தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, February 16, 2007

Leave Letter

சின்ன வயசுல எத்தனை தடவை இதை எழுதியிருப்போம்... இன்னும் மறக்கல பாருங்களேன்...

From
Vettipaiyal,
vettipaiyal.blogspot.com


To
My blog readers,
Universe (oru build up thaan)

Sub
Regarding leave

Respected vaasagargale,
As I am suffering from work, I am unable to attend your posts and pinnootams for last few days. So please grant me leave for 2 days (from 15-02-2007 to 16-02-2007).

Yours Obediently,
Vetti...


அப்படியே கொசு வத்திய சுத்தினா சின்ன வயசுல எழுதன லீவ் லெட்டரெல்லாம் ஞாபகம் வருது...

தமிழ்ல விடுமுறை விண்ணப்பம் எழுதி
"இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்குமாறுக்கு" பதிலா
"இரண்டு நாட்கள் விடுதலை அளிக்குமாறு"னு எழுதி வாத்தியார்கிட்ட கொட்டு வாங்கனது ஞாபகம் வருது. (அப்பவும் விடுதலை கொடுக்கல)

அப்பறம் ஊருக்கு போக லீவ் கேட்டா தர மாட்டாங்கனு யோசிச்சி
As I will be suffering from fevernu லீவ் லெட்டர் எழுதி பிரம்பால அடிவாங்கனது எல்லாம் ஞாபகத்துக்கு வருது...

46 comments:

ஆன்லைன் ஆவிகள் said...

லீவ் கிராண்டட்!

யூ ஆர் அட்வைஸ்டு டூ டூ த பெண்டிங்க் ஹோம் வொர்க்ஸ் அண்ட் அசைண்மெண்ட்ஸ்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

டேமேஜர்: லீவு ரிஜெக்டட்..

அப்புறம் நாங்கள்ளேல்லாம் யாரை கும்மிட்டு போறது???

Anonymous said...

As I am suffering from work, I am //not able/// unable to attend your posts and pinnootams for //last// next few days. So please grant me leave for 2 days (from 15-02-2007 to 16-02-2007).

இராம் said...

ஹ்ம்ம்... லிவு முடிஞ்சிருச்சுலே... வந்து வேலையா சீக்கிரம் ஆரம்பி ராசா:)

ஆவி அம்மணி said...

யார் அந்த இங்கிலீஷ் வாத்தியார்?

ஆவி அம்மணி said...

யார் அந்த இங்கிலீஷ் வாத்தி Yaar?
:)

k4karthik said...

//"இரண்டு நாட்கள் விடுதலை அளிக்குமாறு"னு எழுதி வாத்தியார்கிட்ட கொட்டு வாங்கனது ஞாபகம் வருது. //

பாவம்யா.... உமக்கு போய் வாத்தியாரா வந்துட்டாரு..

//As I will be suffering from fevernu லீவ் லெட்டர் எழுதி பிரம்பால அடிவாங்கனது எல்லாம் ஞாபகத்துக்கு வருது...//

இது வேறயா??

k4karthik said...

என்னங்க இது??? ஆன்லைன் ஆவிகள்,ஆவி அம்மணி-னு பயமுறுத்துராங்க...

இலவசக்கொத்தனார் said...

AWOL!

அவாள் அப்படின்னு படிச்சி தப்பா அர்த்தம் பண்ணிக்கக்கூடாது. சொல்லிட்டேன்!!

enRenRum-anbudan.BALA said...

பாலாஜி,

என்ன Nostalgia-வா ? குசும்புக்கும் ஒரு அளவு வேணும் :)

எ.அ.பாலா

தம்பி said...

இன்னும் சின்னப்புள்ளத்தனமா லீவ் கேட்டுகிட்டு இருக்கே?

கட் அடிக்க தெரியாதா?

enRenRum-anbudan.BALA said...

பாலாஜி,

என்ன Nostalgia-வா ? குசும்புக்கும் ஒரு அளவு வேணும் :)

எ.அ.பாலா

Unmai said...

உமக்கு 2 நாள் விடுப்பு அளிக்கபட்டுள்ளது.
சீக்கிரமா வந்து பின்னுட்டமாறு கட்டளை இட்டு பணிவோடு கேட்டுகொள்கிறேன்.

:)

Syam said...

