தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, June 02, 2007

தமிழ்மண வாசிப்பில்...

தமிழ்மண நிர்வாகம் கடந்த சில வாரங்களாக பல நல்ல மாற்றங்களை கொண்டு வந்து பதிவர்களுக்கு ஒரு வித புது அனுபவங்களை தருவதற்கு அவர்களுக்கு என் மனமுவர்ந்த பாராட்டுக்கள். நல்ல எழுத்துக்களை படிப்பது ஒரு சுகம், அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்வது அதைவிட சுகம். பொன்னியின் செல்வனைப் படித்த சுவையைவிட அதைப் பற்றிப் பேசி அடைந்த மகிழ்ச்சிதான் அதிகம். அதே போல் இந்த வாரம் என்னை கவர்ந்த பதிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

பஞ்சதந்திரத்துல கமல் சொல்லுவாரு, "மாமா நான் ஒண்ணு சொல்லட்டுமா? கேள்வி கேக்கறது சுலபம், ஆனா பதில் சொல்றது கஷ்டம்னு", ஆனா உண்மை என்னனா சரியான நபர்களிடம் சரியான கேள்விகள் கேட்டு அவரை மக்களிடம் கொண்டு செல்வதும் கடினம் தான். அந்த வகையில் இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது - கேப்பங்கஞ்சி வித் கவிதாவுடன் லிவிங் ஸ்மைல் வித்யா. கவிதாவினுடைய கேள்விகளும் அதற்கு லிவிங் ஸ்மைல் அளித்த பதில்களும் அதற்கு பிறகு பின்னூட்டங்களில் நடந்த விவாதங்களும் அருமையாக இருந்தன.

நகைச்சுவையா எழுதறது அவ்வளவு சுலபமில்லை. சில சமயம் நம்ம நகைச்சுவைனு எழுதிட்டு படிச்சு பார்த்தா நமக்கே சிரிப்பு வராது. சில சமயம் சீரியஸ் பதிவுகளே நகைச்சுவையாகறதும் உண்டு. நல்ல நகைச்சுவை படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். அந்த வகையில் நம்ம சித்தப்பு செய்த அட்டகாசங்களை படித்து என் டென்ஷனெல்லாம் பறந்து போனதற்கு தேவிற்கு நன்றி சொல்ல வேண்டும். ரொம்ப அருமையா இருந்தது.

"VCR
ரீவைண்ட் பட்டன் இருக்கற மாதிரி வாழ்க்கைலயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்" முதல்வன் படத்துல வர இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். பழசை நினைச்சி பாக்கறதே ஒரு சந்தோஷம் தான். அதுவும் பழைய கடிதங்களை படித்து பார்க்கும் போது நாம் அந்த காலகட்டத்திற்கே டைம் மிஷினில் சென்று விடுகிறோம். ஆனா அந்த மாதிரி கடிதம் எழுதுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிறது. தொலைந்து போன கடிதங்கள் என்ற இந்த கவிதையை படிக்கும் போது நான் விடுதியில் படிக்கும் போது வாரம் தவறாமல் எனக்கு என் அப்பா, அம்மா எழுதும் கடிதங்களும், நான் பள்ளி மாறியவுடன் என் நண்பர்கள் எழுதும் கடிதங்களும் தான் நியாபகம் வந்தது. கணினிகள் வராமலே இருந்திருக்கலாமோ???

சித்திரை மாசம் வந்தா வீட்ல ஒரே புழுக்கமா இருக்கும்னு மொட்டை மாடில கட்டில் போட்டு படுக்கறது வழக்கம். அப்ப அப்படியே வானத்தையும் நட்சத்திரத்தையும் பார்த்துட்டு இருப்பேன். மனசுல பல கேள்விகள் எழும் (ஆனா இந்த நிலாவை பார்த்து கவிதை எல்லாம் வந்ததில்லை). அப்படி எழும் கேள்விகள் தூங்கி எழுந்ததும் மறைந்து விடும். என்றும் பதில் தேடத் தோன்றியதில்லை. ஆனால் என்னை போல் இவருக்கும் அந்த கேள்விகள் தோன்றியிருக்கிறன. ஆனால் என்னைப்போல் இல்லாமல் உருப்படியாக அதற்கெல்லாம் விடை தேட முயன்று ஓரளவு அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக வானுக்குள் விரியும் அதிசயங்கள் என்ற தொடரில் அருமையாக எழுதி வருகிறார் CVR.

கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப மையங்கள் வரப்போகின்றன என கேட்டு மகிழ்ந்தேன். ஆனால், வரப்பு உயர்ந்த வீடு கதையை படித்ததும் மனம் கொஞ்சம் கனமானது என்பது உண்மை. எதை இழந்து எதை பெறுகிறோம் என்று புரியவில்லை.

இந்த வாரத்தில் படித்த மற்றொரு அருமையான கதை காணவில்லை. வசதியில்லாதவர்கள் தவறு செய்ய தயங்கமாட்டார்கள் என்ற பொதுப்புத்தியைச் சாடும் கதை. மற்றும் பாலபாரதியின் துரைப்பாண்டி படித்து மனதில் ஏதோ செய்தது (இது அவர் டிசம்பரில் எழுதிய கதைதான் என்றாலும் தற்போது வெர்ட்பிரஸை இணைக்கும் போது மறுபடியும் தமிழ்மணத்தில் வந்ததால் சேர்த்துவிட்டேன்). துரைப்பாண்டிகளை நாம் பல இடங்கள் பார்க்கத்தான் செய்கிறோம்.

