தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, April 12, 2007

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? - 2

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?னு போட்ட போன பதிவு 40 பின்னூட்டங்களை தாண்டி விட்டதால் அது தமிழ்மண முகப்பில் வராது போய்விடும். அதனால் அந்த பதிவில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள்(?) தொடர்ந்து நடைபெற இந்தப் பதிவு.

அதில் பிரகாஷ் கேட்டு இருக்கும் சில கேள்விகளும் அதற்கு பாபா தந்த பதில்களும். இந்த விஷயத்தில் சீனியர் பதிவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை நன்றாக புரியவைக்கிறது. (கொளுத்தி விட்டாச்சி... ஏதோ நம்மால முடிஞ்சது..)

நண்பர்களே, இங்க 40 பின்னூட்டங்கள் வந்த பின் மூன்றாவது பார்ட் ஆரம்பிச்சிக்கலாம்.

இந்த மாதிரி புது டெக்னிக்கை கண்டுபிடித்த சற்றுமுன்னிற்கு நன்றி.


அவருக்கு நம்ம பதில்,

ஐக்காரஸ் பிரகாஷ் அருமையா கேள்வி கேட்டிருக்காரு. ஒரு பக்கம் புலம்பலாக என் பதிவை நினைத்தவர்களும் புரிய வைக்கவே இதை தனிப்பதிவாக போடுகிறேன்.

//

icarus prakash said...

உங்களை எல்லாம் தமிழ்மணம் நல்லா கெடுத்து வெச்சிருக்கு :-). முதல்ல சில தகவல்கள்.

1. இந்திய மொழிகளிலே, தமிழிலே மட்டும் தான் , இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.

2. தமிழ்மணம் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். உதாரணத்துக்கு, புதுசா ஒரு வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து, அதை தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளில் இணைக்காமல், கொஞ்ச நாள் நடத்திப் பாருங்கள். ரெண்டே நாளில் வாழ்க்கையே வெறுத்து விடும், அதாவது மறுமொழிகள், டிராக்பேக், எல்லாம் எதிர்பார்த்திருந்தால்.

3. இன்றைக்கு இரண்டாயிரத்து சொச்சம் பதிவுகள் இருக்கிற நிலையில், இது போல கேள்வி கேட்கிறீர்கள். இன்னும் இரண்டு வருடங்களில், பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும். அப்ப என்ன செய்வீங்க?

4. தமிழ்மணம் உருவான நோக்கம் உன்னதமானது - உருவான காலத்தில் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன் என்ற அடிப்படையிலும், பின்னர் கொஞ்ச நாள் நிர்வாகத்தில் பங்கு பெற்றிருக்கிறேன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன். நூறோ என்னமோ பதிவுகள் மட்டும் இருந்த காலத்தில், feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், தமிழ் வலைப்பதிவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகத்தான் துவங்கியதே தவிர, தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.

4 தமிழ்மணம் திரட்டி வேறு. பூங்கா வேறு. தமிழ்மணம், தன்னுடைய விதிகளுக்கு உட்பட்டு வரும் எல்லாப் பதிவுகளையும் திரட்டும். உள்ளடக்கம் பற்றி புகார் வந்தால் மட்டும், அங்கே மனிதத் தலையீடு இருக்கும். ஆனால் பூங்கா என்பது, வலை இதழ். ஆசிரியரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுத்தான் வெளிவரும். ஆசிரியர் குழுவின் அரசியல் பற்றி விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு - எப்படி சோவைப் பற்றி விமர்சனம் செய்கிறோமோ அப்படி-ஆனால், என்னுதைப் போட மாட்டேன் என்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்க முடியாது.

5. தமிழ்மணம் ஏற்படுத்திக் கொடுத்த, சொகுசுகளால், எவ்வளவு நன்மை ஏற்பட்டதோ, அதே அளவு தீமையும் ஏற்பட்டிருக்கிறது. எந்த கஷ்டமும் படாமல், நாலு வரி கிறுக்கிவிட்டு ( உங்களைச் சொல்லவில்லை பாலாஜி, ஆக்சுவலி நான் உங்க சினிமா விமர்சனங்களோட தீவிர வாசகன்), அதை தமிழ் மணம், தேன்கூடு மாதிரி இடங்களிலே பதிவு செஞ்சுட்டா போதும். டிராஃபிக் என்ன?... பின்னூட்டம் என்ன, ஒவ்வொரு பின்னூட்டம் வரும் போதும், முகப்புப் பக்கத்திலே வருகிற சொகுசு என்ன... அங்க இங்க போய்ப் பாருங்க... வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..

6, இறுதியா ஒரு அட்வைஸ்.... பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. பதிவு நல்லா இருந்தால், கண்டிப்பா பட வேண்டியவங்க கண்ணுல கண்டிப்பா படும்... இல்லே, ' என் பதிவுக்கு நூத்து சொச்சம் பின்னூட்டம் வரும்,,, அதனாலே நாந்தான் டாப்பு, எப்பவும், தமிழ்மணம் முகப்பில், வலப்பக்க மூலையில் என் பேர் வந்துகிட்டே இருக்கணும்னு சொன்னா... அப்பறம் உங்க இஷ்டம்.