ஆபீஸ்ல வேலை செய்ய சொன்னா ஆபீஸ்க்கு லீவு போடுறது விட்டுட்டு என்ன இது சிறுபிள்ளதனமா :-)

Anonymous said...

இந்த லீவு வாங்குவதற்க்காக எத்தனை முறை நம்ம தாத்தா பாட்டியை கொலை செய்து இருப்போம் .....

ILA(a)இளா said...

ஏதோ feb-14, சரிபண்ணீட்டிங்க போல இருக்கே. இததான் after effectsன்னு சொல்றதா?

துளசி கோபால் said...

விடுதலை கிராண்டட்.

ரெண்டேநாட்கள்தான். போனேன் வந்தேன்னு இருக்கணும், ஆமா.:-)

david santos said...

Helo!
Very, very good
Tank you

மு.கார்த்திகேயன் said...

அட! உங்களுக்கும் ஏகப்பட்ட ஆணிகள் புடுங்க வேண்டி இருக்கா வெட்டி..

ரெண்டு நாள் லீவ் தனே தாராலமா போயிட்டு வாங்க!

அபி அப்பா said...

வெட்டி தம்பி, எங்ககிட்ட லீவு போட்டுட்டு நீங்க எவ்வளவுதான் ஆணி புடுங்கினாலும் டேமேஜர் வந்து"நீ புடுங்குனது எல்லாமெ வேஸ்ட்டு தான்"னு சொல்லப்போறாரு. அதனால மரியாதயா எங்ககிட்ட வாரதுதான் அழகு. தெர்தா?

G.Ragavan said...

சென்று வா மகனே
சென்று வா
அறிவை வென்று வா மனனே
வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
தாயிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே
சென்று வா

கோபிநாத் said...

என்ன வெட்டி லீவு லெட்டரு....
எந்த காலத்துல இருக்கிங்க...

only SMS (பிறகு வைப்பாங்க பாரு ஆப்பு)

தி. ரா. ச.(T.R.C.) said...

எங்க பாங்க் பிரான்ச்சு மேனேஜர் தலமை அலுவலகத்துக்கு இப்படி ஒரு லீவ் லெட்டர் எழுதினார்
As i have to accompany my wife going to her mother's house for delivery,please grant me two days leave and also send a substitute.

இது எப்படி இருக்கு

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா...
பாலாஜி, நீங்களுமா காணாமல் போகப் போகிறீர்கள்? :-))
சரி சொல்லிவிட்டுப் பழனியில் தேவயானியைச் சந்திக்கப் போகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

//From
Vettipaiyal,
vettipaiyal.blogspot.com//
இதில் உங்கள் பெயரும் பள்ளியின் பெயரும் தான் உள்ளதே அன்றி, வகுப்பும், செக்ஷ்னும் இல்லையே!
லீவு லெட்டர் அன்-அக்செப்டபள்.:-)

//"இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்குமாறுக்கு" பதிலா
"இரண்டு நாட்கள் விடுதலை அளிக்குமாறு"னு//

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
என்ற குறளில், "அறத்தான்" -இல் "ற"கரத்தை விட்டு எழுதிய கதை தெரியுமா தலைவா?

"அத்தான் வருவதே இன்பம்" என்று எழுதியதைத் தமிழ் வாத்தியார் படித்து ஒரு பிடிபிடித்த கதை எல்லாம் கொசு வத்திய சுத்தினா ஞாபகத்துக்கு வருதே...

வெட்டிப்பயல் said...

//ஆன்லைன் ஆவிகள் said...

லீவ் கிராண்டட்!

யூ ஆர் அட்வைஸ்டு டூ டூ த பெண்டிங்க் ஹோம் வொர்க்ஸ் அண்ட் அசைண்மெண்ட்ஸ்! //

பெரிய மனசு பண்ணி லீவு கொடுத்ததுக்கு ரொம்ப டாங்கிஸ் ஆவி!!!

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

டேமேஜர்: லீவு ரிஜெக்டட்..

அப்புறம் நாங்கள்ளேல்லாம் யாரை கும்மிட்டு போறது??? //

எல்லாம் தெளிவாத்தான் இருக்கீங்க...
அதுக்குத்தான் எங்க தல கைப்பு இருக்காரே!!!

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

As I am suffering from work, I am //not able/// unable to attend your posts and pinnootams for //last// next few days. So please grant me leave for 2 days (from 15-02-2007 to 16-02-2007). //

thx anony...

