தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, July 29, 2007

இது உண்மையா???

கல்யாணத்துக்கு முன்னாடி ஒல்லியா ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்தாரு, நான் சமைச்சத சாப்பிட்டு தான் இப்ப உசிலமணி மாதிரி இருக்காரு. இந்த மாதிரி நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அதே மாதிரி போட்டோலயும் பார்த்தா வித்தியாசம் தெரியும். இது எப்படி சாத்தியம்னு நான் தீவிரமா சிந்திக்கும் போது ஆன்லைன்ல நம்ம வலையுலக நண்பர் ஒருத்தர் வந்தாரு.

நானும் இத பத்தி அவர்கிட்டே கேட்டேன். அந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையாடல் இதோ

வெட்டி: அண்ணே! காலை வணக்கம்

வ.ந: வாயா வெட்டி. எப்படி இருக்க?

வெட்டி: நல்லா இருக்கேன்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

வ.ந: நானும் நல்லா இருக்கேன்பா. அப்பறம் என்ன விசேஷம்.

வெட்டி: விசேஷமெல்லாம் ஒண்ணுமில்லைனா. ஒரு கேள்வி மனசுல ரொம்ப நாளா இருக்கு. அதுக்கான பதில் தான் தெரியல

வ.ந: என்ன கேள்விப்பா. சொல்லு நான் தெரிஞ்சா சொல்றேன்.

வெட்டி: அது என்னனா கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம பசங்க எல்லாம் கரெக்டா இருக்காங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் குண்டாயிடறாங்க. அது எப்படிங்கண்ணா?

வ.ந: இந்த கேள்விக்கு கூட பதில் தெரியாதா உனக்கு? கல்யாணமான யாரை கேட்டாலும் நச்சுனு சொல்லுவாங்களே

வெட்டி: அதாண்ணே உங்களை கேக்கறேன். எப்படியும் கல்யாணமான புதுசுல பொண்ணுங்களுக்கு சமையலும் தெரியாது. பசங்க அதுக்கு முன்னாடி அம்மா கைல நல்ல சாப்பாடு தான் சாப்பிடறாங்க. அப்பறம் எப்படி இந்த மாற்றம்?

வ.ந: இங்கப்பாரு தம்பி. கல்யாணமான புதுசுல பொண்டாட்டி சமைச்சு கொடுக்கறது கேவலமாத்தான் இருக்கும். ஆனா ஆண்களுக்கு மத்தவங்க மனசு புண்படும்படி பேசி பழக்கமில்லாததால. அதை நல்லா இருக்குனு சாப்பிடுவாங்க. ஆனா சாப்பிட்ட திருப்தியே கிடைக்காது. அதனால மறுபடி ஹோட்டல்ல போய் ஒரு நல்ல சாப்பாடும் சாப்பிட வேண்டிய நிலைமை வந்துடும். ஒரு நாலைக்கு 5,6 வேளை சாப்பிட்டா அப்பறம் எப்படி இருக்கும். நீயே சொல்லு.

வெட்டி: ஓ!!! இது தான் காரணமா?

வ.ந: ஆமாம்பா ஆமாம். அதே மாதிரி சாப்பாடுல புது ஐட்டமெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறாங்கனு தெரியுமா?

வெட்டி: தெரியாதே.

வ.ந: வீட்ல அம்மா சமையல் செய்யும் போது எப்பவாது அந்த பக்கம் எட்டி பார்த்த நியாபகத்துல ஏதாவது செய்ய ஆரம்பிப்பாங்க. அப்பறம் ஏதாவது ஒரு ஐட்டம் வரும். புதுசா பேர் வெச்சி எங்க ஊர் ஸ்பெஷல் இதுனு அப்பாவி புருஷனுக்கு கொடுத்துடுவாங்க. அது நல்லா இருந்தா அடுத்து அந்த ஐட்டத்த அக்கம், பக்கத்து வீட்டுக்கு சொல்லி கொடுத்து ஃபேமஸ் ஆக்கிடுவாங்க. அப்படிதான் இட்லில இருந்து தோசை வந்தது. தோசைல இருந்து சப்பாத்தி, பூரினு பல ஐட்டங்கள் வந்தது.