[ps : i'm cross posting this comment in my blog.]//

நான் சின்ன வயசுல பஸ்ல போகும் போது சில சமயம் வண்டி ஸ்டார்டாகாம இறங்கி தள்ளிவிட சொல்லுவாங்க. அப்ப எல்லாம் இறங்கி தள்ளிவிடும் போது நான் எங்க தாத்தாக்கிட்ட சொல்றது. ஏன் இந்த பஸ்ஸ நல்லா ஓடற மாதிரி பண்ணா என்னனு?

அதுக்கு அவரு "உங்க காலத்துல இந்த பஸ் வந்திடுச்சினு நீ இவ்வளவு குதிக்கற. நான் வளரும் போது பஸ்ஸே கிடையாது. நாங்க எல்லாம் இந்த பஸ்ஸ குறையா சொல்றோம். இதுவே உங்களுக்கு எல்லாம் அதிகம்னு"

நீங்க சொல்றதும் எங்க தாத்தா சொல்ற மாதிரி பதில்தான். நாளைக்கு உங்களை யாராவது நீ எப்படி எழுத பழகிக்கிட்டனு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்களோ எனக்கு தெரியாது. ஆனா என்னை கேட்டால் நான் தமிழ்மணம்னு ஒரு திரட்டி இருக்கு. அதுல நிறைய பேர் எழுதறத பார்த்து எழுத பழகிக்கிட்டேனு சொல்லுவேன். இது தான் உண்மை.

உங்களுக்கெல்லாம் தமிழ்மணம் ஹோட்டல் மாதிரி. வந்து பார்த்துட்டு சரியில்லைனா போயிடுவீங்க. ஆனா எங்களுக்கு வீடு மாதிரி. அதனால ஏதாவது தப்புனு பட்டுச்சினா சரி செய்ய ஆசைப்படுவோம். மனசுக்குள்ள இது சரியில்லைனு சொல்லிட்டு போக தெரியாது. விரும்பவுமில்லை.

நீங்க சொல்ற மாதிரி நான் என்னைக்கும் என்னை பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டது கிடையாது. அது உண்மையும் இல்லை. நான் ஒவ்வொரு பதிவா எழுத பழகிக்கிட்டது இங்க தான். நான் தட்டு தடுமாறி எழுதி இப்ப ஓரளவு தமிழ்மணத்தில் பெயர் சொன்னால் தெரியுமளவிற்கு வந்தது இங்கு இருப்பவர்களின் ஊக்கத்தால் தான். என்னை மாதிரி தட்டு தடுமாறி வருபவர்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.

27 comments:

Rasigan said...

ok vetti... oru mannum.. puriyalai... tamil manam... 40 comments limitation etc.... so...நான் இந்த விளையாட்டுக்கு நான் வரல Next Meet panren..

Anonymous said...

40 தானே..no prob :-)))

Sridhar V said...

பாலாஜி!

உங்கள் கேள்விகள் கொஞ்சம் திசை மாறி போகிறதோ என்ற ஐயம் உண்டாகிறது.

தமிழ்மணத்தினால் எழுதும் ஆர்வம் பெற்ற நீங்கள், இந்த உயரெல்லையினால் எழுதுவதை விட்டுவிடுவீர்கள் என்று சொல்வது புரியவில்லை. தமிழ்மணத்தினால் நீங்கள் பெற்ற பயன்கள் நிறைய இருக்கும்.

உங்களால் தமிழ்மணத்திற்கு கிடைத்தது என்ன? அவர்கள் நடத்துவது ஒரு லாபமில்லா சேவை. உங்கள் ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்குங்களேன்.

எனக்கு வலிக்கிறது, வலிக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பது... ஏனோ சரியென்று படவில்லை.

உங்கள் பதிவின் நோக்கத்திற்கு இந்த பின்னூட்டம் தடையாயிருப்பின், பிரசுரிக்க வேண்டாம். நன்றி!

இலவசக்கொத்தனார் said...

பிரகாஷ் அவர்களுக்கு, முதலில் தெளிவாக உங்கள் கருத்துக்களை முன் வைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இடையிடையே நாலு வரி கிறுக்கல்கள், பெரிய பதிவர், நாந்தான் டாப்பு என தமிழ் வலைப்பதிவுகளுக்கே உரிய தாக்குதல்கள் செய்யாமல் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். போகட்டும். உங்களை கருத்துக்களைப் படித்த பின் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்.

