தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, May 01, 2007

நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு - KRS பார்வையில்


மாதவி பந்தல் நாயகன் KRS பார்வையில் நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு...

புதுஜெர்சி பதிவர்கள் சந்திப்பு பற்றி பிபிசி தொலைக்காட்சியின் நேரடிப் பார்வை.
வழங்குபவர்: தமிழ் சசி.
இப்படி ஒரு நிகழ்ச்சி, ஒரு நாள் இல்லை ஒரு நாள் வரத் தான் போகிறது பாருங்களேன்!

புதுஜெர்சியில், Apr 28 அன்று நடைபெற்ற பதிவர்கள் சந்திப்புக்குக் கட்டியம் கூறும் வண்ணமாக, பார்படாசில் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டியது.
பதிவர்கள் ஆடும் ஆட்டத்தை முதலில் பார்த்து விட்டு வாங்க...
அப்புறம் நாங்களும் இலங்கையும் ஆடுகிறோம் என்று ஆட்டத்தைச் சற்று நேரம் ஒத்திப் போட்டனர் கிரிக்கெட் வீரர்கள்.

வெட்டிப்பயல் தில்லாலங்கடி தாங்கு என்று விசில் அடித்துக் கொண்டே, பாஸ்டனில் இருந்து பாபாவின் ரதத்தில் வர, அவர்களுடன் தென்றலும் புதுஜெர்சி வந்து சேர்ந்தனர்.

அண்ணன் SK, விமானத்தில் வந்து இறங்கி, அனைவருக்கும் நல்லாசி கூறினார்!

யார் எல்லாம் வந்தார்கள்?

பத்மா அர்விந்த்
தமிழ் சசி
பாஸ்டன் பாலா
சங்கர் குமார் (VSK)
Vishytheking
வெட்டிப்பயல்
தென்றல்
CSRK என்னும் சம்பத்
எடிசன் ரங்கா
ஜெயஸ்ரீ
இலவசக் கொத்தனார்
கண்ணபிரான் ரவி

நண்பர்கள் ஷைலஜா, நாகை சிவா, சந்தோஷ் மற்றும் பலர் சந்திப்பின் போது தொலைபேசி வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.


ரொம்ப நாளாய் வீட்டில் அடம் பிடித்து, ராவடி செய்து, பஜாஜ் பல்சர் வண்டி வாங்கித் தரச் சொல்லி ஒரே புலம்பல், அலம்பல்!
ஆனா கரெக்டா பிறந்த நாள் அதுவுமா, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், வீட்டு வாசலில் வண்டியைக் கொண்டாந்து நிறுத்தினா எப்படி இருக்கும்!
இப்படித் தான் தமிழ்மண முகப்பில் சூப்பரா மாற்றங்களைச் செய்து விட்டு
சத்தமில்லாமல், புன்சிரிப்புடன், பால் வடியும் பால முகமாய் வந்து சேர்ந்தார் நம்ம தமிழ் சசி!
சந்திப்பு களை கட்டியது!

பல பதிவர் மாநாடுகளுக்குத் தொடர் திக்விஜயம் செய்த பாபா, சென்னை சந்திப்பு பற்றி எடுத்துச் சொன்னார்.
சென்னைப்பபட்டினம் நண்பர்கள் வெளியிட்ட சாகரன் நினைவு மலரை, மறக்காமல் எடுத்து வந்து, அனைவருக்கும் அளித்த பாபாவுக்கு நன்றி.


