தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, July 09, 2007

இயக்குனர் சங்கருக்கு ஒரு கொல வெறி கடிதம்!!

டைரக்டர் சங்கர் சார்,
பொதுவா காப்பி அடிக்கறவங்க ஏதாவது ஒரு படத்துல இருந்தோ ஒருத்தர் வாழ்க்கைல இருந்தோ காப்பி அடிச்சி ஒரு படம் பண்ணுவாங்க.

மணிரத்னத்தோட நாயகன், இருவர் இப்ப கடைசி குரு வரைக்கும் அப்படித்தான். ஆனா நீங்க என்னனா மனசாட்சியே இல்லாம ஒருத்தரோட வாழ்க்கைல நடக்கறதையே எடுத்து உங்க எல்லா படத்துக்கும் யூஸ் பண்ணிருக்கீங்க. இதுல ஒரு படத்துல அவர் பேரையே யூஸ் பண்ணிருக்கீங்க.
நான் யாரை சொல்றேனு ஒரு சிலருக்கு புரிஞ்சிருக்கலாம்.

அவர் இந்த தமிழ் வலையுலகத்துல தான் இருக்கார். இன்னைக்கு ஆரம்பிக்கிற குழு பதிவுகள்ல ஒரு சில பதிவுகளுக்கு அழைப்பு அனுப்பிவிட்டுத்தான் பதிவையே ஆரம்பிக்கிறார்கள். இந்நேரம் எல்லாரும் கண்டுபிடித்திருப்பீர்கள்... ஆம் அது நம் ஒன் அண்ட் ஒன்லி CVR.

அப்படி என்ன சங்கர் காப்பி அடிச்சார்னு கேக்கறவங்களுக்கு...

1. சங்கரோட ஜெண்டில்மேன் ஹிட் ஆகறதுக்கு காரணம் என்ன? சின்ன குழந்தைய கேட்டாக்கூட சொல்லிடும். ஜல புல ஜங்ஸ், டிக்கிலோனா, கப்லிங்ஸ், ஸ்பூன் லிங்க்ஸ் போன்ற மிக கடினமான விளையாட்டுக்கள் தான். அந்த விளையாட்டுக்களை கண்டுபிடித்ததே நம் அண்ணன் CVR தான். குறிப்பாக ஜல புல ஜங்ஸில் அண்ணனை ஜெயிக்க மாநிலத்திலே எந்த பெண்களும் இல்லை என்பது தான் உண்மை. இதை நாடே அறியும்.

2. அடுத்த காதலன் படத்தில் வரும் பேட்டை ராப் பாடல் அண்ணன் தூக்கம் வரும் சமயத்தில் கலைப்பில் பாடிய பாடல். அதை பற்றி அண்ணாரே விரைவில் இசையின்பத்தில் ஒரு பதிவு போடுவார்.

3. இந்தியன் படத்தில் கமல் வீட்டில் கமலுக்காக மனிஷா கொய்ராலாவும், ஊர்மிளாவும் சண்டை போடும் காட்சி அண்ணார் வீட்டில் அண்ணனை யார் மணக்கலாம் என்று போட்டியில் நடந்த ஒன்று. இருவரும் அங்கே முடியை பிடித்து கொண்டு தரையில் விழுந்து போட்டு கொண்ட சண்டை படத்தில் ஏனோ வைக்கவில்லை.

4. உலக அழகி ஆன பிறகு ஐஸ்வர்யா ராய் அண்ணனை துரத்தி துரத்தி டாவடித்தது நாடே அறியும். "அவர் சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு" அண்ணி கொடுத்த ஸ்டேட்மெண்ட் சன் டீவி நீயுஸ் "சொன்னது யார்"ல் வரும் அளவுக்கு பிரபலமான ஒன்று. அதை வைத்து ஜீன்ஸ் எடுத்து ஓட்டிவிட்டீர்கள்.

5. அண்ணாரின் திறமையை பார்த்து தமிழக முதல்வரே, "நீங்க இந்த முதல்வர் சீட்ல உக்கார்ந்தா தான் இந்த சீட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருமைனு" சொன்னதும் அதுக்கு அண்ணன் "எனக்கு அரசியல் புரியாது, அரசியல் தெரியாது"னு சொன்னதும் நாடறியும். ஆனா அதுக்கும் மனமிறங்காத முதல்வர், ஒரு நாளாவது நீ அந்த சீட்ல உக்கார்ந்ததான் பெருமைனு சொன்னதை வெச்சி ஒரு படத்தையே உருவாக்கிட்டீங்க.