வெட்டி: ஆஹா...

வ.ந: ஆமாம்பா... எலிக்கு முன்னாடியே பரிசோதனை பொருள்னு (டெஸ்டிங்கு) இந்த உலகத்துல ஒண்ணு இருந்துச்சினா அது இந்த அப்பாவி புருஷனுங்க தான். பரிசோதனைக்கு எலிய பயன்படுத்தலாம்னு மனஷனுக்கு தெரிஞ்சதே இப்படிதான்.

வெட்டி: தெய்வமே!!! இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சோக கதை இருக்கா?

வ.ந: ஆமாம்பா ஆமாம்...இன்னும் நிறைய இருக்கு. அப்பாலிகா சொல்றேன்

வெட்டி: என் சந்தேகத்தை தீர்த்து வெச்சதுக்கு நன்றி தெய்வமே...

வ.ந: நன்றி எல்லாம் இருக்கட்டும். என் பேர போட்டு கொடுத்துடாத! என் வீட்ல உன் ப்ளாக் படிப்பாங்க. பை...

வெட்டி: நிச்சயமா... பிறகு பார்க்கலாம்.. பை

நீங்களும் உங்க கருத்தை தைரியமா சொல்லலாம் ;)

44 comments:

கோவி.கண்ணன் said...

//எலிக்கு முன்னாடியே பரிசோதனை பொருள்னு (டெஸ்டிங்கு) இந்த உலகத்துல ஒண்ணு இருந்துச்சினா அது இந்த அப்பாவி புருஷனுங்க தான். பரிசோதனைக்கு எலிய பயன்படுத்தலாம்னு மனஷனுக்கு தெரிஞ்சதே இப்படிதான்.
//

பாலாஜி சூப்பர்.

எனக்கு திருமணத்திற்கு பின்புதான் எடை குறைந்தது.
:)

துளசி கோபால் said...

// இது எப்படி சாத்தியம்னு நான் தீவிரமா சிந்திக்கும் போது //

ஏன்? இப்போ எதுக்கு இந்தத் 'தீ' விரம்?

தன்னாலெ தெரிஞ்சுக்கப்போற ஒரு 'விஷ' (ய)த்துக்கு இப்படி
மூளையை யூஸ் பண்ணப்பிடாது...........ஆமாம்:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதனால மறுபடி ஹோட்டல்ல போய் ஒரு நல்ல சாப்பாடும் சாப்பிட வேண்டிய நிலைமை வந்துடும். ஒரு நாலைக்கு 5,6 வேளை சாப்பிட்டா அப்பறம் எப்படி இருக்கும். நீயே சொல்லு.//

எந்த தைரியத்துல இப்படி ஒரு பதிவ போட்டீங்க, பாலாஜி?
சரி என்னமோ போங்க! காற்றுள்ள போதே தான் தூற்றிக் கொள்ள முடியும்-னு முடிவு செஞ்சிட்டீங்க போல இருக்கு! :-))))

//பசங்க அதுக்கு முன்னாடி அம்மா கைல நல்ல சாப்பாடு தான் சாப்பிடறாங்க//

ஓட்டல்-ல எக்ஸ்ட்ராவா சாப்பிட்டு குண்டாகறாங்க சரி!
ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் ஒல்லியா இருக்காங்க?

அம்மா கையில தான சாப்பிடறாங்க. அப்ப மட்டும் ஏன் ஒல்லியா இருக்காங்க-ன்னு கேக்கச் சொன்னாங்க! ஒடனே கேட்டுப்புட்டேன் பாலாஜி! :-)))

ஜொள்ளுப்பாண்டி said...

//கல்யாணமான புதுசுல பொண்டாட்டி சமைச்சு கொடுக்கறது கேவலமாத்தான் இருக்கும். ஆனா ஆண்களுக்கு மத்தவங்க மனசு புண்படும்படி பேசி பழக்கமில்லாததால. அதை நல்லா இருக்குனு சாப்பிடுவாங்க//

ஆஹா வெட்டி ஒரு ஆம்பிளையோட மனசு இன்னொரு ஆம்பிளைக்குதானே தெரியும் ??:)))

ILA(a)இளா said...

