தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, February 10, 2008

தமிழ் திரையுலகின் விடிவெள்ளி - தல SAM ANDERSON

நம்ம வலையுலக பருத்தி வீரன் கப்பி நிலவர் போட்ட பதிவை பார்த்துட்டு எப்படியும் "யாருக்கு யார்" பார்த்துடறதுனு ஒரு முடிவு பண்ணிட்டேன். என்னமா எக்ஸ்பிரஷன் கொடுக்கறார் நம்ம ஹீரோ சாம் ஆண்டர்சன். ஒரு வேளை நம்ம ஹீரோ சாம் ஆண்டர்சன் பமீல ஆண்டர்சனுக்கு பயங்கர ஃபேனா இருந்திருப்பாரு போல. அவர் இந்த படத்துல பெர்ஃபார்ம் பண்ணதை பார்க்கும் போது அடுத்து அவர் ஹாலி வுட் படத்துல நடிப்பார்னு தான் தோனுது. அதனால நல்லா யோசிச்சி அவருக்கு சாம் ஆண்டர்சனு பேர் வெச்சிருக்கலாம்.படத்துல இவருக்கு போட்டியா நடிச்சிருக்காங்க நம்ம ஹீரோயின் வர்ணிகா. தில்லானா மோகனாம்பால் சிவாஜியையும் பத்மினியும் பார்த்த மாதிரியே இருந்துச்சு. படத்தோட இயக்குனர் ஜோ ஸ்டான்லி நம்ம டீ.ஆர் ரேஞ்சுக்கு கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் எல்லாத்தையும் பண்ணிட்டாரு. அனேகமா படத்தை தியேட்டர்ல பார்த்த ஒரே ஆளும் அவராத்தான் இருப்பாருனு நினைக்கிறேன்.

படத்துல ஸ்டார்டிங் சீனே நம்ம நடிப்பு புயல், நாட்டிய தாரகை வர்ணிகாவோட பாட்டு தான். அந்த பாட்டை பார்த்தும் யாராவது தைரியமா தியேட்டர்ல உக்கார்ந்திருந்தா அவுங்களை துரத்தறதுக்கு நம்ம ஹீரோ அதை ரீப்பீட்டுனு கேட்டிருக்காரு (ரிப்பீட்டே கோபி மாதிரி போலனு நினைச்சிக்கிட்டேன்). அப்பறம் அந்த பாட்டுக்கு பரிசா ஒரு சிலுவை போட்ட டாலரை கொடுக்கறாரு.

அதே மாதிரி திருடருங்க நாலு பேரை திருத்தவும் அந்த டாலரைத்தான் கொடுக்கறாரு. அப்ப அவர் ஸ்க்ரீனைப் பார்த்து பேசற டைலாக்ஸ்க்கு செம அப்லாஸ். அவர் நடிப்பை தாங்க முடியாம அந்த திருடருங்க தானா திருந்திடறாங்க. இப்படி ஆனா ஊனா சிலுவையை எடுத்து நீட்டிடறாரு. எனக்கு என்னுமோ இது மோடியோட வேலையாத்தான் இருக்கும் போல இருக்கு.

ஆஹா.. இப்படியே படத்தோட கதையை(:-))))) சொல்லிடுவேன் போல. அதனால உங்களுக்கு படம் பார்க்குற இன்ட்ரெஸ்டே போயிடும்.படத்தோட ஹை லைட்ஸ் மட்டும் சொல்லிடறேன்.

படத்துல முதல் டர்னிங் பாயிண்டே நம்ம ஹீரோ சைண்டிஸ்ட். ஆட்டோமொபைல் இஞ்சினியர். ஏன்டா ஆட்டொமொபைல் இஞ்சினியர்னா வீட்ல வெறும் கார் படம் மட்டும் தான் வெச்சிருப்பாங்களா? அதுவும் சின்ன வயசுல நோட் புக் மேல ஒட்டற ஸ்டிக்கர் படம் மாதிரி. ஒரு படத்துல கூட காரை பிரிச்சி வெச்சி (மோட்டர் ஏதாவது தெரியற மாதிரி) எடுக்க மாட்டீங்களா?

