தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, January 14, 2008

எழுதிக் கிழிச்சது :-)

எல்லாருக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

வர வர வெறும் விளம்பர பதிவு மட்டும் போட வேண்டிய நிலைமைக்கு வந்துட்டேன். ஒரு வேளை பழம் பெரு(று)ம் பதிவராயிட்டனோனு எனக்கே ஒரு சந்தேகம் வந்துடுச்சி. சரி மொக்கை போடாத, மேட்டருக்கு வானு சொல்றீங்களா? அதுவும் சரிதான்.

நம்ம சர்வேசனுக்கு ஏதாவது புதுசா பண்ணிட்டே இருக்கனும் போல. நச் கதைக்கு அடுத்து ஒரு விளையாட்டை ஆரம்பிச்சி வெச்சிட்டார். எழுதியதில் பிடித்ததாம். ஒரு தாய்க்கு எப்படி தன்னோட எல்லா பிள்ளைகளும் பிடிக்குமோ அது போல ஒரு எழுத்தாளனுக்கு தன்னோட எல்லா படைப்புகளும் பிடிக்குமாம். நான் எழுத்தாளன் இல்லை என்பதனால் எனக்கு இந்த விதி ஒத்துவராது ;)

தல சிவிஆர் 2007ல அவர் எழுதன பதிவுல பிடிச்ச பதிவ போட்டிருக்கார். ஆனா நான் 2007ல 100 பதிவு எழுதியிருந்தாலும் சொல்லிக்கிற மாதிரி ஒண்ணு கூட எழுதலங்கறது தான் உண்மை. அதனால இதுவரை நான் எழுதனதுல எனக்கு பிடிச்ச பதிவ மட்டும் சொல்றேன் ;) (டார்டாய்ஸை சுத்த ஆரம்பிக்கிறேன்)

ஒரு காலத்துல நான் அதிகமா எழுதனது நகைச்சுவை (மாதிரி) பதிவுகள் தான். அதுக்கு அதிகமா பயன்படுத்துனது கவுண்டர் தான். ஒரு வேளை நம்ம கேரக்டருக்கு அவர் தான் அதிகமா ஒத்துவரார்னு நினைக்கிறேன். முதல்ல நமக்கு நகைச்சுவையா எழுத வருமானு ரொம்ப யோசிச்சி எழுதனது கரகாட்டக்காரனோட உல்டா "கவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்காரன்!!! ".

இதுக்கு வரவேற்பு அதிகம் கிடைச்ச உடனே கோழியின் அட்டகாசம் ஆரம்பிச்சாச்சி. அதுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுது. அப்படியே டெவில் ஷோ, லொள்ளு, ஆர்குட் அலும்பல்கள்னு நிறைய நகைச்சுவை (மாதிரி) பதிவுகள் எழுதினேன். ஆனா இது எல்லாத்தையும் விட இன்னைக்கு வரைக்கும் எனக்கு பிடிச்ச என்னோட நகைச்சுவை பதிவு "கவுண்டரும் கடையேழு வள்ளல்களும் தான"

அப்படியே நகைச்சுவை பதிவுல இருந்து கதைக்கு தாவினேன். முதல் கதை கொல்ட்டி. இன்னைக்கு வரைக்கும் நிறைய பேருக்கு நான் எழுதனதுல பிடிச்ச கதை இது தான். ஆனா அதிகம் ஃபார்வேர்டான கதை தூறல். பதிவுலகுல நிறைய பேர் பாராட்டின கதை தீயினால் சுட்ட புண். அதுல வர கரிக்கை சோழி இன்னைக்கு வரைக்கும் எனக்கு பிடிச்ச பேர். இந்த வருஷம் H-4, முட்டாப்பய எல்லாம் எழுதியிருந்தாலும் எதுவும் ரொம்ப பெருசா எனக்கு பிடிக்கல :-)

நெல்லிக்காய்-
இந்த தொடர் ஒரு காலத்துல ரொம்ப விரும்பி எழுதனது. லிப்ட் ப்ளிஸ் - எனக்கு மிகவும் பிடித்த க்ரைம் தொடர். நிறைய பேருக்கு இந்த கதை புரியல. அதுவே ஒரு சக்ஸஸ் தான் ;)

