தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, April 11, 2007

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?

தமிழ்மண நிர்வாகிகள் யாருனு நமக்கு தெரியல, மெயில் பண்ணாலும் விளக்கம் வராதுனு உறுதியா நம்பறேன் (நட்சத்திர வாரத்திற்கே உறுதி செய்யுமாறு ரெண்டு மூணு மெயில் அனுப்பியும் பதில் வராததால் வந்த ஒரு அபரிமிதமான நம்பிக்கை) அதனால தான் பொதுவுல இதை எழுதறேன். மன்னிக்கவும்...

திடீர்னு ஒருத்தர் வந்தாரு, தமிழ்மணத்துக்கு அறிவுரை சொன்னாரு. நீங்களும் விழுந்தடிச்சி செஞ்சிங்க. அவர் இது சரியில்லைனு போயிட்டாரு. தமிழ்மணத்தை தவிர எங்கயும் எழுதாத எங்கள மாதிரி ஆளுங்கள ஏன் நீங்க மதிக்க மாட்றீங்கனு தெரியல.

அடுத்து நீங்க சொன்ன காரணம் உண்மையிலும் வருத்தமளிக்க கூடியதாகவே இருக்கிறது. அதாவது ஒருவரே பல பெயர்களில் பல ஐடிக்களில் அவருக்கு பின்னூட்டமிட்டு கொள்கிறார்னு. நீங்க யார சொன்னீங்கனு புரியுது. அவருக்கு பிரச்சனைனு வந்தப்ப அத்தனை பேரையும் கமெண்ட் மாடரேஷன் பண்ண சொன்னீங்க. அவர் இப்படி ஏமாத்தரார்னு சொன்னவுடனே கமெண்ட் மாடறேஷன் தேவையில்லை அது அவரவர் பொறுப்புனு சொல்லிட்டீங்க. இப்படி அவரை வைத்தே நீங்கள் தீர்மாணம் எடுக்கும் பட்சத்தில் உங்க திரட்டில இருக்கற எங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு மனுஷனா தெரியலையா (I mean it). அவர் பேர என் பதிவுல சொல்லாததற்கு காரணம் இதையும் அவர் விளம்பரமா பயன்படுத்திக்குவாருனு ஒரு அபரிமிதமான நம்பிக்கை.

நீங்க சொல்ற காரணம் நல்ல பதிவுகள் தெரியாம போயிடுது. நல்ல பதிவுகள் எதுனு எப்படி சொல்றீங்கனு புரியல. வாசகர் பரிந்துரைனு ஒண்ணு இருக்கு, பூங்கா இருக்கு. இதெல்லாமே நல்ல பதிவுகளுக்கு விளம்பரம் கொடுக்க நீங்க செய்யற முயற்சி தானே? அப்படியும் முடியாம போய் இப்ப 40ல வந்து நிக்கறீங்க. எனக்கு தெரிஞ்சி 40 பின்னூட்டத்துக்கு மேல வரது பெரும்பாலும் நகைச்சுவை பதிவுகள் தான். இதனால பாதிக்கப்படுபதும் அவர்கள் தான். நீங்க நினைக்கிற மாதிரி நகைச்சுவை பதிவு எழுதறதும் அவ்வளவு சுலபமில்லைங்க. வேணும்னா யாருக்கும் தெரியாம ஒரு 4 பதிவு எழுதி உங்க வீட்ல படிக்க சொல்லுங்க. இந்த மாதிரி பதிவு எழுதறது ரொம்ப சுலபம். அதனால காமெடி பதிவெல்லாம் நல்ல பதிவில்லைனு அர்த்தம் கிடையாதுங்க.

புதிய எழுத்தாளருக்கு அங்கிகாரம் கிடைப்பதில்லைனு சொன்னீங்கனா, எல்லாருமே புதுசா இருந்து வந்தவங்க தாங்க. பதிவு போட போட நல்லா எழுதினா வாசகர் வட்டம் அதிகரிக்கும். அவ்வளவு தான். அபி அப்பாவும், கண்மணி அக்காவும் என்ன ஒரு வருஷமாவா எழுதறாங்க (நான் எழுத ஆரம்பித்தும் ஒரு வருடமாகவில்லை). இப்ப அவுங்களோட பதிவை நிறைய பேர் படிக்கறதில்லை? இந்த பின்னூட்ட மூலமா நிறைய நண்பர்கள் கிடைக்கறாங்க. அதை பறிக்காதீர்கள்...

சரி அடுத்து நீங்க வந்து சொல்லப்போறது பின்னூட்ட விளையாட்டு கொஞ்ச பேர் விளையாடறாங்கனு. பார்த்தீங்கனா ஒரு நாளைக்கு ஒரு பதிவுல யாராவது விளையாடுவாங்க. அதனால ஒரு லைன் வந்து நிக்க போகுது அந்த பதிவு. ஆனா இந்த ரூல்ஸால நிறைய பதிவுகள் படிக்க முடியாம போயிடுது. அதே மாதிரி 40 கமெண்டுக்கு மேல நல்ல கமெண்ட் வந்தாலும் அதில பெருசா ஈடுபாட்டோட பதில் சொல்ல முடியாம போயிடுது. அதுல முக்கியமானது உஷா அவர்களின் பெண்கள் டாப்பு, அப்பறம் கண்மணி அக்காவோட பதிவு. அப்பப்ப அபி அப்பா பதிவும் மிஸ்ஸாகிடுது.

ஏன் நீ தமிழ்மணத்த மட்டும் சொல்றனு கேக்கறவங்களுக்கு, நம்ம காலேஜ்ல படிக்கும் போது ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லைனா அங்க தான் பிரச்சனை பண்ணுவோம். பக்கத்து காலேஜ் ஹாஸ்டல்ல சாப்பாடு சரியில்லைனு யாரும் சண்டை போட மாட்டோம்.

பி.கு: ஒரு சின்ன அட்வைஸ். யாராவது சின்ன வயசு பசங்களையும் உங்க கூட்டத்துல சேர்த்துக்கோங்க. ரொம்ப வயசானவங்க வெச்சி நடத்தற மாதிரி ஒரு ஃபீலிங். அதனால தான் நகைச்சுவையை ரசிக்க உங்களுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.

43 comments:

Udhayakumar said...

கை நனைச்சிட்டு போறதா? வெட்டி, இது கொஞ்சம் ஓவரா இல்லை...

இது கலவர பூமி, இங்க வந்து அளவு சாப்பாடு, புல் மீல்ஸ்ன்னு காமெடி பண்ணிட்டு. பேசமா ஆணி புடுங்கப்பு, காசாவது சேரும்...

G.Ragavan said...

