தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, February 08, 2008

T-Mobile Wing, Magellan 3200, Nextar C3 அனுபவங்கள்!

போன மாசம் T-Mobile Wing வாங்கினேன். இந்தியால இருக்குற வரைக்கும் மொபைல் போன்களுக்குனு அதிகமா செலவு செய்யறதில்லைனு முடிவு பண்ணிருந்தேன். முக்கியமான காரணம் திருடருங்க (நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்) சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட இருந்து பறிக்கற முதல் பொருள் செல்ஃபோன் தான். அடுத்து பர்ஸ். நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சதால பர்ஸ்ல பணம் வைக்குற பழக்கமும் எனக்கில்லை. நாப்பது ரூபா இருந்தாலும் அதை நாலு பாக்கெட்ல பத்து ரூபாயா வெச்சி தான் எனக்கு பழக்கம். எங்கயோ ஆரம்பிச்சி எங்கயோ போயிட்டேன்.

இங்க இந்த மொபைல் ஃபோன் வாங்க காரணம், இதுக்கு 200$ கட்டி வாங்கினா 100$ Mail in Rebateனு சொன்னது தான். அப்ப மொத்தமா செல்பொன் விலை 100$ தான். 4000 ரூபாய்க்கு வாங்கின மாதிரி தான் கணக்கு. ஆறு மாசத்துல எப்படியும் இதை டிஸ்கனெக்ட் பண்ணிட்டு புது ஃபோன் வாங்கிடுவேன்.இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது டச் ஸ்கிரின் தான். இந்த ஃபோன் வெச்சிட்டு நான் கொடுக்கற பில்ட் அப்க்கு அளவே இல்லைனு எல்லாரும் சொன்னாலும் நான் கவலைப்படறதில்லை :-). இன்கமிங் கால் வந்துச்சுனா பட்டன் எதுவும் அழுத்த தேவையில்லை. ஸ்க்ரின்லயே Accept Declineனு வரும். அதை அழுத்தினா போதும். அதே மாதிரி QWERTY Key board இருக்குற செல்ஃபோன்ல 1-800 நம்பர் அடிக்கறதும் கஷ்டமா இருக்கும் (T- Mobile Dash, Black Berry Pearl, Black Berry Curve).

1-800- COMCAST, 866-7RELIAN மாதிரியான நம்பர் எல்லாம் QWERTY கீ போர்ட்ல அடிக்க கஷ்டமா இருக்கும். ஆனா இந்த ஃபோன்ல அந்த தொல்லை இல்லை. Phone அப்படினு ஒரு ஆப்ஷன் இருக்கு. அதை அழுத்தினா ஃபோன் லே அவுட் வந்துடும் அதுல அழகா டச் ஸ்கிரின்ல அழுத்தி கால் பண்ணிக்கலாம்.

அப்பறம் இதுல படம் பாக்கறது, பாட்டு கேக்கறது எல்லாம் பண்ணலாம். Windows Applications (Excel, Word) எல்லாம் பயன்படுத்தலாம். இங்க வந்தா படம் டவுன்லோட் பண்ண பாட்டு டவுன்லோட் பண்ண நிறைய சைட்ல ஐடி, பாஸ் வேர்ட் க்ரியேட் பண்ணும் போது இதுல எக்ஸல்ல சேமித்து வெச்சிக்கலாம்.

இதுல எனக்கு தெரிஞ்சி ஒரே குறை நோக்கியா 1100ல இருக்குற டார்ச் லைட் இல்லாதது தான்... (மக்கா FMம் இல்லை)

........................
போன கருப்பு வெள்ளி சேல்ல வாங்கினது Magellan 3200 GPS. நான் அப்ப ஊர்ல இல்லாததால பொறுப்பா, பாசமா அன்பு அண்ணன் KRS அட்டகாசமான டீல்ல வாங்கி கொடுத்தார். அவர் வெச்சிருக்கறது Nextar C3. அதை பார்த்ததும் தான் நான் GPS வாங்கனும்னு ஆசைப்பட்டு வாங்கினேன். இது Nextarஐ விட பட்டையை கிளப்புது.

நெக்ஸ்டர்ல என்ன பிரச்சனைனா ஏதாவது ஒரு பார்கிங் லாட்ல இருந்து அட்ரஸ் போட்டா முதல்ல மெயின் ரோட்டுக்கு வானு சொல்லும். முன்னாடி நாங்க ஒரு டூர் போயிருந்தப்ப அது சரியான காடு. அங்கயும் அப்படி தான் சொல்லுச்சு (Come to Nearest Highwayனு). டேய் அது தெரியாமத்தாண்டா உங்கிட்ட கேக்கறோம்னு சொன்னாலும் அந்த புள்ள புரியாம அதையே சொல்லிட்டு இருந்துச்சு.

ஆனா மெகல்லன் பார்கிங் லாட்ல இருந்தே வழி சொல்ல ஆரம்பிச்சிடுது. அதனால வண்டி எடுக்கறதுக்கு முன்னாடியே நல்லா ப்ளான் பண்ணிட்டு ஓட்ட ஆரம்பிச்சிடலாம். என்னை பொறுத்த வரைக்கும் இது நல்ல இண்வெஸ்ட்மெண்ட்.