அப்பறம் வித்யாசமான பதிவு எழுதறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எழுதன வித்யாசமான விளம்பர பதிவு இது. தேன்கூடுல ஒரு போட்டில என் படைப்புக்கு நான் கொடுத்த விளம்பரம் இது - அதிசய எண். அதே மாதிரி நடிகர் திலகத்து நினைவு தினத்துக்கு எழுதின பதிவு இது - நடிப்பு கடவுள். அதே மாதிரி இந்த குத்து பாட்டை கண்ணன் பாட்டாக்கியதும் ;)

அடப்பாவி ஏதாவது ஒண்ணு சொல்லுடானு சொன்னா அநியாயத்துக்கு அலம்பல் பண்றையேடானு சொல்றீங்களா? சரி நான் எழுதனதுலயே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இது தான்...

"புது வெள்ளம்"

ஏன்னு நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க...

சரி நான் 5 பேரை கூப்பிடனுமாம்... இதோ என் லிஸ்ட்

1. லக்கி லுக்
2. தேவ்
3. குமரன்
4. அரை பிளேடு
5. கொத்ஸ்

21 comments:

CVR said...

சுட்டிகள் கொஞ்சம் மாறி போயிருக்கும் அண்ணாச்சி!
"கவண்டரும் கடையேழு வள்ளல்களும்"கு பதிலா அர்குட் பதிவு வருது!!
நீங்க கொடுத்திருக்கும் பதிவுகள் முக்கால்வாசி நான் படித்து ரசித்தது!!

படிக்காத ஒன்றிரண்டை நான் அடையாளம் காண இந்த பதிவு உதவியது!!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! :-)

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா இந்த வருஷம் ஆரம்பிச்சதுலேர்ந்து வெறும் தொடர்பதிவா போட்டுக்கிட்டு இருக்கேன். இப்போ நீ வேறயா? சரி இருக்கட்டும். பதிவு கயமைத்தனத்துக்கு யூஸ் ஆகும்.

முக்கால்வாசி படிச்சதுதான். ஒரு முறை திரும்பிப்பார்க்க உதவும்.

கப்பி பய said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))

குமரன் (Kumaran) said...

புது மாப்பிள்ளை. உங்களுக்கு நேர நெருக்கடின்னு சொன்னா மக்கள் நம்புவாங்க. எனக்கும் அப்படித் தான்னு சொன்னா நம்புவாங்களா? ஏற்கனவே எழுத வேண்டிய பட்டியல் நீள்ள்ள்ள்ளமா இருக்கு. இதுல இதை வேற சேத்துக்க சொல்றீங்களே?!

G.Ragavan said...

சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பழம் பெறும் பதிவர்தான். பெரிய பதிவர்தான்.

ஏற்கனவே படிச்ச பதிவுகள். நினைவு படுத்தியமைக்கு நன்றி.

வெட்டிப்பயல் said...

//CVR said...

சுட்டிகள் கொஞ்சம் மாறி போயிருக்கும் அண்ணாச்சி!
"கவண்டரும் கடையேழு வள்ளல்களும்"கு பதிலா அர்குட் பதிவு வருது!!
//
மாத்தியாச்சு தல... மிக்க நன்றி ;)

// நீங்க கொடுத்திருக்கும் பதிவுகள் முக்கால்வாசி நான் படித்து ரசித்தது!!

படிக்காத ஒன்றிரண்டை நான் அடையாளம் காண இந்த பதிவு உதவியது!!
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! :-)//
நீங்க படிக்காததும் கூட இருக்கா? அப்படினா இந்த பதிவு எழுதனதுல பயனிருக்குனு சொல்றீங்க :-)

CresceNet said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.

கோபிநாத் said...

ம்ம்...ரெண்டு பதிவு இப்போ தான் படிச்சேன்.

நல்ல தொகுப்பு ராசா ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

ஏம்பா இந்த வருஷம் ஆரம்பிச்சதுலேர்ந்து வெறும் தொடர்பதிவா போட்டுக்கிட்டு இருக்கேன். இப்போ நீ வேறயா? சரி இருக்கட்டும். பதிவு கயமைத்தனத்துக்கு யூஸ் ஆகும்.

