தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, May 28, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - S.J Surya

க: இந்த டெவில் ஷோ நடத்தி ரொம்ப நாளாச்சிப்பா. இவனை பார்த்ததுக்குப்பறம் கண்டிப்பா இவனுக்கு ஒண்ணு நடத்தியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன். சரி இன்னைக்கு நம்மகிட்ட மிதி வாங்க வாந்திருக்கும் சிறப்பு விருந்தினர் திரு.சூர்யா. மன்னிக்கனும் திரு.எஸ்.ஜே.சூர்யா. (இவன் இனிஷியல் சொல்லலைனா அப்பாவி ஒருத்தனை திட்டற மாதிரி ஆகிடும்)

இவனை பத்தி எல்லாம் அதிகமா சொல்ல தேவையில்லை.தமிழ்நாட்டு சினிமாக்கு வந்த சாபத்துல ஒண்ணுதான் இது. சரி நிகழ்ச்சிக்கு போகலாம். வாடா கலர் சட்டி மண்டையா. அது என்னடா தலைக்கு மேல கலர் கலரா இருக்கு.

சூ: முடி எப்படி இருக்குனு முக்கியமில்லை அதுக்கு கீழ இருக்கறது எப்படி பயன்படுத்தறன்றது தான் முக்கியம்...

க: டெய் ட்ரிப்பில் மீனிங் மண்டையா... என்ன கொழுப்பு இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ

சூ: நான் மூளையை சொன்னேன். இப்படித்தான் நான் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கறாங்க ஆங்...

க: டேய் இந்த டகால்ட்டி எல்லாம் எனகிட்ட வேணாம்... மிதி வாங்கியே செத்துடுவ. நீ எல்லாம் எதுக்குடா நடிக்க வந்த. மக்கள் பாவம் இல்லையா?

சூ: எனக்கு நடிக்கறதுல பெருசா இண்ட்ரஸ்டே இல்லை. நான் நியூ படம் கதையை அஜித் சார்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அந்த கதையை கேட்டு இதுக்கு நீ தான் சரியான ஆள்னு சொல்லிட்டாரு. அதனால தான் நான் நடிக்க வந்தேன்.

க: எங்க அந்த கதையை எப்படி சொன்னனு சொல்லு

சூ: சொல்றேன். அஜித் நான் எப்படி நடிக்கறனு பாருங்க. அதே மாதிரியே நடிக்கனும். நான் பண்ற மாதிரியே இருக்கனும். உங்க ஸ்டைல் வேணாம். நான் இப்படி கையை ஆட்றேன் பாருங்க. அதே மாதிரியே பண்ணனும். சிம்ரன் விசில் மாட்டியிருப்பாங்க. அதையே பாக்கனும். நான் பாக்கறேன் பாருங்க அதே மாதிரி. அத பாத்துக்கிட்டே அவுங்க கிட்ட போகனும். அப்படியே கிரண்கிட்ட நான் பேசற மாதிரியே பேசனும். அவுங்க வீட்டுக்காரர் இல்லாத நேரத்துல அவுங்க வீட்டுக்கு போய் ஆணி அடிக்க உதவி பண்ணனும். நான் சொல்றதை நல்ல கவனிச்சிட்டீங்க இல்லை. என்ன மாதிரியே பண்ணா போதும். சரியானு சொன்னேன்

க: அதுக்கு அவர் என்ன சொன்னாரு

சூ: இந்த கண்றாவிய நீங்களே பண்ணலாம். நான் எதுக்குனு சொன்னாரு.

க: அப்பறம்

சூ: அவர் என் குருநாதர் மாதிரி. எனக்கு வாழ்க்கை தந்தவர். என் ரூம்ல அவர் போட்டோவை வெச்சி தான் கும்பிடறேன். அதனால அவர் சொன்ன மாதிரி நானே நடிக்க வந்துட்டேன். அவர் பேச்சை நான் எப்படி மீற முடியும் ஆங்...

க: டேய் ஓவர் ஆக்டிங் மண்டையா. அவர் நீ சொன்ன கதை கேவலமா இருக்குனு சொன்னதை அப்படியே உல்டாவாக்கிட்டு நீ எங்கள கொடுமை பண்ண வந்துட்ட. ஆமாம்... நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?