நான் ஒன்னியும் சொல்ல மாட்டேன். நாளைக்கு சோறு கிடைக்க வேணாமா?

மின்னுது மின்னல் said...

இது வடைய வைச்சி எலி புடிக்கிற கதைக்கும் பொறுந்தும்...


:)

Anonymous said...

ஆகா..!! இதுதானா வெட்டிப்பயலின் குறும்புன்றது...!! ரொம்பத்தான்.. ம்க்ஹும்ம்..!!

CVR said...

//துளசி கோபால் said...
ஏன்? இப்போ எதுக்கு இந்தத் 'தீ' விரம்?//

அற்புதமான கேள்வி!! இதற்கு என் படித்த நண்பர் பதில் கூறியே ஆக வேண்டும்!!!!
அவர் பதில் கூறாவிட்டாலும் அவ்ர் ஏன் இப்படி சிந்திக்கிறார் என்பதை எங்களால் மிகச்சரியாக ஊகிக்க முடிகிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!!! :-D

CVR said...

இந்த சமயத்தில் எனக்கு என்னமோ "தன் தவளை தன் வாயால் கெடும்" என்ற தமிழர் மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது!! :-)))

CVR said...

என் பின்னூட்டங்களை வெளியிடாமல் இருப்பதை எதிர்த்து கால வரையற்ற உண்ணாவிரதம் இருப்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!!!!!

Anonymous said...

//அதாண்ணே உங்களை கேக்கறேன். எப்படியும் கல்யாணமான புதுசுல பொண்ணுங்களுக்கு சமையலும் தெரியாது. பசங்க அதுக்கு முன்னாடி அம்மா கைல நல்ல சாப்பாடு தான் சாப்பிடறாங்க. அப்பறம் எப்படி இந்த மாற்றம்?
//

என்ன அண்ணிக்குச் சமையல் தெரியாதா?தெரியுமா?தெரியாவிட்டால் என்ன வெட்டி அண்ணா இருக்க பயம் ஏன்?

Boochandi said...

உள்ளூரில் இருந்தாலாவது ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய்விடலாம்...இங்கே அமேரிக்காவில் தினமும் இந்தியன் உணவகத்துக்கு போவது கட்டுப்படியாகுமா?? அதற்கு, வீட்டில் சோதனை எலியாக இருப்பது எவ்வளவோ மேல்...:-)

சிநேகிதன்.. said...

\\ஆண்களுக்கு மத்தவங்க மனசு புண்படும்படி பேசி பழக்கமில்லாததால.\\
ரீப்பிட்டு!!!!

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

//எலிக்கு முன்னாடியே பரிசோதனை பொருள்னு (டெஸ்டிங்கு) இந்த உலகத்துல ஒண்ணு இருந்துச்சினா அது இந்த அப்பாவி புருஷனுங்க தான். பரிசோதனைக்கு எலிய பயன்படுத்தலாம்னு மனஷனுக்கு தெரிஞ்சதே இப்படிதான்.
//

பாலாஜி சூப்பர்.
//
மிக்க நன்றி கோவி...

//
எனக்கு திருமணத்திற்கு பின்புதான் எடை குறைந்தது.
:) //

இதுக்கு என்ன காரணம் இருக்கும்???

வலையுலக நண்பரே ஆன்லைன் வாங்க!!!

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

// இது எப்படி சாத்தியம்னு நான் தீவிரமா சிந்திக்கும் போது //

ஏன்? இப்போ எதுக்கு இந்தத் 'தீ' விரம்?

தன்னாலெ தெரிஞ்சுக்கப்போற ஒரு 'விஷ' (ய)த்துக்கு இப்படி
மூளையை யூஸ் பண்ணப்பிடாது...........ஆமாம்:-) //

டீச்சர்,
எப்படியும் தெரிஞ்சிக்க போறோம்னாலும் ஒரு ஆர்வக்கோளாறு தான் ;)

G.Ragavan said...

வெட்டி...இது மாதிரி எத்தன டவுட்டுக இருக்கோ..அத்தனையும் ஒன்னொன்னாக் கேட்டுத் தெரிஞ்சிக்க. ரொம்ப நல்லது.