வெட்டி, நீ பேரைச் சொல்லலைன்னாலும் அது யாரைச் சொல்றதுன்னு தெரியும். அப்போ நிர்வாகம் வேற. இப்போ வேற. அதுவுமில்லாம....அந்த ஒரு நபர் மேலையும் தவறு இருந்தாலும் சேறு எல்லார் மேலையும் தெரித்தது. அதற்கு ஒரு பாதுகாப்புதான் அந்த மாடரேஷன். இன்னும் சொல்லப்போனா அந்த மாடரேஷன் வந்தப்புறந்தான் கொஞ்சமாவது பின்னூட்டங்கள் மேல கட்டுப்பாடு வந்தது. அதுக்கப்புறமும் நான் சொதப்புனது வேற விஷயம். :-)

ஒன்னைய மதிக்க மாட்டேங்குறேங்கன்னு சொல்றதுக்கு ஒரே ஒரு காரணந்தான். அந்த நாப்பது. அது தவிர வேற காரணங்கள் இருந்தா அவைகளையும் சொல்லு.

நாப்பதுக்கு மேல வாங்குறதுதான் 24 மணி நேரத்துல வருதே. அதுல பாக்க வேண்டியதுதானே. இப்ப இந்த நாப்பத எடுக்குறத நான் ஆட்சேபிக்கிறேன்னு வெச்சுக்குவோம். அப்ப நான் தமிழ்மணம் என்னோட சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்குதுன்னு சொல்லலாமா?

சின்னப்பசங்கன்னா? ஒன்னையச் சேத்துக்கச் சொல்லலாமா? ;-)

பொன்ஸ்~~Poorna said...

வெட்டி,
தமிழ்மணம் நிர்வாகிகள் யார் யார்னு புதுவருடத்தின் போதே அறிவிப்பு வந்ததே! நீங்க பார்க்கலியா? பட்டியலிட்டிருக்காங்க..

ஜி.ரா சொல்வதை நானும் வழிமொழியறேன்... நாற்பதுக்கு மேல் வரும் இடுகைகளும் 24 மணிநேரச் சேவையில் கவனம் பெறுகின்றன. என்னுடைய பல நாற்பதைத் தாண்டிய இடுகைகளுக்கு இப்பவும் பின்னூட்டம் வருது.. நகைச்சுவைப் பதிவுகளுக்கும் நாற்பது ஒரு தடையே இல்லை என்பதே என்னுடைய கருத்தும்..

வெட்டிப்பயல் said...

//Collapse comments

Udhayakumar said...

கை நனைச்சிட்டு போறதா? வெட்டி, இது கொஞ்சம் ஓவரா இல்லை...

இது கலவர பூமி, இங்க வந்து அளவு சாப்பாடு, புல் மீல்ஸ்ன்னு காமெடி பண்ணிட்டு. பேசமா ஆணி புடுங்கப்பு, காசாவது சேரும்... //

அது சரி :-)

செந்தழல் ரவி said...

மனதில் நினைப்பதை பட்டென்று சொல்லிவிட்டீர்கள்...

உண்மையும் கூட...I like it..

விரிவான பதிலை பதிவாகவே போட்டிடலாம் போலிருக்கே...!!!

வெட்டிப்பயல் said...

//ஒன்னைய மதிக்க மாட்டேங்குறேங்கன்னு சொல்றதுக்கு ஒரே ஒரு காரணந்தான். அந்த நாப்பது. அது தவிர வேற காரணங்கள் இருந்தா அவைகளையும் சொல்லு.//

ஜி.ரா,
என்னைய மட்டும் மதிக்க மாட்றாங்கனு நான் சொல்லல...

சரி வேணும்னா இன்னும் சொல்லலாம்... ஸ்டார் வீக்ல லக்கி லுக், கப்பி எல்லாம் இவ்வளவு நாளாக வராதது ஏன்?

இங்க எழுதறவங்க எத்தனை பேர் இவர்களவுக்கு எழுதுவார்களானு எனக்கு தெரியல.

என் ஸ்டார் வீக்ல ஒரு பதிவு கூட பூங்கால வரல. ஒரே காரணம் நான் அதுல ஒரு இடத்துல பூங்காவ பத்தி மீட்டிங்ல வந்த கமெண்டை சொல்லிட்டேன். அங்கே ஒரு முக்கியமான அந்நாள் தமிழ்மண நிர்வாகி கூட இருந்தார். அது எல்லாம் காரணம் இல்லைனா என்னுடைய ஸ்டார் வீக் பதிவுல ஒண்ணு கூடவா தகுதி இல்ல.

இல்லை பெரியாரை பத்தி நான் வித்யாசமா சொன்ன பதிவு கூடவா நல்லா இல்லை. வயசானவர்களுக்கு இருக்கும் வீம்பு குணம் அவர்களிடம் இருப்பதை போல் உணர்கிறேன்...

அப்பறம் 24 மணி நேரம் நிறைய பேர் படிப்பதில்லை. நானும் நிறைய பேரை கேட்டுட்டேன். பாப் அப் விண்டோல வரதால நானும் அதை பார்க்கறதில்லை.

செந்தழல் ரவி said...

ஜீரா / பொன்ஸ்

நீங்க ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லிட்டு அப்படியே அப்பீட்டாகுறீங்களே..

1. ட்ரான்ஸ்பரன்ஸி இல்லாத நட்சத்திர தேர்வு முறை ( இப்போ நட்சத்திரம் ஆருங்கோவ் - பல்ல இளிச்சிக்கிட்டு இருக்குதே செத்த கவனிக்க கூடாதா)

2. புண்ணூட்ட உயரெல்லை. ( அந்த பதிவர் இந்த உயரெல்லைக்கு ஐடியா குடுத்ததே எவனும் தனக்கு பின்னூட்டம் போடமாட்டேங்குறாங்க அப்படீன்ற வயத்தெரிச்சல்ல தான் - இப்போ "எனக்கென்ன, தமிழ்மணம் எனக்கு புடிக்கல, நான் தேன் கூட்டுல தான் எழுதுவேன்னு பூட்டாரு"...நொட்டு)

3. யார் என்ன சொன்னாலும் கேக்கக்கூடாது என்ற அடம்பிடிக்கும் ஸ்டப்பர்ண் மனோபாவம்..(அதுவும் இலங்கை தமிழில் - எனக்கு பயங்கர காமெடி பதிவு படிக்கனும்னா தமிழ்மண அறிவிப்புகள் பதிவை எடுத்துப்பேன் ) - சர்வேசன் வெச்ச சர்வேயில தமிழ்மணம் உயரெல்லை ஊத்திக்கிச்சு...நூறு பேருக்கு மேல ஓட்டளிச்சு...அதனால் என்ன...எவன் என்ன நினைச்சா என்ன...நாம இப்படித்தான் மனநிலை...

இந்த மூனு விஷயங்களுக்கும் பதில் சொல்லிட்டு கெளம்புங்க...

ரத்த பூமியில வந்து காமெடி பண்ணனும்னு நினைச்சீங்க....

Anonymous said...

தமிழ்மணம் நிர்வாகப்பட்டியல்ல மதில்லாம் இருந்தாங்களே. என்னாசுப்பா?

Anonymous said...

