தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, April 09, 2007

எல்லாமே அழகு தான்...

நம்மளையும் ஆறு அழகான விஷயங்களை பத்தி வல்லியம்மா எழுத சொல்லிட்டாங்க. ஆணி அதிகம் அதனால கொஞ்சம் தாமதமாயிடுச்சு.

அழகுனா உனக்கு என்ன ஞாபகம் வரும்னு தம்பி என்கிட்ட சேட்ல கேட்டப்ப நான் சொன்னது குழந்தைகள். குழந்தைகள் தான் எனக்கு எப்படி இருந்தாலும் அழகா தெரியறாங்க. கருப்போ, சிகப்போ, குண்டோ, ஒல்லியோ எப்படி பார்த்தாலும் அழகாக இருப்பது குழந்தைகள் தான். அவர்களுடன் விளையாடும் நேரங்களில் தான் நாம் நம் வயதையும் குறைப்பது போல் ஒரு உணர்வு. இங்கயும் எங்க பக்கத்து வீட்ல ஒரு எங்க டீம் லீட் குழந்தை இருக்கு. அந்த குழந்தைக்கூட தினமும் விளையாடும் போது ஒரு விதமான மகிழ்ச்சி. வேலை டென்ஷனெல்லாம் போய்விடும். நீங்களே பாருங்க எவ்வளவு அழகுனு


அழகுகள் ஆறுனு சொன்னவுடனே ஞாபகம் வந்தது நான் பிறந்த ஊரான திருக்கோவிலூரில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் அழகு தான். (ஏன்டா எந்த ஆற சொன்ன உனக்கு எந்த ஆறு ஞாபகம் வருதுனு நீங்க திட்றது காதுல விழுது.) அதுவும் தென்பெண்ணை ஆற்றின் சுவையை சொல்ல வேண்டுமே. அதனால் தான் உலகை அளக்கும் திருமால் அங்கு கோவில் கொண்டு மகிழ்கிறான். சின்ன வயசுல அந்த ஆத்துல குளிச்சதெல்லாம் இப்பவும் இனிமையான நினைவாக இருக்கிறது. ஆத்துல தண்ணி ஓடற அழக பார்க்கனுமே. நாள் பூரா அதுல விளையாடிக்கிட்டே இருக்கலாம். ஆனா ஆத்துல நான் நல்லா தண்ணி ஓடி பார்த்து வருஷக்கணக்குல ஆச்சு.

அடுத்து எனக்கு அழகா தெரியறது முதுமைதான். அதுக்கு முக்கியமான காரணம் காந்தி தாத்தாவும், அன்னை தெரசாவும் தான். வயசானாலும் அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கற மாதிரி எனக்கு ஒரு எண்ணம். காந்தி தாத்தாவோட சின்ன வயசு போட்டோ பார்த்ததுக்கப்பறம் இந்த எண்ணம் ரொம்ப உறுதியாயிடுச்சி. இப்ப லேடஸ்ட் நம்ம தலைவர் கலாம். வயசானவங்க நிறைய பேர பார்த்ததுக்கப்பறம் முதுமையும் ஒரு அழகு தான் முடிவுக்கு வந்துட்டேன்.