தலயோட 70,000 ரூபாய் கார் கான்செப்ட திருடி தான் டாடா நேனோ கார் தயாரிச்சாங்கனு ஒரு வதந்தி பரவியிருக்காம். இதுக்கு ராடன் டாட்டா என்ன பதில் சொல்றாருனு பார்ப்போம்.

படத்துல ஹை லைட் பாட்டு நாலு இருக்கு. இதுல "ராசாத்தி, என் ஆசை ராசாத்தி" பாட்டு ரெண்டு தடவை வருது. அதுவும் நம்ம ஹீரோ சூப்பர் டேன்ஸோட.

படத்துல நம்ம ஹீரோக்கு டபுல் ஹீரோயின். (ஒரு ஹீரோயினையே தாங்க முடியலைனு சொல்லக்கூடாது). ரெண்டு பேரும் ஹீரோ எனக்கு தான் சொந்தம்னு சொல்றது நம்ம Gaptain படத்தை பார்த்த எஃபெக்டை கொடுக்குது.

கடைசியா ஸ்டெப்னிக்கு ஹீரோ பேசற பஞ்ச் டயலாக் நம்ம பஞ்ச் பேரரசுவையே கதி கலங்க வெச்சிருக்காம். (என்னை ஸ்டெப்னியா வெச்சிக்க பாத்தியானு ஹீரோயின் கேக்கும் போது. என் வாழ்க்கைல என்னை ஒரு ஒரு ஸ்டெப்பா பார்த்து நீ கூப்பிட்டு போவனு நினைச்சேன். என் ஒவ்வொரு ஸ்டெப்பும் நீ, ஸ்டெப் நீ, ஸ்டெப் நீனு நினைச்சேன். இப்படி சொல்லிட்டியேனு அவர் கண்கலங்கும் போது தியேட்டரே கண் கலங்கிடுச்சாம்)

க்ளைமாக்ஸ்ல ஹீரோவும் ஹீரோயினும் கனடாவுக்கு ஒரு பொட்டல் காட்ல இருந்து கார்ல கிளம்பறாங்க. அதுவும் ஒரு சாதாரண பையை எடுத்துட்டு. ஏன்டா ஏதோ உசிலம்பட்டிக்கு கிளம்பற மாதிரி கிளம்பறீங்க...

படத்துல தலைவர் தூங்க போகும் கூட ஆரஞ்சு சட்டையும், பச்சை டையும், கூலிங் கிளாஸும் போட்டுட்டு தான் தூங்கறாரு. ஏனா அவர் அடுத்த படம் ஹாலிவுட் ரேஞ்ச் இல்லையா?

நம்ம தல படத்துல ஒவ்வொரு சீனுக்கும் கொடுக்கற எக்ஸ்பிரஷன் இருக்கே. சான்சே இல்லை. அதுவும் அவர் ரொமாண்டிக் லுக் மேட்டுக்குடி கவுண்ட மணியோடதை விட பயங்கரமா இருக்கு...

அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா இந்த படத்தை காது கேட்காதவர்கள் கூட பார்க்கலாம். ஏன்ன ஒவ்வொரு டயலாக்கும் தல சைகை பண்ணிட்டே பேசுவாரு. (ஆனா அவருக்கு What, Me ரெண்டுத்துக்கும் வித்யாசம் தெரியாது. என்ன செய்யறனு கேக்கனும்னா அவரை காண்பிச்சிட்டு, செய்யறனு எக்ஸ்பிரஷனை கொடுப்பாரு).

படத்தை பார்க்க தைரியமில்லைனா கூட இந்த பாட்டை பாருங்க. இனிமே இவர் தான் தமிழ்நாட்டின் மைக்கல் ஜாக்சன்.ஆர்குட்ல இவர் ஃபேன்ஸ் கம்யூனிட்டில இருந்து எடுத்த டைலாக்

Gani...
namba thalaivara scientist nu sonaangale... andha oru varthai ke padam silver jubilee.. Sivaji Ganesann madhri 5 rooba vaangi 500 rubai ku nadikaama, Neat-a panirpaaru.. character oda ondritaaru...

