தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, March 06, 2007

330 மில்லியன் டாலர் - எனக்கே எனக்கா?????

ஒரு நாளைக்கு எவ்வளவு ஆணியத்தான் புடுங்குவான் மனுசன்? எவ்வளவு புடுங்கினாலும் அந்த ரூம்ல இருக்கற ஆணி என்னாச்சி இந்த ரூம்ல இருக்கற ஆணி என்னாச்சினு விடாம புடுங்க சொல்லிட்டு இருக்காரு மேனஜரு... எவ்வளவு வேலை செஞ்சாலும் விடாம வேலை வாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவண்டானு சொல்லி பார்த்துட்டேன். ஆனா வேலை குறையற மாதிரி தெரியல.

இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்னு யோசிக்கும் போது தான் பக்கத்து சீட்டுல இருக்கற ஒரு வெள்ளக்கார தொர இன்னைக்கு மெகா மில்லியன் சீட்டு வாங்கலையானு கேட்டாரு. அது என்னனு கேட்டா லாட்டரி டிக்கெட், பரிசு 330 மில்லியன் டாலர்னு சொல்லிட்டாரு... ஆஹா இத நம்ம ஊர் காசுக்கு கன்வெர்ட் பண்ணா கம்பியூட்டரே வெடிச்சிடும் போல இருக்கேனு நானும் சிந்திக்க ஆரம்பிச்சிட்டேன்

சரி உனக்கு பரிசு கிடைச்சா என்ன பண்ணுவென்னு கேட்டான்...

கேக்கறான் பாரு கேள்விய. 330 மில்லியன் டாலருக்கு செலவா இல்லை... நாளைக்கே இந்தியாவுக்கு புக் பண்ணி கிளம்ப வேண்டியதுதான்னு சொன்னேன்.

நாளைக்கு கிளம்பறதுக்கு உனக்கு எப்படி டிக்கெட் கிடைக்கும்னு கேட்டான் மண்டையன்.

நான்: ஏன்டா நான் என்ன பிளைட் டிக்கெட் புக் பண்ணி போறதுக்கு சாதாரண ஆளா? நான் யார்? 330 மில்லியனுக்கு ஓனர். அப்படியே ப்ளைட்டேயே வாங்கிடுவேன்...

அவன்: உனக்கு தான் ஓட்டத்தெரியாதே!!!

நான்: டேய் V ஜாயிண்ட் மண்டையா - அவ்வளவு காசு போட்டு ப்ளைட் வாங்கறேன். கூட பைலட்ட வாங்க மாட்டனா? அதுவும் நார்மெல் ப்ளைட் மாதிரி ஆம்பிளை பைலட் கிடையாது மேன். கம்ப்ளீட்டா பொண்ணுங்கதான். பைலட்- கோ-பைலட் எல்லாம் பொண்ணுங்கதான்.

அவன்: உங்க ஊர்ல ரன் வே இருக்காதே!

நான்: டேய்! நான் சென்னை வரைக்கும் என் சொந்த ப்ளைட்ல போவேன். அப்பறம் என் சொந்த எலிகாப்டர்ல போவேன். இது வரைக்கும் எங்க ஊருக்கு யாரும் எலிகாப்டர்லையே வந்ததில்லை. நான் தான் முதல் முறையா போக போறேன்.

அவன்: இந்தியா போய் அவ்வளவு பணத்தையும் எப்படி செலவு பண்ணுவ?

நான்: செலவு செய்யறதாடா கஷ்டம். 30 நாள்ல 30 கோடி எப்படி செலவு செய்யனும்னு எங்க தலைவர் சொல்லி கொடுத்துருக்காரு. அவர் சிஷ்யன் நான் 30 நாள்ல 30 மில்லியன் செலவு செய்வன் மேன். நான் யார் 330 மில்லியன் டாலருக்கு ஓனர்.

அவன்: அப்பறம் வேற என்ன பண்ணவ?

நான்: அப்படியே இந்த இன்போஸிஸ் இல்லை விப்ரோ இந்த மாதிரி ஏதாவது ஒரு கம்பெனிய வாங்கி போட வேண்டியது தான். பின்னாடி யூஸாகும் பாரு.

நான் சொன்னதையெல்லாம் சீரியஸா பேசறேன்னு நினைச்சி முகத்தை பயங்கர சீரியஸா வெச்சி கேட்டுடுருந்தாரு அந்த வெள்ளக்காரரு...

பக்கத்தில் இருக்கும் நம்ம ஊர் பையன்...

இன்போஸிஸ், விப்ரோ எல்லாம் உனக்கு விக்க மாட்டாங்க. வேணும்னா ஸ்டாக் வாங்கி போர்ட் மெம்பராயிடலாம்...

