தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, May 16, 2007

ஆச்சுங்க ஒரு வருஷம்

ஒரு செவ்வாய் கிழமை...

என்விரான்மெண்ட் 12 மணியிலிருந்து டவுனாயிடும்... நீங்க வேணும்னா 12 மணிக்கே கிளம்பிடுங்கனு சொல்லிட்டாங்க... அமெரிக்கா வந்து 3 மாதங்களாகியிருந்தது. தமிழ் வலைப்பூக்கள் அறிமுகம் சில நாட்களாக இருந்தது.

வீட்ல போய் என்ன செய்யறதுனே தெரியாம, சரி நாமலும் ஏன் ப்ளாக் ஆரம்பிக்கக்கூடாதுனு யோசிச்சேன். ஆனா என்ன பேர் வைக்கறதுனு தெரியல. சரி வெட்டியாதானே ஆரம்பிக்கறோம், அதனால வெட்டிப்பயல்னு பேர் வைப்போம்னு வெச்சிட்டேன். எப்படியும் என்னை பத்தி யாருக்கும் தெரியக்கூடாதுனு ஒரு எண்ணம் இருந்துச்சு.

முக்கியமான காரணம் உனக்கெல்லாம் எதுக்குடா இந்த ஆசைனு எல்லாம் ஓட்டுவாங்கனு தான். நானே எல்லாத்தையும் பயங்கரமா ஓட்டுவேன். (ஆனா வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்). சரி பேர் சூப்பரா புடிச்சாச்சி. ஆனா என்ன எழுதறதுனு தெரியல. வணக்கம்னு ஒரு பதிவு போட்டேன். அப்பறம் என்ன எழுதறதுனு யோசிச்சா ஒண்ணுமே எழுத வரல... என்னடா இது நிறைய எழுதலாம்னு ஆசையா இருக்கு ஆனா எதுவுமே எழுத வர மாட்டீங்குதேனு ரொம்ப ஃபீலாங்காகி ஒரு பதிவு போட்டேன்... அதுக்கு அடுத்த நாளே எனக்கு பிடிச்ச சினிமா பத்தி ஒரு பதிவு.

அவ்வளவுதான்... அதுக்கு அப்பறம் ஒரு 40 நாள் எதுவும் எழுதல. அப்பறம் தமிழ்மணத்துல சேர்ந்தா மத்தவங்க கொடுக்கற ஊக்கத்துலயாவது எழுதலாம்னு சேர்ந்தேன். அந்த முதல் நாள் மாதிரி தான் இப்பவும் எழுதனும்னு அருவியா கொட்டுது ஆனா உக்கார்ந்தா மட்டும் அந்த வார்த்தைங்க தான் வர மாட்டீங்குது...

இப்ப வரைக்கும் ஏதோ எழுதிட்டு இருக்கேன்...

இந்த ஒரு வருஷமா நான் எழுத பெரிதும் உதவியாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

74 comments:

இராம் said...

வாழ்த்துக்கள் பாலாஜி.... :)))

இராமநாதன் said...

வருஷாப்தியதுக்கு எள்ளுருண்டையும் வாழைக்காய் பொரிச்ச குழம்பும், மாம்பழப் பச்சிடியும் வப்பீங்கன்னு பாத்தா அரிசி வாழைக்காய் கொடுக்கிற மாதிரி பச்னு பாயிண்ட மட்டும் சொல்லிட்டு போயிட்டுவான்னா விட்ருவோமா??? :)))

இருந்தாலும்...

வாழ்த்துகள்...

இராம் said...

/இப்ப வரைக்கும் ஏதோ எழுதிட்டு இருக்கேன்...//

ஏய் மேன்.... இதுக்கு பேருதான் தன்னடக்கமா???

கப்பி பய said...

