படி ஒரு கதை எனக்குப் புரியலைங்கிறதுக்காக விலக்கிட முடியாதோ அதுபோல என் பார்வைக்கு அதில அறிவியல் இல்லைண்ணாலும் அதை விலக்கிட முடியாது.//
தல,
அறிவியல்னா என்னனு இங்க கொஞ்சம் பார்த்துட்டா ரெண்டு பேருக்கும் வசதியா இருக்கும்...
Science (from the Latin scientia, meaning "knowledge") is the effort to discover, understand, or to understand better, how the physical world works, with observable physical evidence as the basis of that understanding. It is done through observation of existing phenomena, and/or through experimentation that tries to simulate phenomena under controlled conditions. Knowledge in science is gained through research.
From Wikipedia, the free encyclopedia
:))) vaazththukkal... science irukuthu.. fictionaa irukkura matter mattum realaa (antha suicide matter illeenga) irunthathunaa superaa irukkum... :))
There is no need to look at definitions. This definition is, to me, insufficient to define science. science cannot only be the understanding of how the physical world works (that might be the ultimate basic).
In any case I mentioned clearly that there is science in your story. I also mentioned that if a story was sent to the competition, but to me id did not look like having any science I am not going to reject it.
//ஆனா உங்கள் கதையில அனுபவ அறிவியல், Practical science பற்றி சொல்லியிருக்கீங்க.//
மேலே விக்கில இருந்து எடுத்து கொடுத்ததை பார்க்கவும் :-)
// கதையில் அறிவியல் இல்லைண்ணாலும் பரவாயில்ல சில கதைகளில் அறிவே இல்லையே. :) - போட்டிக்கு வந்தவைகளைச் சொல்லல.
//
I feel very bad for this comment... So u mean that this doesnt have any science...
//உங்க கதை போட்டியில் ஏற்றுக்கொள்ளப்படும். ரெம்ப சாதாரண போட்டி.//
அதான் காரணமா? கதை போட்டிக்கு தகுதியா இருக்குங்கறது காரணமில்லை...
//அறிவியல் என்பது மொத்த மானுடத்துக்கும் சொந்தமானது. அதை வெள்ளைக்காரன் மொழியில படிக்கவேண்டியதாயிடிச்சு இப்ப. படிப்படியா பல கலாச்சாரங்களும் அளித்த பங்களிப்பின் மொத்தமும்தான் அறிவியல் இதை யாருமே மறுக்க முடியாது.
//
ஏற்று கொள்கிறேன்..
//சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் வாழ்கை பழயபடி இருந்தாலே நல்லாயிருக்கும்ணு தோணுறதே பெரிய விஷயம். அதிலேஏஎ அறிவியல் இருக்குது :)//
இதுல என்ன நுண்ணரசியல்னு எனக்கு புரியல :-)
hello,
//ஆனா உங்கள் கதையில அனுபவ அறிவியல், Practical science பற்றி சொல்லியிருக்கீங்க.//
அறிவியல் இல்லைண்ணு யாரு சொன்னா? :)
//In any case I mentioned clearly that there is science in your story//
ஒகே தல...
நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனு நினைக்கிறேன்.. ஏதோ நக்கல் பண்ற மாதிரி இருந்துச்சு..
Will stop the discussion right here :-)
Cool down Vetti. please...
I can understand your feelings but every writing receives positive and negative feedback.
As I already said, this story is completely "out of the box thinking" when we think about science story competition. It is great to see that.
Cyril expects Science Stories not Science Fiction stories. So, you are 100% good to go. Even Cyril agreed to it.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
முதலில், இது கதையாகவே தோன்றவில்லை (குறிப்பிட்டுள்ள வருடத்தை தவிர). இதுவே முதல் வெற்றி.
நடை அற்புதம்.
வெட்டிவேரின் பயன்கள் பற்றிய சுட்டி இதோ
பின்னூட்டத்தை அழிக்கும் போது ஏற்பட்ட தவறு :-)
சூப்பர் கதை... ம்ம்.. இதெல்லாம் நிஜமாகவே நடந்துச்சுன்னா, இன்னும் அருமையா இருக்கும்...
//வெண்பூ said...
Cool down Vetti. please...
I can understand your feelings but every writing receives positive and negative feedback.
As I already said, this story is completely "out of the box thinking" when we think about science story competition. It is great to see that.
Cyril expects Science Stories not Science Fiction stories. So, you are 100% good to go. Even Cyril agreed to it.//
வெண்பூ,
மிக்க நன்றி...
முதல் கமெண்ட் செய்த வேலைனு நினைக்கிறேன் :-)
கொஞ்சம் தண்ணி குடிக்கனும் :-)
குடிச்சாச்சு...
இப்ப சரியாகிட்டேன்... இனிமே நோ டென்ஷன்
//ஒரு காசு said...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
முதலில், இது கதையாகவே தோன்றவில்லை (குறிப்பிட்டுள்ள வருடத்தை தவிர). இதுவே முதல் வெற்றி.
நடை அற்புதம்.//
மிக்க நன்றி ஒரு காசு...
ஆமாம் அது என்ன "ஒரு காசு"???
"டாக்டர்" ராஜசேகர் நடிச்ச ஒரு படத்துல செந்தில் பத்து பைசா தானு கேப்பாரே.. அந்த மாதிரி இருக்கு :-)
//ஜி said...
:))) vaazththukkal... science irukuthu.. fictionaa irukkura matter mattum realaa (antha suicide matter illeenga) irunthathunaa superaa irukkum... :))//
Got the same comment from 2 more great thinkers :-)
ஜி,
Presentation இன்னும் நல்லா பண்ணிருக்கனும்னு ரெண்டு பேர் ஏற்கனவே சொல்லிட்டாங்க.
ஆனா எனக்கு என்னுமோ இந்த Format (Interview) வித்தியாசமா பட்டுச்சு.
தண்ணி இருக்கற பாத்திரத்தில கலர் மாவுகளை கொஞ்ச கொஞ்சமா போட்டு அது படிஞ்சுவுடனே அழகான ஒரு ஓவியமா தெரியனுங்கற மாதிரி நிறைய Factsஐ இந்த இண்டர்வியூல கொடுத்து கடைசியா அது வாசகர்கள் மனசுல அழகா ஒரு கதையா மாறனும்னு நினைச்சேன்...
அது கலங்கிய நீரா மாறிடுச்சா இல்லை அழகிய ஓவியமா தெரியுதானு தெரியல :-)
என் மனசு சொன்னதை கேட்டுட்டு எழுதிட்டேன். ஒரு நல்ல தீமை கெடுத்துட்டேனு அவுங்க ரெண்டு பேருக்கும் வருத்தம். அதுவும் என் மேல இருக்கற அக்கறை தான் :-)
அம்மா செய்தது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்!
முருகேசன் செய்யச்சொல்வது Traditional Water Harvesting ;)
வெட்டி அதிமுக விசுவாசியா? விவசாய ஆதரவாளரா?
மணல் கொள்ளை தடுப்பது கூட அதிரடியாக இருக்கிறது. ஓட்டுநர்களை உதைத்தால், புதிய வேலையாட்களை நியமித்து திருட்டைத் தொடர்வதுதானே வழக்கம்?
// Boston Bala said...
அம்மா செய்தது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்!
