தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, February 18, 2007

மாதா, பிதா, குரு - தெய்வம்?????

இந்த பதிவை படித்தவுடன் என்னால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. ஏற்கனவே ஆசிரியர்களே நீங்கள் தெய்வங்களா என்று பதிவிட்டிருந்தேன்.

எனக்கும் அதே போல் காலேஜ் முடித்து ஆறு மாதம் கழித்து ஆஃப் கேம்பஸில் நடந்த இண்டர்வியூவில் தேர்வானதற்கு ஆஃபர் லெட்டர் தர 5000 கேட்டார்கள். Placement Cell முன்னேற்றத்திற்காம். அதற்குள் எனக்கு வேறு ஒரு கம்பெனியிலும் ஆஃபர் லெட்டர் கிடைத்திருந்தது. அதனால் ஆஃபர் லெட்டர் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அந்த இண்டர்வியூ நடந்தது வேறு கல்லூரியில். ஒரு வேளை எனக்கு அந்த இன்னொரு ஆஃபர் கிடைக்கவில்லையென்றால் கண்டிப்பாக கொடுத்திருப்பேன். அதற்கு பிறகு அந்த ஆஃபர் லெட்டர் எனக்கு ஈ-மெயிலிலே வந்தது என்பது வேறு கதை.

பத்தாம் வகுப்பு படிக்கும் வரை தெய்வங்களாக தெரிந்த ஆசிரியர்கள் அதற்கு பிறகு ஏனோ தெரியவில்லை.

கடலூர் புனித வளனாரில் நான் படிக்கும் போது என்னிடம் டியூஷன் படிக்கவில்லையென்றால் லேப் மார்க்கில் உங்களுக்கு 10 கூட வராது என்று கூறினார் என் கெமிஸ்ட்ரி வாத்தியார். பிரின்சிபலால் கூட என்னை ஒன்னும் செய்ய முடியாது என்று வகுப்பில் வெளிப்படையாகவே கூறினார்.

இவர் சொல்லி குடுப்பதை விட நன்றாக சொல்லி கொடுக்கும் ஆசிரியரிடம் சென்றாலும் வாழ்க்கை பாதிப்படையும். என்ன செய்வதென்று புரியாமல் பாதியிலே பள்ளி மாறி சென்றேன். புதிய பள்ளி, அனைவரும் ஏற்கனவே கூட்டம் கூட்டமாக இருந்ததால் சரியாக பழக கூட முடியாத நிலை. அங்கே நான் சென்ற போது +1 பாடம் முடித்து, +2 ஆரம்பித்திருந்தார்கள். எதுவும் புரியாத நிலைமை. வாழ்க்கையே தடம் மாறியது. அவர் பெயர் கூட இன்னும் நினைவிருக்கிறது.

பிறகு கல்லூரியிலும் முதலாமாண்டு நன்றாக ப்ராக்டிக்கல் செய்திருந்தும் மதிப்பெண்களை குறைத்து போட்டனர். பிறகு சண்டை போட்டதிலிருந்து எனக்கு ஓரளவு சரியான மதிப்பெண்களே வந்தது.

இதைவிட கொடுமை, எங்க EEE டிப்பார்ட்மெண்டில் இந்தியன் கவர்ண்மெண்ட்ல இருந்து அவார்ட் வாங்கின ப்ராஜக்ட் பண்ண பசங்களுக்கு 200க்கு 140 தான் போட்டாங்க. ஃப்ளைட் ஹைஜாக் தடுக்க ஹார்ட் பீட் வெச்சி தடுக்கறதுக்கு Embedded Systems வெச்சி ஏதோ பண்ணாங்க. கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்லையும், மெக்கானிக்கலையும் நல்லா மார்க் போடும் போது இவங்களுக்கு மட்டும் அப்படி என்னனு புரியல!!!

நான் இந்த பதிவுல சொல்லிய நண்பனுடைய தம்பி ரெண்டு வருஷத்துக்கு அப்பறம் போன வாரம் தான் க்ளியர் பண்ணான். எப்படி வேலை வாங்குவான்னு தெரியல. ஒரு இண்டர்னெல் எழுதாதற்கு ஒரு மார்க் போட்ட ஆசிரியருக்கும் பசங்க இருப்பாங்கனு தெரியாம போயிடுச்சி.