வாழ்த்துக்கள்!!! :)

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

இந்த வருசம் திங்கக் கிழமை வந்த தேதி அடுத்த வருசம் செவ்வாக்கிழமைலதான் வரும்ங்கற கணக்குப்படி பாத்தா நீங்க சொல்றது கரெக்ட்டுதான். பயலுக்கு ஒரு வருசமாச்சு.

சுத்திப் போடுங்க.

வாழ்த்துகள்.

மணிகண்டன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி!

Anonymous said...

அடிச்சி ஆடுல
Mr.X

சாத்வீகன் said...

வாழ்த்துக்கள்.

ulagam sutrum valibi said...

வாழ்துக்கள் பாலாஜி!!

இலவசக்கொத்தனார் said...

ப்ளாக்கர் நம்ம கமெண்டை சாப்பிட்டுடுச்சு போல.

//(ஆனா வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்)//

ஆமாண்ணா ஆமாம். ஆனா ஒரு சின்ன டவுட்டு. நம்ம தமிழ்மணத்தில் தொடங்கி எல்லாரையும் ஓட்டறீங்களே அது என்ன கணக்குண்ணா? ஓவர்டைமா?

வாழ்த்துக்கள் தல!

இலவசக்கொத்தனார் said...

ப்ளாக்கர் நம்ம கமெண்டை சாப்பிட்டுடுச்சு போல.

//(ஆனா வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்)//

ஆமாண்ணா ஆமாம். ஆனா ஒரு சின்ன டவுட்டு. நம்ம தமிழ்மணத்தில் தொடங்கி எல்லாரையும் ஓட்டறீங்களே அது என்ன கணக்குண்ணா? ஓவர்டைமா?

வாழ்த்துக்கள் தல!

G.Ragavan said...

வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.

Boston Bala said...

வாழ்த்துகள் :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

வாழ்த்துக்கள் பாலாஜி.... :))) //

மிக்க நன்றி ராயலண்ணா ;)

வெட்டிப்பயல் said...

//இராமநாதன் said...

வருஷாப்தியதுக்கு எள்ளுருண்டையும் வாழைக்காய் பொரிச்ச குழம்பும், மாம்பழப் பச்சிடியும் வப்பீங்கன்னு பாத்தா அரிசி வாழைக்காய் கொடுக்கிற மாதிரி பச்னு பாயிண்ட மட்டும் சொல்லிட்டு போயிட்டுவான்னா விட்ருவோமா??? :)))

இருந்தாலும்...

வாழ்த்துகள்... //

ஆணி அதிகம்... அதனால தான். இல்லைனா பெருசா விழா எடுத்திருக்கலாம் ;)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

/இப்ப வரைக்கும் ஏதோ எழுதிட்டு இருக்கேன்...//

ஏய் மேன்.... இதுக்கு பேருதான் தன்னடக்கமா??? //

இல்லைங்கண்ணா இதுக்கு பேரு தான் உண்மை ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

வாழ்த்துக்கள்!!! :) //

ரொம்ப டாங்கிஸ் கப்பி :-)

வெட்டிப்பயல் said...

//"வற்றாயிருப்பு" சுந்தர் said...

இந்த வருசம் திங்கக் கிழமை வந்த தேதி அடுத்த வருசம் செவ்வாக்கிழமைலதான் வரும்ங்கற கணக்குப்படி பாத்தா நீங்க சொல்றது கரெக்ட்டுதான். பயலுக்கு ஒரு வருசமாச்சு.

சுத்திப் போடுங்க.

வாழ்த்துகள். //

உண்மைய தாங்க சொல்றேன்... இதை போய் ஆராய்ச்சியெல்லாம் பண்ணி பாத்திருக்கீங்களே ;)

சுத்தி போட எல்லாம் அம்மா இங்க இல்லைங்க.. ஊர்ல இருக்காங்க... (நோ ஃபீலிங்க்ஸ்)

வெட்டிப்பயல் said...

//
வாழ்த்துகள்.//

மிக்க நன்றி சுந்தர்...

(இத விட்டுட்டேன்.. அதனால தான் )

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...

