தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 02, 2007

புரட்சி செய்வோம்!!!

இன்னைக்கு காலைல நம்ம கப்பி நிலவர் ஆன்லைன்ல வந்தாரு.

நான்: வாங்க கப்பி. எப்படி இருக்கீங்க?

கப்பி: நல்லா இருக்கேன் தம்பி. நீ எப்படி இருக்க?

நான்: நல்லா இருக்கேன் அண்ணே. நேத்து நீங்க கீத்து கொட்டாய்ல எழுதன விமர்சனம் பட்டைய கிளப்புச்சி.

கப்பி: இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி? அடுத்து நான் எழுத போற மலைக்கோட்டை விமர்சனத்தை படிச்சு பாரு. அரண்டு போயிடுவ.

நான்: அது என்னணா மலைக்கோட்டை? உச்சி பிள்ளையார் கோவில் இருக்கே. அதுவா?

கப்பி: என்னது மலைக்கோட்டை தெரியாதா? நம்ம "புரட்சி" தளபதி விஷால் நடிச்ச படம்பா.

நான்: என்னது "புரட்சி" தளபதியா? அவர் எந்த நாட்டுக்கு தளபதியா இருந்தாரு? இல்லை என்ன புரட்சி பண்ணாரு?

கப்பி: ஏன்பா இப்படி உலகம் புரியாத பச்சை மண்ணா இருக்கியே. புரட்சி பண்ணா தான் புரட்சி பட்டம் தரனுமா என்ன? நம்ம Gaptain விஜயகாந்த் என்ன இந்திய கிரிக்கெட் டீமுக்கு கேப்டனாவா இருந்தாரு? சும்மா அப்படியே வைச்சிக்க வேண்டியது தான். புரட்சினு வைச்சா ஒரு கெத்தா இல்லை?

நான்: ஆமாண்ணே...

கப்பி: அதான். பேருலையே ஒரு கெத்து இருக்கனும்னு தான் அப்படி வைச்சிக்கறது. சரி நான் ஆபிஸிக்கு போகனும். அப்பறம் பார்க்கலாம். பை

இதுக்கு அப்பறம் தான் நான் தீவிரமா சிந்திக்க ஆரம்பிச்சேன். புரட்சினு பேர்ல வைச்சா ஒரு கெத்தா தான் இருக்கு. சரி இன்னும் கொஞ்சம் நாள் போனா எல்லா நடிகர்களும் அவுங்க பேருக்கு முன்னாடி புரட்சி சேர்த்துக்குவாங்க போல இருக்கு. அதுக்கு முன்னாடியே நம்மளால முடிஞ்சதை ரிசர்வ் பண்ணிடுவோம். ஏதோ எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நம்ம வலைப்பதிவர்களுக்கு நான் யோசிச்சி வைச்சது...

புரட்சி பதிவர் - கப்பி (இது அவரே வைக்க சொன்ன பேர் இல்லை. பாசத்துல வைச்சது)

