தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, February 09, 2007

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!!!!

காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு

கடந்த நான்கு மாதமாக தினமும் பதிவு போட்டு கலக்கி கொண்டிருந்த பதிவர் ஒருவரை கடந்த ஒரு மாதமாக காணவில்லை.

அவரை பற்றிய அடையாளங்கள் கீழ்வருமாறு
எல்லாரும் திருப்பதில சாமி கும்பிடறத பதிவா போட்டா இவர் மட்டும் ஸ்ரீதேவிய பார்த்ததை போட்டு எல்லாரையும் திருப்பதிக்கு போகறதால எவ்வளவு நல்ல விஷயமெல்லாம் நடக்கும்னு யோசிக்க வெச்சாரு. அப்பறம் புதிரா புனிதமானு தொடர் போட்டாரு (மாத்ரூ பூதம் டைப்ல இருக்கும்னு நம்பி போன ஆளுங்களுக்கு எல்லாம் ஆப்பு... என்னையும் சேர்த்துதான் சொல்றேன்)

காலைல சாமி எழுப்பறதுக்கு இருக்கற பாட்டு ஒண்ணு போட ஆரம்பிச்சி பாதியிலயே நிறுத்திட்டாரு... சரி தமிழுக்காகத்தான் நிறுத்தினாருனு எல்லாரும் சந்தோஷமா சம்மதிச்சிடாங்க... அப்பறம் வைகுண்ட ஏகாதசிக்கு தொடர்ந்து பதிவு போட்டு கலக்கோ கலக்குனு கலக்கனாரு...
அப்பறம் 4-5 வலைப்பூ ஆரம்பிச்சி எதுல எது போடறதுனே தெரியாம கொஞ்சம் கன்பூயிஸ் ஆயிட்டாருனு நினைக்கிறேன்...

கடைசியா ஒரு நல்ல பதிவ பொங்கலுக்கு போட்டாரு... அப்பறம் ஆள் எங்க போனாருனு தெரியல

காணமல் போன அன்று இவர் பழனியில் தேவயானியை சந்தித்தேன்னு ஒரு பதிவை தயார் செய்து கொண்டிருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... மேலும் இவர் காவி நிற உடை அணிந்து கையில் கமண்டலம் வைத்திருந்ததாக இவரை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவரை பற்றிய தகவல் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி

காவல் துறை கண்காணிப்பாளர்,
எழும்பூர்
சென்னை - ஆறு லட்சத்தி எட்டு (600 008)

31 comments:

மணிகண்டன் said...

அவரு எங்க போனாருன்னு தெரியாதுங்க. ஆனா எனக்கு தெரிஞ்சது சென்னை 600018 எழும்பூர் இல்ல தேனாம்பேட்டை :))

செல்வன் said...

நேற்று என் பதிவுக்கு வந்து அருமையாக ஒரு பின்னூட்டமும் போட்டார் பாலாஜி.

தலைவர் கொஞ்சம் ரெஸ்டில் இருக்கிறார் என நினைக்கிறேன்.எப்ப வருவார், எப்படி வருவார்ன்னு யாருக்கும் தெரியாதுனாலும் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடுவார்

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...

அவரு எங்க போனாருன்னு தெரியாதுங்க. ஆனா எனக்கு தெரிஞ்சது சென்னை 600018 எழும்பூர் இல்ல தேனாம்பேட்டை :))//

மணிகண்டன்,
ஒரு சின்ன டெக்னிகல் ஃபால்ட்...
அது 600008 :-))

இப்ப சரியா???

வெட்டிப்பயல் said...

///செல்வன் said...

நேற்று என் பதிவுக்கு வந்து அருமையாக ஒரு பின்னூட்டமும் போட்டார் பாலாஜி.

தலைவர் கொஞ்சம் ரெஸ்டில் இருக்கிறார் என நினைக்கிறேன்.எப்ப வருவார், எப்படி வருவார்ன்னு யாருக்கும் தெரியாதுனாலும் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடுவார்//

ஓ!!! ரொம்ப நாளா காணமேனு பார்த்தேன்!!!

இப்பதான் கரெக்ட்டா நம்ம பதிவுக்கும் வந்திருக்காரு...

இருந்தாலும் ரெடி பண்ண பதிவ விட முடியாது :-)

Anonymous said...

//மாத்ரூ பூதம் டைப்ல இருக்கும்னு நம்பி போன ஆளுங்களுக்கு எல்லாம் ஆப்பு... என்னையும் சேர்த்துதான் சொல்றேன்//

அட நீங்களும் அப்பிடிப் போனவர் தானா? ஹா ஹா ஹா...
மாத்ருபூதம்ன்னு போனா பஞ்சபூதம்ன்னு சொல்றாரு பதிவுல.
என்ன பண்ணலாம் இவரை? நீங்களே சொல்லுங்க.

