தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, June 13, 2008

தசாவதாரம் - மனதை கவர்ந்த பூவராகன்

தசாவதாரம் ஒரு வழியாக பார்த்தாகிவிட்டது.

எந்த காரணத்தை முன்னிட்டும் தாமதமாக போய் விடாதீர்கள். பத்து நிமிஷம் லேட்டாக போக வேண்டிய நிலை வந்தால் அடுத்த காட்சிக்கு செல்வதே மேல். இது தான் என் சீரியஸ் அட்வைஸ். அடுத்து குழந்தைகளோடு இந்த படத்திற்கு போவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டு செல்லுங்கள். படத்தில் பயங்கரமான கொலைகள் ஒரு இருபதாவது இருக்கும்.

படம் முழுக்க கமல ஹாசன் தான். அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்திற்கு கிராபிக்ஸ் செய்தவர்கள். இது வரை வந்த தமிழ் படத்தில் நிச்சயம் இது தான் கிராபிக்ஸில் பெஸ்ட் என நிச்சயம் சொல்வேன். அடுத்து கேமரா மேன்.

படத்தை பார்க்கும் முன் கதை கொஞ்சமும் தெரிந்து கொள்ள விருப்பமிள்ளாதவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை படிக்காதீர்கள். பெட்டர் தசாவதாரம் பற்றி எந்த பதிவையும் படிக்காதீர்கள். கமல் கேரக்டர் சொன்னாலே கதை பாதி தெரிஞ்சிடும்.

படத்தில் ஆரம்பித்த உடனே இரண்டு மூன்று நிமிடத்தில் ஃபிளாஷ் பேக். ரங்கராஜ நம்பி என் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். (KRS ஆசைப்பட்ட மாதிரி கற்பனையும் கலந்திருக்கிறோம்னு டிஸ்கி போட்டுட்டாங்கப்பா). ஆரம்பமே அசத்தலான சண்டை. பிறகு கைதியானவுடன் பஞ்சாட்சரத்தை (ஓம் நமச்சிவாயனு சொல்ல சொல்றாங்க. ) சொல்ல சொல்லி மன்னன் ஆணையிட. ஜாக்கெட் போடாத அசின் கெஞ்ச, அவர் குடும்பமே கெஞ்சுகிறது. ஓம் என்று கமல் ஆரம்பிக்கும் போது சீட்டின் நுணிக்கே வந்துவிட வைத்தது. எப்படியும் ஓம் நமோ நாராயணாய தான் சொல்ல போறார்னு தெரிஞ்சுடுச்சி. இருந்தாலும் அதை அவர் சொல்லும் விதம் மிகவும் பிடித்திருந்தது.

அவரை கட்டி இழுத்து செல்லும் போது கருடாழ்வார் வந்து அமர, அதன் மேல் நூற்றுக்கணக்கில் அம்பு விடப்படுகிறது. கொஞ்ச நேரம் தாக்குபிடித்து பிறகு பறக்கிறது. கமலும் அந்த தில்லை கோவிந்தராஜ பெருமாலோடு கடலில் வீசப்படுகிறார். பிறகு அசின் அங்கிருக்கும் ஒரு கற்சிலையின் மீது மோதி உயிரை விடுகிறார்.

இப்போது மீண்டும் 21ம் நூற்றாண்டிற்கு கதை திரும்புகிறது. அமெரிக்காவில் Bioweapons பிரிவில் வேலை செய்கிறார் கமல். அங்கு அவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு கிருமி பெரும் நாசத்தை உண்டாக்கவல்லது என தெரிந்து அந்த ப்ராஜக்டை நிறுத்த சொல்கிறார் கமல். அவர் சீனியர் அதை ஒருவருக்கு விற்க முயற்சி செய்ய. கமல் அதை ஆட்டையை போடுகிறார். அந்த கிருமியை ஒரு டப்பியில் போட்டு வைக்கிறார். அது பயணிக்கும் இடமெல்லாம் அதை தேடி கமலும் பயணிக்கிறார். க்ளைமாக்ஸில் சுனாமி வந்து அந்த கிருமியிடமிருந்து தமிழ் நாட்டை காக்கிறது. சுனாமியை அட்டகாசமாக காட்டியிருக்கிறார்கள். அதுல கடலில் வீசிய சிலையும் மீண்டு வந்துவிடுகிறது. (பெருமாள் காக்கும் கடவுள்னு கமல் சொல்ல வராறானு தெரியல ;) )

இது தான் கதை. கொஞ்சம் இழுவை மாதிரியும் தெரிந்தது.