Ramani
adhuvum sari than... aana ivaru 5 rooba vaangi 1 roobaikku kooda nadikkalainnu ennoda friend sollittan....

Namma thalaikkaaga avanoda friendshipaye naan cut pannitten...

45 comments:

தஞ்சாவூரான் said...

வெட்டி,

எதையும் தாங்கும் இதயமய்யா உமக்கு :)
ஒரு பாட்டைப் பாத்துட்டே அரண்டு போய் கெடக்கோம் இங்கே.. முழுப்படத்தையும் பாத்துட்டீரே??

CVR said...

LOLOLOL!!!

கண்ணுல தண்ணி வந்துருச்சு மக்கா!!
இந்த விமர்சனத்தை படிக்கும்போதே இப்படி இருக்கே,இந்த படத்தை பாத்தா எப்படி இருக்கும்??

கற்பனை பண்ணி கூட பாக்க முடியல அண்ணாச்சி!! :-D

தமிழ் பிரியன் said...

/// தஞ்சாவூரான் said...எதையும் தாங்கும் இதயமய்யா உமக்கு :)
ஒரு பாட்டைப் பாத்துட்டே அரண்டு போய் கெடக்கோம் இங்கே.. முழுப்படத்தையும் பாத்துட்டீரே??//
ரிப்பீட்ட்ட்ட்டு
முடியலைங்க :)))))))))

கப்பி பய said...

இந்த படத்தை முழுசா வேற பார்த்தீங்களா?? ரெண்டு பாட்டு பார்க்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடுச்சு! :))

கப்பி பய said...

மொதல்ல டைட்டில்ல 'தல'யைத் தூக்குங்கய்யா...'தல'யை அசிங்கப்படுத்தாதீங்க!! ரணகளமாயிடும்!

சிரிப்பான்லாம் போடல...சீரியஸு..

இலவசக்கொத்தனார் said...

வெட்டி உண்மையிலேயே நீங்க எழுதின பதிவுதானா? ரொம்ப எழுத்துப்பிழைகள் இருக்கு!

இல்லை, இந்த படம் பார்த்த எபெக்டா? :)

வெங்கட்ராமன் said...

தல,
படத்தோட பேர சொல்லவே இல்ல. . .
இல்ல வக்கவே இல்லையா. . . ?

இல்ல நான் சரியா படிக்கலையா? அத தெரிஞ்சுக்க ரெண்டு தடவ படிச்சனே. . . .

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நம்ம வலையுலக பருத்தி வீரன் கப்பி நிலவர் போட்ட பதிவை பார்த்துட்டு//

உம்.....அது! :-)

//மொதல்ல டைட்டில்ல 'தல'யைத் தூக்குங்கய்யா...'தல'யை அசிங்கப்படுத்தாதீங்க!! ரண களமாயிடும்//

அட, பருத்தி வீரஞ் சொல்லி இன்னுமா மாத்தலை?

வெட்டி, விஷப் பரீட்சை வேணாம்!
பருத்தி வீரன் ஊதினாப் பஞ்சாப் பறந்துடுவ! ஒடனடியா மாத்து!! :-)

நீங்க ஃபோனைப் போட்டுச் சொன்னீரே-ன்னு ஒரு காரணத்துக்காகவே படத்தைப் பார்த்தேன் மக்கா! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை மக்கா! என்னைப் பழி வாங்க எத்தினி நாளாத் திட்டம் போட்ட வெட்டி? :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஸ்டெப்னியா வெச்சிக்க பாத்தியானு ஹீரோயின் கேக்கும் போது.

என் ஒவ்வொரு ஸ்டெப்பும் நீ, ஸ்டெப் நீ//

வேணாம்! அடங்கிரு வெட்டி! அடங்கிரு! :-)))

Sathiya said...

"Jyothi and Varnika are two Mumbai models who are also new to this field will be making the debut in this film."
"genji kekkaren Sogathai pangupodanum theriyumulla!!"
இத படிச்சுட்டு சிரிப்ப அடக்க முடியல. இந்த படத்த மட்டும் காதலர் தினம் குனால் பார்த்து இருந்தா கண்டிப்பா தற்கொலை பண்ணிகிட்டிருக்க மாட்டாரு....பாவம்....இவனெல்லாம் உசுரோட இருக்கும் போது இனி எவனும் தற்கொலை பத்தி நெனச்சே பார்க்க கூடாது;)

இராம்/Raam said...

ஏலேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னா ஆச்சு?? நல்லாதானய்யா இருந்தீங்க??? :(

ILA... said...

எலேய்ய்ய், வெட்டி போட்டுருவேன்....


(ஏழுமலையில சிம்ரன் சொன்ன மாதிரி..).

ILA... said...

//Jyothi and Varnika are two Mumbai models who are also new to this field will be making the debut in this film."/
ரெண்டு சின்ன புள்ளைங்க வாழ்க்கைய கெடுத்த பாவம் வேற சேர்ந்துகிச்சு..

Anonymous said...

இது சொந்த விமர்சனமா? இல்ல ஆர்குட்டுல இருந்து சுட்ட விமர்சனமா? அங்க இதையே இங்க்லீசுல படிச்ச மாதிரி இருந்தது. ஏன் இந்த வெட்டி விளம்பரம்?

//எதையும் தாங்கும் இதயமய்யா உமக்கு :)
ஒரு பாட்டைப் பாத்துட்டே அரண்டு போய் கெடக்கோம் இங்கே.. முழுப்படத்தையும் பாத்துட்டீரே??///
உலகம் இன்னமும் நம்மளை நம்பிட்டு இருக்கு ஹய்யோ ஹய்யோ

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

இது சொந்த விமர்சனமா? இல்ல ஆர்குட்டுல இருந்து சுட்ட விமர்சனமா? அங்க இதையே இங்க்லீசுல படிச்ச மாதிரி இருந்தது. ஏன் இந்த வெட்டி விளம்பரம்?

//எதையும் தாங்கும் இதயமய்யா உமக்கு :)
ஒரு பாட்டைப் பாத்துட்டே அரண்டு போய் கெடக்கோம் இங்கே.. முழுப்படத்தையும் பாத்துட்டீரே??///
உலகம் இன்னமும் நம்மளை நம்பிட்டு இருக்கு ஹய்யோ ஹய்யோ//

ஹலோ,
படத்தை ரெண்டு தடவை பார்த்தாச்சு...

இதுல நான் விமர்சனமே எழுதல. எங்க இருந்து காப்பி அடிக்கிறது???

இதெல்லாம் படம் பார்த்து முடிச்சி நான் KRSக்கும் , கப்பிக்கும் போன் போட்டு சொன்னது...

ஆர்குட்ல இருந்து எடுத்ததை அப்படியே போட்டிருக்கேன்... bcos I liked it :-)

Ram Ravishankar said...

When Marc Andreesen introduced Netscape about 10 years ago, there were similar reaction (ridiculing) from the media. Now the media is doing the same thing to Sam Anderson. I know Bill Gates has started noticing Sam that has an unparalled vision in totally different dimension.
Let me ask you ... Were you able to visualize a romantic duet with male and female in two different locations - yet create an impression that they were together .. thats what Sam has done here; thats what I call futuristic vision and thats what Bill is looking to capitalize as a ground breaking idea!

ADHU!!

Anonymous said...

You have to go still long mile to understand this World Class Cinema. I hope It will appear in Vikatan's World Cinema article soon.

வால்பையன் said...

இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்திங்களா?
என்னால் நம்ப முடியவில்லை! உடனே மருத்துவரை பார்த்து சோதனை செய்யவும்.
ஏதேனும் மனசிதைவு நோய்க்கு ஆளாகியிருகிறீர்களா என்று தெரிந்து கொள்ள!
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் தைரியம்

வால்பையன்

SathyaPriyan said...

வெட்டி உங்க பதிவு, ஆர்குட்லே அவங்க பன்னி இருக்கர அலம்பல் இதெல்லாம் பாத்து படிச்சு என்னாலே சிரிப்ப அடக்க முடியலே.

நான் படத்த பார்த்தே ஆகனும். சுட்டி இருந்தா தர முடியுமா?

வெட்டிப்பயல் said...

// SathyaPriyan said...