முருகேசன் செய்யச்சொல்வது Traditional Water Harvesting ;)
வெட்டி அதிமுக விசுவாசியா? விவசாய ஆதரவாளரா?
//
இது நீ என்ன Terrific Scientistaa இல்ல Scientific Terroristaanu கேக்கற மாதிரி இருக்கு :-)
ஆறு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஊத்து தண்ணி குடிச்சிருக்கீங்களா பாபா? ஆத்துல குளிக்க போறதுக்கு முன்னாடி ஆறு பக்கத்துல குழி தோண்டிட்டு குளிச்சிட்டு வந்து ஊத்துல இருந்து தண்ணி குடிக்கற சுகமே தனி தான் :-)
//
மணல் கொள்ளை தடுப்பது கூட அதிரடியாக இருக்கிறது. ஓட்டுநர்களை உதைத்தால், புதிய வேலையாட்களை நியமித்து திருட்டைத் தொடர்வதுதானே வழக்கம்?//
ஊர் மக்கள் சப்போர்ட் இல்லாம செய்ய முடியாது பாபா. போலிஸ் கேஸ்னு ஆனது வெளிய தெரிஞ்சிருக்கும். அதனால பக்கத்து ஊருக்கு போயிருக்காங்க. அங்க எரிச்சிட்டானுங்க. அதை அரசியலாக்கி எரிச்சவரே அமைச்சராகிட்டார் போல :-)
அது எல்லாம் அந்த அமைச்சரை பேட்டியெடுத்தா தெரியலாம் :-)))
அன்பு வெட்டிப்பயல்,
நீங்கள் யாரின் கமெண்ட்டை சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்த கமெண்ட் லிஸ்ட்டில், உங்கள் கமெண்ட் தான் முதலில் வருகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நண்பரிடம் போட்டி பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கூட 'ஏன் எல்லோரும் டைம் மெஷினையே எழுதுகிறார்கள்?' என்று பேசிக் கொண்டிருந்தோம்.
அலெக்ஸே பல துறைகளை எடுத்துக் கூறியும், சிந்தித்துப் பார்க்கவும், ரசனையான விஷயங்களைச் சேர்க்கவும், சிறுகதைக்கே தேவையான 'திடுக்' திருப்பங்களைக் கொண்டு வரவும் டைம் மெஷின் கான்செப்டே வசீகரமானது என்று அந்நண்பர் கூறினார்.
(தரவு வேண்டுமெனில் ஆளைச் சொல்கிறேன்.)
உங்கள் கவனத்திற்கு :: இப்போட்டிக்கு நான் எழுதிய 7-ல் 2-ல் மட்டுமே டைம் மெஷின் வருகின்றது. எனவே இது எனக்காக நான் போட்டுக் கொள்ளும் கோபச் சட்(ண்)டை அல்ல.
நம் தமிழ் வலைப்பதிவுலகில் நடக்கும் எந்த சண்டைகளிலும், அடிதடிகளிலும் தலையிட்டுக் கொள்ளாமல் தெரிந்ததை, தோன்றுவதை எழுதிச் செல்வோம் என்றே முடிவெடுத்து செயற்படுத்தி வந்தாலும் இங்கே என்னை மீறி ஏதோ கொஞ்சம் எழுதி விட்டேன் போல் இருக்கின்றது.
மன்னிக்கவும்.
நன்றி.
வெட்டி,
பேட்டி முறையில் கதை சொல்லியிருப்பது அருமை. என்னை மிகவும் கவர்ந்தது இந்தக் கதையின் +ve அணுகுமுறை. பொதுவாக அறிவியல் புனைவுகளில் ஒரு எதிர்கால 'பயம்'தான் அதிகமாக இருக்கும்.
நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் -
ஒரு கதையில் காதல், கொலை, குடும்பம் என்ற பலவகை கூறுகள் இருக்கலாம். ஆனால் ஒரு கதையை 'குடும்பக்' கதை என்று வகைப் படுத்துவதற்கு நீங்கள் அந்த குறிப்பிட்ட கூறை உயர்த்தி பிடிக்க வேண்டும். டைம் மெசின் என்பது ஒரு innovative science concept. அதை வைத்து சுவாரசியமாக சில உளவியல் கூறுகளை கற்பனை செய்வது ஒரு வகை. எனக்கு இதில் முக்கியமாக தோண்றுவது அந்த 'புத்துருவாக்க அறிவியல் கூறுகள்'.
உங்கள் கதையில் சீர்திருத்தம் இருக்கிறது. வேளாண்மையின் சிறப்பு இருக்கிறது. குளங்கள் வெட்டுவது, மணற்க் கொள்ளையை தடுப்பது போன்றவைகளில் ஒரு innovative முறை இல்லை என்றுதான் தோன்றுகிறது. மணற்க் கொள்ளையைக் கூட முருகேசன் வன்முறையால்தான் அடக்குகிறார் பாருங்கள் :-).
ஏதோ சொல்ல வேண்டும் என்று தோண்றியது. சரியாகப் படவில்லை என்றால் நிராகரித்து விடுங்கள். :-)
வசந்த குமார்,
என் பழைய ரூம் மேட்கிட்ட இந்த கதையை காட்டினேன். உடனே அவன்
"டேய். இதுல எங்கடா அறிவியல் இருக்கு? கடைசில அந்த குளத்துல இருந்து ஒரு ஏலியன் தண்ணி எடுத்து குடிக்கற மாதிரியோ இல்லை இது எல்லாமே விர்சுவல் வேர்ட் மாதிரியோ, ஏஜ் ஆஃப் எம்பையர் கேம் மாதிரி ஒரு விளையாட்டுல ஒரு காலம்னு காட்டுனு" சொன்னான்
அது தான் முதல் வருத்தம்.
அடுத்து நான் முன்னாடியே சொன்ன பின்னூட்டம்.
நான் உங்களை யாரையும் மட்டம் தட்டல. ஆனா இந்த மாதிரி விஷயங்களை மட்டம் தட்டாதீங்கனு தான் சொன்னேன். அதுவும் குறிப்பா வாசகர்களுக்கு.
நான் பினாத்தலார், ஜி.ரா, சின்னப்பையன் கதை மட்டும் தான் இந்த போட்டிக்கு வந்ததுலயே படிச்சேன். அதுல எதுவும் ஏலியனோ, டைம் மிஷினோ இல்லை.
அதனால நான் போட்டில பங்கேற்பவர்களை மட்டம் தட்ட சொன்னேனு நினைக்க வேண்டாம்.
எனக்கும் ஏலியன், டைம் மிஷின் எல்லாம் பிடிக்கும். ஆனா அதை விட ஆத்துல விளையாடறது ரொம்ப பிடிக்கும்...
//ஸ்ரீதர் நாராயணன் said...
வெட்டி,
பேட்டி முறையில் கதை சொல்லியிருப்பது அருமை. என்னை மிகவும் கவர்ந்தது இந்தக் கதையின் +ve அணுகுமுறை.//
மிக்க நன்றி.. இது தான் பயமே :-)
//
பொதுவாக அறிவியல் புனைவுகளில் ஒரு எதிர்கால 'பயம்'தான் அதிகமாக இருக்கும்.//
Out of the box யோசிக்க கூடாதா? எல்லாரும் பயப்படறாங்களே அவுங்களுக்கு பாசிட்டிவா யோசிக்கலாம்னு பார்த்தேன் :-)
//நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் - //
காரணத்தை சொல்லும் வரை... நிச்சயமா நினைக்க மாட்டேன்...