படத்தில் என்னை கவர்ந்த கமல் - பூவராகன். மணல் கொள்ளையை எதிர்க்கும் பாத்திரம். இந்த பாத்திரத்தை படைத்ததற்காகவே கமலை நிச்சயம் பாராட்ட வேண்டும். அடுத்து தெலுகு பேசும் கமல். இவர் தான் படத்துல காமெடியன். சூப்பரா கமல் தெலுகு பேசியிருக்கிறார். அதுவும் அவர் பேசற தமிழ் இன்னும் சூப்பர். நரசிம்ம ராவ்னு சொல்லும் போது "தெலுகுவாடா?"னு அவர் கேட்கற இடத்துல தியேட்டரே கை தட்டி சிரித்தது. அடுத்து சிரிக்க வைப்பவர் ஜார்ஜ் புஷ் கமல். ரங்கராஜன் நம்பி - என் மனதில் இடம் பிடித்த கேரக்டர். மத்த கமல் எல்லாம் படத்துல நிறைய இடத்துல இருக்காங்க.

அசின் சூப்பர்... மல்லிகா ஹாட்...

இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)

மொத்தத்தில் படம் சூப்பர்...

46 comments:

கோவி.கண்ணன் said...

பூவராகவன் வைணவர் என்பதால் உங்கள் மனதை கவர்ந்திருக்கும். - சரிதானே ?

:)

Sridhar Narayanan said...

//பஞ்சராட்சத்தை (ஓம் நமச்சிவாயனு சொல்ல சொல்றாங்க. பஞ்சராட்சம் சிவாய நம தானே?) //

பாருங்க ரவி அண்ணாவோடு அதிகம் சேராதீங்கன்னு சொன்னோம்ல. பஞ்சாட்சரத்தை இப்படி கொன்னு குழி தோண்டி புதைச்சிட்டிங்களே. :-)

எனக்குத் தெரிந்தவரை 'நமச் சிவாய' என்பதும் பஞ்ச+அட்சரம்தான். 'சிவாய நம' என்பதும் பஞ்ச+அட்சரம்தான். :-))

mayooresan said...

விமர்சனத்தை வாசிக்கவில்லை. அரைவாசியில் நிறுத்திவிட்டேன், ஸ்பாயிலர் வார்ணிங்குக்கு நன்றி விரைவில் பார்க்க வேண்டும்!

Poonai kutty said...

vetti, Neenga sonna mathiria pathiva pathikkumala.. pakkala..

Naan Saturday padatha paathuttu meethiya padikkaren :-)...

Anonymous said...

//இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)//

:))))))))))))))))))))))))))))))))
excellent finishing

Sathiya said...

காத்தால இருந்து இந்த தசாவதாரம் விமர்சனத்தை தான் தேடி தேடி படிச்சிட்டிருக்கேன். சிஃபில தான் கொஞ்சம் சரியா எழுதல. மற்றபடி எல்லாத்துலயும் நல்லா எழுதி இருக்காங்க. நீங்களும் சொல்லிட்டீங்க. அப்பாடா! நாளைக்கு படத்துக்கு நிம்மதியா போவேன். அது என்னவோ இந்த மாதிரி பெரிய பட்ஜெட் படம் வந்தாலே நாமளே தயாரிச்ச மாதிரி, அதோட ரிசல்ட் தெரிஞ்சிக்காம தூக்கமே வர மாட்டேங்குது. எல்லாம் நம்ம ஆளுங்க மேல உள்ள கரிசனம் தான். இல்லனா கே.டி.குஞ்சுமோன் மாதிரி இருக்கற இடம் தெரியாம போயிடுவாங்களே. இப்போவெல்லாம் இந்த மாதிரி விமர்சனங்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்குது. இந்த படத்துல என்னை பொருத்தி வரை படத்தோட பலவீனம் படத்தோட பாட்டு தான் (ஒரு பட்டை தவிர). இசைஞானி கிட்ட கொடுத்திருக்கணும்.

jaisankar jaganathan said...

