தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, October 29, 2007

சாப்ட்வேர் இஞ்ஜினியர்களும் சமூக அவலங்களும்

கற்றது தமிழ் படம் பாக்கலைனாலும் அதை பற்றி படித்த விமர்சனங்கள் மென்பொருள் துறையினரை சாடுவதாக தெரிகிறது. இன்னைக்கு விலைவாசி ஏறனதுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான் காரணம்னு நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேன். ஒரு வகைல அது உண்மையும் கூட. போன தடவை நான் இந்தியா போயிருந்தப்ப என் அண்ணன் (பெரியம்மா பையன்) இதை தான் சொன்னான் (அவன் சாப்ட்வேர் இல்லை).

மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.

பெங்களூர்ல வீட்டு வாடகை ஏறிடுச்சினு எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியரை திட்றாங்க. ஆனா தலைக்கு ரெண்டாயிரம். நாலு பேர் தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னு சொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்க கோபம் போகலை? இன்ஃபோஸிஸ் இருபத்தைந்தாம் ஆண்டு விழாக்கு போனஸ்னு தராங்கனு சொன்னவுடனே பெங்களூர்ல வீட்டு வாடகையை ஏத்தனவங்க நிறைய பேர். ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்.

இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?

சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா? ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். அவனோட வாழ்க்கை முறை அவனை அதுக்கு மேல சேமிக்க விடறதில்லை. அதுல அவன் தப்பு எதுவுமில்லைனு நான் சொல்லலை. ஆனா அவன் தப்பு மட்டுமேனு எல்லாரும் சொல்றது தான் கஷ்டமா இருக்கு.

இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. நம்ம அப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வாங்கறதைவிட அதிக சம்பளம் வாங்கறோம்னு ஒரு பெருமிதமும் (தெரியாமலே கொஞ்சம் கர்வமும் தானா வந்துடுது) வருது. ஆனா அவனுக்கு அந்த காசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான் உண்மை. அதுவுமில்லாம அந்த வயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான்.

ஆனா அந்த வயசுக்கே உரிய இரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசை அள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர். அதே மாதிரி நிறைய பசங்களுக்கு படிக்க உதவி செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. நண்பர்களிடமிருந்து இந்த மாதிரி மெயில் வந்தா, அது உண்மைனு தெரிஞ்சா குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது யோசிக்காம செய்யறவங்க நிறைய பேர். பத்து பேர் தங்கியிருக்குற இடத்துல ரெண்டு மூணு பேர் வேலைக்கு போனா அடுத்து எல்லாருக்கும் வேலை கிடைக்கிற வரைக்கும் அந்த வேலைக்கு போற மூணு பேர் மொத்த வாடகையையும் சாப்பாட்டு செலவையும் ஏத்துக்குவாங்க. வேலைக்கு சேர்ந்தவுடனே அந்த பசங்க எந்த ஊருக்கு போவாங்கனு யாருக்கும் தெரியாது. இங்கயும் அவன் காசை அதிகமா நேசிக்கறதில்லை.

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது. இன்னைக்கு நம்ம பார்க்கிற ஏற்றத்தாழ்வுக்கு இது தான் முக்கிய காரணம். பணக்காரன் ரொம்ப பெரிய பணக்காரன் ஆகறதுக்கு இது தான் காரணம். இப்படி சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட வர பணம் மொத்தமாக வேற ஒரு கும்பலால் பெறப்படுகிறது.

இதை கண்டிப்பா சாப்ட்வேர் மக்களால சரி செய்ய முடியாது. அரசாங்கம் ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்ம அரசியல்வாதிகள்ல நிறைய பேருக்கு இதை புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்படனும். சரி அதி புத்திசாலிங்களான மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் இதையெல்லாம் பத்தி ஏதாவது செய்யறாங்களானு தெரியல.

கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.

46 comments:

லக்ஷ்மி said...

//கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க.// ரொம்ப அருமையான கருத்து பாலாஜி. நானும் இதையே நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு.

ரொம்ப நடுநிலையான அலசல்.

ILA(a)இளா said...

இது Demand Vs Production நுட்பம்தான் வெட்டி. இது ஒரு பரிமாணம் தான். இது பெரிய பகுதி. கடைசியா நோட்டு அடிக்கிறதுல வந்து நிக்கும். அதாவது ரிசர்வ் வங்கியில.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அட...என்னங்க தலைப்பு இது?
சமூக அவலங்களா?
பாவம், அவங்க என்ன அப்படிச் சமூக அவலம் பண்ணிட்டாங்க?
ஏற்கனவே நாட்டுல கட்சிங்க பண்ணாத அவலத்தை விடவா?

//ஆனா அந்த வயசுக்கே உரிய இரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசை அள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர்//

மிகவும் உண்மை பாலாஜி!
ரூமில் வேலையில்லாமல் தங்கிக் கொண்டிருக்கும் பசங்க கூட, உண்மையான உதவி-ன்னா, தயங்காம முடிஞ்சதைத் தருவாங்க!

என்னைக் கேட்டாக்கா, ஜாலியும் லூட்டியும் எப்படி அதிகமா இருக்கோ, அதே அளவு தான் இரக்கமும் இருக்கு! அப்பா அம்மாவை எதிர்த்து மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும் அளவுக்கு! :-)

////கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட
ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம்//

நச்!

////ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்//

ஹலோ
அதை நாங்க சொல்லுறோம்! சரி, வாங்க ட்ரீட்டுக்குப் போகலாம்!

Anonymous said...

வெட்டி,

நீங்க சொன்னதுபோக ஆட்டோக்காரங்க அடிக்கிற கொள்ளை இருக்கே. அப்பப்பா... btm லேஅவுட்ல இருந்து சில்க் போர்ட் போக மினிமம் 12 ரூபா கூட வராது. ஆனா 25, 30 ரூபா இல்லாம வரமாட்டாங்க.

pvr ஃபோரம்ல மக்கள் கண்ணுல கனவுகளோட, எதிர்பார்ப்புகளோட திரிவதை பார்க்கும்போது பயமாக உள்ளது.

இன்னிக்கு சம்பாதிக்கறத இன்னிக்கே செலவளிக்கணும்கற வெறியோட இருப்பது போலுள்ளது.

ஆனா பாத்தீங்கன்னா இன்னொரு பக்கம் ஆபீஸ்ல icicidirect-ல மூழ்கி இருக்கறவங்களும் இருக்காங்க.

அபி அப்பா said...

வெட்டி தம்பி! நான் 180 டிகிரி எதிக்கிறேன் உங்க கருத்தை! மனசாட்சியை அடமானம் வச்சு பேசக்கூடாது!! நான் வேணா ஒரு பதிவா போடறேனே, ஏன்னா நானும் சீக்கிரம் 100 அடிக்கணும் இல்லியா?:-))

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

வெட்டி தம்பி! நான் 180 டிகிரி எதிக்கிறேன் உங்க கருத்தை! மனசாட்சியை அடமானம் வச்சு பேசக்கூடாது!! நான் வேணா ஒரு பதிவா போடறேனே, ஏன்னா நானும் சீக்கிரம் 100 அடிக்கணும் இல்லியா?:-))//

தாராளமா போடுங்க...
நான் எங்கயும் மனசாட்சியை அடமானம் வெச்சி பேசலைங்க. அவனவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும்...

செல்வன் said...

பாலாஜி

இத்தனை விரிவாக நீங்கள் பொருளாதார பாடம் எடுத்திருக்கவே வேண்டியதில்லை.

கற்றது தமிழ் இயக்குனர் என்ன கஞ்சி குடித்து,சைக்கிள் ஓட்டி,குடிசையிலா வாழ்கிறார்?

எந்த சாஃப்ட்வேர் எஞ்சினியர்களையும் விட அவர் வசதியாகத்தான் இருப்பார்.

சினிமாகாரனால் கோடம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் ஏறிவிட்டது என நாம் புகார் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா?

பணக்காரனை திட்டி வசனம்,காட்சி அமைப்பு வைத்தால் தான் படம் ஓடும்.

அப்படி படம் எடுப்பவரும்,அதில் நடிப்பவரும்,இயக்குபவரும் எல்லோரும் பணக்காரர்கள் தான்.

அது அவர்களுக்கும் தெரியும்.படம் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

இந்த மாதிரி அபத்தமாக எதையாவது எடுத்தால் தான் படம் ஓடும்.அதனால் தான் அவர்கள் எடுக்கிறார்கள்.மக்கள் பார்க்கிறார்கள்.


