தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, April 10, 2007

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?

வெட்டி: டேய் பாலாஜி... எவ்வளவு நாள்தான் இப்படி தூங்கிகிட்டே இருப்ப. எழுந்திரிடா வெளக்கெண்ணெய். ஊரே பத்திக்கிட்டு எரியுது நீ பாட்டுக்கு தூங்கிட்டு இருக்க.

பாலாஜி : அடங்கமாட்டியா நீயி. ஆணி புடுங்கி ஆணி புடுங்கி தூங்கி ரொம்ப நாளைச்சுனு இப்ப தான் நிம்மதியா தூங்கறேன். மனுஷன நிம்மதியா இருக்க விடமாட்ட நீ. உனக்கு ஒரு டெவில் ஷோ போட்டாதான் அடங்குவ.

வெட்டி: அதெல்லாம் ஏற்கனவே நமக்கு போட்டாச்சி. நீ முதல்ல எழுந்து வந்து உங்க செந்தழல் ரவி பதிவ பாரு. உங்க ஸ்கூல் சீனியர்ஸ் ரெண்டு பேரும் எப்படி அருமையா விவாதம் பண்றாங்க பாரு. அதுல கடைசியா குழலி அண்ணே எப்படி பாயிண்ட் பாயிண்டா எடுத்து வெச்சிருக்காரு பாரு...

//
ரவி நீ ஒரு தாசில்தார் பையனையும் ஒரு புரோகிதர் பையனையும் பார்த்துவிட்டு பேசியிருக்கிறாய், கீழே இருக்கும் புள்ளிவிபரத்தை பார், தாசில்தார் பையன்கள் பிசியில் எத்தனைபேர் புரோகிதர் பிள்ளைகள் எஃப்சியில் எத்தனை பேர் என்று தெரியும்

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?
//


பாலாஜி: ஹிம்ம்ம்...

வெட்டி: ஹிம்ம்ம்னா என்ன அர்த்தம்? அவர் சொல்றது சரி தானே?

பாலாஜி: அவர் சொன்னதை இன்னொரு தடவை நல்லா படிச்சி பாரு. அப்படியே இந்த கதையையும் படி...

வெட்டி: படிச்சிட்டேன். அதுல என்ன இருக்கு ரெண்டாவது தடவை படிக்க?

பாலாஜி: என்னைக்காவது நீ கவுண்சிலிங் வந்திருந்தா உனக்கு ஏதாவது புரியும். ஆமாம்... நீ பொறந்தே ஒரு வருஷம் கூட ஆகல. உனக்கு எப்படி புரியும்.

வெட்டி: ரொம்ப பேசாத. உனக்கு என்ன தோனுதுனு என் சிற்றறிவுக்கு எட்டற மாதிரி சொல்லு.

பாலாஜி: "இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்." இது குழலி அண்ணன் சொன்ன டயலாக்.

வெட்டி: ஆமாம். சரியாத்தானே சொல்றாரு.

பாலாஜி : இதுல OCனா என்னனு உனக்கு தெரியுமா?

வெட்டி: Forward caste... இந்த ஐயர் பசங்கதானே.

பாலாஜி: வெட்டினு நிருபிச்சிட்ட. அதான் இல்லை. OC - Open Competition.

வெட்டி: அப்படினா??? புரியற மாதிரி சொல்லுடா வெண்டரு...

பாலாஜி :அதாகப்பட்டது ஒரு காலேஜ்ல முதல்ல ஃபில்லாகக்கூடியது OC சீட் தான். அப்பறம்தான் BC எல்லாம் ஃபில் ஆகும்.

வெட்டி: சத்தியமா புரியல.

பாலாஜி: இரு விளக்கமா சொல்றேன். ஒரு BC பையன் 299 எடுக்கறானு வை. அவன் தான் கவுண்சிலிங்ல முதல்ல போறானு வெச்சிக்கோ. அவன் எந்த கேட்டகிரில சீட் எடுப்பான்?

வெட்டி: அவன் BC தானே அப்பறம் எதுல எடுப்பான். BCல தான் எடுப்பான்.

பாலாஜி: அது தான் கிடையாது. அவன் எடுக்கறது OC - Open Competition.

வெட்டி: ஓ... அப்ப MBC பையன் வந்தானா BCல எடுக்கலாமா?

பாலாஜி: அப்படி இல்லை. ஒண்ணு Open Competion இல்லைனா அவனுக்குனு ஒதுக்குன கேட்டகிரில எடுக்கலாம். MBC - OCல சீட் எடுக்கலாம். இல்லைனா MBCல எடுக்கலாம்.

வெட்டி: சரி. இது முதல்ல போறவனுக்கு கரெக்டா இருக்கலாம். ஆனா பின்னாடி வரவன பாரு. அவனுக்கு OCல இருக்குற சீட்டைவிட கோட்டா யூஸ் பண்ணா இருக்குற நல்ல காலேஜ்ல எடுப்பான் இல்லை. உதாரணத்திற்கு 295 எடுக்குறவனுக்கு அண்ணா யூனிவர்சிட்டில BC இருக்கு PSGல OC இருக்கு. அவன் எதை எடுப்பான்?

பாலாஜி: இந்த மாதிரி தான் நானும் கணக்கு போட்டு கவுண்சிலிங் போய் ஏமாந்தேன். உண்மையா பார்த்தினா எப்படி இருக்கும்னா அதே BC பையன் கொயம்பத்தூர் பக்கம் இருந்தா PSG இல்லை GCT இல்லைனா CITஎடுப்பான். திருச்சியா இருந்தா REC இல்லைனா ஷண்முகா எடுப்பான். அப்ப அவன் எடுக்கறது OC யா இருக்கும். அதே மாதிரி வெறும் காலேஜ் மட்டும் மேட்டரில்லை. டிப்பார்ட்மெண்ட்டும் மேட்டர். அண்ணா யுனிவர்சிட்டில
கம்ப்யூட்டர் ஃபில்லாணவுடனே அடுத்து PSG இல்லைனா REC கம்ப்யூட்டர் ஃபில் பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க. அதுல பார்த்தாலும் இந்த OC, BC, MBC குளறுபடி இருக்கும்.

வெட்டி: ரொம்ப குழப்பிட்ட.

பாலாஜி: தெளிவா சொல்றேன் கேளு. எந்த கேட்டகிரில எந்த சீட் ஃபில்லாச்சினு வெச்சி அவர் சொல்ற கணக்கு நடைமுறைக்கு ஒத்து வராது. Open competitionல எத்தனை BC, MBC உள்ள போயிருக்கானு பார்த்தா தான் தெளிவா புரியும். என் க்ளாஸ்லையே நிறைய BC, MBC பசங்க Open Competitionல தான் வந்தாங்க.

வெட்டி: "சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?" இதுக்கு என்ன அர்த்தம்?

பாலாஜி: இதுக்கா? முன்னாடி சொன்னதுதான். அதே OC கேட்டகிரில நம்ம பசங்க எத்தனு பேர் சேர்ந்தானுங்கனு தெரிஞ்சாதான் தெளிவா சொல்ல முடியும். அப்பறம் இது அவர் படிச்ச காலம் மாதிரி 50 இஞ்சினியரிங் காலேஜ் வெச்சி போட்டதில்லை. நான் படிக்கும் போது (03 Passed out) 250 - 300 காலேஜ் இருந்துச்சி. இதுல பாதி காலேஜ்ல கட்டடமே இப்பதான் கட்ட ஆரம்பிச்சிருப்பானுங்க. அதனால நல்ல டிப்பார்ட்மெண்ட் கிடைச்சா போதும்னு உள்ள போற BC/MBC பசங்க OCல கொஞ்ச பேர் சேருவானுக்க. அப்பறம் எவனும் சீண்டாம அப்படியே விட்டுட்டு போயிடுவாங்க. பேமண்ட்லயும் அதே கதைதான்.

