தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, June 10, 2008

என்ன எழுதலாம்?

எழுதி ரொம்ப நாள் ஆகுது... என்ன எழுதலாம்னு யாராவது ஐடியா கொடுத்தா பரவாயில்லை. ஒரு வாரமா யோசிக்கிறேன், எதுவுமே தோன மாட்டீங்குது.

பாபா மாதிரி தசவதாரம் பத்தி எங்கயாவது நியூஸ் கிடைச்சா, எடுத்து போட்டு டேக் பண்ணிடலாமா?

லக்கி லுக் அண்ணாத்தை "மாதிரி தானே கேள்வி, தானே பதில்"னு பதிவு போடலாமா?

சின்ன பையன் மாதிரி சினிமா நடிகர்கள் எல்லாம் சாப்ட்வேர் இஞ்சினியரானால்னோ இல்லை 2030ல் வலையுலக டெண்டுல்கர்னு பதிவு போடலாமா?

கப்பி மாதிரி ஒலக திரைப்படம் ஒண்ணு பார்த்து விமர்சனம் எழுதலாமா?

பினாத்தல் சுரேஷ் மாதிரி ஜெயலலிதா60-ICICI-நாயகன்-விஜய்-ஜாஸ்மின்-250 அப்படினு உப்புமா பதிவு போடலாமா?

கொத்தனார் மாதிரி புதசெவி - 10/06/2008 (கொத்தனார் அமெரிக்கன் ஸ்டைல்ல MM/DD/YYYY போடலாம். அதுக்காக நாம அப்படி இருக்க முடியுமா?). அப்படியே டிஸ்கில - புதசெவி - புண்ணாக்கு தடியா செவில்லே விட்டேண்ணா அப்படினு கவுண்டர் தானுங்க திட்டினார். அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு போட்டிடலாம். டிஸ்கி 2 : புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு அப்படினு யாராவது திட்டினா அதுக்கு நான் பொறுப்பில்லை.

டாக்டர் புருனோ மாதிரி "குருவியும், அழகிய தமிழ் மகனும் மட்டும் மண்குடம்; சிவகாசி, திருப்பாச்சி மட்டும் பொன்குடமானு?" ஒரு பதிவு போடலாமா?

வினையூக்கி மாதிரி பேய் கதை எழுதலாமா?

கார்த்திக்கிற்கு ஜெனியின் நினைவாகவே இருந்தது. பத்து வருடங்களுக்கு முன்னால் ஜெனியும் கார்த்திக்கும் உயிருக்குயிராக காதலித்தனர். ஜெனியின் தந்தை அவர்கள் காதலுக்கு சம்மதிக்காத்தால் ஜெனி அந்த விபரீத முடிவை எடுத்திருந்தாள்.

அன்றிலிருந்து கார்த்திக் எப்போதும் பித்து பிடித்தவன் போலவே சுற்றி கொண்டிருந்தான்.

அன்று அமாவாசை. அந்த அறையில் நிலவிய அமைதியை கெடுத்து மணி பண்ரெண்டாகியதை அறிவித்து கொண்டிருந்தது அந்த கடிகாரம். அந்த சத்தத்தில் கண் விழித்தான் கார்த்திக். அவன் திரும்பி படுக்க புரண்ட பொழுது.... அவன் எதிரில் ஜெனியின் உருவம்...

அவனை அறியாமலே அலறினான்...

"ஏன் இப்படி பயப்படறீங்க? கல்யாணமாகி இத்தனை வருஷமாகுது... இன்னும் பயந்தாங்கொளியாவே இருங்க"

"இல்லை ஜெனி.. இப்படி நீ மேக் அப் போடாம இருக்கறதை பார்த்து பேய் எல்லாம் பயந்து போச்சுனா என்ன பண்ணறது. அதுவும் போன வாரம் என் கனவுல ரெண்டு பேயிங்க பேசிக்கிச்சுங்க.. அவன் பொண்டாட்டிய மேக் அப் இல்லாம பார்த்து நாங்களே பயந்துட்டோம்... அவன் அவ்வளவு கொடுமையையும் தாங்கிக்கிறாண்டா... அவன் ரொம்ப தைரியசாலிடாஆஆஆஆனு"

......