(அண்ணாரின் டபுல் ஆக்டிங் படம் - Courtesy - பாசமலர் Thurgah)

6. எனக்கொரு கேர்ள் பிரெண்ட் போதுமடானு அண்ணன் தூக்கத்துல பாடின பாட்டை வெச்சி ஒரு படம் எடுத்துட்டீங்க.

7. இது வரைக்கும் அவர் வாழ்க்கைல இருந்து காட்சிய உருவின நீங்க, அந்நியன்ல தைரியமா அவர் பேரையே பயன்படுத்திட்டீங்க. "REMO"னு சொன்னா தமிழ்நாட்ல இருக்குற பொண்ணுங்களுக்கு எல்லாம் தெரியும் அது அண்ணன் தானு. அதுவுமில்லாம லவ் மீட்டர் கண்டுபிடிச்ச லவ் சயிண்டிஸ்ட் அவர் தானு அவர் போட்ட காதல் ஆராய்ச்சி போஸ்ட்லயே தெரியும். (இப்ப அது சதா அண்ணி வீட்ல இருக்குது)

8. சிவாஜி கதை அண்ணனோட எதிர்கால திட்டம். இப்ப தான் அண்ணன் அமெரிக்கால Analystaa இருக்காரு. சீக்கிரம் வந்து தமிழ்நாட்ல காலேஜ் ஆரம்பிப்பாரு...

இப்படி எங்க அண்ணன் வாழ்க்கையில இருந்தே காப்பி அடிக்கற நீங்க அடுத்த படத்துல மட்டும் நமீதா அண்ணிய வெச்சி படம் எடுத்தீங்க... அவ்வளவு தான். அப்பறம் அண்ணன் அந்நியனாகிடுவாரு...

81 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி
மீள் - நல்வரவு!
I am the firshtttttuuuuuuuuuuuuuuuuuuuu!

தம்பி said...

அம்புட்டு கோவமா அவரு மேல....

ILA(a)இளா said...

Welcome Back! CVR?

NOPE NOT AT ALL..CANT BE

வெட்டிப்பயல் said...

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி
மீள் - நல்வரவு!//
மிக்க நன்றி...
எல்லாம் உங்களாசிதான்.

// I am the firshtttttuuuuuuuuuuuuuuuuuuuu!//
நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா?

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

அம்புட்டு கோவமா அவரு மேல...//

இது கோபம் இல்லப்பா... பாசம் ;)
என் குருதட்சனை :-)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

Welcome Back! CVR?

NOPE NOT AT ALL..CANT BE//

ஏன்???

VSK said...

.கொலை வெறி தணியட்டும்!!

அப்புறமா வரேன்!

:))

Anonymous said...

அப்பாவிபய புள்ளைன்னு நினைச்சேன்.அவரு இப்படியா?OH mY God

இராம் said...

அடபாவி.... லவ் சைண்டிஸ்ட் என்னாய்யா பண்ணாறாரு???

இம்புட்டு கொலைவெறியா???

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//(அண்ணாரின் டபுல் ஆக்டிங் படம்)//

ஆகா...
அதுல யாரு ரெமோ? யாரு அந்நியன்? விளக்கம் ப்ளீஸ்!

CVR...எங்கிருந்தாலும் உடனே வரவும்! - இதை எல்லாம் போட்டாகிராபி போஸ்டில் சொல்லவே இல்லையே CVR நீங்க!

ஏன் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம்? பாத்தீங்களா, இதுனால, சங்கர் போன்றவர்கள் எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!

//சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு//

பாலாஜி...பின்னிட்டீங்க!
என் சிஷ்யன் CVR பற்றிய இந்த வாசகம் 1000% உண்மை!
அதற்காக உங்களுக்கு அடியேனின் கோடானுகோடி நன்றிகள்! :-)

Anonymous said...

//அடபாவி.... லவ் சைண்டிஸ்ட் என்னாய்யா பண்ணாறாரு???

//

அந்த love knowledge எல்லாம் எங்கு இருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா ராம் அண்ணா.இது கொல வெறி இல்லை...சேவை...

Anonymous said...

நம்ப தமிழ் வலையுலகில் இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியமால் போச்சு.வெட்டி அண்ணா இன்று உங்களால் சிவிஆரின் அருமை பெருமைகள் நம் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு தெரிந்து இருக்கும்.உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி

.:: மை ஃபிரண்ட் ::. said...

ROTFL... :-))))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ithu ellam unmaithaan.. Shankar thannoda ideas copy panniddaarnnu eppothum CVR polambiddethaan iruppaaar.. rightuu!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

balajinne, innoru copy paste-ai vidduddeenggale?

athu ennanna:

.:: மை ஃபிரண்ட் ::. said...

