தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, September 24, 2007

டாவின்சி கோடும் ராமர் பாலமும்

ராமரை கிண்டலடிக்கும் கலைஞர் "The Da vinci Code" படத்தை தடை செய்தது ஏன்?

இப்படி கேட்கும் பலருக்கும் என் பதில், "The Da vinci Code" திரைப்படம், ஒரு பொழுது போக்கு அம்சம். அதனால் யாருக்கும் எந்த வித ஆதாயமும் இல்லை (அந்த பட தயாரிப்பாளரை கணக்கில் கொள்ள வேண்டாம்). ஆனால் அதனால் ஒரு சிறு பொறி ஏற்பட்டிருந்தாலும் அது ஊர் முழுக்க பற்றியிருக்கும். ஒரு உயிர் அதனால் பலியானாலும் அது தேவையற்றது. ஆந்திராவில் ஏற்பட்டதை யாரும் மறக்க வேண்டாம். அதனால் அதை தடை செய்தது சரியே.

ஆனால் இன்று ராமர் பாலம்(?) என்று சொல்லப்படும் இடம் ஒரு பெரிய திட்டத்திற்கு தடையாக உள்ளது. அது தென் மாவட்டங்களில் பலருக்கு வாழ்க்கையை தரவுள்ளது. "வாழ்க்கை" என்று இங்கு நான் சொல்வதை வெறும் ஒரு வார்த்தையாக பார்ப்பவருக்கு அதன் அர்த்தம் புரியாது. அதனால் அதை சரி செய்ய வேண்டியது ஒரு மாநில முதல்வரின் கடமை. அதனால் அவர் அதை எதிர்கொள்வதை விட வேறு வழியில்லை. The Da vinci Code தடை செய்ததை போல் இதை தவிர்த்துவிட்டு செல்ல இயலாது. அதனால் இதை ஒப்பிடுவது நம் முட்டாள் தனம் அல்லது விதண்டா வாதம்.

இதனால் என் முந்தைய பதிவின் கேள்வி மறைந்துவிடவில்லை. இறை நம்பிக்கையாளர்களை எதிர்த்தோ அல்லது கிண்டல் செய்தோ அதை செய்வதைவிட அவர்களை அனுசரித்து ஏன் செய்ய கூடாது? அந்த மணல் திட்டுக்களில் ஒரு பகுதியை வைத்து ஒரு சிறு ராமர் கோவில் கட்டி தருகிறோம்னு சொல்லியிருக்கலாம். அல்லது சமாதானமாக வேறு ஏதாவது செய்யலாம். மறுபடியும் சொல்றேன் நாத்திக - ஆத்திக சண்டை ஆயிரமாயிரம் வருடங்களாக நடந்து கொண்டுதானிருக்கிறது. அதற்கு இந்த ஒரு விஷயத்தில் முடிவு வந்துவிடாது.

கலைஞர் வெறும் தி.மு.கவின் தலைவர் அல்ல. அவர் இன்று தமிழக முதல்வர். இதை தி.மு.க நண்பர்கள் நினைவில் வைத்து கொள்வது நல்லது. கட்சிக்கு வேண்டுமென்றால் கொள்கை மட்டுமே முக்கியமாக இருக்கலாம். ஆனால் ஒரு முதல்வருக்கு மக்கள் நலனே முக்கியம். அதற்காக கட்சியின் கொள்கையை சில இடங்களில் விட்டு கொடுப்பது தான் நல்லது.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" - அறிஞர் அண்ணா

10 comments:

உண்மை said...

இதை தான் "பிள்ளையயும் கிள்ளிட்டு தொட்டிலயும் ஆட்டுரது"னு சொல்லுவாங்க.

என்னமோ செய் ராசா.........

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

இதை தான் "பிள்ளையயும் கிள்ளிட்டு தொட்டிலயும் ஆட்டுரது"னு சொல்லுவாங்க.

என்னமோ செய் ராசா.........//

உண்மை,
என்ன சொல்ல???

