நான் பெங்களூர்ல இருந்த வரைக்கும் பொதுவா 9 மணிக்குள்ள வீட்டுக்கு போனதே இல்லை. ஏன்னா வீட்ல போன ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வர நேரமாகும். சீக்கிரம் போய் என்ன பண்ண போறோம்னு 9 மணி வரைக்கும் ப்ரவுஸ் பண்ணிக்கிட்டு, ஃபோன் பேசிக்கிட்டு இருப்பேன் (சொன்னா நம்பனும்.. பசங்கக்கிட்டதான்).
என் கூட வேலை செய்யறவங்களும் பொதுவா அப்படித்தான் இருப்பாங்க. இந்த பழக்கம் எனக்கு எப்படி ஸ்டார்ட் ஆச்சினா, என்னுடைய முதல் ப்ராஜக்ட் லீட் நல்ல பேர் வாங்கனும்னு எல்லாரையும் 9 மணி பஸ்லதான் போக வைப்பாங்க. டெஸ்ட் கேஸ் ரிவியூவே 8 மணிக்கு தான் ஆரம்பிப்பாங்க. நம்ம 4 மணிக்கு வேலை முடிச்சிட்டாலும் கண்டுக்கவே மாட்டாங்க. ஏதாவது கேட்டா சாப்ட்வேர் கம்பெனினா லேட் நைட் வொர்க் பண்றது ரொம்ப சாதரணம்னு சொல்லிடும்.
சண்டை போட்டா 9 மணி வரைக்கும் வேலை கொடுக்கும்னு புரிஞ்சி போச்சி (வேற என்ன புடுங்கன ஆணியெல்லாத்தையும் திரும்ப அதே எடுத்தல அடிக்க சொல்லும்.) அதுக்கு பேசாம 4 மணில இருந்து 7:30 மணி வரைக்கும் சும்மா ஓபி அடிச்சிட்டு 9 மணிக்கு கடைசி பஸ்ல போனா நல்ல பேரும் கிடைக்கும். கம்பெனி போன், கம்பெனி இண்டர் நெட்னு ஜாலியா எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சாச்சு.
அப்படியே போக போக புது மேனஜர் வந்தாரு. எப்படியும் எல்லாரும் 9 மணி வரைக்கும் இருக்காங்கனு சொல்லி ப்ளானிங் எல்லாம் அது வரைக்கும் போட ஆரம்பிச்சிட்டாரு. இப்ப கண்டிப்பா குறைந்த பட்சம் 9 மணி வரைக்கும் வேலை செஞ்சாகனும்னு நிலைமை வந்துடுச்சி.
அதுவும் இல்லாம இப்ப டீமை லீட் பண்ற ரேஞ்சுக்கு நாம வந்தாச்சு. ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க. (இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...) அவுங்க செய்யற வேலைக்கு நாமதான் பொறுப்பு. வேலைக்கு சேர்ந்து 2 - 3 வருஷத்துல இந்த நிலைமை. ஆன்சைட்டிற்கிட்டயும் நாம திட்டு வாங்கணும் (டெலிவரபுல் பாதிக்க கூடாதாம்) அதே சமயம் இந்த பசங்க பண்றதெல்லாத்தையும் நம்ம பார்க்கனும். மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது.
இப்படியே பார்த்தா காலைல எல்லாருக்கும் முன்னாடி வந்து ஆன்சைட்ல இருந்து வந்திருக்க மெயில் பார்த்து அப்பறம் ஆன்சைட் காலுக்கு ரெடியாகி போன் பேசி, யார் யாருக்கு என்ன வெலைனு நாம பிரிச்சி கொடுத்து அவுங்க கூடவே இருந்து பண்ண வைக்கனும். அப்பறம் அதுங்க முடிக்கற வரைக்கும் கூடவே இருந்து வேலை பார்த்து அவுங்க போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் சரி பார்த்து ஆன்சைட்டிற்கு மெயில் அனுப்பிட்டு (இந்த மெயில் அடிக்க குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஆகும்) நாம கிளம்பனும். இந்த டென்ஷன் இருக்குது பாருங்க...
சில சமயம் நான் மழைல போகும் போது கைல குடை இருக்கறதை கூட மறந்து அப்படியே மழைல நடந்து போயிருக்கேன். அப்புறம் வீட்டுக்கு போனவுடனே கொஞ்ச நேரம் மாடில காத்து வாங்க போயிட்டு ரிலாக்ஸாகி தான் கீழவே வருவேன். எக்ஸிக்யூஷன் சமயத்துல காலைல 8 மணிக்கு போய் ராத்திரி 12 மணிக்கு குறைந்து வர முடியாது. அந்த டென்ஷன்ல ஒரு மாசம் இருந்தா ஒரு வாரம் லீவ் போட்டு தூங்கனும்னு தோனும்.
வேலையே இல்லாத சமயமும் அப்ப அப்ப இருக்கும். அந்த மாதிரி சமயத்துல சும்மா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணுனு சொல்லிடுவாங்க. அப்ப வர கோபம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை. இதவிட கொடுமை ராத்திரி வேலை செய்யற ப்ராஜக்ட்ஸ்...
எனக்கு என்னனா ஒரு வேளை நமக்கு தான் பீப்பிள் மேனேஜ்மெண்ட் தெரியலையோனு கஷ்டமா இருக்கும். காலேஜ்ல டூர் ஆர்கனைஸ் பண்ணிருக்கேன், டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு எல்லாம் முன்னாடி நின்னு வேலை பார்த்திருக்கோம். ஆனா இந்த மாதிரி கஷடப்பட்டதில்லை.
ஒரு வருஷத்துக்கு மேல ரிலிஸ் பண்ண சொல்லி கேட்டுட்டு இருந்தேன். கடைசியா எங்க மேனஜர்கிட்ட நான் சொன்னது இதுதான். இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான். கடைசியா என்னை அந்த ப்ராஜக்ட்டை விட்டு ரிலீஸ் பண்ணிட்டாரு... அதுக்கு அப்பறம் பெருசா மாற்றம் இல்லை.
இந்த மாதிரி வொர்க் கல்சர், கண்ட நேரத்துக்கு சாப்பிடறது, ஒரே இடத்துல உக்கார்ந்திருக்கறது, சரியான நேரத்துல தூங்காம இருக்கறது. எல்லாத்துக்கும் மேல சின்ன வயசுல அதிக சுமையே சேத்துக்கறது இதெல்லாம் நம்மல அதிகமா பாதிக்கும்னு சொல்றாங்க.
ஒரு நாளைக்கு நாம அதிக பட்சம் எவ்வளவு நடக்கிறோம்? உடல் உழைப்பும் இல்லை. ஹை கலோரி ஃபுட், இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்....
எப்படி நம்மல நாம சரி பண்ணிக்க போறோம்?
போன வருஷம் சென்னைல சாப்ட்வேர் கம்பெனி மற்றும் கால் செண்டர்ல வேலை செய்யற 30- 40 பேர் 32 வயசுக்குள்ள இறந்திருக்கிறார்கள் என்று படித்த நியாபகம்.
ஒரு மரணத்தின் வலியே தாங்க முடியாத நிலை. இதே வாழ்க்கை வாழ்ந்தால் எத்தனை பேரை இழப்போம் என்று தெரியவில்லை. 60 - 70 வயசுல நம்ம அப்பா, அம்மா சம்பாதிச்ச பணத்தை நாம 30 வயசுக்குள்ள சம்பாதிடறோம். அதுக்காக நம்ம வாழ்க்கையையும் அதுக்குள்ளே முடிஞ்சிடனுமா?
இதுக்கு என்ன முடிவுனு தெரியல...
78 comments:
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
அதெப்படிங்க சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிங்களும் இந்த மாதிரி மேனேஜரை தேர்ந்தெடுக்கறாங்க??
