தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, February 28, 2007

70 மார்க் எடுத்தா வெளியே!!!

"டேய் மச்சி கேள்விப்பட்டியா 70 மார்க்குக்கு மேல எடுத்தா வகுப்பை விட்டு வெளிய போயிடனுமாம்... பிரின்சிபல் புது ரூல்ஸ் போட்டுருக்காரு"

"இது என்னடா புது ரூல்ஸ்... ரொம்ப வித்தியாசமா இருக்கு"

"நம்ம டைசன் காப்பி அடிச்சி மாட்டினான் இல்லை. அதனால தான் இந்த ரூல்ஸ்"

"ஏன்டா அவன் காப்பி அடிச்சி மாட்டினதுக்கு எதுக்குடா இப்படி ஒரு ரூல்ஸ் வைக்கனும். அவனை பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே"

"அவன் மட்டும் இல்லை. இன்னும் கொஞ்சம் பேரும் காப்பி அடிக்கறாங்களாம்"

"அதுக்கு அதை சரி பண்ண எதையாவது யோசிக்கறதை விட்டுட்டு இப்படி அதிக மார்க் எடுக்க கூடாதுனு சொல்றதுல என்னடா நியாயம்?"

"ஏன்டா நம்ம கூடத்தான் நல்லா படிக்கிறோம். நமக்கு 70 மார்க் வரதில்லைதானே. இதுல இருந்து என்ன தெரியுது? 70க்கு மேல எடுக்கறவன் எல்லாம் காப்பி அடிக்கிறானு தானே அர்த்தம்"

"ஏன்டா நமக்கு வரலைனா எல்லாரும் காப்பி அடிக்கறாங்கனு அர்த்தமா?

"டேய் இது தாண்டா நமக்கும் நல்லது. எப்படியும் நம்மளுக்கு 70 மார்க் வர போறதில்லை"

"மச்சி! நமக்கு மார்க் வரலைனா நம்ம மேல எங்கயோ தப்பு இருக்குனு அர்த்தம். மார்க் வாங்கறது ஒரு கலை. அதை நாம சரியா தெரிஞ்சிக்கல இல்லை நமக்கு அதுல பெருசா விருப்பம் இல்லைனு முதல்ல புரிஞ்சிக்கனும். படிக்காமலே அவன் மார்க் வாங்கறான். படிச்சி எனக்கு வரலைனு ஃபீல் பண்ணக்கூடாது. மார்க்ல தான் விருப்பம்னா அதை வாங்கற வித்தைய தெரிஞ்சிக்கனும் இல்லை எனக்கு படிக்கிற மேட்டர் புரிஞ்சா போதும் மார்க் தேவையில்லைனா அதுல மட்டும் கவனம் செலுத்தனா போதும். அவன் மார்க் வாங்கறான் இவன் மார்க் வாங்கறான்னு ஃபீல் பண்ணாத"

"டேய் இதெல்லாம் நீ பேசி பிரோயோஜனமில்ல. ரூல்ஸ் போட்டாச்சி. ஒழுங்க படிக்காம 70 மார்க்குள்ள வாங்கற வழிய பாரு..."


பி.கு:
மக்களே அநியாயத்துக்கு ஆணி புடுங்க சொல்றானுங்க... அதுவில்லாம ஆபிஸ்ல வலைப்பதிவ எல்லாம் பாக்க முடியாம பண்ணிட்டாங்க... அதனால பதில் சொல்ல லேட் ஆகும். தப்பா எடுத்துக்காதீங்க...

45 comments:

சென்ஷி said...

மொத ஆணிய நான் அடிக்கிறேன் :)

சென்ஷி

இலவசக்கொத்தனார் said...