அதனால் இதைப்பற்றி எல்லாம் கவலைபடவேண்டியதில்லை.

நன்கு உழைத்து,நன்கு சம்பாதித்து, மகிழ்ச்சியோடு வாழ்வது ஒவ்வொருவரின் பிறப்புரிமை.அதை எல்லாம் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை.

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா, இன்னிக்கு நடுத்தர மக்களில் வேணா அதிக பணப் புழக்கம் இருக்கிறது சாப்ட்வேர் மக்களா இருக்கலாம். ஆனா பணக்காரங்க யாருன்னு பாருங்க. ஒரு வார்ட் மெம்பர் கூட அதிகம் வெச்சு இருப்பான். ஆனா அங்க கேள்வி கேட்டா ஆட்டோ வரும். இங்க இம்மாம் பெரிய பதிவுதான் வரும்.

இங்க சம்பாதிக்கிற பைசா ஒண்ணொண்ணுத்துக்கும் வரி கட்டணும். ஆனா எம்புட்டு பேர் அதெல்லாம் கட்டாம இருக்கான்....

டயம் வேஸ்ட் பண்ணாதீங்க தம்பி.

CVR said...

sambaadhikkara kaasaiyum kedaikkara time-aiyum podhu nalankaaga selavazhikkara pala pera paathirukkean indha software field la!
mattha field layum thaan irukkaanga,aana softwarenaale poruppillama oora suthara case-nu oru impression irukku,adhukkaga solrean

உண்மை said...

அப்படி போடு அருவாள !

// செல்வன் said...

சினிமாகாரனால் கோடம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் ஏறிவிட்டது என நாம் புகார் சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வாரா?
//
இது மிக சரி.நான் முப்பது வருடம் அந்த இடத்தில் வாழ்ந்திருக்கேன் என்னால் புள்ளி விவரத்துடன் கூற முடியும்.

வெட்டிப்பயல் said...

//ரொம்ப அருமையான கருத்து பாலாஜி. நானும் இதையே நண்பர்கள் கிட்ட சொல்றதுண்டு.

ரொம்ப நடுநிலையான அலசல்.//

மிக்க நன்றி லக்ஷ்மி அக்கா...

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

இது Demand Vs Production நுட்பம்தான் வெட்டி. இது ஒரு பரிமாணம் தான். இது பெரிய பகுதி. கடைசியா நோட்டு அடிக்கிறதுல வந்து நிக்கும். அதாவது ரிசர்வ் வங்கியில.//

அந்த அளவுக்கு யோசிக்க எல்லாம் இங்க ஆள் இல்லை இளா. திட்றதுக்கு ஆள் வேணும். அவ்வளவு தான் :-)

agraharathil kazuthai said...

//இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க//

சேச்சே.. பஸ்ஸுகாரனை ஏன் குத்தம் சொல்றது? அவன் அப்படி ஒரு ஆப்ஷன் குடுக்கலைன்னா, நாம தீவாளிக்கு ஊருக்கு வரதுக்குள்ள நொந்து நூலாயிடுவோம்.. சாதார நேரத்துல நூறுன்னா, தீவாளி சமயத்துல ஒரு ஐநூறுருபாயை வெச்சு அழுத்தினா, மொத ரெண்டு வரிசைக்குள்ளே சீட்டு கெடைச்சுரும். இது டிப் ஆஃப்தி ட்ரேட். :-) நூறு ரூபாய்க்குப் பயந்து ஊருக்கு மொக்க பஸ்ஸுல போறவன் இருக்கிற வரைக்கும் நமக்கு கவலை இல்லை. யூ டோண்ட் ஒர்ரி.


//நாலு பேர் தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னு சொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்க கோபம் போகலை//

என்ன கொடுமை சரவணன் இது? ரெண்டாயிரம் ரூபாக்கு என்ன வேல்யூ இருக்கு? அது என்னோட ஒரு நாள் சம்பளம் அது. இந்தப் பிக்காரிப் பசங்களை எல்லாம் மொதல்ல அடிச்சுத் துரத்தணும்.


//ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.//

ரெண்டாயிரம் ரூபாய் டின்னரா.. அடப்பாவமே.. இதே கண்டி மெட்ராஸில இருந்தா 1700 ரூபாய்ல முடிச்சுடலாம்.. பெங்களூரு இவ்ளோ மோசமா?

//சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா?//

அதானே எவண்டாவன் குத்தம் சொல்றது? வாங்கற நாப்பதாயிரத்துல, மேல சொன்ன டின்னருக்கே மாசத்துல நாலுவாட்டின்னாலும், எட்டாயிரம் போச்சு. இது தவிர வாடக, பெட்ரோல், செல்போன் பில், சட்ட துணிமணின்னு எவ்ளோ செலவு.. எங்கூர் பள்ளிகூட வாத்தியார் சேமிக்கிற லெவலுக்குக் கூட எங்களால முடியலை... வந்துட்டானுங்க குத்தம் சொல்ல

//சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது//

நெத்தியடி... எல்லாரும்நம்ம க்கிட்டேந்து திருடுகிட்டு போயிடறாங்க. நிலமே வாங்கலை.. செல்போன்ல பேசறதே இல்லை, ஓட்டல்ல போய் சாப்பிடறதே இல்லை..ஆனா சாஃப்வேர் கம்பேனில வேலை செய்யறதைத் தெரிஞ்சுகிட்டு, முதல் தேதி வந்து எல்லாக் காசையும் அடிச்சுடறாங்க

//கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம்//

அதானே? திரீ பெட்ரூம் ஃப்ளாட் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?, கருமாந்திரம் புடிச்ச கிரானைட் சிங்கும், மார்பிள் தரையும், காலை வெக்கவே அருவருப்பா இருக்கு.. அதுலயும், அந்த ஓண்டா சிவிக் இருக்கே.. மகா கேவலம். உள்ள கால வெச்சாலே வாந்தி வருது..மாசத்துக்கு ஒருதரம் பழங்காநத்தம் பெரிய வீட்டுல அம்மா கையால ரசம் சாதம் பீன்ஸ் பொரியல் சாப்பிடறதுக்கு ஈடாவுமா இந்த மெக்டொனால்ட் ஃப்ரைட் சிக்கன்?

வெட்டிப்பயல் said...

கொழந்தை,
//
சேச்சே.. பஸ்ஸுகாரனை ஏன் குத்தம் சொல்றது? அவன் அப்படி ஒரு ஆப்ஷன் குடுக்கலைன்னா, நாம தீவாளிக்கு ஊருக்கு வரதுக்குள்ள நொந்து நூலாயிடுவோம்.. சாதார நேரத்துல நூறுன்னா, தீவாளி சமயத்துல ஒரு ஐநூறுருபாயை வெச்சு அழுத்தினா, மொத ரெண்டு வரிசைக்குள்ளே சீட்டு கெடைச்சுரும். இது டிப் ஆஃப்தி ட்ரேட். :-) நூறு ரூபாய்க்குப் பயந்து ஊருக்கு மொக்க பஸ்ஸுல போறவன் இருக்கிற வரைக்கும் நமக்கு கவலை இல்லை. யூ டோண்ட் ஒர்ரி.//

சும்மா சங்கர் படம் கணக்கா பேசக்கூடாது. எத்தனை இடத்துல நீங்க போய் இந்த மாதிரி நான் ஐநூறு கொடுக்கறேன் எனக்கு சீட் கொடுனு கேக்கற ஆளுங்களை பார்த்திருக்கீங்க? ஊருக்கு போறதே பாதி பேருக்கு கடைசி நேரம் வரைக்கும் கன்ஃபார்ம் ஆகறதில்லை. அது சென்னைல இருந்து கள்ளக்குறிச்சினாலும் அது தான் அமெரிக்காவுல இருந்து சென்னைனாலும் அது தான். கடைசி வரைக்கும் எப்படியாவது ஊருக்கு போவோம்னு தான் இருக்கும்...

அப்படி போகும் போது நூறு ரூபாய் அதிகமா கேட்டா அதை ஆராய்ச்சி பண்ண தோன்றதில்லை.

ஆனா நூறு ரூபாய் அதிகம் கேக்கறவன் மேல கொஞ்சம் கூட தப்பில்லைனு பேசறீங்க பாருங்க. அது தான் கஷ்டமா இருக்கு.