சூ: நான் யாரை மாதிரியும் நடிக்கல. எப்பவும் வாங்கற காசுக்கு மட்டும் நடிச்சா போதாதுனு நினைக்கிற ஆள் நான். அதனால தான் கொஞ்சம் ஓவரா நடிக்க வேண்டியிருக்கு. அதை தான் நான் ஜோக்கும் சொல்லி கொடுத்தேன். பிக் அப் பண்ணிக்கிட்டாங்க

க: ஏன்டா டபுல் மீனிங் ட்ரிபில் மீனிங்ல பேசிட்டு அலையற?

சூ: என் படத்துல எங்கயாவது அசிங்கமா டயலாக் இருந்த சொல்லுங்க? நான் சினி இண்டஸ்ட்ரிய விட்டே போயிடறேன். நான் டயலாக் அசிங்கமா இருக்கக்கூடாதுனு யோசிச்சி யோசிச்சி எழுதறேன்...

க: ஆமா. டபுல் மீனிங்ல எப்படி எழுதறதுனு யோசிச்சி யோசிச்சி எழுதுடா. அந்த நேரத்துல ஒழுக்கமா ஒரு கதை எழுதனா என்ன உன் சொத்தா குறைஞ்சிடும். உன்னையெல்லாம் முதல்ல பொது நல வழக்கு போட்டு உள்ள தள்ளனும். அது ஏன்டா எல்லா படத்துலயும் பொம்பளை பொறுக்கியாவே அலையற?

சூ: நான் பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன். பொண்ணுங்க தான் எல்லா படத்துலயும் என் பின்னாடி வருவாங்க.

க: டேய் நீ நடிச்ச படம் எதுவும் நான் பாத்ததில்லைனு தைரியத்துல பேசிட்டு இருக்க. நான் உன் படம் பாத்ததுக்கு அப்பறம் உனக்கு சங்கு தான். அப்பறம் ஏண்டா சென்சார் போர்ட்ல இருக்கற ஒரு லேடியை செல் போனால அடிச்ச?

சூ: நான் ஒண்ணும் அடிக்கல. செல்போனை தூக்கி போட்டா கேட்ச் பிடிக்கறாங்களானு பார்த்தேன்...

க: ஆமா இவர் க்ரெக் சேப்பல். அவுங்க யுவ்ராஜ் சிங். இவர் கேட்ச் ப்ராக்டீஸ் கொடுக்கறாரு. இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேணாம். அந்த சீன் பாட்டை வைக்கவிடலனு அடம்பிடிச்சி அந்த பொண்ணை செல்போன்ல அடிச்சதுமில்லாம இந்த மாதிரி டக்கால்டி வேலை எல்லாம் பண்ணிட்டு திரியற நீ. அந்த படத்துல கிரண் ரோலை எதுக்குடா கொண்டு வந்த?

சூ: கிரண் அந்த படத்துல ஒரு வார்த்தையாவது ஆபாசமா பேசுனாங்களா? நீங்களே சொல்லுங்க. செவுத்துல ஆணி அடிக்க கூப்பிட்டாங்க. அதுதான் அவுங்க ரோல். அதுக்கு போய் எல்லாம் ஆபாசம்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்.

க: இந்த முடிச்சவிக்கித்தனமெல்லாம் என்கிட்ட வேணாம். நானே கேப்மாரிதான்டா. இதுக்கு மேலயும் நீ நல்லவன் மாதிரி எஃபக்ட் கொடுத்தனு வை. அவ்வளவு தான். அப்பறம் ஏதோ படத்துக்கு 36-24-36னு பேர் வைக்கனும்னு சுத்திட்டு இருந்தியே. அது என்ன ராசா?