வெட்டி உங்க பதிவு, ஆர்குட்லே அவங்க பன்னி இருக்கர அலம்பல் இதெல்லாம் பாத்து படிச்சு என்னாலே சிரிப்ப அடக்க முடியலே.

நான் படத்த பார்த்தே ஆகனும். சுட்டி இருந்தா தர முடியுமா?//

இப்ப ஆபிஸ்ல இருக்கேன்... வீட்டுக்கு போனவுடனே தரேன் :-)

வெட்டிப்பயல் said...

//Collapse comments

Blogger தஞ்சாவூரான் said...

வெட்டி,

எதையும் தாங்கும் இதயமய்யா உமக்கு :)
ஒரு பாட்டைப் பாத்துட்டே அரண்டு போய் கெடக்கோம் இங்கே.. முழுப்படத்தையும் பாத்துட்டீரே??//

அந்த பாட்டை பார்த்ததும் படம் பார்க்காம இருக்க முடியல... ஏற்கனவே ரெண்டு தடவை பார்த்தாச்சு. இன்னைக்கு ஃபிரெண்ட் ஒருத்தன் இந்த பாட்டை பார்த்துட்டு எங்க வீட்டுக்கு படம் பார்க்க வறேனு சொல்லியிருக்கான்...

நாங்க பேரரசு படத்தையே ரெண்டு மூணு தடவை பார்க்கற ஆளுங்க ;)

வெட்டிப்பயல் said...

// CVR said...

LOLOLOL!!!

கண்ணுல தண்ணி வந்துருச்சு மக்கா!!
இந்த விமர்சனத்தை படிக்கும்போதே இப்படி இருக்கே,இந்த படத்தை பாத்தா எப்படி இருக்கும்??

கற்பனை பண்ணி கூட பாக்க முடியல அண்ணாச்சி!! :-D//

தல,
இந்த படமெல்லாம் தனியா பாக்கற படமில்லை. அதனால சீக்கிரமே குடும்பமா சேர்ந்து பாருங்க ;)

வெட்டிப்பயல் said...

//தமிழ் பிரியன் said...

/// தஞ்சாவூரான் said...எதையும் தாங்கும் இதயமய்யா உமக்கு :)
ஒரு பாட்டைப் பாத்துட்டே அரண்டு போய் கெடக்கோம் இங்கே.. முழுப்படத்தையும் பாத்துட்டீரே??//
ரிப்பீட்ட்ட்ட்டு
முடியலைங்க :)))))))))//

முழுக்க முழுக்க காமெடி படங்க. தாராளமா பார்க்கலாம் ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

இந்த படத்தை முழுசா வேற பார்த்தீங்களா?? ரெண்டு பாட்டு பார்க்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடுச்சு! :))//

கப்பி,
அந்த ரெண்டு பாட்டையும் நாலஞ்சு தடவைக்கு மேல பார்த்தாச்சு... சூப்பர் படம்பா...

ப்ரவீன் காந்த அளவுக்கு நம்ம ஹீரோ கொல வெறியோட நடிக்கல ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

மொதல்ல டைட்டில்ல 'தல'யைத் தூக்குங்கய்யா...'தல'யை அசிங்கப்படுத்தாதீங்க!! ரணகளமாயிடும்!

சிரிப்பான்லாம் போடல...சீரியஸு..//

கப்பி,
நோ ரென்சன் ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வெட்டி உண்மையிலேயே நீங்க எழுதின பதிவுதானா? ரொம்ப எழுத்துப்பிழைகள் இருக்கு!

இல்லை, இந்த படம் பார்த்த எபெக்டா? :)//

கொத்ஸ்,
எனக்கு அதிகமா தெரியலையே :-(
நீங்களே கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் :-((((

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

தல,
படத்தோட பேர சொல்லவே இல்ல. . .
இல்ல வக்கவே இல்லையா. . . ?

இல்ல நான் சரியா படிக்கலையா? அத தெரிஞ்சுக்க ரெண்டு தடவ படிச்சனே. . . .//

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதுல படத்தோட பேர் விட்டு போச்சு.. இப்ப படத்தோட பேர் பதிவுல போட்டாச்சு ;)

வெட்டிப்பயல் said...

