தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, September 20, 2007

இதுக்கு கூகுள் மேல கேஸ் போடலாமா?

ஏன்யா இந்த கூகுள் டாக்னு ஒண்ணு கண்டுபிடிச்சீங்க. சரி. அதுல தப்பு இல்லை. அதுல ஸ்டேடஸ் மெசேஜ் கொடுத்தீங்க. அதுவும் தப்பில்லை. அதுல எதுக்குயா கஸ்டம் மெசேஜ். நீங்க பாட்டுக்குனு கொடுத்தாலும் கொடுத்தீங்க நல்ல பேரு... "கஸ்டம்" மெசேஜ். அவனவன் வைக்கிற மெசேஜ் பார்த்து நமக்கு "கஷ்டம்" மெசேஜ் ஆகிடுது.

அய்யா கவுஜர்களா உங்க தொல்லை தாங்கம்மதான்யா ப்ளாக் பக்கம் கூட இப்பவெல்லாம் தலைய காட்றத குறைச்சிக்கிட்டோம். எப்படி நீங்க எல்லாம் ஜாலியா இருக்கலாம்னு இந்த கூகுள் டாக்ல கஸ்டம் மெசேஜ்ல உங்க கவுஜ தெறமைய காமிச்சி எல்லாத்துக்கும் கஷ்டப்படுத்தறீங்க. உங்க திறமையை இந்த ஒரு இடத்துலயாவது விட்டு கொடுக்க கூடாதா?

இதுல கவுஜய ஸ்டேடஸ் மெசேஜா போட்டுட்டு

Hi
How are you??? னு ஒரு கேள்வி வேற.

உங்க கவுஜையை படிச்சிட்டு எவனாவது நல்லா இருந்துடுவானானு உங்களுக்கு டவுட் இருக்கறது நியாயம் தான். அதுக்காக அத இப்படியா சோதனை பண்றது? உங்க கவுஜைக்கு கீழ Hi, How are youனு இருந்தா மனுசன் என்னாவான்? அதுக்கு முன்னாடி நல்லா இருந்தாலும் அதுக்கு அப்பறம் நல்லா இருக்க முடியுமா?

இதுல ஒரு கோஷ்ட்டி யாரும் கேக்காத பாட்டுல நடுவுல இருந்து நாலு லைனை சுட்டு கவுஜையா போட்டுக்கறீங்க.
ஏன்?
இப்படி ஒரு விளம்பரம் கண்டிப்பா தேவையா?

கவுஜர்களா,மக்கள் பாவம் இல்லையா? நம்ம நண்பர்கள் லிஸ்ட்ல இருக்கறதுக்காக என்ன பண்ணாலும் தாங்குவாங்கனு நினைக்கலாமா? ப்ளீஸ், உங்க திறமையெல்லாம் வலைப்பதிவோட கண்ட்ரோல் பண்ணிக்கோங்களேன். எங்க டைப் பண்ண சான்ஸ் கிடைச்சாலும் இப்படி புகுந்து விளையாடலாமா? இவ்வளவு சொல்லியும் நீங்க கேக்கலைனா வேற வழியே இல்லை... கூகுள் மேல கேஸ் போட்ற வேண்டியது தான்...

36 comments:

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, சூடான இடுகை பகுதியை எடுத்துட்டாங்க. இன்னும் எதுக்கு இப்படி? :))

ஆனா மேட்டர் சரியான மேட்டர்தாம்பா. ஒண்ணு கவுஜ. இந்த கவுஜ போடலைன்னா எடக்கு மொடக்கா ஒரு கேள்வி. இதையும் கூட ப்ளாக் பண்ண எதாவது டூல் இருக்கா சாமி? ;-))

ஜே கே | J K said...

//எங்க டைப் பண்ண சான்ஸ் கிடைச்சாலும் இப்படி புகுந்து விளையாடலாமா? //

என்ன பண்ண?...
நம்ம திறமைய வெளிகாட்ட ஒரு சான்ஸ், அம்புட்டுதேன்.

