தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, April 16, 2007

மன்னிப்பு கடிதம்

அப்பாலஜி லெட்டர்

காலேஜ்ல ஏதாவது தப்பு பண்ணா ஆனா ஊனானு எழுத சொல்லிடுவானுங்க. ஆனா இத எழுதறதுக்கும் ஒரு திறமை வேண்டுங்க... நான் ஒரு ரெண்டு மூணு இடத்துல எழுதி கொடுத்திருக்கேன். ஆனா அத படிச்சா என்னதுக்கு இவன் எழுதி இருக்கானே தெரியாது.

எங்க காலேஜ் ஹாஸ்டல்ல சீட்டு விளையாடக்கூடாது. நீங்களே சொல்லுங்க சீட்டு விளையாடம ஒரு மனுசன் எப்படி காலேஜ் படிக்கிறது? இதுல நாம வேற சின்ன வயசுல (4வதுல கத்துக்கிட்டேன்) இருந்தே இந்த சீட்டு விளையாட்டுல கொஞ்சம் பெரிய ஆளு. காசு வெச்சி விளையாடினா ஏமாத்த மாட்டேன். மத்த படி சீட்டு விளையாடும் பொது ஏமாத்தம விளையாடினா அதுல ஒரு மதிப்பே இல்லை. எப்படி ஏமாத்தறதுனு பின்னால சொல்லி தறேன். இப்ப அதப்பத்தி சொல்ல போறதில்லை.

பொதுவா இந்த சீட்டு விளையாட்டு பரிட்சைக்கு முன்னால ஸ்டடி லீவ் அப்ப ரொம்ப பிரபலமா இருக்கும். அந்த மாதிரி நாங்க ஒரு நாள் ரொம்ப தீவிரமா விளையாடிக்கிட்டு இருந்தோம். ராத்திரி ஒரு ரெண்டு, மூணு மணி இருக்கும். எவனோ ஒரு நாதாரி ஏமாத்திட்டானு எல்லாரும் சத்தம் போட ஆரம்பிச்சிட்டோம். சத்தம் கேட்டு கீழ தூங்கிட்டு இருந்த வார்டன் எழுந்து நேரா ரூமுக்கு வந்துட்டாரு. அந்த ரூம்ல கிட்டதிட்ட ஒரு பத்து, பதினஞ்சு பேரு இருந்திருப்போம். (ஒரு ரூம்ல நாலு பேர் தான் இருக்கணும்)

அவர் வர நேரம் எல்லாம் சத்தம் போட்டு இருந்ததால யார் கைலயும் கார்ட்ஸ் இல்லை. ஆனா டெபில்ல ஃபுல்லா சீட்டு இருந்துச்சி. அவருக்கு தூக்கம் கலக்கம் வேற. நாங்க எல்லாம் அவர பார்த்து சைலண்ட் ஆகிட்டோம் (செகண்ட் இயர் படிச்சோம். அதனால வார்டனுக்கு கொஞ்சம் கொஞ்சம் மரியாதை கொடுப்போம்). எங்களுக்குள்ள நடந்த உரையாடல் இதோ

வார்டன் : என்னடா பண்ணிட்டு இருக்கீங்க???

நாங்க: சும்மா பேசிட்டு இருக்கோம் சார்.

வார்டன் : ஏன்டா டேபில் ஃபுல்லா சீட்டா இருக்குது. நீங்க சும்மா பேசிட்டு இருந்தீங்களா? யார் யார் விளையாடீனீங்க?

நாங்க: சார். யார் கைலயாவது சீட்டு இருக்கா? நீங்களே பாருங்க. எல்லாம் சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.

வார்டன் : அப்ப யாரும் சீட்டு விளையாடல?

நாங்க: இல்லை சார்... நிஜமா சும்மா தான் உக்கார்ந்திருந்தோம்...

வார்டன்: சரி எல்லாரும் அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுங்க.

நாங்க: சார். நாங்க எதுவுமே பண்ணல. அதுக்கு எதுக்கு அப்பாலஜி லெட்டர் எழுதி தரணும்

வார்டன்: சரி நீங்க என்ன பண்ணீங்களோ அத எழுதி கொடுங்க. இனிமே அந்த மாதிரி பண்ண மாட்டொம்னு எழுதி கொடுங்க. நாளைக்கு காலைல 8 மணிக்கு அப்பாலஜி லெட்டர் ரூம்ல இருக்கனும். இல்லைனா எல்லாரும் ஹாஸ்டல்ல இருந்து பத்து நாள் சஸ்பெண்ட் பண்ணிடுவோம்

இப்படி சொல்லிட்டு வேகமா போயிட்டாரு.