வெட்டி, பிரச்சனையை சரியா புரிஞ்சுக்கலை போல இருக்கே! மார்க் வாங்காதேன்னு யாரும் சொல்லலை. 70 மார்க்குக்கு மேல வாங்கின நோட்டீஸ் போர்ட்டுல பேர் வராது. அங்க பேர் வரலைன்னா நீ நல்லா படிக்கிற பையன் அப்படின்னு தெரியாது. நல்லா படிக்கிற பையனாச்சேன்னு மத்தவங்க எல்லாம் வந்து அதிகமா மார்க் போடற வேலை நடக்காது. இதுதான் மேட்டர்.

அதுனால நீ தனியா வாத்தியாருங்க எல்லாரையும் புடிச்சு வெச்சுக்கிட்டா, வழக்கம் போல நூத்துக்கு நூறு வாங்கலாம். இந்த ரூல்ஸ் வந்த பின்னாடி நான் எழுதுன தேர்வில் நிறையா மார்க் வாங்கியாச்சு பாருங்க. இன்னும் கொஞ்சம் கூட வாங்கி இருப்பேன், நானும் இந்த புது ரூல்ஸ் சரியா தெரியாம கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிட்டேன்.

ஆனா நோட்டீஸ் போர்ட்டில் அவங்க போடலைன்னா கூட நான் நிறையா மார்க் வாங்கறேன் பார் அப்படின்னு காம்பவுண்டு சுவர், பாத்ரூம் சுவர் அப்படின்னு கண்ட இடத்தில் நீயே எழுதி வைக்கணும். பக்கத்துல உட்கார்ந்து இருக்கற பையனை கத்திச் சொல்லச் சொல்லணும். அப்போதான் மத்தவங்களுக்கு நீ மார்க் வாங்கற விஷயம் தெரிய வரும். என்ன நான் சொல்லறது? :)))

SurveySan said...

70 மார்க்கு வாங்கறவன் எல்லாம் மொத பெஞ்ச்ல ஒக்காந்துனு, 10 மார்க் வாங்கறவன பின்னாடி ஒக்கார வைக்கரான்.

வாத்தியார் 10 மார்க் வாங்கினவன, முன்னாடி ஒக்கார வச்சு நல்லா சொல்லிக் கொடுக்க, 70க்கு மேல வாங்கினவன, நீ படிச்சு கிழிச்சது போதுங்கறாரு :)

70 மார்க் ஒழுங்கா படிச்சு வாங்கறவன், எப்படியும் பொழச்சுப்பான்.

காபி அடிச்சு வாங்கறான் பாரு, அவன் நெலமதான் கஷ்டம். :)

வாக்கு போட்டீயளா?

பி.கு: 1 மார்க் அபேஸ் செய்ததர்க்கு மன்னிக்கவும் :(

அபி அப்பா said...

இத இத இதத்தான் எதிர்பாத்தேன் வெட்டி தம்பி! இது இப்டியேதான் நீடிக்குமா?? நீங்கள்ளாம் சேந்து எதுனா செய்ய கூடாதா????

இராம் said...

//மக்களே அநியாயத்துக்கு ஆணி புடுங்க சொல்றானுங்க... அதுவில்லாம ஆபிஸ்ல வலைப்பதிவ எல்லாம் பாக்க முடியாம பண்ணிட்டாங்க...//

சேம் பிஞ்ச்..... :(((

கோவி.கண்ணன் said...

//தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30 //

மேலே உள்ளதுக்கும் இந்த பதிவுக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா ?
நான் அப்பாவிங்க !
:)

இலவசக்கொத்தனார் said...

//இந்த ரூல்ஸ் வந்த பின்னாடி நான் எழுதுன தேர்வில் நிறையா மார்க் வாங்கியாச்சு பாருங்க.//

வெட்டி, சுட்டி குடுக்க மறந்துட்டேன் பாருங்க. இதான் அந்தத் தேர்வு. :))

அப்போ இந்தப் பதிவு காம்பவுண்ட் வாலா, பாத்ரூம் சுவரான்னு எல்லாம் கேள்வி கேட்கப்பிடாது!! :))))

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ் சொல்வது போல் பிரச்சனையை நீங்க தெளிவா புரிஞ்சிக்கலைன்னு தோணுது பாலாஜி.. :)

dubukudisciple said...

vetti!!
nalla ezhuthi irukeenga!!
ana enan solla vareenganu thaan piriyala

dubukudisciple said...

vetti
Purinjuchu!!
seri seri iduku ellam varutha padatheenga

G.Ragavan said...

