தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, February 05, 2007

சுடர் - துவக்க விழா!!!

சுடர் - என்னடா இதுனு பாக்கறீங்களா?

நம்ம தேன்கூடுல புதுசா ஒரு விளையாட்டு ஆரம்பிச்சிருக்காங்க... அந்த விளையாட்டோட ரூல்ஸ தெரிஞ்சிக்க இங்கே சொடுக்கவும்

நம்பளை எல்லாம் நம்பித்தான் இந்த விளையாட்ட ஆரம்பிச்சிருக்காங்க. அதனால அடிச்சி ஆடுவோம்.

சரி... நானும் அப்படியே அதை கொஞ்சம் சுலபமா சொல்லிடறேன்... இது நம்ம ஆறு விளையாட்டு மாதிரி தான்.. ஆனா இங்க நம்ம ஒருத்தரைத்தான் கூப்பிடனும் அதே மாதிரி அவர கலாய்க்க 5 கேள்வி கேக்கலாம். அப்படியே சங்கிலி தொடரும். கடைசியா இருக்கவங்க என்னைய 5 கேள்வி கேப்பீங்க...நம்ம யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது, எவ்வளவு டேக் பண்ணாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்லவன்னு நம்ம ப்ளாக் மக்கள் பாராட்டை பெற்றவர், நாட்டாமைனு பாசமாக அழைக்கப்படும் 'தினமும் என்னை கவனி" ஸ்யாம் தான் நியாபகத்துக்கு வந்தாரு...

சரி அவரோட ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சி... ஸ்டார்ட் தி மியூசிக்

1.எதுக்கு உங்க ப்ளாகுக்கு தினமும் என்னை கவனின்னு பேரு வெச்சீங்க? இது வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்கற மெசாஜா இல்லை....???

2. ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எப்பவாவது தோனியிருக்கா? எப்பவெல்லாம் தோனும்?

3. அமெரிக்க ஃபிகர்களிடம் கடலை போடுவதற்கும் நம்மூர் பெண்களிடம் கடலை போடவதற்கும் உள்ள வித்யாசங்கள் என்ன?

4. உண்மையா சொல்லுங்க.. பிப்ரவரி 14ன்னா உங்களுக்கு உங்க தங்கமணி நியாபகம் வருவாங்களா இல்லை நீங்க இதுவரைக்கும் ப்ரபோஸ் பண்ண பொண்ணுங்க நியாபகம் வருவாங்களா? (அப்படியே எப்படியெல்லாம் பண்ணீங்கனு டிப்ஸ் கொடுத்தா கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும்)

5. அமெரிக்கர்களிடம் நீங்கள் கண்ட நல்ல பழக்கங்கள், நம்மூரிலிருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

நாட்டாமை,
ரூல்ஸ் இதோ!!!

தொடர்விளையாட்டுக்கான விதிமுறைகள்:

1) தேன்கூட்டில் திரட்டப்படும் வலைப்பதிவுகள் மட்டுமல்லாது, திரட்டப்படாத வலைப்பதிவில் இருந்தும் இடுகைகள் தொடர்விளையாட்டுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

2) இடுகைகளின் தலைப்பில் "சுடர்" என்று ஆரம்பித்திருந்தால் திரட்டியில் சுலபமாகக் காட்டப்படும்.

3) தொடர்விளையாட்டுக்கான இடுகைகள் ஏப்ரல் 14ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 2007 'சுடர்' தொடர்விளையாட்டுக்கான முடிவு தேதி: ஏப்ரல் 14 2007 நள்ளிரவு 12 மணி இந்திய நேரம் (இன்னும் 69 நாட்கள் மட்டுமே!).

4) ஒருவர் ஒரு முறை மட்டுமே தொடர்விளையாட்டுக்காகப் பதிவு செய்யலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதிக பட்சம் இரண்டு பேரிடம் மட்டுமே சுடர் நகர்வதாக வைத்துக்கொள்ளவும். கேள்விகளின் எண்ணிக்கை ஐந்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவரி பதில்கள் தவிர்க்கவும். கேள்விகளுக்கான சில ஆலோசனைகள் வருமாறு :

  • அ) பொன்மொழிகள் - கருத்து சொல்லச்சொல்லி கேட்கலாம்

  • ஆ) ஏதேனும் ஒரு கருத்து - ஏற்புடையதா இல்லையா? விளக்கம் தரச் சொல்லலாம்.

