தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, March 18, 2007

நூத்தன சம்வச்சரா சுபாகான்ஷலு!!!

நண்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.உகாதி - ஆந்திர புத்தாண்டு. இந்த நாளில் வெல்லம், புளி, மாங்காய் மற்றும் வேப்பம் பூ சேர்த்து பச்சடி செய்வார்கள். அது உகாதி பச்சடி எனப்படும். அதன் சுவையை வைத்தே அந்த ஆண்டு எப்படி இருக்கும் என ஒரு நம்பிக்கை. (வெல்லம் சேர்த்து போட்டா எப்படியும் இனிப்பு அதிகமாத்தான் இருக்கும்).

அதாவது பல சுவைகள் இதில் இருப்பது போலவே நல்லது கெட்டது வாழ்வில் கலந்திருக்கும் என்பதை உணர்த்துவது தான் உகாதி பச்சடி. விவரம் தெரிந்தவர்கள் மேலும் விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Wish you all happy Ugadi...

நூத்தன சம்வச்சரா சுபாகான்ஷலு!!!

38 comments:

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, ஆமா இப்போதான் சன் டீவியில் பார்த்தேன். வருடப் பிறப்பி திங்களா செவ்வாயான்னு ஒரே கன்பியூஷ்னாமே?!

அது போகட்டும். நீ இந்த மாதிரி எல்லாம் சொல்லுவ, எழுதுவ, ஜாங்கிரி ஜாங்கிரியாப் படம் போடுவ, ஆனா நாங்க மட்டும் கொல்டி உண்மைக் கதையான்னு கேட்டா அவ்வ்வ்வ்வ்வ்வுன்னு அழுவ.

நல்லா இருடா சாமி!! ஆங். அப்புறம் உமக்கும் உம் 'சுற்றத்தாருக்கும்' எனது புது வருட வாழ்த்துக்கள்!! :)

நெல்லை காந்த் said...

Congrats கொல்ட்டி Balaji... Today onwards ur are கொல்ட்டி Balaji rather than Vetti Balaji...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

வெட்டி, ஆமா இப்போதான் சன் டீவியில் பார்த்தேன். வருடப் பிறப்பி திங்களா செவ்வாயான்னு ஒரே கன்பியூஷ்னாமே?!
//

இது என்ன புது கன்பியூஷன் :-(
சரி நம்ம பதிவு போட்டாச்சு. அதனால இன்னைக்குத்தான் :-))

//
அது போகட்டும். நீ இந்த மாதிரி எல்லாம் சொல்லுவ, எழுதுவ, ஜாங்கிரி ஜாங்கிரியாப் படம் போடுவ, ஆனா நாங்க மட்டும் கொல்டி உண்மைக் கதையான்னு கேட்டா அவ்வ்வ்வ்வ்வ்வுன்னு அழுவ.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தங்கசிக்காக்கூடத்தான் சைனிஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொன்னாங்க...//
நல்லா இருடா சாமி!! ஆங். அப்புறம் உமக்கும் உம் 'சுற்றத்தாருக்கும்' எனது புது வருட வாழ்த்துக்கள்!! :) //
மிக்க நன்றி கொத்ஸ்...

உங்கள் நண்பன் said...

திங்கள் கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்று கேள்விப்பட்டதும் , உடன் நினைவிற்கு வந்தவர் வெட்டி தான், நிச்சயம் தாங்கள் பதிவிடுவீர்கள் என்று நினைத்தேன், நடந்தது....

உங்களுக்கும், உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

(ட்ரீட் எங்கே? வழக்கம் போல் பார்க் இன் ஹோட்டல் முன்னால இருக்கிற கரும்பு ஜீஸ் கடைக்கு வந்திடவா? இல்லை புது இடமா?)

போன தபா பாண்டிப் பய பிறந்த நாளுக்கு தலையக் கூப்பிடாம தண்ணியப் போட்டதுக்கே தனியா பதிவு எழுதி கூப்பாடு போட்டாரு, இந்த தபா மறந்திடாம அவரையும் கூப்டுக்கலாம்.


அன்புடன்...
சரவணன்.

வெட்டிப்பயல் said...

//நெல்லை காந்த் said...

Congrats கொல்ட்டி Balaji... Today onwards ur are கொல்ட்டி Balaji rather than Vetti Balaji... //

நெல்லைகாந்த் இதுக்கு பின்னாடி ஒரு பெரிய சோகக்கதையே இருக்கு... பின்னாடி ஒரு நாள்ல சொல்றேன்...

