தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, March 07, 2007

நாராயண மூர்த்தியை என்ன செய்யலாம்?
நாராயண மூர்த்திகளையும், அசிம் ப்ரேம்ஜிகளையும் என்ன பண்ணலாம்னு நேத்து ஒரு பதிவர் கேட்டிருந்தார்... எனக்கும் அதே கேள்விதான் ரொம்ப நாளா மனசுல இருக்குது.

மத்த கம்பெனி ப்ராஜக்ட் பார்ட்டிகளிலெல்லாம் தண்ணி அடிச்சா தப்பில்லனு இருக்கும் போது எவ்வளவு பெரிய ஃபங்ஷன்னாலும், பிராஜக்ட் பார்ட்டினாலும் தண்ணி அடிக்க கூடாதுனு சட்டம் போட்டிருக்க மூர்த்திய என்ன செய்யலாம்?

முடிஞ்ச வரைக்கும் ஆறு மணிக்குள்ள வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போங்க. ஏதாவது புதுசா ஒரு மொழி கத்துக்கோங்க, இல்லை ஏதாவது புது இசை கருவி கத்துக்கோங்க. வீட்ல இருக்கவங்களோட அதிக நேரத்தை செலவிடுங்கனு பல தடவை சொல்லிருக்காரு. இதுக்கு அவரை என்ன செய்யனும்?

மத்த கம்பெனியெல்லாம் கம்ப்யூட்டர் படிச்சவனை மட்டும் எடுக்கும் போது எந்த இஞ்சினியரிங் படிச்சாலும் பரவாயில்லை. பிரச்சனைய சமாளிக்கிற திறமை இருந்தா போதும் கம்ப்யூட்டர் நாங்க சொல்லி தறோம்னு வெறும் Puzzle test மட்டும் வெச்சி 1000 கணக்குல ஆள் எடுத்து அவர்களுக்கு மூன்றரை மாதம் பயிற்சி கொடுக்கும் மூர்த்திய என்ன செய்யலாம்?

மத்த கம்பெனியெல்லாம் புதுசா சேருபவன், உண்மையான எக்ஸ்பிரீயன்ஸோட வரானா இல்லை Fake போட்டு வரானானு ஆராய்ச்சில பல மாசம் செலவு பண்ணும் போது. என் இண்டர்வியூவை க்ளியர் பண்ணா போதும்னு பழைய கதைய அதிகம் நோண்டாத மூர்த்திய என்ன செய்யலாம்?

இந்த புதிரெல்லாம் கிராமத்துல இருந்து வரவனுக்கும் ஈஸியா இருக்குமே. அவனையெல்லாம் இங்கிலீஸ்ல திறமைய பார்த்து ஈஸியா துறத்திடலாம்னு தெரியாத மூர்த்திய என்ன செய்யலாம்?

க்ளைண்ட் விசிட் தவிர மத்த நேரத்தெல்லாம் கோட் சூட் போடாம ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியர் மாதிரி கேம்பஸ்ல நடந்து வர மூர்த்திய என்ன செய்யலாம்??? (ஒரு பந்தா வேண்டாம்?)

ஒரு 6 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மத்த எல்லா இஞ்சினியர் மாதிரி புட் கோர்டுக்கே வந்து லைன்ல ப்ளேட் எடுத்து நின்னு சாப்பாடு வாங்கி சாப்பிட்ட மூர்த்திய என்ன செய்யலாம்???யாரிடமும் அதிகம் பேசாமல் Introvertஆக இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் முதலீடாக கொண்டு ஒரு நிறுவனத்தை நிறுவி லட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தை முன்னேற்றிய மூர்த்தியை என்ன செய்யலாம்???

இன்போஸிஸ் ஸ்டாக் வாங்கி நிறைய பேர் பணக்காரவங்களாக விட்ட மூர்த்திய என்ன பண்ணலாம்???உலகத்தரம் வாய்ந்த ஜிம்னாஸியம், ஸ்விம்மிங் பூல், யோக க்ளாஸ் என்று ஊழியர்கள் உடல் நலம் பேணும் வகையில் பல விதத்திலும் உதவும் மூர்த்தியை என்ன செய்யலாம்???

நிறுவனத்தில் பணி புரிபவருக்கு ஏதாவது ஒரு குறுக்கு வழியில் வருமான வரியிலிருந்து தப்பிக்க சிறிதும் உதவாத மூர்த்தியை என்ன செய்யலாம்????

