தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, February 19, 2007

சுடர் - சில விளக்கங்கள்!!!

நண்பர்களே!!!

சர்வேசன் அவர்களின் பதிவை
தற்போதுதான் பார்த்தேன். அதில் சில விதிகள் சரியாக குறிப்பிடவில்லை என்று தளபதி சிபி சொல்லியிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு

இந்த விளையாட்டின் சுவாரசியமே யாரிடமிருந்து யாருக்கு செல்கிறது என்பதில் தான் இருக்கிறது. அது பல சுடர்கள் ஒரே நேரத்தில் ஏற்றுவதால் கெட்டு போகும் என்றே நினைக்கிறேன்.

சுடரை யார் வேண்டுமென்றாலும் ஏற்றுங்கள் பிரச்சனையில்லை. ஆனால் லிங் கொடுக்க வேண்டாமே! தற்போது தேன்கூடு இருக்கும் நிலையில் நாம் மேலும் அவர்களை பிரச்சனைக்குள்ளாக்க வேண்டாமே!!! இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

29 comments:

குமரன் (Kumaran) said...

வழி மொழிகிறேன்.

SurveySan said...

சுடர் ஆரம்பித்தவரின் எண்ணம் என்னவாய் இருந்திருக்கும் என்று சரியாய் தெரியவில்லை.

ஒரு வரிசை மட்டுமே சுடர் ஏந்திச் சென்றால், 2000 பதிவர்கள் உள்ள இடத்தில், சுடர் கடைசி ஆளை அடைய 5 1/2 வருடங்கள் ஆகும் :)

வெயிட்டிங் பீரியட் ஜாஸ்திதானோ?

பல வரிசையில், சுடர் திக்குக்கொன்றாகச் சென்றால், குழப்பங்கள் விளையும்.குறிப்பாக தேன்கூட்டின் முகப்பில் இருக்கும் பதிவர் வரிசையில் குழப்பங்கள் அதிகமாய் வரும்.

இதை தடுக்க பெரிய வழி ஒன்றும் இல்லாத நிலையில் - பல வரிசையை ஒத்துக் கொண்டு தான் போக வேண்டியுள்ளது.

பலர் சுடர் ஏந்தினாலும், பதிவில், சுடர் ரூல்ஸ் படி, எந்த காழ்ப்புணர்ச்சியும் வெளி வராதபடி, சீராக ஏந்திச் சென்றால் சரி என்றே தோன்றுகிறது.

ஆனால், பதிவர், சுடர் பதிவு மட்டும் ரூல்ஸ் படி எழுதி, பழைய பதிவுகள் சரியில்லை என்றால் என்ன செய்ய?

தேன் கூடு முகப்பில் இருக்கும் வரிசையை தூக்கி விடவேண்டும் - வரிசை பெரிதானால், முகப்பின் அழகு கெட்டுவிடும்.

நாமக்கல் சிபி said...

நானும் வழிமொழிகிறேன்!

இராம் said...

உண்மைப்பா பாலாஜி, அதேதான் நானும் நினைச்சேன், ஒருத்தருக்கிட்டே இருந்து அவங்க தனிப்பட்ட கருத்தை வெளியே கொண்டு வரதுக்கு இந்த சுடர் விளையாட்டு நல்லதொரு செயல்........... ஆனா அது வேறமாதிரி இன்னிக்கு போயிருச்சு.. :(

SK said...

விதிமுறைகளை முழுதுமாகப் படிக்காமல் அவசரப்பின்னூட்டம் இடுவோரால் வரும் குழப்பம்தான் இது.

எல்லாரையும் போய்ச் சேர்ந்து பின்னர்தான் இது முடிவுறும் என விதிகளில் சொல்லவில்லை.

வெறும் 55 நாட்களுக்கான விளையாட்டே இது.
ஏப்ரல் 14 - ம் தேதி, 2007 இதன் கடைசி நாள்.

:)))

ஆன்லைன் ஆவிகள் said...

சர்வேசன் அவர்கள் பதிவில் நடைபெற்ற விவாதங்கள் மற்றும் தங்கள் கருத்தினையும் கவனத்தில் கொண்டு

எவ்வித அழைப்புமின்றி இரண்டாவது சுடர் ஏற்றப்பட்டது எனவும், அது விதிமுறைகளுக்கு முரண்பட்டது எனவும் தெரிய வந்தமையால் ஆவிகள் உலகம் தமது சுடர் பதிவை நீக்கிவிடுகிறது.