//
அட, பருத்தி வீரஞ் சொல்லி இன்னுமா மாத்தலை?

வெட்டி, விஷப் பரீட்சை வேணாம்!
பருத்தி வீரன் ஊதினாப் பஞ்சாப் பறந்துடுவ! ஒடனடியா மாத்து!! :-)
//
வெச்ச தலைப்பு வெச்சது தான் ;)

//
நீங்க ஃபோனைப் போட்டுச் சொன்னீரே-ன்னு ஒரு காரணத்துக்காகவே படத்தைப் பார்த்தேன் மக்கா! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை மக்கா! என்னைப் பழி வாங்க எத்தினி நாளாத் திட்டம் போட்ட வெட்டி? :-))))//

ஏன்? படத்துக்கு என்ன குறைச்சல்???

வெட்டிப்பயல் said...

//
வேணாம்! அடங்கிரு வெட்டி! அடங்கிரு! :-)))//

முடியாது...

படத்துக்கு Captionனே Step Nee தான்...

G.Ragavan said...

தென்னகத்துச் சிங்கமாம்
தமிழ்த் திரையுலகம் பிழைக்க வந்த செல்வமாம்
வெள்ளித்திரைக்கு வெள்ளையடிக்க வந்த வள்ளலாம்
ஆடல் அழகனாம்
பாடல் புலவனாம்
அனைத்தும் சிறக்கும் நடிப்புச் சிற்பியாம் சாம் ஆண்டர்சன் அவர்களின் யாருக்கு யாரோ திரைப்படத்தைப் பார்த்து ரசித்து விமர்சனமும் இட்ட வெட்டியார்....நமது இதயங்களில் தேனைக் கொட்டியார். அப்படியே இந்தப் படத்துக்கு நீங்கள் கொடுக்க வேண்டுமே சுட்டியார். இங்கேயே எப்படி..எங்கே இறக்க (அதாவது சாக அல்ல) வேண்டும் என்று கூறுக.

aathi said...

வெட்டி....!! ஒருவேளை இவர் ராமராஜன் சொந்தகாரனாக இருப்பாரே?? :p

நாடோடி இலக்கியன் said...

வெட்டி,
ராசாத்தி என் ஆச ராசாத்தி பாட்டத்தான் அடுத்து என்னோட ரிங்டோன்,என்ன ஒரு கம்போசிங்,வரிகள் ஒன்னுஒன்னும் -வைரமுத்து,நா.முத்துக்குமாரெல்லாம் யாருன்னு கேட்க வைக்குது.
சாம் வசனம் பேசி நடிச்ச அசதியிலே அப்பப்போ ஒரு 5 நிமிடம் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சிடுறாரு,அத யாரும் டான்ஸ்ன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம்.
பருத்தி வீரனுக்கு அடுத்ததா இந்த படத்த பத்திதான் நான் நட்பு வட்டாரங்களில் அதிகமா பேசியியிருக்கேன்.
எது எப்படியோ யாருக்கு யாரோ பரவலா பேசப்படுகிற படமாச்சு அந்த வகையில் இயக்குனருக்கு வெற்றியே!
மக்களே யாராவது சாமோட முகவரி தெரிஞ்சா சொல்லுங்க ரசிகர் மன்றம் அமைப்பது பற்றி பேசணும்.
நல்ல கெளப்புராய்ங்கடா பீதிய.........நல்ல வேளையா இந்த பாட்ட பார்க்கையிலே பக்கத்துல சுவரு இல்ல.

Anonymous said...

Full movie : http://www.stage6.com/user/Kiruthigan/video/2147156/Yaarukku-Yaro

Ram Ravishankar said...

Did you guys notice the amount of 'reuse' they've done in this movie .. thats amazing. Almost all the shots have been reused several places in the movie.

I've watched movies like Godfather, Few Good Men ... several times. Everytime I watch them, I learn new stuff from them.

Likewise, I've watched the songs alone from this movie several times and I have already learnt so many things! Its just amazing!!

On another note, if you break this movie apart in to bite size chunks, it can fill as comedy tracks in other movies - it might even become a trend!

Arunkumar said...

ippidi oru padam vandhurka?
mudiyala da saami

ILA(a)இளா said...

