தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 10, 2007

விவாதம் - சாப்ட்வேர் துறையில் Fake போடுவது குற்றமா?

நான் எழுத ஆரம்பிச்சிருக்குற தொடர் பல நண்பர்களுக்கு வருத்தத்தை அளிக்குதுனு தெரியுது. இங்க Fake போடறதால யாருக்கும் எந்த பெரிய நஷ்டமுமில்லை. யாருடைய உணவையும் யாரும் தட்டிப்பறிப்பதில்லை. பெரிய பெரிய நிறுவனங்களும் தன்னுடைய Clientsக்கு இந்த மாதிரி Fake ரெசுமே அனுப்பி தான் பிராஜக்ட் வாங்கி ஓட்டறாங்க.

நான் வெளிய வரும் போது 2003ல அதிகமா வேலை வாய்ப்பு இல்லை. அதை விட 2002ல மோசம். 2004லதான் வேலை வாய்ப்பு அதிகமா வர ஆரம்பிச்சுது. அந்த ரெண்டு வருஷமும் அவன் சும்மாயில்லை. ஏதாவது கோர்ஸ் போயிட்டு தான் இருந்தான் (பெரும்பாலும் Mainframes). ஆனா வேலை வாய்ப்பு வந்தப்ப Mainframeல ரெண்டு வருஷம் Experiencedனா எடுத்தக்கறான். இல்லை 2004 பாஸ் அவுட்னா எடுக்கறான். அப்ப 2002ல முடிச்சவனெல்லாம் என்ன பண்ண சொல்றீங்க? அவனுக்கு திறமையில்லையா? இல்லை எல்லாம் தலைவிதினு சொல்லிட்டு ஊரை பார்த்து போயிடலாம்னு சொல்றீங்களா?

இந்த துறை நீங்க எல்லாம் வேலை பார்த்த மாதிரி இல்லை. ஒரு காலத்துல முதல்ல படிச்சிட்டு வந்தவன் Employment Exchangeல பதிவு பண்ணிட்டு வீட்ல உக்கார்ந்திருப்பான், சீனியாரிட்டு பிரகாரம் வேலை வரும். ஆனா இங்க அந்த அந்த வருஷம் படிச்சி முடிச்சவன் தான் Fresher. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி முடிச்சவனெல்லாம் Fresherனு சொல்லிக்க முடியாது. அப்படியிருக்கறவங்க என்ன செய்யலாம்?

இதுல ஒரு சிலருக்கு அரியர் இருந்து முடிச்சிட்டு வரதுக்கு ஒரு வருஷமாகலாம். அரியர் வெச்சவனெல்லாம் திறமையில்லாதவனு சொல்றவங்க தயவு செஞ்சு ஒதுங்கிக்கோங்க. எனக்கு Software Engineering சொல்லி கொடுத்த பையனுக்கு அந்த சப்ஜக்ட்லயே அரியர் வந்துச்சு. அவன் சொன்னதை கேட்டு புரிஞ்சிக்கிட்டு எழுதன நான் 75% வாங்கினேன் (இது சத்தியமா கதையில்லை. உண்மை). அதனால அரியர் வெச்சவனெல்லாம் வேலைல சேர லாயக்கில்லைனு இல்லை. இங்க செய்யற வேலையும் அவ்வளவு கஷ்டமானதில்லை. கஷ்டமான வேலையா இருந்தா திறமையில்லாதவன் ரெண்டு மாசம் கூட தாக்கு பிடிக்க முடியாது.

பொண்ணுங்க ஒரு சிலருக்கு படிச்சி முடிக்கும் போதே கல்யாணம் பண்ணி வெச்சி வேலைக்கு போகவிடாம பண்ணிடறாங்க. குழந்தை பிறந்த ரெண்டு வருடமோ, மூன்று வருடமோ ஆன பின்பு, ஒரு கோர்ஸ் சேர்ந்து Refresh பண்ணிட்டு வேலைக்கு சேரனும்னு நினைச்சா முடியுமா?

எந்த வருஷம் முடிச்சவனா இருந்தாலும் Fresherஆ எடுப்போம்னு நம்ப கம்பெனிகள் சொன்னாங்கனா இங்க யாரும் Fake போட போறதில்லை. எப்படியும் கஷ்டப்பட்டு வேலை வாங்கிடலாம். ஆனா அந்த மாதிரி யாரும் எடுக்காத பட்சத்தில் இதை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

இங்க சம்பளமேயில்லனா கூட பரவாயில்லை (அல்லது மெகு குறைந்த சம்பளத்தில்) Experienceகாக வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனா அவுங்களை எல்லாம் எடுக்க கம்பனிதான் இல்லை. அதே போல யாரும் வெறும் Resume பார்த்து வேலை கொடுப்பதில்லை. குறைந்தது மூன்று ரவுண்டாவது இண்டர்வியூ வைத்து தான் கொடுக்கிறார்கள். அதை தாண்டி வேலை வாங்க ஒருவனுக்கு திறமையிருக்கும் பட்சத்தில் அவனுக்கு அந்த வேலை கொடுப்பதில் என்ன தவறு?

விக்ரமன் படமெல்லாம் பாக்கறதுக்கு நல்லா தாங்க இருக்கும். ஆனா நிஜத்தில் வாழத்தான் கஷ்டமா இருக்கும்.

சரி, I am open for discussion. நான் செய்யறது தப்பு, இன்னும் நிறைய கம்பனிகள் எந்த வருஷம் முடிச்சிருந்தாலும் Fresherஆ வேலைக்கு எடுக்கறாங்க. கஷ்டப்பட்டா கண்டிப்பா வேலை வாங்கலானு நீங்க சொன்னீங்கனா, நான் அந்த தொடர் எழுதறதை நிறுத்திட்டு, எழுதன பதிவையும் நீக்கிடறேன். அதே மாதிரி இந்த மாதிரி Fake போடறதால யாராவது பாதிக்கப்படறாங்கனு (அவனை தவிர) நீங்க சொன்னீங்கனா நான் கண்டிப்பா என் தப்பை திருத்திக்கறேன்.

அது இல்லாம பொய் சொன்னா தப்புனு சொன்னீங்கனா, வள்ளுவரோட இந்த குறள் தான் எனக்கு ஞாபகம் வருது.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

57 comments:

இசை said...

அவனவன் பாம் போடுரான்,

நம்ம பசங்க போடுரதுல எதுவும் தப்பு இருக்றதா எனக்கு தெரியல... அதுக்கும் ஒரு தனித்திறன், சமாளிப்பிகேசன் என தகுதிகள் தேவைப்படுதில்லையா... ஆந்திரா பார்ட்டிங்க லட்ச லட்சமா கொடுத்து பின்கதவு வழியா வந்துருதுங்க. நம்ம பசங்க பேக்/கேக் போட்டு உள்ள வரதுல என்ன தப்பு.. எவ்ளோ பேர் வந்தாலும் வேலை தான் இருக்கே...

மேலாண்மை துறை மக்களாகிய நாங்க சொல்றதெல்லாம் பொய், ரெசியூமெல போடுரதெல்லாம் கதை, அமெரிக்காவுல இருந்து ஊK வரைக்கும் ஏமாத்திகிட்டு இருக்கோம். நம்ம தொழிலே அதுதான். சாப்ட்வேர் மக்கள் கஷ்ட்டப்பட்டு படிச்சி அதைத்தான் பேக்கா போடுறான். அவன் அதை கற்க எடுத்துக்கொண்ட நேரத்தை அனுபவமா எடுத்துக்க வேண்டியது தான்.

Anonymous said...

I think you are missing the point. I'm not arguing whether or not adding fake exp is right. Its my opinion that is not the right thing to do and I will stick to that. I am a senior professional in this field with 17+ Y of experience and I can easily run down fakers (BTW, I am not a project manager, but I am in the technology thought leadership quadrant).

Aside from that, the point I am driving at you is that 'faking' is unethical AND providing PUBLISHED guidance to accomplish that unethical effort is not right for a professional like you and me. Obviously, the choice is yours!

இசை said...

அவனவன் Bomb போடுரான்,

நம்ம பசங்க fake போடுரதுல எதுவும் தப்பு இருக்றதா எனக்கு தெரியல... அதுக்கும் ஒரு தனித்திறன், சமாளிப்பிகேசன் என தகுதிகள் தேவைப்படுதில்லையா... ஆந்திரா பார்ட்டிங்க லட்ச லட்சமா கொடுத்து பின்கதவு வழியா வந்துருதுங்க(back door entry). நம்ம பசங்க fake/cake போட்டு உள்ள வரதுல என்ன தப்பு.. எவ்ளோ பேர் வந்தாலும் வேலை தான் இருக்கே...

மேலாண்மை துறை மக்களாகிய நாங்க சொல்றதெல்லாம் பொய், ரெசியூமெல போடுரதெல்லாம் கதை, அமெரிக்காவுல இருந்து UK வரைக்கும் ஏமாத்திகிட்டு இருக்கோம். நம்ம தொழிலே அதுதான். சாப்ட்வேர் மக்கள் கஷ்ட்டப்பட்டு படிச்சி அதைத்தான் FAKE போடுறான். அவன் அதை கற்க எடுத்துக்கொண்ட நேரத்தை அனுபவமா எடுத்துக்க வேண்டியது தான்.

இலவசக்கொத்தனார் said...

இல்லாததை இருக்கிற மாதிரியும் செய்யாததை செய்த மாதிரியும் சொல்வது பொய்தான். அதைச் செஞ்சா தப்புதான்.

எங்கள் நிறுவனத்தில் இப்படி ஒரு தப்பு கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி வேலைநீக்கம்தான், அந்த ஊழியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி.

இது நாணயமாக இருப்பது, நம்பிக்கையை பிரதிபலிப்பது. இதில் குறை இருந்தால் திருத்தவே முடியாது. வேலைக்கு இப்படிச் செய்தவன் நாளை எதையும் செய்யத் துணிவான் என்ற எண்ணமே வலுப்படும்.

இதை செய்யலாம் என உங்களைப் போன்ற ஒருவர் பதிவு போடுகையில் இதுவரைச் செய்யாதவன் கூட, இப்படிச் செய்யலாம் போல என செய்யத் துணிவான். செய்ய முடிவு செய்துவிட்டவனுக்கு உங்கள் பதிவு தேவையில்லை.

பாலாஜி, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.