இல்லை தம்பி மாதிரி எலக்கியவாதி ஆகிடலாமா?

வைகாசி மாதத்தில் தான் பள்ளிகள் துவங்குவார்கள். எங்க ஊர்ல பாவடை சட்டை போட்ட ஜிகிடியிலிருந்து, பாவடை தாவணி போட்ட ஜிகிடி வரை அனைவருக்கும் ஒரே பள்ளி என்பதால் எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம் தான். அப்படி ஆரம்பிச்சி... அண்ணாச்சிக்கிட்ட இருந்தோ இல்லை அய்யனார்கிட்ட இருந்தோ ஆட்டைய போட்ட ஒரு புத்தகத்தை பத்தி எழுதி முடிச்சிடலாம்...

........

கோவி.கண்ணன் ஸ்டைல்ல ஒரு பதிவு போடலாமா?

1. பிட்டுக்கு மண் சுமந்த சிவன் இன்று பிட்டு(PIT)க்கு போட்டோ அனுப்பாதது ஏன்?

2. மன்னராட்சியில் பல அவதாரங்களை எடுத்து இறைவன் ஏன் மக்களாட்சியில் எதுவும் எடுப்பதில்லை. முதல் இரண்டு வர்ணங்களில் அவதாரம் எடுத்த கடவுள் ஏன் சூத்திரனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டவில்லை? மன்னனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டியது சாதனையா? வாழ்ந்து காட்ட நினைத்தால் சூத்திரனாக அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டியிருக்க வேண்டியது தானே? இல்லை இன்று மக்களாட்சியில் அவதாரம் எடுத்து வாழ்ந்து காட்டட்டுமே.

3. பெண்களின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையானு ஒரு மொன்ன கேள்விக்கு பதில் சொல்ல வந்த கடவுள் இன்னைக்கு இருக்கற உணவு பற்றாக்குறைக்கும், விலை வாசி உயர்வை கட்டுபடுத்தவும் பதில் சொல்ல வரது? அட்லீஸ்ட் கடவுள் இருக்காரா இல்லையாங்கற கேள்விக்கு பதில் சொல்ல வரட்டுமே.

4. தமிழோடு விளையாடும் கடவுள் ஏன் ஆங்கிலம், பிரென்ச், மலாய், ஸ்பானிஷோடு எல்லாம் விளையாடவில்லை? தமிழ் என்ன புட் பாலா, கிரிக்கெட்டா அதுக்கூட விளையாடறதுக்கு?

..........

ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு பதிவு போடலாமா? (சி - சில்க் ஸ்மிதா, டி- டிஸ்கோ சாந்தி)

...........

மங்களூர் சிவா எழுதற ஒவ்வொரு முத்தம் கவுஜைக்கும் இரத்தம் 1, யுத்தம் 2, சத்தம் 3 னு பதில் கவுஜ எழுதலாமா?

..........

இதெல்லாம் இருக்கட்டும்... நீ முதல்ல அந்த தொடர்கதையை எழுதி போடுனு சொல்லிடாதீங்க மக்கா... கண்டிப்பா இந்த வாரத்துக்குள்ள எழுதி முடிக்க முயற்சி பண்றேன்...

70 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க வாங்க வாங்க

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு//

சி தான்! சி தான்! சி தான்! :-)
இதுல மட்டும் சர்வேசன் கூட ஜிரா கட்சி தான்! :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க வாங்க வாங்க//

நீங்க கூப்பிடற தோறனையை பார்த்தா

அடி வாங்க... வாங்க வாங்கனு கூப்பிடற மாதிரி இருக்கு ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)//

ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி உங்களோட "அந்த" பதிவுக்கு பின்னூட்டத்துக்கு பதில் சொல்லும் போது பார்த்திருப்பீங்க ;)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு//

டிபிசிடி, எங்க இருந்தாலும் மேடைக்கு வராதீங்க! வெட்டி என்னன்மோல்லாம் வச்சிருக்காரு! :-)

//அவன் பொண்டாட்டிய மேக் அப் இல்லாம பார்த்து நாங்களே பயந்துட்டோம்... அவன் அவ்வளவு கொடுமையையும் தாங்கிக்கிறாண்டா... அவன் ரொம்ப தைரியசாலிடாஆஆஆஆனு//

இது வினையூக்கி இல்லை! வெட்டியூக்கி! :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு//

சி தான்! சி தான்! சி தான்! :-)
இதுல மட்டும் சர்வேசன் கூட ஜிரா கட்சி தான்! :-)//

டிஸ்கோ சாந்திக்கு யாரும் ஆதரவு இல்லையா இங்க???