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அதனால மறுபடி ஹோட்டல்ல போய் ஒரு நல்ல சாப்பாடும் சாப்பிட வேண்டிய நிலைமை வந்துடும். ஒரு நாலைக்கு 5,6 வேளை சாப்பிட்டா அப்பறம் எப்படி இருக்கும். நீயே சொல்லு.//

எந்த தைரியத்துல இப்படி ஒரு பதிவ போட்டீங்க, பாலாஜி?
சரி என்னமோ போங்க! காற்றுள்ள போதே தான் தூற்றிக் கொள்ள முடியும்-னு முடிவு செஞ்சிட்டீங்க போல இருக்கு! :-))))//

ஏன் எனக்கு என்ன பயம்? நீங்க தான் இங்க உண்மையை சொல்ல பயப்படனும் ;)

////பசங்க அதுக்கு முன்னாடி அம்மா கைல நல்ல சாப்பாடு தான் சாப்பிடறாங்க//

ஓட்டல்-ல எக்ஸ்ட்ராவா சாப்பிட்டு குண்டாகறாங்க சரி!
ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் ஒல்லியா இருக்காங்க?

அம்மா கையில தான சாப்பிடறாங்க. அப்ப மட்டும் ஏன் ஒல்லியா இருக்காங்க-ன்னு கேக்கச் சொன்னாங்க! ஒடனே கேட்டுப்புட்டேன் பாலாஜி! :-)))//

இது என்ன CVR மாதிரி கேள்வி கேக்கறீங்க? அம்மா கைல சாப்பிடறது சத்தான நல்ல சாப்பாடு. ஆரோக்யமா இருக்கும். க.பில சாப்பிடறது ஜன்க் ஃபுட் தானே. அதான் வித்யாசம் ;)

வெட்டிப்பயல் said...

//ஜொள்ளுப்பாண்டி said...

//கல்யாணமான புதுசுல பொண்டாட்டி சமைச்சு கொடுக்கறது கேவலமாத்தான் இருக்கும். ஆனா ஆண்களுக்கு மத்தவங்க மனசு புண்படும்படி பேசி பழக்கமில்லாததால. அதை நல்லா இருக்குனு சாப்பிடுவாங்க//

ஆஹா வெட்டி ஒரு ஆம்பிளையோட மனசு இன்னொரு ஆம்பிளைக்குதானே தெரியும் ??:))) //

அதானே!!!

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

நான் ஒன்னியும் சொல்ல மாட்டேன். நாளைக்கு சோறு கிடைக்க வேணாமா? //

ஹிம்ம்ம்.. ஆன்லைன்ல மட்டும் பாயிண்ட் பாயிண்டா எடுத்து கொடுத்துட்டு.. நடத்துங்க நடத்துங்க...

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...

இது வடைய வைச்சி எலி புடிக்கிற கதைக்கும் பொறுந்தும்...


:) //

மின்னல் சொன்னா சரி தான் ;)

வெட்டிப்பயல் said...

// பொற்கொடி said...

ஆகா..!! இதுதானா வெட்டிப்பயலின் குறும்புன்றது...!! ரொம்பத்தான்.. ம்க்ஹும்ம்..!! //

என்னது குறும்பா? நான் உண்மையை தான் சொல்லிட்டு இருக்கேன்...

வெட்டிப்பயல் said...

//CVR said...

//துளசி கோபால் said...
ஏன்? இப்போ எதுக்கு இந்தத் 'தீ' விரம்?//

அற்புதமான கேள்வி!! இதற்கு என் படித்த நண்பர் பதில் கூறியே ஆக வேண்டும்!!!!
அவர் பதில் கூறாவிட்டாலும் அவ்ர் ஏன் இப்படி சிந்திக்கிறார் என்பதை எங்களால் மிகச்சரியாக ஊகிக்க முடிகிறது என்பதை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!!! :-D //

இதுக்கு பதில் சொல்ல என்னயிருக்கு? சத்குரு போட்டோல பள்ளி கொண்டிருக்கும் போட்டோக்கும் நிஜத்துக்கும் வித்யாசத்தை பார்த்தாலே இந்த சிந்தனை வர போகுது ;)

வெட்டிப்பயல் said...

