தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, April 01, 2007

மாணவர்கள், ஆசிரியர்கள் யாராவது இருக்கிங்களா???

அன்பு நண்பர்களே!
நான் காலேஜ்ல படிக்கும் போது தமிழ் மீடியத்துல இருந்து ஒரு சில நண்பர்கள் படிச்சாங்க. அவுங்களுக்கு க்ளாஸ்ல ஆசிரியர்கள் இங்கிலிஷ்ல நடத்தும் போது எதுவும் புரியாம கஷ்டப்படுவாங்க. அதையே நாங்க தமிழ்ல சொல்லி கொடுத்தா ஈஸியா புரிஞ்சிக்குவாங்க.

பொதுவா ப்ரோக்ராமிங் லாங்குவேஜ் எல்லாம் நம்ம பசங்களுக்கு புரியற மாதிரி சொல்லி கொடுத்துட்டா அடிச்சிக்கவே முடியாது. ஆனா அதுக்கு தான் கொஞ்சம் கஷ்டம். Balagurusamy படிக்கவே பசங்க கஷ்டப்படறத நான் பார்த்திருக்கேன்.
அதையே ஜாலியா சொல்லி கொடுத்தா புரிஞ்சிக்குவாங்க.

எதுக்குடா இவன் இப்ப மொக்கைய போடறானு யோசிக்கறீங்களா??? திடீர்னு ஒரு யோசனை. வெட்டியா எழுதி கொஞ்ச பேரை சிரிக்க வெச்சிட்டு இருந்தேன். அதை தான் அப்ப அபி அப்பாவும், கண்மணி அக்காவும் ரொம்ப சாதாரணமா பண்றாங்க. கதையெல்லாம் கப்பியும், ஜியும் நம்மல விட அருமையா எழுதறாங்க. டெவில் ஷோ ராமண்ணாவும், தம்பியும் பிரிச்சி மேயறாங்க.

சரி நம்ம அதையெல்லாம் விட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதலாம்னு பாக்கறேன். ஏன் C தமிழ்ல சொல்லி தரக்கூடாதுனு யோசிக்கிறேன். எனக்கும் எல்லாம் கொஞ்சம் மறந்து போச்சி (Testingல இருக்கறதால Programming Language எல்லாம் மறந்து போச்சி. ஆனா திரும்ப படிச்சா ஞாபகம் வந்துடும்)

சும்மா ஜாலியா கதை சொல்ற மாதிரி C சொல்லி தரலாம்னு பாக்கறேன். ஆனா நான் எழுதின சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க தொடர கடைசி வரைக்கும் வடுவூர் குமாரும், குமரனும் மட்டும் தான் படிச்சாங்க. அதுவும் குமரன் நான் புதுசுனு அப்ப என்னை வழி நடத்திட்டு வந்தார். இப்ப அவுங்களும் படிப்பாங்களானு தெரியல. (நான் அவுங்களுக்காக எழுதல)

சரி எனக்கு இருக்கற சந்தேகம் இங்க வலைப்பூவை யாராவது ஸ்டூடண்ட்ஸோ இல்லை ஆசிரியர்களோ படிக்கறீங்களானு தான். நான் இங்க எழுதினா உங்களுக்கு பயனுள்ளதா இருக்குமா? வியலுக்கு இறைத்த நீராக வேணாமேனு பாக்கறேன்.

நான் எழுதறத வெச்சி நீங்க Nasaக்கு ப்ரோக்ராம் எழுத முடியாது. ஆனா உங்க லேப் ப்ரோக்றாம்ஸ் புரிஞ்சி போடற அளவுக்கு சுலபமா சொல்லி தர முயற்சி செய்யறேன். Linked list எல்லாம் ஒரு 50 பேருக்கு சொல்லி கொடுத்திருப்பேன். உங்க கருத்த சொல்லுங்க.

ஒருத்தருக்கு பயனுள்ளதா இருந்தாக்கூட போதும் நான் தொடர் எழுத ரெடி. ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாளைக்கு வழக்கமா வெட்டி போஸ்ட் பார்க்க முடியாது.

67 comments:

Anonymous said...

Go Ahead Mr.Vetti...!