இதே மாதிரி காசுக்காக கடமையை மீறும் அரசு அதிகாரிகளுக்காக ஏன் யாரும் வக்காலத்து வாங்க மாட்றீங்க?

//
ரெண்டாயிரம் ரூபாய் டின்னரா.. அடப்பாவமே.. இதே கண்டி மெட்ராஸில இருந்தா 1700 ரூபாய்ல முடிச்சுடலாம்.. பெங்களூரு இவ்ளோ மோசமா?//
இங்கயும் வீலை ஏத்தறவன் மேல கோபம் வரலை. ஏன் நீ இவ்வளவு செலவு செய்யறனு தான் கோபம். அவனுக்கு உங்க காலத்து கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்கறவங்க மாதிரி பணத்தை சேர்த்து வெச்சி கந்து வட்டிக்கு விட தெரியல. என்ன செய்ய?

//அதானே எவண்டாவன் குத்தம் சொல்றது? வாங்கற நாப்பதாயிரத்துல, மேல சொன்ன டின்னருக்கே மாசத்துல நாலுவாட்டின்னாலும், எட்டாயிரம் போச்சு. இது தவிர வாடக, பெட்ரோல், செல்போன் பில், சட்ட துணிமணின்னு எவ்ளோ செலவு.. எங்கூர் பள்ளிகூட வாத்தியார் சேமிக்கிற லெவலுக்குக் கூட எங்களால முடியலை... வந்துட்டானுங்க குத்தம் சொல்ல//
டேக்ஸ் போக டேக் ஹோம் நாற்பதாயிரம் வாங்கறவங்க எத்தனை பேர்னு உங்களால சொல்ல முடியுமா?

அதுவுமில்லாம அவன் வாழ்க்கை முறை சரியில்லைனும் தான் என் பதிவுல சொல்லியிருக்கேன்.

//
அதானே? திரீ பெட்ரூம் ஃப்ளாட் வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?, கருமாந்திரம் புடிச்ச கிரானைட் சிங்கும், மார்பிள் தரையும், காலை வெக்கவே அருவருப்பா இருக்கு.. அதுலயும், அந்த ஓண்டா சிவிக் இருக்கே.. மகா கேவலம். உள்ள கால வெச்சாலே வாந்தி வருது..மாசத்துக்கு ஒருதரம் பழங்காநத்தம் பெரிய வீட்டுல அம்மா கையால ரசம் சாதம் பீன்ஸ் பொரியல் சாப்பிடறதுக்கு ஈடாவுமா இந்த மெக்டொனால்ட் ஃப்ரைட் சிக்கன்?//
மெக்டொனால்ட் ப்ரைட் சிக்கனைவிட ஆயிரம் மடங்கு அம்மா வைக்கும் ரசத்தின் சுவை அதிகம்... இது மனசுல இருந்து தான் சொல்றேன்.

இவ்வளவு திட்ற உங்களால இந்த பிரச்சனைக்கு நல்ல முடிவு சொல்ல முடியுமா?

வேணும்னா இந்த பிரச்சனைக்கு முடிவை முன்னாடி சொன்ன மாதிரி உங்க பதிவுல போடுங்க...

agraharathil kazuthai said...

//இங்கயும் வீலை ஏத்தறவன் மேல கோபம் வரலை. ஏன் நீ இவ்வளவு செலவு செய்யறனு தான் கோபம்..//

உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால், விலை ஏத்தறவன் மேலே துளிக் கூட தப்பு இல்லேங்கறதுதான் அப்பட்டமான உண்மை. நம்மளது மார்க்கெட் எகானமி. அதாவது சந்தைப் பொருளாதாரம். ஒரு பொருள் அல்லது சேவையின் விலையானது, அந்தப் பொருள் அல்லது சேவைக்கான உண்மையான விலை அல்ல. வாங்கு திறன் ( purchasing power ) கொண்டவர்களால் என்ன விலைக்கு வாங்க முடியுமோ அதுதான் விலையாக வைக்கப்படும்.

ஒரு பிசிஓ விலே லோக்கல் கால் செய்ய ஒரு ரூபாய். அதே லோக்கல் காலை லீ மெரிடியன் ஓட்டலில் செய்தால், ஐம்பது ரூபாய். என்ன விலை வைத்தால், அந்த விற்பனை எல்லைக்கு உட்பட்டவர்கள் வாங்குவார்களோ அதுதான் விலை.
உதாரணமாக, எவ்வளவு செலவு செய்து, அந்த வெள்ளறிக்காயை சந்தைக்குக் கொண்டு வந்து, தெரு முக்கிலே மிளகாய் தூவிக் கொடுத்தாலும், ரெண்டு ரூபாய்தான். சப்போஸ் மூணு ரூபாய் சொல்கிறான் என்று வையுங்கள், வாங்குபவர்கள் குறைவார்கள். விற்பனை குறையும். அதே ரெண்டு ரூபாய்க்கு வித்தான்ன, நெறைய பேர் வாங்குவார்கள். விற்பனை அதிகமாகும். விற்பனை ஆகும் அளவைப் பொறுத்து, மூன்று ரூபாய்க்கு விற்பதை விட, ரெண்டு ரூபாய்க்கு விற்றால் லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இப்ப வெள்ளரிக்காயின் விலை என்ன? மூணா இல்லே ரெண்டா? (இதை எல்லாம் டீப்பாக இல்லாமல் , தேவை / தேவையின்மை கருதி மேலோட்டாமாகவே சொல்கிறேன். )வெள்ளறிக்காய் கூவிக் கூவி விற்கிற சமாசாரம். At any given instance, the supply will always be in excess, barring few excpetional situtations. ஆனால், வீடு சமாசாரம் அப்படி இல்லை. சப்ளை கம்மியாத்தான் இருக்கும். அந்தச் சமயத்திலே, விற்கிறவன் கை ஓங்கி, அதிக விலை கொடுக்கிறவனுக்கு வீடு கொடுப்பான். இந்தச் சூழ்நிலையிலே லிக்வில் கேஷ் அதிகம் வெச்சிருக்கவனுக்குத்தான் வீடு கிடைக்கும். சம்பள விகிதங்களில், ஐடீ தான் முன் நிற்கிறது. ஐடியை விட அதிகம் சம்பாதிக்கும் தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும், பிறரும் இந்த ரேசில கலந்து கொள்ளப் போவதில்லை. நேச்சுரலி சாஃப்ட்வேர் காரங்களுக்குத்தான் அடுத்த வாய்ப்பு. இதுலதான், இருக்கிறவனுக்கும் இல்லாதவனுக்கும் பிரச்சனை வரும். " ஒழுங்கா இருந்தோங்க... இந்த சாஃப்ட்வேர் பசங்க வந்து எல்லாத்தையும் கெடுத்தானுங்க" என்று சொல்லத்தான் செய்வார்கள். உடனே, உனக்கேன் போறாமை? வக்கிருந்தா, நீயும் சம்பாதி..என்னை விட அதிக விலை குடுத்து வாங்கிக்கோன்னு அயோக்கியத்தனமா கேக்கமாட்டீங்கன்னு நம்பறேன்.

நாம என்னிக்காவது டாட்டா, பிர்லா போன்ற பணக்காரர்களைப் பற்றி புலம்பியிருக்கிறோமா? அல்லது அமைச்சர்களின் சொகுசுக் கார் பற்றி புலம்பியிருக்கிறோமா? ஏன் என்றால் அந்த மாதிரி ஆட்கள் நம் மக்கள் தொகையிலே ரொம்ப ரொம்ப குறைச்சலான சதவீதம். அவர்களுடைய பணப் புழக்கம், சாதாரண மக்களிடம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது . ஆனால், இது நாள் வரை இல்லாத வகையிலான சம்பள உயர்வு, அதனால் ஏற்படும் பணப் புழக்கம், நமக்கு வெகு பக்கத்தில் நடக்கும் போது, இந்த ஹேவ்ஸ் & ஹேவ் நாட்ஸ் க்கும் இடையில் உரசல் வரத்தான் செய்யும். ஏன்னா இந்தச் சமுதாயம் எல்லோரும் சம வாய்ப்பைத் தர இயலவில்லை. எல்லாரும் அவரவருக்கான வாய்ப்புகளை போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. நெய்வலி பவர் ப்ளாண்டுக்காக இடத்தைக் கொடுத்து விட்டு, அதற்குரிய நட்ட ஈட்டை பெற இன்றைய தேதி வரை முப்பது வருடங்களாகப் போராடி வரும் கிராமத்தினர், எனக்கு ஒரு நியாயம், மெட்ராஸுல இருக்கிறவனுக்கு ஒரு நியாயமான்னு கேக்கத்தான் செய்வான். உடனே ஆஹா,, நம்ம சீட்டுக்கு ஆப்பு வெக்கராண்டா என்று எண்ணையில் இட்ட அப்பம் மாதிரி துள்ளி குதிக்கக் கூடாது.