இந்த பத்தாவது வரைக்கும் தெய்வங்களா தெரியற ஆசிரியர்கள் அதுக்கு மேல பெரும்பாலும் ராட்சசகர்களாகத்தான் தெரிகிறார்கள். மாணவர்களின் வாழ்க்கை இவர்கள் கையிலிருப்பதால் அதை வைத்து பணம் பண்ண துடிக்கும் கூட்டம் ஒரு பக்கம். அவர்களை தலையில் தூக்கி வைத்து ஜால்ரா அடிக்கும் கூட்டங்களுக்கும், பெண்களிடம் வழிந்து கொண்டும் மார்க் போட்டு கொண்டிருக்கும் கூட்டம் ஒரு பக்கம்.

எனக்கு +2 படிக்கும் போது தோன்றியது, டாக்டராகி +1, +2 எடுக்குற வாத்தியாருக்கு மட்டும் வைத்தியம் பாக்க கூடாதுனு, இல்லைனா தாப்பான ஊசி போட்டுடனும்னு. நல்ல வேளை நான் டாக்டராகல.

30 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ரொம்ப கொதிச்சு போய் இருக்கீங்களோ??

வடுவூர் குமார் said...

என்னங்க பாலாஜி!!
இப்படி பயமுடுத்திறீங்க?
நாங்க படிக்கும் போது இதெல்லாம் இவ்வளவு தெரியவில்லை.

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

ரொம்ப கொதிச்சு போய் இருக்கீங்களோ?? //

உண்மையிலே அதை படித்த பிறகு எனக்கு கோபம் அதிகமாகத்தான் வந்தது. தெய்வத்துக்கு முன்னாடி எதுக்கு சொல்லிருக்காங்க? தெய்வத்துக்கிட்ட கொண்டு போறதுக்கா???

வெட்டிப்பயல் said...

//வடுவூர் குமார் said...

என்னங்க பாலாஜி!!
இப்படி பயமுடுத்திறீங்க?
நாங்க படிக்கும் போது இதெல்லாம் இவ்வளவு தெரியவில்லை. //

நான் சொன்னது எதுவுமே பொய் இல்லைங்க. நான் இவ்வளவு கொதித்தெழ காரணமே இதுதான். அவுங்க காலேஜ்ல எப்படி இருந்தாங்கனு யோசிக்கணும்...

அபி அப்பா said...

இல்லை பாலாஜி!! நீங்கள் சொல்வது தப்பு. இதே பதிவை இன்னும் 10 வருஷம் கழித்து நீங்களே படித்துப்பார்த்தால் வெட்கப்படுவீர்கள் அல்லது இப்படி ஒரு பதிவு போட்டு உலகம் முழுக்க ஆசிரியர் சமுதாயத்தையே கேவலம் செய்துவிட்டோமே என்று வேதனைப்படுவீர்கள். ஒரு சில ஆசிரியர்கள் உங்களுக்கு அமைந்தது போல் இருக்கலாம். அதற்காக இவ்வளவு கோபம் கூடாது.

இதுவே நீங்கள் எல்லாவிதத்திலும் இந்நேரம் தன்னிறைவடைந்திருந்தால் இந்த விஷயம் உங்களுக்கு ஞாபகம் இருந்திருக்குமா என்பதே சந்தேகம்.

ஏதோ மனசு குழப்பத்திலிருக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் எங்கேயோ பட்ட ஏதோ ஒரு அடி எங்கெங்கெல்லாம் நாம் அடி வாங்கினோம் என்று உங்களை சிந்திக்கதூண்டி நெருப்பை கொட்டிவிட்டீர்கள் என்பதே என் கருத்து.

நான் இதுவரை யார் மனமும் புண்படாமல் நடந்துக்க வேண்டும் என்றுதான் நடந்து வருகிறேன். என் மேல் கோபம் கொள்ள வேண்டாம். ஒரு அண்ணனாக சொல்கிறேன்.

இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. நீங்கள் மனசாந்தி பெற்றால் போதும்.

Chakra Sampath said...

என்ன கொடுமைங்க இதெல்லாம். நினைச்சாலே வெறுப்பா இருக்கு. நான் படிச்ச கல்லூரியின் பவள விழா கொண்டாட்டத்தை பற்றி செய்தி வெளியிட வந்த ஒரு பத்திரிக்கை நிருபரிடம், அவர் யாரென்று தெரியாமலே கல்லூரியில் உள்ள நிறை-குறைகளை என் நண்பனொருவன் உளறித் தொலைக்க, அந்த பத்திரிக்கையும் குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி வெளியிட்டு, நண்பனின் பெயரையும் போட்டு விட்டார்கள். 13 வருடங்கள் போன பின்னரும் எங்கள் துறைத்தலைவர் சீறியது நன்றாக நினைவிலுள்ளது - "நீ எப்படி பரிட்சை எழுதப்போறேனு நான் பாக்கறேன்". நல்ல வேளை, பரிட்சை நேரத்தில் வேறு ஒரு பிரச்சினையில் அந்த துறைத்தலைவர் மாட்டிக் கொள்ள,என் நண்பன் தலை தப்பித்தது.