புரட்சி ஆன்மீக செம்மல் - KRS

புரட்சி தோழி - My Friend

புரட்சி தல - கைப்புள்ள

புரட்சி பாகவதர் - தேவ்

புரட்சி கவுஞ்சர் - ராயல்

புரட்சி கதையாசிரியர் - ஜி.ரா

புரட்சி பி.ந வாதி - தம்பி

புரட்சி பின்னூட்டவாதி - மின்னல், இம்சை

புரட்சி நட்சத்திரம் - அபி அப்பா

புரட்சி வீரன் - ஜி

புரட்சி டிபன் - இட்லி வடை

புரட்சி ப்ரோக்ராமர் - பாலபாரதி

புரட்சி வழிகாட்டி - பாபா

புரட்சி மாரியாத்தா - துர்கா

புரட்சி ஆணியவாதி - ஆசிப் மீரான்

புரட்சி குட்டி ஆணியவாதி - மொகன் தாஸ்

புரட்சி கலாய்ப்பவர் - தளபதி சிபி

புரட்சி புலி - நாகை சிவா

புரட்சி போட்டோகிராஃபர் - CVR

புரட்சி ரிப்பீட்டர் - கோபி

புரட்சி டைம்பாஸ் - லக்கிலுக்

புரட்சி போலிங் ஆபிசர் - சர்வேசன்

புரட்சி சித்தர் - VSK

புரட்சி பேயோட்டி - வினையூக்கி

புரட்சி கடவுள் - செல்வன்

புரட்சி புதிர் - யோசிப்பவர்

புரட்சி பில்டிங் காண்ட்ராக்டர் - இலவசக்கொத்தனார்

புரட்சி கடிகாரம் - கோவி.கண்ணன்

புரட்சி நாடோடி - ஓசை செல்லா

புரட்சி கொலைவெறிப்படை தலைவர் - செந்தழல் ரவி

புரட்சி டீச்சர் - துளசி டீச்சர்

புரட்சி கேள்வியாளர் - தருமி

புரட்சி மருத்துவர் - டெல்பின்

புரட்சி கவிதாயினி - காயத்ரி

புரட்சி நினைவாளர் - விக்கி

புரட்சி ஸ்பீக்கர் - சவுண்ட் பார்ட்டி உதய்

புரட்சி மாப்பிள்ளை - கார்த்திக் பிரபு

புரட்சி ஓமப்பொடி - சுதர்சன் கோபால்

புரட்சி புகைப்படபொட்டி - இளவஞ்சி

புரட்சி விவசாயி - இளா

புரட்சி பிளாஷ் - பினாத்தல் சுரேஷ்

புரட்சி சொல்லாளர் - குமரன்

புரட்சி ஆனை - பொன்ஸ்

புரட்சி ஆராய்ச்சியாளர் - ஜொள்ளு பாண்டி

புரட்சி காதலன் - அருட்பெருங்கோ

புரட்சி வெண்பா வாத்தி - ஜீவ்ஸ் ஐயப்பன்

புரட்சி கில்லி - ஐகாரஸ் ப்ரகாஷ்

புரட்சி பொருளாளர் - மா.சிவக்குமார்

புரட்சி பெரும்பதிவர் - உண்மை தமிழன்

புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்

புரட்சி சங்கம் - வவாச

புரட்சி திரட்டி - தமிழ்மணம்

நான் விட்டதை நீங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க... புரட்சி பண்ணுங்க

66 comments:

ILA (a) இளா said...

//ரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்//
செம புரட்சியான பட்டம் இதுதான்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் விட்டதை நீங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க... புரட்சி பண்ணுங்க//

புரட்சிக் காதல் மன்னன் - வெட்டி!
புரட்சி நெல்லிக்காய் - வெட்டி!
புரட்சி வெட்டிகாரு - வெட்டி!

தெலுங்குல புரட்சிக்கு என்ன பேரு பாலாஜி?

கதிர் said...

:))
இத்தனை பேருக்கு புரட்சி பட்டம் குடுத்துட்டு உனுக்குன்னு ஒரு பட்டம் வச்சிக்கல பாத்தியா.. அந்த நல்ல மனச பாராட்டி புரட்சி செம்மல்னு ஒரு பட்டம் இந்தா வாங்கிக்கோ.

இராம்/Raam said...

புரட்சி தளபதி - சிபி

புரட்சி இளையதளதி - வெட்டிக்காரு


:)

நாகை சிவா said...

அய்யனார் தான் டாப்..

:)

நாகை சிவா said...

புரட்சிக்குற வார்த்தையை வச்சு இம்புட்டு புரட்சி பண்ணியதால் புரட்சியின் புரட்சியாக காட்சி அளிக்கிறாய்....

நாகை சிவா said...

சந்தடி சாக்குல கப்பி அண்ணன் ஆக்கின பாரு நீ... அங்க தான்ய்யா நீ ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி இருக்கு....

புரட்சி வேங்கை என்ற பட்டம் கூட உனக்கு பொருந்தி வருது....