CVR love panna ponnunkku bharatham theriyumnnu ivarum bharatham kaththukkidde kathai onnu Shankar Kadhalan padamaa develop panna kathaiyai vidduddeenggale!

ஜி said...

y this murder veri??

Sankara ketten.. ungala illa :D

G3 said...

Welcome back :))

Adada.. Latea vandhaalum latesta thaan vandhirukkeenga :)))

Pala maraikapatta unmaigalai veliyae kondu vandhu engal arivu kannai thirandhadharkku mikka nandri :))

CVR.. innum ungala pathi vera enna sollaama vitturukkeenga neenga?

G.Ragavan said...

அட்டடடடாஆஆஆஆஆஆ! ஒரு அப்பாவிப் பையன்னு நெனச்சிக்கிட்டிருந்தேனே...இதெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சேய்யா! வெட்டிங்குறதனாலயோ என்னவோ....தவகல்வகள வெட்டி வெட்டி வெச்சிருக்க.

எனக்கு ஒரு டவுட்டு?
// ஐஸ்வர்யா ராய் அண்ணனை துரத்தி துரத்தி டாவடித்தது நாடே அறியும். "அவர் சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு" அண்ணி கொடுத்த ஸ்டேட்மெண்ட் //

யாரோட சட்டைய? ஐஸ்வர்யா ராயோடதையா!!!!!!!!!!! இதெல்லாம் சொல்லவேயில்லையே!!!! சிவிஆர்!?!?!?!?!!?

செல்வன் said...

ஆஹா

இத்தனை விவகாரம் நடந்திருக்கா அண்ணன் விவகாரத்தில்?ஆனா அண்னன் பேரை சொல்லி ஷங்கர் ஏதோ கொஞ்சம் காசு சேர்த்திருக்கார்.மன்னிச்சு விட்டுடுவோமா இல்லை அன்னியன் ஸ்டைலில் தண்டனை குடுத்துடுவோமா?

(பாலாஜி நீங்க இப்ப இந்தியாவுலயா இல்லை திரும்பி வந்துட்டீங்களா?)

கோபிநாத் said...

\\ வெட்டிப்பயல் said...
//தம்பி said...

அம்புட்டு கோவமா அவரு மேல...//

இது கோபம் இல்லப்பா... பாசம் ;)
என் குருதட்சனை :-)
\\

CVR
இனிமேல் நானும் உங்கள் சீஷ்யன் ;)

CVR said...

////ILA(a)இளா said...

Welcome Back! CVR?

NOPE NOT AT ALL..CANT BE//
//
அண்ணாத்த வணக்கம்!!!
உண்மையை உணரும் உத்தமர் உள்ளவரை,இந்த வானம் சிரிக்கும்,அந்த பூமி சிவக்கும் (அர்த்தம் எல்லாம் கேக்காதீங்க!! ஏதோ ஃப்ளோவுல சொல்லிட்டேன்)

எலே வெட்டி!!! back with a bang -ஆ??
இன்னைக்கு நான் தான் கெடச்சேனா??
ஹ்ம்ம்ம்ம்ம்ம்
எல்லாம் இறைவன் செயல்!!! :-))

பாத்தியா?? ஒரு அப்பாவியை பத்தி அபாண்டமா பேசினா எப்படி உலகமே கொதிச்சு போவுதுன்னு???
இதத்தான் அண்ணாத்த சர்வேசன் Global warming-னு பதிவு எல்லாம் போடுறாரு!! ;)

Dreamzz said...

ROFL! CVR மேல இப்படி ஒரு கொல வெறியா!

Dreamzz said...

பாவம் CVR ... CVR, ithellam enkitta sollave illa!

CVR said...

"உளவுத்துறையின் சிறப்பு செய்தி"

பதிவர் துர்கா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சக பதிவர்களை CVR-க்கு எதிராக செயல்பட மிரட்டி வருவதாக தகவல் வந்திருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு எனக்கு எதிராக வெளியாகும் செய்திகள்/படங்கள் ஆகியவற்றை நண்பர்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

துர்கா said...

//பாவம் CVR ... CVR, ithellam enkitta sollave illa!//
இது எல்லாம் மன்மத கலையின் இரகசியங்கள்.இது எல்லாம் அவர் சொல்ல மாட்டார்.நாமே தெரிஞ்சுக்கொள்ள வேண்டும்

மின்னுது மின்னல் said...

கொல வெறி
///

பாதி உசுரு இருக்கும் போல் தெரியுதே...:)

Anonymous said...

