தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 16, 2008

விஜய்க்கு டாக்டர் பட்டம் சரியே!!!

எல்லா விசேஷத்துக்கும் சன் டீவில விஜய் பேட்டி வரது ஒரு சம்பிரதாயமாகி போச்சு. இந்த வருஷம் அந்த கொடுமையை பார்க்கல. அதனால அது எப்படி இருந்திருக்கும் ஒரு கற்பனை.

விஜயசாரதி : எல்லாருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல்னா உங்களுக்கு எல்லாம் என்ன ஞாபகம் வரும், காலைல ஒருத்தவங்க பாடுவாங்களே அந்த புரியாத பாட்டு, அப்பறம் பொங்கல் சிறப்பு பாடல்கள், பொங்கல் புதுப்படங்கள் சிறப்பு திரைப்பார்வை, சாலமன் பாப்பையா சிறப்பு பட்டி மன்றம். ஆனா இங்க அது மட்டுமில்லைங்க டாக்டர் விஜயோட சிறப்பு பேட்டியும் இருக்கு. வாங்க இப்ப நிகழ்ச்சிக்கு போகலாம்.

விஜய், உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க.

வி: தமிழ்நாட்ல என்னை அறிமுகப்படுத்திக்கோனு சொன்ன முதல் காம்பைரர் நீ தான்.

வி.சா: (மனதிற்குள் : ஆஹா. ஆரம்பத்துலயே பஞ்ச் டையலாக் பேசறதுக்கு சான்ஸ் கொடுத்துட்டனே) நீங்கள் கேட்டவை ஞாபகத்துல சொல்லிட்டேன். வணக்கம் டாக்டர்.

வி: வணக்கங்கணா. எல்லாருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

வி.சா: பொங்கல் பண்டிகையை பத்தி என்ன நினைக்கறீங்க.

வி: பொங்கல் பண்டிகை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுவும் போக்கிரி பொங்கல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வி.சா: ஆமாம் நீங்க கூட ரவுடியா நடிச்சி கடைசில பார்த்தா NCCல முதல் ப்ரைஸ் வாங்கன மாதிரி காண்பிச்சாங்களே அந்த படம் தானே. எனக்கு கூட ரொம்ப பிடிக்கும்.

வி: ஏய்!!! அது NCC இல்லை போலிஸ்.

வி.சா: நிஜமாவா? உங்களை அந்த ட்ரெஸ்ல பார்க்க NCC மாதிரி தான் இருந்துச்சு. எதுக்கும் கீழ இது NCC பெரெட் இல்லைனு எழுதியிருந்தா தெளிவா பார்த்திருக்கலாம். சரி, அழகிய தமிழ் மகன் படம் நடிக்க எப்படி ஒத்துக்கீட்டீங்க?

வி: எவ்வளவோ கேவலமான படம் பண்ணீட்டீங்க இதை பண்ண மாட்டீங்களானு என்கிட்ட டைரக்டர் கேட்டாரு. அவர் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதான் நடிச்சேன்.

வி.சா: கேக்கவே இண்ட்ரஸ்டிங்கா இருக்கு. அப்பறம்?

வி: மக்களும் என்னோட எவ்வளவோ (மட்டமான) படத்தை பாத்திருக்காங்க இதை பார்க்கமாட்டாங்களானு பார்த்தேன். ஏமாத்திட்டாங்க.

வி.சா: உங்களோட அடுத்த படத்துல என்ன ரோல் பண்ண போறீங்க?

வி: சூப்பர் ஸ்டார் நடிகரா அடுத்த படத்துல வர போறார்னு தெரிஞ்சதும் நானும் என் ரியல் லைஃப் கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன்.

வி.சா: அது என்ன ரோல்?

வி: என்னங்க பொங்கல் அதுவுமா விளையாடறீங்க? டாக்டர் ரோல் தான்.

வி.சா:ஓ... அதுல என்ன பஞ்ச் டைலாக் பேசுவீங்க?

வி: கையில் அருவாளுடன்
"ஆயிரம் பேரை கொன்னா அரை வைத்தியன்
நான் முழு வைத்தியண்டா" (ஹை பிச்சில் சொல்கிறார்)

வி.சா: (மனதிற்குள் : இது வரைக்கும் உங்க படம் பார்த்து செத்தவங்க லிஸ்ட் எடுத்தா உங்களுக்கு நாலஞ்சி டாக்டர் பட்டம் கொடுக்கலாமே)

45 comments:

G.Ragavan said...