//உங்கள் கதையில் சீர்திருத்தம் இருக்கிறது. வேளாண்மையின் சிறப்பு இருக்கிறது. குளங்கள் வெட்டுவது, மணற்க் கொள்ளையை தடுப்பது போன்றவைகளில் ஒரு innovative முறை இல்லை என்றுதான் தோன்றுகிறது. மணற்க் கொள்ளையைக் கூட முருகேசன் வன்முறையால்தான் அடக்குகிறார் பாருங்கள் :-).//
என்னோட கதைல இழந்த ஆற்றை எப்படி கொண்டு வரலாம்னு ப்ராஸஸ் சொல்லி இருக்கேனு நினைக்கிறேன்.
இன்னைக்கு மறுபடியும் இயற்கை உரங்களுக்கு மாறுங்கள்னு ஒரு குரல் பலமா கேக்குது. அதுக்கு காரணங்களும் சொல்லப்படுது. அது அறிவியல் இல்லைனு ஒதுக்கிட முடியாது.
மணல் கொள்ளையை தடுக்கறது வேண்டும்னா வன்முறையால இருக்கலாம். ஆனா நிலத்தடி நீரை பெருக்கியது அறிவியல்னு தான் நினைக்கிறேன். அது ஒரு Scientific Process தான்.
ஆறு ஓரங்களில் வெட்டி வேர் நடறதும் ஒரு Scientific approach தான். ஏற்கனவே இருந்ததுங்கற ஒரே காரணத்தால அது அறிவியல் இல்லைனு ஒதுக்கிட முடியாது இல்லையா? :-)
நச்!
//வெட்டி அதிமுக விசுவாசியா? விவசாய ஆதரவாளரா?
//
//இது நீ என்ன Terrific Scientistaa இல்ல Scientific Terroristaanu கேக்கற மாதிரி இருக்கு :-)//
பாபா
இன்னுமா புரியலை வெட்டி பத்தி?
Please note the order!
அதிமுக விசுவாசியா=Terrific Scientistaa
விவசாய ஆதரவாளரா=Scientific Terroristaanu
இப்ப நல்லாப் புரியுதா? :)
//கப்பி பய said...
நச்!//
நன்றி :-)
அன்பு வெட்டிப்பயல்...
சரி விடுங்க. கவுண்டரை வெச்சு நடிகர்களுக்கு கவுன்டர் குடுத்த மாதிரி, இதையும் எடுத்துக்கிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க..?
சிந்தனையை மாற்ற ஒரே வழி, அடுத்த கதையை ஆரம்பிச்சிட வேண்டியது தான்.
தலைவர் சொன்னாப்ல.. Cooooooooooollllll.......
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வெட்டி அதிமுக விசுவாசியா? விவசாய ஆதரவாளரா?
//
//இது நீ என்ன Terrific Scientistaa இல்ல Scientific Terroristaanu கேக்கற மாதிரி இருக்கு :-)//
பாபா
இன்னுமா புரியலை வெட்டி பத்தி?
Please note the order!
அதிமுக விசுவாசியா=Terrific Scientistaa//
விவசாய ஆதரவாளரா=Scientific Terroristaanu
இப்ப நல்லாப் புரியுதா? :)//
நான் புது கட்சி தொடங்க போறேன்பா... 2011ல நான் தான் முதலமைச்சர் :-)
// இரா. வசந்த குமார். said...
அன்பு வெட்டிப்பயல்...
சரி விடுங்க. கவுண்டரை வெச்சு நடிகர்களுக்கு கவுன்டர் குடுத்த மாதிரி, இதையும் எடுத்துக்கிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க..?
சிந்தனையை மாற்ற ஒரே வழி, அடுத்த கதையை ஆரம்பிச்சிட வேண்டியது தான்.
தலைவர் சொன்னாப்ல.. Cooooooooooollllll.......//
அதே தான்...
அடுத்த கதை யோசிச்சிட்டு இருக்கேன்... ஆக்சுவலா ஒரு ஏலியன் கதை தான் யோசிச்சேன்.. நேத்து பினாத்தலார்கிட்ட கூட சொன்னேன். ஆனா இப்ப அதை எழுதினா பிரச்சனையாகிடும்..
அதனால உடனடியா ஒரு காமெடி பதிவு தான் எழுதனும் :-)
வசந்த்,
BTW, நீங்க கதையை பத்தி எதுவுமே சொல்லலையே :-)
அன்பு வெட்டிப்பயல்...
நான் இதை கதையாகப் பார்க்கவில்லை. இரண்டு ஆறுகளுக்கு இடையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் நீர்ச் சூழலோடு எப்படி வாழ்தல் பற்றியும் கொஞ்சம் அறிந்தவன் என்ற முறையில் நல்ல தேவையான 'பேட்டி'.
கடைசியில் செண்பகம் குளத்தில் விழுந்து..இறந்து..இவர் மற்றொரு மணமே செய்து கொள்ளாமல்... இந்த இடம் கொஞ்சமே கொஞ்சூண்டு இது கதை என்று காட்டி விடுகிறது.
இது போன்ற தியாகிகளால் தான் சாதிக்க முடியும். நம்மைப் போன்ற லெளகீக சாதாரணன்களால் இதெல்லாம் எப்படி முடியும்? என்ற சிந்தனையை எழுப்பி விட்டு விடக் கூடாது என்று நினைக்கிறேன். வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் தமது தவறுகளையும் சேர்த்து எழுதும் போது தான், படிப்பவர்களுக்கும் 'அட.. இந்தாளும் நம்மைப் போல் தான் இருந்திருக்கிறார். முயன்றால் நாமும் இவர் போல் ஆகலாம் போல் இருக்கின்றதே' என்று ஊக்கம் பெற முடியும் என்று நினைக்கிறேன். உதா:: நம்ம தாத்தா.
வின்சென்ட் பூவராகன்...?
//இது போன்ற தியாகிகளால் தான் சாதிக்க முடியும். நம்மைப் போன்ற லெளகீக சாதாரணன்களால் இதெல்லாம் எப்படி முடியும்? என்ற சிந்தனையை எழுப்பி விட்டு விடக் கூடாது என்று நினைக்கிறேன். வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் தமது தவறுகளையும் சேர்த்து எழுதும் போது தான், படிப்பவர்களுக்கும் 'அட.. இந்தாளும் நம்மைப் போல் தான் இருந்திருக்கிறார். முயன்றால் நாமும் இவர் போல் ஆகலாம் போல் இருக்கின்றதே' என்று ஊக்கம் பெற முடியும் என்று நினைக்கிறேன். உதா:: நம்ம தாத்தா.//
I accept this... That would have been better :-)
எனக்கு ஜூலை 17th ஆர்குட் Today's Fortune: Serious Trouble will bypass today.
செந்தழலாரும், சுப்பையா சாரும் என்ன சொல்வாங்களோ... ;-)
//இரா. வசந்த குமார். said...
எனக்கு ஜூலை 17th ஆர்குட் Today's Fortune: Serious Trouble will bypass today.
செந்தழலாரும், சுப்பையா சாரும் என்ன சொல்வாங்களோ... ;-)//
ஒரு லட்சம் கொடுங்க.. நான் சொல்றேன் ;)
ரொம்ப ரொம்ப நல்ல கதைங்க வெட்டிப்பயல். வெற்றி பெற வாழ்த்துக்கள் :):):)
விரிவான பதிலுக்கு நன்றி.