Voice on Wings said...

போலிச் சான்றிதழை பயன்படுத்தி இட ஒதுக்கீடு வாங்கறவங்க, போலி மருத்துவர்கள், இவங்களைப் பத்தியெல்லாம் நீங்க என்ன நினைக்கறீங்க? இவங்க செய்யறதும் உங்க பார்வையில் சரிதான் போலயிருக்கே?

இசை said...

அய்யா அனானி,

20+ வருட அனுபவ மேனேஜரை எல்லாம் ஏமாத்திட்டு உள்ளார போர fஅகெ ராசாக்கள் நிறைய பேர். நியாய அநியாயம் பார்த்தா, சாப்ட்வேரே ஏகாதிபத்யம்னு சிபிஎம்'அ விட்டு அறிக்கைவிட முடியும். மற்றும் தொழில் என்று வந்துவிட்டால் நியாய அநியாயம் என்று அதுவும் இல்லை. Being a street smart is more important than being ethical. There is no ethics in business. Bottom line is "Show me the money".

fakeல் வருபவர்கள் அனைவரும் ஏதோ வீட்டில் உட்கார்ந்து சீட் ஆடிவிட்டு வருகிறர்கள் என நினைக்கின்றீர்கள் போலும். ஒரு நாளைக்கு 6- 8 மணி நேரம் ஏதாவது சின்ன கம்பியூட்டர் சென்டரில் சொல்லி கொடுப்பதிலோ அல்லது சிறு சிறு பிராஜக்ட் செய்வதிலோ செலவழிக்கின்றனர்.

என்னோடு HR படித்த பல நண்பிகள்/நண்பர்கள் IT கம்பெனிகளில் இருக்கின்றார்கள். FAKEல் வருவர்களின் REAL TIME அனுபவம், FRESH அல்லது மற்ற கம்பெனியில் குப்பை கொட்டியவர்களைவிட நன்றாகவே இருக்கின்றது என்பது அவர்கள் கருத்து. மேலும் அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய சம்மதிப்பதாலும் அவர்களே நல்ல எம்பிளாயி எனவும் அவர்களை தேர்வு செய்கின்றனராம்.

அனானி, விப்ரோ, இன்போ என டாப் 50 கம்பெனிகளில் FAKE எடுபடாமல் போனலும், இந்தியாவில ஆயிரமாயிரம் கம்பெனிகள் இருக்கின்றன...அங்கே FAKE மக்களை வரவேற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

வெட்டிப்பயல் said...

//Voice on Wings said...

போலிச் சான்றிதழை பயன்படுத்தி இட ஒதுக்கீடு வாங்கறவங்க, போலி மருத்துவர்கள், இவங்களைப் பத்தியெல்லாம் நீங்க என்ன நினைக்கறீங்க? இவங்க செய்யறதும் உங்க பார்வையில் சரிதான் போலயிருக்கே?//

Voice on Wings,
போலி மருத்துவனுக்கும் இதுக்கும் வித்யாசம் தெரியாம பேசினா நான் என்னத்த சொல்ல?

இங்க இஞ்சினியரிங் படிக்காம யாரையும் சர்டிபிகேட் அடிச்சி வேலை செய்ய வைக்க போறதில்லை.

எப்படியும் அதே ஜாவா, அதே டாட் நெட், யுனிக்ஸ் தான். அதே போல எந்த ஒரு பிராஜக்ட்னாலும் புதுசா சேரவனுக்கு ட்ரைனிங் இருக்கும்.

நீங்க சொல்றதுக்கும் நான் சொல்றதுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்.

Anonymous said...

Isai -

As I said, you are missing the point PERIOD.

One more time: Faking is wrong! The choice is yours and dont waste your time in justifying.

.. anony

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

I think you are missing the point. I'm not arguing whether or not adding fake exp is right. Its my opinion that is not the right thing to do and I will stick to that. I am a senior professional in this field with 17+ Y of experience and I can easily run down fakers (BTW, I am not a project manager, but I am in the technology thought leadership quadrant).

Aside from that, the point I am driving at you is that 'faking' is unethical AND providing PUBLISHED guidance to accomplish that unethical effort is not right for a professional like you and me. Obviously, the choice is yours!//

Dear Friend,
The scenario is different when you entered the field. That time anyone can get into software field if he has very little computer knowledge.

Here they are just faking at the entry level when they miss the opportunity.

Anyhow, during the interview, they have a technical round. And if the person is qualified, what's wrong in giving the job for that candidate?

Ethics இல்லாதவன் said...

வெட்டிப்பயல் முதலில் தங்களுக்கு திருமண வாழ்த்துக்கள்.

இங்கே பலரும் குறிப்பிடுவது "It is ethically wrong" என்பது தான். ஆனால் யோக்கியன் எடுக்கட்டும் முதல் கல்லை என்பது போல் அனைவரும் ஏதோ ஒரு வகையில் out of ethics செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

பல உதாரணங்களை சொல்லலாம்.

இந்தியாவில் வீடோ நிலமோ வாங்க வேண்டும் என்றால் அதன் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு, மீதி தொகைக்கு கருப்பு பணம் கேட்கிறார்கள். வெள்ளையாகத்தான் தருவோம் என்று நாம் கூறினால் "உங்களுக்கு வீடு விற்க முடியாது" என்கிறார்கள். பெரிய பெரிய நிறுவனத்தினரே அதை கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். முழுவதுமாக வெள்ளையில் மட்டுமே பணம் குடுத்து எத்துனை பேர் வீடு வாங்கி இருக்கிறார்கள்?

இந்தியாவில் RTO அலுவலகத்தில் லஞ்சம் குடுக்காமல் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் எத்துனை பேர் இருப்பார்கள்?

எத்துனை பேர் போக்குவரத்து காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டால் தங்கள் மீது தவறு இருந்தால் நேர்மையாக நீதிமன்றத்தில் சென்று தண்டனை கட்டனம் செலுத்துகிறார்கள்? லஞ்சம் குடுத்தல்லவா தப்பித்து கொள்கிறோம்?

எத்துனை பேர் விற்பனை வரி கட்டிவிட்டு கைத் தொலைபேசி வாங்குகிறார்கள்? ரசீது இல்லாமல் அல்லவா வாங்குகிறோம்? சிறிது பணம் மிச்சம் ஆகிறதே.

வீட்டை வாடகைக்கு விடும் எத்துனை பேர் ரசீது ஒழுங்காக குடுக்கிறார்கள். இல்லை வாடகைக்கு இருக்கும் நாம் தான் ஒழுங்காக தர வேண்டும் என்று சண்டை போடுகிறோமா? அவ்வாறு சண்டை போட்டால் வீடு போய் விடுமே.

எங்கே சென்றது "Ethics"? யாருக்கும் வெட்கமில்லை என்பது போல, இங்கே யாருக்கும் ethics இல்லை.
அவரவர் தங்கள் அளவில் ethics ஐ மீறுபவர்களே. தங்களுக்கு பாதிப்பு இல்லாத வரை ethics பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டே இருக்கலாம்.

மற்றபடி, தங்கள் வலைப்பூவில் என்ன எழுத வேண்டும் என்பது தாங்கள் முடிவு செய்யவேண்டியது.

நன்றி.

நாகை சிவா said...

//சாப்ட்வேர் துறையில் Fake போடுவது குற்றமா?"//

சரியா தப்பா னா இது நாயகன் படத்தில் வர டயலாக் மாதிரி தான் இருக்கு.

வேலு நாயக்கர் நல்லவரா கெட்டவரா என்ற யோசிச்சு பார்த்தா எப்படி விடை கிடைக்காதோ அப்படி தான் இதுக்கும் இருக்கும்.

//எங்கள் நிறுவனத்தில் இப்படி ஒரு தப்பு கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி வேலைநீக்கம்தான், அந்த ஊழியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி. //

கொத்தனார்!

நான் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேரும் போது 5 வருட அனுபவத்துக்கு
கம்மியாக இருந்தை கவனிக்காமல் என்னைய நேர்முக தேர்வுக்கு கூப்பிட்டு அதில் தேர்வு ஆகி அந்த நிறுவனத்தில் உள்ளவர்களே அதை 5 வருடமாக மாத்தி போட்டு H.R. ku அனுப்பி வைத்தார்கள்.

அதே போல் இன்னோரு நிறுவனத்தில் நான் அனுப்பின resume, அவங்க கேட்டத்துக்கு மேட்ச் ஆகல என்று அதே போல் மாத்தி அனுப்பி கேட்டார்கள். அதே போல் மாத்தி அனுப்பி வேலைக்கு எடுத்து அங்கும் நான் பொழப்பை ஒட்டிக்கிட்டு தான் இருக்கேன்.

இது எல்லாம் நானாக செய்யாத போதிலும் இதுவும் ஒரு வகையில் FAKE தானே. HR பொறுத்த வரை அவங்களுக்கு பேப்பர்ல என்ன இருக்கு என்பது தான் முக்கியம். வேலை வாங்க போறவனுக்கோ வேலை நடந்தா சரி என்று தான் இருப்பான்.

இதில் நாணயம் நம்பிக்கை என்று உடன்படுத்தி பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்ல.

ILA(a)இளா said...

Fakeனாவே தப்புதானே, இதுல எந்தத்துறையில பண்ணினா என்ன?
சபையில பேசுற விஷயமும் இது இல்லை.

ILA(a)இளா said...

//The scenario is different when you entered the field. //
there is no point in arguing against ethical also this cannot be accepted even it is genuine under any circumtances. Fake is fake, no point in arguing to make FAKE IS RIGHT.

Anonymous said...

//The scenario is different when you entered the field. That time anyone can get into software field if he has very little computer knowledge. //

Unfortunately, you made a preposterous assumption that is also offensive. You may want to quantify that 'little computer knowledge'. I personally had gone through a GMAT like test and 2 hours of OOD discussion to start as a software developer.

No matter how you justify, my opinion is, Faking is unethical and unprofessional. Down the road 5 years from now, you'll laugh about this argument shaking your head ;-)

.. the same anony

Anonymous said...

