தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, March 10, 2008

மீண்(டும்)ட வெட்டி... தமிழ் கணிமை... தம்பி, CVRக்காக ஒரு பாட்டு

எல்லாருக்கும் வணக்கம்... பதிவு போட்டு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. நடுவுல கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இந்த ஊர்ல வேற டாக்டர்கிட்ட போகனும்னா முன்னாடியே அப்பாய்ன்மெண்ட் வாங்கனுமாம். நான் இங்க வந்து ரெண்டு வருஷமாகியும் எந்த டாக்டர்கிட்டயும் போனதில்லை.

முதல் முறை போகனும்னா ஒரு வாரம் கழிச்சி தான் அப்பாய்ண்மெண்ட் தராங்க. டேய் அதுக்குள்ள ஏதாவது ஆகிடுச்சுனானு கேட்டா, எமர்ஜன்சினு சொல்லி ஆஸ்பித்திரிக்கு போங்கனு சொல்றாங்க. அப்படி போனா அதுக்கே 50$ஆம். அப்பறம் ட்ரீட்மெண்டுக்கு தனியாம். ஒரு வழியா இங்க தேடி கண்டுபிடிச்சி ஒரு டாக்டரை பார்த்தேன். அப்பறம் மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு இப்ப ஓரளவுக்கு சரியாகியாச்சு.

KRS நிறைய தடவை சொல்லியிருக்காரு. சும்மாவாச்சம் ஒரு தடவை போய் ஏதாவது ஒரு டாக்டரை (Primary care Physician) பார்த்து மெடிக்கல் செக் அப் பண்ணி வெச்சிக்கோ. ஏதாவது எமர்ஜன்சினா உடனே அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கலாம்னு. ஆனா அப்ப எனக்கு எல்லாம் எதுவும் ஆகாது. நாங்க எல்லாம் சிங்கம் மாதிரினு பில்ட் அப் கொடுத்து வெச்சிருந்தேன். கடைசியா இப்ப ஒரு இருபது நாள் பாடு படுத்திடுச்சு. இப்ப எல்லாருக்கும் நான் இந்த அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

அமெரிக்கா வந்து கொஞ்ச மாசம் இருக்க போறீங்கனா, சும்மா ஒரு தடவை சாதரண செக் அப் போயிட்டு வந்துடுங்க. பின்னாடி ஏதாவதுனா ரொம்ப பயனா இருக்கும்.

...........................................................................

இப்பவெல்லாம் ஏதாவது படிக்கனும்னா தமிழ் கணிமை தான் பயன்படுத்தறேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க. முன்னெல்லாம் யாராவது தமிழ் வலைப்பதிவு படிக்கனும்னா தமிழ்மணம் தான் சொல்லுவேன். இப்பவெல்லாம் தமிழ் கணிமை தான் சொல்றேன். திரட்டிகளின் திரட்டி போல. நல்லா யோசிச்சி, அருமையா பண்ணியிருக்காங்க.

தமிழ் மணத்துல சூடான இடுகை வேலை செய்யல போல. ரொம்ப நல்ல விஷயம்.

.........................................................................

தம்பி, CVR

உங்களுக்காக இந்த பாடல்

20 comments:

Kittu said...

america vandhu 7 varudam aagiyadhu
aanal neenga sonna maadhiri naanum 5th yr la dhaan doctor poraa maadhiri aachu...stone vandhu ivanunga adhu stone dhaanu solradhukkae oru vaaram aakkitaanunga...adhukkula enakku kabalamae eguridhu...idhula innum 10 naal la india ku en kalyaanathukku pora trip vera irundhadhu..oru vaziyaa eduthu enna "Indian" koundamani maadhiri polamba vittutaanunga :)

nenachi paaatha comedyaa dhaan irukku...american medical system is horrible...and the insurance scam is big time

eppa dhaan vidiyumo therila

G.Ragavan said...

இங்கயும் இப்பிடித்தான். மெடிக்கல்னா அப்பாயிண்மெண்டோ அம்மாயின்மெண்டோ வாங்கீட்டுத்தான் போகனும். இல்லைன்னா எமர்ஜென்சிதான்.

நல்ல பாட்டு. அதை ஏன் சிவியாருக்காகப் போட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

கப்பி பய said...

ஒடம்ப பாத்துக்க நைனா!! பாட்டுக்கு டாங்க்ஸு :))

அரை பிளேடு said...

Take care Balaji.

CVR said...

சூப்பரு பாட்டு!!!
பாவ்னா தமிழ்ல பிரபலமாகறதுக்கு முன்னாடியே நான் இந்த பாட்டை பாத்திருக்கேன்!!!

செம ஹை ஸ்பீடு கேமரா வொர்க்!!!!
கலக்கியிருப்பாங்க!!!

கூடவே பாவ்னா,ப்ரித்விராஜ் அழகான ஜோடியும்,இந்த மெல்லிய இசைக்கு ஒத்துப்போகும்!!

பதிவிட்டதற்கு மிக்க நன்றி அண்ணாச்சி!!

கானா பிரபா said...

எங்கள் கலைச்செல்வி பாவனாவை அவதூறாகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறோம்.

பாவனா நற்பணி மன்றம், சிட்னி

என்னை மாதிரி துபாயில் இருந்தும் ஒரு "தம்பி" வருவார் பாருங்க

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாவனா நடிச்ச போலீஸ் படம் செம அருமையா இருக்கும்! பாவ்ஸ் நல்லாவே "நடிச்சும்" இருப்பாங்க!
அதுலயும் இந்தப் பாட்டு, கனா கண்ணில் மற்றும் நின்னில் நிழலாய்-இரண்டுமே மலையாள மெலடிகளில் டாப்!