மீண்டும் ஒரு முறை சொல்லி கொள்கிறேன், இன்போஸிசில் டிரிங்ஸ் எந்த
விதமான ப்ராஜக்ட் பார்ட்டியிலும் அனுமதிப்பதில்லை.

Last but not least -

Love your work not your company - NRN

43 comments:

நெல்லை காந்த் said...

வெட்டி,
I am agree with all of ur comments abt Murthy நாராயண மூர்த்தி, all are truth abt him. I hope that you are working with Infy and might known better than others...


---
Note:
This is year you might get double promotion, Advance congrats..

வடுவூர் குமார் said...

மத்த கம்பெனியெல்லாம் கம்ப்யூட்டர் படிச்சவனை மட்டும் எடுக்கும் போது எந்த இஞ்சினியரிங் படிச்சாலும் பரவாயில்லை. பிரச்சனைய சமாளிக்கிற திறமை இருந்தா போதும் கம்ப்யூட்டர் நாங்க சொல்லி தறோம்னு வெறும் Puzzle test மட்டும் வெச்சி 1000 கணக்குல ஆள் எடுத்து அவர்களுக்கு மூன்றைய மாதம் பயிற்சி கொடுக்கும் மூர்த்திய என்ன செய்யலாம்?
இந்த முக்கியமான மேட்டரை இவ்வளவு லேட்டா போடுகிறீர்களே!!
முட்டிப்பார்த்துவிட வேண்டியது தான்.
:-))

Anonymous said...

//முடிஞ்ச வரைக்கும் ஆறு மணிக்குள்ள வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போங்க. //

Will it be ok if its just in words?
I worked in a team where I had to be at work up to 9PM almost everyday. (Offically its not flexi-timing. I got to be at office between 8:15 AM to 5:00 AM.).

If you say it all depends on team and project, Why is it like that? does those teams are out of NarayanaMurthy's (the then CEO) Infy ?

I agree there is state of art Gym, Sports, etc.. etc.. How many of us ever got time to enjoy all those (except who were on bench)?

-An Ex-employee of Infy.

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதில்தான். அந்தப் பதிவுக்குப் பதில் சொல்ல வந்தா மூர்த்தியோட நிக்காம மத்த கம்பெனிகளில் நடக்கும் நல்லது நாலையும் சொல்லி இருக்கலாம். ஆனா என்னளவில் அந்தப் பதிவுக்கு எல்லாம் பதில் சொல்லறதே டயம் வேஸ்ட். அம்புட்டுதான்.

Hariharan # 26491540 said...

நம் நாட்டுக்கும், நாட்டின் படித்த இளைஞர்களுக்கும் நல்லதைப் பல விதத்தில் செய்த நாராயணமூர்த்தியின் நல்ல சாதனைகள் பலவும் நல்லவிதமாக எடுத்துச் சொன்னதற்கு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

//I got to be at office between 8:15 AM to 5:00 AM.//

Typo! its between between 8:15 AM to 5:00 PM.

-Same old Ex-employee of Infy.

சந்தோஷ் aka Santhosh said...

//நல்ல பதில்தான். அந்தப் பதிவுக்குப் பதில் சொல்ல வந்தா மூர்த்தியோட நிக்காம மத்த கம்பெனிகளில் நடக்கும் நல்லது நாலையும் சொல்லி இருக்கலாம். ஆனா என்னளவில் அந்தப் பதிவுக்கு எல்லாம் பதில் சொல்லறதே டயம் வேஸ்ட். அம்புட்டுதான்.//
ரிப்பீட்டு.

சந்தோஷ் aka Santhosh said...

//Note:
This is year you might get double promotion, Advance congrats..//
இது எல்லாம் ரொம்ப ஓவரு

இலவசக்கொத்தனார் said...

////I got to be at office between 8:15 AM to 5:00 AM.//

Typo! its between between 8:15 AM to 5:00 PM.

-Same old Ex-employee of Infy.//

May be it isnt an typo afterall!! :))))

Anonymous said...

//May be it isnt an typo afterall!! :))))//

Infy is not that worst. In some other companies that may be true :)))

-Same old Ex-employee of Infy.

கார்த்திக் பிரபு said...

manathai kapathiteenga nandri

வெட்டிப்பயல் said...