சூ: அது படத்துல ஹீரோயின் போன் நம்பர். அதை கண்டுபிடிக்க ஹீரோ என்ன என்ன ஆராய்ச்சி பண்றார்னு சொல்றது தான் கதை

க: ஓ... 36-24-36ஐ கண்டுபிடிக்க ஹீரோ பண்ற ஆராய்ச்சி தான் கதையா? அப்பறம் எல்லா ஊர்லயும் போன் நம்பர்க்கு முன்னாடி 2 போட சொல்லிட்டாங்களே.. அப்ப என்ன 236-24-36னு படத்துக்கு பேர் வைப்பயா?

சூ: அதனாலதானே படத்துக்கு BFனு வைக்கலாம்னு முடிவெடுத்தேன்...

க: ஓ! முன்ன சொன்னதவிட இது ரொம்ப நல்ல பேர் இல்லை???

சூ: ஆமாம். அது Best Friendsனு அர்த்தம். ஆனா அதை எல்லாம் அரசியல் பண்ணிட்டாங்க

க: ஆமாம்டா அதுக்கு BFனு தான் வைக்கனும். அதுக்கு மட்டும் இல்லை உன் படத்துக்கு எல்லாம் அப்படி தான் வைக்கனும். இனிமே நீ மட்டும் டைரக்ட் பண்ண, உன்னை பொது நல வழக்குல கேஸ் போட்டு நானே உள்ள தள்ளிடுவேன்.

சூ: அப்ப நடிக்கலாமா?

க: நடிச்சா உன்னை கொல பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன். இதுக்கு மேல இந்த பக்கம் எட்டி பார்க்காத நாயே. ஒழுங்க ஊர பார்த்து ஓடி போயிடு... சொல்லிவிட்டு கவுண்டர் ஒரு கோப லுக் விட எஸ்.ஜே.சூர்யா தலை தெரிக்க ஓடுகிறார்.

50 comments:

Udhayakumar said...

சூப்பரப்பு... அப்படியே ஒரு காப்பி அந்த கலர் மண்டையனுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணனும்...

Unknown said...

//
நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

Superruuuu

Unknown said...

Welcome back கவுண்டர்

Santhosh said...

வழக்கம் போல கலக்கல் வெட்டி அப்படியே ஒரு காப்பி எடுத்து அந்த "அங்" வாயனுக்கு அனுப்பு.


//அது என்னடா தலைக்கு மேல கலர் கலரா இருக்கு.

சூ: முடி எப்படி இருக்குனு முக்கியமில்லை அதுக்கு கீழ இருக்கறது எப்படி பயன்படுத்தறன்றது தான் முக்கியம்...//
ஹ ஹஹ.. அண்ணே இது எல்லாம் காரணம் கீழே இருக்குற வளமையான மண்ணு தான்ணே...

//சூ: இந்த கண்றாவிய நீங்களே பண்ணலாம். நான் எதுக்குனு சொன்னாரு.//
ROFTL

//சூ: நான் பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன். பொண்ணுங்க தான் எல்லா படத்துலயும் என் பின்னாடி வருவாங்க.//
அடங்கொக்கா மக்கா நினைப்பு தான்டா பொழப்பை கெடுக்கும்.

Anonymous said...

அவரு நடிச்ச வியாபாரின்னு ஒரு நல்ல 'படம்' இருக்கே.அதைப் பத்தி சொல்லவே இல்லையே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னாப்பா இது...
தமிழ்-ல பேர் வைக்கலைன்னாலும் திட்டுறாய்ங்க...
இங்கிலீஷ்-ல பேர் வைச்சாலும் திட்டறாய்ங்க!
வம்பே வேணாம்னு, நல்ல புள்ளையா
36-24-36 ன்னு நம்பர்ல பேரு வைச்சா...அப்பக் கூடத் திட்டறாங்கள சாமீ....

காலம் கலி காலம் ஆகிப் போச்சு, பாலாஜி :-)

வெட்டிப்பயல் said...

//Udhayakumar said...

சூப்பரப்பு... அப்படியே ஒரு காப்பி அந்த கலர் மண்டையனுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணனும்... //

இத பார்த்தாவடு அவர் திருந்துவார்னு நினைக்கறீங்க... எனக்கு நம்பிக்கை இல்லை

வெட்டிப்பயல் said...

//நெல்லை காந்த் said...