சொல்ல வந்ததை சரியா சொன்னேனான்னு தெரியலை :-)
இன்னொன்று சொல்ல விட்டுப் போய்விட்டது. இந்தக் கதையின் நடையும் வசனங்களும். நல்ல flow.
//அவுங்களுக்கு பாசிட்டிவா யோசிக்கலாம்னு பார்த்தேன்//
அதுதான் சிறப்புன்னு சொல்ல வர்றேன்.
//இழந்த ஆற்றை எப்படி கொண்டு வரலாம்னு ப்ராஸஸ் சொல்லி இருக்கேனு நினைக்கிறேன்.//
ரொம்பச் சரி :-)
//ஏற்கனவே இருந்ததுங்கற ஒரே காரணத்தால அது அறிவியல் இல்லைனு ஒதுக்கிட முடியாது இல்லையா? :-)//
இங்கதான் ஒரு சின்ன புரிதல் பிரச்சினை. கனவன் மனைவி இருந்தால் மட்டும் அது 'குடும்ப' கதைன்னு சொல்ல முடியாது. குடும்பத்தின் 'values' சொல்லப்பட வேண்டும் இல்லையா. ஒரு fantasy கதைன்னா கொஞ்சம் மாயாஜாலம் தேவைப்படுது. அந்த மாதிரி sci-fi-ல ஒரு innovative concept.. அப்படின்னு... எனக்கு தோன்றுகிறது. தவறாகக் கூட இருக்கலாம்.
நிறைய புனைவுகள் எழுதுங்க. படிக்க காத்திருக்கோம்.
//2011ல நான் தான் முதலமைச்சர் :-)//
காமெடி கதையா அண்ணா? (பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைல்ல) :-))
// rapp said...
ரொம்ப ரொம்ப நல்ல கதைங்க வெட்டிப்பயல். வெற்றி பெற வாழ்த்துக்கள் :):):)//
மிக்க நன்றி கவுஜாயினி :-)
// ஸ்ரீதர் நாராயணன் said...
விரிவான பதிலுக்கு நன்றி.
சொல்ல வந்ததை சரியா சொன்னேனான்னு தெரியலை :-)
இன்னொன்று சொல்ல விட்டுப் போய்விட்டது. இந்தக் கதையின் நடையும் வசனங்களும். நல்ல flow.
//
மிக்க நன்றி...
//
//அவுங்களுக்கு பாசிட்டிவா யோசிக்கலாம்னு பார்த்தேன்//
அதுதான் சிறப்புன்னு சொல்ல வர்றேன்.
//
இன்னொருக்கா நன்றி...
// //இழந்த ஆற்றை எப்படி கொண்டு வரலாம்னு ப்ராஸஸ் சொல்லி இருக்கேனு நினைக்கிறேன்.//
ரொம்பச் சரி :-)
//
சரி...
// //ஏற்கனவே இருந்ததுங்கற ஒரே காரணத்தால அது அறிவியல் இல்லைனு ஒதுக்கிட முடியாது இல்லையா? :-)//
இங்கதான் ஒரு சின்ன புரிதல் பிரச்சினை. கனவன் மனைவி இருந்தால் மட்டும் அது 'குடும்ப' கதைன்னு சொல்ல முடியாது. குடும்பத்தின் 'values' சொல்லப்பட வேண்டும் இல்லையா. ஒரு fantasy கதைன்னா கொஞ்சம் மாயாஜாலம் தேவைப்படுது. அந்த மாதிரி sci-fi-ல ஒரு innovative concept.. அப்படின்னு... எனக்கு தோன்றுகிறது. தவறாகக் கூட இருக்கலாம்.
//
ஓ... இதை யாரும் என்கிட்ட சொல்லாம விட்டுட்டாங்களே... புதுசா யோசிச்சா தான் சயின்ஸ் ஃபிக்ஷனா? I mean innovative concepts... நிஜமாவே தெரியாம தான் கேட்கிறேன்...
அப்படி இருக்கும் பட்சத்தில் இது Science-Fictionஆக இருக்க முடியாது. என்னோட புரிதல் அறிவியலை துணை கொண்டு நம் கற்பனையில் எழும் கதைகள்னு நினைச்சேன்.
// நிறைய புனைவுகள் எழுதுங்க. படிக்க காத்திருக்கோம்.//
தலைவா.. இந்த கதைக்கு எனக்கு 15 நாளைக்கு மேல ஆச்சு... நம்புவீங்களோ மாட்டீங்களோ...
முதல்ல அமெரிக்கால இந்த மாதிரி பண்ணிருக்காங்கனு கேள்வி பட்டு நிறைய டாக்குமெண்ட்ஸ் படிக்க வேண்டியதா போச்சு. அடுத்து பார்க்கும் போது சீனா... எதுவுமே நம்ம ஊருக்கு ஒத்து வரல. அது எல்லாம் தண்ணி வர ஆற்றை சீர் செய்யறதாவே இருந்துச்சு.
அப்பறம் ஒரு வாரம் கழிச்சி தான் இந்தியானு போட்டு தேட ஆரம்பிச்சேன். அப்ப வந்தது தான் இந்த கான்செப்ட்.
இதை எழுதி முடிச்சி 10 பேருக்கு மேல கருத்து கேட்டு மெயில் அனுப்பினேன். 2 மணிக்கு படுத்துட்டு, 2:30 க்கு திடீர்னு எழுந்து CVRகும் ஜி.ராக்கும் அனுப்பி கருத்து கேட்டேன். காலைல எழு மணிக்குள்ள 10 தடவைக்கு மேல எழுந்து மெயில் செக் பண்ணேன்.
ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்படி செய்யறேன். இதுக்கு முன்னாடி இப்படி செஞ்சது தூறல் கதைக்கு தான்.
நேத்து ஒரு நாள் முழுக்க கதைல பல மாற்றங்கள். டயலாக்ஸ் எல்லாம்...
பெனாத்தலார், KRS Anna, கப்பி, கைப்ஸ், ஜி, ஜி.ரா, CVR, பாபா எல்லாருக்கும் என் நன்றி... ஆனா இதுல நிறைய பேரோட கருத்தை நான் ஏற்காம போயிட்டேன் :-(
//நான் புது கட்சி தொடங்க போறேன்பா... 2011ல நான் தான் முதலமைச்சர் :-)//
அமைச்சரவையில் அடியேனுக்கு அற நிலையத் துறை....
ச்சே வேணாம்...
நீர் வளத் துறை தருமாறு அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)
//ஸ்ரீதர் நாராயணன் said...
//2011ல நான் தான் முதலமைச்சர் :-)//
காமெடி கதையா அண்ணா? (பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைல்ல) :-))//
தமிழ் நாட்ல இப்ப எல்லாரும் இதை தான் சொல்றாங்களாம் :-))
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//நான் புது கட்சி தொடங்க போறேன்பா... 2011ல நான் தான் முதலமைச்சர் :-)//
அமைச்சரவையில் அடியேனுக்கு அற நிலையத் துறை....
ச்சே வேணாம்...