1. இன்று இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிக வலைப்பூக்கள் இருக்கின்றன. அது போன்று யாஹு மற்றும் கூகிள் குழுமங்கள் ஏராளம். பொதுவாக மொழிப்பற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டும் பயப்படாத தன்மை நம்மிடையே இருக்கிறதோ என்னவோ. இருந்தாலும் திரட்டிகளான தமிழ்மணமும் தேன்கூடும் இந்த ஆற்றலை சரியான வழியில் கொண்டு செல்ல உதவியுள்ளன. பின்னூட்டங்களைச் சேகரிக்கும் வழியாகட்டும் குரல்வழிப் பின்னூட்டங்களாகட்டும் அல்லது மகளிர் சக்தி என செய்திருக்கும் வசதியாகட்டும் கிடைக்கும் தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளும் திறன் நம்மிடையே இருக்கிறது. ஆகையால் பிளாக்கரில் இல்லாத சேவையை தமிழ்மணம் தருகிறது எனச் சொல்லும் பொழுது அது தருவதால்தான் அதற்கு இன்று இத்தகைய ஆதரவு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மாற்றுத் தேடி போய்க்கொண்டே இருப்போம் அல்லவா?

2. தமிழ்மணத்தால்தான் இன்று தமிழ்வலைப்பதிவுகளே இத்தனை சுறுசுறுப்புடன் இயங்குகின்றது என்பது எந்த மட்டில் சரி எனத் தெரியவில்லை. இன்று தமிழ்மணத்தில் இல்லாத சிலரைக் கேட்டுப் பார்த்தேன், அவர்களுக்கென ஒரு வட்டம் உருவாகத்தான் செய்கிறது. புதிதில் தனிமடல் அனுப்பியோ, நண்பர்களைக் கூப்பிட்டோ பார்வையிடத்தான் வைக்க வேண்டி இருக்கிறது. ஆனால் தரமான பதிவுகளைப் பற்றிய சுட்டிகள் பரவும் பொழுது அதிகம் பேர் பார்வையிடத் தொடங்குகின்றனர். இன்று தமிழ்மணத்தில் சேர்க்கப்படும் பதிவுகள் அனைத்துமா வெற்றி பெறுகிறது? இல்லையே. எழுதும் திறனும், முன்வைக்கும் கருத்துக்களுமே ஒரு பதிவின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. திரட்டிகள் இந்த ஆரம்ப கால கட்டத்தின் போது உதவியாக இருக்கின்றன, ஆனால் அவை ஒரு கருவிதானே தவிர அதற்கு மேல் இல்லை.

3. தானாக மறைவதற்கும் போட்டுத் தள்ளுவதற்கும் வித்தியாசம் இல்லையா? அதிக பின்னூட்டங்கள் வாங்குவது என்பது ஒரு சுமையாகப் பார்க்கப் படும் பொழுதுதான் சங்கடமாக இருக்கிறது. நீங்கள் கேட்ட கேள்வியையே நானும் கேட்கலாம் அல்லவா? அத்தனை பதிவுகள் வரும் பொழுது எல்லாமே நல்ல பதிவாக இருக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில் தரம் குறைந்த பதிவுகள் அதிகம் வருவதால் 'நல்ல' பதிவுகள் அதிக நேரம் தமிழ்மண முகப்பில் வருவதில்லை. அதனால் நாங்கள் எது தரம் வாய்ந்த பதிவு என முடிவு செய்து அதனை மட்டுமே முகப்பில் காட்டப் போகிறோம் என்னும் வாதம் சரியாகத் தெரிகிறதா? அது போன்று ஒரு சவால் வரும் பொழுது அதனை தீர்க்க தொழில்நுட்ப ரீதியாக எதேனும் செய்ய முடியுமா?, முகப்பின் அமைப்பு மாற்றங்கள் மூலமாக ஏதேனும் செய்ய முடியுமா என்பது போல் ஆராயாமல் கட்டுப்பாடுகள் மூலமே காலத்தைக் கடத்த எண்ணுவது சரியா?

4. தமிழ்மணத்தின் நோக்கத்தை இங்கு வெட்டியோ அல்லது வேறு யாருமோ குறை கூறியதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளின் திரட்டியாக அதன் செயல்பாடு எல்லோருக்கும் சந்தோஷமே. மேலும் மேலும் பதிவர்கள் வந்து சேருவதே இதற்குச் சான்று. ஆனால் இந்த உயரெல்லை என்பது ஒரு செயற்கை தடையாகத்தான் தெரிகிறது. ஒரு பதிவில் அதிக பின்னூட்டம் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக அது முகப்பில் காண்பிக்க முடியாது. ஏனென்றால் அவற்றை முகப்பில் காண்பிப்பதால் நல்ல பதிவுகள் காணாமல் போகிறது என்ற வாதம் ஒரு லாஜிக் இல்லாத வாதமாகவே தெரிகிறது. முன்பு மட்டுறுத்தல் கொண்டு வந்த பொழுது அதன் பின் இருந்த காரணங்கள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே சரி எனப் பட்டதால் அனைவரும் அதனை உடனடியாகச் செயல் படுத்தினர். இன்று அது தேவையில்லை என்று தமிழ்மணமே சொன்ன பின் கூட எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தேவை என்று வைத்திருப்பவர் அனேகம். அது போன்ற வலுவான காரணம் உயரெல்லைக்கு இல்லை என்பதால்தான் இந்த வாதங்கள் வெளி வருகின்றன. ஒரு பதிவுக்கு அதிக பின்னூட்டங்கள் வந்தால் அத்தனை பின்னூட்டங்கள் வந்ததாக திரட்டி சொல்லப் போகிறது. அதனால் என்ன? என்றோ ஒரு நாள் எதேனும் பதிவில் அனானி ஆட்டம் நடந்தால் அது வரப் போவது முகப்பில் ஒரு வரியில். இது என்ன நிதமும் நடக்கும் ஒன்றா?