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு//

டிபிசிடி, எங்க இருந்தாலும் மேடைக்கு வராதீங்க! வெட்டி என்னன்மோல்லாம் வச்சிருக்காரு! :-)
//

இதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? இது கொத்ஸ் போஸ்டோட உல்டா ;)

//
//அவன் பொண்டாட்டிய மேக் அப் இல்லாம பார்த்து நாங்களே பயந்துட்டோம்... அவன் அவ்வளவு கொடுமையையும் தாங்கிக்கிறாண்டா... அவன் ரொம்ப தைரியசாலிடாஆஆஆஆனு//

இது வினையூக்கி இல்லை! வெட்டியூக்கி! :-)//

அப்ப பதிவை படிச்சி நீங்க பயப்படலியா? பேய் கதை முதல் தடவையா முயற்சி செஞ்சிருக்கேன்.. இப்படி சொல்லிட்டீங்களே...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் ஸ்டைல்ல//

இதுக்கு மட்டும் பேஸ் கூடப் பயமா இருக்குப்பா!

இருங்க....
மொதல்ல, திருமூலர் சிந்து புல் வெளி நாகரீகத்துல, புல் தரையில படுத்துக்கிட்டே போட்ட பதிவு ஒன்னு இருக்கு! அதப் படிச்சிட்டு தரவு எடுத்துக்கிட்டு ஒஸ்தாவு!

// தமிழோடு விளையாடும் கடவுள் ஏன் ஆங்கிலம், பிரென்ச், மலாய், ஸ்பானிஷோடு எல்லாம் விளையாடவில்லை?//

அதானே!
தமிழ்க் கடவுள்-னா தமிழோட மட்டும் தான் வெளையாடனுமா என்ன?
இல்லை தமிழோடு விளையாடியவர்கள் மட்டும் தான் தமிழ்க் கடவுள்களா?

ஒன்னுமே புரியலை சாமி!
கோவி அண்ணா - புதசெவி! ஐயோ வேணாம்! இப்ப அதுக்கு மீனிங் மாறிப் போச்சு! :-)

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு//

சி தான்! சி தான்! சி தான்! :-)
இதுல மட்டும் சர்வேசன் கூட ஜிரா கட்சி தான்! :-) //

ஹி ஹி இந்த விஷயத்துல தமிழ்நாடே நம்ம கட்சீலதான் இருக்கு. :) ஆந்திரா மலையாளம் எல்லாம் வெளியில இருந்து ஆதரவு குடுக்குது. வடக்கு மட்டுந்தான் ஹெலன் ஹெலன்னு எடக்கு பண்ணுது. :D

குமரன் (Kumaran) said...

//புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு அப்படினு யாராவது திட்டினா //

சொன்னா நம்ப மாட்டீங்க. இப்படி எல்லாம் என் பதிவுல வந்து இராகவன் திட்டியிருக்காரு. பாருங்க.

http://koodal1.blogspot.com/2008/06/blog-post_10.html

இலவசக்கொத்தனார் said...

//உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)//

ரிப்பீட்டேய்!!

இதைச் சொன்ன அவரை மாதிரி 'அந்த' மாதிரி தலைப்பு வெச்சுப் பதிவு போட்டு நூத்துக்கணக்கா பின்னூட்டம் அள்ளலாமா என்ற வரிகள் பதிவில் இல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

//இதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? இது கொத்ஸ் போஸ்டோட உல்டா ;)//

அதெல்லாம் அவரு படிக்க மாட்டாரு. அதனால அவருக்குத் தெரியாது!!