ஸ்டார்வீக், மதி நடத்திட்டிருந்தப்ப நல்லாருந்துது. இப்ப டல்லோ டல்லு.
வெட்டி, இப்ப நீ சொல்லுறதும் விழலுக்கிறைச்ச நீராப்போகும். இருந்து பாரேன்.

அபி அப்பா said...

இந்த விஷயத்தில் நான் பாலாஜி கருத்தோடு 100% ஒத்து போகிறேன். என்னய கூட விடுங்க, நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கி கொண்டு இருப்பதால் கூப்பிட்டோ மயில் விடு தூது வழியாகவோ பதிவு போட்டவுடன் சொல்லி விடுவேன், ஆனால் சகோதரி கண்மணி போன்ற நல்ல நகைச்சுவை பதிவர்களின் பதிவு கவணிக்கப்படாமலே போய் விடுகின்றன.

பின்னூட்டம் போடும் எவருமே அந்த பின்னூட்டத்துக்கு பதிவர் என்ன சொல்கிறார் என்பதை கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்ப்பார்கள். பதிவர் பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவர் என்று கூட நினத்து கொள்ள வாய்ப்பு இருக்கு.

ஆனால் பதிவரோ இருக்கும் 40ல் நாமே ஏன் 1 முழுங்கனும், 40 ஆகட்டும் பின்ன பதில் சொல்லிக்கலாம் என இருந்து விடுவார். ஆறின கஞ்சி பழம் கஞ்சி கதையாகி அவங்கவங்க வேற வேளை பாக்க போயிடுவாங்க, இதுதான் இப்போ நடக்குது.

பாலாஜி போன்ற தில் பதிவர்கள் இப்படி பதிவு போடலாம், நான் ஒரு பயந்தாங்குளி பதில் போடவே ரொம்ப யோசிச்சு போடுகிறேன்.

வெட்டிப்பயல் said...

பொன்ஸக்கா,
தகவலுக்கு நன்றி...

ஒண்ணு ரெண்டு பேர்தான் நமக்கு தெரியுது...


அப்பறம் 40 பத்தி நான் ஜி.ராவுக்கு சொன்னதுதான்...

அபி அப்பா said...

காமடி பதிவு தமிழ்மணத்துக்கு பிடிக்கலைய்யா சரி விடுங்க(பாலாஜி சொன்ன மாதிரி சின்ன பசங்க இல்லியோ அங்க) சில நல்ல விவாத பதிவும் விவாதம் இல்லாமலேயே முடிஞ்சு போகுது. இதோ பாலாஜி போட்ட கிரீமி லேயர் பதிவு நல்லா விவாதிக்கலாம். ஒரு பின்னூட்டம் வந்தா பாலாஜி அதுக்கு வந்து பதில் சுட சுட சொல்லனும், இந்த 40 பிரச்சனையால அவர் ஆடிக்கு 1 பதில் அமாவாசைக்கு 1 பதில் போடுகிறார். அதனால டோட்டலா அவர் சொல்ல வந்த விஷயம் இப்போ நீர்த்து போச்சு.

எல்லாரும் 24 மணி நேரமும் நெட்ல இருக்க முடியாது. கிடைக்கும் 1 மணி நேரத்தில் விவாதித்து முடித்து விட்டு போய்கிட்டே இருக்கனும்.

நான் ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு பாலாஜி எப்போ எனக்கு பதில் சொல்லுவார்ன்னு காத்து கிடந்து...விடிஞ்சுடும்.

நாற்பது எப்போ போவுது இதுதான் இப்போ ஒரே கேள்வி!

மோகன்தாஸ் said...

இரண்டு விஷயம், ஒன்னு பூங்கா பத்தி சொன்னது. என்னமோ உங்கள் பதிவோட தகுதியை நீங்கள் பூங்காவில் தேடுவது போலிருக்கிறது அதனால் சொல்கிறேன்.

எல்லோருக்கும் அவரவர்களுக்கான அரசியல் உண்டு நிச்சயமாய். விட்டா ஏன் என் பதிவு கில்லியில் வரலை, பூங்காவில் வரலை அப்படின்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணுவீங்க போலிருக்கு. பூங்கா போன்ற விஷயங்கள் எல்லோரும் செய்யக்கூடியது அதை ஒரு ஸ்டான்டர்ட் ஆக ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இரண்டாவது ஏன் தமிழ்மணம் 40 பின்னூட்டம் தான் உயரெல்லை என்ற முடிவிற்கு வந்தார்கள் என்று தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அது நல்ல முடிவு தான். எனக்குப் பிடித்த பதிவுகளை நான் தமிழ்மணத்தில் அவங்க எழுதின பதிவு தெரியுதா, பின்னூட்டம் தெரியுதா என்றெல்லாம் இல்லாம படிப்பது உண்டு. தமிழ்மணம் டிப்பென்டென்ஸி இல்லாமல் இருப்பதுவே மிகச்சிறந்த பதிவென்பேன் அப்படியிருக்கவே விரும்புகிறேன்

தமிழ்மணம் நட்சத்திரம் தேர்ந்தெடுப்பதிலும் ஆரம்பத்திலிருந்தே பாலிடிக்ஸ் உண்டு(நான் நட்சத்திரமாய் இருந்திருக்கிறேன்.) ஆனால் நீங்கள் பாலிடிக்ஸ் உடன் தான் வாழமுடியும்

-----------------------

பின்னூட்டம் அளிப்பவர்களை விடவும் படிப்பவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன் உங்கள் பதிவுகளில் எத்தனைக்கு பின்னூட்டம் போட்டிருப்பேன் ஆனா படித்தது அதிகமாய்த் தான் இருக்கும்.

அதனால் பூங்காவையோ இல்லை அதுபோல் வலைஉலகில் இருக்கும் இதழ்களையோ ஒரு ஸ்டான்டர்ட் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Anonymous said...

http://tmi-llc.com/content/view/15/41/

இதை படித்து எல்லா விவரத்தையும் தெரிந்துகொண்டு உடனே பதில் அளிக்கவும்.

Anonymous said...

//அதாவது ஒருவரே பல பெயர்களில் பல ஐடிக்களில் அவருக்கு பின்னூட்டமிட்டு கொள்கிறார்னு.//
அதுக்கு முன்னாலே அவரோட பதிவுக்கு ஆருமே பின்னூட்டம் போடக்கூடாதுன்னு ஒரு பேர்வழி அழும்பு பண்ணத ஏன் சொல்லல்ல தல? அப்படி பல ஐடில்லத்தான் போட்டார்னு சொல்றியே, அத்த ஒன்னாலே நிரூபிக்க முடிஞ்சுதா? அதான் அவங்கெல்லாம் தன்னோட நண்பர்கள்னு சொன்னாரே. ஒத்தரை செயல் பட விடாம தடுத்தா இப்படித்தான் சார் நடக்கும். அதே சமயம் அந்த ஐ.டி. க்களிலே யாராவது ஒரு ஆள் ஆபாசமா எழுதினாரா? இத்தயும் பாத்துருப்பாங்க தமிழ்மணத்து ஆளுங்க. இப்படி ஏன் ரோசிக்க மாட்டேங்கற?