அப்படியில்ல வெட்டி. 70க்கு மேல எடுக்கக் கூடாதுன்னு இல்லை. அதுக்கு மேல எடுக்குறவங்க கிரீமி லேயர். அவங்களுக்கு ரிசர்வேசன் கெடையாது. அவ்வளவுதான். ஒங்கள நீங்களே பாத்துக்க முடியும்னு அரசாங்கம் நம்புது. என்னையப் போல பின்னூட்டக்கோட்டுக்குக் கீழ வாழ்றவங்கள நெனச்சுப் பாரு. அவங்களுக்காக அரசாங்கம் கொண்டு வந்த திட்டந்தான் இந்த இட ஒதுக்கீடு திட்டம். புரிஞ்சதா?

மனதின் ஓசை said...

நனைச்சாச்சு..

Dubukku said...

ஆஹா நீங்களும் இறங்கிட்டீங்களா... :)

Syam said...

அதுசரி.... :-)

@கொத்ஸ்...உங்க விளக்கம் சூப்பர்... :-)

வெட்டி, உங்க மார்க்க கூட்ட வேண்டாமேனு தான் மூனு மார்க்க ஒரு மார்க்கா போடுறேன் :-)

தேவ் | Dev said...

ஜி.ரா. இதிலுமா இட ஒதுக்கீடு... ஓப்பன் மார்க்கெட் எங்குமே கிடைமக்களே வெட்டி சொல்ல வர்றது என்னன்னா... 70 மார்க் எடுத்துட்டீயா இனி இந்தப் பக்கம் உனக்கு இடமில்லை.. நீயே உன் பொழப்பைப் பாத்துக்க..

70 க்கு கீழே எடுத்தா மட்டும் உள்ளே வா உனக்குச் சொல்லித் தர்றேன்.. அப்படிங்கறது தான்..

70 எடுத்தவன் 70ஐ தாண்டுவதற்கு தொடர்ந்து உதவ வேண்டும் அல்லவா.. அப்போத் தானா 70... 100 ஆகும்.. அவன் இன்னும் வளர்வான்...இது ஒரு பதிவாளரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது ஆகாதா?

பின்னூட்டங்களுக்கு அளவு வைப்பதை விட பதிவுகள் முகப்பில் இருக்க கால அவகாசம் கொடுக்கலாம்.. ஒரு வாரம் ஆனப் பதிவுகள் அதற்கு மேல் தமிழ் மண பிரைம் லோகேஷ்ன்ல் இருந்து தூக்கிவிடலாம்

தற்போதைய திட்டத்தை மீண்டும் பரிசீலிக்கலாமே...யாதா?

கோபிநாத் said...

வெட்டி உனக்கும் வச்சிடாங்கள ஆப்பு :)))

வெட்டிப்பயல் said...

கொத்ஸ்,
இன்னைக்கு இருக்குற நிலைமைய வெச்சி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.

நான் இனிமே வளரவங்களுக்காக பேசிட்டு இருக்கேன்.

நான் ஒரு கதையாவது உருப்படியா எழுதினேன்னா, இந்த பின்னூட்டங்களால வந்த பாராட்டுகள் தான் காரணம்.

நான் பார்த்து சமீப காலத்துக கலக்கின அரை பிளேடு, ஜி, அபி அப்பா எல்லாம் அருமையா எழுதறதுக்கு அதுதான் காரணம்னு நம்பறேன்.

ஏற்கனவே புத்தகத்துக்கு எழுதின பெரிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை விட எழுத ஆர்வம் இருக்கும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தான் சிறந்தது...