அடுத்த நாள் ஒரு பத்து மணிக்கா எல்லாத்தையும் கூப்பிட்டாரு.

வார்டன் : என்னடா இது லெட்டரு?

நான்: அப்பாலஜி லெட்டர் சார்.

வார்டன்: என்ன எழுதிருக்குனு ஒரு தடவை படி.

நான்: (லெட்டரின் தமிழாக்கம்)
ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.
இப்படிக்கு,
பாலாஜி

வார்டன்: ஏன்டா உன்னை என்ன எழுத சொன்னா நீ என்ன எழுதியிருக்க?

நான்: சார் நேத்து ராத்திரி நீங்க சொன்னததான் நாங்க எழுதியிருக்கோம்.

வார்டன்: ஏன்டா ஹாஸ்டல்ல சீட்டு விளையாடறதே தப்பு. அதுவும் ராத்திரி மூணு மணிக்கு பதினஞ்சு பேர் பக்கம் ஓரு ரூம்ல இருந்தீங்க. இது அடுத்த தப்பு. அப்பறம் உங்களுக்கு ரெண்டு ஃப்ளோர் கீழ இருக்கறவன் எழுந்திரிக்க அளவுக்கு சத்தம் போட்டது அடுத்த தப்பு. நான் கேட்டும் பொய் சொன்னது அடுத்த தப்பு. இவ்வளவு பண்ணதும் இல்லாம ராத்திரி மூனு மணிக்கு இனிமே ரூம்ல இருக்க மாட்டொம்னு எழுதி கொடுத்துருக்கீங்க. உங்களை என்ன பண்ண?

நான்: சார் நாங்க யாரும் விளையாடலனு அப்பவே சொன்னோம். நீங்க தான் நீங்க என்ன பண்ணீங்களோ அதை எழுதி இனிமே அப்படி பண்ண மாட்டொம்னு எழுதி தர சொன்னீங்க. நாங்க என்ன செய்யறது?

வார்டன்: டேய் ஸ்டடி ஹாலிடேஸ்லயாவது ஒழுங்கா படிங்கடா... போங்க. இனிமே இப்படி பண்ணாதீங்க...

ஒரு வழியா ஃபிரியா விட்டுட்டார்... இதே மாதிரி இண்டர்னல் டெஸ்ட்ல பிட் அடிச்சி மாட்டி ஒரு முறை எழுதி கொடுத்தது (அது இதவிட காமெடி). அப்பறம் மன்மத ராசா பாட்ட சத்தமா கம்பெனில ட்ரெயினிங்கப்ப வெச்சி எழுதி கொடுத்ததுனு நிறைய இருக்கு... பொறுமையா சொல்றேன்...

-------------------------------------------

மக்கா: சிரிச்சிட்டு அப்படியே போயிடாதீங்க. இதே மாதிரி சும்மா ஜாலியா (மொக்கையா இருக்குனு சொல்லிடாதீங்கப்பு) ஏதாவது எழுதி சங்கம் போட்டிக்கு அனுப்புங்க. பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள். சொக்கா எனக்கில்லை எனக்கில்லை...

23 comments:

CVR said...

என்ன தல!!
நீங்களே போட்டிய வெச்சிட்டு, நீங்களே பரிசை த்ட்டிட்டு போயிடுவீங்க போல இருக்கே!!
நல்லா இருந்துச்சு தலைவரே!! :-D

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதுல நாம வேற சின்ன வயசுல (4வதுல கத்துக்கிட்டேன்) //

ஆகா....இது தான் தொழில் ரகசியமா, பாலாஜி?
விளையும் பயிர் முளையிலே தெரியும்-பாங்க!
நீங்க பதிவுலகில் "ரவுண்டு கட்டி" அடிப்பதன் காரணம் இது தானா? :-)

வெட்டிப்பயல் said...

//CVR said...

என்ன தல!!
நீங்களே போட்டிய வெச்சிட்டு, நீங்களே பரிசை த்ட்டிட்டு போயிடுவீங்க போல இருக்கே!!
நல்லா இருந்துச்சு தலைவரே!! :-D //

நாங்க போட்டில கலந்துக்க மாட்டோம் தலைவா...