அவரே ஒத்துக்கிட்ட ஒரு புனைப்பெயர்லேயும் நாள் கணக்கா சலிச்சு தேடினாங்களே. ஒரு ஆபாசமா எங்காவது எழுதினாரா?
சொல்லும் ஐயா.

//அவர் இப்படி ஏமாத்தரார்னு சொன்னவுடனே கமெண்ட் மாடறேஷன் தேவையில்லை அது அவரவர் பொறுப்புனு சொல்லிட்டீங்க.//
இல்லியே. 30 எல்லை வந்தப்பதான் இதையும் சொன்னாங்க. அதனால என்ன ஆச்சு? மாடரேஷனோட சௌகரியத்தைப் பாத்து யாருமே அத்த கைவுடல்லியே, ஒங்களையும் சேத்து? அப்படி விட்ட ஒரு அமுக பதிவரும் திரும்ப அத்த வேகமா போட்டாரே? அதப் பத்தி என்ன சொல்லுவீங்க?

வெட்டிப்பயல் said...

அபி அப்பா,
ரொம்ப சரி...

நானும் கண்மணி அக்கா பதிவுல பதில் போட்டு ஒரு நாள் முழுக்க பார்த்தேன்... பதில் இல்லை... அப்பறம் போடறதை விட்டுட்டேன்...

வெட்டிப்பயல் said...

மோகன் தாஸ்,
என் பதிவோட தரத்தை நான் அவர்களை வைத்து நிர்ணயம் செய்வது கிடையாது.

ஜி.ரா கேட்டதற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை சொன்னேன்...
நல்லா எழுதர நட்சத்திரமா ஒரு வாரம் இருனு சொல்லிட்டு அவர்கள் நல்ல பதிவுகளின் தொகுப்பில் வராதது அவர்களின் வெறுப்பை காட்டுகிறதுனு சொன்னேன். Take it easy policy இல்லை...

//தமிழ்மணம் டிப்பென்டென்ஸி இல்லாமல் இருப்பதுவே மிகச்சிறந்த பதிவென்பேன் அப்படியிருக்கவே விரும்புகிறேன் //
இதுதான் அவர்களின் விருப்பமும் என நினைக்கிறேன்...

Rasigan said...

vetti... tamil manamna enna?? ... nee en avanga kuda sandai podura??... he he... naan blog padikarathellam konjam pudusu... adhuthan.....

கண்மணி said...

அன்புத் தம்பி வெட்டிக்கு எனக்கு ஞாபகம் உள்ளவரை ஒரு பதிவில் பின்னூட்டினீர்கள்.நானும் பதில் சொன்னதாகத்தான் நினைக்கிறேன்.
என் பதிவுகளுக்கான பின்னூட்டம் அல்லது உயர் எல்லை பற்றி நான் கவலைப்படுவது இல்லை.ஏனெனில் வெட்டியோ,செந்தழல் ரவியோ என் பதிவில் பின்னூட்டம் இடாததால் பதிவையே படிக்கவில்லையென்று எப்படீச் சொல்ல முடியும் [நானும் உங்கள் பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டம் இடுவது குறைவே]பொன்ஸ் என் பதிவுகளில் அதிகம் மறுமொழிந்ததில்லை.ஆனாலும் என்னைப் புதுப்பதிவராக அறிமுகப் படுத்தவில்லையா?நெல்லை சிவாவும் அப்படியே.பின்னூட்டமிடுவது பெரும்பாலும் சிரமப்படுத்துவதாலேயே அது தவிர்க்கப் படுவதாக கருதுகிறேன்.
என்னுடைய சொந்த பதில்கள் பின்னூட்ட எல்லையை அதிகரிக்கும் என்பதால் நான் யாருக்கும் பதில் சொல்லாமல் இருந்ததில்லை.வேலை காரணமாக ஒத்திப் போட்டிருக்கலாம்.
நான் சுத்த சைவம் என்பது போல் எனக்குத் தமிழ்மணம் தவிர எதுவும் தெரியாது.அதில் உள்ள நிறைகுறைகளை விமர்சிக்கும் அளவு பரிச்சயம் இல்லாவிடினும் அது என் இயல்பு வாழ்க்கையை மாற்றி அமைத்து முகம் தெரியாத நட்பை வளர்க்க உதவுகிறது என்பதே உண்மை.அதனாலேயே என் பதிவுகளை என் நண்பர்களுக்கும் தம்பிகளுக்கும் பரிசளிக்கும் ஒரு வழமையைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறேன்]

[வெட்டி என் அடுத்த
பதிவு உமக்குத்தான் பரிசு படிச்சுடுப்பா ]

Anonymous said...

Enna Balaji, ithulayum reservation veanuma!

G.Ragavan said...

// செந்தழல் ரவி said...
ஜீரா / பொன்ஸ்

நீங்க ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் சொல்லிட்டு அப்படியே அப்பீட்டாகுறீங்களே.. //

ரவி, ஒரு விஷயத்த மட்டும்னு சொல்லாதீங்க. இந்தப் பதிவு எதைப் பத்திப் பேசுதோ..அதப் பத்தி மட்டும் கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.

நட்சத்திரத் தேர்வு முறையும் மற்ற பிரச்சனைகளையும் பேசுனா..அது பற்றிய கருத்துகளும் கண்டிப்பாக சொல்வோம். ஆனா இந்தப் பதிவுல நாப்பதத் தாண்டலையே! அதுனால்தான் அதப்பத்திப் பேசலை.

// வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
என்னைய மட்டும் மதிக்க மாட்றாங்கனு நான் சொல்லல...

சரி வேணும்னா இன்னும் சொல்லலாம்... ஸ்டார் வீக்ல லக்கி லுக், கப்பி எல்லாம் இவ்வளவு நாளாக வராதது ஏன்? //

இதப் பத்தி உன்னோட பதிவு சொல்லவே இல்லை. அது நாப்பதுலேயே ஓடிக்கிட்டிருக்கு. நட்சத்திரத் தேர்வு என்பது வெளிப்படையாக இல்லை என்பது உண்மை. உன்னுடைய பதிவு அதைப்பத்திப் பேசியிருந்தால் அதற்கு ஆதரவு சொல்லியிருப்பேன். சொன்ன பேச்சு கேக்கலைன்னா எப்படி? எத்தன தடவ சொன்ன? என்ன சொன்னன்னும் நாங்க ஒன்னையக் கேக்கலாம்ல. அப்படி நீ சொல்றது சரீன்னு தோணுச்சுன்னா கண்டிப்பா உனக்கு ஆதரவாத்தான் சொல்வோம்.

// இங்க எழுதறவங்க எத்தனை பேர் இவர்களவுக்கு எழுதுவார்களானு எனக்கு தெரியல.

