தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, July 23, 2007

ஊர் கூடி தேர் இழுக்கலாம்..வாங்க!!!

இந்தியா சென்றிருந்த போது ஒரு வழியாக வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடிந்தது. அந்த சந்திப்ப பத்தி பின்னாடி விரிவா எழுதறேன். அந்த சந்திப்புல எனக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டது. அதை பத்தி நம்ம முத்து தமிழினி இங்க சொல்லிருக்காரு.

அதுக்கான வேலையை ஒரு வழியா ஆரம்பிச்சாச்சி. ஆனா அது என் தனி ஒருத்தனால செய்ய முடியாது. எனக்கு உங்க எல்லார் உதவியும் வேண்டும். என்னுடைய திட்டத்தை முதல்ல சொல்லிடறேன். அப்பறம் உங்க உதவி என்னனு சொல்றேன். என்னுடைய மெயில்ல இருக்கறது இது தான்... ஒரு உதாரணம்...

Hi Friends, This is for the people who know to read Tamil. We are conducting a workshop in Chennai to teach people "How to read/write Tamil in Internet". For more information, please visit http://tamilbloggers.org/ Also you can visit our help page "http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html" Some samples for you to enjoy...

அன்பு குரங்கு ராதா, ... உன் நினைவுகள் எனக்கு எப்பவுமே உண்டு ராதா! நாம் 8ம் வகுப்பு படிக்கும் போது ஸ்கூல் பாய்ஸ் டாய்லெட்டில் "சாந்தி ஐ லவ் யூ"ன்னு நான் எழுதியபோது என்னை நீ கையும் சாக்பீசாகவும் பிடித்து நருக்குன்னு ஒரு கேள்வி கேட்டு என் அறிவு கண்ணை திறந்தது மறந்து போகுமா?(நாதாறி, பாய்ஸ் டாய்லெட்டுல எழுதினா சாந்தி வந்து படிப்பாளா?), பின் உன் அறிவுரை படி நான் மிகுந்த சிரமத்துக்கு பின் ஒரு ஞாயிறு சென்று கேர்ல்ஸ் டாய்லெட்டில் எழுத முற்படும் போது அங்கு ஏற்கனவே "சாந்தி ஐ லவ் யூ - இப்படிக்கு ராதாகிஸ்ணா"ன்னு எழுதி இருந்ததை பார்த்து கூட இருந்தே குழி பறிச்சுட்டயே ராதான்னுகொஞ்சம் கூட உன் மேல் கோபம் வச்சிக்காம அந்த ராதாகிஸ்ணாவை மாத்திரம் அழிச்சுட்டு என் பேரை எழுதினேனே அப்படிப்பட்ட நட்பல்லவா நம் நட்பு. ஆனால் உனக்கு இப்போ எனக்கு ஒரு லெட்டர் எழுத வலிக்குது. ஹூம். . அதே எட்டாம் கிளாஸில் உன்னை தினமும் பென்ச் மேல நிக்க வச்ச சரித்திர சாரை மறக்க முடியுமா. நீயும் கொஞ்சம் கூட சொரனையே இல்லாம ஏதோ அவர் பிரமோஷன் குடுத்த மாதிரி ராஜராஜ சோழன் பட போஸ்டர்ல சிவாஜி குடுக்கும் போஸ் மாதிரி நின்னு சந்தோஷபட்டியே அப்போ கூட நான் தான் அது அசிங்கம்டான்னு உனக்கு புரிய வச்சேன். பின்ன அவரை பழி வாங்க கூட ஐடியா குடுத்தனே அதை மறந்து போயிட்டியா? அந்த ஐடியா என்னனா? இங்கே சென்று படிக்கவும் http://abiappa.blogspot.com/2007/05/blog-post_28.html வலையில் தமிழில் எழுத, படிக்க ஆசைப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கான உதவி பக்கம்... http://tamilblogging.blogspot.com/2006/12/how-to-readwrite-in-tamil.html இந்த மின்னஞ்சலை தங்களுக்கு தெரிந்த தமிழ் பேசும் நண்பர்களுக்கு அனுப்பி வலையில் தமிழை பரப்பலாம் வாருங்கள். Please forward this message to your friends... இதுல தமிழ்ல இருக்கறது சிலரால் படிக்க முடியாமல் போகலாம். அதனால் அதை PDF அல்லது JPGயாகவும் இணைத்து அனுப்ப திட்டம். இதற்கு எனக்கு பெரிதும் உதவிய CVR, KRS, Vicky மூவருக்கும் நன்றி...
எனக்கு இருக்கற பிரச்சனை என்னனா நான் என் லிஸ்ட்ல இருக்கறவங்களுக்கே தினம் இந்த மாதிரி அனுப்பினால் அடுத்து என்னிடமிருந்து வரும் மெயில் நேராக Trashக்கு போவது உறுதியாகிவிடும். மேலும் நான் படிக்கும் வலைப்பதிவுகள் மிகவும் குறைவு. அதுவுமில்லாமல் ரசனை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதனால இதுல யார் யாரெல்லாம் எனக்கு உதவ முடியும்னு சொன்னா, ரொம்ப நல்லாயிருக்கும்.