குடுக்கலாம்யா...ஒரு பத்துப் பதினைஞ்சு குடுக்கனும். அவரு சிறந்த அறுவை நிபுணர்னும் நெறைய நிரூபிச்சிருக்காரு. டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கூடப் பட்டம் கிழிக்கலாம் அவருக்காக.

இலவசக்கொத்தனார் said...

டாக்டர் வெட்டி வாழ்க!! :))

அரை பிளேடு said...

தமிழ் நாட்டு சனங்க செஞ்ச புண்ணியம் பொங்கலுக்கு டாக்டர் விசய் ரீமேக் பண்ண படம் எதுவும் வரலை. :))

கோவி.கண்ணன் said...

எங்க தலைவனுக்கு (வெறும்) டாக்டர் பட்டம் சரியே என்று அவமானப்படுத்திய வெட்டி பாலாஜிக்கு கண்டனம், தலைவர் பாரத இரத்னா பட்டத்துக்கு தகுதியானவர் என்பதை அவை அடக்கத்துடனும் பெருமையுடனும் கூறிக் கொள்கிறேன்.

பாரத ரத்னா டாக்டர் விஜய் வாழ்க !

அனுசுயா said...

சிறந்த டாக்டர் பட்டம் பெற்ற விஜய எதிர்த்து நீங்க பதிவு போட்டதால அவரு இன்னும் 5 படம் ரீமேக் பண்ண போறதா கேள்வி பட்டேன். பார்த்து மகிழுங்க வெட்டி :)

ILA(a)இளா said...

சரியாப்போச்சு.. இதுல இது வேறயா? நாங்கெல்லாம் என்னய்யா பாவம் பண்ணினோம்?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொங்கல் அதுவுமா இளைய தளபதிய பொங்கிட்டீங்க போல! :-)

என்ன பாலாஜி, இன்னொரு டெவில் ஷோவாக்கும்னு பார்த்தா, படீர்-னு முடிச்சிட்டீங்க!

ஜீவா (Jeeva Venkataraman) said...

//பொங்கல் அதுவுமா இளைய தளபதிய பொங்கிட்டீங்க போல! :-)//
பொங்கல் தூள்!

cheena (சீனா) said...

உணமையிலேயே அவர் NCC Under Officer மாதிரி தான் இருந்தார் - IPS ரேஞ்செல்லாமில்ல. ATM லே சொதப்பல் - என்ன பண்றது - எவ்ளோ பொற்த்துக்கறோம் - இதப் பொறுத்துக்க மாட்டோமா ? - ம்ம்ம்ம்ம் - வாழ்க மருத்துவர் விஜய்.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

குடுக்கலாம்யா...ஒரு பத்துப் பதினைஞ்சு குடுக்கனும். அவரு சிறந்த அறுவை நிபுணர்னும் நெறைய நிரூபிச்சிருக்காரு. டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கூடப் பட்டம் கிழிக்கலாம் அவருக்காக.//

ஹி ஹி ஹி...
அடுத்து யார் டாக்டர் பட்டம் வாங்க போறாங்கனு ஆவலுடன் காத்திருக்கிறேன் ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

டாக்டர் வெட்டி வாழ்க!! :))//

மிக்க நன்றி டாக்டர் கொத்ஸ் ;)

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

தமிழ் நாட்டு சனங்க செஞ்ச புண்ணியம் பொங்கலுக்கு டாக்டர் விசய் ரீமேக் பண்ண படம் எதுவும் வரலை. :))//

அதான் தீபாவளி(லி)க்கு ATM கொடுத்தாரில்லை... (தெலுங்குல அதுக்கப்பறம் ரீமேக் பண்ற மாதிரி படம் எதுவும் வரலை அதான்)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

எங்க தலைவனுக்கு (வெறும்) டாக்டர் பட்டம் சரியே என்று அவமானப்படுத்திய வெட்டி பாலாஜிக்கு கண்டனம், தலைவர் பாரத இரத்னா பட்டத்துக்கு தகுதியானவர் என்பதை அவை அடக்கத்துடனும் பெருமையுடனும் கூறிக் கொள்கிறேன்.

பாரத ரத்னா டாக்டர் விஜய் வாழ்க !//

அவருக்கு அமைதிக்கான நோ'பல்' பரிசு கொடுக்கனும்னு பரிந்துரைச்சிருக்காங்கலாம். நீங்க என்னனா பாரத ரத்னாவை பத்தி பேசிட்டு இருக்கீங்க ;)

Boston Bala said...

விஜயசாரதி வசனங்கள், அவரையே பிரதி எடுத்த மாதிரி நல்ல பொருத்தம். அவர் பகுதி பிடித்திருந்தது.