5. இல்லை பிரகாஷ். இந்த வாதம் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவே இல்லை. தமிழ்மணத்தில் சேர்ந்த எல்லாப் பதிவுகளுக்குமா நீங்கள் சொல்வது போல் பின்னூட்டம் கொட்டுகிறது அல்லது படிப்போர் எண்ணிக்கை பல நூறு என்ற அளவில் இருக்கிறது? இல்லையே. ஒரு பதிவர் நன்றாக எழுதினால் மட்டுமே கூட்டம் கூடுகிறது. சரி. திரட்டிகள் இல்லை என்றால் இப்படி கூட்டம் வருவது கம்மியாகும் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அங்கு நமக்குக் கூடுதல் தேவை என்றால் கேட்கக்கூடாதா? அல்லது அங்கு எடுக்கப்பட்ட முடிவில் நமக்கு ஒப்பு இல்லை என்றால் அதையும் சொல்லக் கூடாதா? ஒரு அத்துவானக் காட்டின் நடுவே ஒரு தொழிற்சாலை இருந்ததாம். அருகில் எந்த ஊரும் இல்லை, அடிக்கடி வெளியூர் போய் வர எந்த வசதியும் இல்லை. அங்கு ஒரு அன்னசத்திரம் இருந்தது. அங்குதான் எல்லாருக்கும் சாப்பாடு. அங்கு ஒருநாள் உப்பு அதிகமாக இருந்தால் அதனைச் சொல்லக் கூடாதா? அல்லது அங்கு திடீரென்று அது வரை கிடைத்து வந்த ஒரு பதார்த்தம் இனி கிடையாதென்றால் ஏன் எனக் கேட்கக்கூடாதா? அது போல்தான் இன்று தமிழ்மணத்தில் கேட்கப்படும் கேள்விகள்.

6. //பதிவுகளுக்காகத்தான் மறுமொழியே தவிர, மறுமொழிகளுக்காகப் பதிவு அல்ல. // இது முற்றிலும் ஒத்துக் கொள்ள முடியாத ஒரு வாதம். ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்க ஒரு பதிவு போட்டால் அதில் சொல்லப்படும் பின்னூட்டங்களில்தான் அத்துணை விஷயங்களும் அடங்கி இருக்கின்றன. அது போல் எத்தனையோ சாதாரணப் பதிவுகள் பின்னூட்டத்தில் வெளிப்படும் கருத்துக்களால் மிளிர்ந்து இருக்கின்றன. என் பதிவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பதிவை விட உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்கள்தான் சுவையாக இருக்கின்றன எனச் சொன்னவர்கள் எத்தனையோ பேர். கீதா அவர்களின் சோதனைப் பதிவான இதில் வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள். இதில் இல்லையா கற்பனை வளமும் நகைச்சுவையும்? என்றோ எங்கேயோ ஒரு பதிவில் வரும் போலித்தனமான பின்னூட்டங்களுக்கும் அர்த்தமற்ற அனானிப் பின்னூட்டங்களுக்காகவும் பின்னூட்டம் வாங்கும் அத்தனை பதிவுகளையும் தூற்றுவது சரியாகவா இருக்கிறது? வலைப்பதிவு எப்படி ஒருவரது எண்ணங்களைச் சொல்கிறதோ அது போல் பின்னூட்டங்கள் அந்த கருத்துக்கான எதிரொலி. என்னளவில் பின்னூட்டங்களுக்கு பதிவுக்குத் தரும் மரியாதையைத் தர வேண்டும். கூடுதலாகத் தரவில்லை என்றாலும் கூட.

படிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் - உங்கள் கருத்துக்களை கட்டாயம் பின்னூட்டமாகச் சொல்லுங்கள். நன்றி.

இலவசக்கொத்தனார் said...

என் கருத்துகள் எல்லாமே தமிழ்மணத்தளவுதான். பூங்கா என்பது அதன் ஆசிரியக்குழுவின் ரசிப்புகள். ஆகையால் அது பற்றி நான் ஒன்றும் சொல்லுவதில்லை. பெரும்பாலான பதிவுகளை நான் தமிழ்மணத்திலேயே படித்து விடுகிறேன். என்னளவில் பூங்கா எனக்குத் தேவையே இல்லை. நான் அதைப் படிப்பதும் இல்லை. அதில் எந்தப் பதிவு வருகிறது, எந்தப் பதிவு ஏன் வரவில்லை என நான் கவலைப்படவும் இல்லை.

Anonymous said...

40 உயரெல்லை என்பது முதல் பக்கத்துக்கு மட்டும்தான். ஒரு எல்லையும் இல்லது 24 மணி நேரத்தில் மறு மொழியப்பட்ட ஆக்கங்களில் பின்னூட்டங்கள் இற்றைப் படுத்தப்படுகின்றனவே. அப்புறம் என்ன பிராப்ளம்?