I simple love the drops of water that keeps splashing throughout the song...
The serenity of Love really splashes! - on my face too! :-)

//நல்ல பாட்டு. அதை ஏன் சிவியாருக்காகப் போட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?//

ஜிரா ஒழுங்காப் பாருங்க! உ.குத்தை!
//தம்பி, CVR//
கமா போட்டிருக்காரு! கவனிக்கலையா?
தம்பி உமா கதிரு எங்கப்பா இருக்க நீயி! எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து இந்த வீடியோவைப் பாரு! :-))

இலவசக்கொத்தனார் said...

தமிழ்க் கணிமை பற்றிய தகவலுக்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

//Collapse comments

Blogger Kittu said...

america vandhu 7 varudam aagiyadhu
aanal neenga sonna maadhiri naanum 5th yr la dhaan doctor poraa maadhiri aachu...stone vandhu ivanunga adhu stone dhaanu solradhukkae oru vaaram aakkitaanunga...adhukkula enakku kabalamae eguridhu...idhula innum 10 naal la india ku en kalyaanathukku pora trip vera irundhadhu..oru vaziyaa eduthu enna "Indian" koundamani maadhiri polamba vittutaanunga :)
//
ஆமாம்.. சின்ன விஷயமா இருந்தாலும் வயித்துல புளியை கரைச்சிடறானுங்க.. என்ன பண்ண?

// nenachi paaatha comedyaa dhaan irukku...american medical system is horrible...and the insurance scam is big time

eppa dhaan vidiyumo therila//

அதை விட மருந்து விலையெல்லாம் பயங்கரம்...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

இங்கயும் இப்பிடித்தான். மெடிக்கல்னா அப்பாயிண்மெண்டோ அம்மாயின்மெண்டோ வாங்கீட்டுத்தான் போகனும். இல்லைன்னா எமர்ஜென்சிதான்.
//

அங்கேயுமா???
சேம் ப்ளட் :-))

//
நல்ல பாட்டு. அதை ஏன் சிவியாருக்காகப் போட்டீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?//

சிவியாருக்கு மட்டும் இல்லை.. தம்பிக்கும் சேர்த்து தான் போட்டிருக்கேன்... இதுக்கூட புரியலைனா நீங்க தமிழ் வலைப்பதிவுல இத்தனை நாள் இருக்குறதே வேஸ்ட் :-)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

ஒடம்ப பாத்துக்க நைனா!! பாட்டுக்கு டாங்க்ஸு :))//

ரொம்ப டாங்க்ஸுப்பா...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சொல்ல மறந்துட்டேனே!
ஒள்ளு சூசண்டி வெட்டிகாரு! :-)
ஒக்க இஸ்மால் ரிக்வெஸ்டு, மீரு அண்ணகாரு கோசரம்!
அதே படத்தில் வரும் நின்னில் நிழலாய் பாட்டும் போடுங்க தல!
somehow, these 2 songs go together! :-)

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

Take care Balaji.//

மிக்க நன்றி தலைவா...

வெட்டிப்பயல் said...

// CVR said...

சூப்பரு பாட்டு!!!
பாவ்னா தமிழ்ல பிரபலமாகறதுக்கு முன்னாடியே நான் இந்த பாட்டை பாத்திருக்கேன்!!!

செம ஹை ஸ்பீடு கேமரா வொர்க்!!!!
கலக்கியிருப்பாங்க!!!

கூடவே பாவ்னா,ப்ரித்விராஜ் அழகான ஜோடியும்,இந்த மெல்லிய இசைக்கு ஒத்துப்போகும்!!

பதிவிட்டதற்கு மிக்க நன்றி அண்ணாச்சி!!//

இதை இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன் :-)

வெட்டிப்பயல் said...

//கானா பிரபா said...

எங்கள் கலைச்செல்வி பாவனாவை அவதூறாகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறோம்.

பாவனா நற்பணி மன்றம், சிட்னி

என்னை மாதிரி துபாயில் இருந்தும் ஒரு "தம்பி" வருவார் பாருங்க//

அண்ணாச்சி,
நாங்க எங்க அவதூறா பயன்படுத்தறோம்???

பாவனா நற்பணி மன்றம்,
பாஸ்டன்

தம்பி said...

நான் இங்க ஒருத்தன் இருக்கேன்ற நெனப்பு இல்லாம எல்லாரும் பாவனா பத்தி பேசிட்டு இருக்கறது அவ்வளவா நல்லால்ல.

கைப்புள்ள said...

உடம்பைப் பாத்துக்கப்பா பாலாஜி.

இதையே தமிழ்ல சொல்லனும்னா - Take Care!!

:)

Anonymous said...

Dear Mr.Vetti,

Its nice to see your comeback post, kindly complete "PANI VIZUM MALARVANAM".

Cheers
Christo

தஞ்சாவூரான் said...

எமெர்ஜென்சின்னா எட்டு மணி நேரம் காக்க வைப்பானுங்க! அர்ஜன்ட் கேர் ன்னா 2 மணி நேரம்! அப்புறம் அதுக்கு தனி ரேட்டு வேற!

நமக்கு கிட்டத்தட்ட எல்லா நோய்க்கும் (ஃப்ளு, உடம்பு வலி, ஹாங் ஓவர்) ஒரே மருந்துதான் - வியட்னாம் கடை சூப்பு!

மஞ்சூர் ராசா said...

மீண்டும் வருக வருகவென வரவேற்கிறேன்.