மு.கார்த்திகேயன் said...

டியூசன் விஷயத்தில் நீங்கள் சொன்னது உண்மயிலும் உண்மை வெட்டி! பல பேரின் வாழ்க்கை இது போல திசை மாறிபோக வாய்ப்புகள் உண்டு!

இந்த அளவு கொதிப்பா வெட்டி!
ஆமா வெட்டி! நம்ம பக்கம் வர்றதே இல்லை! வரக்கூடாதுன்னு ஏதும் கங்கணமா!

உண்மை said...

எனக்கும் அதே எண்ணம்தான். அந்த அறிவுகெட்ட ஆசிரியனுக்கு என்ன தண்டனை குடுப்பது ?

இம்சை அரசி said...

நான் கூட 11th படிக்கும்போது எங்க chemistry missகிட்ட tution போகாத்தால ரொம்ப கஷ்டப்பட்டதால எங்க அப்பா என்னை வேற schoolல சேத்து விட்டார். அங்க நான் போகும்போது 12th பாதி நடத்திட்டாங்க. நானும் அப்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கும் இந்த அனுபவம் இருக்கு வெட்டி.

ஜி said...

எனக்கு இது மாதிரி எதுவும் நேர்ந்ததில்லை. ஆனால் என் நண்பர்களுக்கு நேர்ந்ததாகக் கேள்விப் பட்டிருக்கேன். அரசுக் கல்லூரியாதலால், கல்லூரியில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. பள்ளியில், எங்கள் வாத்தியாரிடம் டியுஷன் பயிலவில்லையே என்ற ஆதங்கம் அவர்களிடம் இருந்தாலும், மார்க் எடுத்தப் பின் பள்ளிக்கு வரும் நல்லப் பெயருக்காக எனக்கெல்லாம் பிராக்டிக்கலில் முழு மதிப்பெண் அளித்தார்கள்.

ஆசிரியப் பணி என்பது என்பது இப்போது பெரும்பாலும் வியாபார நோக்கமாக மாறிவிட்டது. அதுவும் +1, +2 வகுப்புகளுக்கு.

ஆனாலும் இன்னும் நேர்மையான பல வாத்தியார்கள் இருக்கின்றார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

வெட்டிப்பயல் said...

அபி அப்பா,
நீங்க சொல்வது சரிதான்... நல்ல ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

ஆனால் மாணவர்களின் வாழ்க்கை தங்கள் கையிலுள்ளது என்று தெரிந்த பின்பு அவர்கள் அதை வைத்து அரசியல் செய்வதுதான் கொடுமை.

நான் கொடுத்த சுட்டியை பார்த்தால் எனக்கு ஏன் அந்த கோபம் வந்தது என்று தெரியும்.

நான் சொல்லிய சம்பவங்கள் எதுவும் பொய்யல்ல.

நான் கொடுத்த இரண்டு சுட்டிகளையும் பார்த்தால் என் கோபத்தின் காரணம் தங்களுக்கு புரியும்.

வெட்டிப்பயல் said...

Chakra Sampath,
எங்கள் கல்லூரியில் நான் படிக்கும் போது நடந்த அலுமினி ஃபங்ஷனில் இதே போல் தான் ஒரு சீனியர் பேசினார்... அவர் பேசியது இதுதான்

நான் இங்க வந்தப்ப எங்க HOD என்னிடம் கேட்டது இதுதான். "என்னப்பா டிகிரி முடிச்சிட்டியா? எப்படியும் நீ முடிச்சிருக்கமாட்டனு எனக்கு தெரியும்னு" சொன்னாரு.

நான் அப்ப அவர்கிட்ட எதுவும் சொல்லல. இப்ப சொல்றேன்

For ur kind information, I am a Systam analyst in Intelனு சொன்னாரு.

அப்ப எங்க HOD முகத்தை பார்க்கனுமே!!!

Arunkumar said...

neenga solradhu correctu thaan.. naatla indha maathiri teachers and poli-doctors paakam bodhu manasukku romba kashtama thaan irukku :(

வெட்டிப்பயல் said...

//மு.கார்த்திகேயன் said...

டியூசன் விஷயத்தில் நீங்கள் சொன்னது உண்மயிலும் உண்மை வெட்டி! பல பேரின் வாழ்க்கை இது போல திசை மாறிபோக வாய்ப்புகள் உண்டு!