என் ஸ்டார் வீக்ல ஒரு பதிவு கூட பூங்கால வரல. ஒரே காரணம் நான் அதுல ஒரு இடத்துல பூங்காவ பத்தி மீட்டிங்ல வந்த கமெண்டை சொல்லிட்டேன். அங்கே ஒரு முக்கியமான அந்நாள் தமிழ்மண நிர்வாகி கூட இருந்தார். அது எல்லாம் காரணம் இல்லைனா என்னுடைய ஸ்டார் வீக் பதிவுல ஒண்ணு கூடவா தகுதி இல்ல. //

வெட்டி...அப்படிப் பாத்தா என்னோட பதிவுகள்ள ஒன்னே ஒன்னுதான் பூங்காவுல வந்திருக்கு. அது ஒரு திரைப்பட விமர்சனம். நான் திரைவிமர்சனமா நல்லா எழுதுறேன்? பூங்காவை வைத்து நான் என்னுடைய எழுத்தை அளவு போடுவதில்லை. அதுதான் பெரிதென்றால் சொல்வதற்கொன்றுமில்லை.

// இல்லை பெரியாரை பத்தி நான் வித்யாசமா சொன்ன பதிவு கூடவா நல்லா இல்லை. வயசானவர்களுக்கு இருக்கும் வீம்பு குணம் அவர்களிடம் இருப்பதை போல் உணர்கிறேன்...

அப்பறம் 24 மணி நேரம் நிறைய பேர் படிப்பதில்லை. நானும் நிறைய பேரை கேட்டுட்டேன். பாப் அப் விண்டோல வரதால நானும் அதை பார்க்கறதில்லை. //

அப்படியென்றால் அதற்குண்டான விழிப்புணர்ச்சியைக் கொண்டுவா. அதற்கு ஏதாவது செய். அதுதான் சரியாக இருக்கும். இப்பொழுது இருக்கும் முறையால் நிறைய பின்னூட்டம் வாங்குகிற பதிவுகளுக்கும் குறைவாகப் பின்னூட்டம் வாங்குகிற பதிவுகளுக்கும் வாழ்வுண்டு. ரிசர்வேஷன் மாதிரி. நீ கிரீமி லேயர். புரிஞ்சதா? ஓசில வர்ர நீ பிசி கோட்டா கேட்டா பிசி கோட்டா தேவைப்படுறவங்கள என்ன சொல்றது? உனக்கு வாய்ப்பிருக்கு. அதைப் பாருங்கன்னு அடுத்தவங்களப் பாக்க வெக்கிறது கண்டிப்பா உதவும்.

Anonymous said...

//ரொம்ப வயசானவங்க வெச்சி நடத்தற மாதிரி ஒரு ஃபீலிங். அதனால தான் நகைச்சுவையை ரசிக்க உங்களுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.//

//வயசானவர்களுக்கு இருக்கும் வீம்பு குணம் அவர்களிடம் இருப்பதை போல் உணர்கிறேன்...//

I object your Honour !

Convenor,
Action Group for Discrimination on Age

Syam said...

நல்ல வேளை கமெண்ட் போடுறதுக்கு முன்னாடி பொன்ஸ் அக்கா குடுத்த பட்டியல் பார்த்தேன்...எல்லோரும் நமக்கு பக்கதுல தான் இருக்காங்க...நான் எதுனா சொல்ல போயி ஆட்டோ அனுபிட்டாங்கன்னா...நான் அபீட்டு :-)

மு.கார்த்திகேயன் said...

//பி.கு: ஒரு சின்ன அட்வைஸ். யாராவது சின்ன வயசு பசங்களையும் உங்க கூட்டத்துல சேர்த்துக்கோங்க. ரொம்ப வயசானவங்க வெச்சி நடத்தற மாதிரி ஒரு ஃபீலிங். அதனால தான் நகைச்சுவையை ரசிக்க உங்களுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.
//


Good Punch Balaji.. now a days thamizhmanam is not that good. Its too normal that many people are leaving from thamizhmanam.. bcos of ignorance and bad-word-comments. I too get a comment like that long back :-(

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

காமடி பதிவு தமிழ்மணத்துக்கு பிடிக்கலைய்யா சரி விடுங்க(பாலாஜி சொன்ன மாதிரி சின்ன பசங்க இல்லியோ அங்க) சில நல்ல விவாத பதிவும் விவாதம் இல்லாமலேயே முடிஞ்சு போகுது. இதோ பாலாஜி போட்ட கிரீமி லேயர் பதிவு நல்லா விவாதிக்கலாம். ஒரு பின்னூட்டம் வந்தா பாலாஜி அதுக்கு வந்து பதில் சுட சுட சொல்லனும், இந்த 40 பிரச்சனையால அவர் ஆடிக்கு 1 பதில் அமாவாசைக்கு 1 பதில் போடுகிறார். அதனால டோட்டலா அவர் சொல்ல வந்த விஷயம் இப்போ நீர்த்து போச்சு.//

அபி அப்பா,
ரொம்ப சரி...
நான் மட்டுமில்லை. இன்னும் ஒரு சிலர் 40க்குள்ள நாமே எதுக்கு கமெண்ட் போட்டுக்கனும்னு தான் யோசிக்கறாங்க.

அதுக்கு என்ன செய்யலாம்??? நிறைய பேரை நல்லா எழுத வைத்த தமிழ்மணம் ஏன் இவ்வாறு செய்கிறது?

Anonymous said...

//தூங்கவும்...தூங்கவும்....///

இனிமே நோ பின்னூட்ட ரிலீஸ்...

Anonymous said...

நான் இந்த பதிவ தேன்கூட்டுல தான் பார்த்தேன். இந்த ஆஸ்டல் சாப்பாட்ட கொஞ்சம் துன்னு பாக்கறது ?

தேன்கூடு ஒரு டெக்னிக்கல்லி சூப்பர்ப் வெப்ஸைட் கண்ணு..

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பார்த்தீங்கனா ஒரு நாளைக்கு ஒரு பதிவுல யாராவது விளையாடுவாங்க.//

அதானே.. ஒரே ஒரு பதிவுல மட்டும்தான் ஒரு நாளையோட கும்மி(பி). :-D

// அதனால ஒரு லைன் வந்து நிக்க போகுது அந்த பதிவு.//

தெரியும் தெரியும்.. நானும் பார்த்தேன். நீங்களும் இப்படி ஒன்னு எழுதுறேன்னு கிளம்பியதும் ஒரு லை போஸ்ட்டுததான் இங்கேயும்ன்னு வந்து பார்த்தா, நல்ல நல்ல கேள்விகளா கேட்டு அசத்திட்டீங்க.. ;-)

வெட்டிப்பயல் said...