Rasigan said...

yenya yen??? neeyuma.... karuthu solladha oru edam vetti blogthan appadinnu perumaiya solli ennoda friendsku ellam un blog link annupi irrukken... endha samaiyathula vandhu eppadi pesura... anyway you have good skill to tie people to your writing so if it is useful to someone then continue... but naan kandippa padikka matten... endha aaniyathana eppa paathalum officela pudunga vendi kadaku....

மு.கார்த்திகேயன் said...

நல்ல ஐடியா வெட்டி.. இப்ப இல்லைனாலும் பின்னால என்னால ஏதாவது பண்ண முடிஞ்சா சொல்றேன்..

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

Sridhar Harisekaran said...

வெட்டி.. இந்த மாதிரி வெட்டியா எழுதறதோட, இப்படியும் சேர்த்து எழுதினா நல்லா தான் இருக்கும். இந்த பகுதி கண்டிப்பா எனக்கு பயன் இல்லாம போனாலும், பின் வரும் சந்ததிகள் இதை படிச்சு தெரிஞ்சிக்க வசதியா இருக்கும்.

இந்த பகுதி புதுசா ஒரு பதிவுல எழுத ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்..

பொன்ஸ்~~Poorna said...

வெட்டி, நல்ல முயற்சி.. எழுதுங்கப்பா.. இப்பத்திக்கு யாரும் படிக்கலைன்னா கூட பரவாயில்லை. பத்து வருசம் கழிச்சி பாலகுருசாமி மாதிரி பாலாஜி நோட்ஸ் இருக்கான்னு காலேஜுகள்ல கேட்காமயா போய்டுவாங்க?

நான் தினம் வரேன். அட்டண்டென்ஸ் கண்டிப்பா உண்டு.. ஏதோ என்னாலானது... ஓகே தானே?

Unknown said...

நல்ல காரியம் என்று நல்லா தெரியும் காரியத்துக்கு எதுக்கு சார் கேள்வி.
உடனே ஆரம்பிச்சுடுங்க. ஜமாய்ங்க.

Anonymous said...

hi
am working as a teacher
i happened to read ur article.
its really surprise that just a week before i started to learn c-prog.hope it would me more usefulto me if u start writing about programming in c through ur blog.

Anonymous said...

நல்ல முயற்சி வெட்டி. பொன்ஸ் சொன்ன மாதிரி இன்னிக்கு இல்லாட்டியும் பத்து வருசத்துக்குள்ளேயாவது செமஸ்டருக்கு முந்தின நாள் வெட்டி பிளாகே கதினு நம்ம பசங்க மாறிடுவாங்க ;)

நாந் டெய்லி present sir சொல்லாட்டியும் தொடர்ச்சியா படிப்பேன்.

Anonymous said...

நல்ல முயற்சி வெட்டி. பொன்ஸ் சொன்ன மாதிரி இன்னிக்கு இல்லாட்டியும் பத்து வருசத்துக்குள்ளேயாவது செமஸ்டருக்கு முந்தின நாள் வெட்டி பிளாகே கதினு நம்ம பசங்க மாறிடுவாங்க ;)

நான் டெய்லி present sir சொல்லாட்டியும் தொடர்ச்சியா படிப்பேன்.

CVR said...

மிக நல்லா யோசனை.
என் ஆதரவு கண்டிப்பாக உண்டு!!இப்பொழுதில்லாவிட்டாலும் வருங்காலத்தில் இது மிக உபயோகமாக இருக்கும் என்பதிxxல் எந்த வித ஐயமும் இல்லை.
வாழ்த்துக்கள்!! :-)

Boston Bala said...

பொன்ஸை வழிமொழிகிறேன்

Sridharan said...

Please start ASAP...

கதிர் said...

நீ எழுதுப்பா செல்லம். நாங்கூட படிக்கறேன்.

Rasigan said...

//பொன்ஸ் said...

இப்பத்திக்கு யாரும் படிக்கலைன்னா கூட பரவாயில்லை. பத்து வருசம் கழிச்சி பாலகுருசாமி மாதிரி பாலாஜி நோட்ஸ் இருக்கான்னு காலேஜுகள்ல கேட்காமயா போய்டுவாங்க?
//


eppadi usuppethiye udamba ranagalama aakiduveenga pola..... motham evalavu per kelambi irrukkenga....