ஆனா இத வச்சு ஒரு போஸ்டே போட்டீங்களே உங்கள என்ன பண்ண?...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அய்யா கவுஜர்களா உங்க தொல்லை தாங்கம்மதான்யா ப்ளாக் பக்கம் கூட இப்பவெல்லாம் தலைய காட்றத குறைச்சிக்கிட்டோம்//

அப்பட்டமான பொய்!
வடிகட்டிய பொய்!
வெட்டி கட்டிய பொய்!
பதிவர்கள் மேல் வீண் பழி சுமத்தல்!!
தல தலைய காட்டாததற்கு இது தான் காரணமா? :-))
பால் மணம் மாறாப் பாலகன் எங்கள் ஆன் ஆர்பர் குழந்தைப் பையன் கூட இதை நம்ப மாட்டான்!

இதுக்கு கூகுள் மேல கேஸ் வேறு போடணுமா? அதை எப்படிப் போடறதுன்னு அதையும் கூகிளில் தானே தேடிப் பார்ப்பீங்க! :-))

வெட்டிப்பயல் said...

//
இலவசக்கொத்தனார் said...

வெட்டி, சூடான இடுகை பகுதியை எடுத்துட்டாங்க. இன்னும் எதுக்கு இப்படி? :))
//
என்ன பண்ண கொத்ஸ்? நம்மல இது மாதிரி கவுஜ போட்டு சூடாக்கிடறாங்களே :-(

//
ஆனா மேட்டர் சரியான மேட்டர்தாம்பா. ஒண்ணு கவுஜ. இந்த கவுஜ போடலைன்னா எடக்கு மொடக்கா ஒரு கேள்வி. இதையும் கூட ப்ளாக் பண்ண எதாவது டூல் இருக்கா சாமி? ;-))//

முதல்ல இருக்கறவங்க நிறுத்தினா ரெண்டாவது இருக்கறவங்க நிறுத்துவாங்க ;)

வெட்டிப்பயல் said...

//J K said...

//எங்க டைப் பண்ண சான்ஸ் கிடைச்சாலும் இப்படி புகுந்து விளையாடலாமா? //

என்ன பண்ண?...
நம்ம திறமைய வெளிகாட்ட ஒரு சான்ஸ், அம்புட்டுதேன்.
//
ஆஹா... ஒரு குருப்பா தான் திறியறாங்க போல...

// ஆனா இத வச்சு ஒரு போஸ்டே போட்டீங்களே உங்கள என்ன பண்ண?...//
நானே பாதிக்கப்பட்டவன்...
நேரடியாக பாதிக்கப்பட்டேன்...

கேஸ் போடலைனாலும் ஒரு பதிவாவது போடலாமேனு தான் ;)

ILA (a) இளா said...

நான் வெட்டி, அப்ப நீங்க?"ன்னு யாரோ பெரிய அறிவாளித்தனமான ஸ்டேடஸ் பார்த்தேன். யாரந்த அறிவாளி?

Anonymous said...

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன்

ILA (a) இளா said...

//கேஸ் போடலைனாலும் ஒரு பதிவாவது போடலாமேனு தான்//

ஏற்கனவே நானும், கப்பியும், ராயலும் போட்ட பதிவுதான். என்ன ராயல் பதிவு போட்டுக்கிட்டே நிலவர சேதியும்(status message'க்கு தமிழாக்கம் செய்த விவசாயி வாழ்க!) போடுவாரு. அப்புறம் அதையே பதிவாவும் போடுவாரு. அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்.

MyFriend said...

யாருப்பா அது வெட்டிக்கு போட்டியா கஸ்(ஷ்)டம் மேஸேஜ் போடுறது??? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்படி எல்லாம் பதிவு போடும் வெட்டி மட்டும் கவுஜ போடலையா என்ன ஸ்டேடஸ் மெசேஜ்ல? - ஒரு முறை க-வி-தை-ன்னு போட்டாரு!
இதுக்கு சாட்சி எங்க ஜிரா!

அப்பறம் இன்னொரு முறை Happy Birthday to You-ன்னு ஆங்கிலக் கவிதை எல்லாம் போட்டாரு!

தெலுங்குல கூட மீ பிலிஸ்தண்டி நா ஒஸ்துண்டி-ன்னு என்னென்னமோ கவுஜ மாதிரி போட்டுட்டு,....
கூகுள் மேல கேஸ் போடறது எல்லாம் இருக்கட்டும்!
இப்ப சேம் சைட் கோல் போடும் வெட்டி மேல என்ன போடலாம்?

