தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, April 18, 2008

"அகில இந்திய"(?) சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் முதல்வரானால்

நேத்து Gaptain முதலமைச்சரானா என்ன பண்ணுவாருனு எழுதனதை பார்த்துட்டு 2011ல நாங்க தான் ஆட்சியை பிடிப்போம்னு சொல்லிட்டு திரியற கூட்டத்துல முக்கியமான ஆளான "அகில இந்திய"(?) சமத்துவ கட்சி தலைவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் போன் பண்ணி வருத்தப்பட்டார்... சரி அவருக்கும் ஒண்ணு எழுதிடுவோம். நம்ம ஊரு மக்களை நம்ப முடியாது. நாளைக்கு அவரே முதலமைச்சரானாலும் ஆகலாம்.

"My child and your child are playing with Our Child"னு வெள்ளைக்காரன பத்தி அடிச்ச ஜோக்க நம்ம ஊருக்கே கொண்டு வந்து சேர்த்த பெருமை உங்களை தானுங்க சேரும். அதனால தமிழ்நாட்டை இனிமே இங்கிலீஷ் நாடுனு பேர் மாத்திடலாம்.

இனிமே எந்த ஊர்லயும் நீதிமன்றம் கிடையாது. ஒன்லி பாஞ்சாயத்து.

நோ ஜட்ஜஸ்... ஒன்லி நாட்டாமைஸ்.

நாட்டாமை தப்பா தீர்ப்பு சொன்னா அப்படியே ஹார்ட் அட்டாக்ல செத்துடனும். இல்லைனா சாக வெச்சிடுவாரு.

நாட்டாமையை யாராவது கொன்னா அவுங்களை அந்த ஊரை விட்டு தள்ளிவெச்சிடுவாங்க. அது பக்கத்து ஊரு காரனா இருந்தாலும் அதே தண்டனை தான். (ஏன்டா தமிழ்நாட்ல வேற ஊரே இல்லையானு கேள்வி கேக்க கூடாது)

கர்நாடகால யாராவது பிரச்சனை பண்ணா தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் மதியானம் ரெண்டு மணில இருந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கனும். குறிப்பா கர்நாட்ல இருந்து இங்க வந்திருக்கவங்க அதுல கலந்துக்கனும்.

ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)

இதுக்கு மேல நீங்க உங்களுக்கு தோன்றதை சொல்லுங்க...

சங்கம் ரெண்டு போட்டில கலந்துக்கிட்டீங்களா??? சீக்கரம் யோசிச்சி கலந்துக்கோங்க மக்கா...

16 comments:

வந்தியத்தேவன் said...

யாரும் அம்மாவை அம்மா என்றழைக்ககூடாது சித்தி என்றுதான் அழைக்கவேண்டும்

TBCD said...

இதை சொன்னது ஷோபா டே என்னும் ஆங்கில இந்திய பத்தி எழுத்தாளர்...நன்றி.. :)

//"My child and your child are playing with Our Child"//

நையாண்டி நைனா said...

/*கர்நாடகால யாராவது பிரச்சனை பண்ணா தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் மதியானம் ரெண்டு மணில இருந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கனும். குறிப்பா கர்நாட்ல இருந்து இங்க வந்திருக்கவங்க அதுல கலந்துக்கனும்.

ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)
*/
இதை விட பெரிய தண்டனையா கர்நாடககாரங்களுக்கு யாராலும் கொடுக்க முடியாது...
எனவே எனது ஒட்டு அண்ணன் சரத்துகுமாருக்கே........

Syam said...

யாராவது லஞ்சம் வாங்காம இருந்தா தோல உரிச்சு புடுவாறு உரிச்சு... :-)

Shanmughapriya said...

ippo enna solla vareenga!

இராம்/Raam said...

டெய்லி சட்டசபைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி சொம்புலே தண்ணி வாங்கி குடிச்சிட்டுதான் கிளம்புவாரு.... ஏன்னா அவங்க அப்பா அப்பிடிதானே சொல்லியிருக்காரு......

வெட்டிப்பயல் said...

//வந்தியத்தேவன் said...

யாரும் அம்மாவை அம்மா என்றழைக்ககூடாது சித்தி என்றுதான் அழைக்கவேண்டும்//

இவரே கொஞ்ச நாளைக்கு முன்னாடி அம்மா அம்மானு தானே சொல்லிட்டு இருந்தாரு ;)

வெட்டிப்பயல் said...

// TBCD said...

இதை சொன்னது ஷோபா டே என்னும் ஆங்கில இந்திய பத்தி எழுத்தாளர்...நன்றி.. :)

//"My child and your child are playing with Our Child"////

தகவலுக்கு நன்றி தலைவா...

வெட்டிப்பயல் said...

//இதை விட பெரிய தண்டனையா கர்நாடககாரங்களுக்கு யாராலும் கொடுக்க முடியாது...
எனவே எனது ஒட்டு அண்ணன் சரத்துகுமாருக்கே........//

என்ன மதியம் ரெண்டு மணில இருந்து அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கறதா?