துளசி கோபால் said...

என்னவோ ஒரு முடிவோடதான் இறங்கியிருக்காப்லெ,இல்லே?

மக்கள் குரல் said...

நீங்கள் சொல்கிற சில விஷயங்கள் புரிகிறது. ஆனால் நீங்கள் சிலவற்றை சரியாக புரிந்து கொள்ளாதது போல தெரிகிறது.

தமிழ்மணம் ஒரு லாப நோக்கம் அற்ற நிறுவனம். ஆனால் அவர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. என்னுடைய இணைய அறிவின் படி தமிழ்மணம்/பூங்கா இணையத்தில் அதிக அளவு வாசகர்களை கொண்ட தளம் என்பதால் என்னுடைய கணக்கு படி சுமாராக ஒரு மாதத்திற்கு $50 செலவாகலாம். இந்திய ரூபாய் கணக்கில் $50 = சுமாராக ரூ2300.00. வருடத்திற்கு 27,000 ரூபாய். ஒரு லாப நோக்கம் அற்ற நிறுவனம் சுமாராக 27,000 ரூபாய் செலவு செய்கிறது என்பது பெரிய விஷயம். இங்கு பலர் தமிழுக்கு சேவை செய்வதாக கூறி தமிழை புத்தகங்களாக விற்கிறார்கள். ஆனால் தமிழ்மணம் தமிழுக்கு சேவை செய்கிறோம் என்று கூறியதில்லை.

இதனால் தமிழ்மணத்திற்கு கிடைக்கும் நன்மை என்ன ? ஒரு விளம்பரம் கூட தமிழ்மணத்தில் இல்லை. கூகுள் விளம்பரம் கூட தமிழ்மணத்தில் இல்லை.

தமிழ்மணத்திடம் கேள்வி கேட்கும் நாம் ஏதாவது உதவியை தமிழ்மணத்திற்கு செய்திருக்கிறோமா ? காசாக இல்லாவிட்டாலும் தமிழ்மணத்திற்கு என்று ஏதாவது நம்மால் முடிந்த உதவி ? தமிழ்மணத்தால் வளர்ந்தோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்களால் முடிந்தது கேள்வி கேட்பது தானா ? வேறு வகையில் யோசித்து பாருங்கள்

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் நம்மைப் போன்ற முழுநேர தொழில் உண்டு. அவர்கள் அதற்கு நேரத்தை செலவிட வேண்டும். குடும்பம் உள்ளது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நாம் அனுப்பும் மின்னஞ்சலுக்கு 24மணி நேரத்தில் பதில் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் ?

தமிழ்மணம் 24x7 Helpdesk வைத்திருக்கிறதா என்ன ?

யார் வேண்டுமானால் ஆலோசனை கூறலாம். ஆனால் செயல்படுத்துவதில் நிர்வாகிகளுக்கு இருக்கும் சிக்கலை நாம் அறிவோமா ?

PS : இந்த பின்னுட்டத்தையும் இது தொடர்பான இன்னும் சில கருத்துக்களையும் இன்று மாலை என்னுடைய பதிவில் எழுதுகிறேன்

இலவசக்கொத்தனார் said...

//40 உயரெல்லை என்பது முதல் பக்கத்துக்கு மட்டும்தான். ஒரு எல்லையும் இல்லது 24 மணி நேரத்தில் மறு மொழியப்பட்ட ஆக்கங்களில் பின்னூட்டங்கள் இற்றைப் படுத்தப்படுகின்றனவே. அப்புறம் என்ன பிராப்ளம்?//

1)முகப்பிற்கு வரும் அத்தனை பேரும் அங்கு செல்வதில்லை.

2)அது பாப் அப் பக்கமாக இருப்பது ஒரு தொந்திரவு.

3)முகப்பைப் பார்த்துவிட்டு அங்கு சென்றால் முகப்பில் பார்த்த பதிவுகள் மீண்டும் அங்கு தெரிவதால் பார்த்தது எது பார்க்காதது எது எனக் குழப்பம்.

4) என் பதிவுக்கு அதிகம் பேர் வந்து பின்னூட்டம் இடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு முகப்பில் இடம் தர மறுப்பது தார்மீக ரீதியில் சரியா என்ற ஒரு சந்தேகம்.

இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அனானி நண்பரே.

Rasigan said...

//
இலவசக்கொத்தனார் said

தமிழ்மணத்தால்தான் இன்று தமிழ்வலைப்பதிவுகளே இத்தனை சுறுசுறுப்புடன் இயங்குகின்றது என்பது எந்த மட்டில் சரி எனத் தெரியவில்லை. இன்று தமிழ்மணத்தில் இல்லாத சிலரைக் கேட்டுப் பார்த்தேன், அவர்களுக்கென ஒரு வட்டம் உருவாகத்தான் செய்கிறது
//

This is completely true vetti.... i got your blog link from my friends circle..(they have not put one single comment on this blog yet.. but still they read your blog..)...i am also sending links to of good blogs like yours etc... to my friends... they are also reading and enjoying....but all of us dont know what is this TAMIL MANAM..