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஐடி வேலைசெய்யும் உங்களைப் போன்ற இளையர்கள் பொறுப்பில்லை அதே சமயம், ஐடி கம்பெனிகள், அவங்க சம்பள பாலிசி, அதனால் மற்ற துறையில் நிகழும் பாதிப்பு என்று பேசும் போது, குறுக்க பூந்து அய்யோ அம்மான்னு அலறக் கூடாது.

துட்டு வருதா, வர வரைக்கும் கமுக்கமா வேலை பாத்து துட்டு சேர்த்துட்டுப் போய்ட்டே இருக்கணும். ரெண்டாயிரம் ரூபாய் டின்னர் அலுத்துப் போச்சு, டேக் ஹொம் பே குறைஞ்சுகிட்டே வருது, ஒரே financial problem , சமாளிக்க முடியலைன்னு, இதே தேசத்துல , நீங்க வசிக்கிற இடத்துலந்து நாநுறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற விவசாயிகிட்ட சலிச்சுகிட்டே சொல்லுங்க... பொளேர்னு கழுத்து மேல போடுவான், அதாவது தற்கொலை செஞ்சுக்கறதுக்கு முன்னாலே....

ஒர்த்தர் சொன்னார், இந்த யுப்பீ இளைஞர்கள், தாங்கள் வாழும் வாழ்க்கைமுறை வழியாகவே இந்த உலகத்தைப் பார்க்கிறார்கள். நாம சௌக்கியமா இருந்தா நாடே சௌக்கியமா இருக்குன்னு நினைக்கிறார்கள் என்று. .. நான் நம்பிக்கை இழக்கலை.. அதாவது இன்னும் நம்பிக்கை இழக்கலை..

உடனே கேப்பீங்க.. இதுக்கல்லாம் நாங்களா காரணம் கெவருமெண்ட்டை போய்க் கேளுங்கன்னு... அய்யா... நாங்க கேக்கறது கெவருமண்ட்டைத்தான்.. உங்களை அல்ல... நீங்கதான் குறுக்க குறுக்க வந்து எக்குதப்பா ஆக்சிடண்ட் ஆகிடுது.

வெட்டிப்பயல் said...

//துட்டு வருதா, வர வரைக்கும் கமுக்கமா வேலை பாத்து துட்டு சேர்த்துட்டுப் போய்ட்டே இருக்கணும். ரெண்டாயிரம் ரூபாய் டின்னர் அலுத்துப் போச்சு, டேக் ஹொம் பே குறைஞ்சுகிட்டே வருது, ஒரே financial problem , சமாளிக்க முடியலைன்னு, இதே தேசத்துல , நீங்க வசிக்கிற இடத்துலந்து நாநுறு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற விவசாயிகிட்ட சலிச்சுகிட்டே சொல்லுங்க...//

மீதி எல்லாத்துக்கும் அப்பறம் பதில் சொல்றேன். என் பதிவுல நான் சம்பளம் பத்தலனு அழுவுல...

//பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். //

சம்பளத்தை குறைச்சி சமூகத்தை சரி பண்ண பாருங்கனு தான் சொல்றேன்.

சண்டை போடனும்னே வரவங்க கிட்ட என்ன சொல்ல முடியும்?

வெட்டிப்பயல் said...

//உண்மை கசக்கத்தான் செய்யும். ஆனால், விலை ஏத்தறவன் மேலே துளிக் கூட தப்பு இல்லேங்கறதுதான் அப்பட்டமான உண்மை.//

ஓ... நல்லா பேசறீங்க. நாளைக்கு அரிசி கிலோ நூறு ரூபாய்னு வெச்சி காசு இருக்கறவன் வாங்கறான். நான் லாபம் சம்பாதிக்கிறேன். வக்கிருந்தா வாங்கி சாப்பிடு இல்லைனா சாவுனு கடைக்காரன் சொன்னா இப்படிதான் பசில இருக்கறவனுக்கு பொருளாதாராம் சொல்லிக்கொடுப்பீங்களோ?

அப்படி சொன்னா உங்க கழுத்துல அந்த வெட்டு விழும்...

//ஏன்னா இந்தச் சமுதாயம் எல்லோரும் சம வாய்ப்பைத் தர இயலவில்லை//
இது என்னைக்குமே நடக்காத விஷயம். சம வாய்ப்பு என்னைக்கும் எல்லாருக்கும் கிடைக்காது.

//இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஐடி வேலைசெய்யும் உங்களைப் போன்ற இளையர்கள் பொறுப்பில்லை அதே சமயம், ஐடி கம்பெனிகள், அவங்க சம்பள பாலிசி, அதனால் மற்ற துறையில் நிகழும் பாதிப்பு என்று பேசும் போது, குறுக்க பூந்து அய்யோ அம்மான்னு அலறக் கூடாது.//
இங்க யாரும் அலறல. எங்க சம்பளத்தை பத்தி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதைவிட எங்களுக்கு உரிமை இருக்கு. நாங்க மனசாட்சி இல்லாதவங்க இல்லைனு தான் நான் சொல்ல வறேன். ஆனா உங்களை மாதிரி வெறுப்பு பிடிச்சி அலையறவங்களுக்கு என்னத்த சொல்லியும் புரிய வைக்க முடியாது.

//உடனே கேப்பீங்க.. இதுக்கல்லாம் நாங்களா காரணம் கெவருமெண்ட்டை போய்க் கேளுங்கன்னு... அய்யா... நாங்க கேக்கறது கெவருமண்ட்டைத்தான்.. உங்களை அல்ல... நீங்கதான் குறுக்க குறுக்க வந்து எக்குதப்பா ஆக்சிடண்ட் ஆகிடுது.//

ஏனுங்க படத்துல ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரை பார்த்து கேள்வி கேக்கற மாதிரி தானே இருக்கு. அரசாங்கத்தை கேள்வி கேக்கற மாதிரியா இருக்கு. நீங்க வில்லனா காட்டுறது நாங்களா கிடைச்சோம்.

கோடி கோடியா கொள்ளை அடிக்கறாருங்களே உங்க தலைவருங்க அவுங்களை கேளுங்க. அதுக்கு உடனே உங்க வழக்கமான பதில் ஒரு வருஷ பட்ஜட்ல ரெண்டு மூணு பர்செண்ட் கொள்ளை அடிச்சா தப்பானு கூச்சப்படாம கேள்வி கேப்பீங்க...

SurveySan said...

நல்ல அலசல் வெட்டி.

Survival of the fittest என்ற இயற்கை விதிப்படி நடக்குது எல்லாம்.

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆனது ஒண்ணும் luck of the draw இல்லியே -
நண்பர்களில் பலர் கவர்மெண்டு வேலை, பாங்க் வேலைன்னு 'safe'ஆ சேந்தபோது, வீடு அடமானம் வச்சு ரூ.20,000 வாங்கி, அதுக்கு மாஞ்சு மாஞ்சு வட்டி கட்டி, APTECHலயும், NIITலயும் படிச்சு முன்னேறினவங்கதான் இன்னீக்கு பல பேர்.

அடுத்தவன் தன்னைவிட அதிகமாக (நேர்மையான முறையில்) சம்பாதிக்கறான் என்று வயிற்றெறிச்சல் படாமல், தானும் முன்னேறப் பாக்கணும்.

சாப்ட்வேர் படிச்சுட்டு அம்பானி உலகப் பணக்காரன் ஆகலியே - Where there is will, there is way!

இன்றைய விலைவாசி ஏற்றங்களுக்குக் காரணம் 'லஞ்சமும்/கறுப்புப் பணமும்', nothing else.

கோபி(Gopi) said...

வெட்டிப்பயல்,

இந்தப் பதிவில் நீங்க சொல்லுற கருத்துக்கள் சரி.

என்றாலும் "கற்றது தமிழ்" பற்றி பார்த்த சில ஒளித்துண்டுகளை வைத்து அந்தப் படமே சரியில்லைன்னு ஒரு முடிவுக்கு வரமுடியாது.

