தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, April 08, 2008

அண்ணே அண்ணே... சத்யராஜ் அண்ணே!!!

அண்ணே! புரட்சி தமிழன் சத்யராஜ் அண்ணே! அன்னைக்கு உண்ணாவிரத கூட்டத்துல பட்டையை கிளப்பி பேசனீங்கண்ணே.

அதுவும் ஆரம்பமே அசத்தல் தான். நான் யார் பேரையும் சொல்லி கைத்தட்டல் வாங்க தேவையில்லை. அதுக்கு நாக்கை புடுங்கிட்டு செத்து போயிடுவேனு. அதிலயும் அதிகமா சம்பளம் வாங்கறவங்க பேரை சொன்னா அதிகமா கைத்தட்டல் கிடைக்கும் அதை விட கொஞ்சம் கம்மியா வாங்கறவங்க பேர் சொன்னா அதைவிட கொஞ்சம் கம்மியா கைத்தட்டல் கிடைக்கும்னு. இது தாண்ணே அதுல ஹை லைட்டே.

உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு தமிழன் இருக்கான்யா. நீங்க மத்தவங்களை தலைக்கு மேல தூக்கி வெச்சிட்டு ஆடறத நிறுத்துங்க இப்படினு சொல்றதுக்கு முன்னாடிதான் உங்க தலைவர் ம.கோ.ராமச்சந்திரன் எப்படி சிக்கன், மட்டன் எல்லாம் சாப்பிட்டு புத்திசாலித்தனமா காவேரி தண்ணிய கொண்டு வந்தாருனு பேசனீங்க. அவர் மட்டும் மலையாளி இல்லையா? அவரும் ஒரு காலத்துல எல்லாத்தையும் விட அதிக சம்பளம் வாங்கிட்டு இருந்த நடிகர் தானே?

தமிழ்நாட்டுக்கு ராமர் வேண்டாம், "ராகவேந்திரா" வேண்டாம், ஐய்யப்பன் வேண்டாம்னு சொன்னீங்களே அதே மாதிரி வீட்ல தெலுங்கு பேசிட்டு இருந்த பகுத்தறிவு பகலவன் ஈ.வே."ராமசாமி"யும் வேண்டாம்னு சொல்லிடலாமா?

இவ்வளவு பேசற நீங்க தயாரிச்ச லீ படத்துல மட்டும் எதுக்குண்ணே வடநாட்டு கதாநாயகி "நிலா"வை போட்டீங்க? ஒரு தமிழ் கதாநாயகியை தேர்ந்தெடுக்க வேண்டியது தானே? அது டைரக்டர் சாய்ஸ்னா, நீங்க டைரக்ட் பண்ண வில்லாதி வில்லன்ல கதாநாயகி நக்மா.

இந்த உண்ணாவிரதத்துக்கு முன்னாடி "தமிழில் சோறு திண்ணும்" கலைஞர்கள் எல்லாம் பங்கேற்கனும்னு சொன்னீங்களே. இப்ப இயக்குனர் இமயம் பாரதிராஜாவை தமிழன் இல்லைனு தள்ளி வெச்சிடுவீங்களா? (அவரே தமிழன் இல்லைனா உங்க கூட்டத்துல ஒருத்தன் கூட தமிழன் இல்லை)

உங்களுக்கு ரஜினியை திட்டனும்னு தோனுச்சுனா தனியா கூட்டம் போட்டு திட்டுங்க. (அதுக்கும் கூட்டம் நல்லா கூடும்). உங்க காழ்ப்புணர்ச்சியை காட்ட அந்த கூட்டம் தான் தேவைப்பட்டுச்சா?

(இவரை சின்ன பெரியார்னு சொல்லி ஏதோ ஒரு வலைப்பதிவுல பார்த்தேன். ஏதோ சின்ன கலைவாணர்னு விவேக்கை சொல்ற மாதிரி நினைச்சிக்கிட்டாங்கனு நினைக்கிறேன். "ஒரு பவுன் 10 ரூபாய் பெறாத அந்த காலத்தில் வருடத்திற்கு 20,000 ஈட்டும் குடும்ப தொழிலை விட்டு நாட்டு விடுதலையில் பங்கு கொண்டவர் பெரியார்". பெரியாரெல்லாம் சூரியன் மாதிரி (ஒண்ணே ஒண்ணு தான்). இதுங்க எல்லாம் மின்மினி கூட கிடையாது.)

48 comments:

இரவு கவி said...

சரியா சொன்னீங்க. அவங்களோட சுய வெறுப்பு காமிக்கரதுக்கு இத பயன்படுத்திகிட்டாங்க. எனக்கு சத்தியராஜ்னா முன்னடி ரொம்ப புடிக்கும். ஆனால் அது இப்போ ரொம்ப குறஞ்சுருச்சு. நான் ஒரு ரஜினி ரசிகன். அதுக்காக இத சொல்லலை.அந்த மாணாடுக்கே சம்மதமில்லாமல் பேசுனதுதான் எனக்கு வருத்தம்.