(புது கதை ரெடியாயிடுச்சி மக்கா... சீக்கிரம் வரும்)

உங்கள் நண்பன் said...

பாலாஜி, பதிவுல படத்தோட போட்டிருந்தியே ஒரு சாமியார் அக்கா அவங்களை இன்னைக்கு மீட் பண்ண முடியுமானு பாண்டி கேட்கச் சொன்னான்...:))))


அன்புடன்...
சரவணன்.

அபி அப்பா said...

வெட்டி தம்பிக்கு யுகாதி வாந்த்துக்கள்:-))

குறிப்பு: இதில் எந்த உள்குத்தும் இல்லை

வெட்டிப்பயல் said...

எலேய் சரவணா,
உனக்கு ஏன் ஞாபகம் வராது??? ஆப்பு அடிக்கனும்னா சரியா யாருக்கு அடிக்கனும்னு ஞாபகம் வந்துடுமே!

சைனிஸ் நியூ இயருக்கு ஒருத்தவங்க போட்டாங்களே அவுங்களை யாரும் பிடிக்கல...

அப்பாவி பையன் என்னைய பிடிச்சிக்கறீங்க...

//பாலாஜி, பதிவுல படத்தோட போட்டிருந்தியே ஒரு சாமியார் அக்கா அவங்களை இன்னைக்கு மீட் பண்ண முடியுமானு பாண்டி கேட்கச் சொன்னான்...:))))//
அதெல்லாம் முடியாதுப்பா.. இன்னைக்கு குருஜிக்கு முக்கியமான மீட்டீங் இருக்கு... யாரோடனு கேக்கறியா???

வேற யாரு தலைமை சீடன் என்னோடத்தான் ;)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

வெட்டி தம்பிக்கு யுகாதி வாந்த்துக்கள்:-))
//
அண்ணா,
அது யுகாதி இல்லை. உகாதி :-)
தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

//
குறிப்பு: இதில் எந்த உள்குத்தும் இல்லை //

ரொம்ப முக்கியம்!!! ஏன் இப்படி எடுத்து கொடுக்கறீங்க???

கோபிநாத் said...

வெட்டி
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-))

சரி ட்ரீட் எங்கே ???

அபி அப்பா said...

//வெட்டி
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-))

சரி ட்ரீட் எங்கே ???//

கோபிதம்பி! நக்கலா?

அபி அப்பா said...

//வெட்டி
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-))

சரி ட்ரீட் எங்கே ???//

கோபிதம்பி! நக்கலா?

Unmai said...

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

தம்பி said...

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிட்டியா மேன்??

G.Ragavan said...

அடடே! இன்னைக்கு ஒங்க ;-) உகாதி திருநாளாச்சே. உகாதி ஷுபாகாஞ்சனலு.

எங்க ஊர்லயும் இன்னைக்குப் புத்தாண்டுதான். ஹார்திக்க உகாதி ஷுபாஷைகளு

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எப்படியும் உங்க கிட்ட இருந்து யுகாதி பதிவு வரும்னு நினைச்சேன்!

உகாதி பச்சடி பாக உந்திப்பா பாலாஜி. பதிவு கீழே கை நனைச்சிட்டுப் போங்கன்னும் போட்டிருக்கீங்க! ரொம்ப நன்றி!

பாஸ்டன்ல யுகாதிக்கு நீங்க எங்க கை நனைச்சிங்க? :-)

பாலராஜன்கீதா said...

//சைனிஸ் நியூ இயருக்கு ஒருத்தவங்க போட்டாங்களே அவுங்களை யாரும் பிடிக்கல...

அப்பாவி பையன் என்னைய பிடிச்சிக்கறீங்க...
//

கொல்ட்டி என்று கதைவி்ட்டது யார் ?

தேசமுதுரு - மாபெரும் வெற்றிப்படம்

சைனிக்குடு - போக்கிரியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு நடித்து வெளியாகியிருக்கும் படம்

அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு "சமரசிம்மா ரெட்டி".

அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். காட்சிக்கு காட்சி நன்றாக இருக்கும். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை...

தெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன. அதில் குறிப்பிடத்தக்கவை "ஆ நலுகுறு" , "அனுகோக்குண்ட ஒக ரோஜு" மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் "பொம்மரில்லு".

இப்படி எல்லாம் எழுதியது யார் ?
:-)))

சந்தோஷ் aka Santhosh said...

பாலாஜி,
உகாதி நாளைக்குத்தான்.
//சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிட்டியா மேன்??//
இது என்ன புது கதையல்ல நிஜமா இல்ல இருக்கு.
//(புது கதை ரெடியாயிடுச்சி மக்கா... சீக்கிரம் வரும்)//
தம்பி சொன்னது தானா இது?