//"தசவதாரம் - மனதை கவர்ந்த பூவராகவன்//

பத்து இங்கிலீஷ் படத்தை காப்பி அடித்து ஒரு தமிழ் படம் எடுக்கிறார்கள். வெட்டிப்பசங்க

Anonymous said...

"படத்தை பார்க்கும் முன் கதை கொஞ்சமும் தெரிந்து கொள்ள விருப்பமிள்ளாதவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை படிக்காதீர்கள். பெட்டர் தசவதாரம் பற்றி எந்த பதிவையும் படிக்காதீர்கள்."

ஏங்க, உங்கள நம்பி நான் ஒரு விமர்சனம் கூட படிக்காம படம் பார்க்க போறேன்! நீங்க கொடுத்த ஆர்வத்தில தான் இன்னும் பார்க்கணும் என்று ஆசை வந்திருக்கிறது.


"மொத்தத்தில் படம் சூப்பர்..."

கமல் ஏமாத்த மாட்டார் என்று நன்றாகவே தெரியும்.

Sathiya said...

//இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)//
ஏங்க K.S ரவிக்குமார் இப்படி அசிங்க படுத்திட்டீங்க? அந்த மட்டேருக்கு பேர் போனவரு திரு S.A.சந்திரசேகர் தானே?

ச்சின்னப் பையன் said...

சரிங்க. நான் விமர்சனத்தை படிக்கலை.... ஏன்னா ஞாயிறுதான் படம் பாக்க போறேன்!!!

ச்சின்னப் பையன் said...

ஏங்க. இஞ்சின் ஓட்டினா இஞ்சினியர் ஆகமுடியாதா... இஞ்சியை எடுத்து காதுலே (இயர்லே) வெச்சிண்டா இஞ்சினியர் ஆகமுடியாதா... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்....

வெட்டிப்பயல் said...

// கோவி.கண்ணன் said...

பூவராகவன் வைணவர் என்பதால் உங்கள் மனதை கவர்ந்திருக்கும். - சரிதானே ?

:)//

அவர் தலித் கிருஸ்துவர் :-) (படிக்காத மேதை... இது படத்துல கபிலன் சொல்றது).

மணல் கொள்ளையை தடுக்க போராடுகிறார். இவரை கொல்ல முயலும் அரசியல்வாதியின் மகனை காப்பாற்றி உயிர் விடுகிறார்.

அவர் தமிழ் - அமிழ்து :-)

I simply like his character :-)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...

//பஞ்சராட்சத்தை (ஓம் நமச்சிவாயனு சொல்ல சொல்றாங்க. பஞ்சராட்சம் சிவாய நம தானே?) //

பாருங்க ரவி அண்ணாவோடு அதிகம் சேராதீங்கன்னு சொன்னோம்ல. பஞ்சாட்சரத்தை இப்படி கொன்னு குழி தோண்டி புதைச்சிட்டிங்களே. :-)

எனக்குத் தெரிந்தவரை 'நமச் சிவாய' என்பதும் பஞ்ச+அட்சரம்தான். 'சிவாய நம' என்பதும் பஞ்ச+அட்சரம்தான். :-))//

மன்னிச்சிடுங்க ஸ்ரீதர்.. தப்பா எழுதிட்டேன். இப்ப மாத்திட்டேன்...

கந்தன் கருணைல முருகன் சிவன்கிட்ட சிவாய நமனு உங்களுக்கு ஐந்து எழுத்து மந்திரம். சரவண பவனு எனக்கு ஆறு எழுத்து மந்திரம்னு சொல்லுவார். அதனால நான் தப்பா புரிஞ்சிக்கிட்டு சொல்லிட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//mayooresan said...

விமர்சனத்தை வாசிக்கவில்லை. அரைவாசியில் நிறுத்திவிட்டேன், ஸ்பாயிலர் வார்ணிங்குக்கு நன்றி விரைவில் பார்க்க வேண்டும்!//

நல்லது. விமர்சனம் எங்கயும் இனிமே படிக்காதீங்க. படத்தை கண்டிப்பா பாருங்க

வெட்டிப்பயல் said...