நாலு பேரு நல்ல படம் பார்க்கனும்னா இந்த பின்னூட்டம் தப்பே இல்லை-Movie Link
Still Pics of the Gr8 Star

பினாத்தல் சுரேஷ் said...

//இங்கேயே எப்படி..எங்கே இறக்க (அதாவது சாக அல்ல) வேண்டும் என்று கூறுக.// என்ன ஜிரா.. ரெண்டுத்துக்கும் என்ன வித்தியாசம்?

படம் அருமையா வந்துருக்குன்னு சொல்லுங்க வெட்டி. நாக்குலேயே ஒட்டிக்கிச்சு ராசாத்தி என் ஆசாஆஆஆஇ ராசாத்தி..

வவ்வால் said...

வெட்டி,

யார்யா இவங்க , எதுக்கு வராங்க ? எங்கே இருந்துயா வராங்க?... ஏன் ...ஏன் இப்படி....நிறுத்துங்க ...எல்லாரும் நிறுத்துங்க...இதைக்கொடுமைனு சொன்ன கொடுமை கோச்சுக்கும் :-))

ஒரு ரகசிய தகவல், இந்த படம் தான் ஒலக சினிமா இஸ்டரிலவே கேமரா செல் போனிலேயே ஒளிப்பதிவு செய்யப்பட்ட படமாம் :-))

வற்றாயிருப்பு சுந்தர் said...

யோவ்

போன மாசம் இந்தப் பதிவோட தலைப்பை தமிழ்மணத்துல பாத்தப்ப 'சரி வேட்டையாடு விளையாடுல தலைவரோட வர்ற ஆண்டர்சனைப் பத்திதான் எதையோ எழுதிருக்காப்புல - ஏன் படம் வந்து இம்புட்டு காலம் கழிச்சு எழுதிருக்காரு'ன்னு படிக்காமயே விட்டுட்டேன்.

அப்படியே மறந்து தொலைச்சிருக்கலாம்.

இன்னிக்கு தமிழ்மண முகப்புல 'சூப்பர் ஸ்டார் சாம் ஆண்டர்சன்'னு கிறுக்கன் எழுதின பதிவோட தலைப்பைப் பாத்ததும் 'ஒரு வேளை வே.வி. ஆண்டர்சன் புதுசா தமிழ்ப்படத்துல ஹீரோவா நடிச்சிருக்காரு போல. அதான் ஆளாளுக்குப் பரபரப்பா எழுதறாங்க போல'ன்னு நெனச்சு அந்தப் பதிவத் தெறந்து படிச்சு மோசம் போனேனே சாமி!

'அப்ப வெட்டி போன மாசம் எழுதினது?'ன்னு கேட்டுக்கிட்டு இங்கிட்டு வந்து பாத்தாதான் சொ.செ.சூன்யம் வச்சிக்கிட்டது புரிஞ்சது.

இது தெளிய நாலு மாசம் ஆகுமே - வீட்டுக்குப் போனதும் மந்திரிக்கச் சொல்லணும்.

அய்யோ ராத்திரி கனா வந்து அலறப் போறேன். கேட்டாங்கன்னா ஒங்களைக் கைகாட்டி விட்ற வேண்டியதுதான்!

நல்லா இருங்கடே!

வற்றாயிருப்பு சுந்தர் said...

வீட்டுக்குப் போயி மறுபடியும் ராசாத்தி பாட்டு முழுவதையும் பார்த்தேன். எங்க முழுக்க பார்க்க முடிஞ்சது. பல்லவி முடிஞ்சதுமே விழுந்து பொரண்டு சிரிக்க ஆரம்பிச்சு கண்ல தண்ணியும் தலைவலியும் வந்துடுச்சு. சரணத்தைப் பாக்கவே முடியலை! :(

Youtube ல ஒரு 'நேயர்' போட்டிருந்த பின்னூட்டத்தை வேற படிச்சுட்டு எந்திரிச்சு வெளிய ஓடிப்போய் வேற சிரிச்சேன். அவரு எழுதியிருக்கறது

' I think the Director and the Cameraman would have run away from the spot after starting the camera and shouting 'action (??)'!