//பதிவர் துர்கா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சக பதிவர்களை CVR-க்கு எதிராக செயல்பட மிரட்டி வருவதாக தகவல் வந்திருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு எனக்கு எதிராக வெளியாகும் செய்திகள்/படங்கள் ஆகியவற்றை நண்பர்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
//

hey....இது பொய்.ரவி அண்ணா இங்க பாருங்க சிவிஆர் இப்பொ என் பெயரை டேமேஜ் பண்ணுறார்.

உங்க அப்பாவி முகத்தைக் காட்டி எல்லாரையும் ஏமாற்றியது நீங்கதான்.நான் ஒன்னுமே பண்ணலை.

குசும்பன் said...

இப்படியா CVR ன் பெருமைகளை.
ஊருக்கு எடுத்து சொல்லும் அண்ணன் வெட்டி மேலும் பல திறமைகளை சொல்லவும்...

Anonymous said...

/"உளவுத்துறையின் சிறப்பு செய்தி"
//

அண்ணா,நீங்க பெரிய அமெரிக்கா president ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறது நல்லது இல்லை சொல்லிட்டேன்,

//பதிவர் துர்கா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சக பதிவர்களை CVR-க்கு எதிராக செயல்பட மிரட்டி வருவதாக தகவல் வந்திருக்கிறது.
//

என்ன அதிகாரம்?இதுவும் ஓவர்!!!
இது அன்பால் திரண்ட கூட்டம்.அதிகாரத்தாலோ இல்லை மிரட்டலாலோ திரண்ட கூட்டம் இல்லை என்று தாழ்மையுடன் கூறி கொள்கின்றேன்

//இதை கருத்தில் கொண்டு எனக்கு எதிராக வெளியாகும் செய்திகள்/படங்கள் ஆகியவற்றை நண்பர்கள் நம்பி ஏமாந்து போக வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//

அவங்க எல்லாம் ஏமாந்து போக மாட்டார்கள்.நீங்கள்தான் அவர்களை ஏமாற்றுவிர்கள்...இப்படி எல்லாம் சவுண்ட் விட்டு உண்மையை திசை திருப்ப வேண்டாம் அண்ணா

CVR said...

@துர்கா
//ரவி அண்ணா இங்க பாருங்க சிவிஆர் இப்பொ என் பெயரை டேமேஜ் பண்ணுறார்.

உங்க அப்பாவி முகத்தைக் காட்டி எல்லாரையும் ஏமாற்றியது நீங்கதான்.நான் ஒன்னுமே பண்ணலை.//

இப்போ உங்க கொல வெறி ரவி அண்ணா மேல திரும்பிடிச்சா??? :O

பாவம் (?!) எங்க அண்ணா!! அவர சும்மா விடுங்க!! :P

Anonymous said...

//பாவம் (?!) எங்க அண்ணா!! அவர சும்மா விடுங்க!! :P //

ரவி அண்ணாவை இந்த மாதிரி செண்டிமெண்டல் தாக்குதல்களை வைத்து உங்கள் வசம் திருப்ப பார்க்க வேண்டாம் சிவிஆர்.

ரவி அண்ணா மறுபடியும் சொல்லுறேன்.பாசமா கடமையா என்று வந்தால் கடமைதான் முதன்மையாக வரவேண்டும்.நம் கடமையையும் குறிக்கோளையும் மறக்க வேண்டாம் அண்ணா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//†hµrgåh said...
பாசமா கடமையா என்று வந்தால் கடமைதான் முதன்மையாக வரவேண்டும்//

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - அது
முடிந்த பின்னாலும் பதிவு இருக்கும்!
அது....கடமை.....கடமை!

CVR மேல் அடியேனுக்கு இருக்கும் பாசம் பிந்தி
கடமையே முந்தி!

என் அன்பு இள(வா)ல் CVR சார்பாக
சங்கர் மேல் காப்புரிமைச் சட்டப்படி
"மான நாஷ்டா" வழக்கு போடலாம் என்றும் உத்தேசித்துள்ளேன்! :-)

Bharani said...

thambi CVR perumai ippadhaan ellarukum puriyudhu....ippavaachum purijidhe ;)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உளவுத்துறையின் சிறப்பு செய்தி
பதிவர் துர்கா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சக பதிவர்களை CVR-க்கு எதிராக செயல்பட மிரட்டி வருவதாக தகவல் வந்திருக்கிறது//

மேலே கண்டது போலி உளவுத் துறை!
பொதுமக்களும் பதிவர்களும் இதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!

தமிழ்மணம் நன்கு அறிந்த எலிக்குட்டி சோதனை செய்த பின்னரே எது உண்மையான உளவுத்துறை என்பதை கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!