வெட்டி: ஆஹா... இவ்வளவு கஷ்டமான விஷயமா அது? இதெல்லாம் எப்படி கணக்கெடுக்க முடியும்?

பாலாஜி: டேய் அமெரிக்க காரவன் கண்ணுலயே மண்ண தூவி அணுகுண்டு வெடிச்ச நாடுடா இது. இதெல்லாம் ஜிஜிபி மேட்டர். கம்ப்யூட்டர்ல அழகா ஒரு டேட்டாபேஸ்ல போட்டு ரிப்போர்ட் தயாரிச்சிடலாம். ஒரு கவுண்சிலிங்ல பண்ணா போதும்.

வெட்டி: சரி... இந்த பிரச்சனையெல்லாம் எதுக்காகப்பா?

பாலாஜி: எல்லா ப்ளாகும் படிக்கிறயே... நீ தான் சொல்லனும்

வெட்டி: போட்டு வாங்கறியா? இரு நானே சொல்றேன். ஏதோ இட ஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சிருக்காம். 1931 கணக்க இப்ப வெச்சிக்க முடியாதாம். அதான் ஊரெல்லாம் பிரச்சனை.

பாலாஜி: ஹிம்....

வெட்டி: அதுக்கு என்ன அர்த்தம்?

பாலாஜி: உச்சநீதி மன்றம் சொன்னதுல உண்மையிருக்குனு அர்த்தம்.

வெட்டி: அப்படினா?

பாலாஜி: முதல்ல பார்த்தீனா, ஒரு சராசரி மாணவன் நல்லா படிக்க அவன் குடும்பமும், பள்ளியும் காரணமா இருக்கு. அப்படி பார்த்தனா உனக்கே தெரியும் இந்த நெய்வெலி, ராசிபுரம், திருச்சங்கோடு, ஈரோடு இந்த மாதிரி பள்ளிக்கூடத்துல இருந்து வர காசு இருக்குற BC, MBC பசங்க அண்ணா யுனிவர்சிட்டியிலும் அரசு கல்லூரியிலும் சேர்ந்து வசதி குறைவான பசங்களுக்கு ஆப்பு அடிச்சிடறானுங்க. அப்பறம் பார்த்தா இருக்குற Private காலேஜ் சீட் எடுக்க முடியாம வசதி குறைந்த BC/MBC மாணவர்கள் கஷ்டப்படறாங்க. இந்த பிரைவேட் காலேஜ்ல கொள்ளை அடிப்பானுங்க பாரு ஃபீஸ்னு... அப்பா சாமீ. நான் படிக்கும் போது அண்ணா பல்கலைகழகத்திலும் அரசு கல்லூரிகளிலும் 3000 ஃபீஸ். அதே ப்ரைவெட் காலேஜ்ல 13,100 (Free Seat, that may go to 30000), பேமண்ட் சீட் : 48000 (அது அப்படியே ஒரு அறுபது ஆயிரம் போகும்)

இப்ப பிரச்சனையே வசதியா விவரம் தெரிஞ்ச BC/MBC பசங்க விவரம் தெரியாத பசங்களுக்கு ஆப்பு அடிக்கனும்னு நினைக்கறதுதான்.

வெட்டி: க்ரீமி லேயர்னா வசதியான BC/MBCக்கு சலுகைகள் பறிக்குபடும்னு தானே அர்த்தம்.

பாலாஜி: ஆமாம். இங்க லட்சாதிபதிகள் எப்படி கோடிஸ்வரனாகறதுனு தான் பிரச்சனை. அதுக்குதான் IIT, IIM பத்தி பிரச்சனை கிளப்பறானுங்க. பசில இருக்கறவனுக்கு விவரம் தெரியாம பந்த் அன்னைக்கு காசேதான் கடவுளடா படத்த பார்த்துட்டு இருக்கான்.

வெட்டி: நீ பார்ப்பன அடிவருடி ஆயிட்டயோனு எனக்கு ஒரு டவுட்...

பாலாஜி: உன்கிட்ட பேசினன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். ஒரு முக்கியமான விஷயம் இதுல அவுங்களுக்கும் பெரிய ஆப்பு இருக்கு.

வெட்டி: நிஜமாவா? எப்படி சொல்ற?

பாலாஜி: இப்ப இந்த க்ரிமீ லேயரை கண்டுபிடிச்சிட்டு அடுத்து மிச்சமிருக்கவங்களுக்கு கோட்டா கொடுக்கும் போது இந்த க்ரிமி லேயரும் அந்த கூட்டமும் தான் அடிச்சிக்கும்.

வெட்டி: எப்படி?

பாலாஜி: இப்ப பார்த்தனா முக்கால்வாசி நல்ல மார்க் வாங்கிட்டு வரது இந்த க்ரீமி லேயர் கூட்டம் தான். அது பார்த்தனா OC சீட் இருந்தா OCல எடுக்கும் இல்லைனா BCல எடுக்கும். இப்ப அதை தூக்கி OCல மட்டும் தான் நீ எடுக்கனும்னு சொல்லிட்டா ரெண்டு பேருக்கும் செம சண்டையா இருக்கும் இல்ல. பாதி கூட்டம் தொலையுதுனு நினைக்காம க்ரீமி லேயரை கண்டுபிடிக்கனும்னு சொன்னதுக்கு என்னனே புரியாம பட்டாசு வெடிச்சி கொண்டாடிட்டு இருக்காங்க. அதுங்களும் ஒண்ணு புரிஞ்சிக்கனும் நாங்களும் உங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு.

வெட்டி: சுத்தம் ஒரு மண்ணும் புரியல

பாலாஜி: தெளிவா கேளு. இப்ப 295 எடுத்த ஒரு BC பையன் இருக்கான். அவனுக்கு அடுத்து 294.98 எடுத்த FC பையன் நிக்கறான். இப்ப அண்ணா யுனிவர்சிட்டில BCல ஒரு சீட் இருக்கு PSGல ஒரு சீட் இருக்குனு வை. இந்த் Creamy layer பிரிக்கலைனா அந்த BC பையன் அண்ணா யுனிவர்சிட்டில BC கோட்டால எடுக்கனும்னா எடுக்கலாம்.இல்லைனா OCல எடுக்கலாம். ஆனா Creamy layer பிரிச்சிட்டானு வை அவன் கண்டிப்பா OCல தான் எடுப்பான். பின்னாடி நிக்கிற FC பையனுக்கு ஆப்பு... இப்ப புரியுதா?

வெட்டி: நல்லா புரியுது. இத நான் யோசிக்கவே இல்லை. ஆமாம் அப்ப நீ எந்த கேட்டகிரில வருவ?

பாலாஜி: நான் மட்டும் என்ன ஸ்பெஷலா. நானும் க்ரிமீ லெயர்லதான் வருவேன்.

வெட்டி: அப்ப உன் பசங்களுக்கும் ஆப்பு தாண்டி.