நெ.கா,
இந்த பதிவை என்ன மூர்த்தியா படிக்க போறாரு??? ;)

தெரிஞ்சத சொல்ல வேண்டியதுதான் நம்ம வேலை ;)

....................................

வ.கு,
//இந்த முக்கியமான மேட்டரை இவ்வளவு லேட்டா போடுகிறீர்களே!!
முட்டிப்பார்த்துவிட வேண்டியது தான்.
:-))//

இது பொதுவா ஃப்ரெஷர்ஸ்க்கு தான் பொருந்தும் :-)

.................................

//
Will it be ok if its just in words?
I worked in a team where I had to be at work up to 9PM almost everyday. (Offically its not flexi-timing. I got to be at office between 8:15 AM to 5:00 AM.).

If you say it all depends on team and project, Why is it like that? does those teams are out of NarayanaMurthy's (the then CEO) Infy ?

I agree there is state of art Gym, Sports, etc.. etc.. How many of us ever got time to enjoy all those (except who were on bench)?//

Dear Friend,
6 மணிக்கு அனைவரும் வேலையை முடித்து வெளியேற முடியுமா என்று 2-3 மாதங்கள் புனேவில் சோதனை கூட செய்து பார்த்தார்கள். ஆனால் நம் மக்களே ரிலாக்ஸாக வேலை செய்ய முடியவில்லை என்று அந்த சிஸ்டெம் வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார்கள்.

ரிலாக்ஸாக இண்டர்நெட்டில் தமிழ்மணம் பார்த்துக்கொண்டும், ப்ளாக் படித்து கொண்டும், போனில் அரட்டை அடித்து கொண்டும் 8-9 மணி வரை வேலை செய்யும் பழக்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு நம்மையே சாரும் என்பது என் எண்ணம்.

சின்சியரா வேலை மட்டும் செய்தால் 8 மணி நேரம் போதும் என்றே நினைக்கிறேன் :-)

...............................

கொத்ஸ்,
மூர்த்தியை பற்றி அவதூறு கிளம்பியதாலே இந்த பதிவு. மற்ற நிறுவனங்களை பற்றியும், சாப்ட்வேர் இஞ்சினியர்களை பற்றியும் விரைவில் எழுதுகிறேன் ;)

.................................

//Hariharan # 26491540 said...

நம் நாட்டுக்கும், நாட்டின் படித்த இளைஞர்களுக்கும் நல்லதைப் பல விதத்தில் செய்த நாராயணமூர்த்தியின் நல்ல சாதனைகள் பலவும் நல்லவிதமாக எடுத்துச் சொன்னதற்கு நல்வாழ்த்துக்கள். //

அது என் கடமையே...

Anonymous said...

//ரிலாக்ஸாக இண்டர்நெட்டில் தமிழ்மணம் பார்த்துக்கொண்டும், ப்ளாக் படித்து கொண்டும், போனில் அரட்டை அடித்து கொண்டும் 8-9 மணி வரை வேலை செய்யும் பழக்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு நம்மையே சாரும் என்பது என் எண்ணம்.//
May be this is true in your case.

:)))

In my case the reason was pathetic on-site co-ordination. I didn't even know about Thamizmanam when I worked there.

-Same old Ex-employee of Infy.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

//I got to be at office between 8:15 AM to 5:00 AM.//

Typo! its between between 8:15 AM to 5:00 PM.

-Same old Ex-employee of Infy. //

I have heard from people working in Chennai that some time they work from 8AM to 5AM :-)

So I Thought it wasnt a typo ;)
..................................

சந்தோஷ்,
அவர் ரொம்ப அக்கரையா எழுதியிருந்த மாதிரி தெரிஞ்சதால தான் இந்த பதிவு...

...................................

//கார்த்திக் பிரபு said...

manathai kapathiteenga nandri //

இது நம்ம கடமையில்லையா???

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

//ரிலாக்ஸாக இண்டர்நெட்டில் தமிழ்மணம் பார்த்துக்கொண்டும், ப்ளாக் படித்து கொண்டும், போனில் அரட்டை அடித்து கொண்டும் 8-9 மணி வரை வேலை செய்யும் பழக்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு நம்மையே சாரும் என்பது என் எண்ணம்.//
May be this is true in your case.