//இந்தியாவில் வீடோ நிலமோ வாங்க வேண்டும் என்றால் அதன் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு, மீதி தொகைக்கு கருப்பு பணம் கேட்கிறார்கள். வெள்ளையாகத்தான் தருவோம் என்று நாம் கூறினால் "உங்களுக்கு வீடு விற்க முடியாது" என்கிறார்கள். பெரிய பெரிய நிறுவனத்தினரே அதை கூச்சம் இல்லாமல் செய்கிறார்கள். முழுவதுமாக வெள்ளையில் மட்டுமே பணம் குடுத்து எத்துனை பேர் வீடு வாங்கி இருக்கிறார்கள்//

Wrong argument. These sort of stuff is HAPPENING in India, no question about it. But, just because bribary is pervasive, we cant justify that it is the right thing to do nor legalize it.

இசை said...

see freemasnor and annony...

everything cant be analyzed int eh contaxt of means and ends... moreover any xyzee cant enter into IT companies. While entering faking is always an option if u had missed the train somehow.

Its not cheating the company in anyway more over company cheats the employees sweat and toil many times. Most of the time blogging and chatting is also unethical if ur sitting and doing it from your office.

What counts is are you delivering or not?? It doesnt matter ur fake or a joke...

No one can fake 20 or 10 years of experience, max six months to one year we can fake it. Most of the companies throw the employees out if there is no project.

Layoff's and Pink Slips, how you gonna justify it?? In business, if at all if you had read about business in detail... only one thing counts, Money.

You get it by const cutting or maximize your profit by nicreasing your efficiency, market doesnt care, shareholder needs the delivery of the company.

It boils down to the employee too. Do whatever, acquire the knowledge and support the company.

Vetti may struck a wrong string, we or atleast I in no way derrogate your credentials. I too cleared CAT and got call from IIMs. The point is not that. When society bites, people need to look for some sort of escape. Cant be so idealistic at times.

Ethics is an abstractive term. What is ethics to google is not to MS and what is to MS is not ethics to other small companies.

at bottom level we argue so much, but when u guys get to witness the things happen inside the board room, u'l never feel happy about what we are doing and whom we are doing for it.

FAKE percentage maybe less, it wont affect the market in anyways and this is the time of India, which was oppressed and denied for centuries. Let everyone aboard the train and see some pasture in their life time.

We are not telling fake is the only way, but it can save someones life from being a failure, cos he missed a chance somehwere we cant deny him the way to entre into the company.

When I gave my IIM interview, most of the guys with one year gap said, I was looking after my fathers business. they were rich and can say so, but a poor guy cant say i was taking care of my fathers IT business. He has to say i was working with a small company, which is not harmful to anyone. Without clearing interview he cant entre into the gats of the company right??...


So ethics is good to argue and maybe a checking stone for a society to lookupon, but reality is more violent and strange than that.

It maybe wrong for someone but there is no wrong in doing that when ur equipped with enough credentails to handle the situations.

G.Ragavan said...

பாலாஜி, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இந்த உலகத்துல இதுதான் சரி தப்புன்னு அப்படியே அச்சடிச்சுச் சொல்ல முடியுமான்னு தெரியலை.

நாங்கூட என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். சரி...வேலைல எல்லாம் பொய்தான் சொல்றோம். ஆனா பொய் சொல்லீட்டு வேலை வாங்குனப்புறம் வேலைய ஒழுங்காச் செய்யனும். அது இல்லைன்னா ரொம்பக் கஷ்டம்.

ஒரு நிகழ்ச்சி சொல்றேன். ஒரு நேர்முகத்தேர்வு எடுத்துக்கிட்டிருந்தேன். அவசரமா நாலஞ்சு பேர் தேவைப்பட்டாங்க. பாத்தா வரிசையா தெலுங்கு ஒரிசா ரெஸ்யூம்ஸ். பாத்தாலே கண்டுபிடிச்சிரலாம் அது fakeன்னு. ஒரு பையன் கிட்ட நாலு கேள்விதான் கேட்டேன். சரி தம்பி...நாங் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு. நீ எதாச்சும் கேக்கனுமான்னு கேட்டேன். அதுக்கு அவன்...I think you are not satisfied with my answer. Shall i know the result now? அப்படீன்னு கேட்டான். அதைச் சொல்லக் கூடாதுல்ல. HR தானே சொல்லனும். அதைச் சொல்லி அனுப்பிச்சேன். அன்னைக்கு வந்தது பெரும்பாலும் அப்படித்தான்.

ஆனா...ஒன்னோட கேள்விக்கு எங்கிட்ட பதில் இல்லை. சரிதான்னு சொல்லவும் வாய் வரலை. தப்புன்னு சொல்லவும் மனசு வரலை.

Boston Bala said...

I presume this is a matter of projecting one's assets in a +ve way. Performance appraisals, marketing presentations, sales pitches, successful marriages all do it to varying extent.

In politics it is called spin and in personal world it is accentuating the plus side and in management it might be termed as win-win situation.

You are probably elucidating on how to justify one's talent using 'paper proofs'. So, change the title tone from 'Fake' to 'How the jobless can become a Software Engineer' which will be 'pc'

களப்பிரர் said...

I (we?) have seen many guys, who are not fake - who cleared aptitude test, technical test, interviews... and at last they are very unskilled and and delivering very low productivity. so just because some one is not a fake, that does not mean he or she is good in her job!

Anonymous said...

//ஆனால் யோக்கியன் எடுக்கட்டும் முதல் கல்லை என்பது போல் அனைவரும் ஏதோ ஒரு வகையில் out of ethics செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறோம்//

Just to conclude my take so far..

Have I done unethical things : YES
Will I do it agian: In selfish motivation and circumstances, YES
Will I preach others to do it: NEVER
Will I care if others preach : Couldnt care less
Will I voice my opinion: Oh, Yes!

சன்னாசி said...

'Faking' is wrong. Period. Certain 'fakings' are treated as they should be, and I welcome it.

இலவசக்கொத்தனார் said...

//I presume this is a matter of projecting one's assets in a +ve way. Performance appraisals, marketing presentations, sales pitches, successful marriages all do it to varying extent.//

பாபா, நீங்க சொல்லும் மேட்டர் வேற. பள்ளிக்கூட டிராமாவில் அரசனுக்கு சாமரம் வீசும் வேடமானாலும் தான் தான் முக்கியமான பாத்திரம் எனச் சொல்வது, அஜீத் அகர்கர் 20-20 உலகக்கோப்பை வென்றது தன்னால்தான் என்பது, நான் இல்லை என்றால் ஒரு ப்ராஜெக்ட்டே இல்லை என்பது - இதெல்லாம் உயர்வு நவிர்ச்சி அணி. நீங்க சொல்லும் பாஸிடிவ் ரீயென்போர்ஸ்மெண்ட்.

ஆனா நான் நடிக்காத ட்ராமாவில் தாந்தான் கதாநாயகான் எனச் சொல்வது, சச்சின் 20-20 உலகக்கோப்பை வின்னர் எனச் சொல்வது, இல்லாத அனுபவம் இருப்பதாகச் சொல்வது என்பது பொய்.

உயர்வு நவிற்சி கண்டுபிடித்துவிடலாம். அதற்குப் பின்னும் அந்த வேலைக்கு ஒருவர் சரியா இல்லையா என முடிவு செய்யலாம். ஆனால் பொய் சொன்ன ரெஸ்யூமேவிற்கு வேலை கிடையாது. அது இண்டக்ரிட்டி சம்பந்தப்பட்ட மேட்டர். வேலைக்கு சேர்ந்து எக்ஸ்பென்ஸ் ஸ்டேட்மெண்டில் புகுந்து விளையாடினாலும் இதே கதிதான்.

மத்தபடி வேலை நேரத்தில் ப்ளாகுவது அந்நிறுவனத்தின் பாலிஸி படி தவறாக இருந்தால் தவறுதான். பெரும்பாலும் நேரத்திற்குள் வேலையைச் செய்தால் இதனை யாரும் கண்டுகொள்வதில்லை. அது நடக்கவில்லை என்றால் நடவடிக்கை நிச்சயம்.

மற்றபடி வேலைபிழிந்து எடுப்பதும், பிங்க் ஸ்லிப் கொடுப்பதும் நடப்பதால் நான் தவறான தகவல் தருவது சரி என்பதைப் படிக்கவே சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

தஞ்சாவூரான் said...

எத்திக்ஸ் பத்தி பேச, இந்த ஒலகத்துல எந்த கம்பெனிக்கும் மற்றும் தனிப்பட்ட நபருக்கும் அருகதை இல்லை என்பது என் தாழ்மையான தனிப்பட்ட கருத்து! இது, யாரையும் புண்படுத்த சொல்லவில்லை... இதுதான் உண்மை. நாம் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு சமயத்தில் அனெதிக்கல் சமாச்சாரங்களை செய்திருப்போம் என்பதை, கொஞ்சம் கண்ணை மூடி யோசிச்சா புரியும்! அவங்கவங்க ரெசுமே எடுத்து படிச்சுப் பாருங்க. ஒவ்வொரு வரியிலையும் நீங்க 100% உண்மை சொல்லி இருக்கீங்களான்னு!

என்னப் பொறுத்தவரை, வெட்டிக்கு இந்தப் பதிவுக்கு என் முழு ஆதரவு. வெட்டி சொன்னமாதிரி, யாரும் பொய்யான டிகிரிய அடிச்சு வேல வாங்க சொல்லலே. சூழ்னிலை காரணமா, இந்த மாதிரி கொஞ்சம் பொய் சொல்றதுல, தப்பில்லை. அப்படி பண்றவர்கள் யாரும், அடுத்தவர் குடியைக் கெடுக்குறதுக்கு அப்பிடி பண்றது இல்லை!

நாலு பேருக்கு நல்லதுன்னா...எதுவுமே தப்பில்லை.

Anonymous said...

போலிச்சான்றிதழையும், போலி மருத்துவர்களையும் Fake Experienceஐயும் ஒன்றாக ஒப்பிடுவதா ? நல்ல நகைச்சுவை. இங்கே பின்னூட்டம் விட்ட பலர், ethics பற்றி பேசும் பலர் கல்லூரி முடித்தவுடன் campus மூலமாக நேரடியாக வேலையில் நுழைந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்லூரி முடித்து விட்டு எல்லா திறமையும் இருந்தும், பல நிறுவனங்களுக்கு Resume அனுப்பியும் எவரும் கண்டுகொள்ள வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும். நான் காந்தியின் பேரன், நேர்மையாக மட்டுமே வேலை தேடுவேன் என்று சொல்லிக்
கொண்டிருப்பதா ?