வெட்டிப்பயல் said...

சர்வேசன்,
நல்லா படிக்கிறவனையும் பின்னாடி உக்கார வெச்சி அவனையும் படிக்க விடாம பண்ணா சரியாயிடும்னு சொல்றீங்களா?

படிக்காதவனை முன்னாடி பெஞ்சில உக்கார வைக்கறதால வாத்தியாருக்கும் நட்டம் தான்...

சர்வேக்கு ஓட்டு போட்டாச்சி...

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
இத இத இதத்தான் எதிர்பாத்தேன் வெட்டி தம்பி! இது இப்டியேதான் நீடிக்குமா?? நீங்கள்ளாம் சேந்து எதுனா செய்ய கூடாதா????
//

அபி அப்பா,
நானெல்லாம் சாதாரணமா ஜல்லி அடிக்கிற பதிவர்.

இலக்கியமா யாருக்கும் புரியாத மாதிரி எழுதினா தான் சபைல மதிப்பு...

அதனால நம்ம பேச்சி எல்லாம் எடுபடாது...

வெட்டிப்பயல் said...

இராமண்ணே,
எல்லாம் சேர்ந்து வெச்சி ஆப்படிக்கிறாங்க ;)

கோவி கண்ணன்,
தெரியலையே!!! ;)
நானும் அப்பாவி தானுங்கோ ;)

வெட்டிப்பயல் said...

பொன்ஸக்கா,
ஆர்வமா இருக்கறவங்களுக்கு உற்சாகம் தானா கிடைக்கும். அந்த ஆர்வத்தை குறைக்கற மாதிரியான விஷயம் தான் இது...

ஒரு சிலரோட பழைய பதிவுகளை பார்க்க கிடைக்கும் சந்தர்ப்பமும் இதனால் போய் விடுகிறது...

நானெல்லாம் இங்க வரும் போது எதுவுமே எழுதி பழக்கமில்லாம தான் வந்தேன். உங்கள மாதிரி சின்ன வயசுலே கதை எல்லாம் எழுதினதில்லை. இன்னைக்கு நானும் தொடர்ந்து எழுதிட்டு இருக்கேனா அதுக்கு இங்க கிடைக்கிற உற்சாகம் தான் காரணம்...

ரசிக்க முடியாத பதிவுகள முன்னாடி வெச்சாலும் படிக்க முடியாது. வேகமா ஊடறவன் காலை கட்டி போடற மாதிரியான விஷயம் தான் இது.

வெட்டிப்பயல் said...

சுதாக்கா,
எனக்கு கவலை என்னனா, இது ஜாலியா எழுத வரவங்களை வளர விடாம தடுக்கும்னு தான். இனிமே கூகுள் ரீடர்தான்னு நினைக்கிறேன் :-)

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
2007ல உங்க ஆசைய பத்தி எழுதனீங்களே அதுக்கு எத்தனை பின்னூட்டம் வந்துச்சி???

மக்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுதினா தானா வரும். இல்லைனா காசு கொடுத்தாலும் வராது.

இப்ப க்ரீமி லேயரா இருக்கவங்களை விட புதுசா வரவங்களுக்கு தான் பாதிப்பு அதிகம்...

அபி அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி 100 பின்னூட்டம் வாங்கினாரே அவர் என்ன கிரிமீ லேயரா?

படிச்சா அடுத்தவங்க சிரிச்சி சந்தோஷப்படற மாதிரி எழுதினா தானா வரும்...

வெட்டிப்பயல் said...

// மனதின் ஓசை said...
நனைச்சாச்சு..
//

பிரியலையே!!!

//Dubukku said...
ஆஹா நீங்களும் இறங்கிட்டீங்களா... :)
//
குருவே... நீங்க எல்லாம் பின்னூட்டமில்லாமலயே கலக்கற ஆளு. நாங்க எல்லாம் அப்படியா?

