தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, March 17, 2007

பாகிஸ்தான் இந்தியாவை வென்றது!!!

உலகக்கோப்பையிலே பாகிஸ்தானிடன் தோத்ததில்லை என்று கர்வம் கொண்டிருந்த இந்திய க்ரிக்கெட் அணி இன்று நடந்த போட்டிகளால் மூக்குடைந்தது.

இதை பற்றி இந்திய க்ரிக்கெட் அணியின் தலைவர் ட்ராவிடிடம் கேட்ட போது, டிராவிட்: இது ICC நமக்கு இழைத்த அநீதி. அவர்கள் இரண்டு மேட்சுகள் ஆடிய நிலையில் நாம் ஒரே ஒரு மேட்ச் ஆடியதாலே இவ்வாறு நாம் தோற்க நேர்ந்தது. நான் சேவாகை அதிகம் சப்போர்ட் செய்ததற்கு காரணமும் இந்த ICC சதியினால் முறியடிக்கப்பட்டது. போட்டியில் நாம் வெல்வதற்கு நான் அவரைத்தான் அதிகம் நம்பியிருந்தேன் என்பது தாங்கள் அறிந்ததே!!!

ஆமாம் அப்படி என்ன போட்டினு பாக்கறீங்களா??? ரிட்டர்ன் டிக்கெட்டை யாரு முதல்ல புக் பண்றதுனு போட்டி இருந்துச்சி. இன்னைக்கு நம்ம பாகிஸ்தான் Ireland கூட தோத்து கன்பர்ம் பண்ணிட்டாங்க. நம்ம ஆளுங்க டிக்கெட்டை ப்ளாக் பண்ணி வெச்சிருக்காங்க... அடுத்த வாரம் மீதி ரெண்டு மேட்சும் ஆடிட்டு வந்துடுவாங்க...

சரி இப்படி வந்தா நம்மலாவது பொழப்ப பார்க்கலாம். பரிட்ச சமயம் வேற. நம்ம பயலுங்க நல்ல நாளே படிக்க மாட்டானுங்க. இப்படி இந்த World Cup வந்தா உருப்பட்ட மாதிரி தான்.

எலேய் சேப்பலு சீக்கிரம் பசங்கள ஊருக்கு கூப்பிட்டு வந்து புதுசா எதாவது சோதனை பண்ணு. 2011 வரைக்கும் இப்படி சோதனை பண்ணனும்... அப்பத்தான் நம்ம ஆளுங்களும் இந்த ஆட்டத்தை மறப்பாங்க...

39 comments:

அபி அப்பா said...

ஓவர் குசும்புய்யா வெட்டிதம்பி உமக்கு! மணிகண்டன், fasr bowlar,சிபி, அவந்திகா, பெனாத்தலார்,லொடுக்கு (அவ்வளவு ஏன் கோவை வாத்தியாரே கட்டிங் போட கிளம்பிட்டார்)எல்லாம் உக்காந்து ஓன்னு அழுதுகிட்டு இருக்கும் போது உமக்கு நக்கல் கேக்குதா? நல்லா இருப்பா:-)))

Gopalakrishnan said...
This comment has been removed by the author.
மணிகண்டன் said...

//ஓவர் குசும்புய்யா வெட்டிதம்பி உமக்கு! மணிகண்டன், fasr bowlar,சிபி, அவந்திகா, பெனாத்தலார்,லொடுக்கு (அவ்வளவு ஏன் கோவை வாத்தியாரே கட்டிங் போட கிளம்பிட்டார்)எல்லாம் உக்காந்து ஓன்னு அழுதுகிட்டு இருக்கும் போது உமக்கு நக்கல் கேக்குதா? நல்லா இருப்பா:-)))

//

ரொம்ப ஓவர் வெட்டி இது :)

வேணாம்..வலிக்குது..அழுதுடுவேன் ......
இப்படியெல்லாம் சொல்வேன்னு எதிர்பார்க்கறீங்களா.ஹுஹும் :))

மனிதா உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா
துக்கமென்ன என்தோழா?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
2007ல் நிஜமாகும்..

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

ஓவர் குசும்புய்யா வெட்டிதம்பி உமக்கு! மணிகண்டன், fasr bowlar,சிபி, அவந்திகா, பெனாத்தலார்,லொடுக்கு (அவ்வளவு ஏன் கோவை வாத்தியாரே கட்டிங் போட கிளம்பிட்டார்)எல்லாம் உக்காந்து ஓன்னு அழுதுகிட்டு இருக்கும் போது உமக்கு நக்கல் கேக்குதா? நல்லா இருப்பா:-))) //

அண்ணா,
போட்டோவெல்லாம் அசத்தலா இருக்கு...