பாலாஜி: எங்கப்பா ஒவ்வொரு தீபாளிக்கும் இதையே தான் சொல்லுவாரு. "25 வருஷமா தீபாவளி அன்னைக்கு தான் நாங்க இந்த இட்லியே சாப்பிடுவோம்னு". மீதி நாளெல்லாம் வெறும் பழைய சோறுதானு. எங்க பாட்டி பூக்கட்டி எங்க அப்பாவ படிக்க வெச்சாங்க (அவரும் சாயந்திரமான பொட்டிக்கடைல பொட்டலமெல்லாம் மடிச்சாரு). அவர் க்ளார்க்கா இருந்து ரெண்டு பசங்கள நல்லா படிக்க வைக்க வசதியில்லாம பையன மட்டும் நல்ல பள்ளிக்கூடத்துல படிக்க வெச்சாரு (அவர் சக்திக்கு மீறி). எங்க அக்காவ அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளிலதான் படிக்க வெச்சாங்க (அந்த ஸ்கூல +2ல முதல் மார்க்கே 900 கூட இல்லை. இத்தனைக்கும் இங்க அக்கா 1st Rank தான் எடுப்பாங்க. அவுங்கள நல்ல ஸ்கூல படிக்க வைக்கக்கூட வசதியில்லை). நாளைக்கு இந்த மாதிரி நிலைமைல இருந்து வர இன்னோரு க்ளார்க் பையன்கூட என் பையன் மல்லுக்கு
நின்னானா அது அவன் கொழுப்பு தானே தவிர வேற எதுவும் இல்லை.

வெட்டி: இதனால தான் ரொம்ப பொங்கறையா?

பாலாஜி: நான் பொங்கவும் இல்ல திங்கவும் இல்ல... தூக்கம் வருது தூங்கறேன்...

47 comments:

Anonymous said...

You have hit the nail right on the head.
summa nachunu iruku

அபி அப்பா said...

வெட்டி தம்பி, நல்லா யோசிச்சு எழுதிட்டீங்க. உக்காந்து பல தடவை படிச்சாதான் எனக்கு புரியும். படிச்சுட்டு பின்ன வர்ரேன்!

நாடோடி said...

வெட்டி என்னப்பா ஆச்சு?..

இப்படியெல்லாம் பதிவு போட்டா பார்பனன் கோஷ்டில சேர்த்துடுவாங்க.:)

நீ ரொம்ப மெனக்கெடுத்து விளக்கி இருக்கே. ஆன யாரும் புரிஞ்ச மாதிரி காட்டிகிடமாட்டாங்க( சாதி பாசம்).

இதனால்தான் இதே கருத்த சொல்லி நானும் டைம வேஸ்ட் பண்ணல:))))))

G.Ragavan said...

வெட்டி...ஏதோ புரியுற மாதிரி இருக்குது. எங்கப்பாவுக்கு சீட்டு கிடைச்சது பிசிலதான். ஆனா நான் சேர்ந்தது ஓசிலதான் (அட ஓப்பன் கேட்டகிரின்னு சொல்றேன்). எங்கப்பாவுக்கு படிப்புக்குச் சலுகைப் பணம் கெடச்சது. எனக்குக் கிடையாது. கிரீமி லேயர் ஏற்கனவே வேலை செய்யுது. இது சாதிப் பேரை எப்படியோ மாத்திப்போட்டா அது எம்.பி.சி ஆயிருமாம். ஆனா எங்கப்பா செய்யலை. "செய்ய நானிருக்கேன். நீ படி"ன்னு சொல்லீட்டாரு.

இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்..அது செயல்படுத்தப்படும் முறையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது. என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அறிவாளிகள் கண்டுபிடித்துச் சரி செய்தால் நல்லது. கிரீமி லேயர் என்பது கண்டிப்பாக அவசியம். அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால் முறையாக. ஏனென்றால் என்னுடைய பள்ளிக்காலத்திலேயே நான் பார்த்திருக்கிறேன். எனக்குச் சலுகைக் கட்டணம் கிடையாது. ஏனென்றால் அப்பா அரசாங்க ஊழியர். ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் வணிகர் பலருடைய பிள்ளைகளுக்குச் சலுகைக் கட்டணம் கிடைக்கும். இத்தனைக்கும் அவர்கள் எங்களை விட பல மடங்கு செல்வந்தர்கள். அந்தப் பையன்கள் அந்தப் பணத்தைச் செலவு செய்யும் பொழுது கொஞ்சம் பொறாமை இருந்தது உண்மைதான். ஆக...கிரீமி லேயர் வேண்டும். எல்லா நிலையிலும் என்பதுதான் சரி என்று தோன்றுகிறது.

மனதின் ஓசை said...

நீ வெட்டி இல்ல விவரம்னு புரியுது :-)
சரியாத்தான் சொல்லியிருக்க..

Anonymous said...

அருமையான பதிவு...இப்போதைக்கு ஒரு அட்டண்டண்ஸ் போட்டுக்கறேன்...என்னோட கருத்தை எல்லாம் மொதல்லே எழுதிட்டதால இங்கே ஒரு விஷயம், ஒரு வரலாற்று உண்மை மட்டும் சொல்லிட்டு போறேன்...இது என்னை பற்றி...

எனக்கு மட்டும் அந்த விஷயம் தெரிஞ்சிருந்துதுன்னா...அந்த ஓரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சி இருந்துதுன்னா...நான்...நான்...எஞ்சினீயர் ஆகி இருப்பேன்...இப்போ ஆஞ்சநேயர் மாதிரி குந்திக்கிட்டிருந்திருக்க மாட்டேன்...ஹும்...முடியாமே போச்சு...அந்த ஒரே ஒரு விஷயத்தை நான் எப்படி தெரிஞ்சுக்காமே விட்டேன் என்று எனக்கே தெரியல...

இன்னைக்கு இட ஒதுக்கீடு, ஓசி, பீசி, சீசி (இமெயில்ல) எல்லாம் எழுதுற எனக்கு அந்த விஷயம் தெரியாமே இப்படியாச்சுன்னு சொல்லிக்கிட முடியுமா...யாரும் என்கிட்ட சொல்லலைன்னு நான் சொல்ல முடியாது...நான் யார்கிட்டயும் கேக்கலன்னு வேனும்னா சொல்லிக்கலாம்...அப்படி என்ன விஷயம் என்று கேக்கறீங்களா...

எஞ்சினீயரிங் / மெடிக்கல் எல்லாம் சேரனும்னா எண்டரன்ஸ் எக்ஸாம்னு ஒன்னு எழுதனுமாமே....அது தாங்க எனக்கு நான் படிக்கிற காலத்துல தெரியாமே போச்சு...

Rasigan said...

Vetti... Nalla karuthu..yosichuttu naalaikku oru matter solren.

ஜி said...

lightaa kolambuthu....

oru BC studentukku OC, BC rendulaiyum seat irunthaa, avan BC ya use pannanum, OC ya use panna koodaathunnu solla varreenga... correcta?

"athavathu creamy layera kandupuditchi avungalukku quota kedayaathu" apdiingra idea va thookanum. correctaa??

sari.. ippa oru BC paiyanukku OC, BC rendume irukuthu. avan BC la seat eduthaanna, innoru FC paiyanukku aapu adikkaama avanukku pinnaala varra innoru BC paiyanukku oru seat aapu adikira maathiri... athunaala sarasarikku koratchi irukuravanga intha idea kku ethira kandippa kodi thookuvaanga. sariyaa??

so pinnaala varra innoru vasathi koranja BC paiyanukku antha seat illaama poyiduthu. athunaala avanukkaana reservation irunthum innoru nalla padikira BC paiyanalaa athu thatti parikka paduthu.. correctaa??

ebba enakkum konjam kolambuthu...

