தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, May 14, 2007

தியாகிகள் தேவை

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.

நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும். எப்படி? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா, ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.

ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட், கார், 29 இன்ச் கலர் டீவி, வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா?

படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம். பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Litrecy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.

ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம். கேட்டா, வாக்காளர் அடையாள அட்டை இல்லை, ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம். கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம்.

வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.

வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம்.

எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம். வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம். இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி, ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.

ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்காக) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க?

அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம். அவ்வளவுதான்.

படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.

அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம். எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது.

நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்... மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்)

பின்குறிப்பு:
இந்த கட்டுரை சற்றுமுன் போட்டிக்காக, சமூகம் பிரிவுக்காக எழுதியது. நீங்களும் ஆளுக்கு ஒரு பிரிவா எழுதுங்க. நிறைய பரிசு கொடுக்கறாங்க. அதனால அடிச்சி ஆடுங்க மக்கா...

31 comments:

வெட்டிப்பயல் said...

ஏன் திரும்ப blogspotனு சீக்கிரம் ஒரு பதிவு போடறேன் :-)

வெங்கட்ராமன் said...

//////////////////////////////////
நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்... மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்)
//////////////////////////////////
(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்)

Anonymous said...

அன்னியன் படத்துல கடைசில விக்ரம்
பேசுனது மாதிரி இருக்கு

சம்திங் பெட்டர் said...

தீக்குளிக்கவும் "தியாகிகள் தேவை"


Mr.x

சராசரித் தமிழன் said...

தப்பு தப்பா பேசுறிங்களே நீங்க உண்மையிலயே தமிழ் நாட்ல இருந்த வந்தவர் தானா

ஓன்னு ஏதாவது கட்சிக்காக நாதாரியா அலைவோம் இல்ல

ஓட்டே போடாம அரசியயல் நியாயம் பேசுவம்

வல்லிசிம்ஹன் said...

balaji,
thisposting is for metoo.
pl excuse for using english.


innumoru kaiyaal aakaaththanam.

Anonymous said...

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

//////////////////////////////////
நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்... மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்)
//////////////////////////////////
(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்) //

வேங்கட்ராமன்,
இனிமே நாம மாறினாக்கூட போதும்.

இனிமே எந்த கடை போனாலும் காசு அதிகமாவுதுனு பில் வாங்காம போருள் வாங்கக்கூடாது.

முடிஞ்ச அளவு தெருவை நாமலே சுத்தம் செய்ய வேண்டும். சின்ன சின்ன விஷயங்கள் தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

அன்னியன் படத்துல கடைசில விக்ரம்
பேசுனது மாதிரி இருக்கு //

வெறும் கைத்தட்டிட்டு போயிடாதீங்க...

வெட்டிப்பயல் said...

// சம்திங் பெட்டர் said...

தீக்குளிக்கவும் "தியாகிகள் தேவை"


Mr.x //

:-((

வெட்டிப்பயல் said...

// சராசரித் தமிழன் said...

தப்பு தப்பா பேசுறிங்களே நீங்க உண்மையிலயே தமிழ் நாட்ல இருந்த வந்தவர் தானா

ஓன்னு ஏதாவது கட்சிக்காக நாதாரியா அலைவோம் இல்ல

ஓட்டே போடாம அரசியயல் நியாயம் பேசுவம் //

ஆமா...

நான் ரெண்டாவது கூட்டத்தை சேர்ந்தவன் தான்... ஆனா இனிமே கொஞ்சமாவது மாறுவேன்...

சும்மா... said...

வெறும் கைத்தட்டிட்டு போயிடாதீங்க...

//


அவல் கொடுங்க மென்னுட்டு போறோம்


Mr.x ரிட்டேன்

Anonymous said...

நான் இந்தியாவில் இருந்த வரை ஒருமுறை கூட வாக்களிக்காமல் இருந்ததில்லை.. அதுவும், எவனாவது கள்ள ஓட்டு போட்டுடுவானோன்னு ஒரு பயத்துல காலையிலே போயிடுவேன்.. என் போறாத நேரம்.. நான் ஓட்டு போட்ட வேட்பாளர் ஜெயித்ததே இல்லை :(:(:(

மின்னுது மின்னல் said...

//

ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்
//

வாரம் ஒரு நாள் (சனிகிழமை)
ஒரு தெருவை போக்குவரத்துக்கு இடைஞ்சலா உள்ள கருவை மரம் வெட்டுவது,
மண் அரிப்பை தடுக்க சாலை ஓரத்தில் மண் மூட்டை அடுக்குவது,
யானை கால் ,
போலியோ தின அன்னைக்கு வுடு வூடா போயி சொட்டு மருந்து குடுப்பது,

எங்க ஊருல இத தான் நாங்க செஞ்சோம் உடனே வார்டு மெம்பராக்கி புட்டானுவோ....

அப்பறம் எஸ்கேப்

தம்பி said...

very good post vetti

Anonymous said...

//
எங்க ஊருல இத தான் நாங்க செஞ்சோம் உடனே வார்டு மெம்பராக்கி புட்டானுவோ....