டாக்டர் அண்ணாவுக்கு இன்னும் கொஞ்சம் சூடு காட்டியிருக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

//அனுசுயா said...

சிறந்த டாக்டர் பட்டம் பெற்ற விஜய எதிர்த்து நீங்க பதிவு போட்டதால அவரு இன்னும் 5 படம் ரீமேக் பண்ண போறதா கேள்வி பட்டேன். பார்த்து மகிழுங்க வெட்டி :)//

அப்ப ஆறாவது படம் சொந்தமா நடிச்சிடுவாரா? இது எங்க இளைய தளபதி டாக்டர் விஜயை அவமானப்படுத்தற மாதிரி இருக்கு...

இதை நாங்க காட்டுத்தனமாக கண்டிக்கிறோம் ;)

கப்பி பய said...

:))))


அதான் டாக்டர் படம் எதுவும் வரலைல..கொஞ்ச நாள் மறக்கவிட மாட்டீங்களா? :))))

வெட்டிப்பயல் said...

// ILA(a)இளா said...

சரியாப்போச்சு.. இதுல இது வேறயா? நாங்கெல்லாம் என்னய்யா பாவம் பண்ணினோம்?//

எவ்வளவோ தாங்கிக்கிட்டீங்க. இதை தாங்க மாட்டீங்களா?

bala said...

வெட்டிப் பயல் அய்யா,

கனிமொழி அம்மா, கவிஞர்னா அழகிய(?) தமிழ்மகன் அய்யாவுக்கு டபுள் டாக்ட்ரேட் கொடுக்கலாம்;என்னைக் கேட்டா, மோடி அய்யா கூட இரண்டு தமிழ் வார்த்தைகள் பேசியதால அவருக்கும் முனைவர் பட்டம் கொடுக்கலாம்.சினிமா வசனம் மஞ்ச துண்டு,புரட்சித் தாய்,புரட்சி நடிகர் எல்லாரும் டாக்ட்ரேட் வாங்கும் போது விஜய் என்ன மட்டமா?

பாலா

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொங்கல் அதுவுமா இளைய தளபதிய பொங்கிட்டீங்க போல! :-)
//
ஹி ஹி ஹி

//
என்ன பாலாஜி, இன்னொரு டெவில் ஷோவாக்கும்னு பார்த்தா, படீர்-னு முடிச்சிட்டீங்க!//
ஏற்கனவே இளைய தளபதிக்கு ரெண்டு டெவில் ஷோ போட்டாச்சு ;)

வெட்டிப்பயல் said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...

//பொங்கல் அதுவுமா இளைய தளபதிய பொங்கிட்டீங்க போல! :-)//
பொங்கல் தூள்!//

மிக்க நன்றி :-)

வெட்டிப்பயல் said...

//cheena (சீனா) said...

உணமையிலேயே அவர் NCC Under Officer மாதிரி தான் இருந்தார் - IPS ரேஞ்செல்லாமில்ல. //
ஆப்பிசரா??? இது எங்க தளக்கு அசிங்கம் :-)

//
ATM லே சொதப்பல் - என்ன பண்றது - எவ்ளோ பொற்த்துக்கறோம் - இதப் பொறுத்துக்க மாட்டோமா ? - ம்ம்ம்ம்ம் - வாழ்க மருத்துவர் விஜய்.//
வாழ்க இளைய தளபதி டாக்டர் விஜய் :-)

கைப்புள்ள said...

//விஜய்க்கு டாக்டர் பட்டம் சரியே//

//ஆயிரம் பேரை கொன்னா அரை வைத்தியன்
நான் முழு வைத்தியண்டா//

ரிப்பீட்டேய்
:))

கோபிநாத் said...

;)))

இராம்/Raam said...

ஹி ஹி.... இளைய தளபதியின் குருவி வரட்டும்... எல்லாரும் வாயடைச்சு போகப்போறாங்க... :)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

விஜயசாரதி வசனங்கள், அவரையே பிரதி எடுத்த மாதிரி நல்ல பொருத்தம். அவர் பகுதி பிடித்திருந்தது.

டாக்டர் அண்ணாவுக்கு இன்னும்
கொஞ்சம் சூடு காட்டியிருக்கலாம் :)//

பாபா,
ஏற்கனவே டாக்டர் அண்ணாவிற்கு நிறைய சூடு காட்டியதால் கொஞ்சம் குறைக்க வேண்டியதாயிடுச்சி...