துளசி கோபால் said...

நம்மூட்டுக்கேலண்டர்லே இன்னிக்குத்தான் யுகாதின்னு போட்டுருக்கு.
அப்படியே வச்சுக்கலாமுன்னு இருக்கேன்.

உங்களுக்கும் ஹேப்பி யுகாதி.

இன்றைய ஸ்பெஷல்........?

உங்க பதிவுலே இருந்த பச்சடிதான்:-))))

ச்சும்மாப் பார்க்க மட்டுமே. அனுபவிக்க இங்கே வெல்லம், வாழைப்பழம் மட்டுமே
இருக்கு.

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

வெட்டி
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-))

சரி ட்ரீட் எங்கே ??? //

அதுதான் போட்டோல இருக்கே... சாப்பிட்டு என்ஜாய் பண்ணு ;)

பக்கத்துல இருக்கவங்களுக்கும் கொடுத்துட்டு சாப்பிடு...

வெட்டிப்பயல் said...

// Unmai said...

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி உண்மை... தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிட்டியா மேன்?? //

நீ அடங்கவே மாட்டியா???

உன்னைய போய் நல்லவன்னு சொல்லிட்டு இருக்காரு பாரு தொல்காப்பியன் அண்ணன். அவரை சொல்லனும்...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

அடடே! இன்னைக்கு ஒங்க ;-) உகாதி திருநாளாச்சே. உகாதி ஷுபாகாஞ்சனலு.
//

இது ரொம்ப ஓவர்... அது என்ன எங்க உகாதி??? இருந்தாலும் வாழ்த்துக்களுக்கு நன்றி :-)

//
எங்க ஊர்லயும் இன்னைக்குப் புத்தாண்டுதான். ஹார்திக்க உகாதி ஷுபாஷைகளு //
அதே அதே... கன்னடம் கொத்தில்லா :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

எப்படியும் உங்க கிட்ட இருந்து யுகாதி பதிவு வரும்னு நினைச்சேன்!
//
ஏன் இப்படி??? மக்கள் என்ன நினைப்பாங்க???

//
உகாதி பச்சடி பாக உந்திப்பா பாலாஜி. பதிவு கீழே கை நனைச்சிட்டுப் போங்கன்னும் போட்டிருக்கீங்க! ரொம்ப நன்றி!

பாஸ்டன்ல யுகாதிக்கு நீங்க எங்க கை நனைச்சிங்க? :-) //

எங்க வீட்ல தான் :-)

வெட்டிப்பயல் said...

பாலராஜன்கீதா,
உங்களை பற்றி தான் KRS பெருமையாக சொல்லி கொண்டிருந்தார். நான் அப்போது தான் சொன்னேன். அவர் என் ப்ளாக் பக்கமெல்லாம் வர மாட்டார். நாங்க எல்லாம் சின்ன ப்ளாகர் தானேனு.

சொல்லி வெச்ச மாதிரி அடுத்த பதிவுக்கே வந்துட்டீங்க...

ஆமாம்... நீங்க சொன்ன பதிவெல்லாம் யார் எழுதினா??? லிங் தர முடியுமா??? ;)

வெட்டிப்பயல் said...

//சந்தோஷ் aka Santhosh said...

பாலாஜி,
உகாதி நாளைக்குத்தான்.
//சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லிட்டியா மேன்??//
இது என்ன புது கதையல்ல நிஜமா இல்ல இருக்கு.
//(புது கதை ரெடியாயிடுச்சி மக்கா... சீக்கிரம் வரும்)//
தம்பி சொன்னது தானா இது? //

அது இல்லை... சீக்கிரமே சொல்றேன் ;-)

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

நம்மூட்டுக்கேலண்டர்லே இன்னிக்குத்தான் யுகாதின்னு போட்டுருக்கு.
அப்படியே வச்சுக்கலாமுன்னு இருக்கேன்.

உங்களுக்கும் ஹேப்பி யுகாதி.
//

டீச்சர்,
எங்க ஆபிஸ்ல இந்தியால உகாதினு திங்க கிழமை தான் லீவு விட்டாங்க. அதனால நான் அதையே உகாதினு முடிவு பண்ணிட்டேன்!!!

//
இன்றைய ஸ்பெஷல்........?