படத்தை நானும் இன்னும் பாக்கலை. படம் பார்த்த ஒரு நண்பன் "அந்த ஓரிரு வசனங்கள் தவிர இது ஐடி ஆளுங்களை சாடுகிற மாதிரி படம் இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னிக்கு அதிகமாயிட்டே போகுது. இப்படியே போனால் பொருளாதார சமநிலை வெகுவாக பாதிக்கப்படும். அதனால எதாவது செய்யுங்க" அப்படின்னு கதையை முடிச்சிருக்காங்கன்னு சொன்னான்.

ambi said...

பாலாஜி, ஒரு பாப்கார்ன் 40 ரூபாய்க்கு சத்யம்ல விக்கறான். ஏன்?
மொக்கை படம்னா கூட பிவிஆர்ல டிக்கட் விலை 250 - 500 வரை. (சிவாஜிக்கு தனி ரேட்). ஏன்?

நாமளும் 2000 ரூபாய் அழுது ட்ரீட் குடுத்தா தான் மதிப்பா? அந்த பாப்கார்னை யாருமே வாங்கலைனு வெச்சுப்போம், விலை தன்னால குறையும் இல்ல, வீக் என்டுல பிவிஆர், கருடா மால் போனா தான் மோட்சம் கிட்டுமா என்ன?

நம்ப பேர்ல இருக்கற தப்பையும் ஒத்துக்கனும். எனக்கு அது வேணும்! என்ன விலைனாலும் சரி என்ற போக்கு மாறனும். நாமளும் ரெம்பவே சுய நலத்தோட தானே நடந்துக்கறோம்?
தனி தனி கார்ல போவோமே தவிர என்னிக்காவது யாருக்காவது (டீம்ல இருக்கற பிகர்கள் நீங்கலா)லிப்ட் குடுத்த்ருக்கோமா? பெட்ரோல் விலை ஏன் ஏறாது?
இது நடு நிலையான பதிவுனு சொல்ல முடியலை, புரிதலுக்கு நன்றி ஹை!

TBCD said...

பொத்தாம் பொதுவா இன்னார் தான் இதுக்கு காரணம்ன்னு சொல்ல முடியாது...
சமுகத்திலே ஏற்றத் தாழ்வுகள் என்பது இன்னைக்கு நேத்து வந்ததில்லை...
நிறைய சம்பாதிக்கிறங்க என்பது "நிச்" செக்மன்டா இருந்து வந்தது...
அது கணிணித்துறையின் வளர்ச்சியிலே இந்தியா ஒட்டிக் கொண்ட போது ஒரு புது வகையான பனக்காரர்களை அது உருவாக்கியது. இந்த பனக்காரர்கள், இளவயதிலேயே தலைமுறைக்கும் பார்க்காத பணத்தை பார்க்க ஆரம்பித்தனர்.
பணம் வந்தால், மனிதனின் செலவழிக்கும் குணம் மாறும். ஊருக்கு அரசு பேருந்தில் ஸ்டான்டிங் போனது கை வந்த கலையாக இருந்தவர்களுக்கு, சம்பளம் ஏற, ஏற, ஏர் பஸும் அசெளகரியமாகி விடுகிறது...இதில் அவர்களை குற்றம் சொல்வதற்கில்லை...ஆனால்,
ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே அக்ரமித்திருந்த பனக்காரர்கள், பரவலாக பரவத் தொடங்கியதின் விளைவு, சாமனியர்களுடன் போட்டி ஆரம்பித்தது...
இன்போசிஸின் சுதா நாராயனசாமி தக்காளி கதை மிகவும் பிரபலம்..அது உன்மையோ,பொய்யோ..ஆனால், உன்மை நிலவரம் அது போல தான் உள்ளது...
சாதரணமாக வீடு வேண்டும் என்போர், ஐடியில் வேலை பார்க்கும் ஒருவர் போல், எத்தனை கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்க மாட்டார்...ஆனால், அவர் ஐடியில் பணி புரியும் நபருக்கு இனையான வாடகையயை கொடுக்க வேண்டும்...இது போல் பல விசயங்களில் அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவர் அதற்கான விலையயை கொடுக்கத் தான் வேண்டும்...

இதில் என்ன அசெளகரியம், முதலில் பணக்கார்கள் 5* விடுதிக்கு சென்றனர்....சாமனியன் பாதிக்கப்படவில்லை...ஆனால், இப்பொழுது அப்படி இல்லை...பக்கம் பக்கமாக இருக்க வேண்டிய நிலை..(யாரும் திரிக்க முயற்சிக்க வேண்டாம்..நடைமுறை அது...)..

மருத்துவர், பொறியலாளர்கள் மட்டுமே மேலான சம்பளம் வாங்கும் போது, கலைத்துறை படித்தவர்கள், இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர்கள், குறைந்த அளவு சம்பளம் பெற்றார்கள்..ஆனால், இவ்வாறு பாதிக்கப்படவில்லை...இப்போது எண்ணிக்கையில் ஐடி அதிகரித்து வருவதால் இந்த தாக்கம் தெரிகிறது..

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது எல்லா நிலையிலேயும் வந்து விட்டால், இந்த பிரச்சனை வந்துவிடாது..நம் நாட்டிற்கு ஐடியில் பேர் கிடைத்தற்கு காரணம், விலை குறைவான உழைப்பு என்பதால் என்பதை நாம் மறக்க கூடாது...அது கிடைக்க காரணம் , குறைவாக சம்பளத்திலே, பணி புரியும் இதர தொழில்கள்...ஒன்றை நசித்து இன்னொன்று...வளர்ந்தால் அது ஆரோக்கியமான வளர்ச்சியாகாது...

இந்த டிமான்ட், சப்ளை இதில் பொருத்தி தான் மக்கள் குளிர் காய்கிறார்கள்..ஆனால், பொருளின் விலை, அதன் உபயோகத்ன்மையயை மட்டுமே கருத்தில் வைத்து இருக்க வேண்டும்...அதிகமாக கேட்கிறார்கள் என்றால், அரசாங்கம் , அதில் தலையிட வேண்டும்..விலையயை கட்டுப்படுத்த வேண்டும்..

ஐடி இஞ்சினியர்களுக்காக மற்றவர்களை பலி கொடுக்கக்கூடாது....

Anonymous said...

வெட்டி நீங்க எழுதுறது நியாயமானு மத்தவங்க angle ல இருந்து யோசிச்சு பாருங்க

siva said...

Survival of the fittest என்ற
இயற்கை விதிப்படி நடக்குது எல்லாம்.

- courtesy -blogger survesan

ithu potti ulagam
nichal terinjavan karaieruvan
teriyathavan puriyeruvan

- courtesy vivek(in a.vikatan)

Anonymous said...

Henry Ford ஒரு முறை பேனா ஒன்றின் விலை 2 டாலர் என்று வாங்காமல் வந்து விட்டார் , அவரிடம் கேட்ட போது 2 டாலர் எனக்கு அதிகம் இல்லை ஆனால் அந்த பேனாவிற்கு அதிகம் என்றார். But you like IT people பொருளின் real value பற்றி கவலை படாமல் வாங்குவதால் Non IT அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள். உங்களின் வருமானம் மற்ற பெரும்பான்மையானவர்களை பாதிக்காத வரை யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை.

கோபிநாத் said...

\\கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.\\

சூப்பர் பாயிண்டு வெட்டி ;)

Anonymous said...

//ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?
//
ஏன் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு விக்கிற ஹோட்டல் உங்க கண்ணுக்கு தெரியாதா.. அங்க போய் ட்ரீட் கொடுத்தா சாப்பிட மாட்டாங்களா?..இதில வாரத்துக்கு ஒரு தடவை போய் ஆகணுமாம்.. சட்டமோ?
வாரத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய் செலவு செய்வாங்களாம்.. ஆனா சேமிக்கவே முடியலையாம்.. கொடுமைடா சாமி..
இது வயித்தெரிச்சல் இல்லை வெட்டி.. ஊதாரித் தனத்திற்கு சப்பைக்கட்டு கட்டும் உங்கள் கட்டுரையை படித்து என்ன சொல்ல?..
//ஆனா அவனுக்கு அந்த காசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான் உண்மை. அதுவுமில்லாம அந்த வயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான்.//
இதை தான் எல்லாரும் சொல்றாங்க..
காசோட அருமை தெரிஞ்சா இப்படி இருக்கமாட்டான். அதை கத்துக்க சொல்லுங்க.. அடுத்தவங்க குறை சொல்ல தேவை வராது. அது சமூகத்தை பாதிக்குதுன்னு உண்மையை உணர சொல்லுங்க..
இப்படி கிறுக்குத்தனமான ஆட்களை உருவாக்க தான் ஷாஃப்ட்வேர் துறைக்கு அழைக்கிறீர்களா?..ம்ம்ம்ம். நல்ல ஆளுங்க நீங்க..

alexis said...

how can i write in tamil?

can anyone explain me plzzzz..