வெட்டிப்பயல் said...

//இரவு கவி said...

சரியா சொன்னீங்க. அவங்களோட சுய வெறுப்பு காமிக்கரதுக்கு இத பயன்படுத்திகிட்டாங்க. எனக்கு சத்தியராஜ்னா முன்னடி ரொம்ப புடிக்கும். ஆனால் அது இப்போ ரொம்ப குறஞ்சுருச்சு. நான் ஒரு ரஜினி ரசிகன். அதுக்காக இத சொல்லலை.அந்த மாணாடுக்கே சம்மதமில்லாமல் பேசுனதுதான் எனக்கு வருத்தம்.//

அதே தான்... எனக்கும் சத்யராஜ் ரொம்ப பிடிக்கும். அதுவும் அவர் யாருக்கும் பயப்படாம நறுக் நறுக்னு சூப்பரா பேசுவாரு. ஆனா இதுல அவர் ரஜினி எதிர்ப்பு தான் அதிகமா காட்டிய மாதிரி இருந்தது.

SathyaPriyan said...

எனது எண்ணத்தை அப்படியே எழுதியது போல இருந்தது.

வழி மொழிகிறேன்.

ரஜினி ஒன்றும் புனிதர் அல்ல. அவர் ஒரு தேர்ந்த வியாபாரி. அவரிடம் பணம் புழங்குவதை கண்டு மற்ற வியாபாரிகள் அவர் மீது கோபம் கொள்வது நியாயமே.

வெட்டிப்பயல் said...

//ரஜினி ஒன்றும் புனிதர் அல்ல. அவர் ஒரு தேர்ந்த வியாபாரி. அவரிடம் பணம் புழங்குவதை கண்டு மற்ற வியாபாரிகள் அவர் மீது கோபம் கொள்வது நியாயமே.//

ரஜினி ஒரு தேர்ந்த வியாபரி... இது உண்மை.

Anonymous said...

போட்டுத்தாக்கு....
காசு வேற கொள்கை வேற..தொழில் வேற தர்மம் வேற...

உண்மை said...

அண்ணே அண்ணே வெட்டி அண்ணே, ஏனிந்த காட்டம் ?

//அவரிடம் பணம் புழங்குவதை கண்டு மற்ற வியாபாரிகள் அவர் மீது கோபம் கொள்வது நியாயமே.//

இது கோபமா வைதேரிச்சலா ?

நிஜமா நல்லவன் said...

///பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)///


எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.

சக்கரம் said...

http://www.dinamalar.com/2008apr09/events_tn6.asp

Boston Bala said...

எப்பா... சூடு ஜாஸ்தீ... நெத்தியடி!

வியாபாரம் வேற; வாய்ப்பேச்சு வேற என்பது திரைப்படத்தைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தது. அதை இந்த மாதிரி சொற்பொழிவுகள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டார்கள்.

அதிர்ச்சி மதிப்பீடிற்காக பதிவு தலைப்பு வைப்பது போல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க 'சப் குச் சல்தா ஹை'

TBCD said...

இங்க வாங்க வெட்டி,

வெட்டியா ஒரு ஆராய்ச்சி இருக்கு... :)

புகையும் பாறை, சத்யராஜ் : என் கேரட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே..

தஞ்சாவூரான் said...

அந்தக் கூட்டத்தில் தமிழனுக்கு ஓரளவு சுரணை வர்ற மாதிரி பேசுன ஒரு ஆள் சத்தியராஜ். என்னதான் வியாபாரமாயிருந்தாலும், உணர்வுன்னு வரும்போது அதை அவர் காட்டிய விதம் - இந்த சூழ்னிலையில்- ஏற்கத்தக்கதுதான்!

எனக்கும் ரஜினியைப் பிடிக்கும் - அவர் நடிப்பை!

Thamizhmaangani said...

நானும் அந்த வீடியோவை பார்த்தேன். சத்யராஜ் டூடூ மச்!! ஏதோ தன் சொந்த கோபத்தை கொட்டினது மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்பரம் அவரு உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத சில censor வார்த்தைகள் பயன்படுத்தினது ரொம்ப கேவலமா இருந்துச்சு! அது மட்டுமல்லாமல் 'பொண்டாட்டி கூட..' என்று ஒரு மகா கேவலமான உதராணத்தை கூறியது ரெம்ப கேவலமா போச்சு!

அதுக்கு அப்பரம் வந்த ரஜினி 'சத்யம் பேசனும், உண்மைய தான் பேசனும்' என்று ஆவேசப்பட்டது அதவிட காமெடியா இருந்துச்சு! இவங்களும் நல்லாவே அரசியல் பண்ணுறாங்க வெட்டிபயல்!

வெட்டிப்பயல் said...