இதுக்கு ஒரே முடிவு, மேனேஜரா ஆகறதுதான். வேலையே பார்க்க வேணாம் :))
நல்லா நௌதி இருக்கீங்க. இதுக்குத்தான் சின்ன சின்ன ஸ்டெர்ஸ் குறைக்கிற பழக்கம் கத்துக்கணும். ரொம்ப டென்ஷனானா அப்படியே ஒரு ஐஞ்சு நிமிடம் வெளியே நடக்கிறது, இல்லாட்டி கன்ணை மசாஸ் செய்யறது, ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஒரு லெட்டர் எழுதறது, பிடிச்ச பாட்டை எழுதி அல்லது மெதுவா படிப்பார்க்கிறதுனு. மனசு இருந்த நமக்குன்னு ஒரு 10 நிமிடம் கிடைக்காமயா போயிடும்?
கொஞ்சம் சாப்பாடு விஷயத்தில் கவனமா இருந்துக்கலாம். கொறிக்கிற சமயங்களில் பொரிச்சதை சாப்பிடாமல் காரட் போன்ற சமாச்சாரங்களைக் கடிக்கலாம்.
(நான் செய்யறேனான்னு எல்லாம் கேட்கக்கூடாது.) ;)
//அதெப்படிங்க சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிங்களும் இந்த மாதிரி மேனேஜரை தேர்ந்தெடுக்கறாங்க??//
குமரன் படிச்சாருன்னா கோபப்படப் போறாரு!
பாலாஜி
நம்மப்பா 70 வயதில் சம்பாதித்தை 30 வயதில் சம்பாதிக்கிறோம்- நிஜம் தான்.
மென்பொருள் துறையில் இல்லாததால் பிரச்சனையை சரியாக உள்வாங்க முடியவில்லை.மேம்போக்கா ரிலாக்ஸ் பண்ண வழியப்பாருங்க என்று வேண்டுமானால் சொல்லலாம்.
//இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான்//
இப்படியெல்லாம் மிரட்ட கூடாது.. ;-)
//மணிகண்டன் said...
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
அதெப்படிங்க சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிங்களும் இந்த மாதிரி மேனேஜரை தேர்ந்தெடுக்கறாங்க??
இதுக்கு ஒரே முடிவு, மேனேஜரா ஆகறதுதான். வேலையே பார்க்க வேணாம் :)) //
அங்க வேற பிரச்சனை இருக்குங்க... அடிக்கடி கம்பெனி மாறுவது, பிராஜக்ட் மாறுவது என்ற நிலையில் ஒண்ணுமே தெரியாத பிராஜக்ட்டுக்கு டீம் லீட் சொல்றத கேட்டு எல்லாம் பண்ணனும்.
அதுவும் கொடுமைதான்...
Product Based Company ல இந்த பிரச்சனை இருக்காதோனு நினைக்கிறேன்...
// பத்மா அர்விந்த் said...
நல்லா நௌதி இருக்கீங்க. இதுக்குத்தான் சின்ன சின்ன ஸ்டெர்ஸ் குறைக்கிற பழக்கம் கத்துக்கணும். ரொம்ப டென்ஷனானா அப்படியே ஒரு ஐஞ்சு நிமிடம் வெளியே நடக்கிறது, இல்லாட்டி கன்ணை மசாஸ் செய்யறது, ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஒரு லெட்டர் எழுதறது, பிடிச்ச பாட்டை எழுதி அல்லது மெதுவா படிப்பார்க்கிறதுனு. மனசு இருந்த நமக்குன்னு ஒரு 10 நிமிடம் கிடைக்காமயா போயிடும்? //
ஆமாம் டாக்டர்... ஆனா நம்ம வெளிய போன நம்ம கூட கூட்டமே சேர்ந்து வெளிய வந்து அரை மணி நேரம் கெட்டுடும்னு யோசிச்சிட்டு அப்படியே இருந்திடுவோம்...
சில சமயம் இந்த மாதிரி தனியா வாக்கிங் போயிட்டு வரதுண்டு... ரொம்ப நல்லா இருக்கும். ஆனா உடனே போன் கால் வந்து தொல்லை பண்ணும் :-(
//இலவசக்கொத்தனார் said...
கொஞ்சம் சாப்பாடு விஷயத்தில் கவனமா இருந்துக்கலாம். கொறிக்கிற சமயங்களில் பொரிச்சதை சாப்பிடாமல் காரட் போன்ற சமாச்சாரங்களைக் கடிக்கலாம்.
(நான் செய்யறேனான்னு எல்லாம் கேட்கக்கூடாது.) ;)
//
கொத்ஸ்,
இப்படித்தான் கேரட் நிறைய வாங்கி வெச்சி வீணா போயிடுச்சி... ஆபிஸ்க்கு கொண்டு வந்தா தீர்த்துடுவோம்.. ஆனா இந்தியால இருக்கும் போது இப்படியெல்லாம் வாங்கிட்டு வர தோனாது. உள்ள தான் நிறைய ஐட்டம் இருக்கேனு விட்டுடுவோம்...
//
//அதெப்படிங்க சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிங்களும் இந்த மாதிரி மேனேஜரை தேர்ந்தெடுக்கறாங்க??//
குமரன் படிச்சாருன்னா கோபப்படப் போறாரு! //
:-))
//வடுவூர் குமார் said...
பாலாஜி
நம்மப்பா 70 வயதில் சம்பாதித்தை 30 வயதில் சம்பாதிக்கிறோம்- நிஜம் தான்.
மென்பொருள் துறையில் இல்லாததால் பிரச்சனையை சரியாக உள்வாங்க முடியவில்லை.மேம்போக்கா ரிலாக்ஸ் பண்ண வழியப்பாருங்க என்று வேண்டுமானால் சொல்லலாம். //
ஒரே சீட்ல உக்கார்ந்து கம்ப்யூட்டரையே பார்ப்பது. ரொம்ப நேரம் யோசிக்கறது. உடலுக்கு வேலையே கொடுக்காமலிருப்பது.. இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்...
சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு டயபடீஸ் வர அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்!!!
//இலவசக்கொத்தனார் said...
குமரன் படிச்சாருன்னா கோபப்படப் போறாரு! //
நான் ஏதோ விளயாட்டுக்கு சொன்னேங்க..இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரனகளமாக்கிடுவிங்க போல :)
//.:: மை ஃபிரண்ட் ::. said...
//இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான்//
இப்படியெல்லாம் மிரட்ட கூடாது.. ;-) //
பின்ன ரெண்டு வருசமா ஒரே ப்ராஜக்ட்ல போட்டு வாட்டினா என்ன பண்ணறது???
ஆன் சைட்ல இருந்து எவ்வளவு வேலை கொடுத்தாலும் பாக்கறாண்டா இவன் ரொம்ப நல்லவண்டானு கூடி வெச்சி கும்மினாங்கனா இப்படித்தான் மிரட்டனும் :-)
//மணிகண்டன் said...
//இலவசக்கொத்தனார் said...
குமரன் படிச்சாருன்னா கோபப்படப் போறாரு! //
நான் ஏதோ விளயாட்டுக்கு சொன்னேங்க..இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரனகளமாக்கிடுவிங்க போல :) //
நல்ல வேலை கொத்ஸ் முன்னாடியே சொன்னதால நான் பதமா சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்!!!
அதுவுமில்லாம இந்த பதிவ என் மேனேஜரே படிக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம்...
குமரன் போட்டு கொடுத்துடாதீங்க :-)
பாலாஜி, சின்ன வயசில கஷ்டப்பட்டு உழைக்கலாம்.
ஆனால் ஸ்ட்ரெஸ் கூடாது.இந்த டெட்லைன்,ரீபோர்ட் மத்தியானம் தூங்கிக்கொ, ராத்திரி முழிச்சுண்டு இரு எல்லாம் இந்த ஊருக்காரங்க
படுத்தற பாடுன்னு தான் தோன்றுது,. இவ்வளவும் சம்பாதிச்சுட்டு
எப்போ நிம்மதியா இருக்கிறது?
ஒரே வழி கன்ஸல்டண்டாகப் போக வேண்டியதுதான்:-)
//
Product Based Company ல இந்த பிரச்சனை இருக்காதோனு நினைக்கிறேன்...