ஜி said...

reservation kku aatharava kodi thookuravanga solra main reasone SC/ST pasangalukku padikirathukaana nalla Soolal illa. athunaala avungalukku reservation kodukanum. aana G.Ra sonnathu maathiri 50 yearsa reservation koduthum antha soolala maatha mudiyalainaa, vera ethavathu puthu muyartchi eduthu avungalukku antha soolala uruvaakanum.

BTW Anna universityla naan padikkumpothe 15000 per year fees.

Hariharan # 03985177737685368452 said...

இட ஒதுக்கீடு என்பது Last In First Out என்பதாக நடைமுறை செயல்பாட்டுல் அமைந்து இருக்கவேண்டும்.

இன்றைய சூழலில் சமூகத்தில் ஒருவரதுநிலை மிகப் பெரும்பான்மையாக அவரது கல்வி, வேலை+பொருளாதார வசதியால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே சமூகத்தில் பொருளாதாரத்தில் கடைசியாக இருப்பவன் படித்துப் பயன்பெற உள்ளே வர முதலிலே இருப்பவன் வழி தரவேண்டும்.

இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு கண்டிப்பாகத் திருத்தி அமைக்கப்பட்டு கீழிருப்பவனைமேலேற்ற "ஒருமுறை"உதவும் விதமாக செய்யப்படவேண்டும்.

இட ஒதுக்கீடு மறுசீரமைக்கப்பட வேண்டியதை வலியுறுத்தி எனது பார்வை இந்தப்பதிவில்

மிகப்பிற்படுத்தப்பட்டவர் இன்றைய சமுதாய நிலை குறித்த நேர்மையான புள்ளிவிபரங்களுடனான தகவல்கள் இந்தப்பதிவில்

Anonymous said...

கலக்கீட்டீங்க தலைவா!

"நாங்களும் உங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு."

இங்க எல்லாரும் என்னமோ தான் 'மெரிட்' என்றும், இட ஒதுக்கீடு காவலர் என்றும், மத்தவங்கள் எல்லாம் கம்மி மாதிரி கும்மி அடிக்கிறாங்கள்.

நம்ம பசங்களில் இல்லாதவருக்கு கொடுத்தா என்ன? இந்த நாட்டில் எவன் ஏழை, எவன் பணக்காரன் நிருபீக்கிறது கச்டம். ஆனால் எவன் பெற்றோர் தொழில் நுட்ப மருத்துவ பட்டதாரி, எவன் பெற்றோர் இல்லை என ஈசியாக கண்டு பிடிக்களாமே!

சரியாக சொன்னீங்க
"இங்க லட்சாதிபதிகள் எப்படி கோடிஸ்வரனாகறதுனு தான் பிரச்சனை."

rv said...

நல்ல பதிவு வெட்டி..

கிருமி லேயர்னு சொல்றது சரிதான்.

இந்த OC-ங்கறது உயர்ந்ததா சொல்லிக்கிற சாதிகளுக்கான ஒதுக்கீடு இல்ல ஆனா எந்தக்கோட்டாலேர்ந்தும் OC-க்கு வரலாம்கறத சரியான முறையில் தெளிவா நிறையபேரு குழப்பறாங்க.

நீங்க தூக்கக்கலக்கத்திலயும் இவ்ளோ தெளிவா இருக்கீங்க.

CVR said...

நீங்களும் இதை பத்தின பதிவுகள்ல குதிச்சிட்டீங்களா!!!
ஏதோ இந்த பதிவுகளால சண்டைகள் குறைந்து புரிந்ந்துகொள்ளுதல் வளர்ந்து சமுதாயத்தில் அமைதியும் சமத்துவமும் மலர வாழ்த்துக்கள்!!!
நிறைய கேவலமான பின்னூட்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது! அதை பற்றி எல்லாம் கவலை படாதீற்கள்!! :-)

Anonymous said...

very detailed post :) and a very correct one too!!!

- Sankar

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, நம்ம லைனில் யாரு வேணாலும் உள்ள வரலாம். ஒரு கோட்டாவும் கிடையாது. வெளிய போறது அவனவன் சாமர்த்தியம். அதனால இந்த மேட்டர் எல்லாம் எனக்கு கொஞ்சம் குழப்பமாவே இருக்கு. ஒரு போன் அடிச்சு கேட்டு புரிஞ்சுக்கறேன்.

வெட்டிப்பயல் said...

முதல்ல ஜிக்கு சொல்லிடறேன்,
மொத்தமா எல்லாத்தையும் குழப்பிட்ட...

நான் சொல்ல வரது என்னனா, குழலி அண்ணன் சொன்ன

//சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?//

இந்த லாஜிக் தப்பு...

அடுத்து Creamy layerஐ கண்டுபிடிச்சி கண்டிப்பா தூக்கியாகனும்.

அப்பறம் அந்த லேயர கண்டுபிடிக்கறதால FCக்கு ஆப்பு தானே தவிர அவர்களுக்கும் எதுவும் பெருசா நல்லதாக போறதில்லை.

மத்தவங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அதுவும் என்னுடைய பழைய பதிவுல சொன்ன மாதிரி ஏழை பசங்களுக்கு Residential School ஆரம்பிச்சி, அவர்களுக்கு எல்லா சலுகையும் அரசே அளிக்க வேண்டும்.

Anonymous said...

மிக அற்புதமான அலசல்.. நானும் இதே கருத்தை தான் கொண்டிருக்கிறேன்... பார்ப்பன அடிவருடி என்ற பட்டத்திற்கு பயந்தே நான் இதை பற்றி எங்கும் வாய்திறப்பதில்லை...

இலவசக்கொத்தனார் said...

//அதுவும் என்னுடைய பழைய பதிவுல சொன்ன மாதிரி ஏழை பசங்களுக்கு Residential School ஆரம்பிச்சி, அவர்களுக்கு எல்லா சலுகையும் அரசே அளிக்க வேண்டும்.//

அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப் படவேண்டும். அந்த பையன் வேலைக்குச் சென்றால் கிடைக்கும் 500 ரூபாய் பணத்தைக் கூட அந்த குடும்பத்துக்கு அரசு தந்துவிட்டு அச்சிறுவர்களுக்கு கல்வியைக் கட்டாயமாக்கலாம். இன்று வரும் இலவசங்களுக்கு இது எவ்வளவோ பாரவாயில்லை.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

You have hit the nail right on the head.
summa nachunu iruku //

நண்பரே,
ஏதோ தெரிந்ததை சொன்னேன் அவ்வளவுதான்...

நான் +2 முடித்து என் BC ரேங் வைத்து போட்டு சென்ற கணக்குகள் எல்லாம் செம அடி வாங்குச்சு. அதுக்கப்பறம் புரிந்த சில விஷயங்கள் தான் இதெல்லாம் :-)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

வெட்டி தம்பி, நல்லா யோசிச்சு எழுதிட்டீங்க. உக்காந்து பல தடவை படிச்சாதான் எனக்கு புரியும். படிச்சுட்டு பின்ன வர்ரேன்! //

பொறுமையா படிச்சி வாங்க தொல்ஸ் அண்ணே!!!

வெட்டிப்பயல் said...

// நாடோடி said...

வெட்டி என்னப்பா ஆச்சு?..

இப்படியெல்லாம் பதிவு போட்டா பார்பனன் கோஷ்டில சேர்த்துடுவாங்க.:)

நீ ரொம்ப மெனக்கெடுத்து விளக்கி இருக்கே. ஆன யாரும் புரிஞ்ச மாதிரி காட்டிகிடமாட்டாங்க( சாதி பாசம்).