//BLOGKUT said...

போட்டுத்தாக்கு....
காசு வேற கொள்கை வேற..தொழில் வேற தர்மம் வேற...//

உண்மை தான் இளா...

வெட்டிப்பயல் said...

//உண்மை said...

அண்ணே அண்ணே வெட்டி அண்ணே, ஏனிந்த காட்டம் ?
//

நான் பிரச்ச்னையை பத்தி மட்டும் தான் பேசுவேனு சொல்லி அவர் பேசியது தான் அங்க காமெடி ;)

//
//அவரிடம் பணம் புழங்குவதை கண்டு மற்ற வியாபாரிகள் அவர் மீது கோபம் கொள்வது நியாயமே.//

இது கோபமா வைதேரிச்சலா ?//

//

உங்களுக்கு எப்படி தெரியுது?

வெட்டிப்பயல் said...

// நிஜமா நல்லவன் said...

///பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;)///


எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.//

ரொம்ப நன்றி நிஜமா நல்லவன்.

நான் கூட நிஜமா நல்லவன் தான். ஆனா நீங்க வெட்டிப்பயலானு எனக்கு தெரியாது ;)

வெட்டிப்பயல் said...

// Boston Bala said...

எப்பா... சூடு ஜாஸ்தீ... நெத்தியடி!

வியாபாரம் வேற; வாய்ப்பேச்சு வேற என்பது திரைப்படத்தைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தது. அதை இந்த மாதிரி சொற்பொழிவுகள் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்டார்கள்.
//
ஆமாம் பாபா...

அங்க எல்லாரும் பேசனது பட்டையை கிளப்புச்சி. நம்ம வலையுலகமே தோத்துடும் போல ;)

//
அதிர்ச்சி மதிப்பீடிற்காக பதிவு தலைப்பு வைப்பது போல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க 'சப் குச் சல்தா ஹை'//

அமாரா ஹிந்தி நஹி மாலும்... (இது மட்டும் தான் தெரியும் ;))

வெட்டிப்பயல் said...

//TBCD said...

இங்க வாங்க வெட்டி,

வெட்டியா ஒரு ஆராய்ச்சி இருக்கு... :)

புகையும் பாறை, சத்யராஜ் : என் கேரட்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே..//

வந்தாச்சு.. பதில் தந்தாச்சு ;)

வெட்டிப்பயல் said...

//தஞ்சாவூரான் said...

அந்தக் கூட்டத்தில் தமிழனுக்கு ஓரளவு சுரணை வர்ற மாதிரி பேசுன ஒரு ஆள் சத்தியராஜ். என்னதான் வியாபாரமாயிருந்தாலும், உணர்வுன்னு வரும்போது அதை அவர் காட்டிய விதம் - இந்த சூழ்னிலையில்- ஏற்கத்தக்கதுதான்!

எனக்கும் ரஜினியைப் பிடிக்கும் - அவர் நடிப்பை!//

சத்தமா பேசறதெல்லாம் உணர்ச்சிகரமா பேசறதா? எனக்கு வெறும் காழ்ப்புணர்ச்சியாதான் தெரிஞ்சிது :-)

எனக்கும் சத்யராஜை பிடிக்கும் - அவர் நடிப்பை ;)

வெட்டிப்பயல் said...

//Thamizhmaangani said...

நானும் அந்த வீடியோவை பார்த்தேன். சத்யராஜ் டூடூ மச்!! ஏதோ தன் சொந்த கோபத்தை கொட்டினது மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்பரம் அவரு உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத சில censor வார்த்தைகள் பயன்படுத்தினது ரொம்ப கேவலமா இருந்துச்சு! அது மட்டுமல்லாமல் 'பொண்டாட்டி கூட..' என்று ஒரு மகா கேவலமான உதராணத்தை கூறியது ரெம்ப கேவலமா போச்சு!

அதுக்கு அப்பரம் வந்த ரஜினி 'சத்யம் பேசனும், உண்மைய தான் பேசனும்' என்று ஆவேசப்பட்டது அதவிட காமெடியா இருந்துச்சு! இவங்களும் நல்லாவே அரசியல் பண்ணுறாங்க வெட்டிபயல்!//

அதே அதே...

VSK said...

சத்யராஜ் பேசிய காழ்ப்புணர்ச்சிப் பேசுக்குப் பின் வந்த ரஜினி, 'ஒதைக்க வேண்டாமா இவங்களை' எனப் பேசி கூட்டத்தை அள்ளிச் சென்றது, "இரு கோடுகளை" நினைவு படுத்தியது!

:))))))))

ஆமா, அதுக்கப்புறம், கமலும் சத்யராஜும் என்னமோ சிரிச்சு, சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்களே... அது இன்னா!??
:))

nedun said...