வேங்கை மாதிரி குறி வச்சு தாக்குறீயே, அதுனால தான்...

நாகை சிவா said...

சந்தடி சாக்குல கப்பி அண்ணன் ஆக்கின பாரு நீ... அங்க தான்ய்யா நீ ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி இருக்கு....

புரட்சி வேங்கை என்ற பட்டம் கூட உனக்கு பொருந்தி வருது....

வேங்கை மாதிரி குறி வச்சு தாக்குறீயே, அதுனால தான்...

மங்களூர் சிவா said...

//
புரட்சி ஆராய்ச்சியாளர் - ஜொள்ளு பாண்டி

//

இதுக்கு புரட்சி வாசகன் நாந்தேன்

நாகை சிவா said...

புரட்சி சிறுமுயற்சியாளர் - முத்துலட்சுமி

நாகை சிவா said...

புரட்சி உப்புமாபதிவர் - டாக்டர் இராமநாதன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ILA(a)இளா said...
//புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்//
செம புரட்சியான பட்டம் இதுதான்.//

நான் இதை வழிமொழிகிறேன்..

CVR said...

///நான்: நல்லா இருக்கேன் அண்ணே.
நேத்து நீங்க கீத்து கொட்டாய்ல எழுதன விமர்சனம் பட்டைய கிளப்புச்சி.///

விளம்பரம் எல்லாம் நல்லாத்தான்யா பண்ணுறீரு!!
பதிவுலகத்துலையே ஒரு புரட்சிய பண்ணிருவீங்க போல!! :-D

கோபிநாத் said...

வாழ்க .....புரட்சி செம்மல் வெட்டி ;-)))

\\புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்\\

சூப்பர் பட்டம் ;-))

கப்பி | Kappi said...

என்னது அண்ணனா?? அண்ணே வொய் திஸ் கொல வெறி?? :)))

உங்களுக்கு காலைலயே சொன்னது தான் புரட்சி நாயகன் தான் :))

MyFriend said...

gtalkல மட்டும்தான்னு நெனச்சேன். பதிவா வரை வந்துடுச்சா? ஆஹா...

குமரன் (Kumaran) said...

ஹையா ஹையா ஹையா. முதன்முறையாக என்னை ஆன்மிகத்தோடு இணைக்காமல் சொன்னதற்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள். அதென்ன என்னைப் போய் சொல்லாளர் என்று சொல்லிவிட்டீர்கள்? சொல்லாளர் எப்போதுமே இராகவன் தான்.

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

ஹையா ஹையா ஹையா. முதன்முறையாக என்னை ஆன்மிகத்தோடு இணைக்காமல் சொன்னதற்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள். அதென்ன என்னைப் போய் சொல்லாளர் என்று சொல்லிவிட்டீர்கள்? சொல்லாளர் எப்போதுமே இராகவன் தான்.//

வாங்க குமரன்...
அடிக்கடி சமாதனம் செய்யறதால "புரட்சி புறா"னு தான் கொடுக்கலாம்னு பார்த்தேன். ஆனா நம்ம கப்பி நிலவர் தான் உங்களை சொல் ஒரு சொல் வெச்சி சொல்லாளர்னு சொல்லிட்டாரு :-)

கள்ளியிலும் பாலுக்கு பிறகு ஜி.ராவிற்கு அதை வைத்து சொன்னால் தான் பிடிக்கிறது :-)

அதனால அவர் புரட்சி கதையாளர் ;)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

//ரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்//
செம புரட்சியான பட்டம் இதுதான்.//

ஹி ஹி...
அதான் கடைசி பஞ்ச் ;)

அபி அப்பா said...

ஆமாங் சார்,

உங்களுக்கு என்னா பேர் சார்ர்?

இப்படிக்கு \

புரட்சி ஸ்டார்

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நான் விட்டதை நீங்க வந்து பின்னூட்டத்துல சொல்லுங்க... புரட்சி பண்ணுங்க//

புரட்சிக் காதல் மன்னன் - வெட்டி!
புரட்சி நெல்லிக்காய் - வெட்டி!
புரட்சி வெட்டிகாரு - வெட்டி!