அத்துடன் ஆவியுலகின் வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டு எமது பதிவை சுடர் பட்டியலில் இருந்து நீக்கி விடுமாறு தேன்கூடு நிர்வாகத்திடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

பார்க்க:
http://avigalulagam.blogspot.com/2007/02/22.html

Anonymous said...

//ஆனால், பதிவர், சுடர் பதிவு மட்டும் ரூல்ஸ் படி எழுதி, பழைய பதிவுகள் சரியில்லை என்றால் என்ன செய்ய?//

அப்படிப்பார்த்தால் சுடர் பதிவை இடும் வரையில் சாதாரணமாக எழுதிக் கொண்டிருந்த பதிவர் கொஞ்சம் மாறி அதன் பின்னார் தாறுமாறாக எழுதினால் என்ன செய்ய?

SK said...

சுடர் பதிவைப் பொறுத்த மட்டில்தான் விதிமுறைகள் அமையும் எனக் கருதுகிறேன்.

மற்ற பதிவுகளுக்கு அவரவர் மனசாட்சியே பொருப்பு!

நெல்லை சிவா said...

முதலில் 'தொடர்' என்பதற்கான அர்த்தம் என்ன? ஒன்று முடிக்கப் பட்டு, அடுத்துத் தொடர்வதுதானே? ஒரே நேரத்தில் பலர் சுடரேற்றுவது, எப்படித் தொடராகும். மேலும், அப்படிச் செய்வதனால், 'continuity' கெட்டுப் போகும்.

தேன்கூட்டின் கீழ்கண்ட விதிமுறையைப் பாருங்கள்.

//**4) ஒருவர் ஒரு முறை மட்டுமே தொடர்விளையாட்டுக்காகப் பதிவு செய்யலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு பேரிடம் மட்டுமே சுடர் நகர்வதாக வைத்துக்கொள்ளவும். **//

ஒரு நாளைக்கே இரண்டுக்கு மிகாமல் இருக்கட்டும் என்று கேட்டிருக்கிறார், அப்படியிருக்கையில், பலரும் சுடரேற்றுவது, ஒரே நாளில் இரண்டுக்கு மேல் சுடர் பயணிக்க ஏதுவாகும். இந்த விதியின் படி, சுடரின் நோக்கம் அதுவல்லவே!

மேலும் விதி எண், 10-இனைப் பாருங்கள்:

//**10.விதிமுறைகளை மாற்றும் உரிமை நிர்வாகத்திற்கும், முதல் இடுகையாளருக்கும் உண்டு. **//

இதன்படி, பாலாஜி உங்களுக்கு முழு உரிமை உள்ளது.

உங்கள் பதிவின் நீங்கள் குறிப்பிட்டுள்ள வாசகங்கள், மென்மையாய் இருப்பது போல் படுகிறது, //சுடரை யார் வேண்டுமென்றாலும் ஏற்றுங்கள் பிரச்சனையில்லை. ஆனால் லிங் கொடுக்க வேண்டாமே!//, விதி எண் 4 மற்றும் விதி எண் 10ன் படி, நீங்கள் 'அழைப்பின் பேரில்தான் சுடர் அனுமதிக்கப் பட வேண்டும்' என வலியுறுத்த வேண்டும் என கோருகிறேன்.

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
2000 பதிவர்களெல்லாம் இல்லைங்க... ஆக்டிவா இருக்கறது 100லிருந்து 200 பேர் தான்.

நீங்க சொன்ன மாதிரியே முதலில் நானும் ஒருவர் இருவருக்கு கொடுக்கலாம் என்று ஆலோசனை சொன்னேன். அது Exponential லாக போய் 10 நாளில் 1024 ஆகும்.
அதனால் சுவாரசியம் குறையும் என்று சொன்னார்கள். எனக்கும் சரி என்றே பட்டது.

எனக்கு உங்க அளவுக்கு அறிவு கிடையாது. விவாதம் செய்யவும் தெரியாது. இதுதான்னு எனக்கு சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன்.

ஒவ்வொரு விளையாட்டிற்கு ஒவ்வொரு விதிமுறை. அவ்வளவுதான்...

வெட்டிப்பயல் said...

//SK said...

விதிமுறைகளை முழுதுமாகப் படிக்காமல் அவசரப்பின்னூட்டம் இடுவோரால் வரும் குழப்பம்தான் இது.