வாழ்த்துக்கள் பாலாஜி! //

மிக்க நன்றி மணிகண்டன்...

குமரன் (Kumaran) said...

I have not forgot your first post which got 100+ comments in short time. :-)

வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

அடிச்சி ஆடுல
Mr.X //

ரொம்ப டாங்கிஸ் மின்னல் ;)

வெட்டிப்பயல் said...

//சாத்வீகன் said...

வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி சாத்வீகன்...

ரொம்ப நாளா ஆளையே காணோம் :-/

வெட்டிப்பயல் said...

// ulagam sutrum valibi said...

வாழ்துக்கள் பாலாஜி!! //


மிக்க நன்றி பாட்டி...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

ப்ளாக்கர் நம்ம கமெண்டை சாப்பிட்டுடுச்சு போல.

//(ஆனா வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்)//

ஆமாண்ணா ஆமாம். ஆனா ஒரு சின்ன டவுட்டு. நம்ம தமிழ்மணத்தில் தொடங்கி எல்லாரையும் ஓட்டறீங்களே அது என்ன கணக்குண்ணா? ஓவர்டைமா?

வாழ்த்துக்கள் தல! //

மிக்க நன்றி தலைவா... எல்லாம் உங்கள் ஆசி ;)

நான் ஓட்டினேனா??? லிங் இருக்கா? (சும்மா கேட்டு வெச்சிப்போம்)

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க. //

மிக்க நன்றி ஜி.ரா...

(ஒரு சின்ன டெக்னிக்கல் டவுட்.. பீடுனா என்ன ஸ்பீடா?) ;)

வெட்டிப்பயல் said...

//Boston Bala said...

வாழ்த்துகள் :) //

மிக்க நன்றி பாபா...

அப்பறம் ஒரு முக்கியமான மேட்டர்.. எனக்கு தமிழ்ல எழுத சொல்லி கொடுத்தது பாபா தான்... ஆனா அப்ப அவருக்கு நான் யாருனு தெரியாது. அதே மாதிரி நான் ப்ளாக் ஆரம்பிச்சி 4-5 மாசம் வரைக்கும் அவருக்கு நம்மக்கிட்ட தமிழ்ல எப்படி எழுதறதுனு கேட்ட பய தான் இந்த வெட்டிப்பயனு தெரியாது...

மிக்க நன்றி பாபா... வாழ்க உங்கள் தொண்டு...

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

I have not forgot your first post which got 100+ comments in short time. :-)

வாழ்த்துக்கள் //

குமரன்,
அது தமிழ்மணத்துல முதல் போஸ்ட்... அது ஜீன் 28 போட்டது... அதை மறக்க முடியுமா?

அதே போல முதல் நாள் வெட்டிப்பய நானில்லைனு ஒரு 20 பேராவது சொல்லியிருப்பாங்க. அதே மாதிரி ஒரு போஸ்டே கால்கரி சிவா போட்டாரு. மறக்க முடியாத நாட்கள்...

இலவசக்கொத்தனார் said...

//நான் ஓட்டினேனா??? லிங் இருக்கா? (சும்மா கேட்டு வெச்சிப்போம்)//


http://vettipaiyal.blogspot.com - எந்த இடுகை வேணாலும் படியுங்க. யாரையாவது ஓட்டிதான் பதிவு.

இலவசக்கொத்தனார் said...

//நம்மக்கிட்ட தமிழ்ல எப்படி எழுதறதுனு கேட்ட பய தான் இந்த வெட்டிப்பயனு தெரியாது...//

தெரிஞ்சா சொல்லிக்குடுத்து இருக்க மாட்டாரு. என்ன செய்ய. டூ லேட்.

தென்றல் said...

வாழ்த்துகள், பாலாஜி!

இப்பொழுது போல எப்பொழுதும் ... 'கலக்க' வாழ்த்துக்கள்!

ILA(a)இளா said...