அப்பறம் எஸ்கேப்
//

எத்தன லெட்ச ரூபாயோட எஸ்கேப் சும்மா எனக்கிட்ட மட்டும் சொல்லுங்க

ulagam sutrum valibi said...

//ஆணால் இனிமேல் கொஞ்சமாவது மாறுவேன//

எங்கே நீங்க வொட்டிய் பதிவு போடடீர்களோனு
நினைத்தேன்,நீங்க! எப்படினு கேட்கரிங்க?என்னால்
முடிந்ததை செய்திருக்கேன் அடி பட்டுமிருக்கேன்
ஆணால் கடவுறின் அருளால் மன நிறைவோடு இருக்கேன்
கிழவியால் அதிகம் செய்ய இயலாது,உங்களை போல்
உள்ள இளைங்கர்களுக்கு வானமே எல்லை.

மின்னுது மின்னல் said...

//
எத்தன லெட்ச ரூபாயோட எஸ்கேப் சும்மா எனக்கிட்ட மட்டும் சொல்லுங்க
//

லட்ச கணக்குல சுருட்டமுடிச்சா நான் ஏன் எஸ்கேப் ஆவுறேன்...:((

கவுன்ஸிலர் அல்லது ஊராச்சி மன்ற தலைவராயி மொத்தமா அடிச்சிருப்போமில...:)

மணிகண்டன் said...

நல்ல கருத்துக்கள் பாலாஜி.

.:: மை ஃபிரண்ட் ::. said...

அண்ணே,,

போட்டியில் வெற்றிப்பெற வாழ்த்துக்கள். :-D

Anonymous said...

Its more a case of who will bell the cat. Everyone wants to do something but no one does. It maybe lazyness or maybe fear of being ridiculed.

Syam said...

ஓ ஹோ போட்டிக்காக எழுதுனதா..நான் கூட ஒரு நிமிசம் ஆடிபோய்ட்டேன்...:-)

Syam said...

//லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம்//

சினிமா தியேட்டர விட்டுடீங்க...:-)

வெட்டிப்பயல் said...

//வல்லிசிம்ஹன் said...

balaji,
thisposting is for metoo.
pl excuse for using english.


innumoru kaiyaal aakaaththanam. //

வல்லியம்மா,
மிக்க நன்றி...

ஊருக்கு வந்தவுடனே ஒரு 4 பேருக்கு சொல்லுங்க. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

நான் இந்தியாவில் இருந்த வரை ஒருமுறை கூட வாக்களிக்காமல் இருந்ததில்லை.. அதுவும், எவனாவது கள்ள ஓட்டு போட்டுடுவானோன்னு ஒரு பயத்துல காலையிலே போயிடுவேன்.. என் போறாத நேரம்.. நான் ஓட்டு போட்ட வேட்பாளர் ஜெயித்ததே இல்லை :(:(:( //

கடமையை செய்... பலனை எதிர்பாராதே!!!

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...

//

ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்
//

வாரம் ஒரு நாள் (சனிகிழமை)
ஒரு தெருவை போக்குவரத்துக்கு இடைஞ்சலா உள்ள கருவை மரம் வெட்டுவது,
மண் அரிப்பை தடுக்க சாலை ஓரத்தில் மண் மூட்டை அடுக்குவது,
யானை கால் ,
போலியோ தின அன்னைக்கு வுடு வூடா போயி சொட்டு மருந்து குடுப்பது,

எங்க ஊருல இத தான் நாங்க செஞ்சோம் உடனே வார்டு மெம்பராக்கி புட்டானுவோ....

அப்பறம் எஸ்கேப் //

பாருங்க. நீங்க செஞ்சது உங்களுக்கு சின்னதா தெரியலாம். சிறு துளி பெரு வெள்ளம்...

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

very good post vetti //

மிக்க நன்றி தம்பி...

Anonymous said...

good post! i didn't expect this much from you
deepa

ஷைலஜா said...

விழித்துக்கொள்கிறது இளைய தலைமுறை என்பது உங்க பதிவுல தெரியுது..வானம் வசப்படுவது அப்புறம் முதல்ல இந்த வையகம் வசமாக நாம் செய்யவேண்டியதை அருமையா எழுதின அருமைத்தம்பிக்குப் பாராட்டு!

செந்தழல் ரவி said...

Good Shot !!!!!!!!!!

Moorthy said...

இதை படித்தால் மட்டும் போதது, நடைமுறை படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும். அப்படி செய்தால் இந்தியா முன்னேறும், எதிர்காலத்தில் வலிமையான பாரதத்தை உருவாக்க முடியும். எல்லோரும் அப்துல் கலாமாக ஆகிவிட முடியாதுதான், இருப்பினும் அதில் ஒரு பாதியகவாது முயற்சி செய்யலாம். முடிந்தால் இவுலகில் முடியாதது அல்ல. இது என்னக்கும் சேர்த்துதான். வாழ்க தமிழ் வாழ்க இந்திய திரு நாடு

இப்படிக்கு இந்தியன்