நீங்களாம் வந்து தான் சிறப்பிக்கனும்...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுல நாம வேற சின்ன வயசுல (4வதுல கத்துக்கிட்டேன்) //

ஆகா....இது தான் தொழில் ரகசியமா, பாலாஜி?
விளையும் பயிர் முளையிலே தெரியும்-பாங்க!
நீங்க பதிவுலகில் "ரவுண்டு கட்டி" அடிப்பதன் காரணம் இது தானா? :-) //

தெய்வமே!!!
எப்படித்தான் இந்த மாதிரி யோசிக்கறீங்கனே புரியல...

சின்ன வயசுல சீட்டு அதிகமா விளையாடறனு தான் செஸ் சொல்லி கொடுத்தாங்க. யுனிவர்சிட்டி செலக்ஷன்ல தோத்த கதை ஒண்ணு இருக்கு. அதையும் சீக்கிரம் சொல்றேன்...

நம்ம வாழ்க்கையே சிரிப்பா சிரிக்குது :-)

மு.கார்த்திகேயன் said...

அட! முதல் பதிவை நீங்க போட்டு கணக்கை ஆரமபிச்சாச்சு போல பாலாஜி..

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

படிச்சிட்டு வந்து கமெண்டுறேன்

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப டாப்பிக்கலான பதிவுதான் போங்க! :)

வடுவூர் குமார் said...

ஹோ ஹோ இப்பத்தான் புரியுது, ஹாஸ்டல் வாழ்கையில் இவ்வளவு சுகம் இருக்கா? என்று.
வருடத்துக்கு உங்களை மாதிரி ஒரு பேட்ச் இருந்தா போதும் ஹாஸ்டல் வார்டன் கதி அவ்வளவு தான்.
மனது விட்டு சிரிக்க முடிந்தது.

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

அட! முதல் பதிவை நீங்க போட்டு கணக்கை ஆரமபிச்சாச்சு போல பாலாஜி..

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

படிச்சிட்டு வந்து கமெண்டுறேன் //

தல,
இது நான் போட்டிக்கு அனுப்பற பதிவு இல்லை... சிங்கங்கள் யாரும் போட்டில கலந்துக்க மாட்டோம்.

இது சும்மா விளம்பரம் :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

ரொம்ப டாப்பிக்கலான பதிவுதான் போங்க! :) //

கொத்ஸ்,
இது அடுத்த ஒரு ஜாலி பதிவுக்கு முன்னோட்டம்...

அதுதான் பிட் அடிச்சு மாட்டினது. அதுக்கு எழுதன லெட்டர். அது இதை விட காமெடியா இருக்கும் :-)

G3 said...

//ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.//

ROTFL :-)) Nalla thaan letter ezhudhareenga.. appology letter ezhudhara kadhaya vida unga love letter kadhaya sonna ilaya thalaimuraikku konjam udhaviya irukkumae :-)

வெட்டிப்பயல் said...

//வடுவூர் குமார் said...

ஹோ ஹோ இப்பத்தான் புரியுது, ஹாஸ்டல் வாழ்கையில் இவ்வளவு சுகம் இருக்கா? என்று.
வருடத்துக்கு உங்களை மாதிரி ஒரு பேட்ச் இருந்தா போதும் ஹாஸ்டல் வார்டன் கதி அவ்வளவு தான்.
மனது விட்டு சிரிக்க முடிந்தது. //

குமார்,
ஹாஸ்டல் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமானது... நான் 7வதுல இருந்து ஹாஸ்டல்தான்.

நம்ம ஜீனியர்ஸ் நம்மல விட மோசமான பசங்க :-)

வெட்டிப்பயல் said...

//G3 said...

//ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.//

ROTFL :-)) Nalla thaan letter ezhudhareenga.. appology letter ezhudhara kadhaya vida unga love letter kadhaya sonna ilaya thalaimuraikku konjam udhaviya irukkumae :-) //

G3 அக்கா,
ஏன் இந்த கொல வெறி???
நமக்கு அந்த மாதிரி கதை எதுவுமில்லை..

நீங்க வேணா தம்பிக்கு (எனக்கு) உங்க அனுபவத்த சொல்லி கொஞ்சம் உதவு செய்யுங்களேன் :-))

G3 said...

//நீங்க வேணா தம்பிக்கு (எனக்கு) உங்க அனுபவத்த சொல்லி கொஞ்சம் உதவு செய்யுங்களேன் :-))
//

Idhukku unga badhilae dhaan repeatu :-)))

//நம்ம ஜீனியர்ஸ் நம்மல விட மோசமான பசங்க :-) // :P

வெட்டிப்பயல் said...

