தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, January 10, 2008

மறுபடியும் Fake

Fake போடறது எப்படினு ஒரு தொடர் ஆரம்பிச்சி பாதியிலே நிறுத்தியாச்சி. அதை தொடரலாம்னு யோசிக்கும் போதே கண்டிப்பா அதை எழுதி தான் ஆகனுமானு மனசுல ஒரு கேள்வி வந்துச்சு. ரொம்ப பழக்கமானவங்க எல்லாம் வந்து வேண்டாம்பானு சொன்னதுக்கப்பறமும் எழுதறது ஒரு மாதிரி தான் இருக்கு.

சரி எதுக்கு இவ்வளவு சிந்திச்சிட்டு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்த மாதிரி வேலைல சேர்ந்த என் நண்பர்கள் ஒரு சிலருக்கு ஃபோன் பண்ணி கேட்டுடலாம்னு முடிவு பண்ணி ஃபோன் பண்ணேன். அதை கேட்டதும் எல்லாருமே சொன்னது "வேண்டாம்டா... எழுதாத".

ஏண்டா இப்படி சொல்றீங்கனு கேட்கும் போது தான் அவுங்க பட்ட கஷ்டமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சாங்க. முதல் நாள்ல இருந்து பிரச்சனை தான். ஏதாவது ஒன்னு தெரியுமானு கேட்டா, அது நம்ம ஃபேக் போட்ட ப்ராஜக்ட்ல வேல செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கனுமா இல்லை சும்மா தெரியுமானு கேக்கறாரானு தெரியாது.

இதுவே செத்து செத்து பிழைக்கிற மாதிரி தான் இருக்கும். அடுத்து ஏதாவது டீம் லஞ்ச்னு போனா அங்க யாராவது நீங்க முன்னாடி எந்த கம்பெனில வேலை செஞ்சிங்க? அங்க இவரை தெரியுமா அவரை தெரியுமானு கேட்கும் போதெல்லாம் திக் திக்னு இருக்கும்.

வேலை கிடைச்சிடுச்சினு வீட்ல எல்லாம் பெரிய பெரிய ப்ளான் போடும் போதும் திக் திக்னு இருக்கும். ஏதாவது இன்சூரன்ஸ் எடுக்கலாம்னு வீட்ல சொல்லும் போது அடுத்த மாசமே நம்ம மாட்டிக்கிட்டு வேலை போயிடுச்சினா என்ன பண்றதுனு யோசிச்சி வேண்டாம்னு சொல்லும் போது அப்பா, அம்மாக்கு காரணம் சொல்றதும் ரொம்ப கஷ்டம். அது இல்லாம இது வெளிய தெரிஞ்சிடுச்சினா சொந்தக்காரவங்க எல்லாம் என்ன பேசுவாங்களோனு ஒரு பயம் இன்னும் இருக்க தான் செய்யுது. சில சமயங்கள்ல கனவுல கூட வந்திருக்கு.

நாளாக நாளாக இந்த பயம் மறைஞ்சாலும் இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கிட்டு தான் இருக்குது. வீட்ல கல்யாண பேச்சு அடிபடும் போது கூட "ஐயய்யோ இப்ப மாட்டிக்கிட்டா எல்லாருக்கும் தெரிஞ்சிடுமேனு" பயத்துல இன்னும் ரெண்டு வருஷம் தள்ளி போகட்டும்னு சொல்ல வேண்டியதா போகுது. இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை தான். இருந்தாலும் இந்த பயம் வந்து மனசுல உக்காருவதை தவிர்க்க முடியல. இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சேர்ந்துட்டா வேலை போனா கூட ஈஸியா வேலை வாங்கிடலாம்னு தோணுது.

எல்லாரும் பண்றாங்களேனு கூட்டமா சேர்ந்து பண்ணதுதான். ஆனா இப்ப ஒரு ஸ்டேடஸ் வந்ததுக்கப்பறம் பயம் வந்து ஒட்டிக்கிட்டே தான் இருக்கு. கீழ நிக்கிறப்ப விழுந்தா பிரச்சனையில்லை. ஏணில ஏறிட்டு இருக்கும் போது எல்லாரும் நம்மல பார்க்கும் போது விழுந்தா ரொம்ப அசிங்கம் தானே?