சரி, சந்திப்பு ஆக்-ஷன் ரீப்ளே இதோ:

வலைப்பதிவுகளில் ஆசைகளும் ஆதங்கங்களும்:
1. தமிழ் வலைப்பூக்களில் அறிவியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் குறைவாக உள்ளது ஏன்?
இது பற்றிக் கொத்தனார், தன் தேடுதல் முயற்சிகளை எடுத்துக் கூறினார்.
விக்கிப்பசங்க வலைப்பூவில், கேள்விகளைத் திரட்டும் முறை பற்றித் தென்றல் கேள்வி எழுப்பினார்.
கேள்விகளை எல்லாம் ஓரிடத்தில் திரட்டி, அவற்றுக்குப் பதில் சொல்லப்பட்டதா இல்லையா என்று அறிய Google Spreadsheetஐப் பயன்படுத்தலாம் என்று பாபாவும் கண்ணபிரான் ரவியும் சொன்னார்கள்.

ehow, wikipedia போன்று, அறிவியல் தமிழுக்கென்று தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போது இருப்பதை விட, மிகப் பெரும் தகவற் களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
விக்கிப்பசங்க பதிவுகளை அப்படியே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அனுப்பலாமா, இல்லை விக்கிக்கு என்று இருக்கும் formatஇல் அனுப்ப வேண்டுமா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும் ஆங்கில விக்கியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியைக் கூட்டாகத் தொடங்கலாமா என்றும் பேசப்பட்டது.
இது குறித்து மேலும் தகவல்கள் அறிய ரவிசங்கர் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

2. தமிழ் வலைப்பூக்களில் Activism
இது பற்றி என்ன பேசினோம்னு சத்தியமா ஞாபகம் இல்லீங்கோ!

3. மாணவர்களுக்கு உபயோகப்படும் விதமான தலைப்புகள்
தினமலர் மற்றும் பல நாளிதழ்கள் மாணவர்கள் முன்னேற்றம், பற்றி அவ்வப்போது கட்டுரைகள் பல வெளியிட்டாலும், பதிவுலகம் சார்பாக, இதில் பங்கு என்ன? என்றும் பேசினோம்.

வெட்டிப்பயலின் "சாப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம் வாங்க", மற்றும் செல்வனின் "அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க வேண்டுமா?" போன்ற பதிவுகள் நினைவு கூரப்பட்டன.
மாணவர்கள் எத்தனை பேருக்குத் தமிழ்ப்பதிவுகள் அறிமுகம் ஆகியுள்ளது என்று அலசப்பட்டது.
பயனுள்ள Career கட்டுரைகளைக் கல்லூரி அறிவிப்புப் பலகைகளில் இடலாம். இதனால் பதிவும் சென்று அடையும், மாணவர்களையும் தமிழ்ப் பதிவுலகம் பக்கம் அறிமுகப்படுத்தலாம் என்று கண்ணபிரான் சொன்னார்.

4. அதிகம் சினிமா தொடர்பான அல்லது சொந்த அனுபவங்கள் பற்றிய தலைப்புக்களே இருப்பதேன்?


நடுவே, (வீ)எஸ்.கே. வயிற்றுக்கு மைசூர்பாகும், செவிக்கு ராஜாவின் திருவாசகம் டிவிடியும் கொடுத்தார்.
சூடான பாப்-கார்ன், சல்சாவுடன் சிப்ஸ், குளிர்ந்த பெப்சி, தாகத்துக்கு தண்ணீர் - நொறுக்ஸ் ஏராளம்.

பதிவுகளைப் பரவலாகப் படிக்கும் CSRK என்னும் சம்பத் அனைவரிடமும் கலந்து பேசினார்.
அவரும் பதிவு எழுதத் துவங்கப் போவதாகச் சொல்ல, அனைவரும் வாழ்த்து கூறினர்!

நெய்வேலி விச்சு, பதிவுகளின் வளர்ச்சிப் பரிமாணம் பற்றிப் பேசினார்.
எடிசன் ரங்கா மற்றும் அவர் துணைவியார் ஜெயஸ்ரீ, குழந்தைகள் நலம் பற்றியும், அவர்களுக்கான கதைகள், படங்கள் பற்றியும், அதில் பதிவுலகின் பங்கு பற்றியும் பேசினர்!