அதே Resumeல் ஒரு இரண்டு வருட அனுபவத்தை போட்டு பாருங்கள். எத்தனை பேர் இண்டர்வியூவுக்கு கூப்பிடுகிறார்கள் என்பது தெரியும். இங்கு Fake போடுவது இண்டர்வியூவுக்காக மட்டும் தானே தவிர, அதனை வைத்தே எவரும் வேலை கொடுத்து விடுவதில்லை. என்ன தான் Fake போட்டாலும், திறமை இருந்தால் தான் வேலைக்கு எடுக்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கும் பொழுது பலருக்கு "வேலை" பற்றிய சிந்தனையே இருப்பதில்லை. கல்லூரி முடித்துவுடன் வேலை தேட ஆரம்பிக்கும் பொழுது தான் அதற்கு தேவைப்படும் பிற திறமைகள் தெரியவரும். அதனை வளர்த்துக் கொண்டு, வேலையில் நுழைய குறைந்தது ஒரு வருடமாவது தேவைப்படும். அந்த ஒரு வருடத்திற்கு பிறகு Fresher என்ற தகுதியும் போய் விடும். அப்பொழுது வேலை தேட வேண்டும் என்றால் Experience இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க நிறுவனங்களுக்கு நம்முடைய Resumeஐ அனுப்பும் பொழுது இந்திய நிறுவனங்கள் செய்யும் கோல்மால் பல உண்டு. நமக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு நம்முடைய Resume உருமாற்றும் பெற்று இருக்கும். எனக்கு C++ தெரியும் என்று சொன்னால் Javaவும், C++ம் ஒன்று தான், உனக்கு தெரியும் என்று சொல் என நம் நிறுவனங்களே நமக்கு அறிவுத்துவார்கள். அது தவறில்லையா ?

Survival of the Fittest என்பது தான் இங்கே பொருந்தும். ஒன்றும் தெரியாமல் எவரும் Fake போடுவதில்லை. எல்லாம் தெரிந்தும் எவரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் பொழுது தங்களின் Survivalக்கு Fake experience போட்டு இண்டர்வியூ கிடைக்குமாறு செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை வேலைக்கு ஆள் எடுக்கும் முறையில் நிறைய மாற்றங்களை இந்திய நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும். கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தான் புத்திசாலிகள் என்று நிறுவனங்கள் நினைத்தால், 70% குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் என்ன செய்வது ? அவர்கள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமா ?

Campus மூலமாக வேலைக்கு வந்த சிலரை வைத்து நான் பட்ட இம்சை எனக்கு தான் தெரியும்

யாத்திரீகன் said...

when are the IT companies going to get projects with the ethics in business ? :-)

Sridhar Venkat said...

Sorry for English.

I presume in the context of this debate not about 'Fake' degrees and certificates. In my experience I had seen many Faking their academic credentials as well.

I would say there is a thin line seperates what you call as 'Fake' and what you call as 'spicing up'. I think Ilavasa Kothanar hit the bulls eye with apt example here.

There are many realtime examples that I witnessed wherein people who 'faked' their experience where not able to deliver to the expectations.

The problem with the S/w industry is, the selection process is not based on Talent but based on paper proffs like academic or past experience.

Faking experience has become a known fact to everyone like bribery in Goverment Offices. The only difference here is all the parties involved are getting benefited. The company is increasing its headcount, the HR is fulfilling their SLA, the sales is getting more ammunition, the Delivery is getting strengthened and the candidate is getting the job.

Someone say that its a blatant lie and someone may feel that its a smart move. But there is always some value for moral and ethics which may not have any commercial aspect. Its upto the invidual to decide.

But onething is sure. If you believe in what you know and confident about delivering to the expectations definitely you will get what you want. No faking, no spicing up, nothing else is needed. This is my personal experience. May be I am not smart :-)

Sridhar Venkat said...

Sorry for English.

I presume in the context of this debate not about 'Fake' degrees and certificates. In my experience I had seen many Faking their academic credentials as well.

I would say there is a thin line seperates what you call as 'Fake' and what you call as 'spicing up'. I think Ilavasa Kothanar hit the bulls eye with apt example here.

There are many realtime examples that I witnessed wherein people who 'faked' their experience where not able to deliver to the expectations.

The problem with the S/w industry is, the selection process is not based on Talent but based on paper proffs like academic or past experience.

Faking experience has become a known fact to everyone like bribery in Goverment Offices. The only difference here is all the parties involved are getting benefited. The company is increasing its headcount, the HR is fulfilling their SLA, the sales is getting more ammunition, the Delivery is getting strengthened and the candidate is getting the job.

Someone say that its a blatant lie and someone may feel that its a smart move. But there is always some value for moral and ethics which may not have any commercial aspect. Its upto the invidual to decide.

But onething is sure. If you believe in what you know and confident about delivering to the expectations definitely you will get what you want. No faking, no spicing up, nothing else is needed. This is my personal experience. May be I am not smart :-)

Dreamzz said...

Wow!
1. You cannot justify a wrong based on another wrong that is happening
2. Fake is wrong.

Having said that, Vetti, if I were you, I would still continue this series which i guess would be very usefull for people who got stagnated for some reason and cannot get a job.

sometimes, I can do wrong even when i know it is wrong. No need to answer you. If you dont like it, skip it! read the good things!
I dont think I have to answer to you or anyone.

நாலு பேருக்கு நல்லது நடகும்ன எதுவுமே தப்பில்ல! அப்படி தப்பா இருந்தாலும் நான் செய்வேன்!

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...
இல்லாததை இருக்கிற மாதிரியும் செய்யாததை செய்த மாதிரியும் சொல்வது பொய்தான். அதைச் செஞ்சா தப்புதான்.

எங்கள் நிறுவனத்தில் இப்படி ஒரு தப்பு கண்டுபிடிக்கப்பட்டால் உடனடி வேலைநீக்கம்தான், அந்த ஊழியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் சரி.

இது நாணயமாக இருப்பது, நம்பிக்கையை பிரதிபலிப்பது. இதில் குறை இருந்தால் திருத்தவே முடியாது. வேலைக்கு இப்படிச் செய்தவன் நாளை எதையும் செய்யத் துணிவான் என்ற எண்ணமே வலுப்படும்.

இதை செய்யலாம் என உங்களைப் போன்ற ஒருவர் பதிவு போடுகையில் இதுவரைச் செய்யாதவன் கூட, இப்படிச் செய்யலாம் போல என செய்யத் துணிவான். செய்ய முடிவு செய்துவிட்டவனுக்கு உங்கள் பதிவு தேவையில்லை.

பாலாஜி, வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு.
//

கொத்ஸ்,
இங்க பொய் சொல்றதால யாருக்கும் எந்த பாதிப்புமில்லை.

அதைவிட முக்கியமானது முடிந்த வரை எல்லாரும் நேர்மையாக வேலை பார்க்கவே விரும்புவர். ஆனா வேற வழியேயில்லைனு ஆனதுக்கப்பறம் தான் இதை தேர்ந்தெடுக்கிறார்கள்.

Fresherஆ வேலை கிடைக்க வாய்ப்பேயில்லைனு முடிவானதுக்கப்பறம் தான் இதை தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால இதை படிச்சிட்டு தான் அந்த முடிவெடுக்கறானு சொல்றது ஒத்துவராதுனு நினைக்கிறேன்...

Anonymous said...

//sometimes, I can do wrong even when i know it is wrong. No need to answer you. If you dont like it, skip it! read the good things!
I dont think I have to answer to you or anyone//

என்ன்ன பாலிசி!! புல்லரிக்குது ...('என்ன family!' ஸ்டைலில் படிக்கவும்)

(note: this is not a personal attack .. take this in a lighter vein)

பிரேம்குமார் said...

இதுவும் ஒரு வெட்டி பதிவு தான் என்றால் நீங்கள் தாராளமாக தொடரலாம். சொல்வதற்கு ஏதுமில்லை

குற்றஞ் செய்தவனை விட குற்றஞ் செய்ய தூண்டியவனுக்கே தண்டனை அதிகமாக தரப்பட வேண்டும் என்கிறது சட்டம்

என்னமோ செய்யுங்க

- பிரேம்குமார்
http://premkumarpec.blogspot.com/2007/12/fake.html

Sathiya said...

ஆஹா... விஜயகாந்த் படத்துல கடைசீல கோர்ட் சீன்ல பேசுவாரே அதான் ஞாபகம் வருது;) நாங்க சொல்ல வரதே வேற. இந்த Fake experiance எல்லாம் காலா காலமா நடந்துட்டு வருது. அது நீங்க சொல்லிதான் நடக்கும் என்பதில்லை. ஆனா நீங்க பதிவு போடறதால அது தப்பே இல்லை என்பது போல் ஆகிவிடும். அதுக்காக அவங்க தப்பு பண்றாங்க இவங்க தப்பு பண்றாங்க, நாங்க ஏன் பண்ண கூடாது என்றெல்லாம் கேக்க கூடாது. அவங்க கிட்ட பணம் நிறைய இருக்கும், சமாளிச்சிக்குவாங்க. ஆனா நம்ம அப்படி கிடையாது. நீங்க வேணும்னா தனிப்பட்ட முறைல உங்க நண்பர்களுக்கு இதை பத்தி சொல்லலாம். ஏன்னா இரண்டு வருஷம் வேலை கிடைக்காம அலையறது மாதிரி ஒரு கொடுமையே இல்ல. வறுமையின் நிறம் சிவப்பு படம் பார்த்தால் அது நல்லா புரியும். இன்னொரு விஷயம் என்னன்னா சில பேர் முயற்சி பண்ணாமலேயே இந்த வழியில் வேலை தேட ஆரமிச்சிடுவாங்க. அது மட்டும் இல்லாம சில பேர் வேலை நல்லா இருந்தாலும் சம்பளம் கம்மியா இருந்தா வேண்டாம்னு சொல்லிடுவாங்க. பின்னால பீல் பண்ணுவாங்க. ஒரு Fresher தன் வேலை தேடும் பொழுது சம்பளத்தை பத்தி யோசிக்க கூடாது. இப்போ எல்லாரும் அவனுக்கு இவ்வளவு கிடைக்குது, இவனுக்கு இவ்வளவு கிடைக்குது அப்படீன்னு பார்த்தே பல வாய்ப்புகளை தவற விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு நீங்க அறிவுரை சொல்ற மாதிரி ஒரு பதிவு போடலாம். நான் கூட முதலில் Data Entry வேலைல இருந்து தான் இப்போ testingல இருக்கேன்.