இடுக்கண் வருங்கால் நகுக...

இவனுங்க ஆடின ஆட்டத்துக்கு வேற என்ன சொல்ல??? ஒரு Confidence வேணாம்?

யார்கிட்டயும் ஜெயிக்கனும்னு ஒரு ஃபயரே இல்லை... என்னுமோ போங்க...

வெட்டிப்பயல் said...

கமெண்டை டெலிட் பண்ண நண்பரே,
உங்க பேரை நோட் பண்ண மறந்துட்டேன்...

உங்க கமெண்டுக்கு மிக்க நன்றி... இரு துருவம் நாளைக்கு எழுதிடறேன். கொஞ்சம் வேலை அதிகம். கதை எழுதனும்னா கொஞ்சம் நேரமாகும். அதனால தான் எழுத முடியாம போயிடுச்சி :-)

அபி அப்பா said...

//மனிதா உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா
துக்கமென்ன என்தோழா?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
2007ல் நிஜமாகும்..//

யப்பா மணிகண்டா! இந்த பாட்டு உமக்கு தெறியுது. அங்க மே.இ ல குத்த வச்சிருக்கிற நம்ம பசங்களுக்கு தெறியுமா?

அபி அப்பா said...

//கமெண்டை டெலிட் பண்ண நண்பரே,
உங்க பேரை நோட் பண்ண மறந்துட்டேன்...//

நான் நோட் பண்ணினேன் "கோபாலகிருஷ்ணன்"

Ram Ravishankar said...

இந்த பசங்களுக்கு டின் கட்டணும் .. முந்தி ஒரு தரம் கங்குலி வீட்டை த்வம்ஸம் பண்ணினா மாதிரி .. கொஞ்சம் shock treatment குடுததா சரி ஆயிடும் .. மயிலே மயிலே-ன்னா இறகு போடாது, டின் கட்டினாதான் போடும். Shewag வீட்டு பக்கத்து வீட்டுக்காரங்கள அனுப்பி கொஞசம் "அன்பா" விசாரிக்க சொல்லுங்க .. எல்லாம் சரி ஆகிடும் .. then miracle will follow ..
..ராம்

அபி அப்பா said...

//அண்ணா,
போட்டோவெல்லாம் அசத்தலா இருக்கு...

இடுக்கண் வருங்கால் நகுக...//

வெட்டிதம்பி! உள்குத்து ஏதும் இல்லியே! பக்கத்து பக்கத்துலயே (போட்டோ - இடுக்கண்) 2 வரியும் போட்டு இருக்கீங்களே:-)))

actually உங்களுக்காகத்தான் போட்டோ! நாந்தான் அபிஅப்பா.கொஞ்ச நாள்ல தூக்கிடுவேன்.

வெட்டிப்பயல் said...

//
ரொம்ப ஓவர் வெட்டி இது :)

வேணாம்..வலிக்குது..அழுதுடுவேன் ......
இப்படியெல்லாம் சொல்வேன்னு எதிர்பார்க்கறீங்களா.ஹுஹும் :))

மனிதா உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்

தோல்வியின்றி வரலாறா
துக்கமென்ன என்தோழா?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
2007ல் நிஜமாகும்..//

மணிகண்டன்,
ஓவர் ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது... இவனுங்க ஆடறத பார்த்தா எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை...

ஏதாவது மிராக்கில் நடந்தாதான் உண்டு :-)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

//கமெண்டை டெலிட் பண்ண நண்பரே,
உங்க பேரை நோட் பண்ண மறந்துட்டேன்...//

நான் நோட் பண்ணினேன் "கோபாலகிருஷ்ணன்" //

அண்ணே,
ரொம்ப டாங்கிஸ்...

இதுக்குத்தான் ஒரு நல்ல அண்ணன் வேணுங்கறது :-)

வெட்டிப்பயல் said...

// Ram Ravishankar said...