//அதே மாதிரி வீட்ல தெலுங்கு பேசிட்டு இருந்த பகுத்தறிவு பகலவன் ஈ.வே."ராமசாமி"யும் வேண்டாம்னு சொல்லிடலாமா //
நாய்கர் என்றால் தெலுங்கு பேசுவார்கள் என்று அர்த்தமா? வரலாறு தெரியாமல் எழுதாதிர்கள் பெரியார் தெலுங்கு பேசும் நாயகர் அல்ல. எங்கும் தமிழை தவிர வேறு மொழிகளில் பேச வில்லை.
ஆராய்ந்தால் அனுபவிக்கிறேன்

நந்தவனத்தான் said...

//எனக்கும் சத்யராஜை பிடிக்கும் - அவர் நடிப்பை//

அப்புறம் ஏன் இவ்வளவு டென்ஷனாவுறீங்க. கொஞ்சம் ஓவர் ஆக்டு கொடுத்துட்டாரு அவ்வளவுதான்!

Sathiya said...

நல்லா சொன்னீங்க. இந்த "யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போடும்", "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" போன்ற பழமொழிகள் சத்யராஜுக்கு ரொம்ப நல்லாவே பொருந்தும். என் மனசுல மேலோங்கி இருந்தவறு அப்படியே கீழே இறங்கிட்டார். பிரச்சனையை பத்தி மட்டும் தான் பேசுவேன்னு சொல்லிட்டு தேவை இல்லாததெல்லாம் பத்தி பேசிட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை விட்டுருவோம், வீடு தேடி வந்த எதிராளியை கூட வர வேர்க்கறதும் நம் பண்பாடு தான். அந்த மேடையில ரஜினிய பார்த்தா ரொம்ப பாவமா இருந்துச்சு. அவரும் ஒண்ணும் மகான் இல்ல இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். ரஜினி பேசும் போது இதை பத்தி ஒண்ணுமே பேசாம இருந்தது பாராட்டக்கூடியது. நீங்க கேட்ட அந்த "புரட்சி தலைவர் மலையாலீ" என்ற கேள்விக்கு சத்யராஜ் என்ன பதில் சொல்லுவார்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு.

தஞ்சாவூரான் said...

ஒண்ணு மட்டும் தெரியுது, எதுக்கு அடுத்த மாநிலத்துக் காரன்லருந்து, அடுத்த நாட்டுக்காரன்(கள்) வரைக்கும், நம்ம தோள்ல ஏறி உக்காந்துகிட்டு காதுல .... குச்சி விட்டு ஆட்டுறான்னு.

வாழ்க தமிழர்களின் சொரணை..

TBCD said...

திருப்பிச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

//
தஞ்சாவூரான் said...

ஒண்ணு மட்டும் தெரியுது, எதுக்கு அடுத்த மாநிலத்துக் காரன்லருந்து, அடுத்த நாட்டுக்காரன்(கள்) வரைக்கும், நம்ம தோள்ல ஏறி உக்காந்துகிட்டு காதுல .... குச்சி விட்டு ஆட்டுறான்னு.

வாழ்க தமிழர்களின் சொரணை..
//

வெட்டிப்பயல் said...

// தஞ்சாவூரான் said...

ஒண்ணு மட்டும் தெரியுது, எதுக்கு அடுத்த மாநிலத்துக் காரன்லருந்து, அடுத்த நாட்டுக்காரன்(கள்) வரைக்கும், நம்ம தோள்ல ஏறி உக்காந்துகிட்டு காதுல .... குச்சி விட்டு ஆட்டுறான்னு.

வாழ்க தமிழர்களின் சொரணை..//

தஞ்சாவூரான்,
எல்லா பிரச்சனையிலும் தமிழர்கள் ஜெயிச்சிட்டு தான் வராங்க... மலேசியாலயும் இப்ப தமிழர்களுக்கு ஓரளவு பிரச்சனை தீர்ந்திருக்கு. மற்ற இடங்களிலும் தீரும்.

தமிழன் எங்கும் சொரணை கெட்டு அலையவில்லை. அவனுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடியே வருகிறான். எங்கும் அநீதியை பொறுத்து அடங்கி வாழவில்லை. அது எந்த மண்ணாக இருந்தாலும்...

சும்மா ஒருத்தனை திட்டனும்னு ஆசைப்பட்டு சொரணை இல்லைனு சொல்றதெல்லாம் நமக்கே அசிங்கம்...

வெட்டிப்பயல் said...

// TBCD said...

திருப்பிச் சொல்லேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

//
தஞ்சாவூரான் said...

ஒண்ணு மட்டும் தெரியுது, எதுக்கு அடுத்த மாநிலத்துக் காரன்லருந்து, அடுத்த நாட்டுக்காரன்(கள்) வரைக்கும், நம்ம தோள்ல ஏறி உக்காந்துகிட்டு காதுல .... குச்சி விட்டு ஆட்டுறான்னு.