வெட்டிப்பயல் said...

நாட்டாமை,
கொத்ஸுக்கு பதில் சொல்லியாச்சி...
நல்லா படிக்காதவன் பேர முன்னாடி வெச்சா அவன் நல்லா படிப்பான்னு கொத்ஸு நம்பறாரு. பார்க்கலாம்...

நீங்க எனக்கு 3 மார்க் என்ன 30 மார்க் கூட போடலாம் :-)

வெட்டிப்பயல் said...

தேவ்,
சரியா சொல்லியிருக்கீங்க...

கோபி,
ஆப்பு எல்லாம் இல்லைங்க. ஜாலியா யாரும் எழுத கூடாதுனு அடுத்து ஒரு சட்டம் போட்டாலும் போடலாம்...

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
2007ல உங்க ஆசைய பத்தி எழுதனீங்களே அதுக்கு எத்தனை பின்னூட்டம் வந்துச்சி???

மக்களுக்கு பிடிக்கிற மாதிரி எழுதினா தானா வரும். இல்லைனா காசு கொடுத்தாலும் வராது. //

பிடிச்ச மாதிரி எழுதுனா பின்னூட்டம் தானா வருதுல்ல. அப்புறம் ஏம்ப்பா இப்பிடி ரியாக்ஷன்? எனக்குப் பின்னூட்டம் வரலைங்குறதுக்காக நான் சொல்லலை. எனக்கு எது வரனுமோ அது வருது. அது எனக்குப் போதும்.

நான் சொல்ல வந்ததையே நீயும் புரிஞ்சிக்கலை. இந்தச் சட்டத்தால நல்லா எழுதுறவங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பின்னூட்டங்கள் அப்படியேதான் வரும். அதுவுமில்லாம இப்பவே முப்பதுக்கு மேல பின்னூட்டங்கள் வாங்குன பதிவுகளும் முகப்புல தெரியுதே!

// இப்ப க்ரீமி லேயரா இருக்கவங்களை விட புதுசா வரவங்களுக்கு தான் பாதிப்பு அதிகம்...

// அபி அப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி 100 பின்னூட்டம் வாங்கினாரே அவர் என்ன கிரிமீ லேயரா?

படிச்சா அடுத்தவங்க சிரிச்சி சந்தோஷப்படற மாதிரி எழுதினா தானா வரும்... //

எழுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். சிலருக்குச் சிரிச்சாலே போதும். சிலருக்கு அதையும் தாண்டிப் போகனும். எழுத்தைப் பற்றிய கருத்தை எல்லாரும் அறிய விரும்புவது நியாயம்தான். எந்த ஒரு முடிவுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இதற்கும் அப்படியிருக்கும் போலத் தெரிகிறது. எனக்கென்னவோ இது ஓவர் ரியாக்ஷன் போலத்தான் தோணுது. மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க. ஆனால் இது பொறாமையால் சொல்லப்பட்டதல்ல என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் எண்ணம் நிறைவேற எனது வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் said...

//நல்லா படிக்காதவன் பேர முன்னாடி வெச்சா அவன் நல்லா படிப்பான்னு கொத்ஸு நம்பறாரு. பார்க்கலாம்...//

என்னா இது? பிரச்சனை என்னான்னு விளக்கமா சொன்னா,அது என் கருத்தா?? நல்லா இருங்கலே.

இலவசக்கொத்தனார் said...

//ஏற்கனவே புத்தகத்துக்கு எழுதின பெரிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை விட எழுத ஆர்வம் இருக்கும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தான் சிறந்தது...//

நீங்க ஊக்கு விப்பீங்களோ ஊசி விப்பீங்களோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா வாங்கற மார்க்கு அதிகமா போனா நோட்டீஸ் போர்டில் இடமில்லை என்ற கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் நம்ம நாட்டில் அடுத்தவனை வளரவிடாமல் நம்ம லெவலுக்கு கொண்டு வந்து சமத்துவத்தை நிலைநாட்ட கதை மாதிரித்தான் தெரியுது.