//CVR said...

இந்த சமயத்தில் எனக்கு என்னமோ "தன் தவளை தன் வாயால் கெடும்" என்ற தமிழர் மொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது!! :-))) //

இதுல என்ன தன் தவளை பிறர் தவளைனு???

பின்ன அந்த பழமொழி என்ன பிரன்ச்சா?

வெட்டிப்பயல் said...

//CVR said...

என் பின்னூட்டங்களை வெளியிடாமல் இருப்பதை எதிர்த்து கால வரையற்ற உண்ணாவிரதம் இருப்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்!!!!! //

ஆஹா இதை கவனிக்காம பப்லிஷ் பண்ணிட்டனே :-(

வெட்டிப்பயல் said...

// துர்கா|thurgah said...

//அதாண்ணே உங்களை கேக்கறேன். எப்படியும் கல்யாணமான புதுசுல பொண்ணுங்களுக்கு சமையலும் தெரியாது. பசங்க அதுக்கு முன்னாடி அம்மா கைல நல்ல சாப்பாடு தான் சாப்பிடறாங்க. அப்பறம் எப்படி இந்த மாற்றம்?
//

என்ன அண்ணிக்குச் சமையல் தெரியாதா?தெரியுமா?தெரியாவிட்டால் என்ன வெட்டி அண்ணா இருக்க பயம் ஏன்? //

அண்ணிக்கு சமையல் தெரியுமா தெரியாதானு தெரியலையே.. இரு அண்ணனை கேட்டு சொல்றேன். நியூ ஜெர்ஸிக்கு ஒரு போனை போடுங்கப்பா...

வெட்டிப்பயல் said...

// Boochandi said...

உள்ளூரில் இருந்தாலாவது ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய்விடலாம்...இங்கே அமேரிக்காவில் தினமும் இந்தியன் உணவகத்துக்கு போவது கட்டுப்படியாகுமா?? அதற்கு, வீட்டில் சோதனை எலியாக இருப்பது எவ்வளவோ மேல்...:-) //

Bachelor சமையலே நல்லா இருக்கும் ... ஜி.ரா என்ன சொல்றீங்க?

வெட்டிப்பயல் said...

// சிநேகிதன்.. said...

\\ஆண்களுக்கு மத்தவங்க மனசு புண்படும்படி பேசி பழக்கமில்லாததால.\\
ரீப்பிட்டு!!!! //

மிக்க நன்றி சிநேகிதன்..

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

வெட்டி...இது மாதிரி எத்தன டவுட்டுக இருக்கோ..அத்தனையும் ஒன்னொன்னாக் கேட்டுத் தெரிஞ்சிக்க. ரொம்ப நல்லது. //

ஜி.ரா சொன்னா சரிதான் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுக்கு பதில் சொல்ல என்னயிருக்கு? சத்குரு போட்டோல பள்ளி கொண்டிருக்கும் போட்டோக்கும் நிஜத்துக்கும் வித்யாசத்தை பார்த்தாலே இந்த சிந்தனை வர போகுது ;) //

ஹா ஹா
என்ன ஆணவம்? என்ன அராஜகம்?
பள்ளி கொண்ட நாள் முதல் இன்று வரை அப்படியே "அதே எடையோடு" இருக்கும் என்னைக் கொஞ்சமும் தூக்கிப் பார்க்காது (சீர் தூக்கிப் பார்க்காது என்று சொல்ல வந்தேன் :-)...
பொய் புரட்டைக் கிளப்பும் வெட்டியை எதிர்த்து...

சிஷ்யா CVR...
இப்போதாவது கால வரையற்ற உண்ணாவிரதம் இருப்பாயா?

சத்யன் said...

நல்ல காமெடி :)

நான் வலைப்பதிவர்கள் மத்தியில் ஒரு புதியவன்

வழிகாட்ட வேண்டுகிறேன்

நன்றி..

சத்யன்

Sathia said...