இந்த அளவு கொதிப்பா வெட்டி!
//
நான் கொடுத்த சுட்டியை பார்த்தால் தங்களுக்கு நன்றாக புரியும். என்னைவிட உங்களுக்கு கோபம் அதிகம் வரும் கார்த்தி.

//
ஆமா வெட்டி! நம்ம பக்கம் வர்றதே இல்லை! வரக்கூடாதுன்னு ஏதும் கங்கணமா! //

இல்லைங்க. நீங்க சீரியஸ் ப்ளாகர் ஆகிட்டீங்க. இலக்கியமா ஏதோ பேசறீங்க. நம்ம சிற்றறிவுக்கு எதுவும் எட்டல. அதனால தூர இருந்து பாக்கறதோட சரினு ஆயிடுச்சி...

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

எனக்கும் அதே எண்ணம்தான். அந்த அறிவுகெட்ட ஆசிரியனுக்கு என்ன தண்டனை குடுப்பது ? //

என்னை கேட்டால் ஆயுள் தண்டனை இல்லை மரண தண்டனை.

ஒரு குடும்பமே முன்னேறிருக்குமே!!! அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்திருப்பான்.

வேலை கிடைத்த பொழுது எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பான். எல்லாம் போயிடுச்சே!!!

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

நான் கூட 11th படிக்கும்போது எங்க chemistry missகிட்ட tution போகாத்தால ரொம்ப கஷ்டப்பட்டதால எங்க அப்பா என்னை வேற schoolல சேத்து விட்டார். அங்க நான் போகும்போது 12th பாதி நடத்திட்டாங்க. நானும் அப்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கும் இந்த அனுபவம் இருக்கு வெட்டி. //

சேம் ப்ளட்...

வெட்டிப்பயல் said...

ஜி,
முதல்ல நான் கொடுத்த லிங்கை பாருங்க. அண்ணா யூனிவர்சிட்டில படிச்ச உங்களோட எக்ஸ்போஷர் வேற சாதாரண கல்லூரில படிக்கறவங்களோட எக்ஸ்போஷர் வேற...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

neenga solradhu correctu thaan.. naatla indha maathiri teachers and poli-doctors paakam bodhu manasukku romba kashtama thaan irukku :( //

ஆமாம் அருண்.
இவர்களை மன்னிக்கவே கூடாது...

உண்மை said...

//
என்னை கேட்டால் ஆயுள் தண்டனை இல்லை மரண தண்டனை.
//

மிக சரி. ஒரு 2 பேருக்கு குடுத்து பாருங்க, எல்லோரும் திருந்தி விடுவார்கள்.

நல்ல ஆசிரியர்களே நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.

தல எப்போ ஊருக்கு போயிட்டுவர போற ? அந்த கோபம் தான் இப்போஎல்லாம் கொப்பளிக்கிதுன்னு நினைக்கிறென் :)

Cool down baby, cool down.

Syam said...

இந்த மாதிரி ஆசிரியர்களயும், சில அரசியல்வாதிகளயும் திருத்தவே முடியாது...

Anonymous said...

I completely agree with you.

I have had a HOD by name "Mangalanathan", in Al Ameen polytechnic Erode (MECH department between 1995 - 1998). (I hope still he is the HOD in JKK sampooraniammal polytechnic).

Some of the facts about him:

He called himself I am not a teacher I am rowdi, careful with me. I will break your head, break your bones are some of the blessings from him.

Once one student (I dont remember his name) has stolen a IC trainer board which has come to MECH lab to be drilled at the corners to be fixed in a board. Every one knows he is the one who has taken it, and asked to return it and he has returned it. Our HOD asked him to pay a fine of 1000 RS, which is a million for him and his family. He couldnt pay it, HOD didnt allow him to attend any of the class for almost a month. Then knowing this one day I went to principal and explained him this (He is a GEM of a person named Rajagopal). He allowed him to class and dictated, however big the mistake a student does, dont stop him from attending the class.

In the end of the year, in the record note books we need to get our HODs signature. He was avoiding meeting us and taking all kind of execues. We went to princial explained the same, he advised us to go and meet him at his house, the day before the lab exam. We went to his home (around 7 students), he asked what do you want? We want your signature. He said now I am not your HOD, I am just Mangalanathan, if you want to meet your HOD come to my room tomorrow in college. Next day the exam starts at 7:30AM, we didnt know what to do, we were there before the lab by 7:00AM, where our principal was waiting for us. He signed in all our records. And we could give the exam.

After the exam, there was a news spreading aroud that Mech HOD is dismissied. And it was in the notice board. He has been terminated, students were advised not to keep any correspondence and a temp HOD was also announced.