நீங்க சொன்ன மாதிரி 2002 இல்ல 2003ல இந்த பதிவ போட்டு இருந்தா பரவா இல்ல. இப்போ தான் வேலை வாய்ப்பு எக்கச்சக்கமா இருக்குதே. அவனவன் மூணு நாலு offer letter வச்சுக்கிட்டு அலையறான். அது மட்டும் இல்லாம ஆறு மாசத்துக்கு ஒரு கம்பெனி தாவறான்!

Anonymous said...

I have worked in IT field for more than 10 years and i am now in Singapore. I had come across 2 guys who applied with fake resume and sad to say that they can not show even minimum expected performance. They are from Andra and they had to be sent off.

Lately, when i visited India, had come across few young guys from TN, who were doing various IT courses to join the work force.

One guy luckily managed to get an opportunity, just prior to his 'fresher' status is going to end.

Second guy got a job with a fake resume and can not survive for even 2 months.

Third guy is faking his resume that he had worked in IT industry though he had spent 3 years in BPO.

Fourth one had already worked in BPO and managed to get an IT job. But he is going to fake a project to get a better offer and pay package in his next job. In his current job, he is not assigned a project for the past 1 year. The company is not doing well.

Somehow, these guys are willing to prepare their true resume and are ready to spend 1 or 2 years in a job which offers more challenges and less pay, so that they can learn and can escape the faking process. But nobody offers them a job, when the resume speaks the truth.

Ofcourse, all of you would have come across such cases. As a friend, I had counseled these guys, not to fall into the fake track.

The facts are...

(1) Many IT companies are training and molding the people selected in 'campus interview' and 'freshers' alike, prior to assigning them in the project.

(2) Not everybody gets a job in the Campus interview OR while they are still 'fresher', and the IT companies are very well aware of it.

Group1 - selected in-campus
Group2 - got a job as a 'fresher'
Group3 - missed out both.

All the IT companies had to come up with a scheme for the Group3 and openly identify their existence. The real performance is regardless of which group the person belongs to.

And as per the argument goes, not only the Group3 people but even the IT companies are faking their employees' resume to get the project. Eventually, there is 'Not a single version of truth exists about you', even if you do not fake your resume on your own.

My opinion is,

Since we all knew the faking has become part and parcel of the IT job market, why do not IT companies encourage the people to provide the true resume and train them up to fit into their current project. If required, they can sign up a strong contract so that the trained people do not leave the company for atleast 3years.

So, IT companies need to consider about the Group3 people and polish their skill sets to get valuable resources and to reap good benefits too.

உறையூர்காரன் said...

நான் Interview Panel ல இருந்தப்ப Fake resume நிறைய வரும். முதல் அஞ்சு நிமிஷத்துலேயே original experience ஆ இல்லையானு கண்டுபிடிச்சுடுவேன். என்னுடைய Interview Style ல நடைமுறை சிக்கல்கள் அதாவது Realtime Issues குறித்த கேள்விகள் நிறைய இருக்கும். ஏன்னா எங்க கம்பெனியில Interview தேர்வு செய்யப்பட்ட அப்புறம் அந்த ஊழியர் சரியா வேலை செய்யலனா அவரை Interview எடுத்தவர் குழுவில் போட்டுருவாங்க. அதனால நண்பர்கள் கிட்ட Realtime Scenarios பத்தி கேட்டு கத்துகிட்டு Interview க்கு போனால் வெற்றி நிச்சயம். நான் 6 வருடத்திற்கு முன்னால் இப்படித்தான் முதன்முதலா வேலை வாங்கினேன். இப்ப Background checking கடுமையா இருந்தாலும் நீங்க சரியா வேலை செய்யலனாதான் அந்த அஸ்திரத்த எடுப்பாங்க. So give your heart and soul for your first assignment.

மதுரையம்பதி said...

//இங்க இஞ்சினியரிங் படிக்காம யாரையும் சர்டிபிகேட் அடிச்சி வேலை செய்ய வைக்க போறதில்லை. //

வெட்டியாரே, இஞ்சினியரிங் படிக்காம சர்டிபிகேட் கொடுக்கவும் ஊரில ஜெனங்க இருக்காங்க...ஆந்திரா உஸ்மானியா சர்டிபிகேட் உலகம் முழுதும் கிடைக்கிறது :-)

அமெரிக்கால கூடத்தான் பேப்பரில ஆட் குடுத்து 1200-2000 $க்கு MBஅ சான்றிதழ் தருகிறான். அங்க 2-3 வருஷம் இருக்கிறவன் அத வாங்கிகிட்டு இங்க வந்து சாலரி ரி-பிட் பண்ண சொல்லுபவன் கூடத்தான் இருக்கான். அப்போ அதுவும் சரியா?

//எப்படியும் அதே ஜாவா, அதே டாட் நெட், யுனிக்ஸ் தான். அதே போல எந்த ஒரு பிராஜக்ட்னாலும் புதுசா சேரவனுக்கு ட்ரைனிங் இருக்கும். //

லேட்ரல் எண்டிரியா 2-3 வருஷம் அனுபவத்துடன் வருபவர்களூக்கு ஒரு டிரெயினிங்கும் கிடையாதுங்க....மாக்ஸிமம், டொமைன் டிரெயினிங் வேணா தருவாங்க...டெக்னாலஜி டிரெயினிங் இருப்பதில்லை....ஏன்னா பிராஜக்ட்க்கு ஏற்ற டெக்னிகல் ஸ்கில் இருப்பதாலதான் அவனை அந்த பிராஜக்ட்க்கு அலோகேட் பண்ணுறாங்க.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒவ்வொரு 3 மாத இடைவெளியிலும் 50-100 பேர் இந்தமாதிரி fakeஆல் மாட்டிக் கொண்டு வேலை இழக்கிறார்கள். கஸ்டமரிடம் ந்ல்ல ரெப்யூட்டேஷன் கிடைத்த பிறகும் கூட அவன் fake எக்ஸ்பீரியன்ஸ் போட்டது நிருபிக்கப் பட்டதால் வேலை இழந்தவர்கள் அதிகமாகிறது.

It has reached to a level that even University (BLR university) mark sheets are forgeed and the same are caught and we sent a guy back to home. I personally know that person and he is a IBM certified DB2 Administrator.

நாஸ்காம் கூட ஒரு DB பில்ட் பண்ணுவதாக அறிகிறேன். தற்போது ஆப்ஷனலாக எல்லா கம்பெனி எம்பிளாய்ஸும் ரெஜிஸ்டர் பண்ணிக்க சொல்லுறாங்க. இதெல்லாம் வந்தா நீங்க சொல்லும் இந்த முயற்சிக்கெல்லாம் பெரிய ஆப்பு ஆகிவிடும்.

Hari Haran said...

நீங்கள் இருப்பது குளுகுளு மேடையில் கையில் ஒரு மைக் கிடைத்தால் தத்துவங்கள் வரும் ஆனால் சுடும் மணலில் அமர்த்து பாரும் அதன் வலிதெரியும்...

என்னமோ கம்பனி உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் அறிவாளி போலவும் fake போடுபவன் எல்லோரும் சரியாக படிக்காதவர்கள் போலவும் நினைக்கறிங்க.

அப்படி பாத்த PM, ML, TL தங்களின் அதிகாரத்தை பிரகியோகித்து தனது உடன் பிறப்புக்களை எல்லாம் சேர்த்து விடுகின்றனர். வேண்டுமானால் இதில் இண்டர்வியு ப்ரொசெஸ்யை சரியாக கடைபிடித்து இருக்கலாம் ஆனால் முடிவு முன்பே அறியப்படதாகும். where has your ethic gone ????

if a person know the HR he get placed i have seen this in my naked eye....

குடும்பத்திலே முதல் முறையாக பொறியல் படித்தவன் எங்கே போவான்??? இதில் இண்ட்ர்வியுவில் கிடைக்கும் பேனல் மிக முக்கியம். தங்கள் இஷ்டத்திற்க்கு கேள்விகளை கேட்பார்கள்.

இது ஒரு உண்மை சம்பவம் :

ஒரு இண்டர்வியுவில் நடந்த சம்பவம் ஒரு பேனலில் கேட்கப்பட்ட கேள்வி "what will you do if a theif enter your home" அதுவே மற்றுமொரு பேனலில் கேட்கப்பட்ட கேள்வி "what is the name of the mechanical magazine which has been famous in the recent days in US"

interivew atten பண்ணிய இருவருமே information technology stream யை சேர்ந்தவர்கள். IT க்கும் mechnical magazie க்கும் என்ன சம்மந்தம்???

இவ்வாறு வாய்ப்பை தவற விட்டவர்கள் எங்கே போவது????

self confindent, enthusiasm, motivation இவை தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக அவசியமான ஒன்று... அதையே மூச்சாக கொண்டு மனம் தளறாமல் வருடக்கனக்கில் வேலை தேடினால் only 2006 is eligible... only 2007 is eligible... what you have been doing this much days... why u did not get placed till now ????

என்னதான் செய்வார்கள்????
இது போன்ற கிறுக்குதனமான கேள்விகலோ இல்லை criteria வோ இல்லை என்றால் யாரும் fake போடமாட்டர்கள்...

since by now ur in a good position dont try to act that ur honest...
sit a while and think whether u have been very honest in ur life till now ...

யாரும் விரும்பி தவறு செய்ய மாட்டார்கள்... தகுதி இருந்தும் கிடைக்கவில்லை... குடும்பத்தில் உதவ யாரும்மில்லை... குடும்ப சுமை... பணம் வேண்டும் கிடைக்கும் வழிய பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Hari Haran said...

நீங்கள் இருப்பது குளுகுளு மேடையில் கையில் ஒரு மைக் கிடைத்தால் தத்துவங்கள் வரும் ஆனால் சுடும் மணலில் அமர்த்து பாரும் அதன் வலிதெரியும்...

என்னமோ கம்பனி உள்ளே இருப்பவர்கள் எல்லோரும் அறிவாளி போலவும் fake போடுபவன் எல்லோரும் சரியாக படிக்காதவர்கள் போலவும் நினைக்கறிங்க.