வாழ்க தமிழர்களின் சொரணை..
////

கமெண்ட் பப்ளிஷ் பண்ணி ஒரே நிமிஷத்துல ரிப்பீட்டே போடறீங்க.. F5 பண்ணிட்டே இருந்தீங்களா? (Just Kidding);)

வெட்டிப்பயல் said...

// VSK said...

சத்யராஜ் பேசிய காழ்ப்புணர்ச்சிப் பேசுக்குப் பின் வந்த ரஜினி, 'ஒதைக்க வேண்டாமா இவங்களை' எனப் பேசி கூட்டத்தை அள்ளிச் சென்றது, "இரு கோடுகளை" நினைவு படுத்தியது!

:))))))))
//
எனக்கு தெரிஞ்சி ரஜினி எப்பவுமே கொஞ்சம் லூசுத்தனமா தான் பேசுவாரு. இதுல கொஞ்சம் பரவாயில்லை.

கொஞ்சம் பேர் சொல்லியிருந்தா நல்லா இருந்துருக்கும் :-)

// ஆமா, அதுக்கப்புறம், கமலும் சத்யராஜும் என்னமோ சிரிச்சு, சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்களே... அது இன்னா!??
:))//
அடுத்த படத்தை பத்தி பேசிட்டு இருப்பாங்க :-)

TBCD said...

இல்லிங்கோ, அந்த பின்னுட்டம் தொடர ஒரு வசதி இருக்கே அது பயன்படுத்துறேன்... :)


//
Blogger வெட்டிப்பயல் said...

கமெண்ட் பப்ளிஷ் பண்ணி ஒரே நிமிஷத்துல ரிப்பீட்டே போடறீங்க.. F5 பண்ணிட்டே இருந்தீங்களா? (Just idding);)

//

வெட்டிப்பயல் said...

//nedun said...

//அதே மாதிரி வீட்ல தெலுங்கு பேசிட்டு இருந்த பகுத்தறிவு பகலவன் ஈ.வே."ராமசாமி"யும் வேண்டாம்னு சொல்லிடலாமா //
நாய்கர் என்றால் தெலுங்கு பேசுவார்கள் என்று அர்த்தமா? வரலாறு தெரியாமல் எழுதாதிர்கள் பெரியார் தெலுங்கு பேசும் நாயகர் அல்ல. எங்கும் தமிழை தவிர வேறு மொழிகளில் பேச வில்லை.
ஆராய்ந்தால் அனுபவிக்கிறேன்//

ஏனுங்க... பெரியார் படத்துல கூட அவுங்க தெலுங்கு பேசறதை காட்டுவாங்க...

அதனால நான் அவரை குறைவா சொல்லல. அவரை போல தமிழர்களுக்கு உழைத்த ஒரு தலைவர் இன்னும் தமிழ்நாட்ல பிறக்கவில்லை.

இதன் மூலம் நான் சொல்ல வரது என்னனா, உங்க தாய் மொழி தமிழ் என்பதை ஒரு Privilegeஆக வைத்து கொண்டு தமிழ் நாட்டில் வாழும் மற்றவர்களை தாழ்த்தி பேசாதீர்கள் என்று தான்...

விளக்கம் சொல்லியே வாழ்க்கை ஓடிடும் போல :-)

தஞ்சாவூரான் said...

//எல்லா பிரச்சனையிலும் தமிழர்கள் ஜெயிச்சிட்டு தான் வராங்க... மலேசியாலயும் இப்ப தமிழர்களுக்கு ஓரளவு பிரச்சனை தீர்ந்திருக்கு. மற்ற இடங்களிலும் தீரும்.//

இதெல்லாம் நடந்தால் மகிழ்ச்சிதான் வெட்டி!
மலேசியாவில் பிரச்சினை தீர்ந்ததாகத் தெரியவில்லை. கொஞ்சம் அடங்கி இருக்கு, அவ்வளவுதான்! ஈழத்துல என்ன நடக்குது? எவ்வளவு வருஷமா நடக்குது? அதைப் பத்தி பேசக்கூட தமிழனுக்கு தைரியமில்லை. என்னிக்கோ நடந்த ஒரு சம்பவத்தை பிடிச்சிகிட்டு இன்னும் அந்தப் படுகொலைகளுக்கு மறைமுகமா நாமும் ஒரு காரணமாயிட்டோம். பேசுற ஒண்ணு ரெண்டும் பேரையும், சுய லாபத்துக்கு பேசுறாங்கன்னு கண்டுக்கிறது இல்லை.