எல்லாரையும் போய்ச் சேர்ந்து பின்னர்தான் இது முடிவுறும் என விதிகளில் சொல்லவில்லை.

வெறும் 55 நாட்களுக்கான விளையாட்டே இது.
ஏப்ரல் 14 - ம் தேதி, 2007 இதன் கடைசி நாள்.

:))) //

அவ்வளவுதான் SK ஐயா... தெளிவா சொன்னீங்க...

வெட்டிப்பயல் said...

ஆவி,
ரொம்ப நன்றி...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

//ஆனால், பதிவர், சுடர் பதிவு மட்டும் ரூல்ஸ் படி எழுதி, பழைய பதிவுகள் சரியில்லை என்றால் என்ன செய்ய?//

அப்படிப்பார்த்தால் சுடர் பதிவை இடும் வரையில் சாதாரணமாக எழுதிக் கொண்டிருந்த பதிவர் கொஞ்சம் மாறி அதன் பின்னார் தாறுமாறாக எழுதினால் என்ன செய்ய? //

இதுக்கும் அந்த விளையாட்டுகும் சம்பந்தமில்லைங்க...

யாரையும் மாத்தறதுக்கு அந்த விளையாட்டு இல்லை.

வெட்டிப்பயல் said...

நெல்லை சிவா,
யாராவது ஒருவர் தலைப்பில் சுடர் என்று பதிவு போட்டால் நாம் எதுவும் சொல்ல முடியாது.

அதுவுமில்லாமல் இது அவர்களே பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய விஷயம்.

எனக்கு தெரிந்ததை நான் சொல்லிவிட்டேன்...

Syam said...

நம்மளுக்கும் இத பத்தி விவாதிக்கர அளவுக்கு அறிவு கம்மிங்க...நானும் வழி மொழிகிறேன்....

SurveySan said...

//விதிமுறைகளை முழுதுமாகப் படிக்காமல் அவசரப்பின்னூட்டம் இடுவோரால் வரும் குழப்பம்தான் இது.//

ஹி ஹி ஹி! :)

SurveySan said...

சுடர் யார் வேணா ஏத்தட்டுங்க.

ஏப்ரல் 14th முடிஞ்சுடுமா? அச்சச்சோ அப்படியெல்லாம் முடிச்சுருக்கூடாதுங்க :)

முதல் வரிசையில் ஓடி வந்து இன்று தருமி கிட்ட இருக்கு, இந்த வரிசை மட்டும் தொடர்ந்து தேன்கூட்டில் தெரியணும், மத்தவங்கெல்லாம், சொந்தமா சுடர்_v2 அவங்க பதிவுலயே போட்டுக்கலாம்.

SurveySan said...

//எனக்கு உங்க அளவுக்கு அறிவு கிடையாது. விவாதம் செய்யவும் தெரியாது. இதுதான்னு எனக்கு சொன்னதை உங்களுக்கு சொல்கிறேன்.//

எனக்கும் விவாதம் பண்ணவெல்லாம் தெரியாதுங்க.
யோசிச்சு தீர்ப்பு மட்டும் தான் பட்டுனு சொல்ல வரும். :)

புலிகேசி, கொசுபுடுங்கி கிட்ட கொடுத்திருக்காரு, எல்லாரும் ஓடிப்போய் கொசுபுடுங்கி கைல இருக்கர சுடர உfனு ஊதி அணைக்கலாம் வாங்க.

பதினெட்டு பட்டி ஆளுங்களும் பொறப்படுங்க.

முத்துகுமரன் said...

வெட்டி,
சுடர் ஆட்டத்தில் இடைச்செருகலாய் வந்துவிட்ட மூன்றுபதிவுகளையும் கண்டிக்கிறேன். நண்பர்களின் கருத்திற்கேற்ப ஆவிகள் உலகம் திரும்பப் பெற்றுக் கொண்டத வரவேற்கிறேன். அடிப்படையில் நாம் பண்பட்டவர்கள்தானா என்பதை அறிந்து கொள்ள, இந்த இடைச் செருகல்கள் உரைகல்லாய் அமைந்துவிட்டன என்பது வேதனையான விசயம்.