Anonymous said...

தயவு செய்து ஆரம்பிக்கவும்.
என்னைப் போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவாய் அமையும்.

நான் முதல் பின்னூட்டம் இட்டாலும் தொடர்ந்து உஙள் பதிவுகளைப் படித்து வருகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னிக்கி இல்லன்னாலும் ஒரு நாளைக்கு, Googleஇல் Balaji C Notes, Balaji C++ Notes, Balaji RDBMS Notes என்று தேடினால், கிட்டும் அல்லவா?

தமிழ், ஆங்கிலம் இரண்டுலும் நல்லா tag போட்டு எழுதுங்க பாலாஜி. எதில் தேடினாலும் கிடைக்கிற மாதிரி இருந்துச்சுன்னா கிராமப்புற மாணவர்கள் கண்ணுக்குச் சட்டுன்னு புலப்படும்!

பாலாஜி பதிப்பகம் தொடங்கட்டும்!:-) வாழ்த்துக்கள்!!

Jayaprakash Sampath said...

அருமை... செய்ங்க... நான் வந்து அட்டெண்டென்ஸ் போடறேன்.

// நான் இங்க எழுதினா உங்களுக்கு பயனுள்ளதா இருக்குமா? வியலுக்கு இறைத்த நீராக வேணாமேனு பாக்கறேன்//

இணையத்திலே நாம தேடறப்போ, சட்டு சட்டுன்னு நமக்குத் தேவையானது வந்து கொட்டுதில்லையா? நாம தேடுவோம்னு நினைச்சா யார் யாரோ, இணையத்திலே, உருப்படியான பல விஷயங்களை அப்லோட் செய்திருக்காங்க? இல்லே இல்லியா? எழுதுங்க... ' learn C programming in Tamil' ன்னு உள்ளிட்டு யாராச்சும் கூகிள்லே தேடறப்ப, இந்தப் பதிவு மேல வந்து நிக்கிற மாதிரி செட் பண்ணிக்கிடலாம் :-)

//நான் எழுதின சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க தொடர கடைசி வரைக்கும் வடுவூர் குமாரும், குமரனும் மட்டும் தான் படிச்சாங்க//

உங்க வலைப்பதிவிலே, வலப்பக்க , இடப்பக்க கவனச்சிதறல்கள், பின்னூட்ட சமுத்திரம் போன்றவற்றை எல்லாம் தாண்டி, இதை வந்து தேடிக் கண்டு பிடிக்கிறது கஷ்டம். அதனாலே சுட்டி கொடுங்க... முடிஞ்சா, தொடர் மொத்தத்தையும், பிடிஃப் கோப்பாக்கி, கண்ணுல படற இடத்திலே வெச்சிங்கன்னா, நிறையப் பேர் பலன் அடைவாங்க...

வாழ்த்துக்கள் & நன்றி.

Anonymous said...

Unga s/w engineer aagalaam vaanga thodara recentaa dhaan padichaen (ellaa partsayum - avlo vettiyaa neengannu kaekaadheenga!)
Ippo illenaalum varumkaalathulla yaaravadhu unga C programminga fullaa padipaanga...

Unga usual stylayum continue pannunga - oru programming blog oru vetti blog indha maadhiri - avasiyam padipaanga.

Ram Ravishankar said...

ஏற்கனவே நெறய பேர் இங்கே சொல்லிட்டாங்க .... நல்லா எழுதுங்க வெட்டி! உங்க "Software இஞ்சினீயர் ..." பதிவ விரும்பி முழுசா படிச்சேன்.. இதையும் கண்டிப்பா படிப்பேன். Good luck!

Anonymous said...

very good try... pls continue..

Thanks

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ரொம்ப நல்ல விஷயம் வெட்டி. தினமும் இல்லைன்னாலும் அப்பப்ப வந்து எட்டிப்பார்க்கிறேன்.

தனியொரு பதிவு தொடங்கி எழுதுவதைப்பற்றி யோசியுங்களேன்.

-மதி

தென்றல் said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

மதி அவர்கள் சொன்ன மாதிரி, தனியொரு பதிவு தொடங்கினா நல்லா இருக்குமோ?