நான்: ஓ நோ!!! சரி அப்ப போர்ட் மெம்ராயி உனக்கு ப்ரோமோஷன் தரக்கூடாதுனு ரூல்ஸ் போட்டுடுவேன்...

நண்பன்: ஏன்டா நாயே! இன்னும் நீ டிக்கெட்டே வாங்கல. அதுக்குள்ள நீ இண்போஸிச வாங்க போறியா? அதுவும் இல்லாம எனக்கு ப்ரோமோஷன் கிடைக்காம தடுக்கறதுல உனக்கு என்னடா அப்படி ஒரு அல்ப சந்தோஷம்

நான்: அப்பறம் என்னுடைய பவரை நான் எப்படி காட்டறது?

நண்பன்: இதத்தான் நாய குளிப்பாட்டி நடு வீட்ல வெச்சாலும்னு பழமொழி சொல்வாங்க. போர்ட் மெம்பராயி சண்டை போட உனக்கு ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர்தான் கிடைச்சானா? (இத மட்டும் அவன் தமிழ்ல சொல்லிட்டான்)

அவன்: பள்மொள் - what is that???

நான்: டேய் மைக் மண்டையா. அது பள்மொள் இல்லை. பழமொழி. பழம் Means Fruit, மொழி means Language. பழமொழி means Fruit Language.

அவன்: Fruit Language??? What is that?

நான்: ஓ நீங்க அதெல்லாம் பேசமாட்டீங்களா? இந்தியாவுல பூ, பழம் எல்லாத்துக்கூடையும் நாங்க பேசுவோம். இத விட எங்க ஊர்ல ஒரு சாமியார் இருந்தாரு. அவரு ஆடு, மாடு, காக்கா குருவிக்கிட்ட எல்லாம் பேசுவாங்க

அவன்: ரியலி?

நான் : ஆமாம்... சுண்டெலிக்கிட்ட கூட நான் பேசுவேன்...

நண்பன்: ஏன்டா அவனை இப்படி கலாய்க்கற. மைக் பழமொழி means old saying.

அவன்: Balaji is always funny...

நான்: கவலைப்படாத மைக் இதுக்காகவே உனக்கு ஒரு மில்லியன் டாலர் தரேன். அவ்வளவு பணத்தை வெச்சி நான் மட்டும் என்ன பண்ண போறேன்.

இதை சொன்னவுடனே அவன் முகத்தை பார்க்கணுமே. நிஜமாலுமே கொடுத்த மாதிரி ஒரு சந்தோஷம். டிக்கெட்டே வாங்கதவன் எப்படி காசு கொடுப்பானு ஒரு நிமிஷமாவது யோசிக்கனும்.

330 மில்லியன் டாலரை வெச்சி என்னதான் செய்யறது??? நீங்க தான் நல்லதா ஐடியா கொடுங்களேன்...

இண்வெஸ்ட்மெண்ட் எல்லாம் வேணாம்... ஜாலியா செலவு பண்ணனும். அவ்வளவு தான்...

46 comments:

துளசி கோபால் said...

//330 மில்லியன் டாலரை வெச்சி என்னதான் செய்யறது???
நீங்க தான் நல்லதா ஐடியா கொடுங்களேன்...//

மொதல்லே காசைக் கண்ணுலே காட்டுங்க. அப்புறமா நம்ம ஐடியாவை எடுத்துவுடறேன்:-))))

ஜி said...

330 மில்லியன் டாலர் எனக்கா???

நம்ம இந்தியாவோட கடனெல்லாம் அடச்சிட்டு அப்படியே முஸாரஃபுக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்து பாகிஸ்தானையும் சேத்து ஒரு ரப்பரால உலக மேப்ப சுதந்திரத்துக்கு முன்னாடி இருந்தது மாதிரி மாத்திட்டு....

இதெல்லாம் பண்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க..

நம்ம என்ன பண்ணப் போறோம்... மாலத்தீவுல ஒரு தீவ வாங்கிட்டு, அதுல 10 ஸ்டார் ஹோட்டல ஒன்னு வாங்கி, அப்புறம்.. நான் போய் திங்க் பண்ணிட்டு வர்றேன்...

நெல்லை காந்த் said...

//330 மில்லியன் டாலரை வெச்சி என்னதான் செய்யறது???
நீங்க தான் நல்லதா ஐடியா கொடுங்களேன்...//

Give 100 millions to me, I will start the வெட்டிப்பயல் Ladies College and வெட்டிப்பயல் Ladies School in all over the world.

.:: மை ஃபிரண்ட் ::. said...

முட்டை விக்கிறவன் முட்டையை விற்று பணக்காரன் ஆகுறதாஇ கனவு காண்டு, வச்சிருக்கிற முட்டையையும் உடைந்து நிற்க்கும் காட்சிபோல ஆகிவிட்டது உங்க கதை.. ஹாஹாஹா.. nice comedy..