வெட்டி,
ஊருக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. இப்போ இந்த மாதிரி 'கல்யாண குணங்கள்' பற்றி கேள்வி வருது. ஏதோ நடக்குது... எதுனாலும் சொல்லீட்டு செய்யுங்க.
அப்புறம் சமூகம் அப்பிடின்னு Tag பண்ணி இருப்பதால் கொஞ்சமாவது சீரியஸா இந்த விஷயத்தை எடுத்துகிட்டா அது கல்யாணத்துக்கு முன் பின் அப்பிடிங்கறத விட நடுத்தர வயதுக்கு முன் பின் அப்பிடின்னு எடுத்துகிட்டா புரியும்.

கல்யாணம் ஆன எல்லோரும் குண்டாவம் இல்லை கல்யாணம் ஆகாத எல்லாரும் ஒல்லியாவும் இல்லை ;-)))

கப்பி பய said...

:)பி.கு: ஒரு ஸ்மைலிக்கு பி.கு.வான்னு கேட்கக்கூடாது.இது வரைக்கும் பத்துக்கு மேல கமெண்ட் எழுதி அழிச்சுட்டேன்..முடியல ;)))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுக்கு பதில் சொல்ல என்னயிருக்கு? சத்குரு போட்டோல பள்ளி கொண்டிருக்கும் போட்டோக்கும் நிஜத்துக்கும் வித்யாசத்தை பார்த்தாலே இந்த சிந்தனை வர போகுது ;) //

ஹா ஹா
என்ன ஆணவம்? என்ன அராஜகம்?
பள்ளி கொண்ட நாள் முதல் இன்று வரை அப்படியே "அதே எடையோடு" இருக்கும் என்னைக் கொஞ்சமும் தூக்கிப் பார்க்காது (சீர் தூக்கிப் பார்க்காது என்று சொல்ல வந்தேன் :-)...
//

இத நம்பனுமாம் ;)

//
பொய் புரட்டைக் கிளப்பும் வெட்டியை எதிர்த்து...

சிஷ்யா CVR...
இப்போதாவது கால வரையற்ற உண்ணாவிரதம் இருப்பாயா? //

அவர் காலவரையற்ற உண்ணும் விரதம் இருக்கேனு இருக்கார் :-)

வெட்டிப்பயல் said...

// சத்யன் said...

நல்ல காமெடி :)

நான் வலைப்பதிவர்கள் மத்தியில் ஒரு புதியவன்
//

ரொம்ப மகிழ்ச்சி

//
வழிகாட்ட வேண்டுகிறேன்

நன்றி..

சத்யன் //

அப்படியே லெப்ட்ல போய் ரைட்ல போனீங்கனா ஒரு புள்ளையார் கோவில் வரும். அத ஒரு சுத்து சுத்திட்டு தேங்காய் பழமெல்லாம் உடைச்சிட்டு. வெளிய வந்து அப்படியே நேரா நூல் புடிச்ச மாதிரி வந்துட்டு ரெண்டாவது ரைட் எடுங்க. அவ்வளவு தான்...

என்னடானு யோசிக்கறீங்களா? இப்படி எல்லாத்தையும் கலாய்ங்க. நிறைய நண்பர்கள் கிடைப்பாங்க...

அப்படியே தமிழ்மணத்துலயும் சேருங்க...

www.thamizmanam.com
www.thenkoodu.com

வெட்டிப்பயல் said...

//Sathia said...

வெட்டி,
ஊருக்கு போய்ட்டு வந்திருக்கீங்க. இப்போ இந்த மாதிரி 'கல்யாண குணங்கள்' பற்றி கேள்வி வருது. ஏதோ நடக்குது... எதுனாலும் சொல்லீட்டு செய்யுங்க.
//
உங்ககிட்ட சொல்லாமலா?
தமிழ்கிட்ட நம்பர் வாங்கி உங்களை கூப்பிடறேன் :-)

// அப்புறம் சமூகம் அப்பிடின்னு Tag பண்ணி இருப்பதால் கொஞ்சமாவது சீரியஸா இந்த விஷயத்தை எடுத்துகிட்டா அது கல்யாணத்துக்கு முன் பின் அப்பிடிங்கறத விட நடுத்தர வயதுக்கு முன் பின் அப்பிடின்னு எடுத்துகிட்டா புரியும். //
இது உண்மையாலுமே சீரியஸான விஷயம் தான் சத்யா. இதை பத்தி நான் ஏற்கனவே போட்ட பதிவு இதோ

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:)பி.கு: ஒரு ஸ்மைலிக்கு பி.கு.வான்னு கேட்கக்கூடாது.இது வரைக்கும் பத்துக்கு மேல கமெண்ட் எழுதி அழிச்சுட்டேன்..முடியல ;))) //

நீ போடாம இருக்கறதே நாட்டுக்கு நல்லது...