சுடர் தொடரின் முக்கியமான சிறப்பே அது பயணிக்கும் வழிதான். இந்த வழியில்தான் செல்லும் என்று கணித்திட இயலாது. இது பரந்தபட்ட சிந்தனைகளை பார்வைகளை வெளிக்கொணர, ஏதுவாய் அமைந்திருக்கிறது. இதுவரை ஏற்றப்பட்ட சுடர்களையே பாருங்களேன். எத்தனை விதமான சிந்தனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் கூச்சலின்றி நடத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் சுய ஒழுங்கு வேண்டும். அது நம் பதிவர்களிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். அவை சரியான நேரத்தில் வெளிப்பட வேண்டும் என்பதை என் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் நண்பர்கள் முன் வைக்கிறேன்.

வெட்டிப்பயல் said...

//புலிகேசி, கொசுபுடுங்கி கிட்ட கொடுத்திருக்காரு, எல்லாரும் ஓடிப்போய் கொசுபுடுங்கி கைல இருக்கர சுடர உfனு ஊதி அணைக்கலாம் வாங்க.

பதினெட்டு பட்டி ஆளுங்களும் பொறப்படுங்க.//

அப்படியெல்லாம் பண்ண வேண்டாமுங்க... அவர் தேன்கூடுல சுடருக்கு லிங் கொடுக்காம இருந்தா போதும்...

அவுங்க விளையாடறதை கெடுக்க வேண்டாம்...

வெட்டிப்பயல் said...

மக்கள்ஸ்,
அப்பறம் நான் இப்ப வெளிய போறேன்... பின்னூட்டத்தை பிரசுறிக்கலைனு திட்டி பதிவு போட்டுடாதீங்க :-))

வெட்டிப்பயல் said...

//இராம் said...

உண்மைப்பா பாலாஜி, அதேதான் நானும் நினைச்சேன், ஒருத்தருக்கிட்டே இருந்து அவங்க தனிப்பட்ட கருத்தை வெளியே கொண்டு வரதுக்கு இந்த சுடர் விளையாட்டு நல்லதொரு செயல்........... ஆனா அது வேறமாதிரி இன்னிக்கு போயிருச்சு.. :( //

சுடர் கைமாறுவதை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது.

இப்பவும் எதுவும் பிரச்சனையில்லை. நண்பர்களுக்கு சொல்லி புரியவைத்தாயிற்று...

வெட்டிப்பயல் said...

முத்துக்குமரன்,
ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க...

//சுடர் தொடரின் முக்கியமான சிறப்பே அது பயணிக்கும் வழிதான். இந்த வழியில்தான் செல்லும் என்று கணித்திட இயலாது. இது பரந்தபட்ட சிந்தனைகளை பார்வைகளை வெளிக்கொணர, ஏதுவாய் அமைந்திருக்கிறது. இதுவரை ஏற்றப்பட்ட சுடர்களையே பாருங்களேன். எத்தனை விதமான சிந்தனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் கூச்சலின்றி நடத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.//

இதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு சிறப்பா எல்லாரும் பங்கெடுத்து அருமையா விவாதீப்பாங்கனு நினைக்கவில்லை. ரொம்ப நல்லா வந்துட்டு இருக்கு.

//எல்லா இடங்களிலும் சுய ஒழுங்கு வேண்டும். அது நம் பதிவர்களிடம் இருக்கிறது என்று நம்புகிறேன். அவை சரியான நேரத்தில் வெளிப்பட வேண்டும் என்பதை என் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் நண்பர்கள் முன் வைக்கிறேன்.//

கண்டிப்பாக கேட்பார்கள் என்றே நம்புகிறேன்.

☆ சிந்தாநதி said...

அப்படியெல்லாம் பண்ண வேண்டாமுங்க... அவர் தேன்கூடுல சுடருக்கு லிங் கொடுக்காம இருந்தா போதும்...//

சுடரைப் பெறுபவருக்கு எப்படித் தெரியும் அது தேன்கூடு சுடரா சும்மா ஏற்றிய சுடரா என்று...அதனால் அதை வேறொரு ரிலே பெயரில் வேண்டுமானால் தொடரலாமே தவிர சுடர் என்ற பெயரை பயன்படுத்துவது சரியாக இருக்காது. இல்லாவிட்டால் இன்னும் கூட யாராவது அவசரத்தில் தேன்கூட்டில் பதிவு செய்து விடலாம். அல்லது பதிவு செய்ய வேண்டியவர் இது எந்தச் சுடரோ என்று பதிவு செய்யாமலும் விடலாம்.