:)))

In my case the reason was pathetic on-site co-ordination. I didn't even know about Thamizmanam when I worked there.

-Same old Ex-employee of Infy. //

Even I didnt know abt Tamil blogs when I was at off-shore... Here also I am blogging after 11 PM. (After off-shore call).

G.Ragavan said...

நல்ல பதிவு வெட்டி. இத்தனை செய்திகளோடு இன்னொரு செய்தி. "Done love your company. Because your company doesnt love you." என்று சொன்ன ஒரே ஆள் அவர்தான். அதன் உள்ளர்த்தம் புரிந்தால் அவர் சொன்னதன் உண்மை புரியும்.

கார்த்திக் பிரபு said...

thanks gi ra!!

namma ji and imsai arasi and siva ellaraiyum kooopidunga andha ilaikarari oru valai pannalam

இராம் said...

//உலகத்தரம் வாய்ந்த ஜிம்னாஸியம், ஸ்விம்மிங் பூல், யோக க்ளாஸ் என்று ஊழியர்கள் உடல் நலம் பேணும் வகையில் பல விதத்திலும் உதவும் மூர்த்தியை என்ன செய்யலாம்???//

இம்புட்டு இருக்காப்பா??? ஜாகையை நானும் மாத்தலாமின்னு யோசிக்கிறேன் :)

dondu(#11168674346665545885) said...

//I got to be at office between 8:15 AM to 5:00 AM.//
//Typo! its between between 8:15 AM to 5:00 PM.//


Grammar mistake!!!!

Either say: I got to be at office from 8:15 AM to 5:00 PM

Or:
I got to be at office between 8:15 AM and 5:00 PM.

Regards,
Dondu N.Raghavan

இம்சை அரசி said...

வந்துட்டேன் கார்த்திக்...

எங்க நம்ம ஜி??? ஆளையே காணோம்???

அவரும் வரட்டும். எல்லாரும் ஒண்ணா போயி அவர உண்டு இல்லைனு ஆக்கிடலாம்...

அப்புறம் இந்த பதிவுக்காக நம்ம வெட்டிக்கு ஒரு பெரிய ஜே!!!!!!!

சிவா said...

இந்தியர்கள் அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் (குறிப்பாக டீம் லீட், மேனேஜரும் இருந்து விட்டால் ) 8 AM to 8 PM தான். இது U.S க்கும் பொருந்தும் ( with out overtime. )

ஆகவே நான் கடந்த 5 ஆண்டுகளாக நம்ம ஆட்கள் அதிகம் அல்லது மேனேஜராக இருந்தால் ஒரு குட் பை சொல்லிவிட்டு வந்து விடுவேன்.

சிவா said...

//Grammar mistake!!!!

Either say: I got to be at office from 8:15 AM to 5:00 PM

Or:
I got to be at office between 8:15 AM and 5:00 PM.

Regards,
Dondu N.Raghavan //

டோண்டு சார் ஆங்கிலதை தப்பாக எழுதுவது அல்லது தமிழ் நாட்டில் தான் கேலிக்குரியது அமெரிக்காவில் இல்லை. எப்படி எழுதினாலும் பேசினாலும் தப்பாக எடுதுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் ஒரு வார்த்தை கூட ஆங்கிலதில் பேசத (இந்தியாவில் இருந்த வரை) நான் எல்லாம் இங்கு 10 வருடமாக வசித்து வருகிறேன்.

Unmai said...

//
மூர்த்தியை பற்றி அவதூறு கிளம்பியதாலே .....
//

காந்தியையே விட்டுவைக்கவில்லை !
இதுக்கேல்லாம் கவலை பட கூடாது.

- உண்மை

SathyaPriyan said...

//Will it be ok if its just in words?
I worked in a team where I had to be at work up to 9PM almost everyday. (Offically its not flexi-timing. I got to be at office between 8:15 AM to 5:00 AM.).

If you say it all depends on team and project, Why is it like that? does those teams are out of NarayanaMurthy's (the then CEO) Infy ?

I agree there is state of art Gym, Sports, etc.. etc.. How many of us ever got time to enjoy all those (except who were on bench)?