வெட்டிப்பயல் said...

//இராம் said...

ஹ்ம்ம்... லிவு முடிஞ்சிருச்சுலே... வந்து வேலையா சீக்கிரம் ஆரம்பி ராசா:) //

ஆரம்பிச்சாச்....

வெட்டிப்பயல் said...

//ஆவி அம்மணி said...

யார் அந்த இங்கிலீஷ் வாத்தியார்? //

அம்மணி நீங்களா தான் இருக்கும்னு நான் நினைச்சேன் ;)

வெட்டிப்பயல் said...

//k4karthik said...

//"இரண்டு நாட்கள் விடுதலை அளிக்குமாறு"னு எழுதி வாத்தியார்கிட்ட கொட்டு வாங்கனது ஞாபகம் வருது. //

பாவம்யா.... உமக்கு போய் வாத்தியாரா வந்துட்டாரு..

//As I will be suffering from fevernu லீவ் லெட்டர் எழுதி பிரம்பால அடிவாங்கனது எல்லாம் ஞாபகத்துக்கு வருது...//

இது வேறயா?? //

பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தானே ;-)

வெட்டிப்பயல் said...

//k4karthik said...

என்னங்க இது??? ஆன்லைன் ஆவிகள்,ஆவி அம்மணி-னு பயமுறுத்துராங்க... //

எல்லாம் நம்ம தோஸ்துங்க தான்...
பயப்படாதீங்க...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

AWOL!

அவாள் அப்படின்னு படிச்சி தப்பா அர்த்தம் பண்ணிக்கக்கூடாது. சொல்லிட்டேன்!! //

Absent With Out Leaveஆ???

சில பேர் அதை கூட சொல்ல மாட்றாங்களே அவுங்களை என்ன சொல்ல...

வெட்டிப்பயல் said...

//enRenRum-anbudan.BALA said...

பாலாஜி,

என்ன Nostalgia-வா ? குசும்புக்கும் ஒரு அளவு வேணும் :)

எ.அ.பாலா //

குசும்புக்கெல்லாம் அளவு வைக்க முடியுமா பாலா???

வேலை இருக்குனு நாசுக்கா சொல்லி போட்டது தான் இந்த போஸ்ட் :-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

இன்னும் சின்னப்புள்ளத்தனமா லீவ் கேட்டுகிட்டு இருக்கே?

கட் அடிக்க தெரியாதா? //

ஆபிஸுக்கு கட் அடிச்சா தப்பு :-))

காலேஜ்க்குனா அடிக்கலாம்...

வெட்டிப்பயல் said...

// Unmai said...

உமக்கு 2 நாள் விடுப்பு அளிக்கபட்டுள்ளது.
சீக்கிரமா வந்து பின்னுட்டமாறு கட்டளை இட்டு பணிவோடு கேட்டுகொள்கிறேன்.

:) //

ரொம்ப நன்றிங்க...
இதோ சொன்ன மாதிரியே வந்துட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

ஆபீஸ்ல வேலை செய்ய சொன்னா ஆபீஸ்க்கு லீவு போடுறது விட்டுட்டு என்ன இது சிறுபிள்ளதனமா :-) //

ஆஹா... இது தெரியாம போச்சே!!!
என்ன இருந்தாலும் அது நம்ம செய்ய வேண்டிய வேலை தான். இன்னைக்கி லீவ் போட்டா நாளைக்கு அதையும் சேர்த்து செய்யனும். இது தேவையா???

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

இந்த லீவு வாங்குவதற்க்காக எத்தனை முறை நம்ம தாத்தா பாட்டியை கொலை செய்து இருப்போம் ..... //

எத்தனை முறைனு சரியா ஞாபகம் இல்லை... இருந்தாலும் நான் அகிம்சாவாதி என்பதால் அந்த தவறுகளை செய்வதில்லை ;)

வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

ஏதோ feb-14, சரிபண்ணீட்டிங்க போல இருக்கே. இததான் after effectsன்னு சொல்றதா? //

இதை தான் கொடுமை கொடுமைனு இங்கிலிஷ்ல சொல்லுவாங்க...

வெட்டிப்பயல் said...

// துளசி கோபால் said...

விடுதலை கிராண்டட்.