//
நினைக்கிறது நிஜம்தான். நான் fresherஆ oracle-ல சேந்து 5 வருஷம் இருந்துர்க்கேன். ஒரு நாள் கூட compulsion இருந்ததில்ல late night வேல செய்யனும்னு. ஆனா இப்போ product based companiesல கூட இந்த கலாச்சாரம் வந்துட்டு இருக்கு :(
ஒரே ஒரு நெகடிவ் என்னான்னா ஈசியா அமெரிக்கா வர முடியாது இந்த மாதிரி கம்பெனீஸ்ல இருந்து. என்ன மாதிரி ஏதாவது bodyshopper மூலமாத்தான் வரனும். service based companies na ஈசியா வந்துரலாம்.
pros n cons irukku but i always prefer product based companies simply to get rid of these kind of really unreliable project deadlines. :(
நானும் பல நாள் யோசிச்சிர்க்கேன்.
என்ன முடிவுன்னு சத்தியமா தெரியல :(
என்ன வெட்டி.. சரியான இத்துப்போன கம்பெனில வேலை பாப்பீங்க போலிருக்குது. எங்க கம்பெனில நானும் எங்க டீமும் எங்க மேனேஜரும் சேந்து எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு, 5 மணிக்கெல்லாம் ஒன்னா கெளம்பிடுவோம். எப்பவாவது ஒரு 9 மணி வரைக்கும் ஒக்கார வேண்டி வரும். அதுவும் நாங்க பசங்களோட ஒரு ரெண்டு மூனு மணி நேரம் ஆட்டைய போடுறதால அப்படி ஒக்கார வேண்டி இருக்கும்.
எல்லாம் நீங்க பண்ற வேலை.. எல்லாத்தையும் பண்ணிப் புட்டு, மேனேஜர கொற சொன்னா எப்படி?
நீங்க மேனேஜரா ஆனதுக்கப்புறம், உங்க டீம் மக்கள்ட்ட விசயத்த கேட்டாதான் தெரியும் :)))
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
Dude i assume you are refering to your project manager.If so, i strongly disagree with this stment. He / She being a project manager doesn't have to know indepth technical details of the project, and i would think PM will have bunch of tech leads, developers, test leads, testers et all in the project to do that work.
After all PM stands for project management and not technical architecture.
//
அப்பறம் அதுங்க முடிக்கற வரைக்கும்
//
பாவங்க அந்தப்பசங்க. அவங்க சீனியர்ஸ் செஞ்சது தான அவனும் செய்வான்?
//
வேலையே இல்லாத சமயமும் அப்ப அப்ப இருக்கும். அந்த மாதிரி சமயத்துல சும்மா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணுனு சொல்லிடுவாங்க. அப்ப வர கோபம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை.
//
இதை விட கொடுமை கிடையாதுங்கோ !!!
//
இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான்
//
ரொம்ப வேதனப்பட்டுருப்பீங்க போலிருக்கே... இந்த அளவுக்கு சொல்லியிருக்கீங்க :(
//ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க. (இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...)//
இது நாம் எல்லாரும் கடந்து வந்த பாதை வெட்டி :)) நமக்கு சொல்லி குடுக்க ஒருத்தர் சலித்து இருந்தா நம்ம இந்நேரம் இப்படி முன்னேறி இருக்க முடியாது. இந்த நிலைமைக்கு நாம் எல்லாரும் தான் காரணம். அவன் இருக்கான்னு,இவன் இருக்கான்னு நாமளும் இருந்து பழகிட்டோம்.
//வல்லிசிம்ஹன் said...
பாலாஜி, சின்ன வயசில கஷ்டப்பட்டு உழைக்கலாம்.
ஆனால் ஸ்ட்ரெஸ் கூடாது.இந்த டெட்லைன்,ரீபோர்ட் மத்தியானம் தூங்கிக்கொ, ராத்திரி முழிச்சுண்டு இரு எல்லாம் இந்த ஊருக்காரங்க
படுத்தற பாடுன்னு தான் தோன்றுது,. இவ்வளவும் சம்பாதிச்சுட்டு
எப்போ நிம்மதியா இருக்கிறது?
ஒரே வழி கன்ஸல்டண்டாகப் போக வேண்டியதுதான்:-)//
வல்லியம்மா,
கரெக்டா சொல்லிட்டீங்க...
ஆப் ஷோர்லையாவது கம்பெனில வேலை பார்த்துட்டு வந்தா போதும். இங்க வீட்டுக்கு வந்தும் வேலை செய்ய வேண்டியது இருக்கு :-(
இப்பத்தான் உங்களோட 5 சிறுகதைகளையும் படிச்சேன். நல்லா எழுதறீங்க. பத்திரிக்கைகளுக்கு அனுப்புனீங்களா? ரொம்ப நல்லா உரையாடல் வந்திருக்கு.
// மணிகண்டன் said...
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
அதெப்படிங்க சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிங்களும் இந்த மாதிரி மேனேஜரை தேர்ந்தெடுக்கறாங்க??
இதுக்கு ஒரே முடிவு, மேனேஜரா ஆகறதுதான். வேலையே பார்க்க வேணாம் :)) //
வெட்டி, இது ரொம்ப அதிகம். மணிகண்டன் யூ டு.
நான் சாப்ட்வேர் இஞ்சினியராவும் சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியராவும் இருந்தப்ப என்னோட டீம் லீடரப் பாத்து, நம்மளும் டீம் லீடராயிட்டா நல்லாயிருக்கும்ல...வேலையப் பிரிச்சிக் குடுத்துட்டு சும்மாயிருக்கலாம்னு நெனச்சேன். டீம் லீடரானப்புறந்தான் தெரிஞ்சது..அது அப்படியில்லைன்னு. ஒவ்வொருத்தன் எழுதுற கோடுக்கும் நம்மதான் பொறுப்பு. ஒரு பய ஒத்துழைக்க மாட்டான். அப்பத்தான் நான் செஞ்ச தப்புகளும் தெரிஞ்சது. பேசாம மேனேஜரா இருந்தா நிம்மதியாயிருக்கலாமேன்னு நெனச்சேன். ஆனா பாருங்க. மேனேஜர் ஆனப்புறமும்...நிம்மதியில்லை. அப்பத்தான் புரிஞ்சது. எந்த அளவுக்குப் போனாலும் வேலையும் பிரச்சனையும் இருக்கும்னு.
கோடிங் எழுதுறதும் டெஸ்டிங் பண்றதும் மட்டுமில்லீங்க புராஜெக்ட்ங்குறது. அதையும் தாண்டி நெறைய இருக்கு. நீங்க ஒழுங்கா கோடிங் எழுதுறதுக்கான சூழ்நிலையை நாங்க உருவாக்கனும். புராஜெக்ட் தொடங்கி, ஆளுங்கள அதுல சேத்து, எல்லாருக்கும் தெரிய வெச்சு, மசாமாசம் இங்கிருந்து டெலிவரி, அங்கிருந்து ரெவின்யூ, குவாலிட்டி, ரிப்போர்ட்டிங். மக்களே. இது ஒங்களுக்கும் ஒரு நாள் புரியும். ஏதோ சாப்ட்வேர் இஞ்சினியர்கள்ளாம் ரொம்பத் தெரிஞ்சவங்க மாதிரியும் மேனேஜர்கள் மண்ணாங்கட்டின்னும் பேச வேண்டாம். exceptional cases are always there. and they are not examples. if we write what sw engineers do.....they cant show their face any where.
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
மேனேஜருக்கு வேலை தெரியணுமுன்னு அவசியமில்லையாம். மக்கள்ஸை
வேலை வாங்கத் தெரிஞ்சாப் போதுமாம். இங்கே அப்படித்தான் சொல்றாங்க.
ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையே இப்ப இல்லைன்னு ஆகிப்போச்சு. அதுக்குத்
தகுந்தமாதிரி நாமும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யக் கத்துக்கணும். பூனை,நாய்
எதாவது வளர்க்கலாம். அது நம்மளைப் படுத்தும்பாட்டுலே நம்மளைப்பத்தி மறந்துருவோம்:-)
மக்களே,
வேலை இருக்கு நான் எல்லாத்துக்கும் சீக்கிரம் வந்து பதில் சொல்றேன்...
அதுக்கு முன்னாடி நான் சொல்ல வரது மேனஜருக்கு வேலை தெரியாதுனு இல்லை. அது இதுக்கு மேல கொடுமையான வேலை...