//தமிழன் எங்கும் சொரணை கெட்டு அலையவில்லை. அவனுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடியே வருகிறான். எங்கும் அநீதியை பொறுத்து அடங்கி வாழவில்லை. அது எந்த மண்ணாக இருந்தாலும்...//

எந்த அளவுக்கு ஒற்றுமையோட போராடுறான்? எந்தப் பிரச்சினையை எடுத்தாலும், பிரச்சினைகளை விட்டு விட்டு அதைப் பத்தி எந்த நடிகன் என்ன பேசினான், எந்த அரசியல்வாதி என்ன பேசினான்னுதான் நொட்டை நொள்ளை கண்டுபிடிக்கிறோமே தவிர, பிரச்சினைகளை ப் பத்தி யாரும் பேசுவதில்லை. தி.மு.க காரன் சொன்னா, அ.தி.மு.க காரன் எதிர்க்கிறான். ரஜினி சொன்னா கமல் ரசிகன் எதிர்க்கிறான்.

என்னிக்கு இந்த மாதிரி குறுகிய வட்டத்துலருந்து பிரச்சினைகளை பாக்கிறதை மாத்துறமோ அப்பத்தான் பிரச்சினைகள் தீர வழியுண்டு.

//சும்மா ஒருத்தனை திட்டனும்னு ஆசைப்பட்டு சொரணை இல்லைனு சொல்றதெல்லாம் நமக்கே அசிங்கம்...//

ரஜினியை (அல்லது வேறு ஒரு தனி நபரை) வைத்துதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்ங்குற நிலைமையில் இருப்பதுதான், மிகப் பெரிய அசிங்கம்.

Sharath said...

Summa nachchnu irukku :)

வெட்டிப்பயல் said...

//
இதெல்லாம் நடந்தால் மகிழ்ச்சிதான் வெட்டி!
மலேசியாவில் பிரச்சினை தீர்ந்ததாகத் தெரியவில்லை. கொஞ்சம் அடங்கி இருக்கு, அவ்வளவுதான்! ஈழத்துல என்ன நடக்குது? எவ்வளவு வருஷமா நடக்குது? //
இவ்வளவு வருஷம் போராடியும் தன் உரிமையை விட்டு கொடுக்க தமிழன் தயாராயில்லை தானே. அப்பறம் தமிழனுக்கு சொரனை இல்லைனு சொல்றது எப்படி சரி???

ரஜினியை சூப்பர் ஸ்டார்னு சொல்லி ஏத்தி வெச்சது தான் சத்யராஜ்க்கு காண்டு... அதுக்கு தமிழன், சொரணை எல்லாம் ஊறுகாய்.

//எந்த அளவுக்கு ஒற்றுமையோட போராடுறான்? எந்தப் பிரச்சினையை எடுத்தாலும், பிரச்சினைகளை விட்டு விட்டு அதைப் பத்தி எந்த நடிகன் என்ன பேசினான், எந்த அரசியல்வாதி என்ன பேசினான்னுதான் நொட்டை நொள்ளை கண்டுபிடிக்கிறோமே தவிர, பிரச்சினைகளை ப் பத்தி யாரும் பேசுவதில்லை. தி.மு.க காரன் சொன்னா, அ.தி.மு.க காரன் எதிர்க்கிறான். ரஜினி சொன்னா கமல் ரசிகன் எதிர்க்கிறான்.//

பிரச்சனையை பத்தி பேசும் போது பிரச்சனையை பத்தி மட்டும் பேசினா எவனும் நொட்டை சொல்றவனை கண்டுக்க போறதில்லை.

ஒக்கேனக்கல் பிரச்சனைக்கு அந்த மேடைல ரஜினியை டார்கெட் பண்ணி பேசினா, சத்யராஜ் தமிழ் நாட்ல பிறந்த ஒரே காரணத்துக்காக சரினு ஒத்துக்கணுமா?

வெட்டிப்பயல் said...

// Sathiya said...

நல்லா சொன்னீங்க. இந்த "யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போடும்", "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" போன்ற பழமொழிகள் சத்யராஜுக்கு ரொம்ப நல்லாவே பொருந்தும். என் மனசுல மேலோங்கி இருந்தவறு அப்படியே கீழே இறங்கிட்டார். பிரச்சனையை பத்தி மட்டும் தான் பேசுவேன்னு சொல்லிட்டு தேவை இல்லாததெல்லாம் பத்தி பேசிட்டார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை விட்டுருவோம், வீடு தேடி வந்த எதிராளியை கூட வர வேர்க்கறதும் நம் பண்பாடு தான். அந்த மேடையில ரஜினிய பார்த்தா ரொம்ப பாவமா இருந்துச்சு. அவரும் ஒண்ணும் மகான் இல்ல இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். ரஜினி பேசும் போது இதை பத்தி ஒண்ணுமே பேசாம இருந்தது பாராட்டக்கூடியது. நீங்க கேட்ட அந்த "புரட்சி தலைவர் மலையாலீ" என்ற கேள்விக்கு சத்யராஜ் என்ன பதில் சொல்லுவார்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு.//

அவர் என்ன சொல்வாருனு தெரியல... இருங்க டிபிசிடி அதை பத்தி ஏதாவது சொல்லியிருக்காரானு பார்த்து சொல்றேன்...

