தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, August 10, 2007

Deja Vu

Deja Vu

இந்த பேர்ல ஒரு படம் கூட வந்துச்சு. ஆனா நான் சொல்ல போறது அந்த படத்தை பத்தி இல்லை.

சில சமயம் யார் கூடவாவது பேசும் போது இந்த மாதிரி ஏற்கனவே பேசின மாதிரி உங்களுக்கு மனசுக்கு தோன்றியிருக்கா? அதாவது இப்ப நடக்கற விஷயத்தை ஏற்கனவே எப்பவோ நடந்த மாதிரியோ, பார்த்த மாதிரியோ இருந்திருக்கா? இதே மாதிரி விஷயம் இல்லை. இதே விஷயம்? அப்படி தோனுச்சினா அது தான் Deja Vu

எனக்கு இது அடிக்கடி வரும். சிலரோட பேசிட்டு இருக்கும் போது திடீர்னு அவரோட இதே பேசினது போலவும், அதுக்கு அவர் சொல்ற பதில் சில சமயம் அவர் சொல்றதுக்கு முன்னாடியே கூட தெரிஞ்சி போகும். அவர் அதே பதில் சொன்னா ஒரு வித பயம் வந்துடும். அப்பறம் எதுவும் பேசமாட்டேன்.

அதே மாதிரி சீட்டு விளையாடும் போதும், செஸ் விளையாடும் போதும் தோனியிருக்கு. ஆனா இந்த மாதிரி தெரிஞ்சா அது கனவுல பாத்துட்ட மாதிரி இருக்கும். ஆனா சில சமயம் கனவு காணும் போது இது கனவு தானு தோனியிருக்கு. ஆனா அந்த கனவு எல்லாம் பலிச்ச மாதிரி தெரியல. இது உல்ட்டா கேஸ். நிகழும் போது இதை கனவுல பார்த்திருக்கனானு யோசிக்க வைக்கும். சில சமயம் இது முற்பிறவில நடந்துச்சானு கூட தோனும். ஆனா முற்பிறவில எங்க செஸ் விளையாடியிருப்பேனு நினைச்சிக்குவேன்.

இந்த மாதிரி உங்களுக்கு யாருக்காவது தோனியிருக்கா?

30 comments:

செல்வன் said...

பல தடவை நடந்திருக்கு பாலாஜி.இது தற்செயலா இல்லை ஏதும் உள்மன விளையாட்டான்னு இன்னும் புரிபடலை

ILA(a)இளா said...

இந்த மாதிரி நிறைய தோணியிருக்கு, இப்படி பதிவு கூட படிச்ச மாதிரி இருக்கு :)

ILA(a)இளா said...

இந்த மாதிரி நிறைய தோணியிருக்கு, இப்படி பதிவு கூட படிச்ச மாதிரி இருக்கு :)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...

பல தடவை நடந்திருக்கு பாலாஜி.இது தற்செயலா இல்லை ஏதும் உள்மன விளையாட்டான்னு இன்னும் புரிபடலை //

நல்ல வேளை... நான் மட்டும் தான் தனியானு நினைச்சி பயந்துட்டு இருந்தேன் :-)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

இந்த மாதிரி நிறைய தோணியிருக்கு, இப்படி பதிவு கூட படிச்ச மாதிரி இருக்கு :) //

விவாஜி சொன்னா சரிதான் :-)

குமரன் (Kumaran) said...

//நல்ல வேளை... நான் மட்டும் தான் தனியானு நினைச்சி பயந்துட்டு இருந்தேன் :-)
//

70% of the world population has reported they had this experience.

நான் குடுத்த விக்கிபீடியா சுட்டியில படிக்கலையா பாலாஜி?

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

//நல்ல வேளை... நான் மட்டும் தான் தனியானு நினைச்சி பயந்துட்டு இருந்தேன் :-)
//

70% of the world population has reported they had this experience.

நான் குடுத்த விக்கிபீடியா சுட்டியில படிக்கலையா பாலாஜி? //
அதை படிச்சேன்.. அதுல இதுக்கப்பறம் எல்லாமே மறந்து போச்சி :-))


A clinical correlation has been found between the experience of déjà vu and disorders such as schizophrenia and anxiety,[9] and the likelihood of the experience considerably increases with subjects having these conditions.

gl said...

Yes I am also got the same experienxe....

வவ்வால் said...

டே ஜா வு யாருங்க தேஜா ஸ்ரிக்கு தங்கச்சியா? :-)) (vu deja means athukku opposite aa?)

இந்த மன பிராந்தினு சொல்வாங்களே அது தானே இது , இதைப்பற்றி மதன் ,சுஜாத எல்லாம் விகடன்ல சில சமயங்களில் எழுதி இருக்காங்க.

எல்லாருக்குமே புதுசா ஒரு ஊருக்கு போனா அந்த ஊருக்கு ஏற்கனவே வந்தாப்போல இருக்குமாம் சில சமயம் அவங்க நினைச்சாப்போலவே சில இடங்களும் அமையுமாம் , காரணம் எல்லா ஊருலயும், தெரு முக்குல ஏதோ ஒரு சிலை, ஒரு பிள்ளையார் கோவில்னு ஒற்றுமைகள் அகதுமஸ்தாக இருக்கும்!