-An Ex-employee of Infy.
//

As an ex-infy employee, I think I can answer this. I worked there for 4 years and in those 4 years we had delivered 4 major and really big projects and I had stayed late only for a few days. Infact I can count the days I used the night shuttle or 9PM bus with my fingers. Also when we do not have sufficient work to do, my manager advices us not to stay late or enter 8.5 in the time entry system. He used to say, if we do not have work for 8.5 hours a day, it is not our problem, but it is his problem. I used to follow the same when I became the lead there. So its all the very same top down approach. I will be like how my manager is.

It definitely depends on managers. For a company like infy, CEOs can only advice people. They cannot get into each and every project and check the status. Infact the infy QA team is really good. Once you enter the metrics, they really investigate why the actual effort over shooted the scheduled effort and the respective managers need to explain.

Nandha said...

இலைக்காரன் அவர்களின் பதிவை பார்த்த போதே அதை மறுத்து சில புள்ளிவிவரகளை சேகரித்து, அதனை தனியே ஒரு பதிவாக போடலாம் என்றிருந்தேன். நல்ல வேலையாக அதனை நீங்களே செய்து விட்டீர்கள்.

பல பொறியாளர்களாலும் பெரிதும் மதிக்கப் படுகின்ற ஒரு மனிதரை போகிற போக்கில் சீண்டி விட்டு போவது நன்றா?

உண்மையிலேயெ அவ்வாறு நடந்திருந்தாலும் அதற்கு நாராயண மூர்த்தியும், ப்ரேம்ஜியும் காரண கர்த்தா ஆகி விட முடியாது.

இது அந்தந்த டீம் லீடர் மற்றும் டீம் மெம்பர்ஸ் மட்டுமே பொறுப்பாகி விட முடியும். வேண்டுமானால் இது போன்ற காமன் பார்ட்டிகளில் மது மற்றும் இன்ன பிற கேளிக்கைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க நம் போன்றோர் முயலலாமே தவிர, ஏற்கனவே அரசியல் வாதிகளால் நொந்து போயிருக்கும் அவர்களை நாமும் 'வலைப்பதிகிறோம்' என்ற பெயரில் நோகடிக்க வேண்டாம்.

தம்பி said...

எதிர்வினைப்பதிவுகள், பதில் பதிவுகள் இப்படி ஆரோக்கியமான விதத்திலும் பதியலாம்.

சபாஷ் வெட்டி!

Arunkumar said...

Nalla padivu Vetti.
Murthy is one of India's idols and my fav human being too.

But for ppl like him, America will only be in dreams and movies for 90% of Indians here !!!

சீனு said...

சூப்பர் போஸ்டிங்.

//Love your work not your company - NRN//

சூப்பர்.

//If you say it all depends on team and project, Why is it like that? does those teams are out of NarayanaMurthy's (the then CEO) Infy ?//

Sometime this depends on the person too and not only on the team and projects.

Those who leave the company does not leave due to the company, but due to the manager.

செல்வன் said...

இந்த மாதிரி மனிதர்களை இந்தியாவின் தொழில்துறை தந்தை என கொண்டாடுவது உழைப்பை மதிக்கும் ஒவ்வொருவரின் கடமையுமாகும்.அமெரிக்காவில் இவர் பிறந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்கள்.

இந்தியாவில் சாப்ட்வேர் கல்விகற்ற ஒவ்வொரு இளைஞனும் ஆதர்ச நாயகனாக இவரை மனதில் கொண்டிருப்பதே இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு சமம்.இன்னும் ஆயிரமாயிரம் நாராயணமூர்த்திகள் இந்தியாவெங்கும் உருவாகட்டும்.

Maya said...

அன்பு வெட்டி அவர்களே...

நம்ம ஊர்ல எதைச் செய்ஞ்சாலும் அதை மறுத்து சொல்ல ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும்..அதுல ஒரு ரகம்தான் இலையின் பதிவு...இந்த மாதிரி நிறைய பேர் நம்ம வலைப்பதிவுல பார்க்கலாம்..புரியாத மொழி ஒன்னு எடுத்துக்கிட்டு அதுல எதாவது ஒரு பாராவ போட்டு அர்த்தம் என்னனு கேட்க வேண்டியது..இல்ல செத்த மொழினு திட்டவேண்டியது..இந்த மாதிரி கோஷ்டிகள் தான் வெட்டி..என்ன நல்லது நடந்தாலும் அதை எதிர்கிறது..வேணும்னா பாருங்க இந்த நோய்டா குழந்தைகளை கொன்ன பாவிக்கு தூக்குன்னு வந்ததுன்னு வச்சுக்கங்களேன்..எத்தனை பேர் கிளம்புவாங்க..அதாவது எல்லாரும் பாராட்டினா எதிர்க்க வேண்டியது..எதிர்த்தா பாரட்ட வேண்டியது..கொழுப்பு எடுத்து ஆடினா அதுக்கு நாராயண மூர்த்தி என்ன பண்ணுவார்??