உங்க பதிவுலே இருந்த பச்சடிதான்:-))))

ச்சும்மாப் பார்க்க மட்டுமே. அனுபவிக்க இங்கே வெல்லம், வாழைப்பழம் மட்டுமே
இருக்கு. //
அப்ப இந்த வருடம் இனிமையாக இருக்கும் :-)

கீதா சாம்பசிவம் said...

நேத்திக்குத் தான் யுகாதி, நீங்க ஒரு நாள் முன்னாலேயே வாழ்த்துச் சொல்லிட்டீங்க. போகட்டும், புளி, மாங்காய் இரண்டும் சேர்த்துப் பச்சடி செஞ்சா நீங்கமட்டும் தான் சாப்பிடணும். வேறே யாரும் தொடக் கூட மாட்டாங்க. தஞ்சாவூர்ப் பக்கங்களிலே வேப்பம்பூப்பச்சடி புளி, வெல்லம் சேர்த்தும் மற்ற ஊர்களிலே மாங்காய், வெல்லம் சேர்த்தும் வேப்பம்ப்பூப் பச்சடி செய்வாங்க.

கீதா சாம்பசிவம் said...

செவ்வாய்க்கிழ்மை ஆந்திரத்தில் சில இடங்களில் கொண்டாடுறாங்க. எல்லாம் மாசம் பிறந்தது நடு ராத்திரியில் அதனால் வந்த குழப்பம்.

கீதா சாம்பசிவம் said...

அது என்ன அபி அப்பா, வாழ்த்துச் சொல்லாம வாந்து சொல்லி இருக்கார்? என்னங்க மொழி இது?

Premma said...

en en en epdi ellam?....maranthudu balaji...vendam...andhra va maranthudu...ugadi ya maranthudu...
vittutu ponavangalaukkaga....post ellam pottutu time waste pannittu ...chinna pillai thanama illai....

dubukudisciple said...

உகாதி ஷுபாகாஞ்சனலு.- vetti ungalukum.. unga nanbarkalukum!!
enika iruntha enna ugadi.. namma rendu naalum kondadina pochu

இம்சை அரசி said...

கொல்ட்டி பா... சாரி... வெட்டி பாலாஜி...

ஹேப்பி உகாதி...

அப்படியே முடிஞ்சா உங்க ஆளுக்கும் நான் சொன்னேன்னு சொல்லிடுங்க ;)

கோபிநாத் said...

\\பக்கத்துல இருக்கவங்களுக்கும் கொடுத்துட்டு சாப்பிடு...\\

அதெல்லாம் இருக்கட்டும்....முதல்ல தம்பி சொன்னதுக்கும், இம்சை அரசி சொன்னதுக்கும் பதில சொல்லு மேன்...

செந்தழல் ரவி said...

பாக உன்னாரா வெட்டி ?

வெட்டிப்பயல் said...

// கீதா சாம்பசிவம் said...

நேத்திக்குத் தான் யுகாதி, நீங்க ஒரு நாள் முன்னாலேயே வாழ்த்துச் சொல்லிட்டீங்க. போகட்டும், புளி, மாங்காய் இரண்டும் சேர்த்துப் பச்சடி செஞ்சா நீங்கமட்டும் தான் சாப்பிடணும். வேறே யாரும் தொடக் கூட மாட்டாங்க. தஞ்சாவூர்ப் பக்கங்களிலே வேப்பம்பூப்பச்சடி புளி, வெல்லம் சேர்த்தும் மற்ற ஊர்களிலே மாங்காய், வெல்லம் சேர்த்தும் வேப்பம்ப்பூப் பச்சடி செய்வாங்க. //

நமக்கு இந்த அளவுக்கு ரெசிப்பி எல்லாம் தெரியாது... விக்கிப்பிடியாவுல இருந்து அடிச்சிட்டேன் ;)

வெட்டிப்பயல் said...

// கீதா சாம்பசிவம் said...

செவ்வாய்க்கிழ்மை ஆந்திரத்தில் சில இடங்களில் கொண்டாடுறாங்க. எல்லாம் மாசம் பிறந்தது நடு ராத்திரியில் அதனால் வந்த குழப்பம். //

இதனால என்ன? ரெண்டு நாளும் கொண்டாடுவோம் ;)

வெட்டிப்பயல் said...

// கீதா சாம்பசிவம் said...

அது என்ன அபி அப்பா, வாழ்த்துச் சொல்லாம வாந்து சொல்லி இருக்கார்? என்னங்க மொழி இது? //

பாவம் தெரியாம எழுத்து பிழை வந்துடுச்சி... அதனால என்ன??? வாழ்த்து சொன்னாருனு புரிஞ்சிக்கிட்டா போச்சி ;)