இந்த பசங்களுக்கு டின் கட்டணும் .. முந்தி ஒரு தரம் கங்குலி வீட்டை த்வம்ஸம் பண்ணினா மாதிரி .. கொஞ்சம் shock treatment குடுததா சரி ஆயிடும் .. மயிலே மயிலே-ன்னா இறகு போடாது, டின் கட்டினாதான் போடும். Shewag வீட்டு பக்கத்து வீட்டுக்காரங்கள அனுப்பி கொஞசம் "அன்பா" விசாரிக்க சொல்லுங்க .. எல்லாம் சரி ஆகிடும் .. then miracle will follow ..
..ராம் //

ராம்,
என்னைக்காவது நம்ம பரிட்சை ஒழுங்கா எழுதலைனு நம்ம வீட்ல யாராவது கல்லெரியறாங்களா???

ஃபிரியா ஃபீல் பண்ணாமவிடுங்க...

அவந்திகா said...

அண்ணா..பாகிஸ்தான் இதுலேயாவது ஜெயிக்கட்டும்...( இப்படி யெல்லாம் பேசினா மனசுக்கு நலல இருக்குண்ணா, கண்டுகாதீங்க)

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...

//அண்ணா,
போட்டோவெல்லாம் அசத்தலா இருக்கு...

இடுக்கண் வருங்கால் நகுக...//

வெட்டிதம்பி! உள்குத்து ஏதும் இல்லியே! பக்கத்து பக்கத்துலயே (போட்டோ - இடுக்கண்) 2 வரியும் போட்டு இருக்கீங்களே:-)))
//

அண்ணா,
முதல் வரி என்னுடைய கமெண்ட் இரண்டாவது நம்ம டீம் பெர்வார்மென்ஸ் பத்தி...

//
actually உங்களுக்காகத்தான் போட்டோ! நாந்தான் அபிஅப்பா.கொஞ்ச நாள்ல தூக்கிடுவேன். //
ஆஹா... நமக்காகத்தான் போட்டோ போட்டீங்களா???

அவனுக்கு ஒரு டெவில் ஷோ பத்தாதுனு நினைக்கிறேன்.

பட்சி சொன்னதால ஒரு சின்ன சந்தேகம். அதுவுமில்லாம முதல் பதிவிலிருந்து ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கை வண்ணம் தெரிந்ததால் வந்த குழப்பம். மன்னித்துவிடவும்...

இன்னைக்கு ரேஞ்ச்ல எனக்கு தெரிஞ்சி கலக்கறது நீங்களும் கண்மனி அக்காவும் தான்:-)

வெட்டிப்பயல் said...

//அவந்திகா said...

அண்ணா..பாகிஸ்தான் இதுலேயாவது ஜெயிக்கட்டும்...( இப்படி யெல்லாம் பேசினா மனசுக்கு நலல இருக்குண்ணா, கண்டுகாதீங்க) //

தங்கச்சி,
எப்படியோ இதுலயாவது ஜெயிச்சமேனு அவுங்க சந்தோஷமா இருக்கட்டும்...

இதுலயும் தோத்த நம்ம ஆளுங்களை என்ன செய்யலாம் :-p

அபி அப்பா said...

//அவனுக்கு ஒரு டெவில் ஷோ பத்தாதுனு நினைக்கிறேன்.//

கண்டுபிடிச்சாச்சா:-)))


//பட்சி சொன்னதால ஒரு சின்ன சந்தேகம். அதுவுமில்லாம முதல் பதிவிலிருந்து ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கை வண்ணம் தெரிந்ததால் வந்த குழப்பம். மன்னித்துவிடவும்...

இன்னைக்கு ரேஞ்ச்ல எனக்கு தெரிஞ்சி கலக்கறது நீங்களும் கண்மனி அக்காவும் தான்:-)

வர வர நீங்க பயங்கர காமடியா திங் செய்யாறீங்க!

சரி, நா ஜூட்..புலி வந்தா நானெ எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டேன்னு கோவிச்சுக்கும்.வர்ட்டா?

மணிகண்டன் said...

//மணிகண்டன்,
ஓவர் ஃபீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது... //

என்னங்க பண்ரது பாலாஜி, இன்னைக்கு வின் பண்ணியிருந்தா, இவ்வளவு ஃபீலிங்க்ஸ் ஆகியிருக்காது :) சாதரணமா போயிருக்கும்.

//இவனுங்க ஆடறத பார்த்தா எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை...

ஏதாவது மிராக்கில் நடந்தாதான் உண்டு :-)
//
மிராக்கிள் எல்லாம் நடக்க வேணாங்க. அடுத்த ரெண்டு போட்டிலயும் நல்லா ஆடுனா போதும்.