அப்படி பாத்த PM, ML, TL தங்களின் அதிகாரத்தை பிரகியோகித்து தனது உடன் பிறப்புக்களை எல்லாம் சேர்த்து விடுகின்றனர். வேண்டுமானால் இதில் இண்டர்வியு ப்ரொசெஸ்யை சரியாக கடைபிடித்து இருக்கலாம் ஆனால் முடிவு முன்பே அறியப்படதாகும். where has your ethic gone ????

if a person know the HR he get placed i have seen this in my naked eye....

குடும்பத்திலே முதல் முறையாக பொறியல் படித்தவன் எங்கே போவான்??? இதில் இண்ட்ர்வியுவில் கிடைக்கும் பேனல் மிக முக்கியம். தங்கள் இஷ்டத்திற்க்கு கேள்விகளை கேட்பார்கள்.

இது ஒரு உண்மை சம்பவம் :

ஒரு இண்டர்வியுவில் நடந்த சம்பவம் ஒரு பேனலில் கேட்கப்பட்ட கேள்வி "what will you do if a theif enter your home" அதுவே மற்றுமொரு பேனலில் கேட்கப்பட்ட கேள்வி "what is the name of the mechanical magazine which has been famous in the recent days in US"

interivew atten பண்ணிய இருவருமே information technology stream யை சேர்ந்தவர்கள். IT க்கும் mechnical magazie க்கும் என்ன சம்மந்தம்???

இவ்வாறு வாய்ப்பை தவற விட்டவர்கள் எங்கே போவது????

self confindent, enthusiasm, motivation இவை தகவல் தொழில்நுட்பத்துறையில் மிக அவசியமான ஒன்று... அதையே மூச்சாக கொண்டு மனம் தளறாமல் வருடக்கனக்கில் வேலை தேடினால் only 2006 is eligible... only 2007 is eligible... what you have been doing this much days... why u did not get placed till now ????

என்னதான் செய்வார்கள்????
இது போன்ற கிறுக்குதனமான கேள்விகலோ இல்லை criteria வோ இல்லை என்றால் யாரும் fake போடமாட்டர்கள்...

since by now ur in a good position dont try to act that ur honest...
sit a while and think whether u have been very honest in ur life till now ...

யாரும் விரும்பி தவறு செய்ய மாட்டார்கள்... தகுதி இருந்தும் கிடைக்கவில்லை... குடும்பத்தில் உதவ யாரும்மில்லை... குடும்ப சுமை... பணம் வேண்டும் கிடைக்கும் வழிய பயன்படுத்திக் கொள்கின்றனர்.

siva said...

hi balaji,

Pls drop this idea abt writing a post "how to get a job with fake resume".U may wonder why i said like this....Becoz often i ask u to start writing this post!

But i didnt expect this much critisism!

kalyanam agi santhosama iruka vendiya nerathil,neenga ippadi egappatta ethirpugal (intha post-ku) vangurathu enakku kastamarukku!

So pls drop this post and delete previous post!

mathavanga(anony's) titinathuku varuthapadathinga!


valakam pola ethuna comedy pathivu podunga!c u later!

காஞ்சி பையன் said...

எது நியாயம் ?, எது அநியாயம் ?, படிச்சி முடிச்சு வேலை இல்லாம கஷ்டப்பட்டு , சும்மா 2000,3000 னு வேலைக்குபோய் , குடும்பத்த கரைஎத்த முடியாம கஷ்டபடறதா ?
நாம FAKE போடுரதனால அவன் நாசமா போயிடுறானா? . இல்ல நாமதான் உள்ள போய் சும்மா இருக்கபோரோமா?, அய்யா வேணாம் விடுங்க நாலு பேரு நல இருக்கட்டும் , ஒரே ஒரு கேள்வி நாம FAKE போடுரதனால அவன் என்ன இழக்கிறான் ?

இசை said...

என்ன வெட்டி, இன்னைக்கும் கடைய விரிச்சுரலாமா??... நம்ப ஆளுங்க ரொம்ப நல்லவவவவவனுங்களா இருக்காய்ங்க... :). We are Culturally Hypocrites... hahaha

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

செம சூப்பர் விவாதமா இருக்கே! சரி, இதுல கலந்துக்காம போக முடியல... என்னோட 78ரூவா (இன்னிக்கு கணக்குல).

ஓகே, நீங்க சொல்ல வரது புரியுது.

1. ஆனா, டிகிரில ஃபேக் செய்யறது மட்டும் தப்பு, வேலை அனுபவத்தில் பொய் சொன்னா தப்பு இல்ல என்று எப்படி சரியாகும்?

2. நான் சீனியர் டெக், மானேஜர் லெவலில் பலரை இன்டர்வியூ செய்த அனுபவத்தில்: தென் ஆசியா பக்கத்திலிருந்து வரும் பலரும் (இந்தியரைச் சேர்த்து, ஜி.ரா. மாதிரி குறிப்பிட்ட மொழி என்று இல்லை, எல்லாரும்!) வேலை அனுபவத்தை பொய்யாக எழுதியிருப்பது கண்கூடு. ஒன்றிரண்டு கேள்விகளில் புளுகுமூட்டை அவிழ்ந்து விடும். இதை என் கூட அமர்ந்திருக்கும் அமெரிக்கர்கள் கவனிக்கவில்லை என்கிறீர்களா? இல்லை என்னைப் போன்ற தென்னாசியருக்கு அவமானமாய் இருக்காது என்கிறீர்களா?

3. கவனிக்க: ஒருவர் சொல்லுவது பொய் அனுபவம் என்று "வெள்ளிடை ராக்கீஸ்!" "உள்ளங்கை கூஸ்பெரி" யாகத் தெரிந்தாலும் Aptitude இருப்பவர்களை உண்மையை நானே எடுத்துச் சொல்லி
கட்டாயம் recommend செய்திருக்கிறேன் / பணிக்கு எடுத்திருக்கிறேன். என் மற்ற பணித்தோழர்களும் (அமெரிக்க / ப்ரிட்டிஷ்) இதைப் பற்றி பேசியிருக்கிறோம். வேலை பற்றிய நல்ல பாசிடிவ் மனப்பான்மையும், கற்று கொள்ள வேண்டும் என்ற வேகமும் தான் இந்தியர்களுக்கு (சரி, சரி, தென் ஆசியர்களுக்கு) உலகத்தில் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது/கொடுக்கும்.

சரி, பின்னூட்டம் நீளமாகப் போச்சு: உங்கள் hard-working / analytical / quick-learning பண்புகளை எடுத்துச் சொல்லுங்க! அனுபவத்தை வேலைக்கு ஏற்றாற் போல் "அழகாய்ச் சொல்லுவதில்" தப்பே இல்லை. மேற்கத்தியர் பலரும் செய்வது தான்...

Arunkumar said...

vetti
someone had said 'edhukku indha vishaparichai'.. i truly second him.

mudinja alavukku just teach how to get a job in a fair way thru ur blog.. explain to job-seekers
whats hot domain in the market, how to prepare for interviews/written tests, how to improve
commn skills,how to develop networking wth friends/seniors, what courses
will suit their interests, teach them practical problems/case studies etc..
i mean there are various ways one can tune himself and get a job..

In the present scenario, getting a job is not that difficult,
the problem arises when one makes up his mind to SOMEHOW get a job
in top companies and go abroad.. chinna company-la 5000 to 10,000 INR
salary-la work panni experience gain pannitu aproma tcs/infy/satyam try
panna enna thappu? i am sure thr r small companies that r ready to take
ppl even though there is a GAP of 1 or 2 yrs as long as he/she was not idle
and learnt some courses. my sis was working for a small concern for 2 yrs
and am sure she knows better oracle than me and she
cud have got a job anywhere after that... PERCEPTION shud change.

and by the way, whats the point in teaching how to fake? thirudanumnu
mudivu pannavanukku "night-la poda pagalla pona maatippa"nu solli tharanumnu
enna avasiyam? avan avanukku theriyaadha? ITS A PERSONAL RISK and shudnt
need any advice... odane "malaikum maduvukkum irukkura
vithyaasam"nu solluveenga.. no its not, they are just parallel... EVERY WRONG
stuff in the world can be justified but thats not the point !!

ur blog is extremely personal and opinions r urs but do understand that it has got some
reach. i have seen a lot of ur posts coming to me as a Fwd. even ur latest
topic abt s/w engineers came as a Fwd sent by a friend who is unrelated to
blogsphere.. indha posts continue panningana expect a mail like this..

"anna, my name is so and so and i did BE from so and so college. past 2
yrs i am looking for job and i attended more than 50 interviews.. ur blog
was useful and i learnt a lot. rite now my family situation is not good.
can u help me in faking my resume (attached) and send to ur company/team?"
pls help anna.. sincerely, so and so..

the option to continue these posts will depend on what u will feel
reading such mails down the line.. if u will take that as a social service,
its upto u. if i were u, i wudn't..

cheers,
arun

மோகன்தாஸ் said...

பாலாஜி,

உங்களுக்கே தெரிந்து ஒருவர் ஒரு பின்னூட்டத்தை இரண்டு தடவை தவறுதலாய்ப் போடும் பொழுது(ஒரே விஷயம்) இரண்டையும் பப்ளிஷ் செய்வதில் எதுவும் ரகசியம் இருக்கிறதா?

ஏன் ஒன்றை நீங்கள் ரிஜக்ட் செய்யக்கூடாது?

இசை said...

மோகன் தாஸ்,

அதில் ரகசியமெல்லாம் ஏதுமில்லை. முதல் பின்னூட்டத்தில் தவறவிட்ட சில பதங்களை இணைத்து மறுபடி பின்னூட்டினேன். பின்னூட்டத்தின் முழுமை கருதி வெட்டி அதை அனுமதித்திருக்கலாம். இது ஒரு வெளிப்படையான நிகழ்வு, என்ன ரகசியத்தை கண்டீர்கள் இதில்??

சிறில் அலெக்ஸ் said...

சூடான இந்த விவாதத்தில் கொஞ்சம் கை நனச்சிடலாம்னு ...

Fake - எத்தனை வகைப்படும்.
1. இருக்கிற அனுபவத்தை மேம்படுத்திச் சொல்வது.
2. இல்லாத அனுபவத்தை இருக்குது என்பது.