எல்லாவற்றிக்கும் மேல முக்கியமான காரணம் என்ன தெரியுமா இந்த மாதிரி எழுதுபவர்களுக்கு..
1)வயித்தெரிச்சல்.
2)தாழ்வு மனப்பான்மை..

செந்தமிழ் ரவியை என்ன பண்ணலாம்?? இந்த வரிசையில் நாரயணமூர்த்தி அடுத்தது யாரப்பா??

உங்களின் நகைச்சுவை பதிவெல்லாம் அருமை..கலக்குங்க..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

ஜி said...

பத்தாயிரம் முதாலீட்டில் இந்தியாவை உலகப் பார்வைக்கு வைத்த அந்தப் பெரியவரை என்ன செய்யலாம்?

கோடியில் புரண்டாலும், எளிமையில் வாழும் அந்த நாயகனை என்ன செய்யலாம்?

'மூர்த்தி என்ன செஞ்சார்?', என்ற ஒரே கேள்விக்காக, பெங்களூர் விமான நிலைய கட்டமைப்புத் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்த அந்த மானஸ்தரை என்ன செய்யலாம்?

தனது நிறுவனத்தையும் தாண்டி, ஏழை, ஆதரவற்றக் குழந்தைகள், பெரியவர்களைக் காப்பதற்க்காக சமூக நல மன்றம் அமைத்த மூர்த்தியை என்ன செய்யலாம்?

சுனாமி, மழை சேதம் என்ற இயற்கை சீற்றட்த்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவ மக்களை தூண்டிய மூர்த்தியை என்ன செய்யலாம்?

என்னப் போன்ற எண்ணற்ற மக்களின் ஆதர்ச நாயகனாக இருக்கும் அந்த கதாநாயகனை என்ன செய்யலாம்?

இப்படி பல விசயங்கள செஞ்சிருக்காரு நம்ம தல.

இவனுங்க சும்மா பெக்காளித்தனமா ஒரே நாளுல ஃபேமஸாகணும்னு போடுற வேசம் அந்தப் பதிவு. அவனுக்கு எதிர்ப்பாட்டுப் பாடி அவன் நாமளே ஃபேமஸாக்கிடக் கூடாது...

ஜி said...

// இம்சை அரசி said...
வந்துட்டேன் கார்த்திக்...

எங்க நம்ம ஜி??? ஆளையே காணோம்???

அவரும் வரட்டும். எல்லாரும் ஒண்ணா போயி அவர உண்டு இல்லைனு ஆக்கிடலாம்...//

ஏதாவது ஒன்னுதானே ஆக்க முடியும். எய்தர் உண்டு ஆர் இல்லை. எப்படி ரெண்டுத்தையும் ஆக்குவீங்க?? ;)))

//அப்புறம் இந்த பதிவுக்காக நம்ம வெட்டிக்கு ஒரு பெரிய ஜே!!!!!!! //

போட்டுடுவோம்....

கோபிநாத் said...

சூப்பர் பதிவு வெட்டி...

நம் நாட்டின் மதிக்க தக்க ஒரு மனிதனை பற்றி பல அருமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

\\
G.Ragavan said...
நல்ல பதிவு வெட்டி. இத்தனை செய்திகளோடு இன்னொரு செய்தி. "Done love your company. Because your company doesnt love you." என்று சொன்ன ஒரே ஆள் அவர்தான். அதன் உள்ளர்த்தம் புரிந்தால் அவர் சொன்னதன் உண்மை புரியும்.\\

புரிகிறது ஜி.ரா சார்...
எவ்வளவு பெரிய உண்மை!!!!

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

நல்ல பதிவு வெட்டி. இத்தனை செய்திகளோடு இன்னொரு செய்தி. "Done love your company. Because your company doesnt love you." என்று சொன்ன ஒரே ஆள் அவர்தான். அதன் உள்ளர்த்தம் புரிந்தால் அவர் சொன்னதன் உண்மை புரியும். //

ஜி.ரா,
சரியா சொன்னீங்க... மிக்க நன்றி

.................................