//G3 said...

//நீங்க வேணா தம்பிக்கு (எனக்கு) உங்க அனுபவத்த சொல்லி கொஞ்சம் உதவு செய்யுங்களேன் :-))
//

Idhukku unga badhilae dhaan repeatu :-)))

//நம்ம ஜீனியர்ஸ் நம்மல விட மோசமான பசங்க :-) // :P //

ஆஹா...

நீங்க கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கீங்களே :-)

சரி உங்க ஜீனியர்ஸ் யார்கிட்டயாவது இருந்து வாங்கி ஒரு 4-5 Format போடுங்களேன் :-)

இராம்/Raam said...

பாலாஜி,

நல்லாயிருக்குப்பா:) வீட்டுலே இருந்து பதினஞ்சு வருசம் படிச்சத்திலே இதெல்லாம் நிறைய மிஸ் பண்ணியாச்சு :((


//நீங்க வேணா தம்பிக்கு (எனக்கு) உங்க அனுபவத்த சொல்லி கொஞ்சம் உதவு செய்யுங்களேன் :-))/

ஹி ஹி எனக்கும் எனக்கும்.....

ஏன் ஊஞ்சலை தூக்கிப்போட்டுட்டாங்க???? கயிறு அறுந்துப்போச்சா??? :))

நாகை சிவா said...

கலக்கல் வெட்டி....

நம்ம கை குறைந்த கலந்துக்கு ஒரு ஆள் இருக்க, சரி மைண்ட்ல வச்சுக்குறேன்.

மன்னிப்பு கடிதம் வேற யாருக்கோ எழுதி இருக்கனு நினைச்சு வந்தேன் ;-)

நாகை சிவா said...

மன்னிப்பு கடிதம் ஒரே தபா தான் எழுதி கொடுத்து இருக்கேன்.... அத நானும் என் பதிவுல போடுறேன். அதுவும் ஒரு செம காமெடி... மொக்கைனு வச்சுக்கோய்ன்...

G3 said...

//சரி உங்க ஜீனியர்ஸ் யார்கிட்டயாவது இருந்து வாங்கி ஒரு 4-5 Format போடுங்களேன் :-)//

////நீங்க வேணா தம்பிக்கு (எனக்கு) உங்க அனுபவத்த சொல்லி கொஞ்சம் உதவு செய்யுங்களேன் :-))/

ஹி ஹி எனக்கும் எனக்கும்.....//

Hehe.. Naan juniorsnnu sonnadhu paasakaara thambigalaayagiya ungalathaannu ungalukku puriyaliya :P

@Raam :
//ஏன் ஊஞ்சலை தூக்கிப்போட்டுட்டாங்க???? கயிறு அறுந்துப்போச்சா??? :))//

Vaangayya vaanga.. ungala thaan romba naala theditirundhen.. vandhu silenta kayitha aruthupottuttu poittu ippo inga vandhu onnum theriyaadha maadiri kelvi kekkareengalae.. :-(

களவாணி said...

//ராத்திரி வார்டன் வரும் போது ரூம்ல சும்மா உக்கார்ந்திருந்தேன். இனிமே ராத்திரி அவர் வரும்போது ரூம்ல இருக்க மாட்டேன்.
இப்படிக்கு,
பாலாஜி//

ஹி... ஹி... செம டமாசு...

இதயே மாத்தி, "இனிமே அவர் வரும்போது சும்மா உட்கார்திருக்க மாட்டேன். எந்திருச்சு குட்மார்னிங் ஸார் சொல்வேன்"ன்னு எழுதியிருந்தீங்கன்னா மறு நாள் இன்னும் டமாஸா இருந்திருக்கும்.

dubukudisciple said...

thala
supera kalaki irukeengale. .anupunga seekiram.. ungaluku thaan parisu.. enakillai enakillainu solra appave theriyuthu ungaluku thaanu

கோபிநாத் said...

நல்லா இருக்கு பாலாஜி ;-))))

ஜி said...

aaha... intha levelukku oru vaathiyaara ezuthu vittu koothu paathirukeenga...

"nalla varuveenga thambi", apdiinu vaazthunaara??

மனதின் ஓசை said...

:-)
காலேஜ்ல directora பார்த்துட்டு அப்புரம் உள்ள வான்னு வாத்தியார் சொன்னதுக்கு கூட படிச்சவன் போய் physical directora பார்த்துட்டு வந்தது ஞாபகத்துக்கு வருது..