பத்மா அரவிந்த், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றியும், அவர்களுக்கு அவரவர் தாய்மொழி சார்ந்த மருத்துவ அறிவுரைகள் பற்றியும் பேசினார். இது ஒரு அரசு-தன்னார்வ இயக்கமாக உருவாகுவதாகவும், இது குறித்த கருத்துக் கணிப்புகளைப் பதிவுலகம் நடத்தித் தர வேண்டுகோள் விடுத்தார்.
அதே போல், அவசர நிலைக் காலங்களில், புலம் பெயர்ந்தவர்கள் இறுதிச் சடங்குகளை அரசு நடத்தும் முறை பற்றியும் பேசினார்.

இவ்வளவு உரையாடலின் போதும், "என் கடன் பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்து கொண்டு இருப்பதே" என்றிருந்த வெட்டிப்பயலின் பணி ஈடுபாட்டை அனைவரும் பாராட்டினர். :-)


தமிழ்மணத்தில் நமது எதிர்பார்ப்புகள்:

1. மிக அதிகமானோர் குறிப்பிட்டுள்ளது சாதி/மதப் பதிவுகளைத் தனிப் பக்கத்தில் திரட்டுவது
இது பற்றிப் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
இதோடு கூடவே, துறை சார்ந்த திரட்டி பற்றும் பேசப்பட்டது.

  • Category/பிரிவுகள் வாரியாகத் தனித் தனி Tabகளில் திரட்டுவது
  • குறிச்சொற்கள் கொண்டு தேடுவது
  • ஒரு பதிவைப் படிக்கும் போது, அப்பதிவினோடு தொடர்புடைய, அல்லது அதே குறிச்சொல் கொண்ட தொடர்புடைய பதிவை, தமிழ்மணப் பட்டையில் தட்டிக் கண்டறிவது
  • வகைப்படுத்துதலை பயனுள்ளதாக மாற்ற வழிமுறை Bloggerஇன் Labels கொண்டு தேடுதல் முறை
2. பின்னூட்ட உயரெல்லை தேவையா?
இது பற்றிப் பேச எண்ணிய பலருக்கு...பேச முடியவில்லையே ஏன்? :-)))
வெட்டி - உங்களுக்கு மகிழ்ச்சி தானே? :-)

3. பதிவு பற்றி ஆட்சேபங்கள் தெரிவித்தால் என்ன நடக்கிறது?
4. செய்யவிருக்கும் மாற்றங்களைப் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டு நம் கருத்துக்களை கேட்பார்களா?

இது பற்றி தமிழ் சசி கலந்துரையாடினார்.
எந்தவொரு சர்ச்சையிலும் தமிழ்மணம், தனி ஒருவராக முடிவெடுப்பதில்லை என்றும், அது அதற்கு என்று குழுக்கள் அமைக்கப்பெற்று, நன்கு ஆய்ந்தே முடிவெடுக்கப்படுவதாகவும் சொன்னார்.
இன்னும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் எல்லாம், திட்டத்தில் உள்ளதாகவும் கூறினார்.

தமிழ்ச் சங்கங்களும், பதிவுலகமும்
பல தமிழ்ச் சங்கங்களில் வலைப் பதிவுகள் பற்றிய விழிப்புணர்வு காணப்படவில்லை!
நாம் அவர்களிடத்தே சென்று வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தர வேண்டுமா?
அவர்களிடத்தே இன்று இருக்கும் உறுப்பினர்களை எப்படி வலைப்பதிய கொண்டுவருவது?

பாபாவின் பத்து கேள்விகள்
நேரமின்மையால், இது சற்றே பேசப்பட்டது!
திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா??
-இது பற்றி SK தனது கருத்துகளை முன் வைத்தார்
பூங்கா இதழைப் பதிவர்கள் மட்டுமன்றி வேறு யாரெல்லாம் படிக்கிறார்கள் என்றும் வினவினார்!

வெற்றி! வெற்றி! வெற்றி! ......
ஆஸ்திரேலியா வென்றது!
திரையில் இலங்கையின் தோல்வியை "வெளிச்சம் போட்டுக் காட்டிய" கொத்தனாருக்கு நன்றிகள் உரித்தாகுக!