வெட்டிப்பயல் said...

//Syam said...

யாராவது லஞ்சம் வாங்காம இருந்தா தோல உரிச்சு புடுவாறு உரிச்சு... :-)//

யாராவது லஞ்சம் கொடுக்காம இருந்தா தோல உரிச்சு புடுவாருனு சொல்லாம விட்டீங்களே :-)

வெட்டிப்பயல் said...

//Shanmughapriya said...

ippo enna solla vareenga!//

பதிவை படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

டெய்லி சட்டசபைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி சொம்புலே தண்ணி வாங்கி குடிச்சிட்டுதான் கிளம்புவாரு.... ஏன்னா அவங்க அப்பா அப்பிடிதானே சொல்லியிருக்காரு......//

ஆமாம்... அதை மிஸ் பண்ணிட்டனே :-)

PPattian : புபட்டியன் said...

எல்லா தம்பிகளும், அண்ணன் கிட்ட கை கட்டி, பவ்யமாதான் பேசனும். (இல்ல, தள்ளி வைப்புதான்)

தப்பு பண்றவங்களுக்கு 14 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்வியிலயும் தப்பா சொல்ல சொல்ல தண்டனை அதிகரிக்கும். 14 கேள்வியும் தப்பாயிட்டா தூக்குதான். எல்லாம், "கோன் பனேகாவை" காப்பியடிச்ச "கோடீஸ்வரன்" பாணியிலதான்.

Sathiya said...

தமிழ்நாட்டுல யாருமே 'ஏய்' என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது. அப்படி மீறி உபயோகிச்சா, நமிதாவே முன்னாடி வந்து டான்ஸ் ஆடுனாலும் கண்ணை மூடிகிட்டு தவம் இருக்கணும்.

தமிழ்நாட்டுல ஒரு ஏழை கூட இருக்க கூடாது. அப்படி இருந்தா, அவங்களுக்கு ஒரு பாட்ட போட்டுட்டு, அது முடியறதுக்குள்ள எப்படி பணக்காரனா ஆகறதுன்னு சொல்லி கொடுத்துடுவாரு.

ஒவ்வொரு தொழிலாளியும் அவங்க முதலாளி வீட்டுல யார் என்ன தப்பு செஞ்சாலும், அந்த பழிய தானே ஏத்துகிட்டு ஜெயிலுக்கு போயிடனும். முடிஞ்சா ஒரு வாரிச பெத்து போட்டு அவனையும் கூலிகாரனாவே வளர்க்கணும். தப்பி தவிரி கூட படிக்க வச்சுட கூடாது.

நையாண்டி நைனா said...

/*ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)
*/
இதை விட பெரிய தண்டனையா கர்நாடககாரங்களுக்கு யாராலும் கொடுக்க முடியாது...
எனவே எனது ஒட்டு அண்ணன் சரத்துகுமாருக்கே........

Vijaygopalswami said...

பாட்டு: நாட்டாம கையசஞ்சா அந்த வெள்ளாம வெளயுமடி
நாட்டாம பாதம் பட்டா மாசம் நாலு மழை பொழியுமடி

(பெரிய நாட்டாம்மை விஜயகுமார் சாரட்டை விட்டு இறங்குகிறார்)

நியாயம்டா, நீதியிடா, நேர்மைடா, என் கெரகம்டா, இப்புடி ஒரு பஞ்சாயத்துடா.

கஞ்சிக்கில்லாத சனம் கா வயித்துக்காவது சாப்புடோனும்னு தானடா கிலோ அரிசி ரெண்டு ருவாய்க்கு தருது அரசாங்கம். மதியானம் ரெண்டுலேந்து அஞ்சு உண்ணாவிரதம்னு சொல்லி அதையும் திங்கவுட மாட்டேங்கிறியேடா.

ஒளச்சு களச்ச சனம் கொஞ்சமாவது சந்தோசமா இருக்கட்டும்னு தானடா இலவசமா டிவி குடுத்துச்சு அரசாங்கம். அதுல நாள் பூரா ஒன்ற பொஞ்சாதியவே பாக்க சொல்றியே, இது என்றா நியாயம். கருத்தில்லாத நாயே கண்ணு போயிரும்டா.

இப்போ சொல்றேண்டா தீர்ப்பு. எந்த வூட்லயும் ராத்திரி ஒம்போதரைலேந்து பத்து டிவி ஓடக்கூடாது டா. அப்புடியே ஓடுனாலும் சன் டிவி ஓடக்கூடாதுடா. மீறி எவனாவது பாத்தான், அவன பதினெட்டு வருசம் ஊரவுட்டு தள்ளிவச்சிருவேண்டா.

நாட்டாம்மை தீர்ப்ப மாத்திச் சொல்லு... (அலறுகிறார் கலாநிதி மாறன்)

நாட்டாம்ம தீர்ப்பு சொன்னா சொன்னதுதாண்டா. சண்முகம் வுடுறா போகட்டும்...

(பிண்ணனியில் மீண்டும் அதே பாடல்)