விஜயசாரதி தான் கொஞ்சம் யோசிச்சி யோசிச்சி எழுதனது :-)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:))))


அதான் டாக்டர் படம் எதுவும் வரலைல..கொஞ்ச நாள் மறக்கவிட மாட்டீங்களா? :))))//

Gaptain டாக்டரா நடிச்ச சபரி பார்த்தியாப்பா???

வெட்டிப்பயல் said...

//கைப்புள்ள said...

//விஜய்க்கு டாக்டர் பட்டம் சரியே//

//ஆயிரம் பேரை கொன்னா அரை வைத்தியன்
நான் முழு வைத்தியண்டா//

ரிப்பீட்டேய்
:))//

டாங்க்ஸ் தல ;)

வெட்டிப்பயல் said...

//bala said...

வெட்டிப் பயல் அய்யா,

கனிமொழி அம்மா, கவிஞர்னா அழகிய(?) தமிழ்மகன் அய்யாவுக்கு டபுள் டாக்ட்ரேட் கொடுக்கலாம்;என்னைக் கேட்டா, மோடி அய்யா கூட இரண்டு தமிழ் வார்த்தைகள் பேசியதால அவருக்கும் முனைவர் பட்டம் கொடுக்கலாம்.சினிமா வசனம் மஞ்ச துண்டு,புரட்சித் தாய்,புரட்சி நடிகர் எல்லாரும் டாக்ட்ரேட் வாங்கும் போது விஜய் என்ன மட்டமா?

பாலா//

பாலா ஐயா,
எனக்கு அரசியல் பிடிக்காது.. அரசியல் புரியாது...

நடிகர் திலகம் ஃபோட்டோவை போட்டிருக்கீங்க. அதை நியாபகத்துல வெச்சிட்டு பேசுங்க...

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...

;)))//

என்ன தெய்வீக சிரிப்பய்யா உம்முடையது ;)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

ஹி ஹி.... இளைய தளபதியின் குருவி வரட்டும்... எல்லாரும் வாயடைச்சு போகப்போறாங்க... :)//

என்னது படத்து பேரு குருவியா???

அதுல என்ன பஞ்ச் டையலாக் இருக்கும் :-)

தேவ் | Dev said...

//எவ்வளவோ கேவலமான படம் பண்ணீட்டீங்க இதை பண்ண மாட்டீங்களானு என்கிட்ட டைரக்டர் கேட்டாரு. அவர் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதான் நடிச்சேன்.///

குருவி குருவி... ச்சே துருவி துருவி கேட்டாலும் என்னம்மா பதில் சொல்லுறார் டாக்டர்ங்கண்ணா...:)))

தேவ் | Dev said...

// கப்பி பய said...
:))))


அதான் டாக்டர் படம் எதுவும் வரலைல..கொஞ்ச நாள் மறக்கவிட மாட்டீங்களா? :))))//

அப்படி எல்லாம் மறக்கக் கூடாதுப்பா..:))))

தேவ் | Dev said...

//வெட்டிப்பயல் said...
//இராம்/Raam said...

ஹி ஹி.... இளைய தளபதியின் குருவி வரட்டும்... எல்லாரும் வாயடைச்சு போகப்போறாங்க... :)//

என்னது படத்து பேரு குருவியா???

அதுல என்ன பஞ்ச் டையலாக் இருக்கும் :-)//

வாயை அடைக்கற டயலாக்ன்னா வாயை மூடு அப்படின்னு இருக்குமோ...

G.Ragavan said...

// இராம்/Raam said...
ஹி ஹி.... இளைய தளபதியின் குருவி வரட்டும்... எல்லாரும் வாயடைச்சு போகப்போறாங்க... :) //

என்னது குருவியா? அதுக்கும் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் எதுவும் தொடர்பு இருக்குதா என்ன வாயடைச்சுப் போறதுக்கு? :))))))

என்னய்யா குருவி காக்காய்னு...வில்லன் இருக்கான். இவரு எத்தனை பேரு வந்தாலும் அடிச்சுப் போடுற ஆளு. இவர் மேல ஒரு பொண்ணுக்குக் காதல். வில்லனை வென்று காதலியைக் கட்டிப்பிடிக்கிறதுதான கதை.

அபி அப்பா said...

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரியே!!!!

குறிப்பு: உங்களுக்கு மட்டும் தான் காமடி வருமா? ஊக்கூம் எங்களுக்கு வராதா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சுபன் said...