இதனால்தான் இதே கருத்த சொல்லி நானும் டைம வேஸ்ட் பண்ணல:)))))) //

நாடோடி,
நம்மல எந்த குரூப்லையும் சேர்க்க முடியாது. ஏன்னா நான் இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்ற கூட்டமில்லை.

கண்டிப்பா இட ஒதுக்கீடு வேண்டும் ஆனால் தேவையானவங்களுக்கு சரியா போய் சேரனும்னு சொல்ற கூட்டத்தை சேர்ந்தவன் :-)

வெட்டிப்பயல் said...

//இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்//

ஜி.ரா,
முன்னேற்றம் வரவில்லை என்று யார் சொன்னார்கள்? எங்க பாட்டி ஒரு பூ வித்து இட்லி சுட்டு தான் எங்க அப்பாவை படிக்க வெச்சாங்க. திருக்கோவிலூர்ல ஏதோ காக்கா பள்ளிக்கூடம்னு சொல்லுவாங்க.

இன்னைக்கு நான் இங்க அமெரிக்காவில் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கேன். இதே மாதிரி பல உதாரணம் தர முடியும்.

ஆனா இந்த மாதிரி முன்னேரும் கூட்டம் அடுத்து வரவங்களுக்கு வழிவிடனும்.

வெட்டிப்பயல் said...

//மனதின் ஓசை said...

நீ வெட்டி இல்ல விவரம்னு புரியுது :-)
சரியாத்தான் சொல்லியிருக்க.. //

விவரமெல்லாம் இல்லைங்க...
நமக்கு தெரியாத விஷயம் கடலளவு இருக்கு... ஏதோ கொஞ்சம் தெரிஞ்ச விஷயமாச்சேனு சொல்றேன்...

வெட்டிப்பயல் said...

ரவி அண்ணே,
உங்க பதிவுல இருந்த கேள்வி மிகவும் சரியானது... அந்த மாதிரி பணக்காரர்களை தூக்கணும்னு சொன்னா ஏன் ஒரு சிலருக்கு கோபம் வருது???

வெட்டிப்பயல் said...

// Rasigan said...

Vetti... Nalla karuthu..yosichuttu naalaikku oru matter solren. //

நல்லா யோசிச்சி சொல்லு...

Syam said...

//பிரச்சனையே வசதியா விவரம் தெரிஞ்ச BC/MBC பசங்க விவரம் தெரியாத பசங்களுக்கு ஆப்பு அடிக்கனும்னு நினைக்கறதுதான்//

ரொம்ப சரி வெட்டி ச்சே பாலாஜி யாரு என்ன சொன்னீங்கன்னே கன்பீஸ் ஆகிடுச்சு...நானும் BC எங்க அப்பா அம்மா படிச்சவங்க...உங்க பழைய போஸ்ட் படி எனக்கு காலேஜ்ல இட ஒதுக்கீடு இருந்து இருக்க கூடாது...இது இப்படியே போனா என்னோட பையனும் இட ஒதுக்கீட்டுக்கு தகுதி இல்லாமயே அது அனுபவிப்பான்...இந்த நிலமை மாறனும்...இல்லாதவங்களுக்கு தான் இட ஒதுக்கீடு போய் சேரனும்...

வெட்டிப்பயல் said...

//ஜி said...

lightaa kolambuthu....

oru BC studentukku OC, BC rendulaiyum seat irunthaa, avan BC ya use pannanum, OC ya use panna koodaathunnu solla varreenga... correcta?
//
இல்லை... எடுக்கனுமா கூடாதானு நான் எதுவும் சொல்லல. அதுதான் எடுப்பான்னு சொல்றேன். Its just a fact

//
"athavathu creamy layera kandupuditchi avungalukku quota kedayaathu" apdiingra idea va thookanum. correctaa??
//
அடப்பாவி... அந்த ஐடியாவை நடைமுறைப்படுத்தனும்னு சொல்றேன்.

//
sari.. ippa oru BC paiyanukku OC, BC rendume irukuthu. avan BC la seat eduthaanna, innoru FC paiyanukku aapu adikkaama avanukku pinnaala varra innoru BC paiyanukku oru seat aapu adikira maathiri... athunaala sarasarikku koratchi irukuravanga intha idea kku ethira kandippa kodi thookuvaanga. sariyaa??
//
பிரியல... 50 கிலோ எடையுள்ளவன் 100 கிலோ எடையுள்ளவன் கூட மோத விடக்கூடாது... அவ்வளவுதான்

//
so pinnaala varra innoru vasathi koranja BC paiyanukku antha seat illaama poyiduthu. athunaala avanukkaana reservation irunthum innoru nalla padikira BC paiyanalaa athu thatti parikka paduthu.. correctaa??
//
இது சரி.. வசதியான BC பையன் எடுத்து வசதியில்லாதவன படிக்க விடாம பண்ணறான்... அவ்வளவு தான்

//
ebba enakkum konjam kolambuthu... //
கொஞ்சம் இல்லை.. ரொம்ப...

தண்ணிய குடி

Anonymous said...

பாலாஜி - தொழிற்கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்ற ஒரு விஷயத்தை மட்டும் முன்வைத்து இந்த க்ரீமி லேயர் வாதம் வைக்கப்படுகிறது என்று அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் - இட ஒதுக்கீட்டை சுத்தமாகத் துடைத்து எறிவதற்காக ஊடகங்களாலும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் குழுக்களாலும் வைக்கப்படும் திட்டத்தின் முதல் படி மட்டுமே இது. வி.ஏ.ஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பியூன்கள், வங்கி மேனேஜர்கள், கிளர்க்குகள், பள்ளிக்கூட வாத்தியார்கள், எம்.எல்.ஏக்கள் (ரிசர்வ் தொகுதிகள்), பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று இட ஒதுக்கீட்டால் பயனடைபவர்களை, இஞ்சினியர் டாக்டர்களைத் தாண்டியும் பாருங்கள் - சமமான பிரதிநிதித்துவம் தற்போது இருக்கிறதென்றால் இட ஒதுக்கீட்டால் வந்ததுதான் - இன்றைக்கு ஜாதி பெயரால் நடக்கும் வன்முறைகள் ஊடகங்களில் இவ்வளவு தூரம் வெளியில் வருவதற்கும், வலைப்பதிவுகளில் இவ்வளவு விலாவாரியாக அலசப்படுவதற்கும்கூட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் இட ஒதுக்கீட்டின் பங்கும் மிக முக்கியம். தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண ஆளுக்கு இஞ்சினியர் டாக்டர் வக்கீல் டிகிரி இருந்தால் மட்டும் போதாது - தன் தொழிலை அவன் ஒழுங்காகச் செய்ய சமப் பிரதிநிதித்துவம் உள்ள சமுதாயமும் இருக்கவேண்டும். உங்களது சீட்டுக் கணக்கில் குறை சொல்லமுடியாது - தற்போதைய நடைமுறை இதுதான் என்பது உண்மை. ஆனால், வெறும் கல்லூரி சீட்டுக்களால் மட்டும்தான் ஆனது சமுதாயம் என்பதும் உண்மைதான், இல்லையா.