Vaimaiye Vellum!
-Ann Arbor Arasangam

Dreamzz said...

http://godshavespoken.blogspot.com/2007/07/blog-post_09.html

இங்க வந்து பாருங்க.. நம்ம CVR அ பத்தி..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சிவாஜி கதை அண்ணனோட எதிர்கால திட்டம். இப்ப தான் அண்ணன் அமெரிக்கால Analystaa இருக்காரு. சீக்கிரம் வந்து தமிழ்நாட்ல காலேஜ் ஆரம்பிப்பாரு.../

அப்படியே "தமிழ்ப்" பொண்ணெடுக்கவும் வருவாரு! அதனால் அங்கவை சங்கவை எல்லாரும் அண்ணன் பதவில் பின்னூட்டம் போட்டு, முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!

அதிலும் குறிப்பாக இசைக்கருவிகள் விற்கும் கடையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்! அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தவுடன், இசைக் கருவி வாங்க, அந்தக் கடைக்கு அண்ணன் வருவார்!

மேல் விவரங்களுக்கு அண்ணனின் இசை இன்பம் பதிவைக் காணுங்கள்!

அதில் அண்ணன் வீணை, புல்லாங்குழல், சாரங்கி என்று பலதரப்பட்ட இசைக் கருவிகளைப் பற்றியும் அதை வாசிக்கும் பெண்களுக்கு இருக்க வேண்டிய லட்சணங்கள் குறித்தும் குறிப்புகள் கொடுத்துள்ளார்!

Arunkumar said...

CVR அண்ணாத்தெ,

காஸ்ட் ஆஃப் ப்ளாக்கிங் ரொம்ப அதிகமாயிருச்சு !!

நீங்க analyst-ஆ இருந்து இதுவரக்க்கும் உங்க ப்ராஜெக்ட்டுக்காக சேத்து வச்ச 50சி-ல ஒரு 50% 25சி-ய சங்கம் வளர்ச்சி நிதிக்கு குடுத்துருங்க...

மர்டர் வெறி தனியுதானு பாப்போம்... :)

வெட்டிப்பயல் said...

// VSK said...
.கொலை வெறி தணியட்டும்!!

அப்புறமா வரேன்!

:))
//

தணிஞ்சிடுச்சி...

இப்ப வாங்க :-)

வெட்டிப்பயல் said...

//†hµrgåh said...
அப்பாவிபய புள்ளைன்னு நினைச்சேன்.அவரு இப்படியா?OH mY God
//

தங்கச்சி,
அவர் அப்பாவிதான். அதான் சங்கரு எவ்வளவு திருடினாலும் ஃபீல் பண்ணாம இருக்காரு ;)

வெட்டிப்பயல் said...

//இராம் said...
அடபாவி.... லவ் சைண்டிஸ்ட் என்னாய்யா பண்ணாறாரு???

இம்புட்டு கொலைவெறியா???
//

ராயலண்ணா,
அவர் நல்லவர்... உங்களை மாதிரி இல்லை.

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//(அண்ணாரின் டபுல் ஆக்டிங் படம்)//

ஆகா...
அதுல யாரு ரெமோ? யாரு அந்நியன்? விளக்கம் ப்ளீஸ்!
//
அது ரெண்டுமே ரெமோ தான்.. அந்நியன் இன்னும் வரல ;)

//
CVR...எங்கிருந்தாலும் உடனே வரவும்! - இதை எல்லாம் போட்டாகிராபி போஸ்டில் சொல்லவே இல்லையே CVR நீங்க!

ஏன் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம்? பாத்தீங்களா, இதுனால, சங்கர் போன்றவர்கள் எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
//
பதில் சொல்லுங்க தல... குருஜி கேக்கறார் இல்லை ;)

//
//சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு//

பாலாஜி...பின்னிட்டீங்க!
என் சிஷ்யன் CVR பற்றிய இந்த வாசகம் 1000% உண்மை!
அதற்காக உங்களுக்கு அடியேனின் கோடானுகோடி நன்றிகள்! :-)
//
எல்லாம் உங்க ஆசிர்வாதம் ;)

வெட்டிப்பயல் said...

//†hµrgåh said...
நம்ப தமிழ் வலையுலகில் இப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியமால் போச்சு.வெட்டி அண்ணா இன்று உங்களால் சிவிஆரின் அருமை பெருமைகள் நம் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு தெரிந்து இருக்கும்.உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி
//

ஏதோ என்னாலான உதவி... எல்லாம் CVR அண்ணாரின் பெருமை ;)

கப்பி பய said...

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சா?? முதல் டார்கெட் சிவிஆரா?? நடத்துங்க நடத்துங்க :)))

CVR said...