Another comment was:

'The greatest stress relief of the year 2008!'

பாட்டு முடியும்போது கடைசில காரை மூணு தடவை இடம் வருவாங்களே (வலம் வர நினைச்சு இடம் வந்துட்டாங்க)- சாம் ஆண்டர்சனை அந்த பொண்ணு பலியாடு மாதிரி இழுத்துட்டுப் போகும்!

'இந்த ஆட்சியில் தீவிரவாதிகளுக்கு பயமற்றுப் போய்விட்டது' என்று சோ எழுதுவது ஏன் என்று இப்பத்தான் புரிஞ்சது! மக்களை இந்த அளவுக்குப் பாதித்த படத்தை எடுத்த அந்தத் தீவிரவாதக் கூட்டத்தை அரசு ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பதில் எனக்கும் ஆச்சரியம்தான்!

இந்தப் படத்தை எல்லா மொழிலயும் மொழிமாற்றம் செஞ்சு வெளியிட்டா மத்தியில் ஆட்சி கவிழும்ங்கற அட்டகாசமான வாய்ப்பை ஏன் எதிர்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளாமல் இன்னும் இருக்கின்றன என்பதும் எனக்கு ஆச்சரியம்தான்.

ஆங்கில சப்-டைட்டிலோட இங்கிட்டு வெளியிட்டா (ஆரம்பத்துல ஸ்பான்ஸர்டு பை ஒபாமா-ங்கற ஸ்லைடோட) ஹிலாரி சுலபமா ஜெயிச்சுடுவாங்க - இப்படி மில்லியன் மில்லியனா செலவழிக்க வேண்டாமே!

Pondy-Barani said...

ஸ்ஸப்பா...
எப்படி எல்லாம் பயமுறுதரங்க..
கப்பி பதிவ பார்திட்டே சோட தெளிக்க ஆள் இல்லாம 2 நாள் கிடந்தேன்..
இப்ப நீங்களும...
முடியல......
சொரம் வர மதிரி இருக்கு....
உங்களொட துனிச்சல்......

Pondy-Barani said...

ஸ்ஸப்பா...
எப்படி எல்லாம் பயமுறுதரங்க..
கப்பி பதிவ பார்திட்டே சோட தெளிக்க ஆள் இல்லாம 2 நாள் கிடந்தேன்..
இப்ப நீங்களும...
முடியல......
சொரம் வர மதிரி இருக்கு....
உங்களோட துணிச்சல்.....

எம்.ரிஷான் ஷெரீப் said...

யப்பா..இந்தப் படத்துக்குன்னு ஒரு பதிவா?
அந்தக் கொடுமையோட சில சீன்கள யூ ட்யூப்ல பார்த்துத் தொலைச்சிட்டேன்.
யாருங்க அந்தத் தயாரிப்பாளர்? இப்போ எங்கேயாவது ,யாரையாவது தலையில துண்டோட பார்த்திங்கன்னா எதுக்கு இப்படி ஒரு படம் எடுத்தீங்கன்னு மட்டும் கேட்டுடாதீங்க.நொந்துடுவார் :)

அப்புறம் பட பூஜையன்னிக்கு டைரக்டர் சொன்னாராம்."இந்தப் படம் 'காதல் 'படம் போல புதுமுகங்கள வச்சு ரொம்ப வித்தியாசமான,தமிழ்சினிமாவுல யாருமே இதுவரை காட்டாத காதலச் சொல்லும்"னு.


நிஜம்தானே? இப்படி ஒரு கொடுமையை யாருமே இதுவரை காட்டலியே :)

கடைசி பக்கம் said...

:-)

:-)))

:-)))))

thanks for making me laughter.

நிஜமா நல்லவன் said...

தெரியாத்தனமா இந்தப்பக்கம் வந்துட்டேனே....இனிமே புலம்பி என்ன ஆகப்போகுது....ஆனாலும் முழுப்படமும் பார்த்துட்டு பதிவும் போட்டு இருக்கீங்களே....தஞ்சாவூரான் அண்ணாச்சி சொல்லி இருக்கிற மாதிரி நீங்க எதையும் தாங்கும் இதயம் உள்ளவரு தாங்கோ...:)