ரெண்டேநாட்கள்தான். போனேன் வந்தேன்னு இருக்கணும், ஆமா.:-) //

ரொம்ப நல்ல டீச்சர்...

சொன்ன மாதிரியே வந்துட்டேன்...

வெட்டிப்பயல் said...

//david santos said...

Helo!
Very, very good
Tank you //

thx a lot Friend...

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

அட! உங்களுக்கும் ஏகப்பட்ட ஆணிகள் புடுங்க வேண்டி இருக்கா வெட்டி..

ரெண்டு நாள் லீவ் தனே தாராலமா போயிட்டு வாங்க! //

ரொம்ப நன்றிங்க கார்த்தி...
ஒரு வழியா வந்துட்டேன்!!!

வெட்டிப்பயல் said...

// அபி அப்பா said...

வெட்டி தம்பி, எங்ககிட்ட லீவு போட்டுட்டு நீங்க எவ்வளவுதான் ஆணி புடுங்கினாலும் டேமேஜர் வந்து"நீ புடுங்குனது எல்லாமெ வேஸ்ட்டு தான்"னு சொல்லப்போறாரு. அதனால மரியாதயா எங்ககிட்ட வாரதுதான் அழகு. தெர்தா? //

அபி அப்பா,
என்னதான் இருந்தாலும் கடமைனு ஒன்னு இருக்கு இல்ல ;)

சும்மா டகால்ட்டிதான்...

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

சென்று வா மகனே
சென்று வா
அறிவை வென்று வா மனனே
வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
தாயிருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்தச் சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே
சென்று வா //

என்ன சொல்றீங்கனே புரியல...
இருந்தாலும் திட்டாத மாதிரி இருக்கு. அதனால புகழறீங்கனு வெச்சிக்குவோம் :-)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

என்ன வெட்டி லீவு லெட்டரு....
எந்த காலத்துல இருக்கிங்க...

only SMS (பிறகு வைப்பாங்க பாரு ஆப்பு) //

நமக்கு சின்ன வயசுல நடந்ததை தானே சொல்ல முடியும் :-)

வெட்டிப்பயல் said...

// தி. ரா. ச.(T.R.C.) said...

எங்க பாங்க் பிரான்ச்சு மேனேஜர் தலமை அலுவலகத்துக்கு இப்படி ஒரு லீவ் லெட்டர் எழுதினார்
As i have to accompany my wife going to her mother's house for delivery,please grant me two days leave and also send a substitute.

இது எப்படி இருக்கு //

ஆஹா...
தி.ரா.சா ஐயா, கலக்கலா இருக்கு இந்த லீவ் லெட்டர்...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஆகா...
பாலாஜி, நீங்களுமா காணாமல் போகப் போகிறீர்கள்? :-))
சரி சொல்லிவிட்டுப் பழனியில் தேவயானியைச் சந்திக்கப் போகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
//

லீப் போட்ட அன்னைக்கும் நான் ஒரு சில பதிவுகளில் தலை காட்டினேன் KRS... உங்க பதிவுளையும் தான். ஆனா என் பதிவுல இருக்கற பின்னூட்டத்துக்கு பதில் சொல்ல முடியல... அதனாலதான் சொல்லிட்டு உள்ளே வந்தேன் ;)

//
//From
Vettipaiyal,
vettipaiyal.blogspot.com//
இதில் உங்கள் பெயரும் பள்ளியின் பெயரும் தான் உள்ளதே அன்றி, வகுப்பும், செக்ஷ்னும் இல்லையே!
லீவு லெட்டர் அன்-அக்செப்டபள்.:-)
//
டீச்சரே அக்செப்ட் பண்ணியாச்சி :-)

//

//"இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்குமாறுக்கு" பதிலா
"இரண்டு நாட்கள் விடுதலை அளிக்குமாறு"னு//

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
என்ற குறளில், "அறத்தான்" -இல் "ற"கரத்தை விட்டு எழுதிய கதை தெரியுமா தலைவா?

"அத்தான் வருவதே இன்பம்" என்று எழுதியதைத் தமிழ் வாத்தியார் படித்து ஒரு பிடிபிடித்த கதை எல்லாம் கொசு வத்திய சுத்தினா ஞாபகத்துக்கு வருதே... //

ஆஹா... கலக்கறீங்களே!!!
எனக்கு என்னுமோ இது வேணும்னே பண்ண மாதிரி தான் தெரியுது ;)