போன வருடத்தின் நல்ல பதிவர்கள்ல நீங்களும் ஒருத்தருங்க வெட்டி. என்ன கொஞ்சம் தெலுங்கு வாடை நிறைய இருந்துச்சு. திடீர்னு காதல்,திடீர்னு கோழி காமெடி, திடீர்னு தமிழ்மணத்துக்கு கோரிக்கை, திடீர்னு தெலுங்கு விமர்சனம், கதைகள் அப்படின்னு நிறைய பரிமாணம் வெச்சுட்டு இருக்கீங்க. இப்படியே ஓட்டிருங்க, வாழ்த்துக்கள் வெட்டி.

G.Ragavan said...

// வெட்டிப்பயல் zei...
//G.Ragavan said...

வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க. //

மிக்க நன்றி ஜி.ரா...

(ஒரு சின்ன டெக்னிக்கல் டவுட்.. பீடுனா என்ன ஸ்பீடா?) ;) //

பீடுநடைன்னு கேள்விப்பட்டதில்லையா? பீடுன்னா வேகமில்லை...கம்பீரம் என்று சொல்லலாம். சிறப்புடன்னு சொல்லலாம். பெருமைன்னும் சொல்லலாம். சொல்லப்படுகிற இடத்தப் பொருத்துப் பொருள் மாறும். டெக்னிகலா நீ ரொம்பப் பெரிய ஆளுன்னு பேசிக்கிறாங்க. நீ என்னடான்னா எங்கிட்ட கேக்குறயே!

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//நான் ஓட்டினேனா??? லிங் இருக்கா? (சும்மா கேட்டு வெச்சிப்போம்)//


http://vettipaiyal.blogspot.com - எந்த இடுகை வேணாலும் படியுங்க. யாரையாவது ஓட்டிதான் பதிவு. //

கொத்ஸ்,
நீங்க பின் நவீனத்துவ கண்ணோட்டத்துல பாத்தா அப்படி தான் தெரியும்... என்னை மாதிரி சாதாரண மக்கள் மாதிரி பாருங்க. என் பதிவுல நக்கல்/நையாண்டியே கிடையாது ;)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//நம்மக்கிட்ட தமிழ்ல எப்படி எழுதறதுனு கேட்ட பய தான் இந்த வெட்டிப்பயனு தெரியாது...//

தெரிஞ்சா சொல்லிக்குடுத்து இருக்க மாட்டாரு. என்ன செய்ய. டூ லேட். //

எல்லாரும் உங்கள மாதிரியே இருக்கு முடியுமா தல ;)

வெட்டிப்பயல் said...

// தென்றல் said...

வாழ்த்துகள், பாலாஜி!

இப்பொழுது போல எப்பொழுதும் ... 'கலக்க' வாழ்த்துக்கள்! //

மிக்க நன்றி தென்றல்... எல்லாம் உங்களை மாதிரி இருக்கவங்க கொடுக்கற உற்சாகம் தான் காரணம் :-)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

போன வருடத்தின் நல்ல பதிவர்கள்ல நீங்களும் ஒருத்தருங்க வெட்டி.//
மிக்க நன்றி விவா...

//
என்ன கொஞ்சம் தெலுங்கு வாடை நிறைய இருந்துச்சு.//
இது டூ மச்... கொல்ட்டி கதைல கூட தெலுகு வாடை இருக்காது... அதுக்கப்பறம் ரொம்ப நாள் கழிச்சி தான் பொம்மரில்லு விமர்சனம் எழுதினேன்... அதெல்லாம் சாப்ட்வேர் இன்ஜினியர், கொழி எல்லாம் எழுதிட்டு தான் எழுதினேன்...

//
திடீர்னு காதல்,திடீர்னு கோழி காமெடி, திடீர்னு தமிழ்மணத்துக்கு கோரிக்கை, திடீர்னு தெலுங்கு விமர்சனம், கதைகள் அப்படின்னு நிறைய பரிமாணம் வெச்சுட்டு இருக்கீங்க. இப்படியே ஓட்டிருங்க, வாழ்த்துக்கள் வெட்டி. //
மிக்க நன்றி விவா...