// Poonai kutty said...

vetti, Neenga sonna mathiria pathiva pathikkumala.. pakkala..

Naan Saturday padatha paathuttu meethiya padikkaren :-)..//

சூப்பர்.. பார்த்துட்டு படம் பிடிச்சிருக்கானு சொல்லுங்க :-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

//இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)//

:))))))))))))))))))))))))))))))))
excellent finishing//

Thank u friend...

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

காத்தால இருந்து இந்த தசாவதாரம் விமர்சனத்தை தான் தேடி தேடி படிச்சிட்டிருக்கேன். சிஃபில தான் கொஞ்சம் சரியா எழுதல. மற்றபடி எல்லாத்துலயும் நல்லா எழுதி இருக்காங்க. நீங்களும் சொல்லிட்டீங்க. அப்பாடா! நாளைக்கு படத்துக்கு நிம்மதியா போவேன். //

நாளைக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு இப்படி விமர்சனமா படிச்சி தள்ளிட்டு இருக்கீங்களே :-))

நிம்மதியா போங்க. ரொம்ப எதிர்பார்ப்போட போகாதீங்க. கமல் நிச்சயம் ஏமாற்ற மாட்டார். எதுக்கும் ஒரு தடவை அதுக்கு முன்னாடி குருவி பார்த்துட்டு போங்க :-))

//அது என்னவோ இந்த மாதிரி பெரிய பட்ஜெட் படம் வந்தாலே நாமளே தயாரிச்ச மாதிரி, அதோட ரிசல்ட் தெரிஞ்சிக்காம தூக்கமே வர மாட்டேங்குது. எல்லாம் நம்ம ஆளுங்க மேல உள்ள கரிசனம் தான்.
இல்லனா கே.டி.குஞ்சுமோன் மாதிரி இருக்கற இடம் தெரியாம போயிடுவாங்களே.//
Same blood :-)

// இப்போவெல்லாம் இந்த மாதிரி விமர்சனங்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்குது.//
ஆமாம்.. குருவி எல்லாம் விமர்சனத்தால தான் அடி வாங்குச்சி. இல்லைனா படம் கேவலமா இருந்தாலும் நிறைய பேர் போயிருப்போம். குருவிக்கு நெதர்லேண்ட்ஸ் ரவி சங்கர் தான் முதல் விமர்சனம். அதனால தான் நான் தப்பிச்சேன் :-)

//
இந்த படத்துல என்னை பொருத்தி வரை படத்தோட பலவீனம் படத்தோட பாட்டு தான் (ஒரு பட்டை தவிர). இசைஞானி கிட்ட கொடுத்திருக்கணும்.//
எனக்கி தெரிஞ்சி ரஹ்மான் போட்டிருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்...

வெட்டிப்பயல் said...

//jaisankar jaganathan said...

//"தசவதாரம் - மனதை கவர்ந்த பூவராகவன்//

பத்து இங்கிலீஷ் படத்தை காப்பி அடித்து ஒரு தமிழ் படம் எடுக்கிறார்கள். வெட்டிப்பசங்க//

அது என்னங்கண்ணா அந்த பத்து இங்கிலீஷ் படம்? நீங்க சொன்னீங்கனா உங்களுக்கும் புண்ணியமா போகும்

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

"படத்தை பார்க்கும் முன் கதை கொஞ்சமும் தெரிந்து கொள்ள விருப்பமிள்ளாதவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை படிக்காதீர்கள். பெட்டர் தசவதாரம் பற்றி எந்த பதிவையும் படிக்காதீர்கள்."

ஏங்க, உங்கள நம்பி நான் ஒரு விமர்சனம் கூட படிக்காம படம் பார்க்க போறேன்! நீங்க கொடுத்த ஆர்வத்தில தான் இன்னும் பார்க்கணும் என்று ஆசை வந்திருக்கிறது.


"மொத்தத்தில் படம் சூப்பர்..."