@KRS
/ஏன் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம்?//
எல்லாம் உங்களை பார்த்து கற்றுக்கொண்டதுதான் அண்ணா!! :-P

@கப்பி பய
//ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சா?? முதல் டார்கெட் சிவிஆரா?? நடத்துங்க நடத்துங்க :)))
//
"என்னைவிட" அப்பாவியா இருக்கீங்களே தலைவரே!!!
அடுத்த டார்கெட்டு நீங்கதான்னு பேசிக்கறாங்க!! :-((

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ROTFL... :-))))
//

நன்றி மை ஃபிரெண்ட் தங்கச்சி...

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
ithu ellam unmaithaan.. Shankar thannoda ideas copy panniddaarnnu eppothum CVR polambiddethaan iruppaaar.. rightuu!!!
//

அது தான் ஊருக்கே தெரியுமே ;)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
CVR love panna ponnunkku bharatham theriyumnnu ivarum bharatham kaththukkidde kathai onnu Shankar Kadhalan padamaa develop panna kathaiyai vidduddeenggale!
//

கதை அப்படியில்லை,
CVRக்கு பரதம் தெரியும்னு அவரை பிக் அப் பண்ண நக்மா பரதம் கத்துக்கிட்டாங்க. அது தான் உண்மை.

அவுங்க தான் ஜோக்கு சொல்லி கொடுத்து ர ரா பாட்டுக்கு ஆட சொன்னாங்க. அத பாத்துட்டு நம்ம இளைய திலகம் சொன்ன டயலாக் தான் "என்ன கொடுமை சரவணன்" ;)

வெட்டிப்பயல் said...

// ஜி said...
y this murder veri??

Sankara ketten.. ungala illa :D
//

சரியான கேள்வி ;)

வெட்டிப்பயல் said...

//G3 said...
Welcome back :))

Adada.. Latea vandhaalum latesta thaan vandhirukkeenga :)))
//
லேட்டா எல்லாம் வரலைங்க. கரெக்டா வந்திருக்கோம் ;)

//
Pala maraikapatta unmaigalai veliyae kondu vandhu engal arivu kannai thirandhadharkku mikka nandri :))
//
இது எங்க கடமை ;)

//
CVR.. innum ungala pathi vera enna sollaama vitturukkeenga neenga?
//
இன்னும் பல கதைகள் இருக்கு ;)

வெட்டிப்பயல் said...

// G.Ragavan said...
அட்டடடடாஆஆஆஆஆஆ! ஒரு அப்பாவிப் பையன்னு நெனச்சிக்கிட்டிருந்தேனே...இதெல்லாம் எனக்குத் தெரியாமப் போச்சேய்யா! வெட்டிங்குறதனாலயோ என்னவோ....தவகல்வகள வெட்டி வெட்டி வெச்சிருக்க.
//
தலைவா,
கடமையை செய்தேன். அவ்வளவுதான்.

//
எனக்கு ஒரு டவுட்டு?
// ஐஸ்வர்யா ராய் அண்ணனை துரத்தி துரத்தி டாவடித்தது நாடே அறியும். "அவர் சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு" அண்ணி கொடுத்த ஸ்டேட்மெண்ட் //

யாரோட சட்டைய? ஐஸ்வர்யா ராயோடதையா!!!!!!!!!!! இதெல்லாம் சொல்லவேயில்லையே!!!! சிவிஆர்!?!?!?!?!!?
//
இது என்ன டவுட்??? வேணாம் நான் விளக்கல. என்னை விட்டுடுங்க ;)

வெட்டிப்பயல் said...

//செல்வன் said...
ஆஹா

இத்தனை விவகாரம் நடந்திருக்கா அண்ணன் விவகாரத்தில்?ஆனா அண்னன் பேரை சொல்லி ஷங்கர் ஏதோ கொஞ்சம் காசு சேர்த்திருக்கார்.மன்னிச்சு விட்டுடுவோமா இல்லை அன்னியன் ஸ்டைலில் தண்டனை குடுத்துடுவோமா?
//
அண்ணன் மன்னிச்சிடலாம்னு சொல்றாரு. பொதுக்குழு தான் முடிவெடுக்கனும் ;)

//
(பாலாஜி நீங்க இப்ப இந்தியாவுலயா இல்லை திரும்பி வந்துட்டீங்களா?)
//
பாஸ்டன் வந்தவுடனே போஸ்ட் போட்டாச்சிண்ணா. ஏன்னா இது நம்ம கடமை ;)

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...
\\ வெட்டிப்பயல் said...
//தம்பி said...

அம்புட்டு கோவமா அவரு மேல...//

இது கோபம் இல்லப்பா... பாசம் ;)
என் குருதட்சனை :-)
\\

CVR
இனிமேல் நானும் உங்கள் சீஷ்யன் ;)
//
கோபி,
நான் பொய் சொல்லல... உண்மையாலுமே என் கதைகளுக்கு அவர் தான் மானசீக குரு. அவர் ஆங்கில கதைகளை படிச்சி பாருங்க.