Anonymous said...

//இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அனானி நண்பரே.//
அப்ப இதையும் கேட்டுட்டு மேலே சொல்லிக்கிட்டே போங்க.

இது இப்ப பரிசோதனையில்தானே இருக்கு? அதையும் தமிழ்மணம்தானே சொன்னாங்க. பாக்கலாமே. ஏன்னாக்க முதல்லே 30 தான் உயரெல்லை அதுவும் எல்லா இடத்துக்குமே அதைப் போட்டாங்க. அப்பத்தான் மாடரேஷனுக்கும் விலக்கு அளிச்சாங்கங்கறதையும் ஞாபகம் வச்சுக்குங்க.

பிறகு கொஞ்ச நாள்லேயே அத்த மாத்தி 40 ஆக்கி, மறு மொழியாக்கப்பட்ட ஆக்கங்களிலே அதை முழுக்க எடுத்தாங்களா இல்லையா?

ஏன் முகப்பு மட்டும் பாத்துட்டு போகணும். ஒரு திரட்டியோட முழு உபயோகத்தை எடுத்துக்கணும்னா கொஞ்சம் மேலேயும் போய் பாக்க என்ன தயக்கம்?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\என் பதிவுக்கு அதிகம் பேர் வந்து பின்னூட்டம் இடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு முகப்பில் இடம் தர மறுப்பது தார்மீக ரீதியில் சரியா என்ற ஒரு சந்தேகம்.//

அது மட்டுமல்ல இதனால் தரமான பதிவுகள் காணமுடியவில்லை என்று சொல்லுவதும்...அதிக பின்னூட்டம் வாங்கும் பதிவுகள் ஒன்றுமல்லாததைப் பேசுவதுபோலவும் ஒரு கருத்தைச் சொல்லி இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தது...ஒரு வகையில் சிலர் மனதைக் காயப்படுத்துவதாக நினைக்கிறேன்.

Anonymous said...

//முகப்பைப் பார்த்துவிட்டு அங்கு சென்றால் முகப்பில் பார்த்த பதிவுகள் மீண்டும் அங்கு தெரிவதால் பார்த்தது எது பார்க்காதது எது எனக் குழப்பம்.//
இதுதான் செட் தியரி. உயரெல்லைக்குள்ளே வரும் எல்லா பின்னூட்டங்களும் ரெண்டாம் பக்கத்துலேயும் வருங்கறதை ஞாபகம் வச்சிட்டிருந்தா ஒரு பிராப்ளமும் இல்லையே. ஆனால் ரிவர்ஸ் உண்மையில்லை என்பதையும் ஞாபகம் வச்சுக்குங்க.
நல்லது பாக்கணும்னா கொஞ்சம் பிரயத்தினம் செய்யுங்க.
வாழைப்பழத்தை உறிச்சு உங்க வாயிலே போடுவாங்கன்னு எதிர்ப்பாக்காதீங்க.

Sridhar V said...

//இலவசக்கொத்தனார் said... //

நம்ம குரு வேற களத்துல இருக்காரா... ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போல...

பெரியவங்கள்ளாம் இருக்கற இடத்துல... வெறும் பின்னூட்ட பதிவரா (அப்படியும் சொல்லிக்கலாமில்ல) நாம என்ன கருத்து சொல்லப் போறோம்... அப்படியே அப்பீட்டு!

இலவசக்கொத்தனார் said...

//இது இப்ப பரிசோதனையில்தானே இருக்கு? அதையும் தமிழ்மணம்தானே சொன்னாங்க. பாக்கலாமே. ஏன்னாக்க முதல்லே 30 தான் உயரெல்லை அதுவும் எல்லா இடத்துக்குமே அதைப் போட்டாங்க.//

அது என்ன 30? அது என்ன 40? இதுக்கு பின்னாடி எதாவது விஞ்ஞான பூர்வமான காரணம் இருக்கா? இந்த உயரெல்லைக்கான காரணமே சரியாப் படலைன்னுதானே இந்த கூப்பாடு. முத்துலெட்சுமி என்ன சொல்லறாங்க பாருங்க.

//அப்பத்தான் மாடரேஷனுக்கும் விலக்கு அளிச்சாங்கங்கறதையும் ஞாபகம் வச்சுக்குங்க.//
இது பத்தி நான் என்ன சொல்லி இருக்கேன் பாருங்க. அவங்க வேண்டாமுன்னு சொன்னாலும் இருக்கட்டும் அப்படின்னு சொல்லறவங்கதான் அதிகம். இதை முதல் முறை கொண்டு வந்த போது இந்த அளவு விவாதம் இல்லையே. ஏன்னா அதுக்குப் பின்னாடி இருக்கிற காரணம் கெட்டி.

//ஏன் முகப்பு மட்டும் பாத்துட்டு போகணும். ஒரு திரட்டியோட முழு உபயோகத்தை எடுத்துக்கணும்னா கொஞ்சம் மேலேயும் போய் பாக்க என்ன தயக்கம்?//

நீங்க சொல்லறீங்க. ஆனா பார்க்காம போறவங்கதான் அதிகம். அந்த வாசகர்களை நான் ஏன் இழக்கணும்? அதான் இம்புட்டுக் கேள்வி. :-)

இலவசக்கொத்தனார் said...