தெலுங்குல புரட்சிக்கு என்ன பேரு பாலாஜி?//

இதெல்லாம் ஒரு கெத்தா இல்லை.. வேற முயற்சி பண்ணுங்க ;)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

:))
இத்தனை பேருக்கு புரட்சி பட்டம் குடுத்துட்டு உனுக்குன்னு ஒரு பட்டம் வச்சிக்கல பாத்தியா.. அந்த நல்ல மனச பாராட்டி புரட்சி செம்மல்னு ஒரு பட்டம் இந்தா வாங்கிக்கோ.//

உன் நல்ல மனசு யாருக்குப்பா வரும்.. ரொம்ப டாங்கிஸ்...

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

புரட்சி தளபதி - சிபி

புரட்சி இளையதளதி - வெட்டிக்காரு


:)//

புரட்சி கவுஞ்சர் சொன்னா சரி தான் :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

அய்யனார் தான் டாப்..

:)//

ஆமாம் புலி...
அவர்தான் இதுல இருக்குற எந்த புரட்சிகளுக்கும் புரியாதவர் :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

புரட்சிக்குற வார்த்தையை வச்சு இம்புட்டு புரட்சி பண்ணியதால் புரட்சியின் புரட்சியாக காட்சி அளிக்கிறாய்....//

எல்லாம் நம்ம அண்ணன் கப்பி சொல்லி கொடுத்தது ;)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

சந்தடி சாக்குல கப்பி அண்ணன் ஆக்கின பாரு நீ... அங்க தான்ய்யா நீ ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி இருக்கு....

புரட்சி வேங்கை என்ற பட்டம் கூட உனக்கு பொருந்தி வருது....

வேங்கை மாதிரி குறி வச்சு தாக்குறீயே, அதுனால தான்...//

புரட்சி புலி சொன்னா சரி தான்... வேங்கைனாலும் புலினாலும் ஒண்ணு தானே?

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

//
புரட்சி ஆராய்ச்சியாளர் - ஜொள்ளு பாண்டி

//

இதுக்கு புரட்சி வாசகன் நாந்தேன//

நாங்களும் தான்...
என்ன தான் CVR காதல் ஆராய்ச்சி பண்ணாலும் எங்க ஜொள்ளு பாண்டி மாதிரி வருமா? ;)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

புரட்சி சிறுமுயற்சியாளர் - முத்துலட்சுமி//

புலி,
முத்துலட்சுமிக்கு தான் யோசிச்சோம். புரட்சி புதினம் வைக்கலாம்னு நம்ம அண்ணன் கப்பி சொன்னாரு... ஆனா அது டூ மச்சா இருக்குனு விட்டுட்டேன் :-(

இது சூப்பரு...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

புரட்சி உப்புமாபதிவர் - டாக்டர் இராமநாதன்//

இதுவும் சூப்பர்...

இலவசக்கொத்தனார் said...

வொய் மி அலோன் இன் இங்லிபீஸ்? எதாவது மறைமுகமா சொல்றியாப்பா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதெல்லாம் ஒரு கெத்தா இல்லை.. வேற முயற்சி பண்ணுங்க ;)//

என்னாது கெத்தா இல்லையா?
ஏன்பா...கொத்து கொத்தா எல்லாப் புரட்சிப் பட்டமும் உனக்கே எப்படிப்பா கொடுக்க முடியும்?

முக்கியமா எங்க ராயலுக்கு புரட்சிப் பட்டம் ஏதும் கொடுக்காது டீலில் விட்ட புரட்சி வேங்கை வெட்டியை புரட்டி எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்!
= "புரட்சி இளவரசன் ராயல்" கொல வெறிப் புரட்சிப் படை!

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதெல்லாம் ஒரு கெத்தா இல்லை.. வேற முயற்சி பண்ணுங்க ;)//

என்னாது கெத்தா இல்லையா?
ஏன்பா...கொத்து கொத்தா எல்லாப் புரட்சிப் பட்டமும் உனக்கே எப்படிப்பா கொடுக்க முடியும்?