என் கேள்வி ஒரு முதல்வர் இப்படி பேசலாமானு தான். அதுக்கு வந்த சில பின்னூட்டங்கள் கலைஞரை விமர்சித்து வந்தன. அதில் பெரும்பாலும் டாவின்சி கோட் பற்றி இருந்தது.

அதை பிரசுரிக்கவில்லை. ஆனால் பதில் சொல்ல வேண்டியது கட்டாயமெனப்பட்டதால் இந்த பதிவு.

SnackDragon said...

வெட்டி
நன்றி.

டா வின்சி கோட் திரைப்படத்துக்கும் தடைவிதித்தது, அதை கூட இந்து அடைப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகலாம் என்ற ஒரு காரணமே போதுமானது. இங்கே இராமர் பெயரைச் சொல்லி தமிழகத்துக்கான வளர்ச்சியை தடைசெய்ய , முட்டுகட்டிஅ போடும் முட்டாள்களிடத்தில் சொல்லிக்கொள்ளும்படி அறிவுப்பூர்வமான, அறிவியல்பூர்வமான ஒரு வாதம் கூட இல்லை.

அபி அப்பா said...

என்னப்பா வெட்டி தம்பி! அரசியல் பதிவாப்பா?எனக்கு அவ்வளவா புரியாதுப்பா இதல்லாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒன்றே குலம், ஒருவனே தேவன் - அறிஞர் அண்ணா//

ஒன்றே குலம், ஒருவனே தேவன் - திருமூலர்,
அவர் அடியொற்றி அறிஞர் அண்ணா!
:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதுக்கு வந்த சில பின்னூட்டங்கள் கலைஞரை விமர்சித்து வந்தன. அதில் பெரும்பாலும் டாவின்சி கோட் பற்றி இருந்தது//

பாலாஜி!
உங்க பதிவைப் புரிஞ்சிக்கற விதத்தில் தான் இருக்கு!
Davinci Code=சினிமா
சேது திட்டம்=நலத் திட்டம்

ஒரு சினிமாவாலேயே பிரச்சனை வரக்கூடாது என்று நினைக்கும் அதே உள்ளம்,
ஒரு பெரிய மக்கள் திட்டத்துக்குப் பிரச்சனை வரும் போது இன்னும் விழிப்பு தேவை!

Davinci Code=30 கோடி இருக்குமா?
சேது=இது வரைக்குமே 300 கோடி!
அப்படீன்னா கலைஞர் இன்னும் பத்து மடங்கு விழிப்பு காட்ட வேண்டும்!

மக்களுக்குப் பயன்படுமாறு திட்டத்தை முன் கொண்டு செல்வது ஒன்று தான் குறிக்கோளே தவிர, சிதற விடக் கூடாது!

சென்ற பதிவே விளக்கப் பதிவு தான்!
விளக்கத்துக்கு ஒரு விளக்கப் பதிவா? சரி நல்லபடியாப் புரிஞ்சிக்கிட்டா மகிழ்ச்சி தான்! :-)

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)

ஹிஹிஹி...நீங்களும் ஒருதடவை படிச்சுக்கங்க பாலாஜி....

G.Ragavan said...

பாலாஜி, டாவின்சி கோடு தடை செய்ததும் என்னைப் பொருத்த வரையில் தவறே.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

பாலாஜி, டாவின்சி கோடு தடை செய்ததும் என்னைப் பொருத்த வரையில் தவறே.//

ஜி.ரா,
ஆந்திராவில் நடந்தது நினைவில்லையா?

நம்ம ஊர்ல எப்படா பிரச்சனை வரும்னு காத்திருப்பாங்க. அதனால இந்த படம் தடை செய்யப்பட்டது சரியே...

நாகை சிவா said...

//கலைஞர் வெறும் தி.மு.கவின் தலைவர் அல்ல. அவர் இன்று தமிழக முதல்வர். இதை தி.மு.க நண்பர்கள் நினைவில் வைத்து கொள்வது நல்லது//

இது நம் முதல்வருக்கே புரியல.. மத்தவங்களுக்கு எங்க புரியது போகுது...

ஒரு வேளை நம் முதல்வர் புரிந்தும் புரியாது போல் இருக்கிறாரோ என்னவோ....