Alex.

Dubukku said...

வெட்டி,
ஒரு காலத்துல டாக்டருங்க ஏகத்துக்கு சம்பளம் வாங்கி சொத்தக் குவிச்சிக்கிட்டு இருந்தாங்க, ஆனா என்ன வருஷத்துக்கு இத்தனை டாக்டருங்க தான் பாஸ் பண்ண முடியும்னு இருந்தது நம்மூர்லயும் ஊருக்கு ஊர் வியாதி பெருகிட்டு இருந்தது வியாபாரம் நல்லா நடந்துக்கிட்டு இருந்தது.

இப்போ சாஃப்ட்வேர் காரன் காலம்.அவ்வளவு தான். ஆனா ஆரம்ப சம்பளமே முப்பதாயிரத்துக்கு (உதாரணத்துக்கு..ஒரு கம்பேரிசனுக்கு சொல்றேன் உணமை நிலவரம் தெரியலை) மேல இருக்கிற சாப்ட்வேர் காரனோட சம்பளத்தோட இருபதாயிரம் வாங்கறவங்க போட்டி போடவேண்டி இருக்கு. இத விட மாசம் அஞ்சாயிரமோ ஆறாயிரமோ வாங்கறவங்க நிலைமை இன்னும் மோசம். சமூகத்தில் சாப்ட்வேர்காரர்களிடம் மட்டும் பணவீக்கத்தையும் பொதுவாக ஏற்றத்தாழ்வையும் ஏற்படுத்திவிடும். அதற்காக சாப்ட்வேர்காரன் சம்பளத்தை இறக்கனும்ன்னு சொல்றத விட அரசாங்கம் மற்ற துறைகளையும் ஊக்குவித்து அவர்களும் இதே மாதிரி சம்பளம் வாங்கி செல்வச் செழிப்பாக வாழ வழி செய்யவேண்டும்.

(பொருளாதாரத்த கொள்கைகள் பற்றி ரொம்பத் தெரியாமல் உளறியிருந்தால் மன்னிக்கவும்)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி....

கலாம் சொன்னது நினைவுக்கு வருது!
Wealth generation & spending in society is always welcome. But with that should come more consciousness about the society!

இது போல ஒரு காலத்தில் டாக்டர்கள், நடிகர்கள்-னு இருந்த போது பிரச்சனை பெருசாத் தெரியலை! ஏன்னா ஆட்கள் கம்மி! இப்போ இது பூதாகாரமா தெரியக் காரணம், மக்கள் இதில் கொஞ்சம் அதிகம்; போதாக்குறைக்கு மீடியா!

TBCD சொன்னது மிகவும் பிடித்திருந்தது!
//உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது எல்லா நிலையிலேயும் வந்து விட்டால், இந்த பிரச்சனை வந்துவிடாது..நம் நாட்டிற்கு ஐடியில் பேர் கிடைத்தற்கு காரணம், விலை குறைவான உழைப்பு என்பதால் என்பதை நாம் மறக்க கூடாது...//

ஆனா உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது எல்லா நிலையிலேயும் வர பலப்பல காலங்கள் ஆகலாம்! வராமலும் போகலாம்!

இதற்கு அரசை நம்பினால் எந்த அளவுக்கு உதவும்-னு தெரியாது. அரசு கட்டாயம் இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும்!
ஆனால் நாம் அது வரை காத்திருக்கத் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை!
அந்தந்த நிறுவனங்கள் தான் சமன்பாட்டுக்கான திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய தொழிற்சாலை துவங்கினால் எழும், by-product/after-effectஐ அந்தந்த நிறுவனங்களே சமாளிப்பது போல, சமூக வளர்ச்சி ஒரு பக்கம் மட்டும் தேங்கினால் அதுவும் by-product தான்! அதையும் நிறுவனங்கள் அணுகத் தயாராக இருக்கணும்!

உங்க கிட்ட இன்னொன்னு கேக்கணும்!
இந்தியக் கம்பெனிகளில் பயிற்சி (Training) என்ற ஒன்று இருக்கும் அல்லவா? அதில் மனித வளம் சார்ந்த பயிற்சிகளை வகுப்பறையில் எடுக்காமல், சமூகக் கூடங்களில் எடுப்பது உண்டா?

ஏன் கேட்கிறேன் என்றால், இங்கு எங்கள் வங்கியில், இது போன்ற பயிற்சிகள் எல்லாம் ஒரு பள்ளி/காப்பகம்/மருத்துவமனை என்று பின்னப்பட்டு விடும். பயிற்சியோடு கூடிய சேவையில், எல்லா வொயிட் காலர் பணியாளர்களுக்குமே ஒரு மாறுபட்ட சிந்தனை கிடைக்கும்! இது residential training program! Mandatory - twice every year!

திட்டங்கள், Rewards Program, தண்டனைகள், traffic violation என்று எல்லாவற்றுக்குமே சமூகப் பங்களிப்பை வைத்து விட்டால், இது போல ஏற்றத் தாழ்வுகள் குறைகிறதோ இல்லையோ! நிச்சயம் ஏற்றத் தாழ்வு மனப்பான்மைகள் குறையும்!

அம்பி சொன்ன பாப்கார்ன் வாங்காமல் இருப்பது self regulation. வரவேற்கத் தக்கதே! ஆனா எல்லாரும் இப்படிச் செய்து விட மாட்டார்கள்! இதை அமைப்பு சார்ந்ததா கொண்டு போனாத் தான், ஒரளவுக்காச்சும் தீர்வு கிடைக்கும்!

செல்வன் said...

//Hஎன்ர்ய் Fஒர்ட் ஒரு முறை பேனா ஒன்றின் விலை 2 டாலர் என்று வாங்காமல் வந்து விட்டார் , அவரிடம் கேட்ட போது 2 டாலர் எனக்கு அதிகம் இல்லை ஆனால் அந்த பேனாவிற்கு அதிகம் என்றார்.//

ஃபோர்டு லின்கன் எக்ஸ்ப்ளோரர் எஸ்.யு.விக்கு $55,000 அதிக விலைதான்.ஆனால் வாங்குபவருக்கு அது அதிக விலை இல்லை என்றால் ஃபோர்டு ஒத்துக்கொள்வாரா?:))

ஹென்ரி போர்ட் நல்ல தொழிலதிபர்.ஆனால் மோசமான நிதி நிர்வாகி.போர்ட் கம்பனி அவரால் உச்சத்துக்கு போனது போல் ஒரு கட்டத்தில் அவரது தவறான நிதி நிர்வாகத்தாலேயே வீழ்ந்தது.பிறகு அவரது குடும்பத்தினர் அவரை நீக்கிவிட்டு அதிகாரத்தை கைபற்றி கம்பனியை காப்பாற்றினர்.

//But you like IT people பொருளின் real value பற்றி கவலை படாமல் வாங்குவதால் Non IT அனைவரும் பாதிக்கப் படுகிறார்கள். //

தவறான வாதம்.

பெட்ரோல் விலை உயர காரணம் ஐடி மக்கள் அல்ல,ஈராக் போர்.

உணவு தானியம் விலை உயர காரணம் அரசின் கொள்கையே தவிர 2000 ரூபாயில் ட்ரீட் தரும் ஐடி மக்கள் அல்ல.

ரியல் எஸ்டேட் விலை உயர காரணம் ஐடி மக்கள் என்றால் கம்ப்யூட்டர் என்றால் என்னெவெனெறே தெரியாத ஊர்களில் எல்லாம் ஏன் ரியல் எஸ்டேட் எகிறுகிறது?

உலகம் முழுக்க ரியல் எஸ்டேட் விலை எகிறினால் வீட்டு வாடகையும் எகிறும்.பெட்ரோல் விலை ஏறினால் எல்லா பொருளின் விலையும் ஏறும்.ஊருக்கு இலைச்சவன் பிள்லையார் கோயில் ஆண்டி என்ற கதையாய் ஊர்பிரச்சனை எல்லாவற்ரையும் ஐடிகாரனின் தலையில் போடுவது நன்றாக இல்லை.

செல்வன் said...