//
அவரே ஒத்துக்கிட்ட ஒரு புனைப்பெயர்லேயும் நாள் கணக்கா சலிச்சு தேடினாங்களே. ஒரு ஆபாசமா எங்காவது எழுதினாரா?
சொல்லும் ஐயா.//

ஐயா,
அவர் பதிவையே நான் படிக்கறதில்ல. இதுல அவர் வேற பேர்ல போட்ட பின்னூட்டத்த நான் ஏன் படிக்க போறேன்...

அவரை பத்தி சொல்லி மத்தவங்களை அடிக்க வேணாம்னு சொல்றேன்...

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

vetti... tamil manamna enna?? ... nee en avanga kuda sandai podura??... he he... naan blog padikarathellam konjam pudusu... adhuthan..... //

ஆஹா, தமிழ்மணம்னா தமிழ் வலை பதிவுகளை திரட்டும் திரட்டி...

www.thamizmanam.com

Dubukku said...

அன்பின் வெட்டி,
மோகன் தாஸ் சொன்ன பல கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன். உங்கள் பதிவின் தரத்தை நிர்ணயிப்பவர்கள் நீங்களாக இருக்கவேண்டும். தமிழ்மணத்திலோ, பூங்காவிலோ, நட்சத்திரப் பதிவாளராகவோ வருவதால் என் பதிவுகள் சிறந்தவை என்றும் வரவில்லை என்றால் நல்லவை அல்ல என்றும் நினைத்தால் உங்கள் திறமையை நீங்களே சந்தேகப் படுவது போல் ஆகிவிடாதா? தமிழ்மணத்தில் வருகிறதோ இல்லையோ நல்ல பதிவுகளுக்கு விளம்பரம் கிடைக்கும் மக்கள் தேடி வந்து படிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

வெட்டிப்பயல் said...

கண்மணி அக்கா,
நான் நீங்க பின்னூட்ட எல்லைக்கு பயந்து பொறுமையாக பதிலளிக்கிறீர்கள் என்று சொல்லவில்லை... வீட்டு வேலைகளில் தாமதமாயிருக்கலாம் என்றே நினைத்திருந்தேன்.

தொல்ஸ் அண்ணன் சொன்னதால் ஒரு வேலை அது தான் காரணமோ என்று நினைத்திருந்தேன்...

உங்களுடைய பெரியார் சிலையும் அம்புஜம் மாமியும் பதிவு மாற்றுல நகைச்சுவை பகுதில பாத்துட்டு வந்தேன்... அது தமிழ்மணத்துல மிஸ் பண்ணிட்டனேனு ஒரு ஆதங்கம். அவ்வளவு தான்

வெட்டிப்பயல் said...

//இதப் பத்தி உன்னோட பதிவு சொல்லவே இல்லை. அது நாப்பதுலேயே ஓடிக்கிட்டிருக்கு.//

ஜி.ரா,
அதைத்தான் நான் பேச வந்தேன்.
சற்றுமுன்னு ஒரு வலைப்பூ இருக்கு. அது உங்களுக்கு தெரிந்திருக்கும். எல்லாரும் பெரிய ப்ளாகர்ஸ். அதுல ஒரு பதிவுல 40 வரைக்கும் இங்க பின்னூட்டமிடுவோம் அதுக்கு அடுத்து புது பதிவு போடலாம்னு ஒரு பதிவுல சொல்லி 40 வரைக்கும் அடிச்சிட்டு இருந்தாங்க.

இத தான் தமிழ்மணம் விரும்புதா?
நானும் என்னுடைய பதிவுல 40 முடிஞ்சவுடனே அடுத்து வேற பதிவ போடடு ஆடலாமா?

நான் சொல்ல வரது, இந்த 40க்கு எல்லாரும் கொடுக்கற ரெஸ்பான்ஸ். நான் மனசுல தோனறத சொல்றேன். அவ்வளவு தான்.

அடுத்து பூங்காவை பற்றி... ஒருத்தர நல்லா எழுதறீங்கனு நட்சத்திர வாரத்துக்கு கூப்படறீங்க. நல்ல பதிவுகளை அடையாளப்படுத்தறோம்னு ஒரு தொகுப்ப வெளியிடறீங்க.

அப்ப அந்த வாரத்துல அவர் எழுதின ஒரு பதிவக்கூட போடலைனா ரெண்டும் Contradict ஆகலையா???

என் பதிவ அந்த வாரத்துல வராததுக்கு காரணம் அந்த வாரத்துல பூங்காவை பற்றி நான் சொன்ன ஒரு சில வார்த்தைகளே. அவ்வளவு தான்.

விமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் அவர்களுக்கில்லை என்பது போலத்தான் தோன்றுகிறது.

நான் தமிழ்மணத்துக்கு எதிராக பேசவில்லை. காமெடியா எழுதறவங்களுக்கும் காமெடியனுக்கு கொடுக்கற முக்கியத்துவத்த மட்டும் கொடுக்காதீங்கனு தான் சொல்ல வரேன்.

நாளைக்கே நான் எழுதறத நிறுத்திட்டு சுலபமா போகலாம். ஆனா என்னை எழுத வைத்த தமிழ்மணமே நான் எழுதுவதை நிறுத்துவதற்கும் காரணமாக இருக்கும் என்பதையே சொல்ல ஆசைப்படுகிறேன்.

நாகை சிவா said...

//நாளைக்கே நான் எழுதறத நிறுத்திட்டு சுலபமா போகலாம்.//

இந்த பொன்னாள் எந்த நாள் என்று சிலர் கேட்குறாங்கப்பா... அவங்க யாருனு என்னைய கேட்டு வம்பில் மாட்டி விடாத சொல்லிட்டேன்.

உண்மை said...

//
வெட்டிப்பயல் said...
.....
நாளைக்கே நான் எழுதறத நிறுத்திட்டு சுலபமா போகலாம். ஆனா என்னை எழுத வைத்த தமிழ்மணமே நான் எழுதுவதை நிறுத்துவதற்கும் காரணமாக இருக்கும் என்பதையே சொல்ல ஆசைப்படுகிறேன்.
//

என்னபா, எலுத மாட்டேன்னு ப்லிம் காட்டுர?

Murali Ramachandran said...

அட போங்கப்பா, சின்னபுள்ளத்தனமா பேசிகிட்டிருக்கீங்க.

ஒருத்தன் கால் இல்லைன்னு கவலைப்படரப்போ, இன்னொருத்தன் காலுக்கு 'nike'ஷூ இல்லைன்னு
வருத்தப்பட்ட மாதிரி இருக்கு உங்க பதிவு.

நானும் என்னோட ஒரு பதிவாவது தமிழ் மணத்தில வருமான்னு முயற்சி பண்ணிகிட்டு
இருக்கேன், அவங்க என் வளைப்பதிவுக்கு வந்து அதை திரட்ட கூட மாட்டேங்கராங்க,
நீங்க என்னடான்னா, பத்து எழுதினா அதுல ஒன்னை விட்டுடீங்களேன்னு வருத்தப்படரீங்க.
இதையெல்லாம் பாத்து வெறுத்துப் போய், எங்க தமிழ் சங்கத்தில, நாங்களே தமிழ் மணம் மாதிரி
ஒரு திரட்டி செய்தா என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்கோம்.