இலவசக்கொத்தனார் said...

//தோனியிருக்கா?//

என்னதான் உங்களை விடச் சின்னப் பையனா இருந்தாலும் இருக்கான்னு கேட்கக் கூடாது. இருக்காரான்னு கேட்கணும். ரொம்பத் தெரிஞ்ச நண்பரா இருந்தா இருக்கானான்னு கேட்கலாம்.

எழில் said...

முற்பிறவி ஞாபகமா இருக்கப்போவுது வெட்டிசார்!

எதுக்கும் இதையும் படிச்சி வைச்சுக்கங்க..

பெரும்பாலான முற்பிறவி சம்பவங்கள் உண்மையே - நிம்ஹான்ஸ் விஞ்ஞானி

SurveySan said...

check a good doctor, if it happens often :)

எனக்கும் தோனிருக்கு.ஆனா, well below the national average :) உங்களது பாத்தா, கொஞ்சம் பயமாதான் இருக்கு.

கேரளா மாந்திரீகர் சோமசேகரன் நாயரை அணுகவும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இப்படி பதிவு கூட படிச்ச மாதிரி இருக்கு :)//

இப்படிச் சொன்னதால யாரோ அடிச்ச மாதிரி கூட இருக்கு! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி...அருள்வாக்கு ஆரம்பிக்க ஏதாச்சும் திட்டமா? கவுண்டர் கூட சேர்ந்து கூட்டு முயற்சியா? :-)))

இப்படி ஆகும் போது, இதற்கு முன்பு எங்கே எப்போது பார்த்தோம் ன்னு யோசிச்சிருக்கீங்களா பாலாஜி? சில பேர் கனவும்பாங்க...இன்னும் சிலர் முற்பிறவி வாசனை-ன்னு அளக்கலாம்...
மருத்துவத்துல என்ன சொல்றாங்க-ன்னு விக்கிபசங்கள கேக்கலாம்!

மூளைக்குள் விரியும் அதிசயங்கள்? :-)))

CVR said...

இந்த டேஜா வூ ரொம்பவும் சகஜமான ஒரு விஷயம் தான். ஒரு விஷயம் நடக்கும் போது இது முன் எப்பொழுதோ நடந்தா மாதிரி ஒரு ஞாபகம் எனக்கும் சில சமயம் வரும்!!
ஆனால் நீங்க சொல்லுற விஷயங்கள் எல்லாம் ரொம்ப ஓவரு!!!

இந்த டேஜா வூ பத்தி மேட்ரிக்ஸ் படத்துல கூட சொல்லி இருப்பாங்க!!

இந்த பிரபஞ்சமானது திரும்ப திரும்ப உருவாகி உருவாகி அழிகிறது என்று கருத்து உண்டு அல்லவா!!அதன் படி இப்பொழுது நடக்கும் எதுவும் பல்லாயிரக்கணக்கான முறை நடந்திருக்கிறது என்று ஆகிறது!!
அப்படி நடந்த நிகழ்வுகளின் ஞாபகங்கள் இவை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்!!
Interesting phenomenon this!!!

சரி !!
சமீபத்தில் யாரையாவது பார்த்துட்டு முன் ஜென்மத்திலே கூட இவங்க கூட வாழ்ந்திருக்கோம்னு ஏதாவது தோனிச்சா?????
அப்படி இருந்தா அதுக்கு பேரு டேஜா வூ இல்லை!! அதுக்கு வேற பெயர் உண்டு!! :-D

பாலராஜன்கீதா said...

அதெல்லாம் சு(ம்)மா :-)

வல்லிசிம்ஹன் said...

DEja vu is something I strongly believe in.
Balaji,
when we go somewhere and remembering being there already sometimes,somewhere,
it is true and it is unexplainable.
I am glad you brought this into yr blog.
and pl excuse me for commenting in English.

Dubukku said...

அட எனக்கும் நிறைய நடந்திருக்குங்க. சில சமயம் அந்த நொடி வரைக்கும் ஹிண்ட் கிடைக்காது ஆனா அடுத்த நொடி இத நான் முன்னாடியே கனவிலோ இல்ல முன்னாடியே எக்ஸ்பீரியன்ஸ் பண்ணின மாதிரியோ இருக்கும். ஆனா எல்லாமே ஒரு இரண்டு விநாடி நேரம் தான் சினிமால காட்டுறமாதிரி நிறைய எல்லாம் பிரெடிக்ட் பண்ற மாதிரி எனக்கு இருந்ததில்லை.

வெட்டிப்பயல் said...

// gl said...

Yes I am also got the same experienxe.... //

Good to know this :-)
So I am not the only one...

நான் தனி ஆள் இல்லை :-)

வெட்டிப்பயல் said...

// வவ்வால் said...