ஆனா நோட்டீஸ் போர்ட் பொதுச் சொத்து இல்லை. அதுல என்ன வரணும் எப்படி வரணமுன்னு முடிவு செய்ய ஆளுங்க இருக்கு. அவங்க நல்லதுன்னு நினைச்சு எதாவது செஞ்சாங்கன்னா, சரின்னு ஒத்துக்கிட்டு போக வேண்டியதுதான். அதைத்தான் நானும் செஞ்சு இருக்கேன்.

நாகை சிவா said...

கொத்துஸ்

பதிவ படிச்சா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது. நீங்க ரொம்ப தான் ஆராய்றீங்க.......

நாகை சிவா said...

உள்ளே வெளியே ஆட வச்சுட்டாங்களோ

குமரன் (Kumaran) said...

பதிவு டாபிக்கலா நகைச்சுவையா நல்லா இருக்கு வெட்டி. மத்தபடி தமிழ்மணத்தின் புதிய விதி(கள்) பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறேன். நீங்கள் இந்தப் பதிவைப் போட்டபின்னாடி இன்னும் கொஞ்சம் மாற்றம் கொண்டுவந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் (24 மணி நேரப் பக்கத்தில் எல்லாமே தெரியும்). அதனால் ஆகியிருக்கக் கூடிய பாதிப்புகளும் இல்லாமல் போய்விட்டன.

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா,
எங்கேயோ இருக்குற Reservation, Creamy Layerஜ இங்க கொண்டுவந்து போட்டுடாங்க. பாலாஜி, கொத்ஸ் சொன்ன மாதிரி கொஞ்சம் சுமாரா படிக்கிற பசங்களை ஊக்குவிக்கிற மாதிரி நல்லா படிக்கிற பசங்களை பின்னாடி போயி உக்கார சொல்லி இருக்காங்க அதுதான் வேற எதுவும் இல்ல. புதுசா கமெண்டு போட்டாலோ இல்ல கமெண்டுக்கு பதில் சொன்னாலோ notify செய்ய நிறைய கருவிகள் இருக்கும் நீங்க அதை வேணா பயன்படுத்தலாம்.

இலவசக்கொத்தனார் said...

ஒரு தபா இந்த பின்னூட்டத்தைப் போட்டேம்பா, அது சரியா வந்தா இதைப் போட வேண்டாம். :))

என்னய்யா இது தமிழ்மணத்தில் 654 பின்னூட்டங்கள் காட்டுது? நம்ம ஒரு நாள் இந்தப் பக்கம் வரலைன்னா இப்படியா அடிச்சு தூள் கிளப்புவீங்கன்னு வந்தா இங்க 31தான் காட்டுது?

கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் இருந்து ஒரு கட் பேஸ்ட்


2:41 மழை,மின்னல்,இடி பயமா? (4) :
வல்லிசிம்ஹன்

2:49 70 மார்க் எடுத்தா வெளியே!!! (654) :
வெட்டிப்பயல்

2:57 இது ஒரு ஜல்லிப்பதிவு-ஆராய்ச்சி/புள்ளி விவரமுங்கோ... (3) :
ILA(a)இளா

Syam said...

//நீங்க எனக்கு 3 மார்க் என்ன 30 மார்க் கூட போடலாம் :-) //

உங்களுக்கு 300 மார்க் கூட போடலாம்...ஆனா யுனிவர்சிட்டில நல்ல படிக்கர பசங்களுக்கு இடம் இல்லனு சொல்றாங்களே :-)

அபி அப்பா said...

ஆஹா!! வெட்டிதம்பி கெளம்பீட்டிங்களே...என்னய வச்சு காமடி கீமடி இல்லியே!!

வெட்டிப்பயல் said...