  • இ) ஏதேனும் ஒரு நிகழ்வில் பொருத்திப் பார்த்து பதில் சொல்லச்சொல்லி கேட்கலாம். உதா: உங்கள் பக்கத்துவீட்டுப் பெண்மணிக்கு நீங்கள் ஒரு உதவி செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மனைவி சொல்லிய வேலையைச் செய்ய மறந்துவிட்டீர்கள். இதை தெரிந்து உங்கள் மனைவி உங்கள் மீது கோபப்படுகிறார்கள். எப்படி சமாளிப்பீர்கள்?:-)

  • ஈ) நீங்கள் கேள்வி கேட்கும் நபரின் தொழில்/திறமை சார்ந்த உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

  • உ) அட, இதுக்கு மேல சொல்லணுமா என்ன?! கலக்கிடமாட்டீங்க?! :-)


5) 'சுடர்' முன்னர் பதில் அளித்த ஒருவருக்கே மீண்டும் கிடைக்கப்பெறுமாயின் அவர் வேறொருவரை கைகாட்ட வேண்டும். பதில்களையும் கேள்விகளையும் ஒரே இடுகையில் இடவேண்டும். (இதன் மூலம் தொடர்ச்சியை சுலபமாக்கலாம்). மேலும், ஒருவரிடமிருந்து பதில் வருவதற்கு அதிகபட்ச காலம் இரு தினங்கள் மட்டுமே. இரண்டு தினங்களுக்கும் மேலாக பதில் வராவிட்டால், 'சுடரி'னை வேறொருவருக்கு கேள்வி கேட்ட பதிவர் மாற்ற வேண்டும்.

6) விளையாட்டினை ஆரம்பித்தவரிடம் மறுபடி 'சுடர்' வருமாகின், அவர் வேறொருவருக்கு மாற்றலாம் (ஏப்ரல் 14 க்குள்).

7) பதில் மற்றும் கேள்வி்களை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு http://www.thenkoodu.com/sudar.php - என்னும் முகவரியின் மூலமாக அளிக்கப்பட வேண்டும்.

8) இந்தத் தொடர்விளையாட்டு, ஒரு சுவாரசியத்திற்கே. தொடர்விளையாட்டின் வெற்றி வலைப்பதிவர்,வாசகர்களின் பங்கேற்பில்தான் இருக்கிறது. வலைப்பதிவர்,வாசகர் அனைவரையும் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டு சிறப்பான பங்களிப்பினைத் தந்து உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்விளையாட்டுக்கான பதிவுகளை http://www.thenkoodu.com/sudar.php என்ற முகவரியிலிருந்து படிக்கலாம்.

9) கேள்விகள் சாதி, மதம் , செக்ஸ், தீவிர அரசியல் ஆகியவற்றினைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது. சாதி, மத, சமய மற்றும் தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் தொடர்விளையாட்டில் சேர்க்க பட மாட்டாது. ஆக்கங்களைப் தொடர்விளையாட்டில் இருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உண்டு.

10) விதிமுறைகளை மாற்றும் உரிமை நிர்வாகத்திற்கும், முதல் இடுகையாளருக்கும் உண்டு.

11) மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

23 comments:

இராம் said...

பாலாஜி,

நல்ல ஆளாதான் செலக்ட் பண்ணிருக்கே!!!!!

சிந்தாநதி said...

! ;)

இம்சை அரசி said...

1st ஆளா select ஆனதுக்கு வாழ்த்துக்கள் வெட்டி...

johan-paris said...

வெட்டிப் பயல்!
உண்மையிலே! சில நாட்களாக தடுமாற்றமாகத்தான் உள்ளது.
தொடக்க விழாவா?; துவக்க விழாவா??
இரண்டுமே சரியா???
சொல்லுங்கோ!
யோகன் பாரிஸ்

ஜி said...

அட... சூப்பரான ஆளிடம் சூப்பரான கேள்விகள்...

ஸ்யாம் அடிச்சு ஆடுவாரு பாருங்க....

Syam said...

போட்டு தாக்குங்க...எனக்கும் வூட்டுல அடி வாங்கி கொஞ்சம் நாள் ஆச்சு...சரி இந்த பதிவ போட்டுட்டு வூட்டுகாரம்மா கிட்ட மசாஜ்(???!!!) பண்ணிவிட சொல்லலாம் :-)

Syam said...

அந்த லின்க்கு போனா ஜிலேபி தான் தெரியுது...என்ன பண்ணா ரூல்ஸ் படிக்க முடியும்னு சொல்லுங்களேன்...
:-)

Syam said...