நீர் வளத் துறை தருமாறு அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)//
ஏன்
"தண்ணி"ல தான் எப்பவுமே காசு வரும்னா ;)
Dragon Fly Effect எங்க ஸ்ரீதர் அண்ணாச்சியின் பார்வைக்கு!
Science fiction (abbreviated SF or sci-fi with varying punctuation and capitalization) is a broad genre of fiction that often involves speculations based on "current" or future science or technology
Science fiction is largely based on writing entertainingly and rationally about //alternate possibilities[3]// in settings that are contrary to known reality!
"fantasy is the impossible made probable.
Science Fiction is the improbable made possible"
if were we rigorous with our definitions, Shakespeare's play The Tempest would have to be termed science fiction
http://en.wikipedia.org/wiki/List_of_science_fiction_themes
Cosmology
Creation of the Universe
Ecology
Fantasy fiction
The future
Horror fiction
Omega Point
Quantum suicide and immortality
Space Opera
Symbionts & Co-evolution
Ultimate fate of the Universe
Science fiction is used to raise awareness of ecological ideas.
http://en.wikipedia.org/wiki/Science_fiction_genre
Science
Genres concerning the emphasis, accuracy, and type of science described include:
Hard science fiction - a particular emphasis on scientific detail and/or accuracy
Soft science fiction - focus on human characters and their relations and feelings, while de-emphasizing the details of technological hardware and physical laws
Social science fiction - concerned less with technology and space opera and more with sociological speculation about human society
முதலில் மேலோட்டமாக படித்த போது ஏதோ பேட்டி என்று நினைத்தேன். கவனமாக படித்துப்பார்த்ததில் தான் கதை என்பதே புலப்படுகிறது.
வித்யாசமான கதை, நன்றாக நடத்தி இருக்கிறீர்கள். அனுபவ அறிவியலும் அறிவியல் தான்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Science fiction is used to raise awareness of ecological ideas.
//
கேஆரெஸ் அண்ணாச்சி... உங்களுக்கெல்லாம் ஆஃபிஸ் போய் பொட்டித் தட்டுற பொழப்பத்த வேலையெல்லாம் இல்லையா?? காலைல இருந்து இங்கேயே குடியிருக்கீங்க?? :)))
// கயல்விழி said...
முதலில் மேலோட்டமாக படித்த போது ஏதோ பேட்டி என்று நினைத்தேன். கவனமாக படித்துப்பார்த்ததில் தான் கதை என்பதே புலப்படுகிறது.
வித்யாசமான கதை, நன்றாக நடத்தி இருக்கிறீர்கள். அனுபவ அறிவியலும் அறிவியல் தான்.//
மிக்க நன்றி கயல்விழி :-)
//ஜி said...
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
Science fiction is used to raise awareness of ecological ideas.
//
கேஆரெஸ் அண்ணாச்சி... உங்களுக்கெல்லாம் ஆஃபிஸ் போய் பொட்டித் தட்டுற பொழப்பத்த வேலையெல்லாம் இல்லையா?? காலைல இருந்து இங்கேயே குடியிருக்கீங்க?? :)))//
ஜி,
அவர் பொட்டி தட்டுற வேலைல இல்லை.. அவர் டேமஜருக்கு எல்லாம் டேமஜரு :-) (பிரியும்னு நினைக்கிறேன் :-))
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்... வெட்டியும் கேயாரெசும் ஒருவர்தானா!
டேமேஜருக்கு டேமேஜர்ன்னா - டைரக்டருங்களா? நம்ம பாரதிராஜா, இரவிக்குமார், அமீர், சசி மாதிரியா?
Making impossible, possible - இதைத்தான் நான் சொல்ல வந்தது. நமக்கு இந்த கதை எல்லாம் எழுதி பழக்கமில்லையே. அதான் சரியா சொல்லாம போய்டுச்சி :-((
மத்ததுக்கெல்லாம் ஒரு பெரிய 'ஆமாஞ் சாமி' போட்டுக்கறேன் தல.
அடப்பாவி:-)
இது கதையா?
லேபிலைப் பார்க்காமப் படிச்சுக்கிட்டே போனவ 2009 ன்னதும் என்னடான்னு முழிச்சேன். அப்புறம் முழிச்சுக்கிட்டேன்:-)
இது மட்டும் நடந்துச்சுன்னா......கிராமம் மாதிரி சொர்க்கம் வேற இருக்குமா?
பாராட்டுகள் வெட்டி!
மேல சொன்ன கமென்ட் தான், கதைனு ரொம்ப லேட்டா தான் புரிந்தது. ஏதோ நிஜ பேட்டி தான் படிச்சுட்டு இருக்கோம்னு நெனச்சேன். இதுல வேர நிறைய எடத்துல வெட்டி ஏன் '2009'னு தப்பா போட்டிருக்கார்னு தோனுச்சு.. செம்ம பல்பு.. அவ்வளவு தான் நமக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன் (touch vittu pochu nu nenaikiren :) ).. வேறென்ன சூப்பர், வாழ்த்துக்கள்!!
-கணேஷ்
பாலாஜி கதையைப் படித்தேன். நல்ல கருத்துள்ள கதை. இதில் வருகின்ற நல்வினைத் திட்பம் மிக அருமை. நமக்கெல்லாம் தேவையானது.
இது அறிவியல் கதையா இல்லையா என்பது விவாதமானால்..இது அறிவியல் கதையேதான்.
இது அறிவியல் புனைவுக் கதையா என்றால்...புனையப்பட்ட அறிவியல் கதை என்பேன். அறிவியலில் புதிதாகப் புனையாத கதையென்பேன்.
மிகவும் நல்ல முயற்சி. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
//இந்தாங்க இந்த ஊத்து தண்ணிய குடிச்சி பாருங்க. எங்க எல்லாரோட வேர்வையும் இதுல இருக்கு. ஆனா உப்பு கரிக்காதுங்க //
நல்ல பன்ச் !!
வெற்றி பெற வாழ்த்துகள்
//கயல்விழி said...
முதலில் மேலோட்டமாக படித்த போது ஏதோ பேட்டி என்று நினைத்தேன். கவனமாக படித்துப்பார்த்ததில் தான் கதை என்பதே புலப்படுகிறது.
வித்யாசமான கதை, நன்றாக நடத்தி இருக்கிறீர்கள். அனுபவ அறிவியலும் அறிவியல் தான்.//
பாராட்டிற்கு மிக்க நன்றி கயல்விழி :-)
// Boston Bala said...
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்... வெட்டியும் கேயாரெசும் ஒருவர்தானா!//
பாபா,
இப்படி பல உண்மைகள் எங்களுக்கு தெரியனும் :-))))
//ஸ்ரீதர் நாராயணன் said...
டேமேஜருக்கு டேமேஜர்ன்னா - டைரக்டருங்களா? நம்ம பாரதிராஜா, இரவிக்குமார், அமீர், சசி மாதிரியா?
//
S.J சூர்யா மாதிரினு கூட சொல்லலாம் :-)
//துளசி கோபால் said...
அடப்பாவி:-)
இது கதையா?
லேபிலைப் பார்க்காமப் படிச்சுக்கிட்டே போனவ 2009 ன்னதும் என்னடான்னு முழிச்சேன். அப்புறம் முழிச்சுக்கிட்டேன்:-)
இது மட்டும் நடந்துச்சுன்னா......கிராமம் மாதிரி சொர்க்கம் வேற இருக்குமா?