கிராமத்துக்காரர்களின் வெள்ளை மனசு. இது ரொம்ப அழகுங்க. நான் கடலூர்ல 7வது படிக்கும் போது எனக்கு டான்சில்ஸால அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடும். எப்பவும் சிக் ரூம்ல தான் இருப்பேன். உடம்பு சரியில்லைனு வெறும் கஞ்சிதான் கொடுப்பாங்க. அதை குடிக்கறது அத விட கொடுமை வேற எதுவுமில்லை. அதுக்கப்பறம் ஆப்பரேஷம் செய்து உடம்பு சரியில்லாம போறதே நின்னுடுச்சி. அதுக்கப்பறம் 9வது பத்தாவது படிக்கும் போது தான் தமிழ் மீடியம் படிக்கற பசங்க எல்லாம் நல்ல நண்பர்களானாங்க. யாருக்காவது உடம்பு சரியில்லைனா என்ன வேணும்னாலும் ஹாஸ்டல் கேட்ட தாண்டி யாருக்கும் தெரியாம போய் வாங்கிட்டு வருவாங்க. அந்த மாதிரி போய் வரும் போது மாட்டினால் என்ன அடி விழும் என்று சொன்னால் புரியாது. ரெண்டு மூணு பிரம்பு உடையும் வரை அடி விழும். அதுக்கு அப்பறம் அவுங்க கூட நானும் சேர்ந்து இந்த வேலையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டேன். கோபம் வந்தா கண்டபடி திட்டுவாங்க. சண்டை போட்டு பேசறத வேணா நிறுத்திக்குவாங்க. ஆனா மனசுல வெச்சி கூட இருந்தே என்னைக்கும் பழி வாங்க தெரியாது. அந்த மனசு பொதுவா சிட்டில இருந்து வரவங்ககிட்ட நான் பார்க்கல.

அப்பறம் அழகுனா கண்ணன் தான். குழந்தையா வெண்ணை திருடும் போதும் சரி. அதுற்கு பிறகு கோபியர்களோட விளையாடும் போதும் சரி, போர் களத்திலும் கூட கண்ணன் அழகு தான். அவன் அழகை நாள் பூரா சொல்லிக்கிட்டே இருக்கலாம்.லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... யாருக்கும் கெட்டது நினைக்காத வரை நாம் அனைவரும் அழகு தான். அதை நாம் உணர்ந்தால் போதும் உலகமே அழகாகிவிடும்.

அழகுகள் ஆறுக்கும் டேக் பண்ணனுமா???

சரி நீங்க எல்லாம் சீக்கிரம் எழுதுங்கப்பா

புலி
போர் வாள் தேவ்
CVR

27 comments:

Rasigan said...

முதல் பிண்ணுட்டம்??

G.Ragavan said...

வாப்பா வா வெட்டி. அழகு பத்தி ஒனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லீட்ட. ஆனா நீ சொல்லாம விட்ட அழகுகள் இன்னும் இருக்கேப்பா! ;-)

குழந்தை அழகுதான். ஏனென்றால் குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா. ஆகையால்தான் தெய்வத்தைக் கூட நாம் குழந்தை வடிவில் பார்க்கிறோம்.

அபி அப்பா said...

நனச்சாச்சு, துண்டு குடுங்க:-)

பின்ன விரிவா வர்ரேன்!

செந்தழல் ரவி said...

ஊர்க்கார பயபுள்ளைகளுக்கு தென்பெண்னை ஆற்றை பற்றி சொல்லலின்னா தூக்கமே வரக்க்கூடாது...

ஆத்துல தண்ணீர் வந்தபிறகு சேற்றிலாடும் அயிரை மீன்களை பிடித்து வைக்கும் குழம்பு என்ன ருசியாயிருக்கும்...!!!!

நிறைவாக தண்ணீர் போகும் காலங்களில் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நீந்தி வரும்போது அட்டகாசமாக இருக்கும்...

என்ன ஒன்று, தண்ணீர் இல்லாத காலங்களில் கன்றாவியாகிவிடுகிறது ஆறு..!!!

அபி அப்பா said...

// G.Ragavan said...
வாப்பா வா வெட்டி. அழகு பத்தி ஒனக்குத் தெரிஞ்சதெல்லாம் சொல்லீட்ட. ஆனா நீ சொல்லாம விட்ட அழகுகள் இன்னும் இருக்கேப்பா! ;-)//

புரியல ஜி.ரா:-)

அய்யனார் said...