ஒரு மேட்டர் முடிஞ்சா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சி யோசிச்சி எழுதினது எல்லாம் :-)

துளசி கோபால் said...

வருஷம் ஆயிருச்சா?

வாழ்த்து(க்)கள் பாலாஜி

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் பாலாஜி.

வடுவூர் குமார் said...

கலக்குங்க வெ.பயல்.
வாழ்த்துக்கள்.
ஆமாம் தமிழ் "C" என்னாச்சு?

சிவபாலன் said...

பாலாஜி,

வாழ்த்துகள் !!

Many more returns!! :)

கோவி.கண்ணன் said...

பாலா'ஜி' வாழ்த்துக்கள் !
:)

காட்டாறு said...

பின்னூட்டமெல்லாம் வாசிச்சிட்டு வந்தப்போ... கை நனச்சிட்டு போங்கன்னு ஆரோ கூப்புட்டாக... வாழ்த்தி கை நனைக்கிறது எங்க ஊரு பயக்கம்...வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் பாலாஜி..

நான் சொல்ல, கேட்க வந்ததை எல்லாம், இளா, கொத்ஸ், இராமே சொல்லிபுட்டாங்க ;)

தேவ் | Dev said...

வாழ்த்துக்கள் உன்னைப் பற்றி சென்னைக் கச்சேரியில் வந்த ஒரு பதிவை இங்கு நினைவில் கொண்டு வருகிறேன்..

வெட்டிப் பயலும் ஒளவையாரும்

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் பாலாஜி ;)

Dubukku said...

வாழ்த்துக்கள் பாலாஜி..கலக்குங்க :))

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள் அண்ணே.. ;-)


[ப்ளாக்கர் sign in பண்ண lazy.. அதான் இப்படி அனானியா வர்ரேன்] :-P

ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள் பாலாஜி

Arunkumar said...

வாழ்த்துக்கள் தல

Arunkumar said...

//
இப்ப வரைக்கும் ஏதோ எழுதிட்டு இருக்கேன்...
///

தன்னடக்கமாமாமாம்...

Syam said...

வாழ்த்துக்கள் வெட்டி :-)

உண்மை said...

கலக்குங்க. வாழ்த்துக்கள்.

மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

இதே போல் "ஆச்சுங்க 5 வருஷம்" , "ஆச்சுங்க பத்து வருஷம்" , "ஆச்சுங்க ஒரு மாமங்கம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு ஒரு வருஷம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு ஒரு வருஷம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு 5 வருஷம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு பத்து வருஷம்" , "ஆச்சுங்க என் பேரன்/பேத்திக்கு பத்து வருஷம்" , ...................................... அப்பிடின்னு நீங்க பதிவு போட்டுகொண்டே இருங்க, நாங்க படிச்க்கொண்டே இருப்போம்.

வாழ்க வளமுடன்.

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

// வெட்டிப்பயல் zei...
//G.Ragavan said...

வாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க. //

மிக்க நன்றி ஜி.ரா...

(ஒரு சின்ன டெக்னிக்கல் டவுட்.. பீடுனா என்ன ஸ்பீடா?) ;) //

பீடுநடைன்னு கேள்விப்பட்டதில்லையா? பீடுன்னா வேகமில்லை...கம்பீரம் என்று சொல்லலாம். சிறப்புடன்னு சொல்லலாம். பெருமைன்னும் சொல்லலாம். சொல்லப்படுகிற இடத்தப் பொருத்துப் பொருள் மாறும். டெக்னிகலா நீ ரொம்பப் பெரிய ஆளுன்னு பேசிக்கிறாங்க. நீ என்னடான்னா எங்கிட்ட கேக்குறயே! //

என்னய பத்தி யாரோ உங்ககிட்ட தப்பு தப்பா சொல்லி வெச்சிருக்காங்க... இது நல்லதுக்கே இல்லை ;)

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

வருஷம் ஆயிருச்சா?