தற்சமயம் மாணவர்கள் (அ)ஆசிரியர்கள் இல்லைனா ... என்ன, இனிமேல் பதிவ படிக்க/பார்க்க சொல்லலாம் இலலையா?

மீண்டும் ஒருமுறை... வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

வகுப்புக்கு நானும் வரலாமா வெட்டி?

G3 said...

Naan admissionkku ready :-)

College padichadhukkappuram try pannavae illa.. vera platformla vela paarunnu thalli vittutaainga.. unga punyathula edho oru F5 thatti mandaila irukkaradha refreshaavadhu pannikaren :-)

வெட்டிப்பயல் said...

ஒரு வழியா வேலை முடிச்சிட்டு வந்துட்டேன்... இந்த வாரம் பார்த்து சனி, ஞாயிறு ரெண்டு நாளும் ஆணியா போச்சு :-((

மதி அக்கா சொன்ன மாதிரி தனி வலைப்பூ தான் ஆரம்பிக்க போறேன். இந்த ப்ளாகுக்க வந்தா பசங்க கொல்ட்டி, பிரிவு, நெல்லக்காய் படிச்சிட்டு போயிடுவாங்க (பாம்பின் கால் பாம்பறியும் :-))

எனக்கும் நிறைய மறந்து போச்சி... படிச்சி தான் எழுதனும். நான் எங்கயாவது தப்பு பண்ணா ஃபீல்ட்ல இருக்கறவங்க வந்து எப்படியும் திருத்துவீங்கனு நம்பிக்கை இருக்கு.

எப்படியும் தமிழ் மீடியத்துல இருந்து வரவனுக்கு மொழி ஒரு தடையா இருக்கக்கூடாதுனு ஒரு எண்ணத்துல தான் ஆரம்பிக்கிறேன். எப்படியும் இந்த வார இறுதிக்குள்ள முதல் பதிவ போட முயற்சி செய்யறேன். உங்க எல்லாருடைய ஆசியும் இருக்கும்னு நம்பறேன்...

Anonymous said...

hi vetti
ennaku koda oru ennam c,vb,.net ellam tamil-l book mathiri romba easy eluthanum endru. nanum unga koda some topics share panni eluthava? entha muyarchi vettri adaiyum endru ninaikkiren.
eluthalama?

வடுவூர் குமார் said...

என்ன பாலாஜி இப்படி சொல்லிட்டீங்க!!!
சொல்லுங்க சொல்லுங்க..காத்திருக்கோம்.
என்னுடைய கணினி மொழி பதிவில் கூட உங்கள் பக்கங்களைத் தான் சுட்டி கொடுத்துள்ளேன்.
அப்படி இப்படி என்று c++ யில் பாதி கிணறு தாண்டியுள்ளேன்.
C முடிச்ச கையோட ++ஐயும் பிச்சி போடுங்க.

வெட்டிப்பயல் said...

// Nakkeeran said...

hi vetti
ennaku koda oru ennam c,vb,.net ellam tamil-l book mathiri romba easy eluthanum endru. nanum unga koda some topics share panni eluthava? entha muyarchi vettri adaiyum endru ninaikkiren.
eluthalama? //

தாரளமா...
ஊர் கூடி இழுத்தா சீக்கிரம் இழுக்கலாம் இல்லை. தாரளமா சேர்ந்து எழுதலாங்க.

தனிமடல் அனுப்ப முடியுமா???

balaji.manoharan@gmail.com

Anonymous said...

Thanks vetti
rougha konjam eluthi vaithu irruken. thedanum appuram tamila type pannaum(romba kastam). I am not a blogger. just reader that's all.

Anonymous said...

12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பாடம் பயின்றவன் நான். கல்லுரியில் ஆங்கிலம் வழி கல்வியால் சற்று தடுமாறித்தான் போனேன். அதுவும் நான் படித்தது வடமாநிலத்தில்.

அப்பொழுது தமிழ் கம்ப்யூட்டர்ஸ் என்ற மாதம் இருமுறை இதழ் வந்து கொண்டிருந்தது. அது எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. அதில் BASIC, C, Fortan எல்லாம் தொடராய் வந்து என் programing திறனை மேம்படுத்தியது.