நான் கேக்கறது நம்ம எப்படி உடம்ப பார்த்துக்க போறோம்னுதான்...
9 மணி வரைக்கும் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கும் பழக்கத்தை எப்படி மாத்தா போறோம்னுதான்...
சீக்கிரம் வேலைய முடிச்சி வீட்டுக்கு வந்து மத்த விஷயத்துலயும் எப்ப ஈடுபட போறோம்னு தான்...
Dude on the same note,
//அப்படியே போக போக புது மேனஜர் வந்தாரு. எப்படியும் எல்லாரும் 9 மணி வரைக்கும் இருக்காங்கனு சொல்லி ப்ளானிங் எல்லாம் அது வரைக்கும் போட ஆரம்பிச்சிட்டாரு. இப்ப கண்டிப்பா குறைந்த பட்சம் 9 மணி வரைக்கும் வேலை செஞ்சாகனும்னு நிலைமை வந்துடுச்சி.//
This is how onsite / offshore model works.
ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க.
Dude where were u 3/4 years before?(I think the person who was your Tech lead should have said the very same stuff) Every body comes thru this. More over u cant say these words to your fellow team members.
(இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...)
I am sure you did the very same thing, and the company your working right now is 2 / 3-rd company in row already.
அவுங்க செய்யற வேலைக்கு நாமதான் பொறுப்பு.வேலைக்கு சேர்ந்து 2 - 3 வருஷத்துல இந்த நிலைமை. ஆன்சைட்டிற்கிட்டயும் நாம திட்டு வாங்கணும் (டெலிவரபுல் பாதிக்க கூடாதாம்) அதே சமயம் இந்த பசங்க பண்றதெல்லாத்தையும் நம்ம பார்க்கனும்
It's your Job responsibility, which is why you are pronounced as lead.
Vetti, I too think its all about the choices we make. My husband has worked in the US for 8 yrs as a SWE, but has worked late only a few times. If he works late, then he gets to go late the next morning. There are people in his team who pull overnights all the time and then complain about work-life balance. If you (any SWE) are very ambitious and want a promotion with every review, then you have to work hard. BTW, treadmills cost only $300, you know?
//ஜி said...
என்ன வெட்டி.. சரியான இத்துப்போன கம்பெனில வேலை பாப்பீங்க போலிருக்குது. எங்க கம்பெனில நானும் எங்க டீமும் எங்க மேனேஜரும் சேந்து எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு, 5 மணிக்கெல்லாம் ஒன்னா கெளம்பிடுவோம். எப்பவாவது ஒரு 9 மணி வரைக்கும் ஒக்கார வேண்டி வரும். அதுவும் நாங்க பசங்களோட ஒரு ரெண்டு மூனு மணி நேரம் ஆட்டைய போடுறதால அப்படி ஒக்கார வேண்டி இருக்கும்.
எல்லாம் நீங்க பண்ற வேலை.. எல்லாத்தையும் பண்ணிப் புட்டு, மேனேஜர கொற சொன்னா எப்படி?
நீங்க மேனேஜரா ஆனதுக்கப்புறம், உங்க டீம் மக்கள்ட்ட விசயத்த கேட்டாதான் தெரியும் :)))//
ஜி,
எங்க கம்பெனிய பத்தி நான் எதுவும் தப்பு சொல்லல... நாமதான் சரியான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கல. இங்க அமெரிக்கால அதே ப்ராஜக்ட்ல எல்லாரும் 5 மணிக்கு ஆபிஸை விட்டு கிளம்பிடறாங்க.
ஆனா அங்க நம்ம ஆளுங்க அப்படியில்லை. அதுதான் மாறனும்னு ஆசை படறேன்...
//அதுக்காக நம்ம வாழ்க்கையையும் அதுக்குள்ளே முடிஞ்சிடனுமா?
இதுக்கு என்ன முடிவுனு தெரியல...//
இதுக்கு முடிவு தனி மனித இழப்பு மட்டுமே... இது ஆரம்பம் தானே...
//Karthik Jayanth said...
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
Dude i assume you are refering to your project manager.If so, i strongly disagree with this stment. He / She being a project manager doesn't have to know indepth technical details of the project, and i would think PM will have bunch of tech leads, developers, test leads, testers et all in the project to do that work.
After all PM stands for project management and not technical architecture.//
In this scenario I was talking abt my manager and he was from a product based company and he couldnt help much in this service based company...
For any project, its not good to handle over a 10 member team to an 2 year experienced Guy (Team Lead)...
BTW, Y am i talking all this???
Did u work for any Indian companies? and If the answer is YES, dont u see people hang around till night for no reason in the company?
//Arunkumar said...
//
அப்பறம் அதுங்க முடிக்கற வரைக்கும்
//
பாவங்க அந்தப்பசங்க. அவங்க சீனியர்ஸ் செஞ்சது தான அவனும் செய்வான்?//
அவுங்க எல்லாம் புத்திசாலியா உங்க கம்பெனில ஜாயின் பண்ணிட்டாங்க. (எனக்கும் கிடைச்சது ஆன்சைட்க்காக மாறல...)
// Arunkumar said...
//
வேலையே இல்லாத சமயமும் அப்ப அப்ப இருக்கும். அந்த மாதிரி சமயத்துல சும்மா டாக்குமெண்ட் ப்ரிப்பேர் பண்ணுனு சொல்லிடுவாங்க. அப்ப வர கோபம் இருக்கு பாருங்க. சான்ஸே இல்லை.
//
இதை விட கொடுமை கிடையாதுங்கோ !!!
//
இந்த ப்ராஜக்ட்ல இருந்து நீங்க என்னை ரிலிஸ் பண்ணலைனா நான் கண்டிப்பா இன்னும் 2 வருஷத்துல ஹார்ட் அட்டாக்ல செத்துடுவேனுதான்
//
ரொம்ப வேதனப்பட்டுருப்பீங்க போலிருக்கே... இந்த அளவுக்கு சொல்லியிருக்கீங்க :( //
இது நான் நிஜமாலுமே சொன்ன வார்த்தை. அவர் அதை கேட்டுட்டு உடனே என்னை ரிலிஸ் பண்ணிட்டாரு... (ரொம்ப நல்ல மனுசன்...)
ஹலோ உங்க வலைப்பக்கம் படிக்க ரொம்ப இன்டரெஸ்டிங்!
//Santhosh Kumar said...
//ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க. (இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...)//
இது நாம் எல்லாரும் கடந்து வந்த பாதை வெட்டி :)) நமக்கு சொல்லி குடுக்க ஒருத்தர் சலித்து இருந்தா நம்ம இந்நேரம் இப்படி முன்னேறி இருக்க முடியாது. இந்த நிலைமைக்கு நாம் எல்லாரும் தான் காரணம். அவன் இருக்கான்னு,இவன் இருக்கான்னு நாமளும் இருந்து பழகிட்டோம்.//
சந்தோஷ்,
எனக்கு ஏன் இந்த கடுப்புனா, புதுசா வரவங்களை பிழிஞ்சி எடுக்கற மாதிரி ப்ளானிங் இருந்தது. (என் நிலைமை அதைவிட மோசம்). எல்லாம் ஒரு வருஷம் முடிஞ்ச உடனே அப்படியே எஸ்கேப். என்னை தவிற முழு டீமும் வேற ஒரு கம்பெனில இருக்கு.
அப்பறம் திரும்ப புதுசா வரவங்களுக்கு ட்ரேயினிங்.
இந்த சாப்ட்வேர் கம்பெனில இருக்கறவனைவிட புதுசா வரவனுக்கு தான் சம்பளம் அதிகம்னு எல்லாம் அடிக்கடி தாவிக்கிட்டே வேற இருக்காங்க.
சரி,
நீங்க சொல்லுங்க. சென்னைல இருக்கும் போது நீங்க ஆபிஸ்ல இருந்து எத்தனை மணிக்கு கிளம்புவீங்க???
///பத்மா அர்விந்த் said...
இப்பத்தான் உங்களோட 5 சிறுகதைகளையும் படிச்சேன். நல்லா எழுதறீங்க. பத்திரிக்கைகளுக்கு அனுப்புனீங்களா? ரொம்ப நல்லா உரையாடல் வந்திருக்கு.//
மிக்க நன்றி மேடம்.