Elango CT said...

நீயூயார்க்ல அது இப்போ 370 மில்லியன் ஆயிருச்சி. அதை வாங்காம தான் இந்த பேச்சா? :)

எங்க ஆபிஸ்ல இப்போ தான் எல்லார்கிட்டையும் பத்து பத்து டாலரா தேத்தி, 100 டாலருக்கு வாங்கிருக்கானுங்க, வந்தா 10 பேரு பங்கு போட்டுக்க வேண்டியது தான். ஆனா என்ன எப்பவும் போல எங்கயாவது mid-east-ல Missouri-லயோ, Indiana-விலையோ இருக்குற ஏதாவது ஒரு மாங்காய்க்கு கிடைக்கும். :(

குறும்பன் said...

எங்க ஊர்ல $370 million பரிசு சாமியோவ்.

அபி அப்பா said...

கையில குடுத்து பாருங்க வெட்டிதம்பி! பாப்பாவுக்கு கப்பல் செஞ்சு குடுத்தே கரைச்சுடுவேன்:-)))

வெங்கட்ராமன் said...

///////

அதுவும் நார்மெல் ப்ளைட் மாதிரி ஆம்பிளை பைலட் கிடையாது மேன். கம்ப்ளீட்டா பொண்ணுங்கதான். பைலட்- கோ-பைலட் எல்லாம் பொண்ணுங்கதான்.

//////

அப்புறம் அப்புடியே மேலயே போய்ட வேண்டியது தான்

330 மில்லியன் டாலரை = 1,4,85,00,00,000 கோடி.
அதாவது ஆயிரத்து நானூற்று என்பத்தஞ்சு கோடி.

ஸ் அபா ரூபாயா கன்வர்ட் பண்ணவே கண்ண கட்டுதே

G3 said...

Romba kashtapada venaam..

En account number tharen.. adhukku transfer pannidunga.. romba jimpla :D

வெட்டிப்பயல் said...

//Collapse comments

துளசி கோபால் said...

//330 மில்லியன் டாலரை வெச்சி என்னதான் செய்யறது???
நீங்க தான் நல்லதா ஐடியா கொடுங்களேன்...//

மொதல்லே காசைக் கண்ணுலே காட்டுங்க. அப்புறமா நம்ம ஐடியாவை எடுத்துவுடறேன்:-)))) //

டீச்சர்,
காசு வந்தவுடனே ஊருக்கு பறந்துடுவோமில்ல... அப்பறம் எங்க கண்ணுல காட்ட...

........................
ஜி,

எலேய்! இந்த கடனெல்லாம் அடைக்கலாம் தான்.

காஷ்மீர் பிரச்சனை தீரும்னா தாராளமா முழுசையும் தந்திடுவேன்... நான் சம்பாதிக்கறதையும் சேர்த்து...

...................................
நெல்லை காந்த்,
//
Give 100 millions to me, I will start the வெட்டிப்பயல் Ladies College and வெட்டிப்பயல் Ladies School in all over the world.//
ஐடியாவிற்கு நன்றி!!! நாங்களே பள்ளிக்கூடம் ஆரம்பிச்சிடறோம் ;)

.....................................

//:: மை ஃபிரண்ட் ::. said...

முட்டை விக்கிறவன் முட்டையை விற்று பணக்காரன் ஆகுறதாஇ கனவு காண்டு, வச்சிருக்கிற முட்டையையும் உடைந்து நிற்க்கும் காட்சிபோல ஆகிவிட்டது உங்க கதை.. ஹாஹாஹா.. nice comedy.. //

டிக்கெட்டே வாங்கல... அப்பறம் எங்கத்த போயி ஆசை பட... நமக்கெல்லாம் அந்த ராசியில்லைங்க :-)

.................................

// Elango CT said...

நீயூயார்க்ல அது இப்போ 370 மில்லியன் ஆயிருச்சி. அதை வாங்காம தான் இந்த பேச்சா? :)
//

ஓ இப்ப 370??? நேத்து 330...
டிக்கெட் வாங்கினா ரிசல்ட் பார்க்கதானே ஆர்வமா இருப்போம். பதிவு எப்படி போட???

// எங்க ஆபிஸ்ல இப்போ தான் எல்லார்கிட்டையும் பத்து பத்து டாலரா தேத்தி, 100 டாலருக்கு வாங்கிருக்கானுங்க, வந்தா 10 பேரு பங்கு போட்டுக்க வேண்டியது தான். ஆனா என்ன எப்பவும் போல எங்கயாவது mid-east-ல Missouri-லயோ, Indiana-விலையோ இருக்குற ஏதாவது ஒரு மாங்காய்க்கு கிடைக்கும். :( //
விழுந்தா கம்பெனில இருக்கற எல்லாரும் ஜிட்டா ;)

வெட்டிப்பயல் said...