வாழ்த்து(க்)கள் பாலாஜி //

ஆமா டீச்சர்.. ஆனா தொடர்ந்து எழுதறது ஒரு பத்து மாசமா தான்...

வாழ்த்துக்களுக்கு நன்றி...

நீங்க எல்லாம் தொடர்ந்து கொடுக்கற உற்சாகம் தான் என்னை இன்னும் எழுத வெச்சிட்டு இருக்கு

வெட்டிப்பயல் said...

// பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் பாலாஜி. //

மிக்க நன்றி பாலராஜன்கீதா...

நீங்க அருமையா விமர்சனம் செய்வீங்கனு KRS சொன்னாரு...

வெட்டிப்பயல் said...

//வடுவூர் குமார் said...

கலக்குங்க வெ.பயல்.
வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி குமார்...

// ஆமாம் தமிழ் "C" என்னாச்சு? //

அது நம்ம புக் பெங்களூர்ல மாட்டிக்கிச்சு... அடுத்த மாசம் போகும் போது எடுத்துட்டு வரனும் :-)

வெட்டிப்பயல் said...

//சிவபாலன் said...

பாலாஜி,

வாழ்த்துகள் !!

Many more returns!! :) //

மிக்க நன்றி சிபா...

எல்லாம் நீங்க கொடுக்கற உற்சாகம் தான் :-)

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...

பாலா'ஜி' வாழ்த்துக்கள் !
:) //

மிக்க நன்றி கோவி.கண்ணன்...

வெட்டிப்பயல் said...

// காட்டாறு said...

பின்னூட்டமெல்லாம் வாசிச்சிட்டு வந்தப்போ... கை நனச்சிட்டு போங்கன்னு ஆரோ கூப்புட்டாக... வாழ்த்தி கை நனைக்கிறது எங்க ஊரு பயக்கம்...வாழ்த்துக்கள்! //

மிக்க நன்றி காட்டாறு...

அடிக்கடி வரவும்.

வெட்டிப்பயல் said...

//பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் பாலாஜி..

நான் சொல்ல, கேட்க வந்ததை எல்லாம், இளா, கொத்ஸ், இராமே சொல்லிபுட்டாங்க ;) //

அக்கா,
இதெல்லாம் ஓவரு சொல்லிபுட்டேன்... நாம சொல்றதுக்கு முன்னாடி இந்த உலகத்துல எல்லாருமே சொல்லிட்டாங்க... அதுக்காக நாம சொல்லாம விட்டுடறமா?

சொல்ல வந்ததை தயங்காம சொல்லிட்டு போங்க ;)

வெட்டிப்பயல் said...

//தேவ் | Dev said...

வாழ்த்துக்கள் உன்னைப் பற்றி சென்னைக் கச்சேரியில் வந்த ஒரு பதிவை இங்கு நினைவில் கொண்டு வருகிறேன்..

வெட்டிப் பயலும் ஒளவையாரும் //

மிக்க நன்றி போர் வாள்...

நீங்க எல்லாம் கொடுக்கற உற்சாகம் தான் என்னை தொடர்ந்து எழுத வைக்குது :-)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

வாழ்த்துக்கள் பாலாஜி ;) //

ரொம்ப டாங்கிஸ் கோபி...

ஏன் இப்பவெல்லாம் ஆன்லைனலயே வரதில்லை???

வெட்டிப்பயல் said...

// Dubukku said...

வாழ்த்துக்கள் பாலாஜி..கலக்குங்க :)) //

குருவே சரணம்...

உங்க ப்ளாக்ல இருந்து தான் நம்ம கலைப்பயணம் (சும்மா சொல்ல வேண்டியது தான்) தொடங்குச்சு...