வெட்டிப்பயல் said...

//Sharath said...

Summa nachchnu irukku :)//

மிக்க நன்றி...

Sumathi. said...

ஹாய் பாலாஜி,

எல்லாம் சரி, உங்க கருத்தை ரொம்ப அழகா நச்சுன்னு எல்லாருக்கும் புரியர மாதிரி சொல்லியிருக்கீங்க, ஆனா இத நீங்க ஏன் சம்பந்தபட்டவரோட பார்வைக்கு போகிற மாதிரி செய்யக் கூடாது?

உங்க கோவம் நியாயமானது தான். ஆனா இத சத்தியராஜுக்கே கொண்டு போகிறா மாதிரி செஞ்சா இன்னும் நல்லாயிருக்கும். இது என்னோட ஒரு கருத்து தான். நான் குற்றமாவோ இல்ல குறையாவோ சொல்லலை.

Boston Bala said...

சுமதி,
---இத நீங்க ஏன் சம்பந்தபட்டவரோட பார்வைக்கு போகிற மாதிரி செய்யக் கூடாது?---


அவர் சக கலைஞருக்கு கொடுக்கும் மரியாதைக்கு எடுத்துக்காட்டு...

உண்மைத் தமிழன்: நடிகர் சங்கத்தில்: சத்யராஜ் :

"மாமா (ராதாரவியைப் பார்த்து) நீ சட்டம் படித்திருக்கிறாய்தானே..? பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா..? (ராதாரவி 'இல்லை' என்று தலையாட்டினார்) இருந்தா சொல்.. அவன் முகத்தில் காறி துப்ப வேண்டும் போலிருக்கிறது. யார் அந்த ஜெயமோகன். எவனென்றே தெரியவில்லை. தெரியாத ஒருத்தனை எப்படி திட்டுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவனை சும்மாவிட மனசு ஏற்கவில்லை.."

geetha said...

அண்ணே, உங்க பதிவயும் பாத்தேன்,ரிபிசிடி பதிவயும் பாத்தேன். தமிழனா இருந்துகிட்டு என்ன பேசணுமோ அத சத்.. பேசி இருக்காரு. அதுக்கும் மேல ரஜனி கிட்ட தன்னோட வெறுப்பயும் காட்டி இருக்காரு. எவனும் தான் இப்படித்தான்னு சொல்லிக்கிட்டு இருந்தா அப்பிடி ஆயிடறதில்ல.. நம்மாளு கூட அப்பிடி தான்.. ஏதோ கொஞ்சம் சனங்க கிட்ட நல்ல பேர்(?) எடுக்கலாம்னுகிட்டு சிலபல வேலைகளை பண்றாரு, சிலபேரோட செல்வாக்க பாவிக்க முயற்சி பண்றாரு.. அது அடிப்படைல எல்லா businessmen க்கும் இருக்கு. ஈழத்தில எவ்ளோ காலமா சாகிறாங்க, இப்போ தான் இவருக்கு தெரிய வருதா? இப்பவாவது சொன்னது பரவால்ல..
என்னான்னா.. ஒரு தமிழனா குரல் குடுத்ததால பரவால்ல..

Karthik said...

hai.,
i am my friend of ur class mates Brijoy and Shyam sundar .Good presence of thought u posses.Keep it going .I have visited ur blog for ur first time.I happened to visit ur blog with the thural story which was circulated in my Google groups.Good short story,Do visit my tamil and movie review blog

pulliraajaa said...

அண்ணாச்சி பேசியதைக் கேட்டதும் ரஜினி சாருக்கு கொஞ்சமா முகம் கறுத்துப் போச்சு.
சுமதி அக்கா கவலப்பட்டாங்க.

புள்ளிராஜா

வெட்டிப்பயல் said...

//Sumathi. said...

ஹாய் பாலாஜி,

எல்லாம் சரி, உங்க கருத்தை ரொம்ப அழகா நச்சுன்னு எல்லாருக்கும் புரியர மாதிரி சொல்லியிருக்கீங்க, ஆனா இத நீங்க ஏன் சம்பந்தபட்டவரோட பார்வைக்கு போகிற மாதிரி செய்யக் கூடாது?

உங்க கோவம் நியாயமானது தான். ஆனா இத சத்தியராஜுக்கே கொண்டு போகிறா மாதிரி செஞ்சா இன்னும் நல்லாயிருக்கும். இது என்னோட ஒரு கருத்து தான். நான் குற்றமாவோ இல்ல குறையாவோ சொல்லலை.//

ஆஹா...

பாபா சொன்னதை பார்த்தீங்க இல்லை. அப்பறம் என்னையும் திரையுலகம் புறக்கணிச்சிடும் ;)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

சுமதி,
---இத நீங்க ஏன் சம்பந்தபட்டவரோட பார்வைக்கு போகிற மாதிரி செய்யக் கூடாது?---


அவர் சக கலைஞருக்கு கொடுக்கும் மரியாதைக்கு எடுத்துக்காட்டு...