வெட்டிப்பயல் said...

//CVR said...
////ILA(a)இளா said...

Welcome Back! CVR?

NOPE NOT AT ALL..CANT BE//
//
அண்ணாத்த வணக்கம்!!!
உண்மையை உணரும் உத்தமர் உள்ளவரை,இந்த வானம் சிரிக்கும்,அந்த பூமி சிவக்கும் (அர்த்தம் எல்லாம் கேக்காதீங்க!! ஏதோ ஃப்ளோவுல சொல்லிட்டேன்)
//

இது அண்ணன் சங்கரை பார்த்து பேசிய டயலாக் ;)

//
எலே வெட்டி!!! back with a bang -ஆ??
இன்னைக்கு நான் தான் கெடச்சேனா??
ஹ்ம்ம்ம்ம்ம்ம்
எல்லாம் இறைவன் செயல்!!! :-))
//
அது சரி ;)

//
பாத்தியா?? ஒரு அப்பாவியை பத்தி அபாண்டமா பேசினா எப்படி உலகமே கொதிச்சு போவுதுன்னு???
இதத்தான் அண்ணாத்த சர்வேசன் Global warming-னு பதிவு எல்லாம் போடுறாரு!! ;)
//
இதுவும் டைரக்டர் சங்கருக்கான சவால் ;)

வெட்டிப்பயல் said...

//Dreamzz said...
ROFL! CVR மேல இப்படி ஒரு கொல வெறியா!
//

இது வெறி இல்லை Dreamz... பாசம் ;)

வெட்டிப்பயல் said...

//Dreamzz said...
பாவம் CVR ... CVR, ithellam enkitta sollave illa!
//
அதான் நாங்க சொல்லிட்டமே ;)

வெட்டிப்பயல் said...

// CVR said...
"உளவுத்துறையின் சிறப்பு செய்தி"
//
எது? கேப்டன் நடிச்ச உளவுத்துறையா?

வெட்டிப்பயல் said...

//துர்கா said...
//பாவம் CVR ... CVR, ithellam enkitta sollave illa!//
இது எல்லாம் மன்மத கலையின் இரகசியங்கள்.இது எல்லாம் அவர் சொல்ல மாட்டார்.நாமே தெரிஞ்சுக்கொள்ள வேண்டும்
//

இது வேறையா?

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...
கொல வெறி
///

பாதி உசுரு இருக்கும் போல் தெரியுதே...:)
//

அப்படியா சொல்ற மின்னலு.. இரு பாக்கறேன்.

வெட்டிப்பயல் said...

//குசும்பன் said...
இப்படியா CVR ன் பெருமைகளை.
ஊருக்கு எடுத்து சொல்லும் அண்ணன் வெட்டி மேலும் பல திறமைகளை சொல்லவும்...
//

இன்னும் அவர் அருமை, பெருமைகளை சொல்ல ஒரு வில்லுப்பாட்டுக்கு தான் ஏற்பாடு பண்ணனும். செய்வார்களா இசையின்பக்காரர்கள் ;)

வெட்டிப்பயல் said...

//Bharani said...
thambi CVR perumai ippadhaan ellarukum puriyudhu....ippavaachum purijidhe ;)
//

அது தான் நமக்கு வேணும்.
இன்னும் நம் கடமை தொடரும்...

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சா?? முதல் டார்கெட் சிவிஆரா?? நடத்துங்க நடத்துங்க :)))
//

இப்பதான் ஆட்டம் ஆரம்பிக்குது கப்பி... அண்ணனோட பெருமைய சொல்லி ஆட்டத்தை ஆரம்பிக்கனும்னு தான் இப்படி ஆரம்பிக்கிறேன் ;)

நெல்லை காந்த் said...

G.Ragavan said...
/////
எனக்கு ஒரு டவுட்டு?
// ஐஸ்வர்யா ராய் அண்ணனை துரத்தி துரத்தி டாவடித்தது நாடே அறியும். "அவர் சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு" அண்ணி கொடுத்த ஸ்டேட்மெண்ட் //

யாரோட சட்டைய? ஐஸ்வர்யா ராயோடதையா!!!!!!!!!!! இதெல்லாம் சொல்லவேயில்லையே!!!! சிவிஆர்!?!?!?!?!!?
//////

Eppa Natandhathu ithu...

SurveySan said...

:)

ILA(a)இளா said...

CV Raman?

நாகை சிவா said...

சங்கர் மேல் ஒரு வழக்கு பதிவு செய்து விடலாமா? ;-)

இம்சை அரசி said...