//
நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

Superruuuu //

நெல்லைகாந்த்,
நன்றி... நான் மட்டும் தான் அப்படி நினைக்கிறேனு நினைச்சேன்... நீங்களும் இருக்கீங்களா?

ரொம்ப டாங்கிஸ் :-)

வெட்டிப்பயல் said...

//நெல்லை காந்த் said...

Welcome back கவுண்டர் //

மிக்க நன்றி காந்த் ;)

Anonymous said...

//
நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

:-)))))))))
வெட்டி,
என்னை அசிங்கப்படுத்திட்டாரு கவுண்டர்னு பாண்டு கேஸ் போட்டுடப் போறாரு.. பார்த்து செய்யுங்கடே!!

சாத்தான்குளத்தான்

வெட்டிப்பயல் said...

//வழக்கம் போல கலக்கல் வெட்டி அப்படியே ஒரு காப்பி எடுத்து அந்த "அங்" வாயனுக்கு அனுப்பு.
//
சந்தோஷ்,
நீங்களும் சரியா புரிஞ்சி வெச்சிருக்கீங்க அவரை :-)

//

//அது என்னடா தலைக்கு மேல கலர் கலரா இருக்கு.

சூ: முடி எப்படி இருக்குனு முக்கியமில்லை அதுக்கு கீழ இருக்கறது எப்படி பயன்படுத்தறன்றது தான் முக்கியம்...//
ஹ ஹஹ.. அண்ணே இது எல்லாம் காரணம் கீழே இருக்குற வளமையான மண்ணு தான்ணே...
//
:-))

//
//சூ: இந்த கண்றாவிய நீங்களே பண்ணலாம். நான் எதுக்குனு சொன்னாரு.//
ROFTL

//சூ: நான் பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன். பொண்ணுங்க தான் எல்லா படத்துலயும் என் பின்னாடி வருவாங்க.//
அடங்கொக்கா மக்கா நினைப்பு தான்டா பொழப்பை கெடுக்கும்.//
//
இதெல்லாம் அவனுக்கு தானா தெரியனும். என்ன பண்ண?

இலவசக்கொத்தனார் said...

என்ன இது? பேட்டியா போட்டியா? நம்ம ஸ்டார் வாரத்தில்தானா டெவில் ஷோ எல்லாம் போட்டு வம்பு பண்ணனும்?

உம்மை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். பதிவைப் படிச்சிட்டு வரேன்.

வெட்டிப்பயல் said...

//துர்கா|†hµrgåh said...

அவரு நடிச்ச வியாபாரின்னு ஒரு நல்ல 'படம்' இருக்கே.அதைப் பத்தி சொல்லவே இல்லையே? //

அண்ணன் நல்லா இருக்கறது பிடிக்கலையா உனக்கு???

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

என்னாப்பா இது...
தமிழ்-ல பேர் வைக்கலைன்னாலும் திட்டுறாய்ங்க...
இங்கிலீஷ்-ல பேர் வைச்சாலும் திட்டறாய்ங்க!
வம்பே வேணாம்னு, நல்ல புள்ளையா
36-24-36 ன்னு நம்பர்ல பேரு வைச்சா...அப்பக் கூடத் திட்டறாங்கள சாமீ....

காலம் கலி காலம் ஆகிப் போச்சு, பாலாஜி :-) //

S.J. சூர்யா ரசிகர் மன்ற தலைவரே,
வருக வருக... அப்ப 236-24-36னு வெச்சா என்ன தப்பு???

வெட்டிப்பயல் said...

//ஆசிப் மீரான் said...

//
நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

:-)))))))))
வெட்டி,
என்னை அசிங்கப்படுத்திட்டாரு கவுண்டர்னு பாண்டு கேஸ் போட்டுடப் போறாரு.. பார்த்து செய்யுங்கடே!!

சாத்தான்குளத்தான் //

அண்ணாச்சி,
பாண்டுவை இமிடேட் செஞ்சி அவர் பேருக்கு கலங்கம் ஏற்படுத்துவதை தவிர்க்கத்தான் கவுண்டர் போராடுகிறார்.