நான் கூட நேத்து உங்க email பாத்து இது ஏதோ மூளைக்கு வேலைனு நினைச்சு டென்சன் ஆயிட்டேன்...நம்ம வீரத்துக்கு வந்த சவாலா இருங் பிரிச்சு மேஞ்சுருவோம் :-)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

பாலாஜி,

நல்ல ஆளாதான் செலக்ட் பண்ணிருக்கே!!!!! //

ராயல்,
பின்ன நம்ம நாட்டாமையை விட்டா இதுக்கு வேற சரியான ஆள் யாரு ;)

வெட்டிப்பயல் said...

// சிந்தாநதி said...

! ;) //

இதுக்கு என்னங்க அர்த்தம்???

வெட்டிப்பயல் said...

//இம்சை அரசி said...

1st ஆளா select ஆனதுக்கு வாழ்த்துக்கள் வெட்டி... //

இ.அரசி,
மிக்க நன்றி!!!

வெட்டிப்பயல் said...

// johan-paris said...

வெட்டிப் பயல்!
உண்மையிலே! சில நாட்களாக தடுமாற்றமாகத்தான் உள்ளது.
தொடக்க விழாவா?; துவக்க விழாவா??
இரண்டுமே சரியா???
சொல்லுங்கோ!
யோகன் பாரிஸ் //

எனக்கு தெரிஞ்சி ரெண்டுமே சரினு தான் நினைக்கிறேன்!!!

சொல் ஒரு சொல்... சீக்கிரமா சொல்லுங்க :-)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

அட... சூப்பரான ஆளிடம் சூப்பரான கேள்விகள்...

ஸ்யாம் அடிச்சு ஆடுவாரு பாருங்க.... //

ஜி,
தெரிஞ்சிதானே கேட்டிருக்கோம் :-)

எப்படியும் நாட்டாமை அடிச்சி ஆடுவாரு :-)

வெட்டிப்பயல் said...

// Syam said...

போட்டு தாக்குங்க...எனக்கும் வூட்டுல அடி வாங்கி கொஞ்சம் நாள் ஆச்சு...சரி இந்த பதிவ போட்டுட்டு வூட்டுகாரம்மா கிட்ட மசாஜ்(???!!!) பண்ணிவிட சொல்லலாம் :-) //

நாட்டாமை,
வீட்ல எவ்வளாவு மசாஜ் வாங்கினாலும் வெளிய வீரமா சவுண்ட் கொடுக்கனும் :-)

வெட்டிப்பயல் said...

// Syam said...

அந்த லின்க்கு போனா ஜிலேபி தான் தெரியுது...என்ன பண்ணா ரூல்ஸ் படிக்க முடியும்னு சொல்லுங்களேன்...
:-) //

நம்ம பதிவுலயே போட்டாச்சி :-)

வெட்டிப்பயல் said...

// Syam said...

நான் கூட நேத்து உங்க email பாத்து இது ஏதோ மூளைக்கு வேலைனு நினைச்சு டென்சன் ஆயிட்டேன்...நம்ம வீரத்துக்கு வந்த சவாலா இருங் பிரிச்சு மேஞ்சுருவோம் :-) //

மூளைக்கு வேலை கொடுக்கறதுனா என்னையவா தேர்ந்தெடுப்பாங்க ;)

இது நம்மல மாதிரி ஜாலியா அடிச்சி ஆடறவங்களுக்கு...

Boston Bala said...

ஆட்டம் நன்றாக இருக்கிறது. கேள்வியெல்லாம் ஒரு மார்க்கமாக கீதே ; )

கப்பி பய said...

அட...வெளாட்டு நல்லாயிருக்கே :)

Arunkumar said...

அட்றா அட்றா :-)

நாட்டாம, தார தம்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும் :)

கோபிநாத் said...

ஆகா...
கலக்குங்க நாட்டாம :))

sumathi said...

ஹாய் பாலாஜி,

அடா அடா அடா...,சூப்பர், ஆரம்பமே சம்ம தூளாயிருக்கு...
ரொம்ப interesting aa irukku..

.:: மை ஃபிரண்ட் ::. said...

விளையாட்டு ஆரம்பமாச்சா?

அப்போ ஏப்ரல் வரை எல்லாருமே சுடரோடு விளையாடி சுடரோடுதான் உறவாடப்போகிறார்ர்கள்.. ;-)

சிவபாலன் said...

பாலாஜி,

சுடர் நன்றாக ஜொலிக்கிறது.. வாழ்த்துக்கள்!!

தொடரட்டும்..

எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. உங்களை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்கிறேன்!

நன்றி