//குறும்பன் said...

எங்க ஊர்ல $370 million பரிசு சாமியோவ். //

இப்ப நிறைய பேர் வாங்கி விலை ஏறிடுச்சி ;)

................................

// அபி அப்பா said...

கையில குடுத்து பாருங்க வெட்டிதம்பி! பாப்பாவுக்கு கப்பல் செஞ்சு குடுத்தே கரைச்சுடுவேன்:-))) //

ஆஹா... நம்ம இந்தியன் தாத்தா கமல் தோத்தாரு ;)

அப்படியே கத்தி கப்பல் செய்ங்க ;)

................................

//அப்புறம் அப்புடியே மேலயே போய்ட வேண்டியது தான்//

அப்படியெல்லாம் ஆகாதுங்க... அவுங்களும் தெளிவாதான் படிச்சிட்டு வந்திருப்பாங்க ;)

//
330 மில்லியன் டாலரை = 1,4,85,00,00,000 கோடி.
அதாவது ஆயிரத்து நானூற்று என்பத்தஞ்சு கோடி.

ஸ் அபா ரூபாயா கன்வர்ட் பண்ணவே கண்ண கட்டுதே//

இதுக்கு தான் நான் கன்வெர்ட் பண்ணி போடல :-)

..................................

//G3 said...

Romba kashtapada venaam..

En account number tharen.. adhukku transfer pannidunga.. romba jimpla :D //

நாங்க தான் டிக்கெட்டே வாங்கலயே ;)

வேணும்னா நம்ம அக்கவுண்ட்டுக்கு ஒரு 1000$ அனுப்புங்கக்கா நான் வேணா உங்க பேரை சொல்லி டிக்கெட் வாங்கறேன்... விழுந்தா 10000$ உங்களுக்கு... டீல் ஓக்கோவா???

தேவ் | Dev said...

எச்சூயுஸ் மீ.. மை கூட நல்லாச் செலவு பண்ணுவேம்.. மே ஐ கம் இன்...ப்ளீஸ்

மணிகண்டன் said...

WELCOME TO FABULOUS LAS VEGAS!!

மூனே நாள்ல மொத்த பணத்தையும் செலவழிச்சுட்டு திரும்ப ஆணி புடுங்க பழைய இடத்துக்கே போயிடலாம் :)

Pranni said...

//330 மில்லியன் டாலரை வெச்சி
// என்னதான் செய்யறது???
இது என்ன பெரிய விசயமா? 100 மில்லியன் டாலருக்கு விஜய் + ராஜ் டீவிய வாங்கனும். அப்புறம் ஒரு கட்சி ஆரம்பிச்சு மீதி காச அதுல போட்டா டமில்நாட்டோட நிரந்தர முதல்வர் நான் தான் :-)

இலவசக்கொத்தனார் said...

நான் போட்ட கமெண்ட் வந்துச்சா இல்லை பிளாக்கர் தின்னிடுச்சான்னு தெரியலையே.....

எச்சூஸ். நாங்க எல்லாம் அட்வைஸ் குடுக்கணமுன்னா, ஃபீஸ் எடுத்து முதலில் முன்னாடி வைக்கணும். அதைக் கண்ணில் காட்டு மேன்.

மணிகண்டன் said...

16 22 29 39 42 Mega 20

இந்த நம்பர் யாராவது வாங்கியிருக்கீங்களாப்பு..இதுக்குதான் 370 மில்லியன் டாலர் பரிசாம்!

எனக்கு இல்ல..எனக்கு இல்ல. 5 டாலர் போச்சு :(

சிறுதுளி said...

அண்ணா andha ticket vilai evalavu indha thambiku onu vangi kodudha nalairukum ungoloda dhayavil.nangalum kanavu kanvomla padu pavipasanga adicha koothala tamilnadu arasudhan lottery stop panivitadhu.......kasu evolonu soneengana anupi veipen.oru cinema company arambipen............

வடுவூர் குமார் said...

இதுவரை வந்து கை நனைச்சவங்களுக்கு கொஞ்சம் போட்டு கொடுங்க சரியாகப்போகிவிடும்.
:-))

நாகை சிவா said...

பாத்தியா வெட்டி எங்களையும் கேணப் பயல் ஆக்க முயற்சி பண்ணுற !!!!

இன்னும் கல்யாணமே ஆகலையாம், பிறக்க போற பிள்ளையின் பையனுக்கு (பேரனுக்கு) சம்மந்தம் பேசினாப்புல இருக்கு, நீ சொல்லுறது....