பத்திரிக்கைல நமக்கு தெரிஞ்சவங்க யாரும் இல்லை. நம்மளுடையதை யார் போடுவாங்கனு முயற்சியே செய்யல...
ஜி.ரா,
நான் மேனஜருக்கு எல்லாம் வேலை செய்ய தெரியாதுனு சொல்லல. நான் சொன்னத படிச்சா உங்களுக்கு புரியும்.
புது மேனஜர் வந்தாரு. அவருக்கு அப்ப அந்த ப்ராஜக்ட பத்தி எதுவும் தெரியலைனு. ப்ராஜக்ட் மேனேஜர் வேலை எவ்வளவு கொடுமைனும் தெரியும்...
பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டா நான் என்ன செய்யறது???
என்னை டென்ஷனாக்கனும்னே எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்கனு நினைக்கிறேன்...
பதிவ படிச்சி பின்னூட்டம் போட முடிஞ்சா போடுங்க. இல்லைனா உங்களுக்கும் டைம் வேஸ்ட் எனக்க்கும் வேஸ்ட்...
இராத்திரி பகலா எதுக்கு கஷ்டப்படறோம், அதுவும் வேலையே இல்லாத சமயத்துலயும்கூட அங்கயே வெட்டியா உக்கார்ந்திருக்கற ஒரூ கல்ச்சர், அதனால உடம்பு வீணாகாதானு கேட்டா தேவையில்லாத சண்டை...
//துளசி கோபால் said...
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது//
மேனேஜருக்கு வேலை தெரியணுமுன்னு அவசியமில்லையாம். மக்கள்ஸை
வேலை வாங்கத் தெரிஞ்சாப் போதுமாம். இங்கே அப்படித்தான் சொல்றாங்க.
//
இத பத்தியே நான் பேசல...
நான் என்னுடைய கதைல அப்படி சொன்னேன்...
//
ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையே இப்ப இல்லைன்னு ஆகிப்போச்சு. அதுக்குத்
தகுந்தமாதிரி நாமும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யக் கத்துக்கணும். பூனை,நாய்
எதாவது வளர்க்கலாம். அது நம்மளைப் படுத்தும்பாட்டுலே நம்மளைப்பத்தி மறந்துருவோம்:-)//
இது மாதிரி ஏதாவது சொல்லுவாங்கனு பார்த்தா மொத்த பதிவும் வேற விஷயத்துக்கு கும்மி அடிச்சிருக்காங்க...
எங்க கம்பெனில யோகா, ஜிம், ஸ்விம்மிங் எல்லாம் கூட இருக்கு...
மியூசிக் இண்ஸ்ட்ருமெண்ட் ஏதாவது கத்துக்கணும்னு ஆசை...
//Karthik Jayanth said...
Dude on the same note,
// //அப்படியே போக போக புது மேனஜர் வந்தாரு. எப்படியும் எல்லாரும் 9 மணி வரைக்கும் இருக்காங்கனு சொல்லி ப்ளானிங் எல்லாம் அது வரைக்கும் போட ஆரம்பிச்சிட்டாரு. இப்ப கண்டிப்பா குறைந்த பட்சம் 9 மணி வரைக்கும் வேலை செஞ்சாகனும்னு நிலைமை வந்துடுச்சி.//
This is how onsite / offshore model works.
//
I beleive you people are still thinking its 2000 or 2001 and U People have the mindset that SE in India has no other way other than working for 12 hrs per day.
They will just quit the company in an year...
//
ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க.
Dude where were u 3/4 years before?(I think the person who was your Tech lead should have said the very same stuff) Every body comes thru this. More over u cant say these words to your fellow team members.
//
kathukutti doesnt mean anything bad.. it just means Fresher who are new to that work... Even I was a kathukutty and My TL would have struggled...
//
(இந்த கத்துக்குட்டிங்களும் ஒரு வருஷம் முடிஞ்சவுடனே உனக்கும் பே பே உங்கப்பனுக்கும் பே பேனு கம்பெனி மாறிடுங்க...)
I am sure you did the very same thing, and the company your working right now is 2 / 3-rd company in row already.
//
Dont assume things... unfortunately I am still with my first company
// அவுங்க செய்யற வேலைக்கு நாமதான் பொறுப்பு.வேலைக்கு சேர்ந்து 2 - 3 வருஷத்துல இந்த நிலைமை. ஆன்சைட்டிற்கிட்டயும் நாம திட்டு வாங்கணும் (டெலிவரபுல் பாதிக்க கூடாதாம்) அதே சமயம் இந்த பசங்க பண்றதெல்லாத்தையும் நம்ம பார்க்கனும்
It's your Job responsibility, which is why you are pronounced as lead.//
I clearly mentioned them that I dont want to lead a team with my 2 yrs experience (at that time)
I was not able to handle the pressure and they know that... but since they feel that the deliverables are not affected they doesnt care abt anyone...
செய்யற வேல மனசுக்கு புடிக்கலன்னா stress ஜாஸ்தியாகும்னு நெனைக்கறேன்.
புடிச்சத செய்யுங்க. எவ்ளோ நேரம் செஞ்சாலும் அலுப்பு வராது.
மத்தபடி, அதீக வேலை நாட்களில், ஒரு 15 நிமிஷம் எழுந்து வெளில நடக்க்ரது, பாட்டு கேட்டுக்கிட்டே வேல செய்யறது, அப்பப்ப என் சர்வே படித்து வாக்கு போடரது இந்த மாதிரி ரிலேக்ஸ்டா ஏதாவது செய்யுங்க :)
வெட்டி,
ஆணி புடுங்கற டென்ஷன் ஆப் ஆகத்தானெ பதிவு போடறீங்க. இங்கயும் டென்ஷனானா எப்படி? மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!
Work-la over sincere-ah iruppeenga pola..
Hats off to u!!
Namba appa kaalathula 70 vayasula samthichadhu namba 30 vayasula sambathikuroom..
Unmai dhaan...
Adhukka namba vazhkaiyum 30 vayasula mudiyunuma?
Idhu oru nalla kaelvi....
Indha postin partha vudanae...Vijay TV la oru survey yeduthurundhaanga adhaan gyabagam vandhuchu...It includes doctors,lawyers,etc....
Question yenna na...
Ivalavu chinna vayasula indha software field-la ivalavu athigamaa sambalam vaanguraangalae,adhai paarthu pooraamay padureengala illayanu?
Adhukku nearly 76% of d people "Yes" nu solli rukkanga...
10% dhaan "no" solli rukkanga...
Avanga indha blog padicha..Software field-la irukkura makkal kastam puriyum-nu ninaikkuraen...
Nalla solli irukkenga indha field-la irukura pala paeru kastathai...
Aana innum pala paeru indha field-la enjoy panni kittu thaan irukkanga...
Nammkku yetha life style namba thaan therundhadukkanum....
Pidikalaya ...ila mudiyalaya velai vittutu poi kittae irukkanum...
"Un vazhkai un kaiyil"nu yengayoo padicha gyabagam...
Nice post :)
hi vetti!!!
The solution for you:-
1) Go for a walking early in the morning between 6 and 6.30 am
(brisk walk please)in half an hour try to cover atleast 2.5 kms
2) Try for some pranayamas.. that will relax your brain and also ur body
3) try the exercise which a dog does after a long running.. jus have ur hands on ur knee and bend urself and breathe in and out fastly this also relieves the stress
//மியூசிக் இண்ஸ்ட்ருமெண்ட் ஏதாவது கத்துக்கணும்னு ஆசை...//
இதையே கோபால் சொன்னப்ப , (அதுவும் அவருக்கு ஈஸியாக் கத்துக்கற
மியூஸிக் இண்ஸ்ட்ருமெண்ட் வேணுமாம்)
நான் சொன்ன பதில் 'ஜால்ரா' கத்துக்குங்க:-))))
//ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க//
Neengalum oru kathukuttiya irunthu thaanae ippo proj lead panrae azhavukku vanthirukeengae... romba feel panatheengae
//ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க//
Neengalum oru kathukuttiya irunthu thaanae ippo proj lead panrae azhavukku vanthirukeengae... romba feel panatheengae
//
வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
நான் மேனஜருக்கு எல்லாம் வேலை செய்ய தெரியாதுனு சொல்லல. நான் சொன்னத படிச்சா உங்களுக்கு புரியும்.