இந்த இரண்டில் முதல் வகை எல்லாருமே செய்யக் கூடியது, எல்லா துறைகளிலும். எழுத்தில் இல்லையென்றாலும் பேச்சிலாவது ஒரு மேம்படுத்தல் இருக்கும்.

இல்லாத அனுபவத்தை இருக்கிறது என்பது. இது எத்திக்கலி தவறான விஷயம்தான். ஏன் சட்டப்படி இது கிரிமினல் குற்றம்.

கவனக் குறைவாக இருப்பவர்களிடம் பிக் பாக்கெட் அடிப்பது எப்படி என ஒருவர் சொல்லிவிட்டு கவனக் குறைவா இருக்கிறது தவறு என வாதாடுவது முற்றிலும் சரியான வாதம் அல்ல.

இந்த விவாதத்தின் முடிவில் சாலமன் பாப்பையா வேலையை என்னை செய்யச் சொன்னால் இததைச் சொல்வேன். எது கொடுமையானது? ஒருவன் பொய் சொல்லி வேலை பெறுவதா அல்லது அவன் வேலை இல்லாமல் இருப்பதா? இந்தக் கேள்விக்கான விடையில் ஒரு பதில் கிடைக்கலாம்.

என்ன இருந்தாலும் இந்த விவாதத்திற்கு சமாளிப்பான பதில்களையே தர இயலும்.

ஒரு பதிவில் உங்களுக்குத் தோன்றிய சில பாயிண்ட்களைப் போட்டுவிட்டு கமுக்கமாக நீங்க இதை விட்டுவிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

உங்களுக்கு நேரம் இருக்குமெனில் ஆங்கிலம் கற்றுத்தரும் பதிவுகளை ஒரு தொடராக எழுதலாம். I think that'e a nobler cause than this. Just my opinion.

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

Another thing: I stayed home to take care of my family for two years - giving up my managerial job. I use that period in my resume to show that I did volunteer work as well as some freelancing (which I truly honestly TRIED!). When I explain it that way, companies still hire me. I ended up learning new technologies as well as interesting observations about myself (how lazy I am while at home;-)

Moral (if any): Learn new technologies while you're waiting; Or, better yet, volunteer, work for less. Like Cyril Alex said, it is a crime to fake experience! Update yourself constantly in how positively you're spending your time and how presentable it is to a recruiter!

Thamilthendral said...

fake போடுவது 'அனுபவ' வேண்டுதலுக்குத்தானே தவிற வேறெதுக்கும் இல்லை என்பதை உணர முடிகிறது. ஆனாலும் அது அவரவர் இஷ்டம். சாதாரண சங்கதி! இதற்கு யாரும் ஆரத்தி காட்டவும் வேண்டாம், வசை பாடவும் வேண்டாம். இன்னும் பத்து வருஷம் தான். ஐ.டி என்கிற சந்தோஷம் கலைந்துவிடும். அதுவரையில் சந்தோசப் படுகிறவர்கள் பட்டிக்கொள்ளட்டுமே..
நான் எம்.சி.ஏ 1993 இல் (அரியர் இல்லாமல் 69%) முடித்துவிட்டு 1994 - இல் சமூக நிர்பந்தததினால் இன்னும் அரசுத்துறையில் "நல்ல-குப்பை" கொட்டிக்கொண்டிருப்பவன். எனது அனுபவத்திற்கு(காலத்திற்கு அல்ல), பேக் தேவையிலை தான். ஆனாலும் என்னிடமும் ரெஸ்யூம் இருக்கிறது. அதிலும் சில பேக்குகளும் இருக்கின்றன. அது தான் இயற்கை.

Hari Haran said...

ரொம்ப நல்லவங்கல‌ இருக்காங்க சாமி இங்க எல்லோரும்..! திரு.வெட்டி அவர்கள் இங்கு யாரையும் fake போட தூண்டவில்லை... அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது என்னென்ன செய்யலாம் என தான் சொல்லி இருக்கிறார். அது போல் இதையும் மற்ற குற்றங்களையும் like pick pocket etc etc கம்பேர் பண்ணி வாதிடாதிர்கள். those things are entirly different from this one... இங்கு யாரு குற்றங்கள் செய்ய ஆசை படவில்லை... எல்லோரும் சொல்வதைப்போல just keep on updating the latest technology and looking for job is never usefull for life ... சும்மா பேச வேண்டுமானால் அழகாக இருக்கு... பணம் வேண்டும் சார் வாழ... ஒருவன் இரண்டு வருடமாக வேலை தேடியும் கிடைக்கவில்லை ஆனால் அவன் .net or j2ee or anything ...ஏதேனும் ஒன்றில் சிறந்த வல்லுனர் ஆக திகழ்ந்தும் என்ன பயன்???? சும்மா படிச்சா மட்டும் போதது அதனை அமல்படுத்த ஒரு வாய்ப்பு வேண்டும்... எங்கே இங்கு இருக்கும் மக்கள் இத்தகைய ஒருவனுக்கு எங்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லுங்கள்... சத்தியமாக MNC கம்பனிகள் அவனை சீண்டவும் கூட மாட்டார்கள்...சரி சின்ன கம்பனிகளுக்கு வருவோம்... சின்ன கம்பனிகள் எல்லோரும் off campus or campus போவதில்லை அவை தங்களின் ஊழியகளின் மூலம் referal interview conduct பண்ணி எடுத்துக்கொள்கின்றனர் அதிலும் சில criteria இருக்கிறது...அங்கும் இந்த PL, ML, TL...சிபாரிசு இருந்தால் போதும் அறிவு அறவே தேவைல்லை... அட யாரையுமே தெரியாதவன் என்ன தான் செய்ய முடியும் சொல்லுங்க??? சும்மா சின்ன கம்பனிகளில் வேலை இருக்கிறது அங்கு criteria... எதுவும் இல்லை என சொல்லாதிர்கள்... இறங்கி வந்து பாரும் அங்கு எத்தனை இருக்கிறது என் தெரியும்...அப்படி criteria எதுவுமே இல்லாமல் எடுக்கும் கம்பனிகளில் வேலை செய்பவர் இருப்பார் ஆனால் சிறிது காலத்தில் கம்பனி இருக்காது... HR ருக்கோ இல்லை இடைத்தரகர்களுக்கோ (consultancy) பணத்தை கொடுத்து வேலை வாங்காமல் தனது சொந்த புத்தியைப் பயன்படுத்தி fake போட்டு வேலை வங்குது ஒன்றும் மிகப்பெரிய குற்றமில்லை அதிலும் அவனது உழைப்பு இருக்கதான் செய்கிறது... இங்கு நல்லவர்களாக இருப்பவர்களிடம் ஒன்று கேட்கிறேன் உங்களது கம்பனி எல்ல சட்டதிட்டங்களையும் மதித்து தான் செயல் படுகிறதா??? from all the things from top management to the lower level...the details that you provide to your clients...etc etc.. மற்றும் உங்களது கம்பனியில் இருப்பவர் எல்லோரும் நேரமையான ஊழியர்களா? இதில் ஏதோனும் ஒன்றில் குறையினுப்பினும் நீங்கள் உடனடியாக உங்களது வேலைய ராஜினாமா செய்யிங்கள். செய்வீர்களா???(நீங்கள் தான் நியாயமானவர் ஆயிற்றே... ஒழுக்கமில்லாத கம்பனி, நேர்மை இல்லாத சக அதிகாரிகள் இருக்குமிடத்தில் நீங்கள் வேலை செய்தால் உங்களுக்கு ethic இல்லாமல் போய்விடுமல்லவா :) :) :) :) )

கூகுள் தளத்தில் code டையும், logic கையும் திருடி தங்களது project ல் திணித்து கொள்ளும் எவ‌ருக்கும் இதை த‌வ‌று என கூற‌ உரிமை இல்லை...

கருப்பன்/Karuppan said...

Fake என்பது தமிழில் "போலி" என்பதல்லவா... நீங்கள், என்னால் போலிகளை உண்மையைப் போல உருவாக்க முடியும் என்கிறீர்கள் இருப்பினும் போலி உண்மையாகாதல்லவா? உயரப்பறப்பதால் ஊர் குருவி எவ்வாறு ஐயா பருந்தாகும்?

போலிகளால் வரும் பிரச்சனைகளுள் சில
1. நேர்காணலில் நேரம் வீணாவது
2. உண்மையில் திறமையும் தகுதியும் உள்ள ஒருவருக்கான வாய்பு பறிக்கப்படுகிறது
3. வேலையின் தரம் குறைவது மற்றும் வேலைக்கான நாட்கள் அதிகரிப்பது

அனைத்து Faker-களும் முட்டாளில்லை என்று நீங்கள் கூறலாம், இது வரை நான் இன்டர்வியூவ் செய்த (99%) Fakers இவ்வாறு தான் இருக்கின்றனர்.

செந்தழல் ரவி said...

பழைய பதிவுக்கு பெரிய பின்னூட்டம் போட்டாலும், இந்த பதிவுல இருக்க ஜல்லிகளும் புனித பிம்பங்களும் என்னை எழுதவிடாம செய்யுது...

எனக்கென்னவோ பாஸ்டன் பாலா சொல்றது சரியா தோனுது...FAKE அப்படீன்னே சொல்லாதீங்க...

"தகவல் தொழில்நுட்ப துறையில் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவர்கள் வேலை பெறுவது எப்படி" (p)

(p) அப்படீன்னா புனித பிம்பங்களே, உள்ளே வராதீங்க... :)))))

தப்பில்ல...
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா...
எதுவும் தப்பில்ல...

சிலபேர் இந்த கட்டுரையை எதிர்த்தாலும், பலபேர் இந்த கட்டுரையை எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க...எழுதுங்க...

சீனு said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் பொல இருக்கு...

2001 பாஸ் அவுட் எல்லோரும் கட்டாயம் fake போட்டுத்தான் இருப்பார்கள். காரணம் 9/11 பிறகு யாருக்கும் வேலை இல்லை. யாரும் கொடுக்கவில்லை. அப்போ சும்மா தானே இருக்க முடியும். பின் 2004 ப்ளூமிற்கு பின் 2001-ல் பாஸ் ஆனவன்ன் கதி?