அதுக்கும் பாரு, ஒரு கூட்டம் வந்து அத பண்ணலாம் இத பண்ணலாம் உனக்கு வெட்டியா வெட்டி ஐடியா கொடுத்துக்கிட்டு இருக்காங்க

என்னமோ போ....

நாகை சிவா said...

வெட்டி,
இது போல தான் என் பிரண்ட் ஒருத்தன் அவனுக்கு 60 லட்சம் ஆஸ்திரேயிலா லாட்டரியில் பரிசு விழுந்து இருக்கு. வநதவுடன் உனக்கு அதில் 10 % தரேன் சொன்னான். அய்யா சாமி எனக்கு வேணாம் எல்லாத்தையும் நீயே வச்சு நல்லா இருனு போன வாரம் தான் சொன்னேன். அடுத்து நீர்ரோ........

Chakra Sampath said...

மெயில்ல அட்ரஸ் அனுப்பறேன். கை செலவுக்கு கொஞ்சம் மணியார்டர் பண்ணுங்க.

விஜயன் said...

அப்படியே முருகன் கோயில் பக்கமா ஒரு கடை போட்டு அஞ்சு அஞ்சு ரூவாக்கு வித்துறலாம்.

அட.. நீங்க முருகன் டாலர தான சொன்னீங்க??

காயர வெயில்ல ஏன்யா இப்படி போட்டு படுத்துறீங்க...

விஜயன்

G.Ragavan said...

330 மில்லியன் டாலட்தானா? ரொம்பக் கொஞ்சமாத் தெரியுதே!

ஊட்டியையோ கொடைக்கானலையோ வெலைக்கு வாங்கி ஒரு பங்களா கட்டிக்கிரனும். ஓரு நட்சத்திர ஓட்டல வெலைக்கு வாங்கீரனும். இல்லைன்னா சங்கிலித் தொடர் மளிகைக் கடைகளைத் தொறக்கலாம். அதுவுமில்லையா..இருக்குற பணத்த வங்கியில போட்டுட்டு....அதுல வர்ர வட்டியில அஞ்சு சதவீதத்தை ஊனமுற்ற மனவளர்ச்சியற்ற குழந்தைகளுக்குச் செலவழிக்கனும். இன்னொரு அஞ்சு சதவீதத்த வெச்சு முருகன் கோயில் கட்டனும். அங்க எல்லாரும் எங்கிட்டதான் துந்நூறு வாங்கனும். இன்னொரு அஞ்சு சதவீதத்த வெச்சி தூத்துக்குடி மாவட்டத்துக்கு நல்ல ரோடுக போடனும். விளாத்திகொளம், புதூரு, தூத்துக்குடி இங்கயிருக்குற அரசு அலுவலகங்கள கம்ப்யூட்டர்ல இணச்சு தகவல் பரிமாற்றத்தை லெட்டருக்குப் பதிலா மின்னஞ்சல்னு கொண்டு வரனும். அப்புறம்....அப்புறம்....ஊரு ஒலகமெல்லாம் சுத்திப் பாக்கனும். அப்புறம் ஒரு பெரிய தோல் மருத்துவ ஆராய்ச்சி மையம் வைக்கனும். அப்புறம்....அப்புறம்...தமிழ்நாட்டுக்கு முதல்வர் ஆகனும். அப்பத்தான 330 மில்லியன 1330 மில்லியன் ஆக்க முடியும். திருக்குறள் மாதிரி.

G3 said...

Hehe.. Andha ticket-a neengalae vaangi.. andha muzhu parisaiyum kooda neengalae vechikkonga.. ippo unga accountla evlo amountu irukko adha mattum enakku transfer pannina podhum.. Namakku peraasiyellam kedayaadhu paarunga :P

இம்சை அரசி said...

simple...
transfer everything to my account ;)))))

Dubukku said...

மொதல்ல ஐடியா குடுக்கறதுக்கு ஒருத்தர அப்பாயிண்ட் பண்ணிடுவோம்ல

தம்பி said...

ஐடியா குடுக்குறது எல்லாம் என்ன சாதாரணமா!

மொதல்ல அதுக்கு கொஞ்சம் காச வெட்டு அதுக்கப்புறம் தன்னால ஐடியா வரும்.

ஆப் ட்ராயர் செந்தில் said...

சூப்பர் ஸ்டார் சீடனான நீ சூப்பர் ஸ்டார் செய்த மாதிரியே என்னை வைச்சு ஒரு படமெடுப்பாயாக

ஜி said...

//Dubukku said...
மொதல்ல ஐடியா குடுக்கறதுக்கு ஒருத்தர அப்பாயிண்ட் பண்ணிடுவோம்ல//

அதுவும் அந்த காலத்து ரம்பா மாதிரி ;))))

Syam said...