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

என்ன இது? பேட்டியா போட்டியா? நம்ம ஸ்டார் வாரத்தில்தானா டெவில் ஷோ எல்லாம் போட்டு வம்பு பண்ணனும்?

உம்மை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கிறேன். பதிவைப் படிச்சிட்டு வரேன். //

கொத்ஸ்,
நியாயப்படி உங்களுக்குத்தான் டெவில் ஷோ போடனும். அதை நான் போடறதைவிட போர்வாள் இல்லை ராயல் போட்டாதான் நல்லா இருக்கும்னு நான் லூஸ்ல விடறேன் ;)

Unknown said...

//அவுங்க வீட்டுக்காரர் இல்லாத நேரத்துல அவுங்க வீட்டுக்கு போய் ஆணி அடிக்க உதவி பண்ணனும். நான் சொல்றதை நல்ல கவனிச்சிட்டீங்க இல்லை. என்ன மாதிரியே பண்ணா போதும். சரியானு சொன்னேன்//

நல்ல வேளை ஆணி புடுங்குற மாதிரி எதுவும் சீன் வைக்கல்ல :-)

ஜி said...

க: புல்டவுசர் மண்டையா... வியாபாரி படத்துல அத்தன ஹீரோயினி இருந்தும் கொசுறுக்கு ஏன்டா மாளவிகாவ வேற நடிக்க வச்சிருக்க?

சூ: அந்தப் படத்தப் பாத்திருந்தா உங்களுக்கேத் தெரிஞ்சிருக்கும். அதுல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பாட்டுல மாள்ஸ் ஆடுவாங்க. நம்ம தமிழ்நாட்டுல கொசுக்கடியால சிக்கன் குனியா வந்து நெறைய பேரு அவதிப்பட்டாங்கள்ல. அதுக்கு தீர்வுகாணும் வகையில எடுக்கப்பட்ட ஸாங்தான் கொசுக்கடிப் பாட்டு. அதப் பாத்ததுக்கப்புறம் நீங்க இப்படியெல்லாம் கேக்க மாட்டீங்க ஆங்...

க: டேய் கமருக்கட்டு மண்டையா. அது ஏன்டா டையலாக் பேசும்போதெல்லாம் கக்கூஸ் போறவன் மாதிரி மூஞ்ச வச்சிருக்க?

சூர்யா மறுபடியும் அதே போல் மூஞ்சை மாற்ற கடுப்பாகிறார் கவுண்டர்.

க: டேய் பான்பராக் மண்டையா. என்னைய கொலகாரனாக்கிடாத. மருவாதையா இந்த எடத்த விட்டு ஓடிப்போ நாயே...

வல்லிசிம்ஹன் said...

இப்படி ஒரு வெறுப்பேத்தற ஆளை
சினிமால நான் பார்த்ததே இல்லைப்பா.
மெனி மெனி டான்க்ஸ்.:-))

Anonymous said...

எங்கள் தானெ தலைவன் எஸ்.ஜெ.சூரியாவை கிண்டல் செய்த இந்த ஈவில் ச்ஷோவை புறக்கணிக்கிறோம்


இவண்
எஸ்.ஜெ.எஸ்
துபாய் மரம்


MR.X

Sridhar V said...

//
நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன். ஆமாம்ல... எப்படிய்யா பிடிக்கறீங்க. கலக்குங்க.

//கொத்ஸ்,
நியாயப்படி உங்களுக்குத்தான் டெவில் ஷோ போடனும். அதை நான் போடறதைவிட போர்வாள் இல்லை ராயல் போட்டாதான் நல்லா இருக்கும்னு நான் லூஸ்ல விடறேன் ;)
//

இது சூப்பர். யாராவது ஒருத்தர் போட்டாலும் சரி... இல்ல மூணு பேரும் கூட அபி அப்பா / தம்பி எல்லாரும் சேர்ந்து போட்டாலும் சரி... படிக்கத்தான் நாங்க எல்லாரும் இருக்கோம்ல :-)))

கவிதா | Kavitha said...

வெட்டி கவுண்டரே.. ! நாம சிவனேன்னு இருந்தா கூட இவங்க எல்லாம் விடமாட்டறாங்க இல்ல?!! :) கொலைகாரர்களா ஆக்கிடுவாங்க போல..