சொல்லுங்க மக்களே சொல்லுங்க!

MyFriend said...

உங்களாலதான் இவரு ப்ளாக் பக்கமே வர்றதில்லையாம்.. ஃபீலிங்கு படுறார்ரு மனுஷன். :-P

MyFriend said...

சொந்தமா எழுதிய கவிதையை விளம்பர படுத்தினால் பரவால்ல. யாருப்பா அது ஏதோ தெரியாதா பாட்டுல இருந்து எல்லாம் வரிகளை G3 பண்ணி போடுறது???

உங்களையெல்லாம் திருத்துறதுக்கு ஒரு வெட்டிபயல் இல்ல... 100 வெட்டிபயல்கள் வந்தாலும் திருத்த முடியாதுல்ல... (இது விவேக் ஸ்டைலில் படிக்கவும்). :-P

MyFriend said...

என்ன கொடுமை வெட்டி இது? :-))))))))

SP.VR. SUBBIAH said...

///கூகுள் மேல கேஸ் போட்ற வேண்டியது தான்...///

வெட்டிகாரு, எந்துக்கு கோபப்படுத்துன்னாரு? ஜரா ஆகண்டி
நேனு சூஸ்குன்னானடி.வாள்ளு மீது நேனு ஆக்சன் சேஸ்தானண்டி
மீரு எப்புடனனிக்கு கூல் டவுன்கா உண்டாலே
அர்த்தமாயிந்தா?

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அய்யா கவுஜர்களா உங்க தொல்லை தாங்கம்மதான்யா ப்ளாக் பக்கம் கூட இப்பவெல்லாம் தலைய காட்றத குறைச்சிக்கிட்டோம்//

அப்பட்டமான பொய்!
வடிகட்டிய பொய்!
வெட்டி கட்டிய பொய்!
பதிவர்கள் மேல் வீண் பழி சுமத்தல்!!
தல தலைய காட்டாததற்கு இது தான் காரணமா? :-))
பால் மணம் மாறாப் பாலகன் எங்கள் ஆன் ஆர்பர் குழந்தைப் பையன் கூட இதை நம்ப மாட்டான்!
//

ஆன் ஆர்பர்ல இருக்கற பையன் தெரியும்.. அவனுக்கு குழந்தை இருக்குனு இப்ப தான் தெரியுது ;)

//
இதுக்கு கூகுள் மேல கேஸ் வேறு போடணுமா? அதை எப்படிப் போடறதுன்னு அதையும் கூகிளில் தானே தேடிப் பார்ப்பீங்க! :-))//
ஏதாவது மரம் வெட்டனும்னா அதுல இருந்தே தான் ஆப்பு தயாரிச்சி அடிப்பாங்க ;)

மெளலி (மதுரையம்பதி) said...

ஏன் எங்கள் தங்கம் ராயலாரை இப்படி திட்டுகிறீர்கள்?....

நாகை சிவா said...

//ஆனா மேட்டர் சரியான மேட்டர்தாம்பா. ஒண்ணு கவுஜ. இந்த கவுஜ போடலைன்னா எடக்கு மொடக்கா ஒரு கேள்வி. இதையும் கூட ப்ளாக் பண்ண எதாவது டூல் இருக்கா சாமி? ;-))//

முதல்ல இருக்கறவங்க நிறுத்தினா ரெண்டாவது இருக்கறவங்க நிறுத்துவாங்க ;)//

ஆமாம் அங்களை நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம்....

நாகை சிவா said...

//நான் வெட்டி, அப்ப நீங்க?"ன்னு யாரோ பெரிய அறிவாளித்தனமான ஸ்டேடஸ் பார்த்தேன். யாரந்த அறிவாளி?//

இளாண்ணன், அதுக்கு நீங்க வெட்டி என்கிற மானஸ்தனை தேடனும்... ஆனா அவன் கிடைக்க மாட்டான்....

நாகை சிவா said...