தேவையான உதவிகள்:
1. நல்ல பதிவுகள். அதை நீங்களே இந்த ஃபார்மேட்டிலோ அல்லது உங்களுக்கு பிடித்த மாதிரியோ மாற்றி உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

2. உங்கள் பெயரையும், மெயில் ஐடியும் எனக்கு தந்தால் நான் தயாரிப்பதை உங்களுக்கு அனுப்ப இயலும். அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம். (உங்க மெயில் ஐடியை வெளியே சொல்லமாட்டேன். BCCல போட்டு அனுப்பறேன். அதனால பயம் வேண்டாம்) என்னுடைய பட்டியலில் இருக்கும் பதிவுகள்

1. கடிதம் - http://abiappa.blogspot.com/2007/05/blog-post_28.html

2. சினிமா - http://tvpravi.blogspot.com/2007/01/blog-post_19.html

3. நகைச்சுவை - கவுண்டரும் கடையேழு வள்ளல்களும், http://araiblade.blogspot.com/2006/11/blog-post_30.html

4. கவிதை - அருட்பெருங்கோ கவிதை, ஐய்யனாரின் கொலைவெறி கவிதை

5. அரசியல் - இது வேற யாராவது எடுத்துக்கிட்டா பரவாயில்லை :-)

6. அறிவியல் - வானுக்குள் விரியும் அதிசயங்கள் குட்டி குழந்தைகளை ஃப்ளாஷ் போட்டு புகைப்படம் எடுத்தால் குழந்தையின் கண்பார்வை பாதிக்கப்படுமா? http://wikipasanga.blogspot.com/2007/04/blog-post_23.html

7. இலக்கியம் - KRS, Kumaran, Gi.Ra பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகளில் ஒன்று.

8. போட்டோகிராஃபி - http://photography-in-tamil.blogspot.com/2007/07/blog-post_11.html

9. காதல் கதை - கொல்ட்டி, மனதை தொடும் இளவஞ்சியின் கதைகளில் ஒன்று (இளவஞ்சி, உங்க கதை எல்லாமே PDFல கிடைச்சா கூட நல்லா தான் இருக்கும்)

10. சினிமா லொள்ளு டைலாக்ஸ்

11. இசை - http://isaiinbam.blogspot.com/2007/05/1.html 12. தேடு ஜாப்ஸ் இதுக்கு மேல நீங்க உங்களுக்கு பிடிச்சதை PDF ஃபார்மெட்டில் மாற்றி நீங்களே அனுப்பலாம். ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளை தயார் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

ஊர் கூடி தேரிழுக்கலாம் வாங்க!!!

18 comments:

அபி அப்பா said...

நல்ல முயற்சி பாலாஜி! ஹய் என் பதிவுமா? தேங்ஸ்!

நாமக்கல் சிபி said...

பேய்க்கதை - http://pithatralgal.blogspot.com/2006/01/1.html

வெட்டிப்பயல் said...

I am not publishing the comments with mail ids

வெட்டிப்பயல் said...

அடப்பாவமே!!!

இது வரைக்கும் ஒருத்தர் தான் "எனக்கு அனுப்புங்க நான் உதவி செய்யறேனு" சொல்லியிருக்காங்க.

உங்களை எல்லாம் நம்பிதாங்க பொறுப்பேத்துருக்கேன்.

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க.. சாமீங்களா...

நாமக்கல் சிபி said...

நாங்க சொன்னாத்தான் அனுப்புவீங்க!

உரிமையா அனுப்பீட்டு சொல்லுங்கைய்யா!

namakkalshibi@gmail.com

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அமுக பதிவுகளை நீங்கள் ஒரு வாய் கூடச் சொல்லவே இல்லையே பாலாஜீ! ஏன் இந்த ஓரவஞ்சனை? :-)

//கொஞ்சம் பார்த்து பண்ணுங்க.. சாமீங்களா...
//
அடியேன் மின்னஞ்சல் ஆல்ரெடி உங்க கையில்!

சந்தோஷ் said...

வெட்டி என்னுடைய மின்னஞ்சல் ஏற்கனவே உன்னிடம் இருக்கு ..

G.Ragavan said...

தேரு இழுக்கலாம். தேர்த் திருவிழான்னா அது ஊர்த்திருவிழா. எல்லாரும் முயற்சி செய்வோம்.

இசைப்பதிவுகள்ள இசையரசி பதிவுகளையும் சேத்துக்கோங்கய்யா. மறந்துராதீக.

இளவஞ்சி said...