அப்புறம் இந்த க்ரீமி லேயர் விவாதத்தைப் பார்க்கலாம். தற்போதைய தலைமுறைக்கு இஞ்சினியர்கள், டாக்டர்கள், வியாபாரிகள் அனைவரும் க்ரீமி லேயர் - தற்போதைய வாழ்க்கை முறையை வைத்துப் பார்த்தால், அவர்களது பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு கொடுப்பது தவறு என்கிறீர்கள் - சரி என்றே வைத்துக் கொள்ளலாம். சென்ற தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தை வைத்துப் பார்த்தால், நிலையான வருமானம்/பென்ஷன்/ஊக்கத்தொகை என்று சௌகரியமாக வாழ்ந்த அரசாங்கப் பணியாளர்களான ஆசிரியர்களும் கிளர்க்குகளும் கூட அவர்கள் காலத்தில் க்ரீமி லேயர்தான் - 1980-90களுக்கு முன்பு. அப்படிப் பார்க்கும்போது, அவர்களுக்கு அவர்கள் காலத்தில் இட ஒதுக்கீடு கொடுத்திருந்தாலும் தப்புத்தான் தற்போது அந்த க்ரீமி லேயரின் பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு கொடுப்பதும் தப்புத்தான் என்று சொல்வது சரியாக வருமா பாருங்கள். அந்தக் காலத்திலேயே க்ரீமி லேயரைத் தூக்கியிருக்கவேண்டும் ;-)

உங்களது வாரிசுக்கு நீங்கள் இட ஒதுக்கீடு கேட்பதில்லை என்பது போன்ற ஆக்கப்பூர்வமான தனிமனித முயற்சிகளால் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கு சுமுகமான தீர்வு காணமுடியும். அதை விட்டுவிட்டு, க்ரீமி லேயரைத் தூக்கு என்ற வாதம், அடுத்து இட ஒதுக்கீட்டைத் தூக்கு என்ற முரட்டு வைத்தியத்தில்தான் வந்து நிற்கும் என்று உங்களுக்குப் புரிபட இன்னும் நாள் ஆகலாம். ஒரு தலைமுறை என்பது கிட்டத்தட்ட 30 வருடங்கள். எத்தனை தலைமுறையாக இட ஒதுக்கீடு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

Anonymous said...

ஒரு தலைமுறை என்பது கிட்டத்தட்ட 30 வருடங்கள். எத்தனை தலைமுறையாக இட ஒதுக்கீடு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?


Since 1920s in Tamil Nadu, for
atleast 75 years.The same castes
that were in the non-brahmin
backward list are still there.
If you look at the data even
before reservation education
and employment was not confined
to only brahmins.Mudaliars,
Pillais,Chettiars were neither
poor nor uneducated even then.
They are still in OBC list.

Anonymous said...

இட ஒதுக்கீடு என்பது தவிர்க்க முடியாதது என்பதில் மறுப்பில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்தும் அதனால் முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை என்றால்..அது செயல்படுத்தப்படும் முறையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது.

The problem is with reservation
system as such, not just in
implementation.

Anonymous said...

//If you look at the data even
before reservation education
and employment was not confined
to only brahmins.Mudaliars,
Pillais,Chettiars were neither
poor nor uneducated even then.
They are still in OBC list.//

Dont you think a better solution would be for the oppressed forward communities to request including their castes in OBC? That is a plausible solution dont you think? After all, what you need is tit for tat, right? This way you can compete with the creamy or non-creamy layer OBCs as they do, and wont be unfairly left behind. Or better, fight for reservations to the so-called oppressed forward communities - say, 12% of the 39% - can be reserved as FC, and the rest of the 27% can be OC - everybody gets an equal share of the pie? How about that?

//The problem is with reservation
system as such, not just in
implementation.//

பாலாஜி - முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது இதைக் குறித்துத்தான். பிரச்னையே இட ஒதுக்கீட்டில்தான், க்ரீமி லேயரில் இல்லை, இட ஒதுக்கீட்டையே தூக்கிக் கடாசுங்கள் ;-)

ACE !! said...

தெளிவா சொல்லியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

Rasigan said...

vetti...

My point is we have to go to a community where we have no FC, BC, OBC, SC/ST categories. Infact no categories at all.

But till we achieve that level reservation is unavoidable ( WE NEED IT BASED ON CASTE ). But probably we can add the economy factor.

One guy should get the benefit once in life... for example if a guy gets into engineering college using reservation then we should reduce his right on claiming reservation in his higher studies or job.

GOVT has to give reservation and has to take care of his Hostel and College fees. But after giving all this again government should NOT say 'Oh... just score XX% ...Govt Job will be given because you have reservation'. If we do that every guy who gets reservation will have a keen interest to achieve in life. If you dont tell them this they may take reservation for granted and will get used to it. I am not saying its wrong to get used to things. Its just human nature. This i am saying because a percentage(NOTE: ONLY A PERCENTAGE NOT ALL) of students have that attitude that they can claim a job based on reservation even if they score less marks. I have seen guys whose father and mother both are govt employees and they get scholarship.

The following question can be asked to all the college students:(NOTE: ALL THE COLLEGE STUDENTS)

Would you like to support one guy's scholarship benefits after you get a job?

This way the goverments pain also will be reduced.

Also the government has to be keen on when to start reducing the reservation... Only when there is no reservation there is equality... there is no meaning in claiming equality when we are providing reservation to certain people.. I am not saying we have to stop reservation immediately.. but we have start moving to that level.

மு.கார்த்திகேயன் said...

/நீ பொறந்தே ஒரு வருஷம் கூட ஆகல. உனக்கு எப்படி புரியும்.

//

ஓ.. அப்ப ஒரு வருஷமா வெட்டியாத் தான் இருக்கீங்களா.. அப்போ ஆணிங்கிறது பக்கத்து கியுபுல சைட் விடுறதா, பாலாஜி

ஜி said...

sorry Vetti....

creamy layer la oru chinna misunderstanding aahi potchu...

creamy layerna athikamaa mark edutha pullaingannu nenatchitten

nethuthaan G.Ra explanation koduthaaru.... atha konjam explain pannirukalaam :)

நாகை சிவா said...

யப்பா, வெட்டி உள்ளதை சொன்னாய், அதையும் நன்றாக சொன்னாய். எனக்கு சில கருத்துக்கள் இருக்கு, ஆனா வேண்டாம்.

சொல்லி சொல்லி அலுத்து போச்சு. உனக்கு தான் தெரியுமே.

என் தந்தை மத்திய அரசு அதிகாரி என்பதால் எந்த சலுகையையும் நான் அனுபவிக்க இல்லை. அனுபவிக்கவும் நான் முயற்சிக்கவில்லை. ஆனால் அனுபவித்தவர்கள் கண்க்கு முன்பாக பலர். இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

//நான் பொங்கவும் இல்ல திங்கவும் இல்ல... தூக்கம் வருது தூங்கறேன்... //

ரீப்பிட்டோ ரீப்பிட்டு....

Raji said...

Hi Balaji,
Ennakku konjam kolappura maadhiri irukku..


//oru BC studentukku OC, BC rendulaiyum seat irunthaa, avan BC ya use pannanum, OC ya use panna koodaathunnu solla varreenga... correcta? //

Ji sonnadhaey naanum kaetkuraen...

Anonymous said...

Balaji, first you read the basics of reservation, why it was introduced, when it was implemented and how the seats were allocated. In 1989-90, MBC quota was implemented in Tamil Nadu. That time government was increased the seats in Engineering & Medical colleges and also allotted funds for infrastructure development in colleges. For example if the quota is 10%, then the seats were increased from 100 to 111 and the 10% of 111 is allotted for reservation. So, there should be no losing for OC seats. The same scheme will be introduced in IIT and IIM. Government has promised to follow the same scheme.