பதிவர் சந்திப்பு இனிதே நிறைந்தது!

அனைவரும் மாலை உணவு உண்ண,
எடிசன் ஓக் மரச் சாலையில் உள்ள, சரவண பவனில்
அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்தார்....

ஆனால் பதிவர்கள் சிலர் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், உடனே கிளம்ப வேண்டினர்.
கொத்தனாரும், கண்ணபிரானும் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னரும், பட்சிகள் பறக்கத் தயாராயின.
அவர்கள் அனைவருக்கும் பிரியா"வடை" கொடுக்கப்பட்டது!
பின்னர், சரவணபவனில், அடை அவியல், நெய் இட்லி, மெட்ராஸ் காபி என்று அமர்க்களப்பட்டது!

கேட்க மறந்த கேள்வி: அடுத்த சந்திப்பு எங்கே?

பாபாவின் பார்வையில்...

16 comments:

வெட்டிப்பயல் said...

இதை பத்தி என்னுடைய பதிவை நாளைக்கு நான் போடறேன் :-)

துளசி கோபால் said...

//அனைவருக்கும் பிரியா"வடை" கொடுக்கப்பட்டது!//

என் பங்கு இன்னும் வந்து சேரலை(-:

ஊசாம இருக்கணுமேன்னு கவலையா இருக்கேன்:-))))))

கோவி.கண்ணன் said...

கேஆர்எஸ்சின் பார்வை கூர்மை மற்றும் குளிர்வாக இருக்கிறது.

நல்ல தகவல்கள்

கோபிநாத் said...

ம்ம்ம்...நீங்களும் முடிச்சுட்டிங்களா ;-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆங்...
முக்கியமான விடயம்...

இந்தியப் பதிவுகளிலேயே
முதன்முறையாக
சக்திப் புள்ளி ஸ்லைட் போட்டு
(அதாம்பா...பவர்பாயிண்ட் ஸ்லைட் :-)

போர்டு மீட்டிங் கணக்கா டிஸ்கஸ் பண்ண...முதல் சந்திப்பு!!!!

எல்லாப் புகழும் கொத்தனாருக்கே!

ரவிசங்கர் said...

//ehow, wikipedia போன்று, அறிவியல் தமிழுக்கென்று தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போது இருப்பதை விட, மிகப் பெரும் தகவற் களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.//

மகிழ்ச்சி. பத்து தமிழ் வலைப்பதிவர்கள் தமிழ் விக்கிபீடியாவுக்கு தொடர்ந்து பங்களித்தால் கூட நிறைய நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

//விக்கிப்பசங்க பதிவுகளை அப்படியே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அனுப்பலாமா, இல்லை விக்கிக்கு என்று இருக்கும் formatஇல் அனுப்ப வேண்டுமா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.//


இங்கு - அனுப்புவது- என்பது சரியான சொல் இல்லை. பதிவில் நீங்கள் எழுதுவது போலவே விக்கிபீடியாவிலும் நேரடியாக - எழுத- வேண்டும். வலைப்பதிவில் உள்ளதை அப்படியே இட முடியாது. கலைக்களஞ்சிய நடைக்கு ஏற்ப மாற்றி எழுத வேண்டும். ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளையும் ஆங்கில வலைப்பதிவுக் கட்டுரைகளையும் பார்த்தாலே கலைக்களஞ்சிய நடைக்கும் வலைப்பதிவு நடைக்கும் உள்ள வேறுபாடு புரியும். நீங்கள் முதல் வரைவை எழுதினால், விக்கியாக்கத்தில் தேர்ச்சி உள்ள பழைய விக்கிபீடியா பயனர்கள் கட்டுரைகளைத் திருத்தி உதவுவார்கள்.