பாராட்டுகள் வெட்டி!//
அப்பாடா...
டீச்சர்கிட்ட பாஸ் மார்க் வாங்கியாச்சு :-)
// Anonymous said...
மேல சொன்ன கமென்ட் தான், கதைனு ரொம்ப லேட்டா தான் புரிந்தது. ஏதோ நிஜ பேட்டி தான் படிச்சுட்டு இருக்கோம்னு நெனச்சேன். இதுல வேர நிறைய எடத்துல வெட்டி ஏன் '2009'னு தப்பா போட்டிருக்கார்னு தோனுச்சு.. செம்ம பல்பு.. அவ்வளவு தான் நமக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன் (touch vittu pochu nu nenaikiren :) ).. வேறென்ன சூப்பர், வாழ்த்துக்கள்!!
-கணேஷ்//
Touch vittu poachuங்கறத முதல்ல Vetti touch poachuனு படிச்சிட்டேன் :-)
பாராட்டிற்கு நன்றி :-)
// G.Ragavan said...
பாலாஜி கதையைப் படித்தேன். நல்ல கருத்துள்ள கதை. இதில் வருகின்ற நல்வினைத் திட்பம் மிக அருமை. நமக்கெல்லாம் தேவையானது.
இது அறிவியல் கதையா இல்லையா என்பது விவாதமானால்..இது அறிவியல் கதையேதான்.
இது அறிவியல் புனைவுக் கதையா என்றால்...புனையப்பட்ட அறிவியல் கதை என்பேன். அறிவியலில் புதிதாகப் புனையாத கதையென்பேன்.
மிகவும் நல்ல முயற்சி. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.//
ஜி.ரா,
பாராட்டிற்கு மிக்க நன்றி...
உங்க தமிழ் நடையை வழக்கம் போல ரசித்தேன் :-)
//கபீரன்பன் said...
//இந்தாங்க இந்த ஊத்து தண்ணிய குடிச்சி பாருங்க. எங்க எல்லாரோட வேர்வையும் இதுல இருக்கு. ஆனா உப்பு கரிக்காதுங்க //
நல்ல பன்ச் !!
வெற்றி பெற வாழ்த்துகள்//
மிக்க நன்றி கபிரன்பன்...
கதை வெற்றி தாங்க பாலாஜி..
ஆபீஸ் ல Forward mail லா வர ஆரம்பிச்சாச்சு...
சும்மா அடிச்சாடுங்க!!!!
டோன்ட் கிவ் இட் அப்..!!!
கதை நன்றாயிருக்கிறது. அறிவியலும் இருக்கிறது. ஆனால், இது அறிவியல் புனைக் கதையில் அடங்குமா என்று (எனக்குத்) தெரியவில்லை!!
Social think story is very tiching
(i am new I want to tips for tamil blog)
by
Akaramudhalvan
//தமிழினி..... said...
கதை வெற்றி தாங்க பாலாஜி..
ஆபீஸ் ல Forward mail லா வர ஆரம்பிச்சாச்சு...
சும்மா அடிச்சாடுங்க!!!!
டோன்ட் கிவ் இட் அப்..!!!//
யாரோ ஒரு கூட்டம் தான் இந்த வேலையை செய்யுதுனு நினைக்கிறேன். எதை எழுதினாலும் ஃபார்வேர்ட் பண்றாங்க மக்கா...
ஆனா நமக்கு மட்டும் எதுவும் வர மாட்டீங்குது... நானே இந்த மாதிரி வலைப்பதிவர்கள் யார்கிட்டயாவது கேட்டா தான் உண்டு போல :-)
// யோசிப்பவர் said...
கதை நன்றாயிருக்கிறது. அறிவியலும் இருக்கிறது. ஆனால், இது அறிவியல் புனைக் கதையில் அடங்குமா என்று (எனக்குத்) தெரியவில்லை!!//
ஆஹா.. நம்ம பக்கத்துக்கு எல்லாம் வந்திருக்கீங்க.. மிக்க நன்றி...
அறிவியல் புனைக்கதைல வரும்னு தான் KRS சொல்றாரு... ஏதோ Social Science Fictionஆம்...
நான் அறிவியலின் துணை கொண்டு எழுதினா போதும்னு தான் நினைச்சி எழுதினேன். Moreover அவுங்க ப்ராஸஸ் கண்டிப்பா தண்ணி கொண்டு வரும்னும் சொல்ல முடியாது. அதனால அது புனைவு தானு எனக்கு தோணுது :-)
// AKARAMUDHALVAN said...
Social think story is very tiching
(i am new I want to tips for tamil blog)
by
Akaramudhalvan//
மிக்க நன்றி...
முதல்ல நிறைய வலைப்பதிவுகளை படிங்க.. தானா தெரிஞ்சிக்குவீங்க :-)
//ஸ்ரீதர் நாராயணன் said...
டேமேஜருக்கு டேமேஜர்ன்னா - டைரக்டருங்களா? நம்ம பாரதிராஜா, இரவிக்குமார், அமீர், சசி மாதிரியா?//
vetti, note this point
ks ravikumar in sridhar's list!
dasa-kamal-ksr-krs-sridhar-butterfly-dragonfly
ethachum piriyaatha? :)
//ஸ்ரீதர் நாராயணன் said...
Making impossible, possible - இதைத்தான் நான் சொல்ல வந்தது//
Annachi
Athu Science Fantasy!
Not Science Fiction!
Fantasy = impossible made probable.
Fiction = improbable made possible
Neenga Scientific Fantasy-aa?
illa Fantastic Scientist-aaa??
//மத்ததுக்கெல்லாம் ஒரு பெரிய 'ஆமாஞ் சாமி' போட்டுக்கறேன் தல//
athu! :)
//இங்கதான் ஒரு சின்ன புரிதல் பிரச்சினை. கனவன் மனைவி இருந்தால் மட்டும் அது 'குடும்ப' கதைன்னு சொல்ல முடியாது. குடும்பத்தின் 'values' சொல்லப்பட வேண்டும் இல்லையா//
eggjactly!
அறிவியல் இருந்தால் மட்டும் அது அறிவியல் கதை-ன்னு சொல்ல முடியாது! அறிவியலின் values சொல்லப்பட வேண்டும் இல்லையா?
The value of science is measured in the value to humanity!
Sci-Fi has both conceptualization and application!
Here conceptualization < 5% but application more than 60-70%.
All this sci-fi confusion is bcoz of this extreme skew! Imbalance!
Yet this is sci-fi!
ஜீ...நீயி ஏதாச்சும் கேக்கறதுக்கு முன்னாடி ஐ ஆம் தி எஸ்கேப்! :)
ஹரி ஓம் நமோ (ஸ்ரீதர்) நாராயணாய! :)))))))
நல்லா இருந்துச்சுப்பா 'கதை'. பொருத்தமான தலைப்பு தான்.
நிறைய பின்னூட்டங்கள் இருக்கிறதால படிக்கலாமா வேணாமான்னு ஒரு கேள்வி இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க? படிக்கலாமா வேணாமா? :-)
//உங்க தமிழ் நடையை வழக்கம் போல ரசித்தேன் //
புரிஞ்சு தானே இரசித்தீங்க? நான் மூன்று தடவை படிச்சேன். இன்னும் ரெண்டு தடவை படிக்கணும்ன்னு நினைக்கேன். :-)
//குமரன் (Kumaran) said...