கமல் ஏமாத்த மாட்டார் என்று நன்றாகவே தெரியும்.//

நீங்களே சொல்லிட்டீங்க கமல் ஏமாற்ற மாட்டார்னு. அதே தைரியத்துல போங்க :-)

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

//இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)//
ஏங்க K.S ரவிக்குமார் இப்படி அசிங்க படுத்திட்டீங்க? அந்த மட்டேருக்கு பேர் போனவரு திரு S.A.சந்திரசேகர் தானே?//

அண்ணே,
ரவிக்குமார் படம் அதிகமா பார்த்ததில்லையா???

புரியாத புதிர்ல இருந்து வரலாறு வரைக்கும் எல்லா படத்துலயும் ரேப் அட்டெம்டாவது இருக்கும். ஒரு 5-6 படம் தான் மிஸ் ஆகியிருக்கும் ;)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

சரிங்க. நான் விமர்சனத்தை படிக்கலை.... ஏன்னா ஞாயிறுதான் படம் பாக்க போறேன்!!!//

சூப்பர்... தைரியமா போங்க :-)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

ஏங்க. இஞ்சின் ஓட்டினா இஞ்சினியர் ஆகமுடியாதா... //
மெக்கானிக்கல் இஞ்சினியரை சொல்றீங்க போல ;)

//இஞ்சியை எடுத்து காதுலே (இயர்லே) வெச்சிண்டா இஞ்சினியர் ஆகமுடியாதா... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்....//
இஞ்சி இயர் தான் ஆகுமே தவிர இஞ்சினியர் ஆகாது ;)

சினிமா நிருபர் said...

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//KRS ஆசைப்பட்ட மாதிரி கற்பனையும் கலந்திருக்கிறோம்னு டிஸ்கி போட்டுட்டாங்கப்பா//

:-)))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாருங்க ரவி அண்ணாவோடு அதிகம் சேராதீங்கன்னு சொன்னோம்ல//

ரவி அண்ணாவா?
அடிங்க!
பரனூர் அண்ணா தெரியும்! யாரு அந்த ரவி அண்ணா?

//பஞ்சாட்சரத்தை இப்படி கொன்னு குழி தோண்டி புதைச்சிட்டிங்களே. :-)//

அவரு "தசாவதாரம்" என்பதையும் சைவ/வைணவ பேதம் இல்லாம தலைப்புலயே "குழி தோண்டித் தான் புதைச்சி" இருந்தாரு மொதல்ல! :-)

எங்க பாலாஜி
தக்காளி ரச, பருப்பு ரச, கொள்ளு ரச, சம ரச சன்மார்க்கம் தெரியும்-ல? உங்க முத்திரை ஸ்டாம்ப்பு எல்லாம் இங்க எடுபடாதுங்க ஸ்ரீதர் அண்ணாச்சி! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அடுத்து தெலுகு பேசும் கமல். இவர் தான் படத்துல காமெடியன். சூப்பரா கமல் தெலுகு பேசியிருக்கிறார்//

பாலாஜியா தெலுங்கா? சாரி ஐ மீன் பாலாஜியா கொக்கா?? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அசின் சூப்பர்... மல்லிகா ஹாட்...//

யாரு கோல்ட்?
ஐ மீன் "ஜில்"லுனு?

//இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)//

ஒரு வேளை "அதை" மட்டும் டைரக்ட்டு பண்ணி இருப்பாரோ? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இசைஞானி கிட்ட கொடுத்திருக்கணும்//

சத்தியாவுக்கு ரிப்பீட்டே!

இல்லீன்னா வாலியின் சில பாட்டுக்கு MSV கிட்ட கொடுத்துட்டு, மத்ததை ராஜாவிடம் கூடக் கொடுத்திருக்கலாம்!

ரசாமிய்யா, மியா மியான்னு, பாட்டு என்னமோ ஆல்பம் ரிலீஸ் ஆன போதே சோபிக்கலை பாலாஜி!
தியேட்டர்-ல கேக்கும் போது எப்படி இருந்துச்சோ?

நான் திங்கட்கிழமை தான் பாக்கணும்!

வற்றாயிருப்பு சுந்தர் said...