அதனால் 2001 பாஸ் அவுட் எல்லோரும் கட்டாயம் fake போட்டுத்தான் இருப்பார்கள். சில நேரங்களில் இந்த விஷயத்தில் சொதப்பி இருந்தாலும் கம்பெனி HR-க்கு தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். அதாவது, அவர்களுக்கும் தெரியும் fake இருக்கும் என்று. அவர்களே திருத்தியும் இருக்கிறார்கள் (personally). என் தோழி ஒருத்திக்கு பெங்களூரு Mindtree-ல் கடைசி 6 வருடங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தாள் என்று அவள் பக்கத்து வீட்டிலிருந்தெல்லாம் விசாரித்து சென்றார்கள். அதுவும் அவ நடுவுல 6 மாசம் எடுத்த மெடிக்கல் லீவை அட்ஜஸ்ட் பன்னினாள்.

ஆனால், பிரச்சினை என்னவென்றால் 2004 பாஸ் அவுட்களும் இதையே ஃபாலோ பன்னுவது தான். இப்போவெல்லாம் ரொம்ப ஸ்டிரிக்ட். அதுக்கும் காரணம் CMM சர்டிபிகேட்கள் தான். போலீஸ் ஹேன்ட் ஓவர் எல்லாம் உண்டு. ஆனால், தேர்வு செய்யப்படும் முன்னே கண்டுபிடித்துவிட்டால் எந்த காரணமும் சொல்லாமல் "வீ வில் கெட் பேக் டு யூ" என்று சொல்லிவிடுவார்கள். வேலைக்கு சேர்ந்ததும் தெரிந்தால் பெர்பார்மன்ஸ் மற்றும் தேவை பொருத்து நடவடிக்கை இருக்கும். ஆனால், போலீஸ் என்றெல்லாம் போக மாட்டார்கள். காரணம், தவறு இரு பக்கமும் இருக்கிறது என்பது அவர்களுக்கும் தெரியும்.

//ஆந்திரா பார்ட்டிங்க லட்ச லட்சமா கொடுத்து பின்கதவு வழியா வந்துருதுங்க. நம்ம பசங்க பேக்/கேக் போட்டு உள்ள வரதுல என்ன தப்பு.. எவ்ளோ பேர் வந்தாலும் வேலை தான் இருக்கே...//

ஆமா. இதுல எக்ஸ்பர்ட்கள் ஆந்திரா பசங்கள். மெட்ராஸ் யுனிவர்ஸிட்டி டிகிரி சர்டிபிகேட்டையே (புதுசா) தயாரிப்பாங்க. பெங்களூருவில் இருந்த பொழுது சின்ன சின்ன தப்புகளுக்கே (Salary Slip-ல் 2000 சேர்த்து போடுவதற்கே) படபடக்கும். ஆனால் எங்கள் அறை எதிரில் இருந்த படங்கள் 6 பேர் தாங்கள் TCS, Infosys, Wipro என்று சகட்டு மேனிக்கு fake போட்டு சென்றார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு முறை அவர்கள் 6 பேரில் 5 பேருக்கு ஒரு MNS-ல் வேலை கிடைத்தது, அதே TCS, Infosys, Wipro fake போட்டு வேலை கிடைத்துவிட்டது. ஆனால், அந்த ஒருவர் MNC-ன் HR-க்கு மெயில் போட்டுட்டான். போட்டவன் (Yahoo-வில்) லாக் அவுட் செய்யாமல் வந்துவிட, பின் அதே பிரவுசிங் சென்டரில் அதே மெஷினுக்கு போன அவன் நண்பற்களில் ஒருவன் யாஹூ திறக்க, இந்த மெயிலை படித்து, அன்று இரவு செம்ம மாத்து விழுந்தது. ஆனால், ஆச்சரியமாக அந்த MNC HR பரவாயில்லை என்று சொல்லி, performance காட்டினால் போதும் என்று சொல்லிவிட்டாள்.

ஒரு ஜோக் இருக்குமே. மைக்ரோசப்ட் இன்டர்வியூவிற்கு வந்தவர்களில் கொஞ்சம் கொஞ்சமாக பில்டர் செய்ய, இன்ன இன்ன டெக்னாலஜியில் மட்டுமே தேவை என்று சொல்ல சொல்ல, அவர்கள் சொன்ன டெக்னாலஜி தெரியாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற கடைசியில் 2 பேர் மட்டுமே இருப்பார்கள். அதில் ஒருவன் கேட்பான் "பாக உன்னாரா?" மற்றவன் அதற்கு தெலுங்கில் பதில் சொல்வான்.

Fake-ல் மற்றொரு வகை, ஒரிஜினல் சர்டிபிகேட் கிடைப்பது. முதல் மாத சம்பளத்தில் பாதி / முழுவதும் கொடுத்தால் சின்ன சின்ன கம்பெனிகளே ஒரிஜினல் சர்டிபிகேட் கொடுக்கும். கம்பெனியில் இருந்து கால் வந்தால் கூட கிளியரா சொல்வார்கள். இது 'fake, ஆனா இல்ல' கதை. இப்போ சில MNC-க்களில் இப்படிப்பட்ட கம்பெனிகளையும் screen பன்னி வெச்சிருக்காங்க.

ஆனா, fake ரெஸ்யூம் போடுறதும் ஒரு கலைங்க. இப்போ இருக்கிற நிலையில, சாப்ட்வேர் துறையை பொருத்தவரைக்கும் fake-கோ இல்லையோ, அவுட்புட்தான் தேவை. ஒழுங்கா ரெஸ்யூம் போட்டு அவுட்புட் காட்டாமலும் இருக்காங்க. அரை மணிநேர இன்டர்வியூவில அவனை பத்தி எப்படிங்க தெரியும். நான் இப்போ இருக்கிற கம்பெனியில் சேரும் பொழுது இன்டர்வியூவில சூப்பரா செஞ்சேன். ஆனால், முதல் ஃப்ராஜெக்ட்ல என் பெர்பார்மன்ஸ் சரியில்லைன்னு தூக்கிட்டாங்க. ஆனா அந்த ப்ராஜெக்ட்லயும் சரி இப்போ இருக்கும் ப்ராஜெக்ட்லயும் சரி நான் அதிகமாகவே டெக்னிகலா உதவிறேன். இங்கே தப்பு என் மேலேயா / என்னை சரியா வேலை வாங்க தெரியாத மேனேஜர் மேலேயா? இந்த ப்ராஜெக்ட்ல நல்ல பேர். இருந்தாலும் முந்தைய ப்ராஜெக்ட்ல தான் நான் அர்பனிப்போட வேலை செஞ்சேன். என்னத்த சொல்ல?

//Fourth one had already worked in BPO and managed to get an IT job. But he is going to fake a project to get a better offer and pay package in his next job.//

இது தான் தப்புன்னு சொல்றேன்.

//
1. இருக்கிற அனுபவத்தை மேம்படுத்திச் சொல்வது.
2. இல்லாத அனுபவத்தை இருக்குது என்பது.

இந்த இரண்டில் முதல் வகை எல்லாருமே செய்யக் கூடியது, எல்லா துறைகளிலும். எழுத்தில் இல்லையென்றாலும் பேச்சிலாவது ஒரு மேம்படுத்தல் இருக்கும்.
//

அரசியல்வாதி மாதிரி. இதில் உண்மையை கண்டுபிடிக்கிறது கஷ்டம்.

Anonymous said...

//சிலபேர் இந்த கட்டுரையை எதிர்த்தாலும், பலபேர் இந்த கட்டுரையை எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க...எழுதுங்க...
//
இத மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உங்க உடம்ப ரணமாக்க பாக்கராங்க

Anonymous said...

Balaji,

I attended many freshers walk-in. When they publish the result you can see only 3 to 4 B.E. Computer Science students were selected out of 100. But they are selecting Civil, Mech, Electrical and ECE. This is also partiality. We are studing Computer but companies are not prefering us. What do you say?

மாஹிர் said...

வாய்ப்புகளைத் தவறவிட்டவர்களுக்கு (நானும் தான்) நீங்கள் எடுத்துக்கொண்ட முறை சரியாகத் தெரியவில்லை. பெரிய நிறுவனங்கள் உங்கள் மீது வழக்குத் தொடுக்கக்கூட ஏதுவாகும். வேறு ஒரு பதிவிட்டு "வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும்" போன்ற தலைப்புகளில் நண்பர்களுடன் ஆலோசித்து போடவும். (ஆனால் சிவா போன்றவர்களிடம் ஆலோசிக்கவேண்டாம். கெட்ட சகவாசம் கூடாது :) ஹாஹா)

Srikanth said...

These days, its a known thing. People have taken for granted that 2+ years of experience is almost always a fake one - Interviewers then test the skills alone and leave the experience. Moreover, most of the 2+ years candidates are like freshers - that is one thing, and the other thing is they would most certainly try to switch their job soon.

சந்தோஷ் said...

சாரி பஸ்ஸை புடிக்க கொஞ்சம் லேட் ஆயிடிச்சி..இங்க நிறைய பேர் எதிக்ஸ், அவரகொட்டைஸ் அப்படி இப்படின்னு பேசிட்டு இருக்காங்க. இதுல எத்துனை பேர் கேம்பஸில் செலக்ட் ஆனவங்க, அவங்க எல்லாம் அப்படியே அபீட் ஆகிகோங்க.. 2-3 வருசம் வேலை வெட்டி இல்லாம, வீட்டுல தண்டசோறு பட்டம் வாங்கி செருப்படி வாங்கத குறையா வாழ்பவனின் வாழ்க்கை உங்களுக்கு தெரியாது. அதனால எதிக்ஸ் எல்லாம் நல்லா பேசுவீங்க. அப்படி எதிக்ஸ் பேசுறவங்களுக்கு ஒரு கேள்வி, எதிக்ஸ் பேசுனவங்களில் இன்போசிஸில் வேலை பாக்குறவங்க நிறைய இருக்காங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி பனீஷ் மூர்த்தி ஒரு பொண்ணு கிட்ட ஏடா கூடம் பண்ணி மாட்டிகிட்டு கம்பெனி ஒரு லம்பான அமொண்ட் குடுத்து செட்டில் பண்ணிச்சே அப்ப எங்க போனாங்க இவங்க? எதிக்ஸ் எதாவது பேசினாங்களா? சோ தனக்கு வந்தா தான் தெரியும் கஷ்டம். ஒழுங்கா வேலை செய்து நிரூபணம் செய்யும் திறமை இருந்தால் Fake போடுவது தப்பே இல்ல.

Anonymous said...

சிங்கம் sala salappukku anchiducha?

where is the article ?