ஜி.ரா,
நீங்க உங்களுக்காக சொல்லலனு எனக்கு புரியுது. நீங்க ஆறு எழு வருஷமா எழுதறவரு. ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்க உங்கள சொன்னீங்கனு புரியுது.

நான் சொன்னதும் உங்களுடைய சமீபத்திய பதிவைத்தான்.

நான் சொல்றது எதுக்குனா புதுசா எழுதறவங்க பதிவு நல்லா இருக்கும் போது 30, 40 வந்தாதான் பல பேர் அப்படி இவன் என்ன பெருசா எழுதறான்னு பார்ப்பாங்க. அது ஜல்லிப்பதிவா இருந்தா கண்டிப்பா வர மாட்டாங்க.

என் பதிவுல வர பின்னூட்டங்கள் முக்கால்வாசி பதிவு சம்பந்தமாதான் இருக்கும். ஏன்னா இந்த ஜல்லி பின்னூட்டங்களால வர அபாயம் எனக்கு நல்லா தெரியும்.

அதனால இந்த மாதிரி எல்லை இல்லாம இருக்கறது தான் என்னை பொருத்தவரை நல்லது...

இப்ப 40 ஆக்கியாச்சி. அப்பறம் கடந்த 24 மணி நேரத்துல வரும்னு சொல்லிட்டாங்க. அதனால ஓரளவு பரவாயில்லைனு நினைக்கிறேன். இருந்தாலும் எனக்கு இது சரியா படல...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

கொத்துஸ்

பதிவ படிச்சா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது. நீங்க ரொம்ப தான் ஆராய்றீங்க....... //

புலி,
நச்சுனு சொன்ன...

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//நல்லா படிக்காதவன் பேர முன்னாடி வெச்சா அவன் நல்லா படிப்பான்னு கொத்ஸு நம்பறாரு. பார்க்கலாம்...//

என்னா இது? பிரச்சனை என்னான்னு விளக்கமா சொன்னா,அது என் கருத்தா?? நல்லா இருங்கலே.
//

அதை தெளிவா சொல்ல வேண்டியதுதானே ;)

நான் உங்க கருத்துனு இல்லை நினைச்சிட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//ஏற்கனவே புத்தகத்துக்கு எழுதின பெரிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை விட எழுத ஆர்வம் இருக்கும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தான் சிறந்தது...//

நீங்க ஊக்கு விப்பீங்களோ ஊசி விப்பீங்களோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா வாங்கற மார்க்கு அதிகமா போனா நோட்டீஸ் போர்டில் இடமில்லை என்ற கருத்து எனக்கு தனிப்பட்ட முறையில் நம்ம நாட்டில் அடுத்தவனை வளரவிடாமல் நம்ம லெவலுக்கு கொண்டு வந்து சமத்துவத்தை நிலைநாட்ட கதை மாதிரித்தான் தெரியுது.//
எனக்கும் இதுதான் படுது...

//
ஆனா நோட்டீஸ் போர்ட் பொதுச் சொத்து இல்லை. அதுல என்ன வரணும் எப்படி வரணமுன்னு முடிவு செய்ய ஆளுங்க இருக்கு. அவங்க நல்லதுன்னு நினைச்சு எதாவது செஞ்சாங்கன்னா, சரின்னு ஒத்துக்கிட்டு போக வேண்டியதுதான். அதைத்தான் நானும் செஞ்சு இருக்கேன். //

இது என்னவோ உண்மைதான். இருந்தாலும் தமிழ்மணம் மூலமா வளர ஆளு நாம. நாமலே கருத்து சொல்லலைனா எப்படி???

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பதிவு டாபிக்கலா நகைச்சுவையா நல்லா இருக்கு வெட்டி
//

மிக்க நன்றி குமரன்...