எனக்கு இல்ல எனக்கு இல்ல 370 மில்லியன் எவனோ ஜெயிச்சிட்டு போய்ட்டான் :-)

வல்லிசிம்ஹன் said...

புதுசா இணைய இதழ் ஆரம்பிச்சு
அதில விசிட் செய்யரவங்களுக்கு
ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கலாமே:-)

Anonymous said...

330 மில்லியன் எடுத்துட்டு ஊட்டான்ட வாங்க செம மேட்டர் கீது.
http:beemboy-erode.blogspot.com

யாழினி அத்தன் said...

அது இதுன்னு செலவு பண்ணுணா ஒரு satisfaction இல்லாம போயிரும். அதனால இப்போ மேட்டர சொல்றேன்..இனாமாத்தான்..

குடுத்த காசுக்கு சும்மா ஜெக ஜோதியா எஞ்சாய் பண்ணனும்ன ஒரே தொழில் தானிருக்கு..

இன்வெஸ்ட்மெண்டுக்கு இன்வெஸ்ட்மெண்டும் ஆச்சு, ஜாலிக்கு ஜாலியும் ஆச்சு

சும்மா அரசியல் செல்வாக்கோட எஞ்சாய் பண்ணலாம்..

அது இன்னா தொழில் தெரியுமா?

சரி...நமக்கு தான் லாட்டரி இல்லன்னு ஆயிடுச்சி..அப்புறம் மேட்டர போட்டு உடச்சிட வேண்டியதுதான்..

எல்லா குளிர் பிரதேசங்களிலும் ஒரு சாமியார் மடத்த ஆரம்பி...அப்புறம் பாரு... இன்னிக்கு date-ல் இதவிட ஒரு நல்ல தொழில் (??) இல்லப்பா...

அதுசரி...330 மில்லியன் கிடைக்கனும்னா நீங்க US Citizen-ஆக இருக்கனும்..இல்ல Green Card-ஆவது வச்சிருக்கனும்..எப்பிடி வசதி...?

மணிகண்டன் said...

பாலாஜி,

இதை பாருங்க :)
http://www.cnn.com/2007/US/03/07/mega.millions/index.html

வெட்டிப்பயல் said...

போர் வாள்,
நீங்களும் தாராளமா வரலாம்... கனவு காணுங்கள்னு நம்ம பெருந்தலைவர் கலாம் சொல்லியிருக்காரே!!!

.....................................

//மணிகண்டன் said...

WELCOME TO FABULOUS LAS VEGAS!!

மூனே நாள்ல மொத்த பணத்தையும் செலவழிச்சுட்டு திரும்ப ஆணி புடுங்க பழைய இடத்துக்கே போயிடலாம் :) //

இது சூப்பர்... அதுவும் என் ராசிக்கு ஒரே நாள்ல செலவு செஞ்சிடலாம்னு நினைக்கிறேன் :-)

................................

// Pranni said...

//330 மில்லியன் டாலரை வெச்சி
// என்னதான் செய்யறது???
இது என்ன பெரிய விசயமா? 100 மில்லியன் டாலருக்கு விஜய் + ராஜ் டீவிய வாங்கனும். அப்புறம் ஒரு கட்சி ஆரம்பிச்சு மீதி காச அதுல போட்டா டமில்நாட்டோட நிரந்தர முதல்வர் நான் தான் :-) //

பணம் மட்டும் இருந்தா பத்தாது... நல்லா ஏமாத்தவும் தெரியனும்... ஓ! அது இப்பவே தெரியும்னு சொல்றீங்களா??? ;)

.................................

//இலவசக்கொத்தனார் said...

நான் போட்ட கமெண்ட் வந்துச்சா இல்லை பிளாக்கர் தின்னிடுச்சான்னு தெரியலையே.....

எச்சூஸ். நாங்க எல்லாம் அட்வைஸ் குடுக்கணமுன்னா, ஃபீஸ் எடுத்து முதலில் முன்னாடி வைக்கணும். அதைக் கண்ணில் காட்டு மேன். //

கொத்ஸ்,
நம்ம தான் டிக்கெட்டே வாங்கலனு சொல்லியாச்சி அப்பறமென்ன???

..................................

//மணிகண்டன் said...

16 22 29 39 42 Mega 20

இந்த நம்பர் யாராவது வாங்கியிருக்கீங்களாப்பு..இதுக்குதான் 370 மில்லியன் டாலர் பரிசாம்!

எனக்கு இல்ல..எனக்கு இல்ல. 5 டாலர் போச்சு :( //

பரவாயில்லை ஃபீல் பண்ணாதீங்க... ஆண்டவன் கொடுக்கறத யாராலும் தடுக்க முடியாது... ஆண்டவன் தடுக்கறத யாராலும் கொடுக்க முடியாது ;)

வெட்டிப்பயல் said...

// சிறுதுளி said...