நீ கேட்டியேனு தான் இவ்வளவும் சொல்றோம், வெளில பார்க்க சந்தோஷமா இருக்காங்களே அதனால நல்லா தான் இருக்காங்கனு நினைச்சிடாத. இன்னும் நிறையா இருக்கு...

எது எப்படியோ, நீ இதை பத்தி எழுதாத. அவ்வளவு தான்...

..................................

ஹிம்ம்ம்ம்... இதுக்கு மேல என்ன சொல்லறதுனு புரியாம தான் இருக்கேன்!!!

8 comments:

Anonymous said...

//ஹிம்ம்ம்ம்... இதுக்கு மேல என்ன சொல்லறதுனு புரியாம தான் இருக்கேன்!!!//

அதான் அவ்ளோ பளிச்சுன்னு போட்டு உடைச்சிருக்காங்களே உங்க தோஸ்துங்க :-) இதோட ஏறக்கட்டிட்டு, 'ஐடி வேலைக்குத் தயார் செய்து கொள்வது எப்படி?' தொடர் எழுதுங்க..நெசமாவே பலருக்கும் உபயோகமாயிருக்கும்.

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, இதுக்கு மேல என்ன குழப்பம். இனிமே தெலுங்கு கதைதான் எழுத முடியாது! வேற எதாவது எழுதுங்க!! :))

வெட்டிப்பயல் said...

//icarusprakash said...

//ஹிம்ம்ம்ம்... இதுக்கு மேல என்ன சொல்லறதுனு புரியாம தான் இருக்கேன்!!!//

அதான் அவ்ளோ பளிச்சுன்னு போட்டு உடைச்சிருக்காங்களே உங்க தோஸ்துங்க :-) இதோட ஏறக்கட்டிட்டு, 'ஐடி வேலைக்குத் தயார் செய்து கொள்வது எப்படி?' தொடர் எழுதுங்க..நெசமாவே பலருக்கும் உபயோகமாயிருக்கும்.//

ஆமாங்க.. இதோட ஏறக்கட்டியாச்சு. தப்பா சரியானு விவாதம் பண்றதைவிட அதுல இருக்குற மலையளவு பிரச்சனை தான் இப்ப சிந்தனைல இருக்கு. அதனால அந்த தொடரை நிறுத்திட்டு, பழைய பதிவையும் தூக்கிடறேன்...

நீங்க சொன்ன தொடர் நான் ஏற்கனவே எழுதியிருக்கேன்.. இதோ லிங்

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வெட்டி, இதுக்கு மேல என்ன குழப்பம். இனிமே தெலுங்கு கதைதான் எழுத முடியாது! வேற எதாவது எழுதுங்க!! :))//

கொத்ஸ்,
பழைய பதிவையும் தூக்கியாச்சு... ஓரளவுக்கு தெளிவாவும் ஆகியாச்சு...

தெலுங்கு கதை ஏன் எழுத முடியாது??? ;)

கிருஷ்ணா said...

ரொம்பச் சரியான முடிவு வெட்டியாரே.
என் பதிவு, நான் எது வேண்டுமானாலும் எழுதுவேன் என்றில்லாமல் பலரையும் கலந்தாலோசிக்கும் உங்கள் பண்பு . . .

மிகவும் உயர்ந்தது.

கிருஷ்ணா said...

ரொம்பச் சரியான முடிவு வெட்டியாரே.
என் பதிவு, நான் எது வேண்டுமானாலும் எழுதுவேன் என்றில்லாமல் பலரையும் கலந்தாலோசிக்கும் உங்கள் பண்பு . . .

மிகவும் உயர்ந்தது.

project manager said...

happy that you stopped this and also exposed the other side of the problem.

Dreamzz said...

haha.. ennatha solla! I think there are some necessary evils in our society.. athula ithuvum onnu. eluthina athai angagareepathu pol ayidumnu solrathu ennamo unmai...

but as some one said... coinoda innoru sideum solli irukeenga. athu varaikum ok....

enna ketta continue panni irukalam ;)
but again :D