//யப்பா மணிகண்டா! இந்த பாட்டு உமக்கு தெறியுது. அங்க மே.இ ல குத்த வச்சிருக்கிற நம்ம பசங்களுக்கு தெறியுமா?
//
அடங்க மாட்டீரா நீரு..அபி பாப்பா கிட்ட சொல்லனுமா?

//இந்த பசங்களுக்கு டின் கட்டணும் .. முந்தி ஒரு தரம் கங்குலி வீட்டை த்வம்ஸம் பண்ணினா மாதிரி .. கொஞ்சம் shock treatment குடுததா சரி ஆயிடும் .. மயிலே மயிலே-ன்னா இறகு போடாது, டின் கட்டினாதான் போடும். Shewag வீட்டு பக்கத்து வீட்டுக்காரங்கள அனுப்பி கொஞசம் "அன்பா" விசாரிக்க சொல்லுங்க .. எல்லாம் சரி ஆகிடும் .. then miracle will follow ..
..ராம்

//
இது ரொம்ப தவறான அனுகுமுறைங்க ராம்.. இப்படி பண்ணி எவ்வளவு நாள் ஜெயிக்க முடியும். அவங்களா நம்ம நாடுன்னு ஒரு ஈடுபாட்டோட ஆடுனா தான் ஜெயிக்க முடியுமே தவிர மிரட்டி ஜெயிக்க முடியாது

காமெடி பதிவை சீரியஸ் பதிவா ஆக்குனதுக்கு மன்னிச்சுடுங்க பாலாஜி.

வெட்டிப்பயல் said...

//
//அபி அப்பா said...

//அவனுக்கு ஒரு டெவில் ஷோ பத்தாதுனு நினைக்கிறேன்.//

கண்டுபிடிச்சாச்சா:-)))
//
இத பத்தி பேசனதே ஒருத்தவன்கிட்ட தான்... இப்ப அவனுக்கு தான் வெயிட்டீங் :-)

//


//பட்சி சொன்னதால ஒரு சின்ன சந்தேகம். அதுவுமில்லாம முதல் பதிவிலிருந்து ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கை வண்ணம் தெரிந்ததால் வந்த குழப்பம். மன்னித்துவிடவும்...

இன்னைக்கு ரேஞ்ச்ல எனக்கு தெரிஞ்சி கலக்கறது நீங்களும் கண்மனி அக்காவும் தான்:-)

வர வர நீங்க பயங்கர காமடியா திங் செய்யாறீங்க!
//
இது நெம்ப ஓவர் :-)
மனசுல பட்டதை தான் சொன்னேன்... ரொம்ப நல்லா எழுதறீங்க. பின்னூட்டம் தான் நான் அதிகம் போடறதில்லை :-(

//
சரி, நா ஜூட்..புலி வந்தா நானெ எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டேன்னு கோவிச்சுக்கும்.வர்ட்டா? //

சரிண்ணே... புலி எப்ப வரும்னு தெரியல... மணி 3 ஆகுது. நான் தூங்க போறேன் :-)

வெட்டிப்பயல் said...

மணிகன்டன்,
பங்க்ளாதேஷ் பசங்க அருமையா ஆடினாங்க...

..... கட்டி மலைய இழுப்போம். வந்தா மலை போனா .... தானேனு ஆடினாங்க. இழுத்துட்டாங்க:-)

ஜொள்ளுப்பாண்டி said...

:))))))))))))))) வெட்டி sixer போங்க !! :)))))))

Fast Bowler said...

ஆமா. இப்போ என்ன நடந்துருச்சுன்னு எல்லாரும் ஒப்பாரி வைக்கிறீங்க? செமி-ஃபைனல் வரை நம்ம டீம் கன்ஃபார்ம். டோண்ட் வொர்ரி... நோ வெறி...

ஜெஸிலா said...

அடுத்த முறை இந்திய அணிக்கு அவ்வளவு தூரம் போகும் சிரமமே தரக்கூடாது. உள்ளூர் மைதானத்தில் நம்ம சிறுசுகளுக்கு பயிற்சி அளிக்க மட்டும் இந்த அணிப் போதும். இவங்கப் பயிற்சி தந்து என்ன வாழப் போகுதுன்னு சொல்றீங்களா அதுவும் சரிதான்.