முக்கியமா எங்க ராயலுக்கு புரட்சிப் பட்டம் ஏதும் கொடுக்காது டீலில் விட்ட புரட்சி வேங்கை வெட்டியை புரட்டி எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்!
= "புரட்சி இளவரசன் ராயல்" கொல வெறிப் புரட்சிப் படை!//

புரட்சி கவுஞ்சர் ராயல்னு இருக்கே.. பார்க்கலையா?

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

ஆமாங் சார்,

உங்களுக்கு என்னா பேர் சார்ர்?

இப்படிக்கு \

புரட்சி ஸ்டார்//

வெட்டிப்பயல் ;)

வெட்டிப்பயல் said...

// முத்துலெட்சுமி said...

\\ILA(a)இளா said...
//புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்//
செம புரட்சியான பட்டம் இதுதான்.//

நான் இதை வழிமொழிகிறேன்..//

வழி மொழிந்த புரட்சி சிறுமுயற்சியாளர் முத்துலெட்சுமி அக்கா வாழ்க...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//புரட்சி கவுஞ்சர் - ராயல்//

ஒப்புக்க முடியாது! இன்னும் மீட்டருக்கு மேல ரெண்டு மூனு கொடுங்க!

புரட்சி இளவரசன்
புரட்சி சாட் மன்னன்
புரட்சிப் பாண்டியன்
புரட்சி டெவில்
........

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

வாழ்க .....புரட்சி செம்மல் வெட்டி ;-)))

\\புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்\\

சூப்பர் பட்டம் ;-))//

புரட்சி ரிப்பீட்டர்...
நன்றி ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

என்னது அண்ணனா?? அண்ணே வொய் திஸ் கொல வெறி?? :)))
//
சும்மா தான்பா...
ஏதாவது வித்யாசமா சொல்லனும் இல்லையா? ;)

// உங்களுக்கு காலைலயே சொன்னது தான் புரட்சி நாயகன் தான் :))//
புரட்சி பதிவர் சொன்னா சரி தான் ;)

வெட்டிப்பயல் said...

//CVR said...

///நான்: நல்லா இருக்கேன் அண்ணே.
நேத்து நீங்க கீத்து கொட்டாய்ல எழுதன விமர்சனம் பட்டைய கிளப்புச்சி.///

விளம்பரம் எல்லாம் நல்லாத்தான்யா பண்ணுறீரு!!//
நோட் பண்ணிட்டீங்களா புரட்சி போட்டொகிராஃபர் ;)

//
பதிவுலகத்துலையே ஒரு புரட்சிய பண்ணிருவீங்க போல!! :-D//
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை ;)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

gtalkல மட்டும்தான்னு நெனச்சேன். பதிவா வரை வந்துடுச்சா? ஆஹா...//

வாங்க புரட்சி தோழி...
இப்பவெல்லாம் பாதி பதிவு Gtalkல தான் உருவாகுது ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வொய் மி அலோன் இன் இங்லிபீஸ்? எதாவது மறைமுகமா சொல்றியாப்பா?//

கொத்ஸ்,
"போட்டொகிராஃபர், ரிப்பீட்டர், டைம் பாஸ், போலிங் ஆபிசர்" - இதெல்லாம் எப்ப தமிழ்ல சேர்த்துக்கிட்டாங்க???

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//புரட்சி கவுஞ்சர் - ராயல்//

ஒப்புக்க முடியாது! இன்னும் மீட்டருக்கு மேல ரெண்டு மூனு கொடுங்க!

புரட்சி இளவரசன்
புரட்சி சாட் மன்னன்
புரட்சிப் பாண்டியன்
புரட்சி டெவில்
........//

எங்க தல கைப்ஸ்க்கே ஒண்ணு தான்...

ஒன்றுக்கு மேல் வேணும்னா அக்கவுண்டுக்கு அமௌண்ட் வரனும் ;)

Anonymous said...