//அதற்காக சாப்ட்வேர்காரன் சம்பளத்தை இறக்கனும்ன்னு சொல்றத விட அரசாங்கம் மற்ற துறைகளையும் ஊக்குவித்து அவர்களும் இதே மாதிரி சம்பளம் வாங்கி செல்வச் செழிப்பாக வாழ வழி செய்யவேண்டும்.//

எல்லோரையும் பணக்காரனாக்குவது உலகின் எந்த அரசாங்கத்தாலும் இயலாத காரியம்.

எல்லோருக்கும் உனவு,உடை,உறையுள் கொடுப்பது கொஞ்சம் பிராக்டிகலான காரியம்.

ஒரு குடும்பம் முன்னேற ஓரிரு தலைமுறை ஆகும்.இன்ரைய சாப்ட்வேர் இஞினியரின் தாத்தா விவசாயி,அப்பா க்ளார்க் என படிப்படியாக மூணு தலைமுரையில் அந்த குடும்பம் முன்னேறி இருக்கிறது.அவர்களை அவர்களின் உழைப்பின் பலனை ருசிக்க அனுமதிப்பதே முறை.புத்திசாலித்தனமாக உழைத்தால் மற்றவர்களும் இவர்கள் போல் ஓரிரு தலைமுறையில் உயரலாம்.அவ்வளவுதான் விசயம்

G.Ragavan said...

பாலாஜி, இந்தப் பதிவோட முழுமையா ஒத்துப் போக முடியலை. வாடகையக் கூட்டுறாங்க...ஓட்டல்ல கூட்டுறாங்கங்குறதெல்லாம் சின்னக் குழந்தைத்தனமா இருக்கு. இவ்ளோ சொல்றியே...இந்த சாப்ட்வேர் இப்ப வந்ததா? இல்லையே. இன்போசிஸ் வந்தே 25 வருசம் ஆச்சே. நீ சொல்ற இத்தன விலையேத்தமும் கடந்த நாலஞ்சு வருசத்துலதானப்பா. அதுக்கு ஒருவிதத்துல நாமும் பொறுப்பேத்துதான் ஆகனும்.

விலையக் கூட்டும் போது வேண்டாம்னு போறது. கொஞ்சம் கொறஞ்ச விலையுள்ளத கொஞ்ச நாள் தேர்ந்தெடுத்தா என்னவாம்? இந்த பெங்களூர் வந்து ஏழு வருசம் முடிஞ்சி போச்சு. நான் வந்தப்ப இந்த நூறு ரூவா எறநூறு ரூவா டிக்கெட் விக்கிற தேட்டர்கள் இல்ல. அட... இப்பவும் 30-40க்கு டிக்கட் குடுக்குற தேட்டருங்க இருக்கு. அங்க போறமா? இல்லையே...பிவிஆர்ல பாத்தாதானே படம். இன்னோவேட்டிவ் மல்ட்டிபிளக்ஸ்ல பாத்தாதானே படம். அங்கதான தொடங்குது ஆட்டிடிடூட் பிரச்சனை. அந்த ஆட்டிட்டூட ஆட்டீட்டோம்னா...பிரச்சனை தீருதோ இல்லையோ...மாற வழியிருக்கு.

அடுத்தவங்களைக் குற்றம் சொல்றதுக்கு முன்னாடி நம்மளச் சரி செஞ்சிக்கிருவோம். சுனாமிக்கு அள்ளிக் கொடுத்ததையே எவ்ளோ நாளளக்குப் பெருமை பேசுறது. கொடுத்ததத் திரும்பச் சொல்றதும் நல்லதில்லை.

செல்வன் சொல்ற survival of the fittest சரிதான். ஆனா நமக்குன்னு பொறுப்பு இருக்குல்ல.

கொத்ஸ், வட்டம், மாவட்டம், அடிமட்டம்னு எல்லாக் கட்சீலயும் கொள்ளையடிச்சித்தான் வெச்சிருக்கான். உண்மைதான். அவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும்யா. தானைத் தலைவாம்பான்..புகழுறுதலைவிம்பான்...நம்ம கத அப்படியா? அப்படியா வந்தோம்? இல்லைல்ல. பொறுப்போடதான படிச்சி வந்தோம். அந்தப் பொறுப்பையும் தொடருவோம்.

Dubukku said...

இப்போ தான் இந்த படம் பார்த்தேன். நான் முன்னாடி சொன்ன கருத்து இந்தப் படத்தைப் பற்றி எதுவும் தெரியாமல்.

//எல்லோரையும் பணக்காரனாக்குவது உலகின் எந்த அரசாங்கத்தாலும் இயலாத காரியம்//

செல்வன் நீங்க சொல்வது ரொம்ப சரி. நானும் சொல்ல வந்தது அதுவல்ல. வேறு எதையோ சொல்லவந்து உளறி இருக்கிறேன். பணவீக்கம் என்பது சாப்ட்வேர் துறை சார்ந்து மட்டும் இருந்தால் அபாயகரமானது என்பதைத் தான் சுத்தி வளைச்சு சொல்லியிருக்கிறேன். மற்ற துறைகளுக்கும் சாப்ட்வேருக்கும் உண்டான சமபள் ஏற்றத்தாழ்வு ரொம்ப இருந்தால் இந்தப் பிரச்சனை வரும். அதுவும் இன்றைக்கு கண்ணித் துறையில் இந்தியாவில் வேலை பார்க்கும் எண்ணிக்கையையும் இந்த சம்பள ஏற்றத்தாழ்வையும் பார்க்கும் போதும், இந்த படம் பார்ப்பதற்க்கு முன்னாலே எனக்கு தனிப்பட்ட முறையில் இந்தக் கவலை இருக்கத்தான் செய்தது.

Anonymous said...

arpannukku vazhvou vantha artha rathriyal kudai pedippan.

TBCD said...

அரசாங்கம் நினைத்தால் எதையுமே கட்டுப்படுத்தலாம்...மலேசியாவிலே அரசாங்கம், கோழி விலை, முட்டை விலை, பால் விலை, சமையல் பொருட்க்கள் விலை எல்லாத்தையுமே அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது...இத்தனைக்கும் இங்கு வாழ்க்கைத் தரம் இந்தியாவை விட மேலானதாகவே இருக்கிறது...சிங்கப்பூரிலே வீட்டு விலையயை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறதாம்...

எல்லத்தையும் அரசாங்கமே செய்யனுமின்னு சொல்லவில்லை..ஆனா செய்ய வேண்டிய சிலவற்றையாவது அது செய்ய வேண்டும்..இன்னும் சில நாடுகளிலே. சீ.ஈ.ஓ..சம்பளமும், கீழ் நிலைத் தொழிலாளியின் சம்பளத்தின் வித்தியாசம் , இத்தனைக்குள்ளே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களாம்...இதெல்லாம் எதுக்கு...வலுத்துவன்..நல்லா இருக்கட்டும்..இல்லாதவன் வேடிக்கை பார்க்கட்டும் என்று இல்லீங்கோ....சமுதாயம் மொத்தமும் நல்ல இருக்கட்டும்..அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் சிரமப்படக்கூடாது என்பத்றகாக தான்....


//*எல்லோரையும் பணக்காரனாக்குவது உலகின் எந்த அரசாங்கத்தாலும் இயலாத காரியம்.
*//

மங்களூர் சிவா said...

புதுசா ஒன்னும் சொல்லதேவை இல்லை. எல்லாமே பேசிட்டாங்க பின்னூட்டத்தில

அம்பி,,
G.ராகவன் பின்னூட்டங்களுக்கு
ஒரு

ரிப்பீட்டேய்

Anonymous said...

Most software companies are opened in suburban areas. There is no infrastructure there. If a good house was found. Then all are ready to pay more than they expect. It increases the rate. I went to a house in sholinganallur, Chennai for rent. One guy came after me and he was happy with that house. So he told the house owner that he was ready to pay 500 rupees extra. Then the house was given to that guy. Whose mistake is this?

Anonymous said...

Let us assume that the blended annual salary of each software professional is Rs. 6 lacs. That means his monthly income is Rs. 50000. He has to pay 30% tax on his gross annual income which is Rs. 1.8 lacs.

A company should atleast earn Rs 2 lacs per month because of this employee in order to pay him Rs 50000 per month salary. Assuming excluding the other expenses the gross profit turns out to be Rs 1 lac for that company because of this employee, the total gross annual profit is Rs 12 lacs. Again 30% tax on that is Rs 4 lacs.