மோகன்தாஸ், டுபுக்கு சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். தமிழ் மணம் எழுத்தாளர்களுக்கும் (அ)
வளைப் பதிவாளர்களுக்கும் அவர்களுடைய எழுத்தின் தகுதியை நிர்ணயம் செய்யும்
என்று நினைப்பதே ஒரு கால விரயம். எழுதரது மட்டும்தான் உங்க வேலை,
அதை தமிழ்மணமோ அல்லது வேறு யாரோ, சரியா மற்றவர்களுக்கு தெரியப் படுத்த
வில்லை என்றால் அதனால உங்களுக்கு நஷ்டமில்லை. இது 'சீ சீ இந்தப் பழம் புளிக்கும்'
கதையோ அல்லது take it easy பாலிசியோ இல்லை.

அன்புடன்,

முரளி

icarus prakash said...

உங்களை எல்லாம் தமிழ்மணம் நல்லா கெடுத்து வெச்சிருக்கு :-). முதல்ல சில தகவல்கள்.

1. இந்திய மொழிகளிலே, தமிழிலே மட்டும் தான் , இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.

2. தமிழ்மணம் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். உதாரணத்துக்கு, புதுசா ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து, அதை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்காமல், கொஞ்ச நாள் நடத்திப் பாருங்கள். ரெண்டே நாளில் வாழ்க்கையே வெறுத்து விடும், அதாவது மறுமொழிகள், டிராக்பேக், எல்லாம் எதிர்பார்த்திருந்தால்.

3. இன்றைக்கு இரண்டாயிரத்து சொச்சம் பதிவுகள் இருக்கிற நிலையில், இது போல கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு வருடங்களில், பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும். அப்ப என்ன செய்வீங்க?

4. தமிழ்மணம் உருவான நோக்கம் உன்னதமானது - உருவான காலத்தில் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், பின்னர் கொஞ்ச நாள் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருக்கிறேன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன். நூறோ என்னமோ பதிவுகள் மட்டும் இருந்த காலத்தில், feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் துவங்கியதே தவிர, தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.

4 தமிழ்மணம் திரட்டி வேறு. பூங்கா வேறு. தமிழ்மணம், தன்னுடைய விதிகளுக்கு உட்பட்டு வரும் எல்லாப் பதிவுகளையும் திரட்டும். உள்ளடக்கம் பற்றி புகார் வந்தால் மட்டும், அங்கே மனிதத் தலையீடு இருக்கும். ஆனால் பூங்கா என்பது, வலை இதழ். ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவரும். ஆசிரியர் குழுவின் அரசியல் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு - எப்படி சோவைப் பற்றி விமர்சனம் செய்கிறோமோ அப்படி-ஆனால், என்னுதைப் போட மாட்டேன் என்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்க முடியாது.

5. தமிழ்மணம் ஏற்படுத்திக் கொடுத்த, சொகுசுகளால், எவ்வளவு நன்மை ஏற்பட்டதோ, அதே அளவு தீமையும் ஏற்பட்டிருக்கிறது. எந்த கஷ்டமும் படாமல், நாலு வரி கிறுக்கிவிட்டு ( உங்களைச் சொல்லவில்லை பாலாஜி, ஆக்சுவலி நான் உங்க சினிமா விமர்சனங்களோட தீவிர வாசகன்), அதை தமிழ் மணம், தேன்கூடு மாதிரி இடங்களிலே பதிவு செஞ்சுட்டா போதும். டிராஃபிக் என்ன?... பின்னூட்டம் என்ன, ஒவ்வொரு பின்னூட்டம் வரும் போதும், முகப்புப் பக்கத்திலே வருகிற சொகுசு என்ன... அங்க இங்க போய்ப் பாருங்க... வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..

6, இறுதியா ஒரு அட்வைஸ்.... பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. பதிவு நல்லா இருந்தால், கண்டிப்பா பட வேண்டியவங்க கண்ணுல கண்டிப்பா படும்... இல்லே, ' என் பதிவுக்கு நூத்து சொச்சம் பின்னூட்டம் வரும்,,, அதனாலே நாந்தான் டாப்பு, எப்பவும், தமிழ்மணம் முகப்பில், வலப்பக்க மூலையில் என் பேர் வந்துகிட்டே இருக்கணும்னு சொன்னா... அப்பறம் உங்க இஷ்டம்.

[ps : i'm cross posting this comment in my blog.]

Boston Bala said...

நாற்பது ஆச்சா ;)

Social Networking - Tamil Blogs, Thamizmanam, Poongaa « Snap Judgment

வெட்டிப்பயல் said...

//
Anonymous said...

//ரொம்ப வயசானவங்க வெச்சி நடத்தற மாதிரி ஒரு ஃபீலிங். அதனால தான் நகைச்சுவையை ரசிக்க உங்களுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.//

//வயசானவர்களுக்கு இருக்கும் வீம்பு குணம் அவர்களிடம் இருப்பதை போல் உணர்கிறேன்...//

I object your Honour !

Convenor,
Action Group for Discrimination on Age //

பேர் சொன்னா வயசாயிடுச்சினு நினைப்பாங்கனு பயம் தானே ;)

வெட்டிப்பயல் said...

//Syam said...

நல்ல வேளை கமெண்ட் போடுறதுக்கு முன்னாடி பொன்ஸ் அக்கா குடுத்த பட்டியல் பார்த்தேன்...எல்லோரும் நமக்கு பக்கதுல தான் இருக்காங்க...நான் எதுனா சொல்ல போயி ஆட்டோ அனுபிட்டாங்கன்னா...நான் அபீட்டு :-) //

நாட்ஸ்,
உங்களுக்கு எதிரா ஆட்டோ அனுப்புற அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு... பதிலுங்க நாங்களும் இந்த வண்டிய அனுப்புவோம்.. உங்களுக்காக


என்ன வண்டினு கேக்கறீங்களா??? வேற என்ன ஆம்புலன்ஸ் தான் :-)

ரவிசங்கர் said...

//திடீர்னு ஒருத்தர் வந்தாரு, தமிழ்மணத்துக்கு அறிவுரை சொன்னாரு. நீங்களும் விழுந்தடிச்சி செஞ்சிங்க. அவர் இது சரியில்லைனு போயிட்டாரு.//

//செந்தழல் ரவி said...2. புண்ணூட்ட உயரெல்லை. ( அந்த பதிவர் இந்த உயரெல்லைக்கு ஐடியா குடுத்ததே எவனும் தனக்கு பின்னூட்டம் போடமாட்டேங்குறாங்க அப்படீன்ற வயத்தெரிச்சல்ல தான் - இப்போ "எனக்கென்ன, தமிழ்மணம் எனக்கு புடிக்கல, நான் தேன் கூட்டுல தான் எழுதுவேன்னு பூட்டாரு"...நொட்டு)//


என்னத்தான் சொல்றீங்களோன்னு ஒரு சந்தேகம் ! அப்படின்னா, இதுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கேன். இல்லாட்டி, இந்த பின்னூட்டத்தைப் பதிப்பிக்க அவசியமில்லை.