CVR!!!!!! உங்கள நான் ரொம்ப நல்லவஅஅஅஅஅஅஅருன்னு நெனச்சேன் ;)))

CVR said...

@நாகை சிவா
//சங்கர் மேல் ஒரு வழக்கு பதிவு செய்து விடலாமா? ;-) //
மொதல்ல சங்கரு வெட்டி மேலே வழக்கு பதிவு பண்ணாம இருக்கனுமேன்னு வேண்டிக்கோங்க!!

@இம்சை அரசி
//CVR!!!!!! உங்கள நான் ரொம்ப நல்லவஅஅஅஅஅஅஅருன்னு நெனச்சேன் ;))) //
நீங்களே என்னை பத்தி இப்படி தப்பா நெனைச்சிட்டீங்களே அக்கா!!
அவ்வ்வ்வ்வ்வ்!! :-((

செந்தில் said...

வெல்கம் பேக் வெட்டி, வரும்போதே நல்லா பெரிய வெடியோடத்தான் வர்றீங்க... நடத்துங்க :)

துளசி கோபால் said...

என்ன நம்ம CVRஆஆஆஆஆஆ?

பால்வடியும் முகத்துக்குப்பின்னே இவ்வளோவும் இருக்கா?
சொல்லவேயில்லை?

அது போகட்டும். ஏன் இந்தக் கொ(க)லை வெறி?

மு.கார்த்திகேயன் said...

CVR, hmm unga per nallave parakkuthu,..vazhthukkal

மு.கார்த்திகேயன் said...

Balaji, Nalla karpanai.. eppadiyaa yosikkireenga.. naan etho sivaji la sothappunathukku thaan letteronnu odi vanthen..

மு.கார்த்திகேயன் said...

odi vantha enakkum, naan ninachcha matter emaarramnaalum, cvr vishayam sweet surprise :)

வெட்டிப்பயல் said...

//நெல்லை காந்த் said...

G.Ragavan said...
/////
எனக்கு ஒரு டவுட்டு?
// ஐஸ்வர்யா ராய் அண்ணனை துரத்தி துரத்தி டாவடித்தது நாடே அறியும். "அவர் சட்டைய கழுட்டினா சல்மான் கான், சட்டைய போட்டா ஷாருக்கானு" அண்ணி கொடுத்த ஸ்டேட்மெண்ட் //

யாரோட சட்டைய? ஐஸ்வர்யா ராயோடதையா!!!!!!!!!!! இதெல்லாம் சொல்லவேயில்லையே!!!! சிவிஆர்!?!?!?!?!!?
//////

Eppa Natandhathu ithu... //

அதானே எனக்கு கூட தெரியாது

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

:) //

:-))

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

CV Raman? //

ஆமா... அவருக்கு தான் ஐஸ்வர்யா ராய் ப்ரபொஸ் பண்ணாங்க...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

சங்கர் மேல் ஒரு வழக்கு பதிவு செய்து விடலாமா? ;-) //

பண்ணிட்டா போச்சி...

CVR என்ன சொல்றீங்க?

வெட்டிப்பயல் said...

// செந்தில் said...

வெல்கம் பேக் வெட்டி, வரும்போதே நல்லா பெரிய வெடியோடத்தான் வர்றீங்க... நடத்துங்க :) //

மிக்க நன்றி செந்தில்...
வரும் போதே நம்மல டென்ஷன் பண்ணா நாம என்ன பண்ண?

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

என்ன நம்ம CVRஆஆஆஆஆஆ?
//
ஆஆஆஆஆஆமா டீச்சர்...

//
பால்வடியும் முகத்துக்குப்பின்னே இவ்வளோவும் இருக்கா?
சொல்லவேயில்லை?
//
இன்னும் இருக்கு.. சீக்கிரமே வெளியில் வரும் ;)

// அது போகட்டும். ஏன் இந்தக் கொ(க)லை வெறி? //
எல்லாம் அரசியல்ல ஜகஜம் ;)

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

Balaji, Nalla karpanai.. eppadiyaa yosikkireenga.. naan etho sivaji la sothappunathukku thaan letteronnu odi vanthen.. //

மிக்க நன்றி கார்த்திகேயன்...
எல்லாம் சிவாஜி பத்தி எழுதும் போது நம்மலும் அதை பத்தி எழுதினா நல்லா இருக்காது இல்லை.. அதான் ;)

siva gnanamji(#18100882083107547329) said...

மொட்டை பாஸ்-
நடேசன் பார்க் சந்திப்பு அன்னிக்கு
பாலபாரதி இருந்த ஸ்டைல் தானே?
அத ஏன் யாரும் சொல்ல்மாட்றீங்க?