இன்னொரு கவுண்டர் ஜி கேட்ட கேள்வியும் நல்லாதான் இருக்கு..

நானும்...

//அப்படியே ஒரு காப்பி எடுத்து அந்த "அங்" வாயனுக்கு அனுப்புங்க//

ரீப்பீட்டு...

CVR said...

நடத்துங்க!!
அடுத்தது யாரு?? :-D

நாகை சிவா said...

வெட்டி இந்த நாறப்பயல திட்டாத.... இந்த ஆளு நடிச்ச திருமகன், வியாபாரி என்ற இரு படங்களை பார்க்க நேர்ந்தால் தான் புது தமிழ் படங்களை சில காலத்திற்கு பார்ப்பது இல்லை என்ற உறுதிமொழியை எடுத்து அதை காப்பாற்றிக்கிட்டு வரேன்...ஒரு மாசம் ஆச்சு...

manipayal said...

Hallo Sir,
En janma Sabalyam Theerndhadhu. Andha pervert-i thitta Ivvalavu periya kootam irrukkummunnu Naan Edhir pakkallai. Adhuvum andha Kosukkadi, Nasukkudi is horrible.
Andha dog-a(why disgrace a dog?) thorathara group-la naanum oru member.

k said...

hahaha..good one! :)

Anonymous said...

//அண்ணன் நல்லா இருக்கறது பிடிக்கலையா உனக்கு??? //

hehe.படம் இன்னும் பார்க்கலையா?நானும்தான் இன்னும் பார்க்கவில்லை.அந்த ஆளு படம் எல்லாம் பார்த்து நொந்து போக ஆசை இல்லை.நம்ப புலிதான் கஷ்டப்பட்டு பார்த்தார். :-))

Anonymous said...

//வழக்கம் போல கலக்கல் வெட்டி அப்படியே ஒரு காப்பி எடுத்து அந்த "அங்" வாயனுக்கு அனுப்பு.
//
அண்ணா எல்லாரும் இதை அனுப்பு அனுப்புன்னு சொல்லுறாங்க.அவரு அட்ரஸ் தெரியுமா? ஹிஹி.

Anonymous said...

//என்னாப்பா இது...
தமிழ்-ல பேர் வைக்கலைன்னாலும் திட்டுறாய்ங்க...
இங்கிலீஷ்-ல பேர் வைச்சாலும் திட்டறாய்ங்க!
வம்பே வேணாம்னு, நல்ல புள்ளையா
36-24-36 ன்னு நம்பர்ல பேரு வைச்சா...அப்பக் கூடத் திட்டறாங்கள சாமீ....//

நம்பரு விவகாரமான நம்பர் இல்லையா/அதுதான் திட்டுறாங்க.இருந்தாலும் அவருக்கு மூளை இவ்வளவு "சூப்பரா" வேலை செய்யுது இல்லை :-))

Anonymous said...

//கொத்ஸ்,
நியாயப்படி உங்களுக்குத்தான் டெவில் ஷோ போடனும். அதை நான் போடறதைவிட போர்வாள் இல்லை ராயல் போட்டாதான் நல்லா இருக்கும்னு நான் லூஸ்ல விடறேன் ;) //

எல்லாம் சிங்களும் கொல வெறியோட தான் இருக்கீங்க போல
latest news scoop.ராம் அண்ணா ஊருக்கு போறேன் online எல்லாம் வரமாட்டேன் ன்னு சவுண்ட் விட்டார்.ஆனா அடிக்கடி வருகின்றார் பாருங்க.ஏன் தெரியுமா?ரஞ்சனி அண்ணிக்கூட சாட்டிங் என்னும் பெயரில் dating செய்யதானாம்!!ஏதோ அவங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி,என்ன அண்ணா நான் சொல்லுறது?

Anonymous said...

//CVR said...
நடத்துங்க!!
அடுத்தது யாரு?? :-D
//

தம்பி அடுத்தது ஒருத்தர் புளிச்சாதம்,பஜ்ஜி,பால்கோவா சாப்பிட்ட கதையை அண்ணன் சொல்லுவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

Anonymous said...