நான் தமிழ்மணம் சரி இல்லைன்னு போகலைங்க..ஒட்டுமொத்தமா எல்லா திரட்டிகள்லயும் எந்த திரட்டி சார்ந்தும் இயங்குறத நான் விரும்பல..அதனால் என் புதுப் பதிவுகளை எந்தத் திரட்டிக்கும் நான் அனுப்பி வைப்பதில்லை. அதே வேளை என் பழைய பதிவுகள் தொடர்ந்து தமிழ்மணத்துல இருக்கு. அத நான் விலக்கிக்கல. தமிழ்மணம் பிடிக்கலைன்னு விலகியிருந்தா என் பழைய பதிவுகளையும் விலக்கி இருக்க வேண்டும் அல்லவா? என் ஓரிரு பழைய பதிவுகளை தேன்கூடு, தமிழ்பிளாக்ஸ் திரட்டிகளிலும் இணைத்து இருந்தேன். அதனால், அங்கும் அவை வரலாம். ஆனால், தேன்கூட்டுக்குப் போகிறேன் என்று அறிவித்துவிட்டோ அது மாதிரியோ நான் செயல்படவில்லை.

யார் சொல்கிற ஆலோசனையையும் விழுந்தடித்துச் செய்ய வேண்டிய தமிழ்மணத்துக்குக் கிடையாது. அதுவும் நான் சொல்லி ஒரே நாளில் செய்வது ஒரு தன்னார்வல முயற்சியில் இயலாத ஒன்று. முன்பே அவர்கள் இது குறித்த ஆலோசனையில் இருந்திருக்க வேண்டும். நான் சொல்லப் போனதும் அவர்கள் செயல்படுத்தியதும் நேரம் ஒத்துப் போனது.

ஒரு வேளை ரவியின் கருத்து வேறு ஒரு பதிவரைப் பற்றி என்றால் என் விளக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

உங்கள் இரு பதிவுகள், தொடர்புடைய பின்னூட்டங்கள் குறித்து என் கருத்தைச் சொல்லப் புகுந்தால் அதை ஒரு தனிப்பதிவாகவே போட வேண்டும். செய்கிறேன்

ஜெஸிலா said...

உங்களுடைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? பின்னூட்டம் போட்டால்தான் ஒருவர் வாசிப்பதாக அர்த்தமா? 40 இருக்கட்டும் 20 இருக்கட்டும் உங்க பதிவை படிக்க அதெல்லாம் என்னைப் பொருத்தவரை அவசியமேயில்லை. எழுத ஆரம்பிப்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை உதவலாம் ஆனால் உங்களைப் போன்றவர்கள் அவசியமில்லை. எழுத ஆரம்பிப்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில்தான் அந்த அவசியம் ஏற்படும். நல்ல எழுதுகிறார் என்று மனதில் இடம்பிடித்துவிட்டால் தமிழ்மனம் மூலமாக அவரை தேடி செல்ல வேண்டாமே? இப்போதும் இந்த பதிவின் பின்னூட்டம் 40-ஐ தாண்டிவிட்டது எனினும் தேடி வந்து படிக்கத்தான் செய்கிறோம். அபி அப்பா சொன்னது போல் பின்னூட்டத்திற்கு பதில் போடாமல் ஒரு தோய்வு ஏற்பட இந்த 40 தடையாக இருக்குமென்று. அதெப்படி? நான் ஒரு பின்னூட்டம் போட்டு ஒரு கேள்வி வைத்திருந்தால்தான் அதற்கு பதில் எதிர்பார்ப்பேன் 'நல்லாயிருக்கு' என்றால் 'நன்றி' என்று பதில் வரும். அந்த பதில் வந்திருக்கா இல்லையா என்று தமிழ்மண மறுமொழியிடுகையில் வந்து பார்த்தால்தான் ஆச்சா? அந்த வலைப்பூவுக்கு நேரடியாகவும் வரலாமே?

நட்சத்திர பதிவு பூங்காவில் வராததெல்லாம் ஒரு புகாரா? நட்சத்திரமாகவே அதிகம் ஜொலித்துவிட்டதாலும் அதிகம் பார்வையிடப்பட்டதாலும் கூட பூங்காவில் விட்டுப் போயிருக்கலாம். அல்லது வேறு காரணங்களுக்காகவோ விட்டுப் போயிருக்கலாம் அதெப்படி //என் பதிவ அந்த வாரத்துல வராததுக்கு காரணம் அந்த வாரத்துல பூங்காவை பற்றி நான் சொன்ன ஒரு சில வார்த்தைகளே. அவ்வளவு தான்.// என்று நீங்களே ஒரு முன்முடிவுக்கு வரமுடியும்?பிராகாஷ் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். தமிழ்மணம் ஒரு சேவை நிறுவனம் அதிலும் குற்றம் கண்டுபிடித்து கசப்பை தெளிப்பது நல்லதாக படவில்லை. ஆலோசனையோ புகாரோ தனிமடலில் எழுதிக் கேளுங்கள், பதில் வர காத்திருங்கள். அல்லது பதில் வர தகுதிப் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளுங்கள் பெருந்தன்மையாக. இப்படி பதிவுப் போட்டு கேலி செய்வது... அதிலும் வயதையெல்லாம் இழுத்து... உங்களைப் போன்ற பதிவர்கள் அழகா? நன்றி மறப்பது நன்றன்று. தமிழ்மணம்தான் உங்களை வளர்த்தது என்கிறீர்கள் அந்த தாயை நீங்களே இழிவுப்படுத்தலாமா? யோசித்துப் பாருங்கள்.

செந்தழல் ரவி said...

///என்னுடைய கடந்தகாலத்தையோ, எதிர்காலத்தையோ, நிகழ்காலத்தையோ, சரியாக கணிக்கும் சோதிடருக்கு ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்...என்னுடைய சொந்த பணத்தில் இருந்து...!!!!!

- செந்தழல் ரவி

நான் கூறும் எதிர் காலம் :
வாதியார் ஐயா இந்த சவாலை ஏற்க மாட்டார். அதனால் நீங்கள் அவருக்கு ஒரு லட்சம் தர போவதில்லை...

நான் சொன்னது சரினா என் அக்கவுண்டுக்கு அந்த ஒரு லட்சத்தை அனுப்பி வைப்பீர்கள் என்று நம்புகிறேன்... அக்கவுண்ட் நம்பருக்கு தனி மடலிடவும் ;)

வேற யாருக்காவது வருங்காலத்தை கணிக்கனுமா? ஒரு லட்சத்தை எடுத்து வைங்க ;)/////

நல்லா கணிச்சிருக்கீங்க !!!