இலவசக்கொத்தனார் said...

வினையூக்கி கதை சூப்பர். சொந்த அனுபவமோ? :P

(தங்கமணி பின்னூட்டமெல்லாம் படிப்பாங்க இல்ல?) :))

இலவசக்கொத்தனார் said...

கும்ஸ், இங்க வந்து அவ்வளவு பழைய பதிவோட மறுபதிப்புக்கு போஸ்டர் ஒட்டிக்கிறது எல்லாம் ரூ மச்.

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜி.ரா மாதிரி சி.யா டி.யா?னு//

சி தான்! சி தான்! சி தான்! :-)
இதுல மட்டும் சர்வேசன் கூட ஜிரா கட்சி தான்! :-) //

ஹி ஹி இந்த விஷயத்துல தமிழ்நாடே நம்ம கட்சீலதான் இருக்கு. :) ஆந்திரா மலையாளம் எல்லாம் வெளியில இருந்து ஆதரவு குடுக்குது. வடக்கு மட்டுந்தான் ஹெலன் ஹெலன்னு எடக்கு பண்ணுது. :D//

அப்ப தைரியமா தமிழ்நாடே என் பின்னாலனு நீங்க சொல்லலாம் ;)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு அப்படினு யாராவது திட்டினா //

சொன்னா நம்ப மாட்டீங்க. இப்படி எல்லாம் என் பதிவுல வந்து இராகவன் திட்டியிருக்காரு. பாருங்க.

http://koodal1.blogspot.com/2008/06/blog-post_10.html//

அப்ப ஜி.ரா தான் இந்த விளக்கம் கொடுத்தாருனு கொத்ஸ்கிட்ட பிடிச்சி கொடுத்திடலாமா? ;)

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...

//உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)//

ரிப்பீட்டேய்!!

இதைச் சொன்ன அவரை மாதிரி 'அந்த' மாதிரி தலைப்பு வெச்சுப் பதிவு போட்டு நூத்துக்கணக்கா பின்னூட்டம் அள்ளலாமா என்ற வரிகள் பதிவில் இல்லாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

அவரை பத்தி அந்த மாதிரி மேட்டரோட ஒண்ணு எழுதினேன். அவர் ஃபீல் பண்ணதால தூக்கியாச்சி :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வினையூக்கி கதை சூப்பர். சொந்த அனுபவமோ? :P

(தங்கமணி பின்னூட்டமெல்லாம் படிப்பாங்க இல்ல?) :))//

ஏன் இந்த கொலைவெறி???

பேய் கதை எழுதற வினையூக்கி மட்டும் சொந்த கதையா எழுதறாரு??? இதெல்லாம் கற்பனை தான் ;)

வெட்டிப்பயல் said...

// இலவசக்கொத்தனார் said...

கும்ஸ், இங்க வந்து அவ்வளவு பழைய பதிவோட மறுபதிப்புக்கு போஸ்டர் ஒட்டிக்கிறது எல்லாம் ரூ மச்.//

ரிப்பீட்டே!!!

வெட்டிப்பயல் said...

கொத்ஸ்,
அந்த அமெரிக்கன் ஸ்டைல்ல நீங்க போட்ட தேதியை பத்தி எதுவும் சொல்லலை? ;)

rapp said...

அமாங்க அடிக்கடி கொஞ்சம் வந்து பதிவ போட்டுட்டு போங்க.

Sridhar Narayanan said...

எல்லாரையும் பத்தி சொன்னீங்க. உங்க நன்பரை மட்டும் விட்டுட்டீங்களே.

சூப்பர்மேன் - விஷாலும் ஜட்டிப் போட்ட ஜல்லிகளும்

சிங்கமா? அசிங்கமா? - ச்சே! ச்சே 'அது' இல்ல 'இது'

இந்த மாதிரி பத்து பக்கத்துக்கு ஒரு பதிவு போட்டிங்கன்னா, 100 பின்னூட்டம் உறுதி. :-))

கப்பி பய said...

:))))

பினாத்தல் சுரேஷ் said...