Boston Bala said...

சந்தையில மாடு விலை போற வரைக்கும்தான், மாலிஷ், டயட், நடைபயிலுதல் எல்லாம். மாட்டை மார்க்கெட் செஞ்சதுக்கப்புறம் ;)

அன்புத்தோழி said...

கல்யாணத்துக்கு முன்னாடி பசங்களல கேள்வி கேட்க யாரும் இல்லை. அதுவும் இல்லாம ஹாஸ்டல தங்கி படிக்கிறவங்க பாடு கேட்கவே வேண்டாம். ஆனா கல்யாணத்துக்கு பின் அம்மாவும் சரி, மனைவியும் சரி நான் நீ ன்னு போட்டி போட்டு கவனிச்சிக்கு வாங்க. புதுசு புதுசாவும் சாப்பாடு கிடைக்கும். அப்ப குண்டு ஆகலேனா எப்படி? மத்தமடி எங்க சமையல பத்தி யாரும் குத்தம் சொல்ல கூடாது சொல்லிட்டேன் ;-). அப்புறம் மறுபடியும் ஒல்லியாக வேண்டியது தான் ;-)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

சந்தையில மாடு விலை போற வரைக்கும்தான், மாலிஷ், டயட், நடைபயிலுதல் எல்லாம். மாட்டை மார்க்கெட் செஞ்சதுக்கப்புறம் ;) //

:-))

வெட்டிப்பயல் said...

//அன்புத்தோழி said...

கல்யாணத்துக்கு முன்னாடி பசங்களல கேள்வி கேட்க யாரும் இல்லை. அதுவும் இல்லாம ஹாஸ்டல தங்கி படிக்கிறவங்க பாடு கேட்கவே வேண்டாம். ஆனா கல்யாணத்துக்கு பின் அம்மாவும் சரி, மனைவியும் சரி நான் நீ ன்னு போட்டி போட்டு கவனிச்சிக்கு வாங்க. புதுசு புதுசாவும் சாப்பாடு கிடைக்கும். அப்ப குண்டு ஆகலேனா எப்படி? மத்தமடி எங்க சமையல பத்தி யாரும் குத்தம் சொல்ல கூடாது சொல்லிட்டேன் ;-). அப்புறம் மறுபடியும் ஒல்லியாக வேண்டியது தான் ;-) //

அக்கா,
உங்க சமையலை சொல்லலக்கா. நான் பொதுவா சொன்னேன்... பொங்கல் நிஜமாவே நல்லா இருந்துச்சி. காபியும் சூப்பரா இருந்துச்சு. இது வேற காரணத்துக்காக போட்டது :-)

அன்புத்தோழி said...

பரவாயில்லை மன்னிச்சு விடுகிறேன். ஆனா அக்கானு சொல்லிட்டீங்களே....
அது தான் கொஞ்சம் வருத்தம்;-). சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

செந்தில் said...

இதே சந்தேகம் எனக்கும் ரொம்ப நாளா இருந்தது, தீர்த்து வச்சதுக்கு அந்த தெய்வத்துக்கிட்ட நன்றி சொல்லிடுங்க தல...

இராம் said...

//கப்பி பய said...

:)பி.கு: ஒரு ஸ்மைலிக்கு பி.கு.வான்னு கேட்கக்கூடாது.இது வரைக்கும் பத்துக்கு மேல கமெண்ட் எழுதி அழிச்சுட்டேன்..முடியல ;))) ///


அதிலே நான் ஒன்னே ஒன்னு சொல்லவா??? ;)

Anandha Loganathan said...

வெட்டி,

கல்யாணமான ஆண்கள வைத்து காமெடி எதுவும் பண்ண்லியே
-