டுபுக்குதாசன்னு பேர் வைக்கலாமானு கூட யோசிச்சேன்.. ஆனா உங்க பேரை கெடுக்க வேணாமேனு விட்டுட்டேன் :-)

இன்னும் செல்வன் அண்ணாவைத்தான் காணோம்...

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள் அண்ணே.. ;-)
//
ரொம்ப டாங்கிஸ் மை ஃபிரெண்ட்...

//
[ப்ளாக்கர் sign in பண்ண lazy.. அதான் இப்படி அனானியா வர்ரேன்] :-P //
இதெல்லாம் ஓவரு ஆமா சொல்லிட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

// ஜெயஸ்ரீ said...

வாழ்த்துக்கள் பாலாஜி //

மிக்க நன்றி ஜெயஸ்ரீ அக்கா...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

வாழ்த்துக்கள் தல //

ரொம்ப டாங்கிஸ் அருண்...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

//
இப்ப வரைக்கும் ஏதோ எழுதிட்டு இருக்கேன்...
///

தன்னடக்கமாமாமாம்... //

உண்மைய தானப்பா சொல்லியிருக்கேன்... நான் எழுதறதெல்லாம் வெளிய காட்டினா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

வாழ்த்துக்கள் வெட்டி :-) //

நாட்ஸ்,
மிக்க நன்றி...

நம்மல தொடர்ந்து ஆதரிச்சதுக்கு நன்றி...

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

கலக்குங்க. வாழ்த்துக்கள்.

மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

இதே போல் "ஆச்சுங்க 5 வருஷம்" , "ஆச்சுங்க பத்து வருஷம்" , "ஆச்சுங்க ஒரு மாமங்கம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு ஒரு வருஷம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு ஒரு வருஷம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு 5 வருஷம்" , "ஆச்சுங்க என் மகன்/மகளுக்கு பத்து வருஷம்" , "ஆச்சுங்க என் பேரன்/பேத்திக்கு பத்து வருஷம்" , ...................................... அப்பிடின்னு நீங்க பதிவு போட்டுகொண்டே இருங்க, நாங்க படிச்க்கொண்டே இருப்போம்.

வாழ்க வளமுடன். //

உண்மை,
மிக்க நன்றி...


நீங்க எல்லாம் தொடர்ந்து கொடுக்கற உற்சாகத்துல தான் எழுதிட்டு இருக்கேன்... மிக்க நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்த ஒரு வருஷமா நான் எழுத பெரிதும் உதவியாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி... //

இந்த ஒரு வருஷமா நாங்களும் சிரிச்சுப் படிக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் உங்களுக்கும் நன்றி பாலாஜி...

ஆமா "பொய்" படத்துல நீங்க நடிச்சீங்களா என்ன? - வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்.
அடா அடா அடா! உங்களை மாதிரியே நானும் ஓட்டாம இருக்கணும்னு தான் பாக்கறேன்! முடியலயேஏஏஏஏஏஏ! :-)

இப்ப தான் ஊருக்குத் திரும்பி வந்து இந்தப் பதிவைப் பார்த்தேன்! சாரி லேட்!!:-)

CVR said...

//நானே எல்லாத்தையும் பயங்கரமா ஓட்டுவேன். (ஆனா வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்). //

ஆஆஆஆ!!
இறைவா!!! உனக்கு எல்லாம் கண்ணே கிடையாதா??

டெவில்ஸ் ஷோ எல்லாம் வேற யாரு எழுதினாங்க கண்ணா??? :P

வாழ்த்துக்கள் பாலாஜி!! :-)

ஜி said...

வாழ்த்துக்கள் வெட்டி பாலாஜி... கடந்த ஆண்டை போல் மென்மேலும் சுவை மணக்கும் பல பதிவுகளைத் தர வேண்டுமென்ற விண்ணப்பத்துடன்...

இம்சை அரசி said...

வாழ்த்துக்கள் வெட்டி... :)))