தமிழில் விளையாட்டைப் பற்றிய புத்தகங்களை பலர் விரும்பி படிப்பதால் நிறைய புத்தகங்கள் வரும் என்று சொல்கின்ற வெங்கடேஷின் இந்தப்பதிவைப் படித்து மகிழ்ந்தேன். க்ரிக்கெட் ஏனோ வெறுத்து போய்விட்டது.

Google Talk இல் அடுத்து வரப்போகும் மாற்றத்தை பற்றி ஊரோடி பகி சொல்லியது சீக்கிரம் நடந்தால் உலகமெங்குமுள்ள நம் வலைநண்பர்களிடம் தினமும் மொக்கை போடலாம் என்று நினைத்து மகிழ்ந்தேன். மேலும் சிந்தாநதியின் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழை எப்படி எழுதலாம் என்ற பதிவும், ஃபயர்ஃபாக்ஸ் படங்களை சுருக்கி காண்பிப்பதை எப்படி தடுப்பது? என்ற பதிவும் பயனுள்ளதாக அமைந்தது.

ஜி.ராகவனின் இலக்கியத்தில் இறை, உங்கள் நண்பன் சராவின் கிராம தேவதைகளுக்கான வழிபாடு போன்ற தொடர்கள் அருமையாக ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து வெற்றிகரமாக எழுத வாழ்த்துக்கள். இப்படி இந்த வாரத்தில் பல இடுகைகளைத் தமிழ்மணத்திலிருந்து படித்து மகிழ்ந்தேன். நீங்கள் படிக்கத் தவறியிருந்தால் படித்து மகிழவும்.

12 comments:

Anonymous said...

where is my link


m

நாகு (Nagu) said...

எங்கள் பதிவுகளில் இரண்டைப் பற்றி எழுதியிருப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால், இரண்டும் 'தொலைந்து போன' விஷயங்கள் :-(

அந்தக் காலத்தில் முகவரிகள் எழுதி வைக்கும் டைரி ஞாபகம் இருக்கிறதா? அதில் சிலரின் வரலாறே அடங்கி இருக்கும். எனது கல்லூரி முகவரி(ஒவ்வொரு வருடமும் ஒன்று), வேலைக்காரணத்தினால் பல ஊர் மாறி பல முகவரிகள் என்று என் தந்தையின் டைரியில் அடித்து அடித்து எழுதப்பட்டிருக்கும். இப்போது எல்லாம் - simple overwrite in the orgranizer or computer address book :-(

அதைத்தவிர என் தந்தைக்கே உரிய குணாதிசயம்கள்: சந்திரசேகரா - xல் பார்! ஊரில் ஆயிரம் சந்திரசேகர் இருந்தால் நான் என்ன செய்வது. x-லதான் நம்ப ஊர்ல யாரும் இல்லையே.

CVR said...

பல நல்ல பதிவுகளை பார்த்து படித்தேன்!!
சுட்டிக்காட்டியதற்கு நன்றி!! :-)

மு.கார்த்திகேயன் said...

நல்ல ஒரு பார்வை பாலாஜி.. விட்டுப்போயிருந்த சிலவற்றை படிக்க வழி வகுத்தது.. நன்றி

VSK said...

சிறப்பான பதிவுகளைச் சுட்டியதற்கு மிக்க நன்றி, பாலாஜி.

ஒரு சிலவற்ரைப் படித்திருக்கிறென்.
மிச்சத்தையும் படித்து விடுகிறென்.

பாலாஜி பார்க்குல நல்லாவே காத்து வருது!

சதங்கா (Sathanga) said...

நாகு சொன்னது போல எங்கள் பதிவுகளில் இரண்டை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி பாலாஜி.

'வரப்பு உயர்ந்த வீடு' கதையைப் பதிந்து விட்டு, வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களுக்கு காத்திருந்து, அதுவும் வராமல் போகவே மனம் நொந்தது நிஜம். நாகு தான் தட்டிக் கொடுத்தார்.

இப்போது, உங்கள் 'தமிழ்மண வாசிப்பில்' எங்கள் கதையும், கவிதையும் உங்களைக் கவர்ந்ததில், எல்லாரும் வாசிக்கிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

where is my link


m //

Where is ur link in TM???

வெட்டிப்பயல் said...

நாகு,
எப்பவுமே ஃப்ளாஷ் பேக்குக்கு ஒரு மவுசு இருக்கு...

அதுதான் அந்த கவிதையை படிக்க வெச்சது. அதுவுமில்லாம சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சதால நிறைய கடிதங்கள் எழுதியதுண்டு.

வாரத்துக்கு ஒண்ணு இல்லைனா ரெண்டு எழுதுவேன். அதுதான் உங்க கவிதை பிடிக்க ஒரு முக்கிய காரணம் :-)

Sathia said...

நல்ல தொகுப்பு. சில விடுபட்டவைகளை(விடுபட்டவை உட்பட) சுட்டியதற்கு நன்றி. வலைச்சர பாதிப்பு இன்னும் போகலை போல இருக்கு. ;-)

SurveySan said...

You are invited by சர்வேசன் for the 'எட்டு' play!

Click here for details and respond!

நன்றி!

ப்ரசன்னா said...

வெட்டி, 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.

http://tcsprasan.blogspot.com/2007/06/8.htmlச்

கவிதா கெஜானனன் said...

வெட்டி, எப்படி இருக்கீங்க.. ?? பதிவை சுட்டியமைக்கு நன்றி.. எனக்கு மிக பிடித்த கேப்பங்கஞ்சி அதுதான்..

நன்றி... :)