நல்லா இருந்துச்சுப்பா 'கதை'. பொருத்தமான தலைப்பு தான்.
//
மிக்க நன்றி குமரன்...
உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் :-)
// நிறைய பின்னூட்டங்கள் இருக்கிறதால படிக்கலாமா வேணாமான்னு ஒரு கேள்வி இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க? படிக்கலாமா வேணாமா? :-)//
பொறுமையா படிச்சி பாருங்க.. வழக்கம் போல நல்ல சண்டை இருக்கு பின்னூட்டத்துல :-)))
//குமரன் (Kumaran) said...
//உங்க தமிழ் நடையை வழக்கம் போல ரசித்தேன் //
புரிஞ்சு தானே இரசித்தீங்க? நான் மூன்று தடவை படிச்சேன். இன்னும் ரெண்டு தடவை படிக்கணும்ன்னு நினைக்கேன். :-)//
புரியாமலா?
//புனையப்பட்ட அறிவியல் கதை என்பேன்.//
இதை தானே சொல்றீங்க :-)
//dasa-kamal-ksr-krs-sridhar-butterfly-dragonfly
ethachum piriyaatha? :)//
ஆனாலும் இந்த 'கைரக்டருங்க' தொல்லை தாங்க முடியலடா சாமீ. எங்க போனாலும் தொடர்ந்து அடிக்கிறாங்க. சரி. சரி. இங்க பஞ்சாயத்து முடிஞ்சிருச்சில்ல. இப்ப அடுத்த ஊர் பஞ்சாயத்துக்கு போவனும். ஆளை விடுங்க.
// AKARAMUDHALVAN said...
Social think story is very tiching
(i am new I want to tips for tamil blog)
by
Akaramudhalvan//
மிக்க நன்றி...
முதல்ல நிறைய வலைப்பதிவுகளை படிங்க.. தானா தெரிஞ்சிக்குவீங்க :-)
Sir,
Thanking you for your replay
Pls visit my Bloge and give to comment if any.
by
Akaramudhalvan
வெட்டி,
கலக்கல்.... இன்றைய கதைகள் நாளைய நிஜமாகும் (விஜய் டி.வி ஸ்டெல் சவுண்டு எஃபக்ட்) ;)
நல்லா இருக்கு வெட்டி, out of box யோச்சிருக்கீங்க.. ஆனா ஒரே ஒரு லாஜிக் மிஸ் தாங்க எனக்கு பட்டுன்னு தெரியுது.. - ஒரே வருடத்துல - ஒரு மழையில் சேர்ந்த தண்ணியில் ஒரு ஆள் முங்கி இறக்கிற அளவு இருக்குமா? ஒரு 2010, 2012ன்னு சொல்லி இருக்கலாம் ;)
எனக்கு என்னவோ உன்னால் முடியும் தம்பி படம் நினைவுக்கு வருது
ஆரம்பத்துல நிஜம்போல ஆரம்பித்து இயல்பான மொழி நடைல கருத்தையும் சொல்லி... என்ன சொல்ல ? பிரமிப்பா இருக்குவெட்டிப்பயல்....அமக்களம்போங்க....வெற்றிக்கு வாழ்த்துகள்.
// Natty said...
வெட்டி,
கலக்கல்.... இன்றைய கதைகள் நாளைய நிஜமாகும் (விஜய் டி.வி ஸ்டெல் சவுண்டு எஃபக்ட்) ;)//
ஆஹா.. நான் விஜய் டிவி பாக்கறதில்லையே...
எப்படியோ தப்பிச்சிட்டாண்டானு நினைக்கறீங்களா :-))
வாழ்த்திற்கு மிக்க நன்றி :-)
//பொன்ஸ்~~Poorna said...
நல்லா இருக்கு வெட்டி, out of box யோச்சிருக்கீங்க.. ஆனா ஒரே ஒரு லாஜிக் மிஸ் தாங்க எனக்கு பட்டுன்னு தெரியுது.. - ஒரே வருடத்துல - ஒரு மழையில் சேர்ந்த தண்ணியில் ஒரு ஆள் முங்கி இறக்கிற அளவு இருக்குமா? ஒரு 2010, 2012ன்னு சொல்லி இருக்கலாம் ;)
எனக்கு என்னவோ உன்னால் முடியும் தம்பி படம் நினைவுக்கு வருது//
பொன்ஸக்கா,
ரொம்ப நன்றி...
தண்ணி அளவு தான் உங்களுக்கு பிரச்சனையா? திருக்கோவிலூர்ல (கதை அதுக்கு பக்கத்துல நடக்கற மாதிரி தான் சொல்லியிருக்கேன்.) ஏரில நிரம்பும் தண்ணில ஒரே நேரத்துல 200 - 300 பேர் சேர்ந்து நிச்சல் அடிக்கலாம்.அவ்வளவு பெரிய ஏரி... அவ்வளவு தண்ணி இருக்கும்.
சித்திரை மாசத்துல மறுபடியும் தண்ணி அளவு குறைஞ்சிடும். நான் கார்த்திகை மாசம் தான சொல்லியிருக்கேன். ஐப்பசி, கார்த்திகை எல்லாம் மழை பெஞ்சி ஓரளவு தண்ணி நிறைய இருக்கும்...
இப்ப ஓகேவா :-))
//
எனக்கு என்னவோ உன்னால் முடியும் தம்பி படம் நினைவுக்கு வருது//
சொல்றேனு தப்பா நினைக்க கூடாது. உன்னால் முடியும் தம்பில ஒரு மேட்டுக்குடி பையன் வந்து ஊரை மாத்துவான். இது அப்படி இல்லை.
புரியும்னு நினைக்கிறேன் ;)
// ஷைலஜா said...
ஆரம்பத்துல நிஜம்போல ஆரம்பித்து இயல்பான மொழி நடைல கருத்தையும் சொல்லி... என்ன சொல்ல ? பிரமிப்பா இருக்குவெட்டிப்பயல்....அமக்களம்போங்க....வெற்றிக்கு வாழ்த்துகள்.//
மிக்க நன்றி.. மிக்க நன்றி :-)
Hello vettypayal,
Have been reading your blog for a long time,
first time commenting in your post,
great going dude:)
**இது வோர்க் அவுட் ஆகலைனா அடுத்து ஒரு ஏலியன் கதை எழுதலாம்னு இருக்கேன்**
as a wellwisher & a great fan of your writing, what I feel is...please go on for an another try, if you do have enough time for the competition.
good luck!
அண்ணே.மன்னிச்சுக்கங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.
நச்சுன்னு இருக்கு கதைக்கு நீங்க எடுத்துகிட்ட மேட்டர்.
:))
இந்த பதிவு நல்லா இருக்கு. ஆனா இந்த பதிவு (அதாவது என்னோட பதிவு) இத பத்தி இல்ல.
நீங்க வஞ்சிபுட்டதா சாரு நிவேதிதா ரொம்ப வருத்தப்பட்ருக்கார். எவனோ ஒரு களவானிப்பய உங்க சரக்கை சுட்டு அவன் பேர்ல அனுப்பிட்டான். (இதுல கொடும, அவன் ஒரு புரபசராம். அவன்ட்ட படிக்கிற புள்ளய்ங்கள நெனிச்சி எனக்கு கவலயா இருக்கு).