வெட்டி,

நீ ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கனு நல்லாவே தெரியுது.... உன்னை போல பாதிக்கப்பட்டவனில் நானும் ஒருவன் என்பதால் அதன் வலி எனக்கு புரியுது... இதுக்கு ஏதாச்சும் பண்ணியே ஆகனும்..

எனக்கு என்னவோ இது எல்லாம் நமக்கு பொதுவாக இருக்கும் எதிரிகளின் வேலை மாதிரி தான் தெரியுது..... கூட்டணி அமைக்க வேண்டிய காலம் வந்துடுச்சுனு நினைக்குறேன்....

வெற்றி நமதே.... புரட்சி தொடங்கட்டும்...

கார்த்திக் பிரபு said...

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com/

இணைப்பு கொடுத்ததற்கு நன்றி

இராம்/Raam said...

வெட்டி,

நீ வகைப்படுத்தல் பிரிவை பார்த்ததும் அப்புறமும் நாமே சிரிக்கமே இருக்கமுடியுமா???

So..... :))

CVR said...

///நான் வெட்டி, அப்ப நீங்க?"ன்னு யாரோ பெரிய அறிவாளித்தனமான ஸ்டேடஸ் பார்த்தேன். யாரந்த அறிவாளி?//

இளாண்ணன், அதுக்கு நீங்க வெட்டி என்கிற மானஸ்தனை தேடனும்... ஆனா அவன் கிடைக்க மாட்டான்....////

அது சரி!!!

Boston Bala said...

---அதுக்கு முன்னாடி நல்லா இருந்தாலும் அதுக்கு அப்பறம் நல்லா இருக்க முடியுமா?---

Hilarious :)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

நான் வெட்டி, அப்ப நீங்க?"ன்னு யாரோ பெரிய அறிவாளித்தனமான ஸ்டேடஸ் பார்த்தேன். யாரந்த அறிவாளி?//

அந்த அறிவாளி யாரா இருந்தாலும் அந்த ஸ்டேடஸ் சரி தானே... நான் வெட்டி.. நீங்க?னா, "I am free... How about you?"னு கேட்கிறார் அந்த நபர். சேட் செய்யறதுக்கு ஏத்த ஸ்டேடஸ் தானே அது ;)

வெட்டிப்பயல் said...

// ஸ்டேட்(ட)ஸ் கவுஜன் said...

அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன்//

யாருயா அந்த அவன்?

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

//கேஸ் போடலைனாலும் ஒரு பதிவாவது போடலாமேனு தான்//

ஏற்கனவே நானும், கப்பியும், ராயலும் போட்ட பதிவுதான். என்ன ராயல் பதிவு போட்டுக்கிட்டே நிலவர சேதியும்(status message'க்கு தமிழாக்கம் செய்த விவசாயி வாழ்க!) போடுவாரு. அப்புறம் அதையே பதிவாவும் போடுவாரு. அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்.//

நீங்க எல்லாம் ஸ்டேடஸ் மெசேஜ் எடுத்து போட்டீங்க. நான் அதால படற அவஸ்தையை போடறேன் :-(

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

யாருப்பா அது வெட்டிக்கு போட்டியா கஸ்(ஷ்)டம் மேஸேஜ் போடுறது??? :-)))//

உங்க மலேஷியால முகம் பாக்கற கண்ணாடி இல்லையா???

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இப்படி எல்லாம் பதிவு போடும் வெட்டி மட்டும் கவுஜ போடலையா என்ன ஸ்டேடஸ் மெசேஜ்ல? - ஒரு முறை க-வி-தை-ன்னு போட்டாரு!
இதுக்கு சாட்சி எங்க ஜிரா!
//
இது பொய்...
ஜி.ரா பொய் சாட்சி சொல்ல மாட்டாருனு நினைக்கிறேன் ;)

// அப்பறம் இன்னொரு முறை Happy Birthday to You-ன்னு ஆங்கிலக் கவிதை எல்லாம் போட்டாரு!
//
அது கவிதையாயா? அது வாழ்த்து.

// தெலுங்குல கூட மீ பிலிஸ்தண்டி நா ஒஸ்துண்டி-ன்னு என்னென்னமோ கவுஜ மாதிரி போட்டுட்டு,....
கூகுள் மேல கேஸ் போடறது எல்லாம் இருக்கட்டும்!
இப்ப சேம் சைட் கோல் போடும் வெட்டி மேல என்ன போடலாம்?