அண்ணனை மாதிரி 3 மணி நேரத்துல பாஸ்டன்ல இருந்து நியூ ஜெர்ஸி போறவங்களுக்கு நெக்ஸ்டரே போதும் (அதுக்கூட வேண்டாம்). ஆனா இப்ப தான் புதுசா வண்டி ஓட்டு பழகற ஆளுங்களுக்கு மெகல்லன் 3200 நல்ல சாய்ஸ்.

சரி, அடுத்து வேற எதாவது வாங்கி புடிச்சிருந்தா சொல்றேன்...

16 comments:

ILA(a)இளா said...

//அண்ணனை மாதிரி 3 மணி நேரத்துல பாஸ்டன்ல இருந்து நியூ ஜெர்ஸி போறவங்களுக்கு நெக்ஸ்டரே போதும் (அதுக்கூட வேண்டாம்). //
பயம் இல்லாம எப்போ போறோம்னு தெரியாம ஓட்டுறதுல கில்லாடிப்பா..
ரெண்டும் சரியான தொகுப்பு.

இலவசக்கொத்தனார் said...

ஜிபிஎஸ்ஸுக்கு எம்புட்டு குடுத்தீங்க? அதைச் சொல்லவே இல்லையே....

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அண்ணனை மாதிரி 3 மணி நேரத்துல பாஸ்டன்ல இருந்து நியூ ஜெர்ஸி போறவங்களுக்கு நெக்ஸ்டரே போதும் (அதுக்கூட வேண்டாம்). //

அடப்பாவி மக்கா!
தம்பி அண்ணனுக்கு ஆற்றும் உதவி-என் அண்ணன்
மாமாவிடம் மாட்டிக் கொளல்!
-னு நீயே பதிவைப் போட்டு, போலீஸ் மாமாவை வூட்டுக்கு அனுப்பி வைப்ப போலக் கீதே!
நல்லா இருங்க டே! :-)

//பயம் இல்லாம எப்போ போறோம்னு தெரியாம ஓட்டுறதுல கில்லாடிப்பா..//

யாரை ஓட்டுறதுலப்பா? :-)
இளா, நீயுமா இதுல கூட்டுச் சதி? அவ்வ்வ்வ்வ்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(Come to Nearest Highwayனு). "டேய்" அது தெரியாமத்"தாண்டா" உங்கிட்ட கேக்கறோம்னு சொன்னாலும்//

//முக்கியமான காரணம் திருடருங்க (நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்)//

ஆகா...ரொம்பவே மரியாதை தெரிஞ்ச பைய"ர்" தான்! :-)

பாலாஜி சொல்வது விண்டர் ஜாக்கெட்டில் வடிகட்டிய பொய்!
என்னுடைய அந்த GPS-இல் Come to Nearest Highwayனு சொன்னது எவனோ ஒரு பையன் இல்லை!
குளுங் குரல் பெண்! காதல் குளிர் பெண்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பட்டன் எதுவும் அழுத்த தேவையில்லை.//

ஆகா, மனசுல நெனச்சத அப்படியே Choose பண்ணிக்குமா? சூப்பர்!

//ஸ்க்ரின்லயே Accept Declineனு வரும். அதை அழுத்தினா போதும்//

அடச்சே! பொத்தானுக்குப் பதிலா ஸ்கீரின்-ல அழுத்தனும்! அம்புட்டு தானா? :-)

பொன்வண்டு said...

எனக்கு கைக்கு அடக்கமா இல்லாத எந்த மொபைலையுமே பிடிக்காது. இப்ப வரெதெல்லாம் மொபைலா இல்ல கால்குலேட்டரான்னே தெரிய மாட்டேங்குது. நோக்கியாவில ஒரு குண்டு மொபைல் இருக்குமே அதுக்கு நான் வச்ச பேரு 'தேங்கா மொபைல்'

:))

CVR said...

Neat!!
///ஆனா மெகல்லன் பார்கிங் லாட்ல இருந்தே வழி சொல்ல ஆரம்பிச்சிடுது.///
அட்ரா அட்ரா!!
போட்டு தாக்கறாய்ங்கப்பா!!

என்சாய் மாடி!! B-)

வெட்டிப்பயல் said...

//Collapse comments

Blogger ILA(a)இளா said...