கப்பி பய said...

:)))))

Anonymous said...

Mr. Vetti.. yara neenga MALAI-nu sonniga..(hope not our guys) -- Sivabalan....

கோபிநாத் said...

அதுக்குள்ள பின்னூட்டம் பின்னுதேன்னு வந்தா நீயும், அபி அப்பாவும் ஆடிக்கிட்டு இருக்கீங்க...

விடு வெட்டி.... இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது எப்ப எல்லாம் நம்ம நம்பிக்கையா இருப்பமோ அப்ப எல்லாம் நம்பிக்கையை பாழ்பண்றதே வேலை இவனுங்களுக்கு ;-(

கோபிநாத் said...

\\சரி, நா ஜூட்..புலி வந்தா நானெ எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டேன்னு கோவிச்சுக்கும்.வர்ட்டா?\\

அபி அப்பா இன்னிக்கு இங்கதான் கும்மியா ;-)

ஆமா அது என்ன புலி மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா??

மன்றத்தின் சக ரசிகர்களை மறந்த அபி அப்பாவுக்கு எனது கண்டனங்கள்...

Boston Bala said...

சேப்பலை எப்படி ஒழிப்பது என்னும் திட்டத்தின் முதற்பகுதி ;)

சிவபாலன் said...

மனசு வருத்தமாக இருந்தாலும் சிரிக்க வைத்து விட்டீட்கள்

வினையூக்கி said...

நேத்து நாம் தோத்தாலும், கிடைச்ச ஒரே ஆறுதல், நம்ம பங்காளிங்க ஆட்டம் குளோஸ்ங்கிறது தா.

நமக்கு மேல போட்டி போட்டுக்கிட்டு அவுட் ஆகிறங்கப்ப..

இராம் said...

பாலாஜி,

ஹி ஹி தலைப்பை பார்த்துட்டே சிரிப்பு வந்துருச்சுப்பா....


போன உலகக்கோப்பையிலே ஆஸ்திரேலியா கூட மொத மேட்சிலே அடிவாங்கிட்டு ஃபீனிக்ஸ் பறவை?? மாதிரி எழுந்த நம்ம இந்திய அணியே இப்போவும் எதிர்பார்ப்போம்... அதைவிட 99உலகக்கோப்பையிலே தொடர்ந்து ரெண்டு மேட்ச்'ல்லொம் தோத்து அடுத்த ரவுண்ட்'க்கெல்லாம் வந்தானுக நம்ம பசங்க :)

அதைமாதிரி இப்போவும் நடக்குமின்னு வேண்டிக்கோவோம் :)

தம்பி said...

//பட்சி சொன்னதால ஒரு சின்ன சந்தேகம். அதுவுமில்லாம முதல் பதிவிலிருந்து ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கை வண்ணம் தெரிந்ததால் வந்த குழப்பம். மன்னித்துவிடவும்...//

எம்மேல இம்புட்டு நம்பிக்கை வச்சிருக்கியா செல்லம்.

நெம்ப டேங்க்ஸ்.

சிவகுமார் said...

கங்குலிய ஒரு வருஷம் தூக்கின மாத்ரி மத்த எல்லாரையும் ஒரு வருஷும் தூக்கிப்பாக்கலாம்

enRenRum-anbudan.BALA said...

Good satire, balaji :)))))

Pl. read:
http://balaji_ammu.blogspot.com/2007/03/313.html

SurveySan said...

hee hee hee :)

Anonymous said...

பாப் ஊல்மர் போய் சேர்ந்துட்டார், பாவம்.

நல்லா இருங்க..

Dubukku said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி ஹை.

http://www.desipundit.com/2007/03/18/worldcup/

ஆதிபகவன் said...

ரிடர்ன் டிக்கட் கன்பர்ம் பண்ணியாச்சு.
டிரான்ஸிட் - லண்டன், டுபாய்.

வெட்டிப்பயல் said...

//ஜொள்ளுப்பாண்டி said...

:))))))))))))))) வெட்டி sixer போங்க !! :))))))) //

ஜொள்ளு,
நம்ம அடிச்சி என்ன பண்ண??? அவனுங்க யாராவது அடிச்சாத்தானே :-(

தென்றல் said...

குடிச்சி குடிச்சி வேதனை-ய மறக்க வேண்டாம்...
இப்படி சிரிச்சி சிரிச்சாவது அந்த சோகத்த மறப்போம்..