துளசி கோபால் said...

வேலைப்பளு கூடி இருக்குன்னு சொன்னாருப்பா. அப்புறம்
ஊருக்கும் போகப்போறாராம். எல்லாம் முடிச்சு நிம்மதியா திரும்பி வந்து
எழுதட்டும். 'ஓய்வு' தேவைதானெ? ( எல்லாருக்கும்!!)

ஜி said...

நியு யார்க் நகர போலிஸ் துறை தனிப்படை அமைச்சி தேடிக்கிட்டு இருக்குறதா சற்று முன் தகவல் வந்தது.

KRS எங்க இருக்கீங்க. சீக்கிரம் வாங்கப்பா. அப்புறம் தமிழ்மணத்தோட அடுத்த தொடர் குண்டு உங்கள் மேல் போடப்படும் என்று எச்சரிக்கப் படுகிறது.

ஜீவா (Jeeva Venkataraman) said...

:-)

சேதுக்கரசி said...

ச.சங்கர் படங்காட்டறதைப் பார்த்து ஆஹா ஆஹா ஆஹா போட்டுட்டு ஒருத்தர் இருக்கார்.. அவரைத் தானே தேடறீங்க? இங்கே போய்ப் பாருங்க :-)
http://ssankar.blogspot.com/2007/02/blog-post_06.html

Syam said...

அட விடுங்க...பிப்ரவரி மாசம் கொஞ்சம் பிஸியாதான் இருப்பாரு...சும்மா அவர போய் தொல்ல பண்ணிக்கிட்டு :-)

Sridhar Venkat said...

நான் மிகவும் ரசிக்கும் பதிவுகள் நண்பர் ரவிசங்கரின் பதிவுகள். இதமாய் பதமாய் எழுதி நமக்கு ஒரு நல்ல வாசிப்பானுபவம் தருவார்.

என்னங்க ஒரு மாசம் இடைவெளி விட்டா இப்படி நாலு மாசம் காணோம்னு போட்டு விடறீங்களே. சரி இப்படி உசுப்பி விட்டாலாவது மனுஷன் active-ஆ வருவாரானு பாக்கறீங்க. ஓகே! ஓகே!

கண்டுபிடிச்சு கொடுக்கிறவங்களுக்கு எதுவும் பரிசு கிடையாதா?

பாருங்க செல்வன் உடனே கண்டுபிடிச்சு கொடுத்திட்டார்.

SP.VR.சுப்பையா said...

வரப்போகின்ற பட்ஜெட்டில் (Feb' 28), தமிழ் பதிவுகளின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நிதித்துறை ஒதுக்கவுள்ளது.

அது குறித்து தன்னுடைய மேலான ஆலோசனைகளை எடு்த்துச் சொல்ல
'சிறப்பு' அழைப்பின் பேரில் திரு.K.R.S அவர்கள் இந்தியா வந்துள்ளார.

தற்சமயம் தில்லியில் உள்ளார்.

யாரும் தேட வேண்டாம்.
வருகை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்டுபிடித்து தருவார்க்கு "தக்க சன்மானம்",
"தக்க சன்மானம்" வழங்கப்படும்! அல்லவா? :-))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பழனியில் தேவயானியை சந்தித்தேன்னு//

ஆகா.....அடிச்சு விளையாடறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க போல! :-)
சொல்றது சொல்றது தான் சொல்றீங்க...ஒரு நயன், வித்யா பாலன் என்று சொல்லலாமே! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மேலும் இவர் காவி நிற உடை அணிந்து//

அடக் கடவுளே! - முடிவே கட்டிட்டீங்களா பாலாஜி?
நல்ல வேளை காவியோடு நிறுத்தினீங்களே! நன்றி!!
இப்பல்லாம் காவின்னால்லே ஒரே பயமா இருக்கு!

ஆனா தில்லு முல்லு படத்தில் தலைவர் காவி கட்டிக்கினு தான் அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்குவார். ஞாபகம் வைச்சுக்குங்க! :-)

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

வேலைப்பளு கூடி இருக்குன்னு சொன்னாருப்பா. அப்புறம்
ஊருக்கும் போகப்போறாராம். எல்லாம் முடிச்சு நிம்மதியா திரும்பி வந்து
எழுதட்டும். 'ஓய்வு' தேவைதானெ? ( எல்லாருக்கும்!!)//

டீச்சர்,
அப்படியெல்லாம் இருந்தா சொல்லிட்டு போகனும்.. உங்களை மாதிரி...