ஆனால் எனக்கு தெரிந்தவரை தமிழில் இணையம் வாயிலாக C - மொழி சொல்லிதந்தாக எனக்கு நாபகம் இல்லை.

தங்களது முயற்சி கண்டிப்பாக பயன்னுள்ளதாய் அமையும். வாழ்த்துக்கள் பாலாஜி (இதுதான் தங்களது பெயர் என்று நினைக்கின்றேன்).

Premma said...

Hi Vetti,
I know java. but I have attended 5 courses for c (at differend period of time)but never was able to complete even one. Whoever taught me c, have concluded that I can never learn c. But Now Iam ready for 6th attempt to learn C.

இராம்/Raam said...

பாலாஜி,

நல்ல முயற்சிப்பா... நானும் இதேமாதிரி நம்ம செல்லம் லினக்ஸ் பத்தி எழுதனுமின்னு ஐடியா இருக்கு... தனியா பிளாக் ஆரம்பிக்கிற ஐடியா இருத்துச்சுன்னா சொல்லுப்பா, லினக்ஸ், XML,Perl script பத்தி எழுதி அனுப்புறேன்....

Anonymous said...

No Doubt Balaji! Definitely it will be useful ..Go Ahead :) All the Best - Meena

dubukudisciple said...

seekiram ezhunthang vetti.. naanum padichi iruken... suttama nyabagame illa

கோபிநாத் said...

நல்ல முயற்சி பாலாஜி

வாழ்த்துக்கள் ;-)))

நானும் படிக்கிறேன்.

யு.எஸ்.தமிழன் said...

நல்ல காரியம், சீக்கிரம் செய்யுங்க! சில வருடங்களுக்கு முன் இதை யாரோ (ஜாவா பையன் / ஜாவா தமிழன் என்று நினைவு) துவங்கியதாக நினைவு. தமிழ்.நெட் தளங்களில் ஒரு முறை துழாவி விடுங்களேன். ஏற்கனவே ஒருவர் துவங்கிய திட்டமென்பதால் அவருடைய முயற்சியும் வீணாகாமல் இருக்கும். மதி கூறியதைப்போல தனி தளத்தில் துவங்குங்கள். 'சுவடு' சங்கர் சில வருடங்களுக்கு முன் இயற்பியல் பாடங்களை எளிய தமிழில் தர முயன்றார். அவருடைய நடையும் மிக நன்றாக இருந்தது. ஒரு ஒப்புமைக்காக அவருடைய படைப்புகளையும் படித்துப்பாருங்கள்.

மீண்டும், முயற்சிக்கு என் வாழ்த்துகள்!

யு.எஸ்.தமிழன்

யு.எஸ்.தமிழன் said...

தொடர்புடைய கார்த்திக்ராமாஸின் சுட்டி.

http://karthikramas.blogdrive.com/archive/57.html

தருமி said...

முதல் இரண்டு பதிவு கட்டாயம் படிப்பேன்.
அதுக்குப் பிறகு..?

ஏதாவது தலைகால் புரிஞ்சா.. தொடர்ரதாக முடிவு..

Arunkumar said...

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் Vetti

இலவசக்கொத்தனார் said...

வெட்டி,

C சொல்லித்தரத்துக்கு முன்னாடி A,B எல்லாம் சொல்லித் தர மாட்டீங்களா?

அதை ஆரம்பிச்ச பின் இதை நிறுத்துனீங்கன்னா, ஆட்டோ வரும்.

மொத்தத்தில் சீக்கிரம் ஆரம்பியுங்க. அப்படியாவது க.கை.நா. ஆன என்னை மாதிரி ஆளுங்களுக்கு கரை தெரியுதான்னு பார்க்கலாம்.

Syam said...

வெட்டி, அருமையான யோசனை & முயற்ச்சி...கண்டிப்பா எழுதுங்க...நிறைய பேருக்கு...அதிலும் rural area ல இருந்து வர மாணவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்....

Syam said...

உங்களோட சாப்ட்வேர் இண்ஜியர் ஆகலாம் வாங்க தொடரோட லின்க் நான் நிறைய பேருக்கு அனுப்பி இருக்கேன்...அவங்க படிச்சு பயன் அடைஞ்சு இருக்காங்க....கண்டிப்பா இதுவும் நல்ல பலன் தரும் நிறைய பேருக்கு....