டே ஜா வு யாருங்க தேஜா ஸ்ரிக்கு தங்கச்சியா? :-)) (vu deja means athukku opposite aa?)
//
அவுங்களுக்கு தங்கச்சியா இருந்தா நான் ஏன் அதை நினைச்சி கஷ்டப்பட்டு பதிவு போடறேன். அவுங்க போட்டோ போட்டு படம் காட்டிட மாட்டோம் ;)

//
இந்த மன பிராந்தினு சொல்வாங்களே அது தானே இது , இதைப்பற்றி மதன் ,சுஜாத எல்லாம் விகடன்ல சில சமயங்களில் எழுதி இருக்காங்க.
//
அதே அதே!!! ஆனா பிராந்தி உள்ளிருக்கும் போது வந்தா ஒத்துக்கலாம். மத்த சமயத்துல வந்தா தானே இந்த பயமே :-)

// எல்லாருக்குமே புதுசா ஒரு ஊருக்கு போனா அந்த ஊருக்கு ஏற்கனவே வந்தாப்போல இருக்குமாம் சில சமயம் அவங்க நினைச்சாப்போலவே சில இடங்களும் அமையுமாம் , காரணம் எல்லா ஊருலயும், தெரு முக்குல ஏதோ ஒரு சிலை, ஒரு பிள்ளையார் கோவில்னு ஒற்றுமைகள் அகதுமஸ்தாக இருக்கும்! //
ஆனா இதுக்கும் பேசும் போது நினைக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு இல்லை :-/

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//தோனியிருக்கா?//

என்னதான் உங்களை விடச் சின்னப் பையனா இருந்தாலும் இருக்கான்னு கேட்கக் கூடாது. இருக்காரான்னு கேட்கணும். ரொம்பத் தெரிஞ்ச நண்பரா இருந்தா இருக்கானான்னு கேட்கலாம். //

எழுதும் போதே நினைச்சேன். இப்படி யாராவது கேட்பாங்கனு. அது தோனி இருக்கானு இல்ல? தோன்றியிருக்கானு அர்த்தம் :)

வெட்டிப்பயல் said...

// எழில் said...

முற்பிறவி ஞாபகமா இருக்கப்போவுது வெட்டிசார்!
//
வெட்டிசார்னு சொல்லாதீங்க.. முற்பிறவி நியாபகமா இருந்தா இனிமே வெட்டியானந்தானு சொல்லனும் ;)

//
எதுக்கும் இதையும் படிச்சி வைச்சுக்கங்க..

பெரும்பாலான முற்பிறவி சம்பவங்கள் உண்மையே - நிம்ஹான்ஸ் விஞ்ஞானி//
படிக்கிறேன்...

கப்பி பய said...

நான் இந்த பதிவை ஏற்கனவே படிச்சிருக்கேனோ? :))))

Anonymous said...

ஒரு கட்டுரையிலிருந்து....
எதிர்காலம் கணித்தல்:

நம் மனம் என்பது ஒரு அணுவின் அலைவடிவ நிலையில் செயல்பட்டு அதன் கனவு மற்றும் உறக்க நிலை மனநிலைகள் ஒரு அணுவின் sub atomic level interactionகளாக உணரப்படுகிறது என எடுத்துக்கொண்டால், sub atomic particles travel at the speed of light, so, according to einstein's relativity theory in the sub atomic inter actions will be at the speed of light so thought /force always predicts the future. அதாவது நனவு நிலை மனதினை அடக்கி ஆழ் மனநிலையில் இருக்கும் போது அவர்களுக்கு எதிர்காலத்தில் நடப்பதைக் கூற முடியும்.

உங்களின் கனவுகள் எல்லாம் எதிர்காலத்தின் எண்ணங்கள்.


மேலும் படிக்க
http://www.maraththadi.com/article.asp?id=912

வடுவூர் குமார் said...

பல தடவை நேர்ந்திருக்கு.
அப்பாடி! நான் மட்டும் தனியாக இல்லை.
அடுத்த பதிவு 200 க்கு வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு தடவை அல்ல பலதடவை!! இதை ஆழ்மனப் பதிவுகள் எனப் படித்தேன். ஆனாலும் இவையேல்லாம் இலகுவில் புரிந்து விடுவதில்லை. உங்களளவுக்கு யோசிப்பதும் இல்லை.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒரு தடவை அல்ல பலதடவை!! இதை ஆழ்மனப் பதிவுகள் எனப் படித்தேன். ஆனாலும் இவையேல்லாம் இலகுவில் புரிந்து விடுவதில்லை. உங்களளவுக்கு யோசிப்பதும் இல்லை.

Tamizhini said...

a gud article...even i have experienced this!!

கைப்புள்ள said...

I too Dejavu yaa...You too ma
:)

யோசிப்பவர் said...

எனக்கும் பல த்டவைகள். சமீபத்தில் சில மெய்ல் கான்வர்சேஷன்கள் கூட இதற்கு முன் செய்தது போல் இருந்தது. இதற்கான திருப்தியளிக்கும் விடை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை