தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, July 16, 2007

ஏழைக்கேத்த எள்ளுருண்டை!!!

ஒரு வழியா நல்லபடியா இந்தியாக்கு போயிட்டு திரும்பி வந்தாச்சு. போகும் போது யாருக்கும் சொல்லலைனு சிலர் வருத்தப்படறாங்க. நான் போகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஊருக்கு போக முடியுமானு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஏன்னா கரெக்டா நான் ஊருக்கு கிளம்பறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி என் டீம் லீட் பேப்பர் போட்டுட்டாரு. அதுவுமில்லாம ஆணியும் ரொம்ப அதிகம். ஒரு வழியா விட்டா போதும்னு தான் ஊருக்கு கிளம்பினேன். கரெக்டா புறப்படறதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் சங்கத்துக்கே மெயில் அனுப்பிட்டு கிளம்பினேன். (மொக்கை போடலாம்னு மொபைல் நம்பர் எல்லாம் குடுத்தேன்... மறந்துட்டாங்க போல)

ஊருக்கு போய் ஒரு வாரம் முடிஞ்சி கப்பிக்கு போன் பண்ணா புதுசா ஒரு விளையாட்டு ஆரம்பிச்சிட்டாங்க. நம்மல பத்தி எட்டு பெருமைப்படற விஷயம் எழுதனுமாம். உங்களையும் என்னையும் பாபா கூப்பிட்டிருக்காருனு ஒரு குண்டை தூக்கி போட்டார். நம்மல பத்தி எழுத 8 பெருமையான விஷயம் இருக்கும்னு நினைச்சிருக்காரே "பாபா, I am really proud of you". மனுஷனுக்கு எவ்வளவு தன்னம்பிக்கை.

நானும் ஒரு மாசமா யோசிச்சி பார்த்தேன். ஒண்ணுமே கிடைக்கல. அப்பறம் பார்த்தா பெருமைப்படற அளவு இல்லைனாலும் பரவால உன்னை பத்தி ஏதாவது ஒரு எட்டு விஷயம் சொல்லலாம்னு ஜி.ரா சொல்லிட்டாரு... அவ்வளவு தானே இனி 800 வேணும்னாலும் சொல்லலாம்..

1. 108 திவ்ய தேசங்கள்ல முதன்மையானதாக கொண்டாடப்படற "திருக்கோவிலூர்"ல பிறந்ததே எனக்கு ஒரு பெருமையான விஷயம் தான். அங்க இருக்கற ஹௌசிங் போர்ட்ல (ஸ்டாஃப் கோட்டர்ஸ்) பிறந்த முதல் குழந்தை அடியேந்தான்.

2. நான் படிச்ச கடலூர் புனித வளனார் பள்ளி (St. Joseph's - Manjakuppam) ஸ்போர்ட்ஸ்ல எப்பவுமே பட்டைய கிளப்பற ஸ்கூல். ஒவ்வொரு வருஷமும் ஸ்டேட்ல மினிமம் மூணு நாலு கோல்ட் மெடலாவது வாங்குவாங்க. அங்க படிச்சதே நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.

3. கடலூர்ல படிச்ச வரைக்கும் அடுத்த வகுப்புக்கு போகும் போது என் ஜீனியர்ஸ்கிட்ட எப்படியும் வகுப்பாசிரியர் பாலாஜி மாதிரி சின்ஸியரான ஹாஸ்டல் பையனை பார்த்ததில்லைனு முதல் ஒரு வாரத்துல ஒரு தடவையாவது சொல்லுவார். எப்பவும் முதல் பெஞ்ச்ல உக்கார்ந்து தூக்கம் வரக்கூடாதுனு ஆசிரியரிடம் ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன். அப்பறம் மாசா மாசம் அட்டெண்டென்சில் பெயர் எழுத உதவியிருப்பேன். அதனாலயே கொஞ்சம் நல்ல பேர்.

4. 9வதுல சுப்பிரமணியன்னு ஒரு தமிழ் ஐயா எங்களுக்கு பாடம் எடுத்தார். அப்ப அவருக்கு எப்படியும் 50 வயசுக்கு மேல இருக்கும். அவர் பழக்கம் எப்படினா வகுப்பெடுக்கும் போது ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். அதில் பதில் சொன்னா நோட்ல கடைசி பக்கத்துல ஒரு கையெழுத்து போடுவார். அந்த வருஷக்கடைசில யார் அதிகமா வாங்கி இருக்காங்களோ அவுங்களுக்கு ஒரு பரிசு கொடுப்பார். அந்த வருஷம் நான் தான் அதிக கையெழுத்து வாங்கினேன். ரெண்டாவது வந்தவனைவிட 100 கையெழுத்துக்கு மேல் அதிகம் வாங்கியிருந்தேன் (200க்குள் தான்). இது வரை என் சர்வீஸ்லயே அதிக கையெழுத்து வாங்கியது நீ தானு ரொம்ப சந்தோஷமா சொன்னாரு. என்னை விவேகானந்தர் புத்தகம், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் எல்லாம் படிக்க வெச்சது அவர் தான். (அதுக்கப்பறம் எப்படியும் அவர் 3-4 வருஷம் சர்வீஸ்ல இருந்துருப்பாரு. என்னை யாராவது முந்தனாங்களானு அவரை பார்த்து கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். கடலூர் போக முடியல)

5. பாட்ஷா படம் ரிலீஸான நாள்ல பார்த்தது. இதெல்லாம் பெருமையா??? இல்லை கடமைனு நீங்க சொல்லலாம். இருந்தாலும் இன்னைக்கு வரைக்கும் என் ஃபெவரைட் படம் பாட்ஷா தான். 100 தடவைக்கு மேல பார்த்தாலும் இன்னும் அலுக்கவே இல்லை.

6. உதவினு கேட்டா முடிஞ்ச வரைக்கும் செய்வேன். பெங்களூர்ல இருந்த வரைக்கும் நிறைய பேருக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்க உதவியிருக்கேன். நான் சொல்லி கொடுத்ததால வேலை வாங்கிய நண்பர்கள் சிலர் தம் அடிப்பதை நிறுத்தியதே மிகவும் பெருமையான விஷயமா நினைக்கிறேன்.

7. பெங்களூர்ல தங்கியிருந்தப்ப வேலை தேட வந்த நண்பனொருவனை சந்தித்ததே வாழ்வில் பெருமையா நினைக்கிறேன். அப்படி அவன் ஸ்பெஷாலிட்டி என்னனா, இது வரைக்கும் அவன் அப்பா, அம்மா சொல்லி எந்த ஒரு விஷயத்திற்கும் முடியாதுனு சொன்னதே இல்லை. பக்கத்துல இருக்கற கடைக்கு போயிட்டு வானு சொல்றதுல இருந்து பெரிய விஷயங்கள் வரை அவர்களின் எந்த ஒரு பேச்சிற்கும் எதிர்ப்பு சொல்லாமல் அதை செய்யும் நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவனும் என் ரூம்ல தங்கி வேலை தேடியிருக்கிறான். அவனை வாழ்க்கையில் சந்திச்சதே ஒரு பெருமையா நினைக்கிறேன்.

8. பல பெரிய தலைகள் எழுதும் இடத்தில் பெயர் சொன்னால் அடையாளம் தெரிந்து கொள்ளும் அளவில் எழுதி கொண்டிருக்கிறேன் (மொக்கை போட்டு கொண்டிருக்கிறேனும்னு சொல்லலாம்) என்பதே ஒரு பெருமையான விஷயம் தான்...

அப்பா சாமி, இத எழுதி முடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சிப்பா...

சரி அடுத்து 8 பேரை மாட்டிவிடுவோம்...

1. தம்பி
2. சிவபாலன
3. குழலி
4. சோமி
5. செல்வன்
6. சத்யா
7. லஷ்மி
8.செந்தழல் ரவி

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்

2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

41 comments:

சிவபாலன் said...

பாலாஜி,

// இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது //

சாபமிட வந்தேன். அதுக்குள்ள கடைசி வரியில் இப்படி கவித்திட்டீங்க..

ஏற்கனவே இருவர் என் சாபத்திற்கு ஆளாகியுள்ளனர்.. அந்த பட்டியலில் நீங்களும்..

சரி, நாமும் ஒரு எட்டு பேருக்கிட்ட சீககிரமே சாபம் வாங்கிக்கொள்வோம்.

அழைப்புக்கு மிக்க நன்றி!

சுவாரசியமாக பகிர்துகொண்டிருக்கிறீர்கள். (இந்தியா செல்வதை சொல்லொயிருந்தால் சில பொருள்களை வாங்கி வரச்சொல்லியிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்ம்)

வெட்டிப்பயல் said...

//
இந்தியா செல்வதை சொல்லொயிருந்தால் சில பொருள்களை வாங்கி வரச்சொல்லியிருப்பேன்.. ம்ம்ம்ம்ம்ம்)//

நான் போனதுக்கப்பறம் இந்தியா நம்பர் கொடுத்து ஒரு போஸ்ட் போட்டனே... அப்பவாது சொல்லியிருக்கலாமே...

இப்பவும் பிரச்சனையில்லை புதன் கிழமை என் ஃபிரெண்ட் ஒருத்தவன் வரான். சொன்னிங்கனா அவனை வாங்கி வர சொல்கிறேன்

அரவிந்தன் said...

பாலாஜி,

நானும் தூய வளனார் பள்ளியில் 82-84 வருடத்தில் படித்தேன்.(ஒன்பதாவது மற்றும் 10-ம் வகுப்பு).

எனது தமிழாசிரியர்களாக் சிவக்கொழுந்து மற்றும் சுகிர்தராசு இருந்தனர்.நீங்கள் படிக்கும்போது அவர்கள் பணியாற்றினார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டனாரா.

அன்புடன்
அரவிந்தன்

வெட்டிப்பயல் said...

// அரவிந்தன் said...

பாலாஜி,

நானும் தூய வளனார் பள்ளியில் 82-84 வருடத்தில் படித்தேன்.(ஒன்பதாவது மற்றும் 10-ம் வகுப்பு).

எனது தமிழாசிரியர்களாக் சிவக்கொழுந்து மற்றும் சுகிர்தராசு இருந்தனர்.நீங்கள் படிக்கும்போது அவர்கள் பணியாற்றினார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டனாரா.

அன்புடன்
அரவிந்தன் //

அரவிந்தன்,
நான் பத்தாவது 97ம் வருடம் படித்தேன். அநேகமாக அவர்கள் ஓய்வு பெற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

அந்த 7 வது குறிப்பில் இருக்கும் நண்பரைச் சந்திச்சதோடு சரியா? அவர்கிட்டே இருந்து
எதுவும் கத்துக்கலையா? :-))))))

பின்னாளில் பயன்படும்:-))))

உண்மை said...

welcome back.

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

அந்த 7 வது குறிப்பில் இருக்கும் நண்பரைச் சந்திச்சதோடு சரியா? அவர்கிட்டே இருந்து
எதுவும் கத்துக்கலையா? :-))))))//

டீச்சர்,
அது அவ்வளவு சுலபமான காரியமில்லை. எந்த ஒரு விஷயத்துக்கும் முடியாதுனு சொல்லாம இருக்கறது.

நான் சின்ன சின்ன விஷயங்கள்ல பேசி பார்ப்பேன். ஆனா பெரிய விஷயங்களில் சண்டை போடுவது இல்லை...

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

welcome back. //

மிக்க நன்றி உண்மை...

Boston Bala said...

:)

செல்வன் said...

திருகோவிலூர் மலையமான் என்பவர் பிரபலமான மன்னர். பொன்னியின் செல்வனில் பெரும் வீரராக குறிப்பிடப்படுபவர்.அதுபோக வைணவ திவ்யதேசம் வேறு.ஆக அருமையான ஊரில் பிறந்த பெருமை உண்டு.

எட்டுக்கு அழைத்ததற்கு நன்றி..சீக்கிரம் போட்டுவிடுகிறேன்.இந்திய பயண அனுபவங்களை சீக்கிரம் எழுதுங்கள்.

CVR said...

எல்லாமே பெருமை படக்கூடிய விஷயங்கள் தான் வெட்டி!!
இன்னும் பற்பல பெருமைகள் உங்களை வந்து சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

:) //

இதுக்கு என்ன அர்த்தம்???

வெட்டிப்பயல் said...

//
செல்வன் said...

திருகோவிலூர் மலையமான் என்பவர் பிரபலமான மன்னர். பொன்னியின் செல்வனில் பெரும் வீரராக குறிப்பிடப்படுபவர்.அதுபோக வைணவ திவ்யதேசம் வேறு.ஆக அருமையான ஊரில் பிறந்த பெருமை உண்டு.
//
அண்ணா திருக்கோவிலூர் பெருமைகளை ஒரு பதிவில் தான் போடனும். முதல் மூன்று ஆழ்வார்களுக்கு எம்பெருமான் நாராயணன் காட்சி அளித்த தலம் இது தான். பாரி மகளிருக்கு திருமணம் நடந்ததும் இந்த ஊர் தான்.. இன்னும் நிறைய இருக்கு. அடுத்து ஒரு பதிவில் சொல்கிறேன்...

//
எட்டுக்கு அழைத்ததற்கு நன்றி..சீக்கிரம் போட்டுவிடுகிறேன்.இந்திய பயண அனுபவங்களை சீக்கிரம் எழுதுங்கள். //
கண்டிப்பா எழுதறேன்...

வெட்டிப்பயல் said...

//CVR said...

எல்லாமே பெருமை படக்கூடிய விஷயங்கள் தான் வெட்டி!!
இன்னும் பற்பல பெருமைகள் உங்களை வந்து சேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :-) //

எல்லாம் உங்கள் ஆசி ;)

செந்தழல் ரவி said...

///எனது தமிழாசிரியர்களாக் சிவக்கொழுந்து மற்றும் சுகிர்தராசு இருந்தனர்.நீங்கள் படிக்கும்போது அவர்கள் பணியாற்றினார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டனாரா.///

அரவிந்தன், சுகிர்தராசு 1996 ஆம் ஆண்டு வரை இருந்தார்...அதுக்கு பிறகு ஓய்வு பெற்றாரா என்பது தெரியாது...

நானும் இந்த ஸ்கூல் தானுங்கோ...

செந்தழல் ரவி said...

///திருகோவிலூர் மலையமான் என்பவர் பிரபலமான மன்னர். பொன்னியின் செல்வனில் பெரும் வீரராக குறிப்பிடப்படுபவர்.அதுபோக வைணவ திவ்யதேசம் வேறு.ஆக அருமையான ஊரில் பிறந்த பெருமை உண்டு.///

அதைவிட இன்னொரு சிறப்பு என்னன்னா குறிஞ்சி புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம்...

ஏன் என்பது பெரிய கதை...

இன்றுகூட பாறை மீது ஒரு கோவில் அதனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது...

தென்பெண்ணை ஆறு இந்த ஊருக்கு மேலும் அழகு சேர்க்கும்...(தண்ணீர் வரத்து இருந்தால்)...மணல் கொள்ளை ஆற்றை தின்றுகொண்டு இருக்கு...ஹும்..

Arunkumar said...

வருக பின்னாடி...

(ஹி ஹி welcome back)

எல்லா எட்டுமே சூப்பர்...

உங்க பெருமை (எட்டு)த்திக்கும் பரவட்டும் :-)

மறுபடியும் அதே ப்ராஜெக்ட் + பாஸ்டன் தானா? இல்ல இந்த தடவ வேர ஊரா?

Anonymous said...

நல்லாருக்கீங்களா ?

தென்றல் said...

பாலாஜி,

வழக்கமா உங்க பதிவுல இருக்கிற 'லொள்ளும்/காமெடி'யும் இதில கம்மி....?!

Jet lagஆ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//108 திவ்ய தேசங்கள்ல முதன்மையானதாக கொண்டாடப்படற "திருக்கோவிலூர்"லபிறந்ததே எனக்கு ஒரு பெருமையான விஷயம் தான். அங்க இருக்கற ஹௌசிங் போர்ட்ல (ஸ்டாஃப் கோட்டர்ஸ்) பிறந்த முதல் குழந்தை அடியேந்தான்.//

பாலாஜி...நீங்க எப்ப "அடி"யேன் ஆனீங்க! :-)
ஆகா...
திவ்யப் பிரபந்தமும் பாலாஜியும் ஒரே ஊர்ல தான் பொறாந்தாங்களா? சூப்பர்! அதான் ரெண்டு பேருக்கும் இத்தினி மாலை...மரியாதை....மதிப்பு எல்லாம்!

எப்போ திருக்கோவிலூர் தலம் பற்றியும் ஆழ்வார்கள் நெருக்கிய கதையையும் எங்களுக்குச் சொல்லப் போறீங்க?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வகுப்பாசிரியர் பாலாஜி மாதிரி சின்ஸியரான ஹாஸ்டல் பையனை பார்த்ததில்லைனு முதல் ஒரு வாரத்துல ஒரு தடவையாவது சொல்லுவார்//

ஐயகோ! சங்கத்தில் இதைக் கேட்பார் யாருமில்லையா? எனக்குத் தெரியும் பாலாஜி! அவரைக் கேள்வி கேட்டு கேள்வி கேட்டு மிரட்டி வைச்சிருப்பீங்க போல! :-)

//ரெண்டாவது வந்தவனைவிட 100 கையெழுத்துக்கு மேல் அதிகம் வாங்கியிருந்தேன் (200க்குள் தான்).//

ஓ..அப்பவே 100+ ஆஆ?

//நான் சொல்லி கொடுத்ததால வேலை வாங்கிய நண்பர்கள் சிலர் தம் அடிப்பதை நிறுத்தியதே மிகவும் பெருமையான விஷயமா நினைக்கிறேன்//

சூப்பரோ சூப்பர்!
இன்னும் பல பெருமைகள் 200+, 300+,....1000+ என்று உங்களை வந்து அடையட்டும் பாலாஜி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(சிஷ்யா...சரி தானே! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.//

இது வரைக்கும் சரி!

//முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)//

இது மண்டபத்துல வேற எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கே! :-)

வெற்றி said...

வெட்டி,

/* . பெங்களூர்ல தங்கியிருந்தப்ப வேலை தேட வந்த நண்பனொருவனை சந்தித்ததே வாழ்வில் பெருமையா நினைக்கிறேன். அப்படி அவன் ஸ்பெஷாலிட்டி என்னனா, இது வரைக்கும் அவன் அப்பா, அம்மா சொல்லி எந்த ஒரு விஷயத்திற்கும் முடியாதுனு சொன்னதே இல்லை. பக்கத்துல இருக்கற கடைக்கு போயிட்டு வானு சொல்றதுல இருந்து பெரிய விஷயங்கள் வரை அவர்களின் எந்த ஒரு பேச்சிற்கும் எதிர்ப்பு சொல்லாமல் அதை செய்யும் நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவனும் என் ரூம்ல தங்கி வேலை தேடியிருக்கிறான். அவனை வாழ்க்கையில் சந்திச்சதே ஒரு பெருமையா நினைக்கிறேன். */

இதைப் படிச்சதும் என் மனதில் ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது.
இனியாவது உங்களின் நண்பரைப் போல இருக்க முயற்சிக்க வேணும் போல இருக்கு.

Cheran Parvai said...

Hi Vetti,

Welcome Back, அதெல்லாம் சரி, அது என்ன "ஏழைக்கேத்த எள்ளுருண்டை".கவுண்டர் சொல்வது போல "எள்ளு"விற்கும் விலையில்...
~சேரன்

நட்டு said...

வாங்க... வாங்க பாலாஜி.மீண்டும் ஒரு வணக்கம்.மீண்டும் அசத்துங்க...

JK said...