புது மேனஜர் வந்தாரு. அவருக்கு அப்ப அந்த ப்ராஜக்ட பத்தி எதுவும் தெரியலைனு. ப்ராஜக்ட் மேனேஜர் வேலை எவ்வளவு கொடுமைனும் தெரியும்... //
வெட்டி, less tension more work. more tension less work. :-) டென்ஷனாக வேண்டாம். பதிவைப் படிச்சுட்டுத்தான் கமெண்ட்டுக்கே வந்தேன். பதிவைப் படிச்சப்ப நான் சொல்ல நெனச்சது வேற. மொதக் கமெண்ட்டைப் படிச்சப்புறம் நான் சொன்னது வேற.
// பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டா நான் என்ன செய்யறது???
என்னை டென்ஷனாக்கனும்னே எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்கனு நினைக்கிறேன்... //
:-) ராத்திரி முழுக்கத் தூங்காம இருந்தியா? கெட்டகெட்ட கனாவெல்லாம் வந்துச்சா? வந்திருக்கக் கூடாதே!
// பதிவ படிச்சி பின்னூட்டம் போட முடிஞ்சா போடுங்க. இல்லைனா உங்களுக்கும் டைம் வேஸ்ட் எனக்க்கும் வேஸ்ட்... //
அதெல்லாம் முடியாது. எங்க இஷ்டப்படித்தான் பின்னூட்டம் போடுவோம். டைம் வேஸ்ட்டானாலும் ஆகட்டும். :-))))
// இராத்திரி பகலா எதுக்கு கஷ்டப்படறோம், அதுவும் வேலையே இல்லாத சமயத்துலயும்கூட அங்கயே வெட்டியா உக்கார்ந்திருக்கற ஒரூ கல்ச்சர், அதனால உடம்பு வீணாகாதானு கேட்டா தேவையில்லாத சண்டை... //
உண்மைதான். அது மிகத்தவறான வழக்கம். ஆனா பொதுவில் எந்த மேனேஜரும் நைட் அவுட் வருகிற மாதிரியே பிளான் செய்வதில்லை. சமயங்களில் அப்படி வந்து விடுவதுண்டு. அதை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதில்தான் திறமையே இருக்கிறது. ஒரு சின்ன எடுத்துக்காட்டு. நான் பார்த்துக் கொண்ட ஒரு புராஜெக்ட்டில் திடீர்ப் பிரச்சனை. வேலை நிறைய. நிறைய என்பதை விட onsite dependency. அங்கிருந்து தொடர்ந்து தகவல் பரிமாற வேண்டும். என்ன செய்வது. குழுவை இரண்டாகப் பிரித்து ஒன்று பகலில் வரும். ஒன்று இரவில் வரும். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் overlapping இருக்கும். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு. இது சரியா தவறா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்படி ஏதாவது செய்யத்தான் வேண்டியிருக்கிறது. இன்னொரு புராஜக்ட். பழைய நிறுவனத்தில். திடீரென்று தொடர்ந்து மூன்று நான்கு நாட்களுக்கு அதிக வேலை. எல்லாரும் நேரம் கழித்துப் போக வேண்டிய நிலை. அஞ்சாவது நாள் எல்லாருக்கும் விடுமுறை கொடுத்தாகி விட்டது. அன்றைக்குக் கொஞ்சம் பேர் வந்து...அவர்களுக்கு வேறொரு நாளில் கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுதான். இதை ஒரு மேனேஜர் உணர்ந்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்.
எல்லாருக்கும் ஒரு அறிவுரை. அலுவலகத்தில் தேவைக்கு மேல் இருக்காதீர்கள். எட்டு மணி நேரம் வேலை. அதற்குள் முடிக்கப் பாருங்கள். மற்ற விஷயங்களை மூடி வைத்து விட்டு வேலையில் கவனம் செலுத்தினால் எட்டு மணி நேரத்தில் வேலையை முடிக்கலாம். சமயத்தில் கூடுதல் நேரம் தேவைப்படும். அப்படியில்லை...ராத்திரி ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன் என்றால்....அதனால் வருத்தப்படப் போவது நீங்களாகவே மட்டும் இருக்கும்.
இதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டவன் நான். ஒரு குறிப்பிட்ட புராஜக்ட்டில் (மூன்றரை வருடங்களுக்கு முன்பு) அளவுக்கு அதிகமான வேலை. மிகுந்த வேலைப்பளு. ஒரு நாள் ஏழரை மணிக்கு வீட்டிற்குக் கிளம்புகையில் மேனேஜரம்மா அழைத்து வேலை கொடுத்தார். அம்மா அப்பா ஊரிலிருந்து வந்திருந்ததால் நண்பர்களை இரவு உணவிற்கு அழைத்திருந்தேன். அரைமணி நேர வேலை என்று அவர் சொன்னார். நம்பி வாங்கியதன் பலன்? இரவு பதின்னொன்னரை மணிக்கு வீட்டிற்குப் போனது. i was totally stressed during that period and that reflected in my skin as psoriasis. பிறகு நான் அந்தப் புராஜெக்ட்டிலேயே இருக்க மாட்டேன் என்று சொல்லி மாறினேன். ஆகையால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி தொடர்ந்து இருக்கும் வகையிலேயே வேலை உங்களுக்கு வருமானால்.....குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து மேனேஜரிடம் பேசவும். பலனில்லை எனில் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவல் மேனேஜரிடம் பேசவும்.
//Srinan said...
Vetti, I too think its all about the choices we make. My husband has worked in the US for 8 yrs as a SWE, but has worked late only a few times. If he works late, then he gets to go late the next morning. There are people in his team who pull overnights all the time and then complain about work-life balance. If you (any SWE) are very ambitious and want a promotion with every review, then you have to work hard. BTW, treadmills cost only $300, you know?//
Srinan,
You are right... Its our choice (in US)
But the scenario is different in India... Even if we wish to go early we cannot. I beleive if the whole team decides that they cant work more than 9 - 10 hrs, then things may change...
//Anonymous said...
ஹலோ உங்க வலைப்பக்கம் படிக்க ரொம்ப இன்டரெஸ்டிங்!//
ரொம்ப டாங்ஸ்ங்க...
//k4karthik said...
//அதுக்காக நம்ம வாழ்க்கையையும் அதுக்குள்ளே முடிஞ்சிடனுமா?
இதுக்கு என்ன முடிவுனு தெரியல...//
இதுக்கு முடிவு தனி மனித இழப்பு மட்டுமே... இது ஆரம்பம் தானே...//
எப்படியும் மாற வேண்டியது நிறைய இருக்கு...
//SurveySan said...
செய்யற வேல மனசுக்கு புடிக்கலன்னா stress ஜாஸ்தியாகும்னு நெனைக்கறேன்.
//
யாராவது கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தா கூட அதிக ஸ்ட்ரெஸ்ஸாகும்னு நினைக்கிறேன்...
//
புடிச்சத செய்யுங்க. எவ்ளோ நேரம் செஞ்சாலும் அலுப்பு வராது.
//
அதெல்லாம் முடியலையே... எனக்கு கதை எழுத தான் பிடிக்குது :-))
//
மத்தபடி, அதீக வேலை நாட்களில், ஒரு 15 நிமிஷம் எழுந்து வெளில நடக்க்ரது, பாட்டு கேட்டுக்கிட்டே வேல செய்யறது, அப்பப்ப என் சர்வே படித்து வாக்கு போடரது இந்த மாதிரி ரிலேக்ஸ்டா ஏதாவது செய்யுங்க :)//
உங்க சர்வேக்கு தான் முன்னாடியே நீங்க தீர்ப்ப சொல்லி தானே ஆரம்பிக்க்கறீங்க :-))
அப்பறம் அதுல வந்து நமக்கு என்ன வேலை???
பாட்டு எல்லாம் இங்க கேட்ட முடியலைங்க...தமிழ்மணம் தான் நமக்கு ரிலாக்ஸ்
//இலவசக்கொத்தனார் said...