அண்ணா andha ticket vilai evalavu indha thambiku onu vangi kodudha nalairukum ungoloda dhayavil.nangalum kanavu kanvomla padu pavipasanga adicha koothala tamilnadu arasudhan lottery stop panivitadhu.......kasu evolonu soneengana anupi veipen.oru cinema company arambipen............ //

சிறுதுளி,
நம்ம உழைப்பில் முன்னேறுவது தான் சிறந்தது... லாட்டரியெல்லாம் வேண்டாம். நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் தான் கைல நிலைக்கும்...

.................................

வ.குமார்,
அப்ப உங்களுக்கு தான் நிறைய கொடுக்க வேண்டியதிருக்கும்னு நினைக்கிறேன் :-)

..................................

புலி,
தெளிவா இருக்க...
இருந்தாலும் தப்பி தவறி நான் வாங்காத சீட்டுக்கு விழுந்தா என்ன பண்ண ;)

நண்பன் பாசமா கொடுக்கும் போது வேணாம்னு சொல்ல கூடாது புலி...

.................................

// Chakra Sampath said...

மெயில்ல அட்ரஸ் அனுப்பறேன். கை செலவுக்கு கொஞ்சம் மணியார்டர் பண்ணுங்க. //

கண்டிப்பா அனுப்புங்க... விழுந்தா அனுப்பறேன்...

.................................

//விஜயன் said...

அப்படியே முருகன் கோயில் பக்கமா ஒரு கடை போட்டு அஞ்சு அஞ்சு ரூவாக்கு வித்துறலாம்.

அட.. நீங்க முருகன் டாலர தான சொன்னீங்க??

காயர வெயில்ல ஏன்யா இப்படி போட்டு படுத்துறீங்க...

விஜயன் //

இல்லைங்க நான் ஐயப்பன் டாலரை சொன்னேன். அப்படியே சபரி மலைக்கு போயிடலாம் ;)

..................................

ஜி.ரா,
அந்த கோவில்லயாவது நாங்கெல்லாம் அர்ச்சகராக முடியுமா??? ;)

நீங்க முதல்வர்னா நான் நிதி அமைச்சர் ;)

.................................

//G3 said...

Hehe.. Andha ticket-a neengalae vaangi.. andha muzhu parisaiyum kooda neengalae vechikkonga.. ippo unga accountla evlo amountu irukko adha mattum enakku transfer pannina podhum.. Namakku peraasiyellam kedayaadhu paarunga :P //

ஆஹா...
இவ்வளவு உயர்ந்த உள்ளமா உங்களுக்கு... நிச்சயம் பரிசு விழுந்தவுடனே பழைய அக்கவுண்ட்ல இருக்கறதெல்லாம் உங்களுக்கு தான் ;;)

நாங்கெல்லாம் வாக்குருதி வெயிட்டா கொடுப்போமில்ல
..................................

//இம்சை அரசி said...

simple...
transfer everything to my account ;))))) //

இ.அரசி,
வேணும்னா என் க்ரெடிட் கார்ட் பில்லை அனுப்பறேன்.. பார்த்து கட்டிடுங்க ;)

வெட்டிப்பயல் said...

// Dubukku said...

மொதல்ல ஐடியா குடுக்கறதுக்கு ஒருத்தர அப்பாயிண்ட் பண்ணிடுவோம்ல //

தலைவா,
லேடி அஸிஸ்டெண்ட் தானே ;)
அஞ்சலீனா ஜோலிய போட்டுடலாம் ;)

.....................................

//தம்பி said...

ஐடியா குடுக்குறது எல்லாம் என்ன சாதாரணமா!

மொதல்ல அதுக்கு கொஞ்சம் காச வெட்டு அதுக்கப்புறம் தன்னால ஐடியா வரும். //

எலேய் டிக்கெட்டே வாங்கல.. அப்பறம் உனக்கு எதுக்கு நான் காசை அனுப்ப போறேன் ;)

................................

// ஆப் ட்ராயர் செந்தில் said...

சூப்பர் ஸ்டார் சீடனான நீ சூப்பர் ஸ்டார் செய்த மாதிரியே என்னை வைச்சு ஒரு படமெடுப்பாயாக //

பண்ணிட்டா போச்சி... கவுண்டரும் படத்துல இருப்பாரு. அவருக்கு டயலாக் நான் தான் :-)

..................................

//ஜி - Z said...

//Dubukku said...
மொதல்ல ஐடியா குடுக்கறதுக்கு ஒருத்தர அப்பாயிண்ட் பண்ணிடுவோம்ல//

அதுவும் அந்த காலத்து ரம்பா மாதிரி ;)))) //
நீ தான்யா நம்ம ஆளு ;)

.................................

//Syam said...