சொல்லுங்க மக்களே சொல்லுங்க!//
இது சுத்த பொய். மக்கள் நம்பமாட்டாங்க ;)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

சொந்தமா எழுதிய கவிதையை விளம்பர படுத்தினால் பரவால்ல. யாருப்பா அது ஏதோ தெரியாதா பாட்டுல இருந்து எல்லாம் வரிகளை G3 பண்ணி போடுறது???
//
ரெண்டு பேரு இதுலயே இருக்கு...

// உங்களையெல்லாம் திருத்துறதுக்கு ஒரு வெட்டிபயல் இல்ல... 100 வெட்டிபயல்கள் வந்தாலும் திருத்த முடியாதுல்ல... (இது விவேக் ஸ்டைலில் படிக்கவும்). :-P//
:-))

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

///கூகுள் மேல கேஸ் போட்ற வேண்டியது தான்...///

வெட்டிகாரு, எந்துக்கு கோபப்படுத்துன்னாரு? ஜரா ஆகண்டி
நேனு சூஸ்குன்னானடி.வாள்ளு மீது நேனு ஆக்சன் சேஸ்தானண்டி
மீரு எப்புடனனிக்கு கூல் டவுன்கா உண்டாலே
அர்த்தமாயிந்தா?//

ஐயா,
நேனு கூலுகாவே உண்டானு... காணி ரேப்பு இக்கவுஜர்காருஸ் பிங் ச்சேசி டிஸ்டர்ப் ச்சேசிந்தாரு...

வெட்டிப்பயல் said...

// மதுரையம்பதி said...

ஏன் எங்கள் தங்கம் ராயலாரை இப்படி திட்டுகிறீர்கள்?....//

அவர் எவ்வளவு பெரிய ஆளு.. அவரை எல்லாம் நாங்க ஓட்ட முடியுமா?

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

வெட்டி,

நீ ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கனு நல்லாவே தெரியுது.... உன்னை போல பாதிக்கப்பட்டவனில் நானும் ஒருவன் என்பதால் அதன் வலி எனக்கு புரியுது... இதுக்கு ஏதாச்சும் பண்ணியே ஆகனும்..

எனக்கு என்னவோ இது எல்லாம் நமக்கு பொதுவாக இருக்கும் எதிரிகளின் வேலை மாதிரி தான் தெரியுது..... கூட்டணி அமைக்க வேண்டிய காலம் வந்துடுச்சுனு நினைக்குறேன்....

வெற்றி நமதே.... புரட்சி தொடங்கட்டும்...//

வா புலி...
நம் கூட்டணிக்கு இன்னும் ஆள் கிடைக்கும்... இந்த கூட்டணி வெற்றி கூட்டணி ;)

வெட்டிப்பயல் said...

//கார்த்திக் பிரபு said...

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com/

இணைப்பு கொடுத்ததற்கு நன்றி//

கொடுக்கறேன்பா...

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...

வெட்டி,

நீ வகைப்படுத்தல் பிரிவை பார்த்ததும் அப்புறமும் நாமே சிரிக்கமே இருக்கமுடியுமா???

So..... :))//

உங்க கவுஜையை பார்த்து நாங்க அழுவறோம்... எங்க பதவு வகைப்படுத்தலை பார்த்து நீங்க சிரிங்க ;)

வெட்டிப்பயல் said...

//CVR said...

///நான் வெட்டி, அப்ப நீங்க?"ன்னு யாரோ பெரிய அறிவாளித்தனமான ஸ்டேடஸ் பார்த்தேன். யாரந்த அறிவாளி?//

இளாண்ணன், அதுக்கு நீங்க வெட்டி என்கிற மானஸ்தனை தேடனும்... ஆனா அவன் கிடைக்க மாட்டான்....////

அது சரி!!!//

என்ன சரி???

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

---அதுக்கு முன்னாடி நல்லா இருந்தாலும் அதுக்கு அப்பறம் நல்லா இருக்க முடியுமா?---

Hilarious :)//

அப்பா... ஸ்மைலில இருந்து ப்ரமோஷனாகியிருக்கோம் :-)