MyFriend said...

OC, BCன்னு நீங்க பேசியது.. ஏதோ OCBC Bankலெ ஃப்ரீயா லோன் ஏதும் தர்றாங்களோன்னு ஓடி வந்து பார்த்தேன்..

இப்படி கவுத்துப்ப்ட்டீங்களே!!!!

MyFriend said...

க்ரீமி லேயரை இங்கே தூக்க அசசியமில்லை.. இந்த பிரச்சனை இங்கு இல்லை. ;-)

Anonymous said...

Really its very useful info & analysis Balaji :) Variety is important for blog. You made it.

- Meena

Anonymous said...

:)

its old pappara wine in new bottle

Anonymous said...

Not all castes are having reservations from 1920.

பொன்ஸ்~~Poorna said...

பாலாஜி,
முன்னமே ஒரு அனானி சொன்னது போல், இட ஒதுக்கீட்டின் வரலாறு தெரியாமல் அதைப் பற்றிப் பேசுவது நியாயமில்லை என்பது என்னுடைய கருத்து. எனக்கும் வரலாறு முழுமையாக தெரியாதென்றாலும், க்ரீமி லேயரைப் பற்றிய என் கருத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் லட்சாதிபதிகளுக்கும், கோடீஸ்வரன்களுக்கும் ஏன் இட ஒதுக்கீடு என்று யோசித்தாலும்,
ஒரு மாணவன் லட்சாதிபதியின், ஏன் ஆயிரமாதிபதியின் மகனே இல்லை என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்? எப்படிக் கணக்கில் கொள்ளுவீர்கள்?

"நான் க்ரீமி லேயர் இல்லை!" என்று சர்டிபிகேட் வாங்கி வரச் சொன்னால், அப்படியான சர்டிபிகேட் யார் வேண்டுமானாலும் வாங்க முடியுமே இப்போது? பல உயர்சாதிக்காரர்கள் பிசி சர்டிபிகேட்டை இப்படித் தான் வாங்கியதாக என்னிடமே சொல்லி இருக்கிறார்கள்.

அடுத்து, லஞ்ச தலைவிரித்தாடும் நம் அரசு அலுவலகங்களில், செலவு செய்து சர்டிபிகேட் வாங்கக் கூடியவன் க்ரீமி லேயரா? அந்த சர்டிபிகேட்டுக்குச் செலவு செய்யக் கூட காசில்லாதவனுக்கு அரசாங்கம் ஏதும் செய்யாதா?

இந்தக் கேள்விகளின் நீட்சியாக, க்ரீமி லேயரும் கூட லட்சாதிபதியைக் கோடீஸ்வரன் ஆக்கும் திட்டம் மட்டுமேயாக மிஞ்சிவிடும் அபாயம் இருக்கிறது.

க்ரீம் என்பது ஏன் பணமாக எடுக்கிறீர்கள்? கல்வி வியாபாரமானதை ஆதரிக்கும், ஆமோதிக்கும் விதமான இந்த க்ரீம் எனக்குச் சரியெனப் படவில்லை. கல்விக்கான ஒதுக்கீட்டில் க்ரீமிலேயரை முடிவு செய்ய வேண்டியதும் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்துக் கல்வித் தகுதியே அல்லவா?
என் குடும்பத்தில் எல்லாரும் படித்தவர்கள். என் தந்தை, தாய், தாத்தா, ஏன், பாட்டி, பாட்டியின் அம்மா கூட பள்ளிக்குப் போய் படித்தவர். தினசரி பாடம் சொல்லித் தராவிட்டாலும், படிப்பு வாழ்க்கைக்கு எத்தனை முக்கியமானது என்று எனக்கு உணர்த்தினார்கள். நானும் சலுகைகள் எதிர்பார்க்காமல் படித்தேன்.

என் உடன் படித்த தோழி சுனிதாவின் தந்தை தி.நகரில் காய்கறி மண்டி வைத்திருந்தவர். அவர் வீட்டில் படிப்பு வாசனையே கிடையாது. ஆனால் நம் க்ரீமிலேயர் அளவுகோலின்படி, அவர் ஒரு செல்வந்தர். ஓரளவுக்கு நல்ல சம்பாத்தியம். பெற்றோர் இருவரும் சம்பாதிக்கும் எங்கள் குடும்பத்துக்கு இணையான வசதியான குடும்பம். ஆனால், சுனிதா படிப்பில் சுமார். அவளுக்கு ஆங்கிலம் பேசவோ, புரியாத கணக்கில் சின்னச் சின்ன பகுதிகளை நுணுக்கமாக அவளுக்குப் புரியும்படி விளக்கவோ வீட்டில் ஆள் கிடையாது. பள்ளியில் சொல்லிக் கொடுப்பது தவிர, தோழிகள் நாங்களும் சில சமயம் அவளுக்கு உதவுவதுண்டு. அவளின் மந்தகதியிலான புரிதலுக்கு முக்கிய காரணம் அவளுடைய குடும்பப் பின்னணி என்பது என் எண்ணம்.

எட்டாவதோடு, "இனிமேல் படித்து என்ன செய்யப் போகிறாள்? இதுவரை படித்த படிப்புக்கு, கடைக்கு வந்து கணக்கு வழக்கெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாலே போதும்" என்று நிறுத்திவிட்டார் அவர் தகப்பனார். இட ஒதுக்கீடு போன்ற வசதிகள் அவளைப் போன்றவர்களுக்கு ஒரு வரம்.

"அட, சீட் கிடைக்கலைன்னா, விட்டுத் தள்ளு! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது! வீட்ல இருந்து என்னோட சேர்ந்து வியாபாரம் செய்யட்டும்!" என்று சொல்லும் வீடுகளில் இட ஒதுக்கீடும் அது சார்ந்த நன்மைகளும் பெரும் பயனாக இருக்கும்.

"சாதி சார்ந்த கணக்கெடுப்பை நம் அரசாங்க கணக்கெடுப்புத் துறை எடுக்க மறுக்கிறது" என்று விகடனில் படித்தேன். அப்படியெனில், இது போல், எத்தனை பெற்றோர் படித்தவர்கள், எத்தனை மாணவர்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறையில் படிப்பு வாசனை உண்டு போன்றவற்றைக் கணக்கெடுத்து, அதன்படி க்ரீமி லேயர் அறிமுகப்படுத்தினால் இன்னும் சரியான, ஒழுங்கான முறைமையாக இருக்கும் என்பது என் எண்ணம்.

ஆனால், நம்ம கோடிங்கில் நாமே ஆணி கண்டுபிடிப்பது போல், இதிலும் ஒரு குறை எனக்கே தெரிகிறது. பட்டதாரியானாலும் வீட்டில் இருக்கும் தன் தாய், "படிப்பு வாசனை தெரியாதவர்" என்று சான்றிதழ் பெறச் சொன்னால், அதைக் கூட நம்மவர்கள் சுலபமாகப் பெற்றுக் கொண்டு வந்துவிடுவார்களே! அப்போ என்ன செய்யப் போகிறோம்?

எப்படி க்ரீமிலேயரை நடைமுறைப்படுத்தி லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரன் ஆக்காமல் தடுக்க முடியும்?

வெட்டிப்பயல் said...