Syam said...

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பு இல்ல....

Syam said...

//பத்து வருசம் கழிச்சி பாலகுருசாமி மாதிரி பாலாஜி நோட்ஸ் இருக்கான்னு காலேஜுகள்ல கேட்காமயா போய்டுவாங்க//

உண்மை உண்மை...:-)

Anonymous said...

u r @ right time vetti!!
i got some probs with my studies....
but not in "c"
in "java" so will u plz do some thing for that

Anonymous said...

enna ipdi ketutinga! naan irukkene!! unga software engg agalam thodarai kooda naan padichene :) seekiram ezhudunga!

-porkodi

லக்ஷ்மி said...

நல்ல சிந்தனை. தொடங்குங்கள் பாலாஜி. ஒரு சின்ன திருத்தம் - அது வியலுக்கு இறைத்த நீர் இல்லை. விழலுக்கு இறைத்த நீர். மாத்திடுங்களேன்.

Raji said...

kandippa neraya paerukku payan ulladha irukkum..
Hats off to ur idea:)

Anonymous said...

main()
{
printf("please start writing. If it is a success then we should start writing all techincal subjects in tamil.");
}

குமரன் (Kumaran) said...

வெட்டி. அறிவியல் தமிழுக்கு இந்த மாதிரி சிறு சிறு முயற்சிகள் தான் வழி வகுக்கும். 'தமிழ் அறிவியல்'ன்னு ஒரு பதிவு தொடங்கி எந்த இடுகையும் இடாமல் இருக்கிறது. தனிப்பதிவாகத் தொடங்கி எழுதுவதென்றால் சொல்லுங்கள். அழைப்பு அனுப்புகிறேன். அந்தப் பதிவையே உங்கள் சொந்தப் பதிவாகக் கொண்டு அதில் எழுதலாம்.

குமரன் (Kumaran) said...

//வெட்டியா எழுதி கொஞ்ச பேரை சிரிக்க வெச்சிட்டு இருந்தேன். அதை தான் அப்ப அபி அப்பாவும், கண்மணி அக்காவும் ரொம்ப சாதாரணமா பண்றாங்க. கதையெல்லாம் கப்பியும், ஜியும் நம்மல விட அருமையா எழுதறாங்க. டெவில் ஷோ ராமண்ணாவும், தம்பியும் பிரிச்சி மேயறாங்க.

சரி நம்ம அதையெல்லாம் விட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதலாம்னு பாக்கறேன்.//

அப்ப அபி அப்பா, கண்மணி, கப்பி, ஜி, ராம், தம்பி இவங்க எழுதுறதெல்லாம் பயனில்லாததுன்னு சொல்றீங்க. அப்படித் தானே? :-)

//(நான் அவுங்களுக்காக எழுதல)//

எல்லாம் நேரம். அம்புட்டு தூரம் ஆகிப் போச்சு. :-(

Anonymous said...

hello vetti anna,

ippathan oru nalla kariyam panna poringa...all the best...niraya eluthunga....

நாமக்கல் சிபி said...

//5:58 மாணவர்கள், ஆசிரியர்கள் யாராவது இருக்கிங்களா??? (52) :

நாமக்கல் சிபி//

என்னங்க இது இந்தப் பதிவும் தமிழ் மணத்துல என் பேர்ல தெரியுது?

குலவுசனப்பிரியன் said...