//இதுதான் செட் தியரி. உயரெல்லைக்குள்ளே வரும் எல்லா பின்னூட்டங்களும் ரெண்டாம் பக்கத்துலேயும் வருங்கறதை ஞாபகம் வச்சிட்டிருந்தா ஒரு பிராப்ளமும் இல்லையே. //

ஐயா சாமி. ஞாபகம் எல்லாம் இருக்கு. ஆனா பாருங்க. முதல் பக்கத்தில் ஒரு 40 பதிவுகள் வருது. அந்த 40க்கு நடுவில் மாட்டிக்கிட்டு இருக்கிற அதிகப் பின்னூட்டம் வாங்கின பதிவுகளைத் தேடணும்.

இவ்வளவு செஞ்ச திரட்டி அப்போ 40க்கு கீழ், 40க்கு மேல் அப்படின்னு பிரிச்சு ரெண்டு பகுதியாத் தரலாமே. வாசகர்களின் வசதிக்குத்தானே திரட்டி. செட் தியரி எல்லாம் சொல்லித் தரதுக்கு இல்லையே.

//நல்லது பாக்கணும்னா கொஞ்சம் பிரயத்தினம் செய்யுங்க.
வாழைப்பழத்தை உறிச்சு உங்க வாயிலே போடுவாங்கன்னு எதிர்ப்பாக்காதீங்க.//

ஒரு திரட்டியின் வெற்றி அதன் பயன்பாட்டின் எளிமையிலும் அதில் தொடர்ந்து செய்யப்படும் மாற்றங்களிலும்தான் இருக்கு. நாங்க இப்படித்தான் இருப்போம் உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்க என்ற நிலைப்பாடு இருந்தால் அது வெற்றிக்கான வழி இல்லை. ஏற்கனவே ஒருத்தர் போன பதிவில் என்று நினைக்கிறேன். தேன் கூடு டெக்னிக்கலி அட்வான்ஸ்ட் அப்படின்னு சொல்லிட்டார். நாம் வளர்ந்து வரும் தமிழ்மணம் சோடை போகக்கூடாதே என்ற நல்லெண்ணம்தான் இது.

வெட்டிப்பயல் said...

Sridhar Venkat,
இதோ என்னுடைய கடைசி பத்து பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை (நான் போட்டதை சேர்த்து கொள்ளாமல்)

330 டாலர் மில்லியன் எனக்கே எனக்கா? - 38
நாராயண மூர்த்தியை என்ன செய்யலாம் - 39
Devil show Thambi - 34
பாகிஸ்தான் இந்தியாவை வென்றது - 26
Wierd - 32
கொல்ட்டி சில திடுக்கிடும் உண்மைகள் - 87
C தமிழ்- 52
லொள்ளு - 26
அழகு - 24
Creamy layer - 35

Average - 36

நான் பதில் சொன்னேனு வெச்சிக்கிட்டா கூட 72.

அதனால நான் எனக்காக புலம்புகிறேனு கதை கட்ட வேண்டாம்.
எனக்கு எப்பவும் வரும் பின்னூட்டங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.

நான் சொல்வது ஜாலியாக எழுதும் புது பதிவர்களுக்கு இது ஒரு தடைக்கல். அவ்வளவே!!!

தமிழ்மணத்திற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்னு கேட்டா தெரிந்தவர்களிடமும், நண்பர்களிடமும் தமிழ் மணத்தை பற்றி சொல்லி கொடுத்திருக்கிறேன்.

என்னால் முடிந்த அளவு புதிய வலைப்பதிவர்களை தமிழ்மணத்தில் சேர்த்திருக்கேன்.

இன்னிடம் ஏதாவது உதவி எதிர்பார்த்தால் இயன்ற அளவு செய்வேன்.

வெட்டிப்பயல் said...

//தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் நம்மைப் போன்ற முழுநேர தொழில் உண்டு. அவர்கள் அதற்கு நேரத்தை செலவிட வேண்டும். குடும்பம் உள்ளது. இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் நாம் அனுப்பும் மின்னஞ்சலுக்கு 24மணி நேரத்தில் பதில் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் ?//

ஐயா 24 மணி நேரத்துல எதுவும் எதிர்பார்க்கவில்லை.. 15 நாளைக்குள்ள கூடவா ஒருத்தருக்கு நட்சத்திர வாரத்திற்கு உறுதி செய்யுமாறு கேட்கும் மடலுக்கு பதிலளிக்க முடியாது???

அவர்கள் செய்யும் சேவை நிகரற்றது. சில மாறுதல்களும் தேவை. அவ்வளவு தான்

Sridhar V said...

//அதனால நான் எனக்காக புலம்புகிறேனு கதை கட்ட வேண்டாம்.
எனக்கு எப்பவும் வரும் பின்னூட்டங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.
//

இங்கு யாரும் 'கதை கட்ட' வரவில்லை என்று சொல்லத்தான் இந்த பின்னூட்டம்.