நீங்க சாருவை வஞ்சிபுட்டீங்க! அவரு என்னங்க செய்வாரு பாவம், அவர் ஒன்னும் அவர் எழுதினதா போட்டுக்கலையே!
நீ என்னடா டுபுக்கு அவருக்கு சப்போர்டான்னு என்னயும் வஞ்சிபுடாதீங்க. எனக்கு வராது, வந்துட்டா அப்புறம் அவ்வளவு தான். அழுதுருவேன், ஆமா, சொல்லிட்டேன்!
// Adhusari said...
இந்த பதிவு நல்லா இருக்கு. ஆனா இந்த பதிவு (அதாவது என்னோட பதிவு) இத பத்தி இல்ல.
நீங்க வஞ்சிபுட்டதா சாரு நிவேதிதா ரொம்ப வருத்தப்பட்ருக்கார். எவனோ ஒரு களவானிப்பய உங்க சரக்கை சுட்டு அவன் பேர்ல அனுப்பிட்டான். (இதுல கொடும, அவன் ஒரு புரபசராம். அவன்ட்ட படிக்கிற புள்ளய்ங்கள நெனிச்சி எனக்கு கவலயா இருக்கு).
நீங்க சாருவை வஞ்சிபுட்டீங்க! அவரு என்னங்க செய்வாரு பாவம், அவர் ஒன்னும் அவர் எழுதினதா போட்டுக்கலையே!
நீ என்னடா டுபுக்கு அவருக்கு சப்போர்டான்னு என்னயும் வஞ்சிபுடாதீங்க. எனக்கு வராது, வந்துட்டா அப்புறம் அவ்வளவு தான். அழுதுருவேன், ஆமா, சொல்லிட்டேன்!//
அதுசரி,
நான் அவரை திட்டினேனா இல்லை அவர் என்னை திட்டினாரா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? வார்த்தைக்கு வார்த்தை வையாதீங்கனு சொல்லியிருக்கீங்களே :-)
அவர் பதிவுல அவர் அனுப்பிய மெயில் எதுவும் இல்லையே? அது ஏன்? :-)))
//அதுசரி,
நான் அவரை திட்டினேனா இல்லை அவர் என்னை திட்டினாரா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? வார்த்தைக்கு வார்த்தை வையாதீங்கனு சொல்லியிருக்கீங்களே :-)
அவர் பதிவுல அவர் அனுப்பிய மெயில் எதுவும் இல்லையே? அது ஏன்? :-)))
//
நல்ல கேள்வி. எனக்கு எப்படி தெரியும்?
நான் அவர் வெப்சைட்ட படிச்சென். இப்படி ஒரு மேட்டர் இருந்தது.
அத உங்களுக்கு சொன்னேன்.
அவர் உங்களுக்கு அனுப்புன மெயில் மேட்டர் அதுல இல்ல. நீங்க வஞ்சிபுட்டதா மேட்டரு மட்டும் தான் இருந்துச்சி.
மன்னிச்சுக்கங்க!
சத்தியமா இதை நான் கதை என நினைக்கவேயில்லை. கூகிள் ரீடர் சிபாரிசு செய்ததால் வந்தேன் உங்கள் வலைப்பதிவிற்கு. சரி, வந்ததுக்கு முருகேசன் போட்டோவ என் போடலைன்னு கேக்கலாம்னு வந்தா இனிய அதிர்ச்சி.
கதைன்னு நீங்க எழுதலைன்னா ( குறிச்சொல்லுல) எனக்கு தெரிஞ்சிருக்காது. அருமையான கதை. குமுதம், ஆனந்த விகடன்ல வர்றதுதான் கதையா என்ன?? உங்களுடையது ரத்தமும் சதையுமாய் வாழ்துவிட்டுப்போனவனைப்பற்றிய குரிஒப்பு போலவே இருக்கிறது. நெசமாவே ஒரு முருகேசன் இருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்.
வாழ்த்துக்கள்.
ஜெயக்குமார்
I have subscribed you in my reader.
// கானகம் said...
சத்தியமா இதை நான் கதை என நினைக்கவேயில்லை. கூகிள் ரீடர் சிபாரிசு செய்ததால் வந்தேன் உங்கள் வலைப்பதிவிற்கு. சரி, வந்ததுக்கு முருகேசன் போட்டோவ என் போடலைன்னு கேக்கலாம்னு வந்தா இனிய அதிர்ச்சி.
கதைன்னு நீங்க எழுதலைன்னா ( குறிச்சொல்லுல) எனக்கு தெரிஞ்சிருக்காது. அருமையான கதை. குமுதம், ஆனந்த விகடன்ல வர்றதுதான் கதையா என்ன?? உங்களுடையது ரத்தமும் சதையுமாய் வாழ்துவிட்டுப்போனவனைப்பற்றிய குரிஒப்பு போலவே இருக்கிறது. நெசமாவே ஒரு முருகேசன் இருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்.
வாழ்த்துக்கள்.
ஜெயக்குமார்//
மிக்க நன்றி ஜெயக்குமார்...
கதையை வழக்கம் போல கதை மாதிரி சொல்ல வேண்டாமேனு செஞ்ச ஒரு முயற்சி தான் இது :)
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே.மன்னிச்சுக்கங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.
நச்சுன்னு இருக்கு கதைக்கு நீங்க எடுத்துகிட்ட மேட்டர்.
:))//
மிக்க நன்றி அப்துல்லா :) (நானும் கொஞ்சம் லேட்டா பதில் சொல்லிட்டேன் )
//Naveen Kumar said...
Hello vettypayal,
Have been reading your blog for a long time,
first time commenting in your post,
great going dude:)
**இது வோர்க் அவுட் ஆகலைனா அடுத்து ஒரு ஏலியன் கதை எழுதலாம்னு இருக்கேன்**
as a wellwisher & a great fan of your writing, what I feel is...please go on for an another try, if you do have enough time for the competition.
good luck!//
நவீன்,
மன்னிக்கவும்.. இத்தனை நாள் இந்த பின்னூட்டங்களை கவனிக்காம விட்டுட்டேன் :(
அது சும்மா காமெடி போஸ்ட்டுக்கு சொன்னது... ஒரு தொடர் கதை எழுதனும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருந்தேன். அதை எழுத உக்கார்ந்திட்டேன். ஆடு புலி ஆட்டம்னு பேரு.. நேரமிருந்தா படிச்சி பாருங்க. நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் :)
கலக்கறீங்க போங்க. ஒரு அருமையான சமூக சிந்தனையை அற்புதமாக உணர்ச்சி பூர்வமாக படைத்திருக்கிறீர்கள். அப்படியே ஒரு படம் பார்த்து போல உள்ளது. இப்படி எல்லாம் நடந்தால் நம்ம நாட்டுக்கு, வீட்டுக்கு, எல்லோருக்கும் எவ்வளவு நல்லது.
"மனுசன்னு மட்டும் இல்லை. மரம், செடி, ஆடு, மாடுனு எல்லாத்துக்குமே தண்ணி சொந்தம். மலைங்க எல்லாம் பூமி தாயின் மார்பு, தண்ணி அதுல வர தாய்ப்பால், நாம எல்லாரும் பூமி தாயின் குழந்தைகள்னு படிச்சிருக்கேன்." - அத்தனையும் உண்மை. அருமையான சிந்தனைங்க... பாராட்டுகள்.
Grand!
Post a Comment