வெட்டி
ராம் ஐ நான் ஏற்கனவே கூப்டுட்டேன்
:)

வேர யாரையாச்சும் கூப்பிடுங்க

அட..தென்பெண்ணை ஆத்துக்காரங்க நிறைய பேர் இருக்கம்பா..

கோவி.கண்ணன் said...

//லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... யாருக்கும் கெட்டது நினைக்காத வரை நாம் அனைவரும் அழகு தான். அதை நாம் உணர்ந்தால் போதும் உலகமே அழகாகிவிடும்.//

ரொம்பவுமே விஜய (ய்,காந்த்,ராஜேந்தர்) நடிகர்களின் படம் பார்த்து பார்த்து உப்புமா டயலாக்கை அதாவது பஞ்ச் டயலாக்கை கடைசியில் வச்சிருக்கிங்க. மெசேஜ்னு கூட எடுத்துக்கலாம் !
:)

மற்றதெல்லாம் அருமை !

SP.VR. சுப்பையா said...

////அழகுனா உனக்கு என்ன ஞாபகம் வரும்னு தம்பி என்கிட்ட சேட்ல கேட்டப்ப நான் சொன்னது குழந்தைகள். குழந்தைகள் தான் ////

என்னதான் ஆணி பிடுங்கிற அளவிற்கு உய்ர்ந்து விட்டாலும் சில சமயங்ளில்
நீங்களும் உங்களுடைய (குறும்பான பதிவுகளால்)குழந்தைதான் வெட்டி!

MeenaArun said...

முக்கியமான் ஒன்னை விட்டுடீங்க.
அதான் "தெலுங்கு" தெலுசா

கோபிநாத் said...

தாமதமானாலும் நல்லா எழுதியிருக்கீங்க பாலாஜி

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, கொஞ்சம் அவசரத்தில்தான் எழுதினா மாதிரி தெரியுது. உங்க நார்மல் டச் மிஸ்ஸிங்.

அப்புறம் விரிவான விமர்சனம். ஆனா ராயலை அய்யனார் கூப்பிட்டாச்சு. அதனால நீங்க வேற ஆளைக் கூப்பிடுங்களேன்.

இலவசக்கொத்தனார் said...

//புரியல ஜி.ரா:-)//

யோவ் அவரு சுமாக்காவைப் பத்தி சொல்லறாரு. இல்லீங்களா மயிலாரே!!

உண்மை said...

//
இலவசக்கொத்தனார் said...
வெட்டி, கொஞ்சம் அவசரத்தில்தான் எழுதினா மாதிரி தெரியுது. உங்க நார்மல் டச் மிஸ்ஸிங்
//

ரிப்பீட்டு.....

தம்பி said...

ஆணி அதிகமா புடுங்குனாவே இப்படிதான் ஆகும்.

ஏமாத்திட்ட :((

வெட்டிப்பயல் said...

மக்களே,
அவசரத்துல அழகையே அசிங்கமாக்கிட்டேன்... மன்னித்து விடுங்கள்...

என்ன இருந்தாலும் அந்த குழந்தை ஒன்றே போதும் அழகு பதிவை அழகாக்குவதற்கு...

வெட்டிப்பயல் said...

ரவி அண்ணே,
தென்பெண்ணை ஆத்தை மறக்கமுடியுமா? அந்த ஆத்து பக்கத்துல சந்தப்பேட்டைனு ஒரு இடம் இருக்கு. அங்க தான் எங்க பெரியம்மா வீடு.

நான் பிறந்தது டேனிஷ் மிஷன் ஆஸ்பத்திரி தான்... அப்பறம் அங்க housing boardல குடி ஏறினது நாங்கதான். அங்க பிறந்த முதல் குழந்தை நான் தான் :-))

அப்பறம் எப்படி அந்த ஊரை மறக்கமுடியும் :-)

வெட்டிப்பயல் said...

அய்யனார்,
நீங்க எந்த ஏரியா???

அபி அப்பா said...

//அய்யனார்,
நீங்க எந்த ஏரியா???//

கிடேசன் பார்க் அருகில்:-))

அய்யனார் said...