//ஆனா என்னை எழுத வைத்த தமிழ்மணமே நான் எழுதுவதை நிறுத்துவதற்கும் காரணமாக இருக்கும் //

நீங்கள் வருத்தப்பட்டு சொன்ன மாதிரி இருந்தது. என்னுடையது தவறான புரிதலாக இருக்கலாம்.

மற்றபடி பின்னூட்டம் வெளியிட்டதற்கு நன்றி!

Anonymous said...

//பிரகாஷ் அவர்களுக்கு, முதலில் தெளிவாக உங்கள் கருத்துக்களை முன் வைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனால் இடையிடையே நாலு வரி கிறுக்கல்கள், பெரிய பதிவர், நாந்தான் டாப்பு என தமிழ் வலைப்பதிவுகளுக்கே உரிய தாக்குதல்கள் செய்யாமல் விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

பிரகாஷ் இந்தமாதிரியெல்லாம் சொல்லியிருக்கிறாரா! இது குறித்தான சென்ற பதிவில் அவரது ஒரு பின்னூட்டம் இருந்தது. அதுதவிர வேறெங்காவது இந்தத் தொனியில் பின்னூட்டம் போட்டிருக்கிறாரா என்று சுட்டிக்காட்ட முடியுமா?

Unknown said...

வெட்டி உங்களுக்கே சுடர் திரும்பி வருது அதனால கேள்விகளுக்கு பதிலை சொல்லி நல்ல புள்ளையா யாருகிட்டயாவது கொடுத்திடு கண்ணு

இலவசக்கொத்தனார் said...

அனானி, அந்த பின்னூட்டத்தில் இருந்த சில வரிகள் பற்றிய என் கண்ணோட்டம்தான் அவை. இந்தப் பின்னூட்டத்தையே அவர் பதிவாகப் போட்டு இருப்பதாகச் சொல்லி உள்ளார்.

Syam said...

என்னமோ எல்லோரும் நல்ல இருந்தா சரி...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வெட்டி :-)

வெட்டிப்பயல் said...

// முத்துலெட்சுமி said...

\\என் பதிவுக்கு அதிகம் பேர் வந்து பின்னூட்டம் இடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு முகப்பில் இடம் தர மறுப்பது தார்மீக ரீதியில் சரியா என்ற ஒரு சந்தேகம்.//

அது மட்டுமல்ல இதனால் தரமான பதிவுகள் காணமுடியவில்லை என்று சொல்லுவதும்...அதிக பின்னூட்டம் வாங்கும் பதிவுகள் ஒன்றுமல்லாததைப் பேசுவதுபோலவும் ஒரு கருத்தைச் சொல்லி இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தது...ஒரு வகையில் சிலர் மனதைக் காயப்படுத்துவதாக நினைக்கிறேன். //

ரொம்ப சரியா சொல்றீங்க முத்துலட்சுமி...

அதிக பின்னூட்டம் வாங்காத பதிவுகள் நல்ல பதிவுகள்னு சொல்ற மாதிரி இருக்கு.

முதல்ல வர 20 பேர் ஆளுக்கு 2 பின்னூட்டம் போட்டாலே பதிவு காணாம போயிடும்...

வெட்டிப்பயல் said...

//மகேந்திரன்.பெ said...

வெட்டி உங்களுக்கே சுடர் திரும்பி வருது அதனால கேள்விகளுக்கு பதிலை சொல்லி நல்ல புள்ளையா யாருகிட்டயாவது கொடுத்திடு கண்ணு //

மகி,
நல்லா மாட்டி விடற மாதிரி கேள்வி கேட்டுட்டு இங்க வந்து நல்ல புள்ளையா கமெண்ட் போட்டிருக்கீங்க.

யாருக்கிட்டயும் கொடுக்க தேவையில்லை.. நம்மளோட முடிஞ்சிடும்...

Anonymous said...

//அனானி, அந்த பின்னூட்டத்தில் இருந்த சில வரிகள் பற்றிய என் கண்ணோட்டம்தான் அவை.//

பலே. ஆனால் //இடையிடையே நாலு வரி கிறுக்கல்கள், பெரிய பதிவர், நாந்தான் டாப்பு என தமிழ் வலைப்பதிவுகளுக்கே உரிய தாக்குதல்கள் //ணு எதும் இருக்கிறதாத் தெரியலியே. எங்களைமாதிரி சாமானியர்களுக்கெல்லாம் புரியாதமாதிரி ஆழக்குத்தெழுத்துக் குத்தியிருக்காரோ என்னமோ. நீங்க சொல்லி பொழிப்புரை குடுத்திருந்தா சரியாத்தான் இருக்கும் கொத்தனார். அட்ஷ்ஷு ஆடுங்க.

SurveySan said...

கை நனச்சாச்சு.

I fully support your views.

ரொம்ப அரதப் பழசான பதிவுகள் காட்டாம இருக்க லிமிட் கொஞ்சம் பெருசா வெச்சுக்கலாம். லிமிட்டே இல்லாம இருக்கரது சரியா இருக்காது.

100 ஓ.கே?