//கார்த்திக் பிரபு said...

thanks gi ra!!

namma ji and imsai arasi and siva ellaraiyum kooopidunga andha ilaikarari oru valai pannalam //

கார்த்தி,
நோ டென்ஷன்...

நானே போதும்... பதில் சொல்லிக்கிறேன். இதுக்கு இவ்வளவு பேரா???
.................................

//இம்புட்டு இருக்காப்பா??? ஜாகையை நானும் மாத்தலாமின்னு யோசிக்கிறேன் :)//

ராமண்ணா,
இக்கரைக்கு அக்கரை பச்சை ;)

.................................

//dondu(#11168674346665545885) said...

//I got to be at office between 8:15 AM to 5:00 AM.//
//Typo! its between between 8:15 AM to 5:00 PM.//


Grammar mistake!!!!

Either say: I got to be at office from 8:15 AM to 5:00 PM

Or:
I got to be at office between 8:15 AM and 5:00 PM.

Regards,
Dondu N.Raghavan //

நீங்க ஏன் இந்த மாதிரி Grammer சொல்லி தர ஒரு வலைப்பூ ஆரம்பிக்க கூடாது??? நிறைய பேருக்கு பயனுள்ளதா இருக்கும்...

.................................

//இம்சை அரசி said...

வந்துட்டேன் கார்த்திக்...

எங்க நம்ம ஜி??? ஆளையே காணோம்???

அவரும் வரட்டும். எல்லாரும் ஒண்ணா போயி அவர உண்டு இல்லைனு ஆக்கிடலாம்...

அப்புறம் இந்த பதிவுக்காக நம்ம வெட்டிக்கு ஒரு பெரிய ஜே!!!!!!! //

இ.அரசி,
நோ டென்ஷன்...

.................................

// சிவா said...

இந்தியர்கள் அதிகமாக உள்ள இடங்களில் எல்லாம் (குறிப்பாக டீம் லீட், மேனேஜரும் இருந்து விட்டால் ) 8 AM to 8 PM தான். இது U.S க்கும் பொருந்தும் ( with out overtime. )

ஆகவே நான் கடந்த 5 ஆண்டுகளாக நம்ம ஆட்கள் அதிகம் அல்லது மேனேஜராக இருந்தால் ஒரு குட் பை சொல்லிவிட்டு வந்து விடுவேன். //

ரொம்ப தெளிவா இருக்கீங்க :-)

கோபி(Gopi) said...

நல்ல பதிவு.

ஒரு சந்தேகம்... நாராயணமூர்த்தி இப்போ இன்போசிஸ்லயா இருக்கார்? ரிட்டையராயிட்டார்ன்னு கேள்விப்பட்டேனே... அவரை ஏன் எல்லாரும் "இப்ப" காய்ச்சறாங்க?

ப்ரேம்ஜி பத்தி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இந்தச் செய்தியில என்ன சொல்றாருன்னா , தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் தொழில்வரியை (Professional Tax) அதிகரிக்கனுமாம். ஆனா அவர்கள் மூலம் இவர் சம்பாதிக்கும் கோடிகளின் மீதான (Sales/Service Tax) வரிகளைக் குறைக்கனுமாம். இது எப்படி இருக்கு?

தயவுசெய்து அவரோடயெல்லாம் நாராயணமூர்த்தியை ஒப்பிடாதீங்க.

கோபி(Gopi) said...

//Those who leave the company does not leave due to the company, but due to the manager.//

சரியாச் சொன்னீங்க. "People live and leave for their manager"ன்னு சொல்லுவாங்க. பலமுறை நேரில் கண்டிருக்கிறேன்.

Ex-employee of Infy,

நாம வேலை செய்யறது நம்ம கையிலங்க. சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிக்கிட்டு பயந்துகிட்டே இருந்தா சரிவராது. முடியாது 8-5 தான் வேலை செய்வேன்னு சொன்னா என்னா செய்வாங்க? மிஞ்சி மிஞ்சி போனா அப்ரைசல்ல கை வைப்பாங்களா? சந்தோசமா வச்சிக்கட்டும். இன்னும் நல்ல சம்பளத்துல வேற வேலை பாத்துக்கலாம். இப்ப IT Job Market நல்லாத்தான் இருக்கு... புதியவர்களுக்கு தான் கொஞ்சம் கஷ்டம்.