பொறுமையா வந்து வழக்கம் போல அருமமையான பதிவை தரட்டும்!!!

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

//மாத்ரூ பூதம் டைப்ல இருக்கும்னு நம்பி போன ஆளுங்களுக்கு எல்லாம் ஆப்பு... என்னையும் சேர்த்துதான் சொல்றேன்//

அட நீங்களும் அப்பிடிப் போனவர் தானா? ஹா ஹா ஹா...
மாத்ருபூதம்ன்னு போனா பஞ்சபூதம்ன்னு சொல்றாரு பதிவுல.
என்ன பண்ணலாம் இவரை? நீங்களே சொல்லுங்க.
//

பராவாலைங்க்... நல்ல பதிவ தான் கொடுக்கறாரு... அதனால பாராட்டலாம் :-)

Anonymous said...

//ஆனா தில்லு முல்லு படத்தில் தலைவர் காவி கட்டிக்கினு தான் அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்குவார். ஞாபகம் வைச்சுக்குங்க! :-) //

அது தில்லுமுல்லு இல்லை.மூன்றுமுகம்

Anonymous said...

//ஆனா தில்லு முல்லு படத்தில் தலைவர் காவி கட்டிக்கினு தான் அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்குவார். ஞாபகம் வைச்சுக்குங்க! :-) //

அது தில்லுமுல்லு இல்லை.மூன்றுமுகம்

வெட்டிப்பயல் said...

//ஜி said...

நியு யார்க் நகர போலிஸ் துறை தனிப்படை அமைச்சி தேடிக்கிட்டு இருக்குறதா சற்று முன் தகவல் வந்தது.

KRS எங்க இருக்கீங்க. சீக்கிரம் வாங்கப்பா. அப்புறம் தமிழ்மணத்தோட அடுத்த தொடர் குண்டு உங்கள் மேல் போடப்படும் என்று எச்சரிக்கப் படுகிறது.//

போலிஸ் எல்லாம் தேட ஆரம்பிச்சிட்டாங்களா???

தலைவரே வந்துட்டாரு!!!
இது தெரிஞ்சிருந்தா நான் எப்பவோ போட்டுருப்பேனே!

வெட்டிப்பயல் said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...

:-)//

இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?

வெட்டிப்பயல் said...

//சேதுக்கரசி said...

ச.சங்கர் படங்காட்டறதைப் பார்த்து ஆஹா ஆஹா ஆஹா போட்டுட்டு ஒருத்தர் இருக்கார்.. அவரைத் தானே தேடறீங்க? இங்கே போய்ப் பாருங்க :-)//

இந்த பதிவ நான் பப்லிஷ் பண்ணும் போது சரியா என் போன பதிவுக்கும் ஓடி வந்துட்டாரு...

என்னவெல்லாம் பண்ண வேண்ட்டியதிருக்கு...

வெட்டிப்பயல் said...

//Syam said...

அட விடுங்க...பிப்ரவரி மாசம் கொஞ்சம் பிஸியாதான் இருப்பாரு...சும்மா அவர போய் தொல்ல பண்ணிக்கிட்டு :-)//

நாட்டாமை,
சரியா சொல்லிட்டீங்களே!!!
இது தெரியாம போச்சே!

வெட்டிப்பயல் said...

//Sridhar Venkat said...

நான் மிகவும் ரசிக்கும் பதிவுகள் நண்பர் ரவிசங்கரின் பதிவுகள். இதமாய் பதமாய் எழுதி நமக்கு ஒரு நல்ல வாசிப்பானுபவம் தருவார்.
//
அதனால தான் நான் தேடிட்டு இருக்கேன்!!!

//
என்னங்க ஒரு மாசம் இடைவெளி விட்டா இப்படி நாலு மாசம் காணோம்னு போட்டு விடறீங்களே. சரி இப்படி உசுப்பி விட்டாலாவது மனுஷன் active-ஆ வருவாரானு பாக்கறீங்க. ஓகே! ஓகே!
//
நாலு மாசம் இடைவேளினு சொல்லலைங்க... நாலு மாசமா எழுதறவருனு சொல்றேன்!!!

//
கண்டுபிடிச்சு கொடுக்கிறவங்களுக்கு எதுவும் பரிசு கிடையாதா?

பாருங்க செல்வன் உடனே கண்டுபிடிச்சு கொடுத்திட்டார்.//

அவரை வர வைத்தால் அவர் பதிவுகளே பரிசுதானே ;-)

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

வரப்போகின்ற பட்ஜெட்டில் (Feb' 28), தமிழ் பதிவுகளின் வளர்ச்சிக்காக ஒரு பெரும் தொகையை நிதித்துறை ஒதுக்கவுள்ளது.