வெட்டி,
ஆணி புடுங்கற டென்ஷன் ஆப் ஆகத்தானெ பதிவு போடறீங்க. இங்கயும் டென்ஷனானா எப்படி? மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்!//
கொத்ஸ்,
டென்ஷனை குறைக்க வழி கண்டுபிடிக்கத்தான் இந்த பதிவு...
ராஜி,
நீங்க சொல்றது உண்மைதான்...
சம்பளம் நிறைய வரதுக்கு ஏத்த மாதிரியே கஷ்டமும் இருக்கு...
நம்ம தான் நம்மல மாத்திக்கனும். அடுத்தவங்க மேல குறை சொல்றது தப்புதான்...
//dubukudisciple said...
hi vetti!!!
The solution for you:-
1) Go for a walking early in the morning between 6 and 6.30 am
(brisk walk please)in half an hour try to cover atleast 2.5 kms
2) Try for some pranayamas.. that will relax your brain and also ur body
3) try the exercise which a dog does after a long running.. jus have ur hands on ur knee and bend urself and breathe in and out fastly this also relieves the stress//
சுதாக்கா,
ஊருக்கு வந்தவுடனே உங்கக்கிட்ட தான் ஐடியா கேக்கனும்னு நினைக்கிறேன்...
ஆமாம் சுதாக்கா,
6:30 மணி வரைக்கும் எப்படி முழிச்சிருக்கறது.. அந்த வாக்கிங் ராத்திரி 3 - 4 மணிக்கு வெச்சிக்கலாமா???
//துளசி கோபால் said...
//மியூசிக் இண்ஸ்ட்ருமெண்ட் ஏதாவது கத்துக்கணும்னு ஆசை...//
இதையே கோபால் சொன்னப்ப , (அதுவும் அவருக்கு ஈஸியாக் கத்துக்கற
மியூஸிக் இண்ஸ்ட்ருமெண்ட் வேணுமாம்)
நான் சொன்ன பதில் 'ஜால்ரா' கத்துக்குங்க:-))))//
டீச்சர்,
பாருங்க... ஒரு நாள் இல்லை ஒரு நாள் ஒரு இளையராஜா மாதிரி இல்லைனாலும் அட்லீஸ்ட் ரகுமான் மாதிரியாவது ஆகி காட்டறேன் :-)
ஜிரா,
//எல்லாருக்கும் ஒரு அறிவுரை. அலுவலகத்தில் தேவைக்கு மேல் இருக்காதீர்கள். எட்டு மணி நேரம் வேலை. அதற்குள் முடிக்கப் பாருங்கள். மற்ற விஷயங்களை மூடி வைத்து விட்டு வேலையில் கவனம் செலுத்தினால் எட்டு மணி நேரத்தில் வேலையை முடிக்கலாம். சமயத்தில் கூடுதல் நேரம் தேவைப்படும். அப்படியில்லை...ராத்திரி ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன் என்றால்....அதனால் வருத்தப்படப் போவது நீங்களாகவே மட்டும் இருக்கும்.
//
இது பல சமயங்களில் உண்மைதான்.
ஒரளவு நீங்க சொல்ற மாதிரி ஒழுங்கா வேலை செய்தாலே போதும். சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பிடலாம்.
//i was totally stressed during that period and that reflected in my skin as psoriasis. பிறகு நான் அந்தப் புராஜெக்ட்டிலேயே இருக்க மாட்டேன் என்று சொல்லி மாறினேன்.//
கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.
இந்த மாதிரி நிறைய பேர் கஷ்டப்படறது உண்மை தான்...
//குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து மேனேஜரிடம் பேசவும். பலனில்லை எனில் அனைவரும் சேர்ந்து அடுத்த லெவல் மேனேஜரிடம் பேசவும்.//
இல்லைனா ப்ராஜக்ட் மாறவும்...
//Anonymous said...
//ஒரு 4 - 5 கத்துக்குட்டிங்களுக்கு சொல்லி கொடுத்து வேலை வாங்கனும். இதை விட கொடுமையான வேலையே ஒண்ணு இல்லைங்க//
Neengalum oru kathukuttiya irunthu thaanae ippo proj lead panrae azhavukku vanthirukeengae... romba feel panatheengae//
நான் அதுக்காகயா ஃபீல் பண்றேன்???
அடப்பாவிகளா!!! உடம்ப கெடுத்தக்கறோமேனு சொன்னத புரிஞ்சிக்கோங்கயா...
Vettipayal,
//In this scenario I was talking abt my manager and he was from a product based company and he couldnt help much in this service based company...
I very well know the delta between product based cmp & services based company and the work culture.
//For any project, its not good to handle over a 10 member team to an 2 year experienced Guy (Team Lead)...
If you think its a prob, then you need to talk to u r manager and make appropriate alternative. If u r manager is not willing to change, then you should talk to u r delivery head or some one above u r PM.
//BTW, Y am i talking all this???
Did u work for any Indian companies? and If the answer is YES, dont u see people hang around till night for no reason in the company?
YES I have worked in an Indian company. I never encourage my team members to hang around after 6 or max 7 for no reason.
If you read my comment i disagreed only to the stment you made.
Vettipayal,
//In this scenario I was talking abt my manager and he was from a product based company and he couldnt help much in this service based company...
I very well know the delta between product based cmp & services based company and the work culture.
//For any project, its not good to handle over a 10 member team to an 2 year experienced Guy (Team Lead)...
If you think its a prob, then you need to talk to u r manager and make appropriate alternative. If u r manager is not willing to change, then you should talk to u r delivery head or some one above u r PM.
//BTW, Y am i talking all this???
Did u work for any Indian companies? and If the answer is YES, dont u see people hang around till night for no reason in the company?
YES I have worked in an Indian company. I never encourage my team members to hang around after 6 or max 7 for no reason.
If you read my comment i disagreed only to the stment you made.
//I beleive you people are still thinking its 2000 or 2001 and U People have the mindset that SE in India has no other way other than working for 12 hrs per day.
They will just quit the company in an year...//
Well you dont have to assume things . Even i was in India in years you have mentioned OK. besides this I have also managed a of team of 60-65 ppl. I have never forced my team members to stay for more than 8 hrs except during critical phases. Even then I did split the team into small chunks based on their convenience and do work in shifts with 1 -2 hrs of over lapping.
//kathukutti doesnt mean anything bad.. it just means Fresher who are new to that work... Even I was a kathukutty and My TL would have struggled...
I meant to say its a cycle. Every one goes thru this OK.
//Dont assume things... unfortunately I am still with my first company //
well I appreciate you. But I would think, you must have sticked to the same company for some reason. It could be pay hike, onsite opportunity, colleagues or some personal reason. It could be any other this.
//I was not able to handle the pressure and they know that... but since they feel that the deliverables are not affected they doesnt care abt anyone...
As I said, you need to go one on one with either your manager or delivery head and get it fixed. Even after all this, if you still work crazy hours, then there is some thing seriously wrong.
hi vets
really nice post...hmmm but ithuku solution ennanu theriyala...oru vela inthe problems ellam therinchu thaan vella kaaran (americans) SW projects ellathayum indiansku kudukurano ennavo...anyway its all in our hands...SW feild most stressfull field'nu therinchu thaane join pannom...but its time to make change in our working culture (in india). all the best vets.
regards
yogen
hi vetti!!!
3 - 4 maniku ellam pona adu walking illa!!!
ungaluku thookathula nadakara vyathinu artham!!!
kalaila thaan ozone kaathu varum .. adu thaaan nallathu udambukunu sonna enna idhu chinna pillai thanama??
enkite thane kathukanum!! nalla kathu tharen.. ana fees ellam vangiduven!!
How to Talk to Your Boss About Being Overworked - career - CIO: "Ongoing communication with your supervisor about your workload is key to pushing back."
//If you think its a prob, then you need to talk to u r manager and make appropriate alternative. If u r manager is not willing to change, then you should talk to u r delivery head or some one above u r PM.
//
Actually this bad culture came into picture because of the Engagement manager at Onsite and he gave the pressure to the onsite manger and we suffered because of that.
So the whole team shifted to an MNC (team of 10) and I moved to a different domain.
Karthik,
I am talking abt 90% of people and you are discussing abt the remaining 10%.