So the income tax generated by an IT employee through direct and indirect income alone is 5.8 lacs per annum.

Assuming we have 3.5 lacs IT professionals currently, the total sum is 20300 crores per year.

This is only the income tax. I have not considered the property tax, sales tax etc. when he spends the money to buy anything.

Some tips from our Union Budget 2007:

Expenses :

Mid-day Meal Scheme : 3794 Crores
Means-Cum-Merit Scholarships : 750 Crores
Drinking Water and Sanitation : 954 Crores
Health Sector : 9947 Crores
HIV/AIDS : 969 Crores
Polio : 1290 Crores
Child Development Services : 4761 Crores
Rural Employment Guarantee Scheme : 1800 Crores
Urban Unemployment : 344 Crores

Total : 24609 Crores

http://indiabudget.nic.in/ub2007-08/bh/bh1.pdf

Ignorance is not always bliss.

Bruno said...

What about

1. Recommending a costly technology for the client when another cheap technology is available (because oracle sponsored your last trip for COnference)

2. Cheating the clients by telling "these features will not be useful" and giving a old product (code written for some other client) with little tweaks

சதங்கா (Sathanga) said...

TBCD சொன்னது மாதிரி "அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் சிரமப்படக்கூடாது"

இந்த ஒன்று (சாதாரண ஒன்று என்று சொல்லவில்லை) சரியா அரசாங்கம் செய்தால், நீங்க 40 ஆயிரம் வாங்கினா என்ன 400 ஆயிரம் வாங்கினா என்ன. கீழ்த்தட்டு மக்களிடம் சலசலப்பு கண்டிப்பாகக் குறையும். ஒரே உதாரணம், இங்கே பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்காங்க ... சிங்கப்பூர். எனக்குத் தெரிந்து ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை நிச்சயமாக இந்த அரசாங்கம் பூர்த்தி செய்கிறது என்று தான் சொல்வேன். அங்கேயும் தினம் 20 வெள்ளி சம்பளம் வாங்குவோரும், 2000 வெள்ளி சம்பளம் வாங்குவோரும் உள்ளனர். நம்ம ஊரில் அடித்துக் கொள்வது போல் அங்கு இல்லை.

TBCD said...

நீங்க சொன்னதாலே சொல்லுறேன்...சிங்கப்பூரிலே, மக்களுக்காக தரப்படுகிற வாகன சேவைகளின் விலை எல்லோருமே தர முடிகின்ற அளவிலே இருக்கு...அது எம்.ஆர்.டி ஆகட்டும், ஏசி வசதி கொண்ட பேருந்து ஆகட்டும்...ஆனா பெங்களுரிலே, ஏசி பேருந்தில் எல்லாரும் பயனிக்க முடியும்மா ஒரு தரம் போனா ரூ.30 - 50 வரை....இதை தான் நான் சொல்லுறேன்..வசதி உள்ளவனுக்காக அரசாஙகம்மா...எல்லோருக்காகவும் அரசாங்கம்மா..

//*சதங்கா (Sathanga) said...
TBCD சொன்னது மாதிரி "அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் சிரமப்படக்கூடாது"

இந்த ஒன்று (சாதாரண ஒன்று என்று சொல்லவில்லை) சரியா அரசாங்கம் செய்தால், நீங்க 40 ஆயிரம் வாங்கினா என்ன 400 ஆயிரம் வாங்கினா என்ன. கீழ்த்தட்டு மக்களிடம் சலசலப்பு கண்டிப்பாகக் குறையும். ஒரே உதாரணம், இங்கே பின்னூட்டத்திலேயே சொல்லியிருக்காங்க ... சிங்கப்பூர். எனக்குத் தெரிந்து ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையை நிச்சயமாக இந்த அரசாங்கம் பூர்த்தி செய்கிறது என்று தான் சொல்வேன். அங்கேயும் தினம் 20 வெள்ளி சம்பளம் வாங்குவோரும், 2000 வெள்ளி சம்பளம் வாங்குவோரும் உள்ளனர். நம்ம ஊரில் அடித்துக் கொள்வது போல் அங்கு இல்லை.*//

வெட்டிப்பயல் said...

மன்னிக்க வேண்டும் நண்பர்களே... வேலை பளுவினால் எதற்கும் பதிலளிக்க இயலவி்ல்லை...

//எல்லத்தையும் அரசாங்கமே செய்யனுமின்னு சொல்லவில்லை..ஆனா செய்ய வேண்டிய சிலவற்றையாவது அது செய்ய வேண்டும்..இன்னும் சில நாடுகளிலே. சீ.ஈ.ஓ..சம்பளமும், கீழ் நிலைத் தொழிலாளியின் சம்பளத்தின் வித்தியாசம் , இத்தனைக்குள்ளே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களாம்...இதெல்லாம் எதுக்கு...வலுத்துவன்..நல்லா இருக்கட்டும்..இல்லாதவன் வேடிக்கை பார்க்கட்டும் என்று இல்லீங்கோ....சமுதாயம் மொத்தமும் நல்ல இருக்கட்டும்..அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் சிரமப்படக்கூடாது என்பத்றகாக தான்....//

TBCDயின் கருத்தை ஒத்துப்போகிறேன்.

மேலும் என் கருத்து இது தான். சம்பளத்தை குறைத்து சிறுநகரங்களில் தொழில்சாலைகள் துவங்க வேண்டும். எல்லாரும் சென்னைல இருக்கறதுக்கு பதிலா அதை பிரிச்சி சேலம், கோவை, திருச்சி, மதுரை இப்படி நிறைய ஊர்ல கம்பெனிகள் வர வேண்டும். வெளிநாட்ல இருந்து வர காசு Infra Structureக்கு பயன்பட வேண்டும் .

அதைவிட்டு சாப்ட்வேர் இஞ்சினியருங்க செலவை குறைத்து அவர்கள் பேங் பேலன்ஸ் ஏறுவதில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை.

சம்பளத்தை குறைத்தால் ஆடம்பர செலவை தானாக அவர்கள் குறைத்து தான் ஆகவேண்டும்... இது தான் என் பதிவின் சாரமும். புரிதலில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

இதற்கு மேல் இங்கு நீங்கள் விவாதத்தை தொடரலாம். ஆனால் என்னால் பங்கு பெற முடியுமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்...

cheena (சீனா) said...

கை நனச்சிட்டுப் போல்லாம்னு வந்தா எல்லோரும் கை நனச்சு தண்ணியே கலங்கிப் போய் இருக்கு. என்னா சொல்றது ?? ஒன்னூமே சொல்லாம போயிலாம்

Anonymous said...

It all boils down to Real wage - Nominal value - inflation. Affected people are common man.

Need is different from wants. Not every IT guy out there is able to distinguish this...

I.T has changed a lot of things in good ways for IT folks not everyone out there...!

kindly change your perspective once, the other side of the coin will be visible.

Thanks,
S

software_engineer said...

Hi Vettipayyan...

Really your blog is good and true. Manmohan singh and Chidambaram can protect software people. But they won't do that. If they do that, their income will be reduced. They are not only politicians nowadays but also business men. But no need of knowledge to do this business. If you analyze onething in our great india about our literate and illiterate politicians, you can write somany goodthings in your blog. Kalaignar's educational qualification is only below 8th standard. But manmohan singh's one is not like that. But his PM position is in Kalaignar's hand. So, best theif in our country is illiterated politicians only. Really illiterate politicians are ruling india. So, no abdul kalam's dream will come true on even 2200. A person whose qualification is B.Com can become a Finance Minister. But a B.E computer science qualified person can become a IT minister...?

Regards
S/W Engineer...

Tamilarasan said...

//கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம்.//
இப்ப நான் இந்த ரேஞ்ச்ல தான் தலைவரே இருக்கேன். நானும் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர் தான். கோயம்புத்தூர்லதான் இருக்கேன். சொந்த வீடு, அப்பா அம்மா வோட, கைல ஒரு டு வீலர் னு லைப் ஜாலியா போகுது. ஆன 3 வருஷம் ஆகியும் சம்பளம் சொல்லிக்குற அளவுக்கு பெருசா இல்ல. எனக்கும் பெங்களூர் போகனும், கை நிறைய சம்பாதிக்கனும்னு ஆசையா இருக்கு. ஆன சொந்த ஊர விட்டு வரவும் மனசு வரமாடேங்குது. உங்களோட இநத வரிகள படிச்சதும் மனசு ஒரு மாதிரி ஆகிடுச்சு.