What I understand is, none of the teachers in the college (for that matter any college, except medical, I think in medical only after having certian period of experience one can be a teacher) has any industrial experience.

Who goes as a teacher, the one who couldnt clear any campus IV's, and not able to find any job in their relative field. The dumb to the dumbest guy turns out to be a teacher to educate the tomorrows.

My friends brother who turned out to be a teacher, he has completed his MSC chemistry. And started working in a govt arts as contract teacher. I asked him why did you like this job, he said in this job I get lot of spare time in which I can do other business..... (had zero% interest towards his job)I pity the students who study from him. Inspite clearly mentioning in the contract that you cant claim permenant employment, now these guys are fighting back the government for permenant employment. Tomorrow some how he will become permenant by paying some bribe... day after that he will start...

I have every where used teacher, instead of prof, inst, etc.

Abbas
"abbazs" at "g m a i l" dot com

Aravind said...

I am also the one who got 1 in internals for taking leave in the internal exam due to typhoid and all cleared it after a gr8 struggle. that’s a long sad story hope I have to write a blog abt it

கோபிநாத் said...

எனக்கும் இப்படி பட்ட அனுபவம் உண்டு வெட்டி...

என் கூட படிச்ச ஒரு நண்பன் ஒரு வாத்தியாருக்கு பயந்தே வகுப்புக்கு வரமாட்டான் அப்புறம் நாளாக நாளாக அவன் சுத்தமாக வரவில்லை அவன் வாழ்க்கையே போச்சி...இத்தனைக்கும் அவன் நல்லா படிக்கற மாணவன். எல்லா போட்டிகளிலும் கலந்துக்கிட்டு அவன் எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்தவன்...அவனை கிண்டல், கேளி செய்தே அவன் வாழ்க்கையை அழித்தார்கள் சில ஆசிரியர்கள்...

ஆனால் அதே பள்ளியில் மாணவர்களுக்காகவே உழைக்கும் உன்னத ஆசிரியர்களும் உண்டு...

(பழைச நெனைச்சேன் அதான் பெரிய பின்னூட்டம்)

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

//
என்னை கேட்டால் ஆயுள் தண்டனை இல்லை மரண தண்டனை.
//

மிக சரி. ஒரு 2 பேருக்கு குடுத்து பாருங்க, எல்லோரும் திருந்தி விடுவார்கள்.

நல்ல ஆசிரியர்களே நல்ல மாணவர்களை உருவாக்க முடியும்.
//
ரொம்ப சரி...

//
தல எப்போ ஊருக்கு போயிட்டுவர போற ? அந்த கோபம் தான் இப்போஎல்லாம் கொப்பளிக்கிதுன்னு நினைக்கிறென் :)

Cool down baby, cool down. //

எனக்கும் அப்படித்தான் தோனுது. இங்க வேற ப்ராஜக்ட்ல விட மாட்றாங்க. வந்து அடுத்த வாரத்தோட ஒரு வருஷமாக போகுது :-((((

வெட்டிப்பயல் said...

//Syam said...

இந்த மாதிரி ஆசிரியர்களயும், சில அரசியல்வாதிகளயும் திருத்தவே முடியாது... //

நாட்டாமை,
தீர்ப்ப மாத்தி சொல்லு(ங்க) :-))

வெட்டிப்பயல் said...

abbas,
I believe, he must be a psychopath.

Also I agree with whatever u have mentioned. In Engineering colleges, only people who couldn't get into any industries are joining as lecturers.

I have seen some staffs who are really good. This post is not to defame them but to show the other side.

வெட்டிப்பயல் said...

// Aravind said...

I am also the one who got 1 in internals for taking leave in the internal exam due to typhoid and all cleared it after a gr8 struggle. that’s a long sad story hope I have to write a blog abt it //

Aravind,
I can understand ur feeling. Its great that u could clear it.

Pls write abt it and it should not happen to anyone else...

Mohan said...

You are right. I am from St. Antony's School, Thanjavur (1989-1990 batch). There also the same case. Except Maths, Botony and Zoology nobody shown interest in taking classes. My Physics teacher Selvadoss used to tell openly in class if you don't come to Tution you won't get practical marks.

Anonymous said...

hello Mr.vettipaiyal,

post any ideas for arriyar candidates.is they eligible for working in S/W companies.

Anonymous said...

Kovai-le.....ST....Higher Secondary Schools....Nan karuppa iruthathal..Karuma..Karuma endru koopitta Father T....Changed my life....But he is a HM of another reputed schools...I prayed Jesus to give him better knowledge

I got frustated with that pity guy(not father) also English....

I can say still I have something in my heart always says I am black...I have very parants, Spouse and children...Running a trading company in USA.