நல்லா கிளப்புரீங்க பீதியை.. விஜய் க்கு

ALIF AHAMED said...

தெலுங்குல புரட்சிக்கு என்ன பேரு பாலாஜி?

//


வெட்டிகாரருனு :)

Anonymous said...

புரட்சிக் காதல் மன்னன் - வெட்டி!

வாழ்க வால்க

இராம்/Raam said...

////புரட்சி கவுஞ்சர் - ராயல்//

ஒப்புக்க முடியாது! இன்னும் மீட்டருக்கு மேல ரெண்டு மூனு கொடுங்க!

புரட்சி இளவரசன்
புரட்சி சாட் மன்னன்
புரட்சிப் பாண்டியன்
புரட்சி டெவில்
........//


புரட்சி ஆன்மீக செம்மல்,


எம்மேலே பயங்கர கொலைவெறிலே இருக்கீங்க போலே??? :)))

Boston Bala said...

புரட்சி புயலே... நன்றி ;)

குமரன் (Kumaran) said...

//அடிக்கடி சமாதனம் செய்யறதால "புரட்சி புறா"னு தான் கொடுக்கலாம்னு பார்த்தேன்.//

அண்மையில போட்ட சண்டையெல்லாம் பாக்கலை போலிருக்கு. பாத்திருந்தா சண்டைக்கோழின்னு சொல்லியிருப்பீங்க. :-)

ஜி said...

புரட்சி வீரன்.... அட கெத்தாதான் இருக்கு.... அதுக்காக போருக்கெல்லாம் போவச் சொல்லி யாரும் சொல்ல மாட்டாங்களே??

G3 said...

//புரட்சி வீரன் - ஜி//

இதுல ஏதோ இடிக்குதே..

புரட்சிப் பூனை / புரட்சி பூனைப்படைத்தலைவர் - ஜி

இது எப்படி இருக்கு?

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
"போட்டொகிராஃபர், ரிப்பீட்டர், டைம் பாஸ், போலிங் ஆபிசர்" - இதெல்லாம் எப்ப தமிழ்ல சேர்த்துக்கிட்டாங்க???//

அதெல்லாம் அவங்கவங்க கேட்கணும், நான் என் வரையில் கேட்டேன். மத்தபடி நம்ம கம்பேரிசன் எல்லாம் தமிழ்ப் பட்டம் வாங்கினவங்களோடதான். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப யோசிக்க வச்சிட்டனா...பாருங்க ஒரு ட்ரேட் மார்க்கே இல்லை .. சிறுமுயற்சியே தான் எப்போதும் செய்துட்டு இருக்கேன்.. பெரியாளா எப்பத்தான் ஆகறது... கொடுத்த பட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. ஏதோ இப்படி கிடைச்சாத்தான உண்டு. :)))

கைப்புள்ள said...

புரட்சி ஆராய்ச்சியாளர் - வெட்டிகாரு
:)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

நல்லா கிளப்புரீங்க பீதியை.. விஜய் க்கு

11:38 AM//

யாருங்க நம்ம டாக்டர் விஜயா?

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...

தெலுங்குல புரட்சிக்கு என்ன பேரு பாலாஜி?

//


வெட்டிகாரருனு :)//

கலக்கறியேமா மின்னலு...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

புரட்சிக் காதல் மன்னன் - வெட்டி!

வாழ்க வால்க//

ஏன் இந்த கொல வெறி???

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

புரட்சி புயலே... நன்றி ;)//

ஆஹா.. புரட்சி புயல்னு ஏற்கனவே ஒரு காமெடியன் இருக்காரே...

ஏன் தலைவா இந்த கொல வெறி? நான் என்ன அவரளவுக்கா காமெடி பண்றேன்?