உண்மைத் தமிழன்: நடிகர் சங்கத்தில்: சத்யராஜ் :

"மாமா (ராதாரவியைப் பார்த்து) நீ சட்டம் படித்திருக்கிறாய்தானே..? பேசுவதற்கும், எழுதுவதற்கும் சட்டத்தில் உரிமை இருக்கும்போது ஒருத்தன் முகத்தில் காறித் துப்புவதற்கு உரிமை இருக்கிறதா..? (ராதாரவி 'இல்லை' என்று தலையாட்டினார்) இருந்தா சொல்.. அவன் முகத்தில் காறி துப்ப வேண்டும் போலிருக்கிறது. யார் அந்த ஜெயமோகன். எவனென்றே தெரியவில்லை. தெரியாத ஒருத்தனை எப்படி திட்டுவதென்றே தெரியவில்லை. ஆனாலும் அவனை சும்மாவிட மனசு ஏற்கவில்லை.."//

சரியான நேரத்துல வந்து காப்பத்தனீங்க :-)

வெட்டிப்பயல் said...

//geetha said...

அண்ணே, உங்க பதிவயும் பாத்தேன்,ரிபிசிடி பதிவயும் பாத்தேன். தமிழனா இருந்துகிட்டு என்ன பேசணுமோ அத சத்.. பேசி இருக்காரு. அதுக்கும் மேல ரஜனி கிட்ட தன்னோட வெறுப்பயும் காட்டி இருக்காரு. எவனும் தான் இப்படித்தான்னு சொல்லிக்கிட்டு இருந்தா அப்பிடி ஆயிடறதில்ல.. நம்மாளு கூட அப்பிடி தான்.. ஏதோ கொஞ்சம் சனங்க கிட்ட நல்ல பேர்(?) எடுக்கலாம்னுகிட்டு சிலபல வேலைகளை பண்றாரு, சிலபேரோட செல்வாக்க பாவிக்க முயற்சி பண்றாரு.. அது அடிப்படைல எல்லா businessmen க்கும் இருக்கு. ஈழத்தில எவ்ளோ காலமா சாகிறாங்க, இப்போ தான் இவருக்கு தெரிய வருதா? இப்பவாவது சொன்னது பரவால்ல..
என்னான்னா.. ஒரு தமிழனா குரல் குடுத்ததால பரவால்ல..//

கீதா,
எனக்கு இந்த விஷயத்துல இயக்குனர் சீமான் மேல இருக்குற நம்பிக்கை சத்யராஜ் மேல இல்லை...

வெட்டிப்பயல் said...

// Karthik said...

hai.,
i am my friend of ur class mates Brijoy and Shyam sundar .Good presence of thought u posses.Keep it going .I have visited ur blog for ur first time.I happened to visit ur blog with the thural story which was circulated in my Google groups.Good short story,Do visit my tamil and movie review blog//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

ஷ்யாம் சுந்தரும், பிஜாயும் எங்க ஒண்ணா படிச்சாங்க?

ஷ்யாம் தேனி. பிஜாய் கொயம்பத்தூராச்சே...

தப்பா எடுத்துக்காதீங்க...

Karthik said...

Balaji
Iruvarum Ramkrishna Engineering collegil onna padichanga ..i am their room mates.Brijoy is in US u know that.And Shyam and Sameer Ulla Khan stays with me...I am the brother of ur junior Sivaram mechanical.

இலக்குவண் said...

நல்ல பதிவு.உங்களை வழி மொழிகிறேன்.

கிரி said...

சத்யராஜ் க்கு ரஜினியை பிடிக்காமல் இருக்கலாம் அல்லது அவரை எல்லோரும் தூக்கி வைத்து ஆடுவது அவருக்கு பொறாமையை கொடுத்து இருக்கலாம், அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் வேறு ஒரு பிரச்சனைக்காக உண்ணாவிரதத்திற்கு வந்து விட்டு அதற்கு சம்பந்தமே இல்லாமல் அசிங்கமாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு நடந்து கொண்டது பலரிடையே இவர் மீது இருந்த மதிப்பை தான் குறைத்து இருக்கிறதே தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை. புரட்சி தமிழன்னு சொல்றாரே.. அப்படி என்ன புரட்சி தமிழர்களுக்காக பண்ணுனாருன்னு தெரியல! குறைந்த பட்சம் அவருடைய பய்யனுகாவது தமிழ் ல பேரு வைத்து இருக்கலாம் சிபிராசுன்னு :-) )


நல்லா எழுதி இருக்கீங்க வெட்டிப்பயல்

செல்வேந்திரன் said...

இங்கன நம்ம குமுறல் இருக்கு...
http://selventhiran.blogspot.com/2008/04/blog-post.html