திருவண்ணாமலை
;)
திருக்கோயிலூருக்கு கிரிக்கெட் ஆட ஆட்டோ ல வருவோம்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தென்பெண்ணை ஆற்றின் சுவையை சொல்ல வேண்டுமே. அதனால் தான் உலகை அளக்கும் திருமால் அங்கு கோவில் கொண்டு மகிழ்கிறான்//

ஏதேது...
உலகை மொத்தமா அளந்த பெருமாள், ஒவ்வொரு ஊரா அளந்து பாத்துட்டு, கடைசியா பாலாஜி ஊர் தான்பா சூப்பர் அப்படின்னு திருக்கோவிலூர் வந்துட்டாரா? :-)

கண்ணன் குழந்தை அழகு
டீம் லீட் குழந்தை அழகோ அழகு!
சுத்திப் போடச் சொல்லுங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அந்த மனசு பொதுவா சிட்டில இருந்து வரவங்ககிட்ட நான் பார்க்கல//

இதப் பாத்துட்டு, இன்னும் யாருமே பொங்கலையா?

சென்னையே, பெங்களூரே, மதுரையே, திருச்சியே - எல்லாரும் எங்க போனீங்க?

உங்க காதல் கதைகள் எல்லாம் மட்டும் சிட்டியிலேயே ரவுண்டு அடிக்குது? :-)

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, வல்லியம்மா (அதென்ன அவங்களை வள்ளியம்மாவா ஆக்கிட்டீங்க?) உங்களை கூப்பிடும் போதே புலியையும் கூப்பிட்டாச்சி. அதனால அவரை மாத்துங்க.

நாகை சிவா said...

நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சி கூப்பிட்டு இருக்க... ரொம்ப சந்தோஷம்ப்பா.....

ஒரு வாரம் எஸ்கேப் ஆகி இருந்தேன். சீக்கிரமே அழகை பற்றி அழகாக எழுதி வேண்டியது தான்.

எல்லாமே அழகு தான்....

கப்பி பய said...

சுமா சொல்லக்கூடாது...அழகான பதிவு

சாரிங்க ஆபிசர் அவசரத்துல ம் உட்டுட்டேன் :)))

வல்லிசிம்ஹன் said...

அழகு பத்திப் பதிவு போடச் சொல்லிட்டுப் பார்க்காம இருந்துட்டேன். பாலாஜி,
நல்லா எழுதிட்டீங்க.

இன்னும் நாலு பாரா பாக்கி.
வேலையா இருக்கிறதுனாலே விட்டூட்டேன்.:-)

அதென்னப்பா நான் மாலோட பொண்டாட்டி பேரை வைத்துக்கிட்டு இருக்கேன்.
நீங்க மால்மருகன் மனைவியாகப் போட்டு விட்டீங்க.

யாருங்க சுமா அக்கா?:-0)
ரொம்ப வேண்டப்பட்டவங்களா?
நன்றிப்பா.

இராம் said...

//சுமா சொல்லக்கூடாது...அழகான பதிவு

சாரிங்க ஆபிசர் அவசரத்துல ம் உட்டுட்டேன் :)))//

ஐயா சாமி வெட்டி,

கப்பி அவசரத்திலே 'ம்' போடமறந்ததுக்கு நான் காரணமில்லை'ன்னு அடிச்சு சொல்லுறேப்பா :)

//
யாருங்க சுமா அக்கா?:-0)
ரொம்ப வேண்டப்பட்டவங்களா?//

இதுக்கும் நான் காரணமில்லை :)))

மு.கார்த்திகேயன் said...

//கிராமத்துக்காரர்களின் வெள்ளை மனசு. //

தலைவர் கூட சிவாஜில காவிரியாறு பாட்டுல சொல்லியிருக்காரே, வெள்ளந்தி மனசுன்னு, வெட்டி