அது குறித்து தன்னுடைய மேலான ஆலோசனைகளை எடு்த்துச் சொல்ல
'சிறப்பு' அழைப்பின் பேரில் திரு.K.R.S அவர்கள் இந்தியா வந்துள்ளார.

தற்சமயம் தில்லியில் உள்ளார்.

யாரும் தேட வேண்டாம்.
வருகை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது//

இது என்ன புது கதை???

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

கண்டுபிடித்து தருவார்க்கு "தக்க சன்மானம்",
"தக்க சன்மானம்" வழங்கப்படும்! அல்லவா? :-))))//

ஆமாம்...
எழும்பூர் காவல்நிலையம்ல ஃபிரியா ரெண்டு நாள் தங்கிக்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பழனியில் தேவயானியை சந்தித்தேன்னு//

ஆகா.....அடிச்சு விளையாடறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க போல! :-)
சொல்றது சொல்றது தான் சொல்றீங்க...ஒரு நயன், வித்யா பாலன் என்று சொல்லலாமே! :-))//

ஆமாம்..
திருப்பதில மட்டும் அஸினயோ, ஸ்ரியவையோவா பார்த்தீங்க???

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மேலும் இவர் காவி நிற உடை அணிந்து//

அடக் கடவுளே! - முடிவே கட்டிட்டீங்களா பாலாஜி?
நல்ல வேளை காவியோடு நிறுத்தினீங்களே! நன்றி!!
இப்பல்லாம் காவின்னால்லே ஒரே பயமா இருக்கு!

ஆனா தில்லு முல்லு படத்தில் தலைவர் காவி கட்டிக்கினு தான் அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்குவார். ஞாபகம் வைச்சுக்குங்க! :-)//

அது தில்லு முல்லு இல்லைங்க... மூன்று முகம்...

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//மேலும் இவர் காவி நிற உடை அணிந்து//

அடக் கடவுளே! - முடிவே கட்டிட்டீங்களா பாலாஜி?
நல்ல வேளை காவியோடு நிறுத்தினீங்களே! நன்றி!!
இப்பல்லாம் காவின்னால்லே ஒரே பயமா இருக்கு!

ஆனா தில்லு முல்லு படத்தில் தலைவர் காவி கட்டிக்கினு தான் அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்குவார். ஞாபகம் வைச்சுக்குங்க! :-) //

மன்னிக்கனும். அது தில்லு முல்லு கெடையாது. தில்லு முல்லு படத்துல அமெரிக்காவுக்கெல்லாம் போகவே மாட்டாங்க. அது வேற படம். ராதிகா ஈரோயின்.

கண்ணபிரான் ரவிசங்கரைக் காணவில்லை என்று அவருடைய தந்தைக்குத் தொலைபேசியில் செய்தியைத் தெரிவித்தேன். அவர் ரவி இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை என்றும்...இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறார் என்றும்...அனால் எப்பொழுது வருகிறார் என்று சரியாகத் தெரியாது என்றும் கூறினார். அவருக்கு இங்குள்ள தகவல்களைத் தெரிவிப்பதே நல்லது என நினைக்கிறேன்.

SK said...

வந்துட்டாருய்யா, வந்துட்டாரு!

எல்லாரும் பண்ணின தொல்லை தாங்க முடியாம் பாலாஜியை எழுப்பி, அவரோட மத்த எல்லாரையும் கூப்பிட்டுகிட்டு, மறுபடியும் வந்துட்டாரு!

எப்பிடியெல்லாம் அழைக்க வேண்டியிருக்கு ஒர்த்தொருத்தரை!
:))

இதுல வாத்தியாரு வேற......!
"ஆமையைத் திருப்பி போட்டு அடிச்சா செத்துடும்.. அதை என் வாயால சொல்வானேன்" என்கிற கணக்கா ஒரு தகவலைக் கொடுத்திட்டு அம்பேல் ஆயிட்டாரு!
:)

SP.VR.சுப்பையா said...

//இதுல வாத்தியாரு வேற......!
"ஆமையைத் திருப்பி போட்டு அடிச்சா செத்துடும்.. அதை என் வாயால சொல்வானேன்" என்கிற கணக்கா ஒரு தகவலைக் கொடுத்திட்டு அம்பேல் ஆயிட்டாரு!
:)///

எஸ்.கே.சார்! அம்பேல் ஆகவில்லை!
ஓரமாக நின்று நீங்கள் வருகிறீர்களா? மற்றும் யார் யார் வருகிறார்கள் என்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறென்.

பையன்களுக்குப் பாடம் நடத்துவதைவிட இதுதான் சுவாரசியமாக உள்ளது!:))))