வெட்டி

ஞாயித்துக்கெழமை போலாம்னு இருக்கேன். கொழந்தைகளைக் கூட்டிக்கிட்டுப் போணுமான்னு ஏற்கனவே யோசனையா இருந்தது. நீங்க வேற 'யோசிச்சுக்குங்க'ன்னு டிஸ்கி போட்டுட்டீங்க :( கொலைகளுக்குத்தான் அப்படிச் சொல்றீங்களா? இல்ல மல்லிகா ஷெராவத் காட்சிகளுக்காகவுமா? ரேப் சீன்னு வேற சொல்லி ஏகத்துக்கும் பயமுறுத்துனா என்ன பண்றது?

அதிக எதிர்ப்புகளில்லாம போறேன். பாத்துட்டு (ஒரு மாசம் கழிச்சு) சொல்றேன்.

பதிவுக்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

//வற்றாயிருப்பு சுந்தர் said...

வெட்டி

ஞாயித்துக்கெழமை போலாம்னு இருக்கேன்.//
நேத்து நீங்க அங்க இருக்கீங்களானு தேடிக்கிட்டே இருந்தேன் :-)

// கொழந்தைகளைக் கூட்டிக்கிட்டுப் போணுமான்னு ஏற்கனவே யோசனையா இருந்தது. நீங்க வேற 'யோசிச்சுக்குங்க'ன்னு டிஸ்கி போட்டுட்டீங்க :( கொலைகளுக்குத்தான் அப்படிச் சொல்றீங்களா? //
ஆமாம். நிறைய கொலைகள். அதுவும் கொடூரமான கொலைகள். நிறைய இரத்தம். அதுக்கு தான் சொன்னேன்.

//
இல்ல மல்லிகா ஷெராவத் காட்சிகளுக்காகவுமா? ரேப் சீன்னு வேற சொல்லி ஏகத்துக்கும் பயமுறுத்துனா என்ன பண்றது?
//
இதெல்லாம் KS ரவிக்குமார் ரேஞ்சுக்கு ரொம்ப கம்மி... அதனால ரொம்ப பயப்பட தேவையில்லை.

// அதிக எதிர்ப்புகளில்லாம போறேன். பாத்துட்டு (ஒரு மாசம் கழிச்சு) சொல்றேன்.
//

சீக்கிரமா சொல்லுங்களேன்...

//
பதிவுக்கு நன்றி.//
You are Welcome :-)

கைப்புள்ள said...

வார்னிங்கிற்கு நன்றி. நான் நாளைக்குத் தான் படம் பாக்கப் போறேன்.

////
இல்ல மல்லிகா ஷெராவத் காட்சிகளுக்காகவுமா? ரேப் சீன்னு வேற சொல்லி ஏகத்துக்கும் பயமுறுத்துனா என்ன பண்றது?
//

அப்போ உண்மையிலேயே A படம்னு சொல்ல வர்றீங்க. இங்கே சென்சார் A செர்டிபிகேட் தான் கொடுத்தீருக்காங்க.
:)

G.Ragavan said...

உண்மைதான் வெட்டி. முதல் பதினைந்து நிமிடங்கள் அபாரம். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. கருத்து ஒருபக்கம் இருக்க...அந்தப் பகுதி சிறப்பாகவே வந்திருக்கிறது. படம் முழுதும் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

இசைதான் சரியில்லை. தேவாவைக் கூப்பிட்டிருந்தால் கூட நல்ல ஹிட் பாட்டுகள் கொடுத்திருப்பார்.

ஒரு ஐயம். பூவராகன் என்று நினைக்கிறேன். பூ - பூமி. வராகம் என்றால் பன்றி. அப்படி உண்டான பெயர் என்றே நான் நினைக்கிறேன்.

Ramya Ramani said...

படத்துல கிராபிக்ஸ் நல்லா இருக்கு - சொல்லதவங்களே இல்லை!

jaisankar jaganathan said...