//இல்லை ஜெனி.. இப்படி நீ மேக் அப் போடாம இருக்கறதை பார்த்து பேய் எல்லாம் பயந்து போச்சுனா என்ன பண்ணறது. //

மேட்டர் என்னவோ இவ்வளவுதான். ஆனா அதை நேரடியா சொன்னா என்னாகுமோன்ற பயத்துல மத்ததெல்லாம் சப்போர்ட்டுக்கு.. என்ன சொல்றீங்க வெட்டி?

அப்பாலே, ரவி, கொத்ஸ் சொன்ன //உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)//வுக்கு ரிப்பீட்டிக்கிறேன்.

Udhayakumar said...

//3. பெண்களின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையானு ஒரு மொன்ன கேள்விக்கு பதில் சொல்ல வந்த கடவுள் இன்னைக்கு இருக்கற உணவு பற்றாக்குறைக்கும், விலை வாசி உயர்வை கட்டுபடுத்தவும் பதில் சொல்ல வரது? அட்லீஸ்ட் கடவுள் இருக்காரா இல்லையாங்கற கேள்விக்கு பதில் சொல்ல வரட்டுமே.///

இது சூப்பர்...

வெட்டிப்பயல் said...

//rapp said...

அமாங்க அடிக்கடி கொஞ்சம் வந்து பதிவ போட்டுட்டு போங்க.//

இனிமே போட்டு தாக்குவோம் ;)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...

எல்லாரையும் பத்தி சொன்னீங்க. உங்க நன்பரை மட்டும் விட்டுட்டீங்களே.
//

யார் அது??? நிறைய பேரை விட்டிருக்கேனே...

// சூப்பர்மேன் - விஷாலும் ஜட்டிப் போட்ட ஜல்லிகளும்

சிங்கமா? அசிங்கமா? - ச்சே! ச்சே 'அது' இல்ல 'இது'

இந்த மாதிரி பத்து பக்கத்துக்கு ஒரு பதிவு போட்டிங்கன்னா, 100 பின்னூட்டம் உறுதி. :-))//

இந்த மாதிரி ஒண்ணு எழுதினேன்... அவரு நொம்ப ஃபீல் ஆகிட்டாருனு தூக்கியாச்சு :-)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:))))//

:)))))

வெட்டிப்பயல் said...

//பினாத்தல் சுரேஷ் said...

//இல்லை ஜெனி.. இப்படி நீ மேக் அப் போடாம இருக்கறதை பார்த்து பேய் எல்லாம் பயந்து போச்சுனா என்ன பண்ணறது. //

மேட்டர் என்னவோ இவ்வளவுதான். ஆனா அதை நேரடியா சொன்னா என்னாகுமோன்ற பயத்துல மத்ததெல்லாம் சப்போர்ட்டுக்கு.. என்ன சொல்றீங்க வெட்டி?
//
ஹா ஹா ஹா...
நல்ல கற்பனை ;)

// அப்பாலே, ரவி, கொத்ஸ் சொன்ன //உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)//வுக்கு ரிப்பீட்டிக்கிறேன்.//

ரிட்டர்ன் ஆப் வெட்டி இனிமே பார்ப்பீங்க ;)

கயல்விழி முத்துலெட்சுமி said...

:))

தம்பி said...

இதெல்லாம் வேணாம்பா எதுக்கு அடுத்தவங்கள பாத்து எழுதிகிட்டு உனுக்கு என்ன வருதோ அத நல்லா செய்தா நல்ல பேர் கிடைக்கும். தொடர்கதை எழுதறல சூரப்புலியாச்சே. அதனால தொடர்கதைய மொதல்லமுடிக்கணும். லட்சக்கணக்கான வாசகர்கள் தவிக்கிறாங்கல்ல.

தம்பி said...

எழுதனுதுல கோவி கண்ணன் ஸ்டைல் டாப்பு.

இராம்/Raam said...

/ கப்பி பய said...

:))))//

ரீப்பிட்டேய்...


//இவ்வளவு தூரம் வந்துட்டு எதுவும் சொல்லாம போனா எப்படி?//

அதுதான் சொல்லிட்டோம்'லே... :)

கிரி said...