//வெட்டி இந்த நாறப்பயல திட்டாத.... இந்த ஆளு நடிச்ச திருமகன், வியாபாரி என்ற இரு படங்களை பார்க்க நேர்ந்தால் தான் புது தமிழ் படங்களை சில காலத்திற்கு பார்ப்பது இல்லை என்ற உறுதிமொழியை எடுத்து அதை காப்பாற்றிக்கிட்டு வரேன்...ஒரு மாசம் ஆச்சு...//

சிவாஜி படம் download பண்ணி பார்ப்பீங்க இல்லையா?அப்போ இப்படி சொல்லுங்க பார்ப்போம்.

Anonymous said...

மினி கும்மி over...i am going to take rest.bye bye bro

இராம்/Raam said...

பாலாஜி,

கலக்கல்'ம்மா.... :)

//சூ: இந்த கண்றாவிய நீங்களே பண்ணலாம். நான் எதுக்குனு சொன்னாரு.//

ROFTL.............

இராம்/Raam said...

//கொத்ஸ்,
நியாயப்படி உங்களுக்குத்தான் டெவில் ஷோ போடனும். அதை நான் போடறதைவிட போர்வாள் இல்லை ராயல் போட்டாதான் நல்லா இருக்கும்னு நான் லூஸ்ல விடறேன் ;)//

ஏலேய்,

இது என்னா நக்கலா சொன்னமாதிரியிலே இருக்கு? இந்த வாரமும் லீவுப்பா...அதனாலே பொட்டி தட்டமுடியாது, எழுதுன ரெண்டு பதிவேதான் இந்த வாரம் போடப்போறேன்...

வ.வா.ச முதல் அ.வா'க்கு நீயே டெவில் ஷோ போடு... :)

இராம்/Raam said...

//latest news scoop.ராம் அண்ணா ஊருக்கு போறேன் online எல்லாம் வரமாட்டேன் ன்னு சவுண்ட் விட்டார்.ஆனா அடிக்கடி வருகின்றார் பாருங்க.ஏன் தெரியுமா?ரஞ்சனி அண்ணிக்கூட சாட்டிங் என்னும் பெயரில் dating செய்யதானாம்!!ஏதோ அவங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரி,என்ன அண்ணா நான் சொல்லுறது?///

யக்கோவ்,

என்மேலே ஏனிந்த கொலைவெறி? இங்க வீட்டிலே சாப்பிட, ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா தூங்கிட்டு நல்லா வேகசனை கழிச்சுட்டு இருக்கேன்....

எதுக்கு இந்த அவதூறு செய்திகளை எல்லாம் பரப்பி என்னோட இமேஜ்'(???)க்கு குண்டு வைக்கிறீங்க???

Anonymous said...

//யக்கோவ்,

என்மேலே ஏனிந்த கொலைவெறி? இங்க வீட்டிலே சாப்பிட, ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா தூங்கிட்டு நல்லா வேகசனை கழிச்சுட்டு இருக்கேன்....

எதுக்கு இந்த அவதூறு செய்திகளை எல்லாம் பரப்பி என்னோட இமேஜ்'(???)க்கு குண்டு வைக்கிறீங்க???
//

அண்ணா...நான் உங்க தங்கை.அக்கா இல்லை.இந்த மாதிரி வயதான வாலிபர்கள் எல்லாம் என்னை அக்கான்னு கூப்பிட்டு வயசை குறைக்கதீங்க.வெட்டி அண்ணாவைப் பார்த்து நடங்க..அவரு ஒரு நல்ல role model :-)

அவதூறா?அண்ணா நீங்க தூக்கம் இல்லமால்,சரியாக சாப்பிடமால் இளைச்சு போய் இருக்கீங்களமே.எல்லாம் அண்ணியை பிரிந்த சோகமாம்!!வெட்டி அண்ணா note this point

Arunkumar said...

sema ROTFL vetti.. as usual kalakkitinga :P

//
நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

aamanla.. super comparison :)

ALIF AHAMED said...

எச்சரிக்கை
இது முழுக்க முழுக்க வெட்டியாய் பொழுது போக நினைப்பவருக்கான பக்கமே. உருப்படியா ஏதாவது செய்யனும்னு நினைச்சா மேல சிவப்பு நிறத்துல "X"னு போட்டுருக்கறதை சொடுக்கவும்.
///

சிவப்பு நிறத்துல
வெள்ளை கலரு X போட்டு இருக்கு அதுவா...??

கப்பி | Kappi said...

:)))) சூப்பரு!!!

இந்த நாரப்பய படத்தையெல்லாம் பார்க்கறதில்லைன்னு அவன் நயன்தாரா கூட நடிச்ச படத்தை பார்த்ததுமே முடிவு பண்ணியாச்சு..

அபி அப்பா said...

40 வரட்டும்ன்னு தான் பார்த்துகிட்டு இருந்தேன்.
இந்த நாரபயலுக்கு டெவில்ஷோ போட்ட கவுண்டர வண்மையா கண்டிக்கிறேன்!
இனிமேல் இந்த தவறு நடக்காதுன்னு நம்பறேன்.

அவனெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்காத பயல்!

bb said...

" Akila Inthiya Karanataka Vazh Tamizhar Men Poriyalaragal S.J Surya Rasigar Mandra Magaleer Ani " sarba intha postai nan kadumaiyaga ethirkiraen. Enga thalaivarae pathi eppadi neenga thappa paesalam. Ithukku neenga mannippu kaditham anupiyae aganum

bb said...

"Akila Inthiya Karnataka Vazh Tamilar Menporul Poriyalar S.J Surya Magaleer Ani Rasigar Mandram " sarba intha postai nan vanmaiya kandikuraen. Ithuku apology letter kudukaati "Naadu Thaluviya Bandh" nadatha padum endru kadum echarikai vidukiraen.

களவாணி said...

கவுண்டர் திரும்பி வந்ததுக்கு நன்றி.

//தமிழ்நாட்டு சினிமாக்கு வந்த சாபத்துல ஒண்ணுதான் இது.//

கரெக்ட்டா சொன்னீங்க.

கலக்கல் பேட்டி வெட்டி

ஜி உங்க கேள்விகளும் சூப்பர்.

அடுத்த டெவில் ஷோவிற்கு காத்திருக்கின்றோம்.

G.Ragavan said...

கவுண்டருக்கு கோடி நன்றி. இந்தாள என்ன செய்றதுன்னு நெனச்சு நெனச்சு நொந்து போயிருந்தேன். வாங்கு வாங்குன்னு வாங்குனாரய்யா கவுண்டரு. வாழ்க வளமுடன்.

நடிக்கிறது தப்பில்லை. ஓமக்குச்சி நரசிம்மன், ஒருவிரல் கிருஷ்ணாராவ் எல்லாம் திட்டவா செய்றோம். அந்த மாதிரி இவரும் நடிச்சா நாம ஏன் எதுவும் சொல்லப் போறோம். கதாநாயகனாத்தான் நடிக்கனும் அடம் பிடிச்சு...பொம்பளப் பிள்ளைங்கப் பிடிச்சிப் பிசிக்கி வெக்கைலதான் எரிச்சல் வருது. பெரிய மம்முதக்குஞ்சுன்னு நெனப்பு.

மு.கார்த்திகேயன் said...

ஹைய்யா..மறுபடியும் வந்தாச்சா.. எங்கேப்பா காணாமேன்னு கேக்கலாம்னு இருந்தேன் பாலாஜி

மு.கார்த்திகேயன் said...

//நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?
//

ROTFL :)

மு.கார்த்திகேயன் said...

நல்லாவே தேறும் மாப்ஸ்.. ஆமா, எதுக்கு? ஹிஹிஹி

Unknown said...

Nanri

Unknown said...

Devil Show nalla irukku ana S J Surya vai ippadi naasam panni irruka koodathu. Ennai kaetteengana thamizhil oru nalla munnodiyana kathai vaenumna S J Surya thaan. Science Fiction kathai ellam yaarum risk eduthu panna maatenguranga. I vote for S J Surya.