உன்ன பத்தி படிச்சேன்... இம்புட்டு நல்லவனா நீ....?? ( சும்மா கோவிச்சுக்காதே வெட்டி )

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

///எனது தமிழாசிரியர்களாக் சிவக்கொழுந்து மற்றும் சுகிர்தராசு இருந்தனர்.நீங்கள் படிக்கும்போது அவர்கள் பணியாற்றினார்களா அல்லது ஓய்வு பெற்று விட்டனாரா.///

அரவிந்தன், சுகிர்தராசு 1996 ஆம் ஆண்டு வரை இருந்தார்...அதுக்கு பிறகு ஓய்வு பெற்றாரா என்பது தெரியாது...
//
சுகிர்தராஜ் கேள்விபட்ட மாதிரி இருக்கு. ஆனா அரவிந்தன் தெரியல :-(

//
நானும் இந்த
ஸ்கூல் தானுங்கோ... //
அதுதான் தெரியுமே ;)

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

///திருகோவிலூர் மலையமான் என்பவர் பிரபலமான மன்னர். பொன்னியின் செல்வனில் பெரும் வீரராக குறிப்பிடப்படுபவர்.அதுபோக வைணவ திவ்யதேசம் வேறு.ஆக அருமையான ஊரில் பிறந்த பெருமை உண்டு.///

அதைவிட இன்னொரு சிறப்பு என்னன்னா குறிஞ்சி புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம்...

ஏன் என்பது பெரிய கதை...

இன்றுகூட பாறை மீது ஒரு கோவில் அதனை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது...
//
திருக்கோவிலூருக்கு இந்தியா வந்தப்ப போயிருந்தேன். ஸ்வாமிக்கு தைலக்காப்பு. ஊர் பெருமைய பத்தி ஒரு புத்தகம் வாங்கி வந்தேன். விரைவில் எழுதுகிறேன்...

உங்களுக்கு தான் கூப்பிடனும்னு நினைச்சேன். நீங்க ஆன்சைட் போயிருக்கறதா சொன்னாங்க...

//
தென்பெண்ணை ஆறு இந்த ஊருக்கு மேலும் அழகு சேர்க்கும்...(தண்ணீர் வரத்து இருந்தால்)...மணல் கொள்ளை ஆற்றை தின்றுகொண்டு இருக்கு...ஹும்.. //
இதை பத்தியும் கேள்விப்பட்டேன். ஆத்துல தண்ணியே இல்லாம வெறும் மணலா பார்க்கும் போது கண்ணுல தண்ணியே வந்துடுச்சி :-((

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

வருக பின்னாடி...

(ஹி ஹி welcome back)

எல்லா எட்டுமே சூப்பர்...

உங்க பெருமை (எட்டு)த்திக்கும் பரவட்டும் :-)

மறுபடியும் அதே ப்ராஜெக்ட் + பாஸ்டன் தானா? இல்ல இந்த தடவ வேர ஊரா?

7:40 PM //

மிக்க நன்றி அருண்...
அதே பிராஜக்ட்... அதே ஊர் :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

நல்லாருக்கீங்களா ? //

ரொம்ப நல்லா இருக்கேன் ;)

வெட்டிப்பயல் said...

// தென்றல் said...

பாலாஜி,

வழக்கமா உங்க பதிவுல இருக்கிற 'லொள்ளும்/காமெடி'யும் இதில கம்மி....?!

Jet lagஆ? //

தென்றல்,
இது நக்கல் பதிவு இல்லை...

ஏற்கனவே வந்து ஒரு நக்கல் போஸ்ட் போட்டாச்சி. ஒரு கதையும் எழுதியாச்சி... கடைசி ரெண்டு பதிவையும் பாருங்க...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//108 திவ்ய தேசங்கள்ல முதன்மையானதாக கொண்டாடப்படற "திருக்கோவிலூர்"லபிறந்ததே எனக்கு ஒரு பெருமையான விஷயம் தான். அங்க இருக்கற ஹௌசிங் போர்ட்ல (ஸ்டாஃப் கோட்டர்ஸ்) பிறந்த முதல் குழந்தை அடியேந்தான்.//

பாலாஜி...நீங்க எப்ப "அடி"யேன் ஆனீங்க! :-)
ஆகா...
திவ்யப் பிரபந்தமும் பாலாஜியும் ஒரே ஊர்ல தான் பொறாந்தாங்களா? சூப்பர்! அதான் ரெண்டு பேருக்கும் இத்தினி மாலை...மரியாதை....மதிப்பு எல்லாம்!