//அண்ணனை மாதிரி 3 மணி நேரத்துல பாஸ்டன்ல இருந்து நியூ ஜெர்ஸி போறவங்களுக்கு நெக்ஸ்டரே போதும் (அதுக்கூட வேண்டாம்). //
பயம் இல்லாம எப்போ போறோம்னு தெரியாம ஓட்டுறதுல கில்லாடிப்பா..
ரெண்டும் சரியான தொகுப்பு.//

அதே அதே...
அண்ணன் 90க்கு குறைவா ஓட்டவே மாட்டாறாம் ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

ஜிபிஎஸ்ஸுக்கு எம்புட்டு குடுத்தீங்க? அதைச் சொல்லவே இல்லையே....//

நான் வாங்கினப்ப அது விலை 165$

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அண்ணனை மாதிரி 3 மணி நேரத்துல பாஸ்டன்ல இருந்து நியூ ஜெர்ஸி போறவங்களுக்கு நெக்ஸ்டரே போதும் (அதுக்கூட வேண்டாம்). //

அடப்பாவி மக்கா!
தம்பி அண்ணனுக்கு ஆற்றும் உதவி-என் அண்ணன்
மாமாவிடம் மாட்டிக் கொளல்!
-னு நீயே பதிவைப் போட்டு, போலீஸ் மாமாவை வூட்டுக்கு அனுப்பி வைப்ப போலக் கீதே!
நல்லா இருங்க டே! :-)//

உங்க மேல கை வெச்சிட முடியுமா? நியு யார்க் சிட்டிலயே 100க்கு குறையாம ஓட்ற உங்க மேல கை வைக்குற அளவுக்கு அமெரிக்கால எந்த போலிஸ்க்கு தைரியமிருக்கு.

அதுவும் எலக்ஷன் வற போற நேரத்தில உங்கல அரெஸ்ட் பண்ண புஸ்ஸுக்கு தைரியமிருக்குமா?

//

//பயம் இல்லாம எப்போ போறோம்னு தெரியாம ஓட்டுறதுல கில்லாடிப்பா..//

யாரை ஓட்டுறதுலப்பா? :-)
இளா, நீயுமா இதுல கூட்டுச் சதி? அவ்வ்வ்வ்வ்!//

உண்மையை யார் வேணா பேசலாம் ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(Come to Nearest Highwayனு). "டேய்" அது தெரியாமத்"தாண்டா" உங்கிட்ட கேக்கறோம்னு சொன்னாலும்//

//முக்கியமான காரணம் திருடருங்க (நான் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பையன்)//

ஆகா...ரொம்பவே மரியாதை தெரிஞ்ச பைய"ர்" தான்! :-)

பாலாஜி சொல்வது விண்டர் ஜாக்கெட்டில் வடிகட்டிய பொய்!
என்னுடைய அந்த GPS-இல் Come to Nearest Highwayனு சொன்னது எவனோ ஒரு பையன் இல்லை!
குளுங் குரல் பெண்! காதல் குளிர் பெண்! :-)//

"டேய் அது தெரியாமத்தாண்டா உங்கிட்ட கேக்கறோம்னு சொன்னாலும் அந்த புள்ள புரியாம அதையே சொல்லிட்டு இருந்துச்சு."

பதிவை திசை திருப்ப நினைக்கு உங்கள் நுண்ணரசியலை புரிந்து கொள்ள முடிகிறது ;)

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பட்டன் எதுவும் அழுத்த தேவையில்லை.//

ஆகா, மனசுல நெனச்சத அப்படியே Choose பண்ணிக்குமா? சூப்பர்!

//ஸ்க்ரின்லயே Accept Declineனு வரும். அதை அழுத்தினா போதும்//

அடச்சே! பொத்தானுக்குப் பதிலா ஸ்கீரின்-ல அழுத்தனும்! அம்புட்டு தானா? :-)//

எந்த பட்டனை அழுத்தனும்னு யோசிக்காம ஸ்கிரின்ல அழுத்தலாம் தானே... அது தான் இது ஸ்பெஷாலிட்டி.

ப்ளாக் பரி கர்வ் வெச்சிருக்கவங்களுக்கு எல்லாம் இது அருமை தெரியாது ;)

வெட்டிப்பயல் said...

//பொன்வண்டு said...

எனக்கு கைக்கு அடக்கமா இல்லாத எந்த மொபைலையுமே பிடிக்காது. இப்ப வரெதெல்லாம் மொபைலா இல்ல கால்குலேட்டரான்னே தெரிய மாட்டேங்குது. நோக்கியாவில ஒரு குண்டு மொபைல் இருக்குமே அதுக்கு நான் வச்ச பேரு 'தேங்கா மொபைல்'

:))//

பொன்வண்டு,
இந்த போனும் கைக்கு அடக்கமாத்தான் இருக்கும். நான் போட்டிருக்க போட்டோ அதை ஸ்லைட் பண்ணதுக்கு அப்பறம் தெரியறது.

வெட்டிப்பயல் said...

//CVR said...

Neat!!
///ஆனா மெகல்லன் பார்கிங் லாட்ல இருந்தே வழி சொல்ல ஆரம்பிச்சிடுது.///
அட்ரா அட்ரா!!
போட்டு தாக்கறாய்ங்கப்பா!!

என்சாய் மாடி!! B-)//

டாங்கிஸ் தல :-)

திவா said...

ஹும்!
த பாருங்க. இந்த மாதிரி பதிவு போடறவங்க ஒரு பாட்டில் ஆன்டாசிட் அனுப்பி வைங்கபா!
:-)

Yezhai Thamizhan said...

அப்போ 2 T-Mobile வருட ஒப்பந்தம்?
$200 cancellation fee இருக்கு. ஜாக்கிரதை.