Please discuss with your friends in India (working for an Indian company) and just ask them to notice at what time their team members are leaving when there is no work.
//Anonymous said...
hi vets
really nice post...hmmm but ithuku solution ennanu theriyala...oru vela inthe problems ellam therinchu thaan vella kaaran (americans) SW projects ellathayum indiansku kudukurano ennavo...anyway its all in our hands...SW feild most stressfull field'nu therinchu thaane join pannom...but its time to make change in our working culture (in india). all the best vets.
regards
yogen//
யோகன்,
இங்க அப்படியெல்லாம் இல்லை. கன்ஸல்டண்டா இருந்தா 8 மணி நேரம் தான். ரொம்ப வேலை இருந்தா தான் அதிகமா வேலை செய்ய வேண்டியதிருக்கும்.
//dubukudisciple said...
hi vetti!!!
3 - 4 maniku ellam pona adu walking illa!!!
ungaluku thookathula nadakara vyathinu artham!!!
kalaila thaan ozone kaathu varum .. adu thaaan nallathu udambukunu sonna enna idhu chinna pillai thanama??//
நடு ராத்திரி 6-7 மணிக்கெல்லாம் நீங்க எழுந்திரிக்க சொன்னா எப்படி முடியும்??? 3 மணிக்குனா படுக்கறதுக்கு முன்னாடி வாக்கிங் போயிக்கலாம்னு பார்த்தேன் :-)
//dubukudisciple said...
enkite thane kathukanum!! nalla kathu tharen.. ana fees ellam vangiduven!!//
feesக்கு பதிலா நன்றி சொல்லி ஒரு போஸ்ட் போட்டுடலாமா? ;)
வெட்டி,
ஏதோ எனக்குத் தெரிஞ்ச முடிவு.. படிச்சி பார்த்து, வேலைக்காகுமான்னு சொல்லுங்க :)
வெட்டி,
ஏதோ எனக்குத் தெரிஞ்ச முடிவு.. படிச்சி பார்த்து, வேலைக்காகுமான்னு சொல்லுங்க :)
இங்கே கார்த்திக் முன்வைக்கும் வாதங்களும் சரியாக இருக்கின்றன.
என்ன, ரொம்பவே இங்கிலீஸ் துரையாகிட்டார் :))) தலைவா, தமிழ் மென்பொருள் எல்லாம் உங்க மடிக் கணினியிலிருந்து தூக்கியாச்சா? :))
enna thalai payangara kara sarama vivadham poitruku ..
unnai ethanai thadava thnglish l type panathey nu solirukane ..marupadiyum panriyannu kova pattu ennayum thitiratheenga ..
he he summa thamasu
பாலாஜி.
பின்னூட்டம் போடறதுக்கு இந்த 'வெட்டிப் பேச்சு பேச'ங்கறதை கொஞ்சம் மாத்துங்க. உடனே. முக்கியமா ஏதாவது சொல்லலாம்னு வந்தா வெட்டிப் பேச்சுன்னு கொஞ்சம் தயங்க வைக்குது. :-)
இந்தப் பதிவை இன்னைக்குத் தான் படிச்சேன்.
//மேனஜருக்கு டெக்னிக்கலா எதுவும் அதிகம் தெரியாது.
//
பதிவைப் படிச்சு முடிக்கிறப்ப 'அடடா. இது மட்டும் என்னையே சொன்ன மாதிரி இருக்கே'ன்னு நினைச்சுக்கிட்டே பின்னூட்டங்களைப் படிக்கத் தொடங்கினேன். :-) பாத்தா கொத்ஸ் என்னை வம்புக்கிழுத்திருக்காரு?
யோவ் கொத்ஸ். என்ன எம்பேரை ரிப்பேர் ஆக்குறதுன்ற முடிவுல இருக்கீறா? இன்னுமா நீங்க எங்க ஊருக்கு வந்தப்ப 'ஐ அம் தி எஸ்கேப்'னு ஓடுனதை நினைவுல வச்சிருக்கீரு?
பாலாஜி,
உங்க மானேஜர் இந்தப் பதிவைப் படிக்க நிறைய வாய்ப்பிருக்குன்னு சொன்னீங்களே. எந்த மானேஜர்? நல்ல மானேஜரா கெட்ட மானேஜரான்னு கேக்கலாம்னு இருந்தேன். பாதி பின்னூட்டங்கள் படிச்சாச்சு. வேகமா ஒரு பார்வை பார்த்ததுல ஒருத்தர் வந்துட்டார்ன்னு தெரிஞ்சது. அடுத்தவருக்கு மின்னஞ்சல் அனுப்பவா? :-)
மிச்சப் பின்னூட்டங்களையும் படிச்சுட்டு இன்னொரு தடவை வர்றேன். இப்போதைக்கு இருக்கிற எண்ணம் இந்தப் பதிவு தொடர்பா கூடலில் ஒரு தொடர் போட்டுடலாமாங்கறது தான். அதுக்கு முன்னாடி இராகவன், கார்த்திக் பிரபு, பொன்ஸோட பதிவுல பொன்ஸ் எல்லாம் என்ன சொல்லியிருக்காங்கன்னு படிக்கணும். அவங்க சொன்னது போக நான் சொல்றதுக்கு ஏதாவது இருந்தா 'விரைவில் கூடலில் எதிர்பார்க்கவும்'ன்னு விளம்பரம் போட்டுட்டுத் தொடங்கிற வேண்டியது தான்.
கார்த்திக் ஜெயந்த் சொன்னதையும் படிக்கணும்ன்னு சேத்துக்கோங்க.
//கார்த்திக் பிரபு said...
enna thalai payangara kara sarama vivadham poitruku ..
//
எல்லாம் நம்ம விசயம்தான் கார்த்திக்
//
unnai ethanai thadava thnglish l type panathey nu solirukane ..marupadiyum panriyannu kova pattu ennayum thitiratheenga ..
he he summa thamasu //
நான் நிஜமா சொல்ல வந்தேன். நீ முன்னாடியே சொல்லி தப்பிச்சிக்கிட்ட. இருந்தாலும் சொல்றேன், உனக்கு எத்தனை தடவை சொல்றது.
//பொன்ஸ் said...
வெட்டி,
ஏதோ எனக்குத் தெரிஞ்ச முடிவு.. படிச்சி பார்த்து, வேலைக்காகுமான்னு சொல்லுங்க :) //
படிச்சி பின்னூட்டம் போட்டாச்சி
குமரனின் கோரிக்கையை ஏற்று வெட்டி பேச்சு பேச மாற்றப்பட்டுவிட்டது.
குமரன்,
அந்த மேனஜர் விஷயம் நான் உங்களை நினைச்சி எதுவும் சொல்லலை. நிஜமாத்தான் சொல்றேன். நம்புங்க.
ரெண்டு பேரும் படிச்சிட்டாங்க. ஒருத்தர் படிச்சதுக்கு அடையாளம் இருக்கு. இன்னொருத்தர் படிச்சதுக்கு அடையாளம் என் அப்ரைசல்ல வரும் ;) (Just kidding)
நான் சொன்ன சம்பவத்தப்ப அவர் கொஞ்ச நாள் டீம் லீடா இருந்து எஸ்கேப் ஆகிட்டாரு.
பாவம்! அவருக்கு அப்ப கல்யாணமாகி கொஞ்ச நாள் தான் ஆகிருந்தது. தினமும் காலைல 9 மணிக்கு வந்து ராத்திரி 12 மணி வரைக்கும்னு கிட்டதிட்ட 2 மாசம் வேலை இருந்துச்சு. அவரு என்னைய மாட்டிவிட்டு எஸ்கேப் ஆகிட்டாரு.
ஒரு ஆறு மாசத்துக்கு அப்பறம் நானும் எஸ்கேப் ஆகிட்டேன் :-)
உங்க பதிவுக்காக வெயிட்டீங்...
வருத்தமா இருக்கு.
என்னத்தை செய்யிரது !!!
சந்தர்பம் கிடைத்தால் click படத்தை பார்த்துட்டு பதிவு போடவும்.
http://imdb.com/title/tt0389860/
படத்த சிரிச்சு சிரிச்சு பார்த்தன். ஆன கடசியில் ......
Post a Comment