முக்கால்வாசி படிச்சதுதான். ஒரு முறை திரும்பிப்பார்க்க உதவும்.//

கொத்ஸ்,
இதுக்கு தான் பாப்புலராவே இருக்க கூடாது ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :))//

கப்பி,
உன் எல்லா பதிவுமே சூப்பர் பதிவாச்சே... நீ எத சொல்ல போறனு ஆவலா இருக்கேன் ;)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

புது மாப்பிள்ளை. உங்களுக்கு நேர நெருக்கடின்னு சொன்னா மக்கள் நம்புவாங்க. எனக்கும் அப்படித் தான்னு சொன்னா நம்புவாங்களா? ஏற்கனவே எழுத வேண்டிய பட்டியல் நீள்ள்ள்ள்ளமா இருக்கு. இதுல இதை வேற சேத்துக்க சொல்றீங்களே?!//

பொறுமையா இந்த வாரத்துக்குள்ள நேரம் கிடைக்கும் போது நிதானமா எழுதி போடுங்க குமரன் ;)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பழம் பெறும் பதிவர்தான். பெரிய பதிவர்தான்.

ஏற்கனவே படிச்ச பதிவுகள். நினைவு படுத்தியமைக்கு நன்றி.//

ஆஹா... நீங்களே இப்படி சொல்லலாமா???

அரை பிளேடு said...

அழைத்தமைக்கு நன்றி.

களத்தில் இறங்கியாச்சு :))

http://araiblade.blogspot.com/2008/01/blog-post_15.html.

பொங்கல் வாழ்த்துக்கள்.

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...

ம்ம்...ரெண்டு பதிவு இப்போ தான் படிச்சேன்.

நல்ல தொகுப்பு ராசா ;)//

ரொம்ப நன்றி கோபி...

வெட்டிப்பயல் said...

//அரை பிளேடு said...

அழைத்தமைக்கு நன்றி.

களத்தில் இறங்கியாச்சு :))

http://araiblade.blogspot.com/2008/01/blog-post_15.html.

பொங்கல் வாழ்த்துக்கள்.//

உங்க பதிவு ரொம்ப நல்லாவே வந்திருக்கு...

தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

//CresceNet said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.//

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா? நீங்க பாக்க வேண்டிய பதிவு இங்க இருக்கு..

http://kappiguys.blogspot.com

லக்கிலுக் said...

கும்மி அடிச்சாச்சி!!!

வெட்டிப்பயல் said...

//லக்கிலுக் said...

கும்மி அடிச்சாச்சி!!!//

சூப்பர்...

தேவ் | Dev said...

நான் ரசித்தப் பதிவுகள் அனைத்தும் இந்த பதிவில் நீயும் பட்டியலிட்டு விட்டாய்... என்னோட ஆல் டைம் பேவரிட் நெல்லிக்காய் தான்.

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
//G.Ragavan said...

சொன்னாலும் சொல்லாட்டியும் நீ பழம் பெறும் பதிவர்தான். பெரிய பதிவர்தான்.

ஏற்கனவே படிச்ச பதிவுகள். நினைவு படுத்தியமைக்கு நன்றி.//

ஆஹா... நீங்களே இப்படி சொல்லலாமா??? //

சொல்லலாமாவா!!!! தாராளமாச் சொல்லலாம்.

சுழன்று கொண்டிருந்த பல ஆன்மீகப் புயல்களைக் கரைகடக்க வைத்த சூறாவளி நீர்

கிச்சுமுச்சுப் பதிவுகளுக்கு நடுவில் வாய்விட்டுச் சிரிக்கவும் மனம்விட்டுச் சிந்திக்கவும் வைத்த வலையுலகக் கலைவாணர் நீர்

ஆஊ என்று அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் மசாலா நடிகர்களைக் கவுண்டரை வைத்துக் கலாய்த்த அதிரடியார் நீர்

கண்ணன் பாட்டு என்று சொல்லிக்கொண்டு இழுத்து இழுத்து பாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இழுத்து ஒன்று விட்டு....சிங்கம் போல நடந்து வர்ரான் என்று பாட வைத்த இசைச்சுடர் நீர்

பெரியர் என்று பெயரில் பலர் கதறிய வேளையில் பெரியார் என்று எழுதி வைத்த செறியார் நீர்.

ஆகையால நான் தாராளமா உங்க அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துச் சொல்லலாம். :)

இலவசக்கொத்தனார் said...

தங்கள் உத்தரவின் படி என் 2007 பதிவுகளைப் பற்றிப் போடத் தொடங்கியாயிற்று . (ஆமாம் தொடங்கத்தான் செஞ்சிருக்கேன், இன்னும் முடியலை!)