//பாலாஜி - தொழிற்கல்லூரிகளில் சீட் கிடைப்பது என்ற ஒரு விஷயத்தை மட்டும் முன்வைத்து இந்த க்ரீமி லேயர் வாதம் வைக்கப்படுகிறது என்று அப்பாவியாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் - இட ஒதுக்கீட்டை சுத்தமாகத் துடைத்து எறிவதற்காக ஊடகங்களாலும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் குழுக்களாலும் வைக்கப்படும் திட்டத்தின் முதல் படி மட்டுமே இது. வி.ஏ.ஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம், பியூன்கள், வங்கி மேனேஜர்கள், கிளர்க்குகள், பள்ளிக்கூட வாத்தியார்கள், எம்.எல்.ஏக்கள் (ரிசர்வ் தொகுதிகள்), பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று இட ஒதுக்கீட்டால் பயனடைபவர்களை, இஞ்சினியர் டாக்டர்களைத் தாண்டியும் பாருங்கள் - சமமான பிரதிநிதித்துவம் தற்போது இருக்கிறதென்றால் இட ஒதுக்கீட்டால் வந்ததுதான் - இன்றைக்கு ஜாதி பெயரால் நடக்கும் வன்முறைகள் ஊடகங்களில் இவ்வளவு தூரம் வெளியில் வருவதற்கும், வலைப்பதிவுகளில் இவ்வளவு விலாவாரியாக அலசப்படுவதற்கும்கூட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் இட ஒதுக்கீட்டின் பங்கும் மிக முக்கியம். தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண ஆளுக்கு இஞ்சினியர் டாக்டர் வக்கீல் டிகிரி இருந்தால் மட்டும் போதாது - தன் தொழிலை அவன் ஒழுங்காகச் செய்ய சமப் பிரதிநிதித்துவம் உள்ள சமுதாயமும் இருக்கவேண்டும். உங்களது சீட்டுக் கணக்கில் குறை சொல்லமுடியாது - தற்போதைய நடைமுறை இதுதான் என்பது உண்மை. ஆனால், வெறும் கல்லூரி சீட்டுக்களால் மட்டும்தான் ஆனது சமுதாயம் என்பதும் உண்மைதான், இல்லையா.
//

ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க. நான் குழலி அவர்களோட அந்த விளக்கத்திற்கு மட்டும் என் அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறேன்.

இப்ப நடந்த பிரச்சனையிம் கல்லூரிகளில் உயர்கல்விக்கான இட ஒதுக்கீடு போரட்டத்தால் என்பதால் அதை பற்றி அனுபவப்பூர்வமாக தெரிந்ததால் சொன்னேன். நானும் பல கணக்கு போட்டு போய் கவுண்சிலிங்கில் ஏமாந்தேன். அதனாலே அதை அனுபவப்பூர்வமாக எழுத முடிந்தது.

சரி அடத்ததாக நீங்கள் சொல்லும் சமமான பிரதிநிதித்துவம், அது மீண்டும் மீண்டும் ஒரு சிலரே பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது என்று சொல்கிறேன். எம்.எல்.ஏ பையனுக்கு ரிசர்வேஷன் கொடுப்பதைவிட பியூன் மகனுக்கு கிடைப்பது தானே சரி...

அதிலும் அப்பா காலேஜ் புரபசர் மகனுக்கு கிடைப்பதைவிட அதில் வேலை செய்யும் வாட்ச் மேன் மகனுக்கு கிடைப்பது தானே நியாயம்?

கொஞ்சம் மனசாட்சியோட, சுயநலத்தை தவிர்த்து சிந்தியுங்கள். ரிசர்வேஷன் தேவையில்லை என்று சொல்லும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். அது தேவையானவர்களை சென்று சேர வேண்டும் என்னும் எண்ணமுடையவன்...

வெட்டிப்பயல் said...

பொன்ஸக்கா,
நீங்க சொன்ன கணக்கு படி பார்த்தா உங்க ஃபிரெண்டுக்கு தான் இட ஒதுக்கீடு கொடுக்கனும். ஆனா அது அவர்களுடைய அடுத்த தலைமுறைக்கு போய் சேராது. ஏனென்றால் அவர் பெறும் கல்வி தகுதியால் அவர் இட ஒதுக்கீடுக்கு தகுதியற்றவராகிறார்.

//"நான் க்ரீமி லேயர் இல்லை!" என்று சர்டிபிகேட் வாங்கி வரச் சொன்னால், அப்படியான சர்டிபிகேட் யார் வேண்டுமானாலும் வாங்க முடியுமே இப்போது? பல உயர்சாதிக்காரர்கள் பிசி சர்டிபிகேட்டை இப்படித் தான் வாங்கியதாக என்னிடமே சொல்லி இருக்கிறார்கள்.//

இது காமெடியா இல்லையா? காப்பி அடிக்கறானு ஏன் பரிட்சை வைப்பீங்கனு கேட்பீங்களா?

போலிஸ் ஸ்டேஷன்ல எங்கயாவது லஞ்சம் வாங்கினா கேஸ் கொடுப்பதே தப்புனு சொல்லுவீங்களா?

அந்த தப்பையும் எப்படி சரி செய்வதுனு தான் யோசிக்கனும். அத விட்டுட்டு அரசாங்க அதிகாரி லஞ்சம் வாங்கறான் அதனால திட்டம் சரியா இருக்காதுனு சொல்ல கூடாது.

//"சாதி சார்ந்த கணக்கெடுப்பை நம் அரசாங்க கணக்கெடுப்புத் துறை எடுக்க மறுக்கிறது" என்று விகடனில் படித்தேன். அப்படியெனில், இது போல், எத்தனை பெற்றோர் படித்தவர்கள், எத்தனை மாணவர்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறையில் படிப்பு வாசனை உண்டு போன்றவற்றைக் கணக்கெடுத்து, அதன்படி க்ரீமி லேயர் அறிமுகப்படுத்தினால் இன்னும் சரியான, ஒழுங்கான முறைமையாக இருக்கும் என்பது என் எண்ணம்.//
இதை தான் நானும் சொல்றேன். வெறும் பணம் மட்டும் இல்லை... இன்னும் பல க்ரைட்டீரியா இருக்கு க்ரீமி லேயரை ஒதுக்க.

பாபா லிஸ்ட் போட்டிருக்காரு
பாருங்க

Anonymous said...

//கொஞ்சம் மனசாட்சியோட, சுயநலத்தை தவிர்த்து சிந்தியுங்கள். ரிசர்வேஷன் தேவையில்லை என்று சொல்லும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். அது தேவையானவர்களை சென்று சேர வேண்டும் என்னும் எண்ணமுடையவன்...//

நிலவரத்தைச் சொன்னா சுயநலம், மனசாட்சி! ஐயா, அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காதீங்க - இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நீங்கன்னு யார் சொன்னா இப்போ? க்ரீமி லேயர் அப்படின்னு ஒரு விஷயத்தை வைச்சு இட ஒதுக்கீட்டை ஒரேயடியா ஒழிக்க முயற்சி பண்றவங்களுக்குத் தன்னையறியாமல் துணைபோற ஆசாமின்னு வேணும்னா வச்சுக்கலாம். நீங்க இட ஒதுக்கீட்டுல வந்தீங்களொ இல்லயோ தெரியாது, நான் இட ஒதுக்கீட்டால் எந்தப் பயனும் அடைஞ்சதில்ல - அப்படிப் பார்த்தா நானும் இட ஒதுக்கீட்டை தூக்கு அப்படின்னுதான் சொல்லணும். என்ன சொல்ல வர்றோங்கிறதைப் புரிஞ்சுக்கற மாதிரித் தெரியலை. நல்லது, விடுங்க.