நீங்க சொல்ல கூடாதுன்னு கூறினாலும்..நாங்க கூறுவோம்..சீக்கிரம் கதைய போடுங்க :-)))

ச்சின்னப் பையன் said...

நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு புதரகத்திலே பேசிக்கறாங்க... ஏன் நீங்க ஒரு கவிதைத்தொகுப்பு எழுதக்கூடாது???

PPattian : புபட்டியன் said...

தொடக்கிறதுக்கு துண்டு குடுப்பீங்களா?

வெட்டிப்பயல் said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

:))//

:)))

(Smileyku smiley)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

இதெல்லாம் வேணாம்பா எதுக்கு அடுத்தவங்கள பாத்து எழுதிகிட்டு உனுக்கு என்ன வருதோ அத நல்லா செய்தா நல்ல பேர் கிடைக்கும். //
தம்பி,
இன்னுமா என்னை நம்பிட்டு இருக்க... நான் எப்படி அவுங்க மாதிரி எழுத முடியும்... வினையூக்கி கதை அப்படியா இருக்கும்? எல்லாம் சும்மா .... லுல்லு லாயிக்கு ;)

//தொடர்கதை எழுதறல சூரப்புலியாச்சே. அதனால தொடர்கதைய மொதல்லமுடிக்கணும். லட்சக்கணக்கான வாசகர்கள் தவிக்கிறாங்கல்ல.//

இது டூ மச்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும் ;)

வெட்டிப்பயல் said...

//Udhayakumar said...

//3. பெண்களின் கூந்தலுக்கு மணம் இயற்கையா செயற்கையானு ஒரு மொன்ன கேள்விக்கு பதில் சொல்ல வந்த கடவுள் இன்னைக்கு இருக்கற உணவு பற்றாக்குறைக்கும், விலை வாசி உயர்வை கட்டுபடுத்தவும் பதில் சொல்ல வரது? அட்லீஸ்ட் கடவுள் இருக்காரா இல்லையாங்கற கேள்விக்கு பதில் சொல்ல வரட்டுமே.///

இது சூப்பர்...//

டாங்கிஸ் உதய் :-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

எழுதனுதுல கோவி கண்ணன் ஸ்டைல் டாப்பு.//

டாங்கிஸ் தம்பி ;)

அடுத்து ஊருக்கு எப்ப?

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

/ கப்பி பய said...

:))))//

ரீப்பிட்டேய்...
//

:))))))

//
//இவ்வளவு தூரம் வந்துட்டு எதுவும் சொல்லாம போனா எப்படி?//

அதுதான் சொல்லிட்டோம்'லே... :)//

சூப்பர்.. எப்பவும் இப்படி சமத்தா இருக்கனும் ;)

வெட்டிப்பயல் said...

//கிரி said...

நீங்க சொல்ல கூடாதுன்னு கூறினாலும்..நாங்க கூறுவோம்..சீக்கிரம் கதைய போடுங்க :-)))//

கண்டிப்பா இன்னைக்கு போட்டுடுவோம் ;)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...

நீங்க கவிதை நல்லா எழுதுவீங்கன்னு புதரகத்திலே பேசிக்கறாங்க... ஏன் நீங்க ஒரு கவிதைத்தொகுப்பு எழுதக்கூடாது???//

கவிதை தானே.. சூப்பரா எழுதுவேன்.. இங்க பாருங்க

"கவிதை"

இதை வேணா ஒரு புக்கா பிரிண்ட் பண்ணி ரிலீஸ் பண்ணுங்க.. ராயல்டி கூட எனக்கு வேண்டாம் ;)

வெட்டிப்பயல் said...

//PPattian : புபட்டியன் said...

தொடக்கிறதுக்கு துண்டு குடுப்பீங்களா?//

இப்படியெல்லாம் கேட்டா மண்டு வேணா பட்டம் கொடுப்பேன்.. ஓ.கேவா?

கோவி.கண்ணன் said...