//அதுல என்ன பஞ்ச் டையலாக் இருக்கும் :-)
///

பறக்குது குருவி
கொட்டுது அருவி
உன்ன எடுப்பண்டா துருவி

எதோ நம்மால முடிஞ்சது

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

//எவ்வளவோ கேவலமான படம் பண்ணீட்டீங்க இதை பண்ண மாட்டீங்களானு என்கிட்ட டைரக்டர் கேட்டாரு. அவர் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதான் நடிச்சேன்.///

குருவி குருவி... ச்சே துருவி துருவி கேட்டாலும் என்னம்மா பதில் சொல்லுறார் டாக்டர்ங்கண்ணா...:)))//

அவர் டேலண்ட் என்ன??? கவுண்டர் கேட்டதுக்கே அடிச்சி ஆடனாரு...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// இராம்/Raam said...
ஹி ஹி.... இளைய தளபதியின் குருவி வரட்டும்... எல்லாரும் வாயடைச்சு போகப்போறாங்க... :) //

என்னது குருவியா? அதுக்கும் சிட்டுக்குருவி லேகியத்துக்கும் எதுவும் தொடர்பு இருக்குதா என்ன வாயடைச்சுப் போறதுக்கு? :))))))

என்னய்யா குருவி காக்காய்னு...வில்லன் இருக்கான். இவரு எத்தனை பேரு வந்தாலும் அடிச்சுப் போடுற ஆளு. இவர் மேல ஒரு பொண்ணுக்குக் காதல். வில்லனை வென்று காதலியைக் கட்டிப்பிடிக்கிறதுதான கதை.//

ஜி.ரா,
அதுக்குள்ள கதையை வெளியிடறதெல்லாம் நொம்ப தப்பு ;)

வெட்டிப்பயல் said...

// அபி அப்பா said...

விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரியே!!!!

குறிப்பு: உங்களுக்கு மட்டும் தான் காமடி வருமா? ஊக்கூம் எங்களுக்கு வராதா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

காமெடினாலே அபி அப்பா தான்... நீங்க இப்படி பேசலாமா???

வெட்டிப்பயல் said...

//சுபன் said...

//அதுல என்ன பஞ்ச் டையலாக் இருக்கும் :-)
///

பறக்குது குருவி
கொட்டுது அருவி
உன்ன எடுப்பண்டா துருவி

எதோ நம்மால முடிஞ்சது//

சூப்பர்...

Sathiya said...

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி இளைய(இது மாறவே மாறாதா?) தளபதி விஜய் பத்தி இப்படி நக்கலா பதிவு போட்டதை வண்மையாக கண்டிக்கிறேன்;)

My days(Gops) said...

அட்ரா அட்ரா...

பதிவு சூப்பர்.....

//உங்களை அந்த ட்ரெஸ்ல பார்க்க NCC மாதிரி தான் இருந்துச்சு.//
rotfl..

//அழகிய தமிழ் மகன் //
அகிலஇந்திய தமாசு மன்னன் இல்லையா அவரு?


//உங்களுக்கு நாலஞ்சி டாக்டர் பட்டம் கொடுக்கலாமே//
உங்களுக்கு தனிமைல படம் பார்க்கும் பழக்கம் உண்டா?

வெட்டிப்பயல் said...

//Sathiya said...

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி இளைய(இது மாறவே மாறாதா?) தளபதி விஜய் பத்தி இப்படி நக்கலா பதிவு போட்டதை வண்மையாக கண்டிக்கிறேன்;)//

இதுல எங்கணா நக்கலா இருக்கு??? உண்மையை தானே சொல்லியிருக்கேன் ;)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சரி, அழகிய தமிழ் மகன் படம் நடிக்க எப்படி ஒத்துக்கீட்டீங்க?

வி: எவ்வளவோ கேவலமான படம் பண்ணீட்டீங்க இதை பண்ண மாட்டீங்களானு என்கிட்ட டைரக்டர் கேட்டாரு. அவர் அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. அதான் நடிச்சேன்.
//

:-)))))))))))))))))))))

குமரன் (Kumaran) said...

விஜய் பேசுனதை விட விஜய்சாரதி பேசுனது தான் சூப்பர். அப்படியே அவர் எப்படி எப்படியெல்லாம் பேசுவாரோ அப்படியே எழுதியிருக்கீங்க. அருமை. :-)

விஜய்க்கு மட்டுமில்லை உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

ஆஹா. சீனா ஐயா டாக்டர் விஜய்ங்கறதை மருத்துவர் விஜய்ன்னு மாத்திட்டாரே! இனிமே முழுவைத்தியன் ஆகாம விஜயை நிறுத்தவே முடியாது.