(இப்போதைய நிலையில் தேன்கூட்டில் தவறான பட்டியலை திருத்தக்கூட யாரும் இல்லை)

ஆகவே இணைச் சுடர் ஏந்திய மக்கள் அதற்கு வேறொரு பெயர் சூட்டித் தொடருமாறு வேண்டுகிறேன்.

அபி அப்பா said...

//சர்வேசன்,
2000 பதிவர்களெல்லாம் இல்லைங்க... ஆக்டிவா இருக்கறது 100லிருந்து 200 பேர் தான்.//

அதில் நான் உண்டா வெட்டிதம்பி????

லகுடபாண்டி said...

சர்வேசன் பதிவில் எங்கள் அரசரிட்ட பின்னூட்டம்:

----------------------------------

புலிகேசி: யாரடா அவன்! "இந்த இம்சை அரசனைப் பார்த்து, சுடரை ஏற்றாதே" என்று அமங்கலமாகச் சொல்லும் இந்தச் சர்வேசனின் மூக்கில் என் மீசையை விட்டு...

லகுடபாண்டி: மன்னா, இவர் சொல்வது நியாயமாகத் தான் தெரிகிறது. சுடரை நம்மிடம் கொடுத்த ஆவியே திரும்பிக் கேட்டுக் கொண்டு வந்து விட்டதே!

புலிகேசி:ம்ம்ம்... பிழைத்துப் போகட்டும். ஏதோ என் மந்திரி லகுடபாண்டி சொல்வதால், உம்மை அப்படியே விட்டுவிடுகிறேன்.

இத்துடன் சுடரைத் தேன்கூட்டிலிருந்து வேண்டுமானாலும் ஊதி அணையுங்கள். அல்லது, எண்ணெயை மொத்தமாக உறிஞ்சி எடுத்து தானே அணைய வையுங்கள்! இதையெல்லா வற்றையுமே எங்கள் அரசாங்கம் தாயுணர்வோடு மன்னித்து விட்டுவிடுமென்பதை மன்னர் என்ற முறையில் இவ்விடத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

"புது ப்ளாக்கருக்கு மாறு, மாறாதே!" என்று இந்த லகுடபாண்டி செய்துவிட்ட குளறுபடியில், பதிவுகள் தொலைந்து போய் இப்படி அனானியாக அலைய நேர்ந்துவிட்டது. இந்தப் பின்னூட்டத்தை இம்சை அரசன் தான் இட்டான் என்பதற்கு ஆதாரமாக, இங்கே இம்சை அரசனையே கண்டிக்கத் துணிந்த முத்துகுமரனுக்கு ஒரு ஓணாண்டி தண்டனையைத் தீர்ப்பளித்து வடைபெற்றுக் கொள்கிறேன்..

லகுடபாண்டி: மன்னா.. மன்னா, வடையா? அது விடை அல்லவோ?

புலிகேசி: மட மந்திரியே! இந்தச் சர்வேசனின் பெயரருகே உள்ள படத்தைப் பார்த்தாயா? சிகப்பு நிற இலந்தை வடை! சீக்கிரமாக லவுட்டிக் கொண்டு வா.. அதான் வடை வாங்க அவர் ஒன்றும் மறுப்பு சொல்லவே இல்லையே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. சுடர் திருடு போயிடுச்சா? கூப்பிடுங்கள் நாட்டாமைய!! தீர்ப்பு சொல்லட்டும்..:-P
ஹிஹிஹி..

நீங்கள் சொன்னது முற்றிலும் வரவேற்க்கிறேன். ;-)

// 2000 பதிவர்களெல்லாம் இல்லைங்க... ஆக்டிவா இருக்கறது 100லிருந்து 200 பேர் தான்.//

ஒருவர் கையிலிந்து ஒருவருக்கு மாறுவதே நல்லது. கவலை படாதீர்கள். பாலாஜி சொன்னது போல, நீங்க ஆக்டிவ்வா இருந்தீங்கன்னா அந்த சுடர் கண்டிப்பா உங்களை நாடி வரும். ;-)

வெட்டிப்பயல் said...

சிந்தாநதி,
ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க...

//
ஆகவே இணைச் சுடர் ஏந்திய மக்கள் அதற்கு வேறொரு பெயர் சூட்டித் தொடருமாறு வேண்டுகிறேன்.//
இதுதான் சரியான யோசனையாக இருக்கும்!!!

SurveySan said...

டூப்ளிகேட் சுடர் மார்கெட்ல இன்னும் அலையுதே :)