பாலாஜி அண்ணே...இப்ப தான் பார்த்தேன் புகுந்து வெளையாடி இருக்கிங்க :)


தலைப்பை மட்டும் வைத்துவிட்டு கிறுக்கு தனமாக(வே) யோசித்தால் பதிவு எழுத மேட்டவர் அருவியாக வந்து கொட்டும்னு சொல்லுவாங்க (யாருன்னு கேட்காதிங்க), இந்த பதிவைப் படிச்சா சரிதான்னு ( சரிதா அல்ல) தோணுது !
:))))))))))

கோவி.கண்ணன் said...

//அட்லீஸ்ட் கடவுள் இருக்காரா இல்லையாங்கற கேள்விக்கு பதில் சொல்ல வரட்டுமே.//

அட நான் (கூட) இந்த மாதிரி யோசிச்சதே இல்லை. சூப்பர்
:)

கோபிநாத் said...

;))

அபி அப்பா said...

என்னாத்த சொல்ல!!!

அபி அப்பா said...

இருங்க 50 மில்லி அடிச்சுக்கறேன்:-)))

Boston Bala said...

:)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

பாலாஜி அண்ணே...இப்ப தான் பார்த்தேன் புகுந்து வெளையாடி இருக்கிங்க :)
//
அவ்வ்வ்வ்வ்...
நான் எப்படி உங்களுக்கு அண்ணனாவேன்??? தம்பினு சொல்லுங்க...

வர வர பதிவுலகத்துல இருக்கறவங்க எல்லாம் சினிமா ஹீரோயின்ஸ் மாதிரி வயசை குறைச்சிட்டு போறீங்க... இதெல்லாம் நல்லதுக்கில்லை... ஆமா சொல்லிட்டேன் ;)

// தலைப்பை மட்டும் வைத்துவிட்டு கிறுக்கு தனமாக(வே) யோசித்தால் பதிவு எழுத மேட்டவர் அருவியாக வந்து கொட்டும்னு சொல்லுவாங்க (யாருன்னு கேட்காதிங்க), இந்த பதிவைப் படிச்சா சரிதான்னு ( சரிதா அல்ல) தோணுது !
:))))))))))//

நேத்து கொட்டுச்சு.. இப்ப யோசிச்சிட்டு இருக்கேன்.. அடுத்த பதிவுக்கு ;)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

//அட்லீஸ்ட் கடவுள் இருக்காரா இல்லையாங்கற கேள்விக்கு பதில் சொல்ல வரட்டுமே.//

அட நான் (கூட) இந்த மாதிரி யோசிச்சதே இல்லை. சூப்பர்
:)//

அதான் உங்களுக்கு பதில் நான் யோசிச்சிட்டனே ;)

மீதி பாயிண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டீங்க ;)

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...

;))//

;)))

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

என்னாத்த சொல்ல!!!//

என்னாத்த சொல்வேனுங்கோனு பேரரசு பாட்டெல்லாம் பாடுவீங்க போல ;)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

இருங்க 50 மில்லி அடிச்சுக்கறேன்:-)))//

நம்ம ரேஞ்சுக்கு 50 மில்லி எல்லாம் நொம்ப கம்மி இல்ல? :-))))

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

:)//

ரிட்டர்ன் வந்தாச்சா???

மோகன் கந்தசாமி said...

ஹலோ வெட்டிப்பயல்,
எழுத எதுவும் தோனலன்னா, ஒவ்வொரு பதிவர்கிட்டையும் ஒரு பதிவை வாங்கி , அவங்க பேர போட்டு உங்க வலைப்பூவில் பதிவிட்டுடுங்க.

வெட்டிப்பயல் said...

//மோகன் கந்தசாமி said...

ஹலோ வெட்டிப்பயல்,
எழுத எதுவும் தோனலன்னா, ஒவ்வொரு பதிவர்கிட்டையும் ஒரு பதிவை வாங்கி , அவங்க பேர போட்டு உங்க வலைப்பூவில் பதிவிட்டுடுங்க.//

ஆஹா.. இப்படி ஒரு அற்புதமான சிந்தனை நமக்கு தோணாம போயிடுச்சே...

மதுரையம்பதி said...

//இதெல்லாம் இருக்கட்டும்... நீ முதல்ல அந்த தொடர்கதையை எழுதி போடுனு சொல்லிடாதீங்க மக்கா... கண்டிப்பா இந்த வாரத்துக்குள்ள எழுதி முடிக்க முயற்சி பண்றேன்...//

ரீப்பிட்டே!!!