Meena said...

All of your posts are damn good :) Excellent creative & comedy.. Believe me, I read your the whole day & read all your posts :)

G.Ragavan said...

// கோபி(Gopi) said...
நல்ல பதிவு.

ஒரு சந்தேகம்... நாராயணமூர்த்தி இப்போ இன்போசிஸ்லயா இருக்கார்? ரிட்டையராயிட்டார்ன்னு கேள்விப்பட்டேனே... அவரை ஏன் எல்லாரும் "இப்ப" காய்ச்சறாங்க? //

உண்மைதான் கோபி. தன்னுடைய அறுவதாவது வயதில் அவர் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டார். அதற்கு முன்பு வரை ஒரு மாதத்தில் இத்தனை இன்போசிஸ் ஊழியர்களைச் சந்திக்க வேண்டும் என்று திட்டம் வைத்து...அதுவும் பல ஊர்களில்...சந்தித்து...அவர்கள் ப்ரோஜக்ட் எப்படிப் போகிறது என்று விசாரித்து...ம்ம்..என்னத்தச் சொல்றது!

// ப்ரேம்ஜி பத்தி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அவர் இந்தச் செய்தியில என்ன சொல்றாருன்னா , தகவல் தொழில்நுட்ப பணியாளர்களின் தொழில்வரியை (Professional Tax) அதிகரிக்கனுமாம். ஆனா அவர்கள் மூலம் இவர் சம்பாதிக்கும் கோடிகளின் மீதான (Sales/Service Tax) வரிகளைக் குறைக்கனுமாம். இது எப்படி இருக்கு?

தயவுசெய்து அவரோடயெல்லாம் நாராயணமூர்த்தியை ஒப்பிடாதீங்க. //

இன்போசிஸ்சையும் விப்ரோவையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் இன்போசிஸ்சில் wealth distribution is transparent. But in wipro more than 90 percentage in single hand. அதைப் பற்றிப் பேசியதால்தான் விப்ரோவின் நம்பர்-1 விப்ரோவை விட்டே விலக நேர்ந்தது.

Anonymous said...

நம்ம நாட்டு அரசியல்வாதிகள், சாமியார்கள், சினிமாக்காரங்கள் ஆகிய இந்த மூன்று பேர்வழிகளிடம் இருந்து நாரயணசாமி அவர்களைக் காப்பாற்றினால் போதும். நாடு முன்னேறும். நாமும் முன்னேறுவோம்.

புள்ளிராஜா

நாகை சிவா said...

//"நாராயண மூர்த்தியை என்ன செய்யலாம்?" //

கை எடுத்து கும்பிட வேண்டாம், அவமரியாதை செய்யாமல் ஆச்சும் இருக்கலாம்...

வெட்டி எனக்கு ஒரே ஒரு சந்தேகம், கடினமான உழைப்பால் உயர்ந்து ஒரு நிலை அடைந்து அதன் மூலம் பலருக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் இவரை மாதிரி ஆட்களையே பொழுதன்னைக்கும் சீண்டிக்கிட்டு இருக்காங்களே, அது ஏன்.....

செல்வன் said...

//வெட்டி எனக்கு ஒரே ஒரு சந்தேகம், கடினமான உழைப்பால் உயர்ந்து ஒரு நிலை அடைந்து அதன் மூலம் பலருக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் இவரை மாதிரி ஆட்களையே பொழுதன்னைக்கும் சீண்டிக்கிட்டு இருக்காங்களே, அது ஏன்.....//

அது வேறு ஒண்ணுமில்லை நாகையாரே.கரகாட்டக்காரனில் கவுண்டர் சொல்வது போல் "உள்ளூர் வயித்தெரிச்சல் கோஷ்டியின் புலப்மல்" இது.அவ்வளவுதான்.

இந்திய நண்டுகள் கதையை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டால் பிரச்சனையில்லை:))

Syam said...

என்ன வெட்டி..நாராயணமூர்த்திய ஏணில ஏத்தி விட்டு அம்போனு விட்டுட்டீங்க...அவர இறக்கி விட்டுட்டு அடுத்த போஸ்ட் போடுங்க :-)

Deepa said...

nalla padhivu, keep it up vetti paiya, relaxed reading ur padhivu