//அது என்னங்கண்ணா அந்த பத்து இங்கிலீஷ் படம்? நீங்க சொன்னீங்கனா உங்களுக்கும் புண்ணியமா போகும்//

எல்லாம் star movies la பாக்குறதுதான்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

வெட்டி

//சீக்கிரமா சொல்லுங்களேன்... //

கமலின் இரண்டு வருட உழைப்பு - ஒரு நாளைக்கு 15 மணி நேரம் என்று வைத்துக்கொண்டாலும்கூட கிட்டத்தட்ட 10,000 மணி நேர உழைப்பு. இதை மூன்று மணி நேரம் குளிரூட்டிய அரங்கத்தில் பார்த்துவிட்டு, ஒரு மணி நேரத்தில் ஒரு பதிவில் அடக்கிவிட மனது வரவில்லை! :)

நேற்று படம் பார்த்தாகிவிட்டது.

நன்றி!

கோவி.கண்ணன் said...

//இதை K.S ரவிக்குமார் டைரக்டர் பண்ணவில்லை என்று சொல்வதை என்னால் நிச்சயம் ஒத்து கொள்ள முடியாது. ஏன்னா படத்துல ஒரு ரேப் சீன் இருக்குது ;)//

K.S ரவிக்குமாரால் சிங்கீதம் சீனிவாஸ் ராவுக்கு கமல் படங்களை இயக்கும் வேலை போகப் போகுது. அந்த இடத்துக்குத்தான் ரவி முயற்சித்து இருக்கிறார்.

:)

netmp said...

படம் சூப்பர்.

விமரிசனமும் சூப்பர்.


//
இஞ்சி இன் இயர்= இஞ்சினியர்.

//

கரீட்டா ?

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

Vijay said...

ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.

"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"

http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html

அன்புடன்,
விஜய்
கோவை

இவன் said...

எல்லோருமே படம் நல்ல படம் என்றுதான் சொல்லி இருக்கிறாங்க..... நீங்களும் அதே சொல்லி இருக்கிறீங்க.... உங்களையும், வசந்தன் அண்ணாவையும்பார்த்துதான் நானும் கொஞ்சம் எழுத ஆரம்பித்திருக்கிறேன்... நன்றாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள்

Anonymous said...

balaji.. sangam la eluthina iru thuruvam apdiyiae nikkuthae yaen??

வெட்டிப்பயல் said...

// LOLLU said...

balaji.. sangam la eluthina iru thuruvam apdiyiae nikkuthae yaen??//

கதை எழுதறது எப்படினு மறந்து போச்சிங்க :-)

நிஜமா தான் சொல்றேன்....

ராஜ நடராஜன் said...

பாலாஜி எப்படி இருக்கீங்க?என்னை ஒலிப்பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார வச்சிட்டாங்க.தேவி பிரசாத்தின் ரீரெக்கார்டிங்க் நல்லாவே இருக்கு.பாடல்களுக்கு ரகுமானைப் போட்டிருக்கலாமோன்னு எனக்குத் தோன்றியது.படத்தை வெளியிட்டு விமர்சனங்களும் பிச்சு உதறிட்டு இருக்கும் நேரத்தில் கமல் சாருக்கு பரிந்துரை செய்றது நியாயமில்லை.அப்புறம் பல்ராம் நாயுடு தெலுகுவாடா ன்னு கேட்டு விட்டு கன்னடிகர்ன்னு பதில் வரும்போது ஒரு வினாடி கண்ணின் கண்ணாடிக்குள்ளிருந்து வெளிப்படுத்தும் நகைச்சுவையில் இங்கேயும் தியேட்டரில் அமர்க்களம்.பல்ராம் நாயுடு நகைச்சுவையின் புதிய பரிமாணம்.

rapp said...

தப்பா எடுத்துக்காதீங்க. நானும் இதே தப்பை என் பதிவில் பண்ணிருந்தேன். அதை சஞ்சய் திருத்தினார். இன்னைக்கு மணல் கயறு படிக்கும்போது பார்த்தேன். வேறோன்னுமில்லைங்க, தசாவதாரத்தில் கமல் பேர் பூவராகவன் இல்லைங்க. அவர் பேரு பூவராகன்.
ஏற்கனவே யாரவது சொல்லிருந்தால் ஓகே, இல்லைனா ஞாபகப் படுத்தறேன்.

rapp said...

ரொம்ப நன்றி சார், மாத்தினதுக்கு.

துளசி கோபால் said...

மல்லிகா......

I like the way she died.