வெட்டிப்பயல்,

என் பதிவுகளை பொறுத்தவரையில், சட்டென கவனத்தை ஈர்த்து மக்களை வரவைக்கறதுன்னா சற்று ஜனரஞ்சகமான பதிவுகளா இருந்தா நல்லதுங்கறது என் எண்ணம்! அதுக்காக சும்மா ஃபார்வேர்டு மெயிலு ரேஞ்சுலயும் இருக்கப்படாது!

அந்தவகையில் என்னோட க.க தொடர் பொருந்திவரும்னு நினைக்கறேன்! PDF ஆ மாத்தி அனுப்பறேன்!

என் மெயில் ஐடி: ilavanji@gmail.com. வெளியிடுங்க... ஒன்னும் பிரச்சனையில்லை!

நன்றி!

வெட்டிப்பயல் said...

இளவஞ்சி,
எனக்கு உங்களோட இந்த ரெண்டு கதைகள் ரொம்ப பிடிச்சிருந்துச்சி...

1. மனசுக்கு நேர்மையாய்...

2. எனக்கு வராத காதல் கடிதம்

நான் படிச்சி நிறைய பேருக்கு இந்த கதையை சொல்லியிருக்கேன். எல்லாருக்குமே படிச்சி ரொம்ப பிடிச்சிருந்தது. இன்னும் இந்த கதைகளை நினைச்சா ஏதோ செய்கிறது...

அதான் உங்க கதைகளை போட்டிருந்தேன். இது படிச்சா கண்டிப்பா நிறைய பேர் வலைப்பூ படிக்க ஆரம்பிப்பாங்கனு எனக்கு ஒரு எண்ணம்...

வெட்டிப்பயல் said...

//Collapse comments

அபி அப்பா said...

நல்ல முயற்சி பாலாஜி! ஹய் என் பதிவுமா? தேங்ஸ்! //

தொல்ஸ் அண்ணா,
ஆரம்பமே உங்க பதிவுல இருந்து தான் :-)

நான் பின்னூட்டம் போடலைனாலும் அந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி...

வெட்டிப்பயல் said...

//நாமக்கல் சிபி said...

பேய்க்கதை - http://pithatralgal.blogspot.com/2006/01/1.html //

லிஸ்ட்ல சேர்த்தாச்சி...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அமுக பதிவுகளை நீங்கள் ஒரு வாய் கூடச் சொல்லவே இல்லையே பாலாஜீ! ஏன் இந்த ஓரவஞ்சனை? :-)

//கொஞ்சம் பார்த்து பண்ணுங்க.. சாமீங்களா...
//
அடியேன் மின்னஞ்சல் ஆல்ரெடி உங்க கையில்! //

செந்தழல் ரவி அண்ணா போஸ்ட் பின்னூட்டத்தோட தான் சுத்தப்போகுது. அதுல அமுக அடிச்ச கும்மி தான் ஹைலைட்டே!!!

வெட்டிப்பயல் said...

//சந்தோஷ் said...

வெட்டி என்னுடைய மின்னஞ்சல் ஏற்கனவே உன்னிடம் இருக்கு .. //

தல,
இன்னைக்கு உங்களுக்கு வரும் ;)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

தேரு இழுக்கலாம். தேர்த் திருவிழான்னா அது ஊர்த்திருவிழா. எல்லாரும் முயற்சி செய்வோம்.

இசைப்பதிவுகள்ள இசையரசி பதிவுகளையும் சேத்துக்கோங்கய்யா. மறந்துராதீக. //

உங்களுக்கு நேத்தே நிறைய அனுப்பிட்டேன். அதை உங்க நண்பர்களுக்கு அனுப்பவும்.

இசையரசி பேட்டி வந்தவுடனே அனுப்பிடலாம் ;)

சதங்கா (Sathanga) said...

வெட்டிப்பயல்,

இந்தக் கதை (தற்காலப் புலம்பெயர் வாழ்வு வரிசையில் ஒன்றாய்) இப்ப தான் publish பண்ணியிருக்கேன். உங்க list-ல சேர்க்கற அளவுக்கு இருந்தா சேர்த்துக்குங்க.

http://vazhakkampol.blogspot.com/2007/07/blog-post_23.html

நல்லாயில்லை என்றாலும் உங்க கருத்த சொல்லுங்க :)

Anonymous said...

நானும் ரெடி என்னோட மெயில் ஜடி

byogananthan@yahoo.co.in

இளவஞ்சி said...

பாலாஜி,

மேற்சொன்னபடி மூன்று PDF கோப்புகளை இங்கே இணைத்துள்ளேன். தனிமெயிலும் அனுப்பியுள்ளேன்.

நன்றி.

1. மனசுக்கு நேர்மையாய்

2. எனக்கு வராத காதல் கடிதம்

3. கல்யாணமாம் கல்யாணம்