//மேலும் ஆங்கில விக்கியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியைக் கூட்டாகத் தொடங்கலாமா என்றும் பேசப்பட்டது.//

நிச்சயம் செய்யலாம். ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளில் பல மொழிபெயர்ப்புகளே. எங்கள் துறை அறிவுக்கு அப்பாற்பட்ட அதே வேளை ஒரு கலைக்களஞ்சியத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரைகளுக்கு இப்படி மொழிபெயர்த்துத் தருகிறோம்.

CVR said...

@KRS
நல்ல தொகுப்பு
வாழ்த்துக்கள்!! :-)

@வெட்டி
இது மாதிரி ஏதாவது பதிவு போடுவீங்கன்னு பாத்தா,நீங்க என்னடானா தில்லாலங்கடி கண்ணன் பாட்டு எழுதிட்டு இருக்க்கீங்க!!
என்னமோ போங்க!! :-)

அபி அப்பா said...

//என் பங்கு இன்னும் வந்து சேரலை(-:

ஊசாம இருக்கணுமேன்னு கவலையா இருக்கேன்:-)))))) //

என் பங்கும் இன்னும் வரலை:-(

சாப்பிட்டா பேசாம இருக்கிற மாதிரி ஆயிடுமேன்னு கவலையா இருக்கேன்:-)))

vishytheking said...

போண்டா சாப்பிட்டதை விட்டுடீங்களே?

அன்புடன் விச்சு

தென்றல் said...

/சக்திப் புள்ளி ஸ்லைட் போட்டு
(அதாம்பா...பவர்பாயிண்ட் ஸ்லைட் :-)
/
;) :)

/
போர்டு மீட்டிங் கணக்கா டிஸ்கஸ் பண்ண...முதல் சந்திப்பு!!!!

எல்லாப் புகழும் கொத்தனாருக்கே!
/
... எல்லாப் புகழும் கொத்தனாருக்கே!

Boston Bala said...

பயனுள்ள பதிவு

---சக்திப் புள்ளி ---
:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//vishytheking said...
போண்டா சாப்பிட்டதை விட்டுடீங்களே?//

யாருப்பா அது
தென்னகத்து சரவண பவனில்
வடக்கத்தி சோளே பூரி/பரோட்டா சாப்பிட்டது? :-))

Boston Bala said...

பரோட்டா தமிழகத்துக்கே உரிய உணவா... அச்சச்சோ... விக்கிப்பசங்களிடம் கேட்க வேண்டிய கேள்வி; இங்கே விழுந்துடுச்சு :)

கஞ்சாசாமி அய் பீ பாரு said...

/மிக அதிகமானோர் குறிப்பிட்டுள்ளது சாதி/மதப் பதிவுகளைத் தனிப் பக்கத்தில் திரட்டுவது /
அப்படியே அதோட பதிவு போட மெசேஜ் இல்லைங்கிறதையும் ஒரு பதிவா போடுறவுங்க பதிவுகளையும்
நேத்திக்கு ஒண்ணுகடிச்சேன் நாளைக்கு ரெண்டுக்கடிப்பேன்னு பதிவு போடுறவுங்க பதிவுகளையும் ஆட்டத்துல சேத்துக்கலாமே ;)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//2. தமிழ் வலைப்பூக்களில் Activism
இது பற்றி என்ன பேசினோம்னு சத்தியமா ஞாபகம் இல்லீங்கோ!//

இதுக்கு யாராச்சும் உதவி பண்ணுவாங்கன்னு மணிக்கொரு தரம் வெட்டியின் ப்ளாக்குக்குள்
எட்டிப் பாக்குறேன்....
ஹீம்....

இப்ப மட்டும் கொத்தனார் ஜெட்லாக்-ன்ன்னு சொல்லுவார் போல இருக்கே!
சிங்கமே, எழுந்திரு!
பூட்டிய கூட்டின் கதவைத் திறந்து, காத்தாட வா :-)))

வல்லிசிம்ஹன் said...

தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு அர்த்தத்தோடு நடந்திருகிறது.:-0
பதார்த்தங்களும் நல்லா இருந்தது.
வீடீயோ காணோமே.