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//அடிக்கடி சமாதனம் செய்யறதால "புரட்சி புறா"னு தான் கொடுக்கலாம்னு பார்த்தேன்.//

அண்மையில போட்ட சண்டையெல்லாம் பாக்கலை போலிருக்கு. பாத்திருந்தா சண்டைக்கோழின்னு சொல்லியிருப்பீங்க. :-)//

பொதுவா எனக்கும் ஜி.ராக்கும் நீங்க தானே வந்து சமாதனம் பண்ணுவீங்க. அது தான் ;)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

புரட்சி வீரன்.... அட கெத்தாதான் இருக்கு.... அதுக்காக போருக்கெல்லாம் போவச் சொல்லி யாரும் சொல்ல மாட்டாங்களே??//

ஏன்யா சொன்னா நீ என்ன போகவா போற? ஏன் இந்த கேள்வி? பட்டம் கொடுத்தா அனுபவிப்பா... ஆராயாத...

வெட்டிப்பயல் said...

//G3 said...

//புரட்சி வீரன் - ஜி//

இதுல ஏதோ இடிக்குதே..

புரட்சிப் பூனை / புரட்சி பூனைப்படைத்தலைவர் - ஜி

இது எப்படி இருக்கு?//

பூனைப்படைத்தலைவர்னா ப்ளாக் கேட்னு பில்ட் அப் கொடுத்துட போறாரு ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
"போட்டொகிராஃபர், ரிப்பீட்டர், டைம் பாஸ், போலிங் ஆபிசர்" - இதெல்லாம் எப்ப தமிழ்ல சேர்த்துக்கிட்டாங்க???//

அதெல்லாம் அவங்கவங்க கேட்கணும், நான் என் வரையில் கேட்டேன். மத்தபடி நம்ம கம்பேரிசன் எல்லாம் தமிழ்ப் பட்டம் வாங்கினவங்களோடதான். :)//

கொத்ஸ்,
நல்லா சமாளிச்சிட்டீங்க ;)
சரி உங்களுக்கு புரட்சியா நீங்களே தமிழ்ல ஒரு பட்டம் சொல்லுங்க... கொடுத்துடுவோம் ;)

வெட்டிப்பயல் said...

// முத்துலெட்சுமி said...

ரொம்ப யோசிக்க வச்சிட்டனா...பாருங்க ஒரு ட்ரேட் மார்க்கே இல்லை .. சிறுமுயற்சியே தான் எப்போதும் செய்துட்டு இருக்கேன்.. பெரியாளா எப்பத்தான் ஆகறது... கொடுத்த பட்டத்தை ஏற்றுக்கொள்கிறேன்.. ஏதோ இப்படி கிடைச்சாத்தான உண்டு. :)))//

ட்ரேட்மார்கே இல்லாம இருக்கறது தான் நல்லது.. பல்துறைவித்தகர்னு பில்ட் அப் கொடுத்துக்கலாம் :-)

நீங்களாவது சிறுமுயற்சி செய்யறீங்க. நாங்க அதுக்கூட இல்லை :-(

Ayyanar Viswanath said...

எல்லாம் கலந்து கட்டி அடிச்சிருக்கிங்களே :(

நல்லாருங்க

குசும்பன் said...

"புரட்சிக்கே புரியாதவர் - அய்யனார்"

வெட்டி இதை நான் இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்,நான் அய்யனாரை ஒரு வருடத்துக்கு குத்தகை எடுத்து இருக்கிறேன், நாங்க அக்ரிமெண்ட் எல்லாம் போட்டு இருக்கிறோம்,நீங்க எப்படி ஒரே ஒரு வரியில் கலாய்கலாம்... இன்னும் கூட நாலைந்து வரி போட்டு கலாய்கவும்.

(அக்ரிமெண்ட் போட வேண்டும் என்றால் சொல்லுங்க போட்டுவிடலாம்)

கார்த்திக் பிரபு said...

thlaiava puratchi appnu podundana :)

innum ethanai nal than mapillai soluveenga

Unknown said...

அடப்பாவி மக்கா இப்போதான் பாக்கறேன் இத...

உன்ன புரட்சி புரட்சியாளன்னு தான் சொல்லனும் ;-)