எனக்கு இல்ல எனக்கு இல்ல 370 மில்லியன் எவனோ ஜெயிச்சிட்டு போய்ட்டான் :-) //

நாட்டாமை,
அடுத்து 500 மில்லியன் பரிசு வைக்கும் போது அடிச்சிக்கலாம் ;)

..............................

//வல்லிசிம்ஹன் said...

புதுசா இணைய இதழ் ஆரம்பிச்சு
அதில விசிட் செய்யரவங்களுக்கு
ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கலாமே:-) //

வல்லி அம்மா,
வேணும்னா ஒவ்வொரு நல்ல பதிவுக்கும் 1000 கொடுக்கலாம் :-)

.................................

// Anonymous said...

330 மில்லியன் எடுத்துட்டு ஊட்டான்ட வாங்க செம மேட்டர் கீது.
http:beemboy-erode.blogspot.com //
காசு வந்தா நான் என் ஊட்டாண்ட தான் முதல்ல போகனும் ;)

.............................

யாழினி அத்தன்,
அப்படியெல்லாம் எதுக்கு பண்ணனும்... அந்த ட்ரெஸ்ஸெல்லாம் டிஸ்டர்பண்ஸா இருக்கும். அப்பறம் நல்லவன் மாதிரி நடிக்கனும். அதெல்லாம் நமக்கு வேண்டாம் ;)

வெங்கட்ராமன் said...

/**********************
அப்படியெல்லாம் ஆகாதுங்க... அவுங்களும் தெளிவாதான் படிச்சிட்டு வந்திருப்பாங்க ;)
**********************/

தல நான் அப்படி சொல்லல,
கொஞ்சம் உங்களுக்கு விளக்கமா சொல்லாம்னு பார்த்தா ஒரு பதிவு போட்ற அளவுக்கு பெரிய மேட்றே கிடைச்சிடிச்சு.

பதிவா போடட்டுமா, உங்கள கலாய்கிற மாதிரி இருக்கும் பரவா இல்லையா. . . . ?

Simply Senthil said...

வெட்டி,

ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டாலும் நல்ல பதிவு. உங்க நகைச்சுவை பதிவுகளில் இதுதான் சூப்பர் பதிவு. இது மாதிரி அடிக்கடி எழுதுங்க.

சென்ஷி said...

வெட்டி, 40வது நான் போட்டு உங்களை வெளில தள்ள மனசுக்கு கஷ்டமா இருக்கு..
அதனால இந்த பின்னூட்டத்த 41 ஆ ரிலீஸ் பண்ணுங்க :))

சென்ஷி

Mike said...

என்னய வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே!!!!

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

/**********************
அப்படியெல்லாம் ஆகாதுங்க... அவுங்களும் தெளிவாதான் படிச்சிட்டு வந்திருப்பாங்க ;)
**********************/

தல நான் அப்படி சொல்லல,
கொஞ்சம் உங்களுக்கு விளக்கமா சொல்லாம்னு பார்த்தா ஒரு பதிவு போட்ற அளவுக்கு பெரிய மேட்றே கிடைச்சிடிச்சு.

பதிவா போடட்டுமா, உங்கள கலாய்கிற மாதிரி இருக்கும் பரவா இல்லையா. . . . ? //

வெங்கி,
இது என்ன சின்னப்புள்ள தனமா கேட்டுகிட்டு தாராளமா கலாய்க்கலாம். அனா படிச்சா எல்லாரும் சிரிக்கனும் என்னையும் சேர்த்து ;)

வெட்டிப்பயல் said...

//Simply Senthil said...

வெட்டி,

ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டாலும் நல்ல பதிவு. உங்க நகைச்சுவை பதிவுகளில் இதுதான் சூப்பர் பதிவு. இது மாதிரி அடிக்கடி எழுதுங்க. //

வாங்க செந்தில்...

யாரும் பதிவை பத்தி எதுவும் சொல்லலையேனு ஃபீல் பண்ணும் போது சரியா வந்தீங்க... இது எல்லாம் கற்பனைனு உண்மைய சொல்லிடலாமா???

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...

வெட்டி, 40வது நான் போட்டு உங்களை வெளில தள்ள மனசுக்கு கஷ்டமா இருக்கு..
அதனால இந்த பின்னூட்டத்த 41 ஆ ரிலீஸ் பண்ணுங்க :))

சென்ஷி //

இதுக்கு தான் நான் அப்பவே 40 எல்லாம் வேணாம்னு சொன்னேன்... கேட்டாத்தானே ;)

வெட்டிப்பயல் said...

// Mike said...

என்னய வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே!!!! //

Mike தம்பி,
உங்களை நான் காமெடி பண்ணுவனா???

வெங்கட்ராமன் said...

How is this

http://sirippoo.blogspot.com/2007/03/330.html