// மத்தபடி தமிழ்மணத்தின் புதிய விதி(கள்) பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறேன். நீங்கள் இந்தப் பதிவைப் போட்டபின்னாடி இன்னும் கொஞ்சம் மாற்றம் கொண்டுவந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் (24 மணி நேரப் பக்கத்தில் எல்லாமே தெரியும்). அதனால் ஆகியிருக்கக் கூடிய பாதிப்புகளும் இல்லாமல் போய்விட்டன. //
இது ஏற்கனவே ஒரளவு எழுதி பழக்கப்பட்டவர்களை பாதிக்காது குமரன்.

சீரியஸா சொல்றேன்...
நான் சாப்ட்வேர் இஞ்சினியராகலாம் வாங்க தொடர் எழுதும் போது (அப்ப தான் ப்ளாக் ஆரம்பிச்ச புதுசு) ரெண்டு நாளா பின்னூட்டமே இல்லை. சரி இனிமே எழுத வேண்டாம் நிறுத்திடலாம்னு யோசிக்கும் போது உங்க பின்னூட்டம் மட்டும் வரலைனா கண்டிப்பா நான் இப்ப இந்த நிலைமைல இருந்திருக்க மாட்டேன். என் பேரும் விகடன்ல வந்திருக்காது.

அதனால எல்லாரையும் ஊக்குவிப்பது பின்னூட்டங்கள் தான். அதுக்கு லிமிட் வைக்க வேண்டாமே என்பதுதான் என் எண்ணம்...

வெட்டிப்பயல் said...

// சந்தோஷ் said...

ஆகா,
எங்கேயோ இருக்குற Reservation, Creamy Layerஜ இங்க கொண்டுவந்து போட்டுடாங்க. பாலாஜி, கொத்ஸ் சொன்ன மாதிரி கொஞ்சம் சுமாரா படிக்கிற பசங்களை ஊக்குவிக்கிற மாதிரி நல்லா படிக்கிற பசங்களை பின்னாடி போயி உக்கார சொல்லி இருக்காங்க அதுதான் வேற எதுவும் இல்ல. புதுசா கமெண்டு போட்டாலோ இல்ல கமெண்டுக்கு பதில் சொன்னாலோ notify செய்ய நிறைய கருவிகள் இருக்கும் நீங்க அதை வேணா பயன்படுத்தலாம். //

சந்தோஷ்,
என் பதிவுக்கு வர பின்னூட்டம் வந்துட்டு தான் இருக்க போகுது. அது பிரச்சனையில்லை. நான் வளர உதவியது மற்றவர்களுக்கும் உதவட்டுமேனு தன் பேசிட்டு இருக்கேன்...

வெட்டிப்பயல் said...

கொத்ஸ்,
உங்க தயவில்லாம அப்படியெல்லாம் அடிச்சி ஆட முடியுமா???

நமக்கு தான் ஆபிஸ்ல ஆப்பு வெச்சிட்டாங்களே... அப்பறம் எப்படி?

வெட்டிப்பயல் said...

//Syam said...

//நீங்க எனக்கு 3 மார்க் என்ன 30 மார்க் கூட போடலாம் :-) //

உங்களுக்கு 300 மார்க் கூட போடலாம்...ஆனா யுனிவர்சிட்டில நல்ல படிக்கர பசங்களுக்கு இடம் இல்லனு சொல்றாங்களே :-) //

அதெல்லாம் பிரச்சனையில்ல நாட்டாமை... நீங்க அடிச்சி ஆடலாம் :-)

வெட்டிப்பயல் said...

// அபி அப்பா said...

ஆஹா!! வெட்டிதம்பி கெளம்பீட்டிங்களே...என்னய வச்சு காமடி கீமடி இல்லியே!! //

இதத்தான் நான் சொல்றது...
சீரியஸா சொன்னா காமெடியானு கேக்கறாங்க. காமெடி சொன்னா கும்மி அடிச்சி சீரியஸ் ஆக்கிடறாங்கனு...

இப்ப நான் சீரியஸாதான் சொல்லிட்டு இருக்கேன் :-)