எப்போ திருக்கோவிலூர் தலம் பற்றியும் ஆழ்வார்கள் நெருக்கிய கதையையும் எங்களுக்குச் சொல்லப் போறீங்க? //

சீக்கிரமே...
புக் எல்லாம் வாங்கி வந்திருக்கோமில்ல ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வகுப்பாசிரியர் பாலாஜி மாதிரி சின்ஸியரான ஹாஸ்டல் பையனை பார்த்ததில்லைனு முதல் ஒரு வாரத்துல ஒரு தடவையாவது சொல்லுவார்//

ஐயகோ! சங்கத்தில் இதைக் கேட்பார் யாருமில்லையா? எனக்குத் தெரியும் பாலாஜி! அவரைக் கேள்வி கேட்டு கேள்வி கேட்டு மிரட்டி வைச்சிருப்பீங்க போல! :-)
//
அதெல்லாம் குழந்தையா இருக்கும் போது நடந்த விபத்து.. காலேஜ்ல அப்படியே ஆப்போசிட் :-)

//
//ரெண்டாவது வந்தவனைவிட 100 கையெழுத்துக்கு மேல் அதிகம் வாங்கியிருந்தேன் (200க்குள் தான்).//

ஓ..அப்பவே 100+ ஆஆ?
//
அதெல்லாம் கடந்த காலம் ;)

//
//நான் சொல்லி கொடுத்ததால வேலை வாங்கிய நண்பர்கள் சிலர் தம் அடிப்பதை நிறுத்தியதே மிகவும் பெருமையான விஷயமா நினைக்கிறேன்//

சூப்பரோ சூப்பர்!
இன்னும் பல பெருமைகள் 200+, 300+,....1000+ என்று உங்களை வந்து அடையட்டும் பாலாஜி! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(சிஷ்யா...சரி தானே! :-) //

எல்லாம் உங்க ஆசி...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.//

இது வரைக்கும் சரி!

//முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)//

இது மண்டபத்துல வேற எங்கேயோ கேட்டா மாதிரி இருக்கே! :-)

8:54 PM //

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்:

இதை படிக்கலையா???

வெட்டிப்பயல் said...

//இதைப் படிச்சதும் என் மனதில் ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது.
இனியாவது உங்களின் நண்பரைப் போல இருக்க முயற்சிக்க வேணும் போல இருக்கு.

10:13 PM //

வெற்றி,
நானும் ரொம்ப முயற்சி பண்ணனும்னு பாக்கறேன். ஆனா நான் முடியாதுனு சொல்ற மாதிரியே என்கிட்ட வேலை சொன்னா நான் என்ன பண்ண???

வெட்டிப்பயல் said...

// Cheran Parvai said...

Hi Vetti,

Welcome Back, அதெல்லாம் சரி, அது என்ன "ஏழைக்கேத்த எள்ளுருண்டை".கவுண்டர் சொல்வது போல "எள்ளு"விற்கும் விலையில்...
~சேரன் //

மிக்க நன்றி சேரன்...

எள்ளுருண்டை இந்த தடவை ஊருல சாப்பிட முடியாம போயிடுச்சு.. அந்த வருத்தம் தான் ;)

வெட்டிப்பயல் said...

// நட்டு said...

வாங்க... வாங்க பாலாஜி.மீண்டும் ஒரு வணக்கம்.மீண்டும் அசத்துங்க... //

மிக்க நன்றி நட்டு ;)

வெட்டிப்பயல் said...

// JK said...

உன்ன பத்தி படிச்சேன்... இம்புட்டு நல்லவனா நீ....?? ( சும்மா கோவிச்சுக்காதே வெட்டி ) //

jk,
நான் எழுதறதை எல்லாம் படிச்சிட்டு நம்பற அளவுக்கு இம்புட்டு நல்லவனா நீ...

உன்னைய நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு :-)

கப்பி பய said...

காலைல போட்ட பின்னூட்டத்தைக் காணோம்?! ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

காலைல போட்ட பின்னூட்டத்தைக் காணோம்?! ;) //

எதுவும் வரலையே :-(

கதைக்கூட உன் பின்னூட்டத்தை காணோம்... செம மொக்கையா?

மெயில் பண்ணுப்பா...

Boston Bala said...

---இதுக்கு என்ன அர்த்தம்???---

வருகைப் பதிவேடு :)
படித்தேன்... மகிழ்ந்தேன்