வெட்டி,

இதற்கெல்லாம் தேவை இருப்பதாக எனக்கு இதுநாள்வரைத் தெரியவில்லை.
என் உறவினர்கள் பலபேர் "எதோ வீட்டில் சேர்த்துவிட்டார்கள்" அதனால் படிக்கிறேன் என்ற அளவில்தான் இருக்கிறார்கள். கல்லூரிப் பாடத் திட்டத்திலும் "Visual Basic" வெறும் தேற்றையாகத்தான் (theory) இருக்கிறது. செயல்முறை வகுப்புகள் இல்லை என்று சொன்னார்கள். தீப்பெட்டிகளை அடுக்கி பொம்மை செய்வதுபோல, சில விசைகளை (widgets) கணனி சுட்டியால் சேகரித்து அவற்றின் பண்புகளை (properties) சிறிது மாற்றி புதிய நிரல்களை உருவாக்க உதவும், ஒரு கட்டமைப்பும் (structure) இல்லாத, நிரல் மொழியை பொறியியல் கல்லூரியில் பாடமாக வைத்து, அதையும் கண்ணிலேகூட காட்டாமல் என்ன சொல்லித்தர முடியும்? சரிதான் கல்லூரிப் படிப்பெல்லாம் இன்னும் ஏட்டு சுரைக்காய்தான் போல என்று நினைத்துக் கொண்டேன்.

நீங்கள் எழுதிய "மென்பொருள் பொறியாளர் ஆகலாம் வாங்க" தொடர் பதிவுகளைப் படித்துத்தான் இன்னமும் "சி" நிரல் மொழிக்கு (C programming language) மதிப்பு இருப்பது தெரிந்தது.

என்னைக் கேட்டால் "சி" படிக்க "The C Programming Language" Brian W. Kernighan and Dennis M.Ritchie புத்தகத்திற்கு நிகர் வேறு இல்லை என்பேன். இந்த மொழியை உருவாக்கியவர்களே எழுதியது.

மொத்த புத்தகமும் உள்ளடக்கப் பக்கங்களையும் சேர்த்து 272 பக்கங்கள்தான். அதிலும் முதல். 7 அத்தியாயங்கள் அடங்கிய 166 பக்கங்களைப் படித்தாலே போதும். நீங்களும் அதை சார்ந்து எழுதினால் நன்று.

கணினி மென்பொருள் படிக்கும் மாணவர்கள், முதலில் பைத்தான் (Python) நிரல் மொழியைப் படித்தால் நிரல் மொழிகளின் அடிப்படை எளிதில் விளங்கும். உங்கள் முயற்சி
"கணனி விஞ்ஞானி போல் சிந்திப்பது எப்படி" பைத்தான் மூலம் விளம்புவோம் - "How to Think Like a Computer Scientist" - Learning with python http://www.ibiblio.org/obp/thinkCSpy/ -
என்ற புத்தகத்தைத் தமிழில் தர தட்டெழுதும் இந்தத் தருணம் என்னைத் தூண்டுகிறது.

surya said...

its a good attempt.try and start as early as possible.best wishes

Thillakan said...

where is other posts?

Viji said...

நல்ல முயற்ச்சி. கலக்குங்க.

கோழை said...

வெட்டி இன்னமும் தலைப்பும் அறிமுகமும் எழுதப்பட்ட தமிழில் "C" அப்படியே உள்ளது எப்பொழுது எழுத ஆரம்பிப்பதாய் உத்தேசம்??

MSATHIA said...

இது என்ன ஆச்சு..

உசிலை விஜ‌ய‌ன் said...

C++ தமிழில் இருக்கு பாருங்க
http://tvijayan.tripod.com

SOLLARATHUKU OONUM ILLA said...

Hello Mr.Vetti @ Gopinath

You done a great job done it be qick to teach C and C++ it is not enouth the mordern world vetti so plz think about many of them ask Java and visuval basic and I want one software Dreemweever like that ect so in the bloger IT people get to gather this point of view make a seprate blog open and wirte all the things in easy Tamil it not Ruural people in future studnet think to read to easy their own mother tang

thank you very much to share my idea with you.

yours new good Friend

siva
pondicherry.

Anonymous said...

ஆரம்பிச்சாச்சா ?

Mugunth Kumar said...

Mr Vetti,
you can write it here...
http://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

Tamil Wikibooks la eluthi, unga blog la link pannikonga...

atleast everyone can contribute to it...

ஜான் said...

it's fantastic news for everybody who trying to learn c or the people who in the beginner state .
we need you to write about c.And made us better in
c.

Anonymous said...

You are doing wonderful job.I'm a beginner in learning programming language. I have read all your blog in one breath. People like me will get some help if you share your knowledge in programming Language.

Subash said...

இது எப்போது ஆரம்பிக்கும்?
மீ த வெயிட்டிங்கு!!!

Subash said...