தலைப்பை படிச்சுட்டு வேகமா எதைச் சொல்ல நினைச்சு வந்தேனோ, அத நீங்களே சொல்லிட்டீங்க....:))

Anonymous said...

வெட்டி அரட்டையில் கொஞ்சம் தமிழுணர்வை கலந்தால் என்ன?
ஒரு தமிழ்த்தேசத்தின் உணர்வுகளை கலந்தால் என்ன?
ஏனென்றால் வெட்டியாகவிருப்பதில் பயனில்லை

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அனானி ஐயா தமிழுணர்வும் தமிழுணவும் பற்றிப் பகர்ந்தமையால் வந்த பின்னூட்டும் ஈது!

//அப்ப தைரியமா தமிழ்நாடே என் பின்னாலனு நீங்க சொல்லலாம் ;)
//

தமிழ்நாட்டைப் பின்னுக்குத் தள்ளிய ஜிரா வீழ்க!
(எங்க வீழ்க-ன்னு எல்லாம் கேக்காத பாலாஜி! அதான் சி-யா டி-யா-ன்னு போட்டு இருக்கியே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? இது கொத்ஸ் போஸ்டோட உல்டா ;)//

புதசெவி=Intellectual Property Rights=One & only TBCD
:-)

//கொத்ஸ்,
அந்த அமெரிக்கன் ஸ்டைல்ல நீங்க போட்ட தேதியை பத்தி எதுவும் சொல்லலை? ;)//

அதெல்லாம் அவரு படிக்க மாட்டாரு. அதனால அவருக்குத் தெரியாது!! :-)))

SurveySan said...

வெட்டி, இந்தா புடிங்க ஐடியா. இப்பதான், சுடச் சுட, குமரன், கே.பதிலுக்கு போட்டுட்டு வாரேன்.


2) உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க. ( இத ஒரு தொடரா மாத்தலாம்னு பாக்கறேன். சோ, காப்பிரைட் என்னுது:) )

மங்களூர் சிவா said...

/
மங்களூர் சிவா எழுதற ஒவ்வொரு முத்தம் கவுஜைக்கும் இரத்தம் 1, யுத்தம் 2, சத்தம் 3 னு பதில் கவுஜ எழுதலாமா?
/

அவ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

/
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
உங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேனே? :-)

/

:))))))))))))

மங்களூர் சிவா said...

/
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//புதசெவி - புண்ணாக்கு தவிடு செருப்பு விளக்குமாரு//

டிபிசிடி, எங்க இருந்தாலும் மேடைக்கு வராதீங்க! வெட்டி என்னன்மோல்லாம் வச்சிருக்காரு! :-)

/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

டிஸ்கோ சாந்திக்கு யாரும் ஆதரவு இல்லையா இங்க???
/

நயந்தாரா , பாவனாவுக்குதான் வலைப்பதிவர் ஆதரவு எல்லாம்!!!

மங்களூர் சிவா said...

/
இலவசக்கொத்தனார் said...
வினையூக்கி கதை சூப்பர். சொந்த அனுபவமோ? :P

(தங்கமணி பின்னூட்டமெல்லாம் படிப்பாங்க இல்ல?) :))

/

ர்ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்டே

மங்களூர் சிவா said...

/
பினாத்தல் சுரேஷ் said...
//இல்லை ஜெனி.. இப்படி நீ மேக் அப் போடாம இருக்கறதை பார்த்து பேய் எல்லாம் பயந்து போச்சுனா என்ன பண்ணறது. //

மேட்டர் என்னவோ இவ்வளவுதான். ஆனா அதை நேரடியா சொன்னா என்னாகுமோன்ற பயத்துல மத்ததெல்லாம் சப்போர்ட்டுக்கு.. என்ன சொல்றீங்க வெட்டி?
/

எல்லாரும் கரிக்குட்டா பாயிண்டுக்கு வந்திடறாங்கப்பா அதனால இதுக்கும் ஒரு


ரிப்பீட்டு