தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, January 22, 2007

செந்தழல் ரவி என்னத்த பெருசா செய்யறார்???

செந்தழல் ரவி என்ன பெருசா செய்யறார்? அவர் போடற இன்ஃபர்மேஷன் புதன் கிழமை Times of India எடுத்து பார்த்தா தெரியப்போகுது. இதுல அவர் பெருசா என்ன செய்யறார்னு எல்லாம் தலைல தூக்கி வெச்சி ஆடறீங்கனு தெரியல. இப்படி ஒரு சிலர் நினைக்கக்கூடும். அதுக்காகத்தான் இந்த பதிவு...

பெங்களூர்ல வேலை தேடி நாங்க 4 - 5 பேர் வந்தோம். ஓரளவுக்கு நல்ல பர்சண்டேஜ் தான் வெச்சிருந்தோம். ஏதாவது ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணா வேலை வாங்கிடலாம்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி. எனக்கு எப்பவுமே கொஞ்சம் நம்பிக்கை அதிகம் (அதை தலைகணம்னு கூட ஒரு சிலர் சொல்லுவாங்க).

சொன்னா நம்ப மாட்டீங்க நான் முதல் இண்டர்வியு அட்டண்ட் பண்ணவே 5 மாசமாச்சி. ஏன் இவ்வளவு காலமாச்சினு பாக்கறீங்களா? பாதி கம்பெனிக்கு Reference கேப்பாங்க. அங்க இருக்கற ஆளுங்க மூலமா அனுப்பினாதான் Interview (Written Test)க்கு அழைப்பே வரும்... மீதி கம்பெனிக்கு ஒரு மெயில் ஐடி இருக்கும் அங்க அனுப்பினா 4 - 5 மாசமாகும். நான் அப்படி 5 மாசத்துக்கு அப்பறம் கலந்துக்கிட்ட கம்பெனில கூட என் க்ளாஸ் மேட் அக்காதான் Forward பண்ணாங்க. (அது கடைசி ரவுண்ட்ல ஊத்திக்கிச்சு. அதுக்கு அப்பறம் கலந்துக்கிட்ட 2 கம்பெனிலையும் வேலை வாங்கிட்டேன் :-))

ஒரு கம்பெனிக்கு பெங்களூர்ல ITPLல வாக் இன். காலைல ஒரு ஒன்பது மணிக்கு போயிருப்போம். சாயந்திரம் 5 மணி வரைக்கும் க்யூல நின்னுருப்போம். அப்பவும் அட்டெண்ட் பண்ண முடியல. காலைல இருந்து எதுவும் சாப்பிடல. பசில அவ்வளவு நேரம் வெயில நிக்கும் போது தான் அந்த வலி தெரியும். அதுவும் நம்மல மாதிரியே இத்தனை பேருனு பார்க்கும் போது ஒரு மலைப்பாவும் இருக்கும்.

அந்த ஆறு மாசத்துல நான் அதிகமா சாப்பிட்டது உப்புமா தான். அதனால எனக்கு உப்புமானாவே என்னுடைய வாழ்க்கையின் கஷ்ட காலம்னு தான் நியாபகம் வரும். (வேலைக்கு சேர்ந்து இந்த மூணு வருஷத்துல 2-3 தடவை தான் சாப்பிட்டிருப்பேன்).

வீட்ல காசு வாங்கறதுக்கும் ரொம்ப கூச்சமா இருக்கும். காலேஜ் படிக்கும் போது கேண்டீன்ல அக்கவுண்ட்டுக்கே மாசம் 1000க்கு மேல ஆகும். (வெறும் முட்டை பப்ஸ், காபி etc etc சாப்பிட்டே). ஆனா வேலை இல்லாதப்ப ஒரு நாளைக்கு ஒரு காபி குடிக்கவே அவ்வளவு யோசிப்போம்.

இருக்குற எல்லா ஜாப் சைட், yahoo groups (chetana, bangalore-freshers, fresher-bangalore.....)லயும் இருப்போம். யாராவது ஒரு reference தர மாட்டாங்களானு அவ்வளவு கஷ்டப்படுவோம். நம்ம எவ்வளவு தயாரா இருந்தாலும் நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டாங்களானு இருக்கும். Seniors, நண்பர்களோட அண்ணன், சொந்தக்காரர்கள் இப்படி நிறைய பேர்கிட்ட கேட்டு பார்த்தாலும் பெருசா எதுவும் பலனில்லை.

அப்ப இந்த மாதிரி ஒரு செந்தழல் ரவி எங்களுக்கு கிடைச்சிருந்தா, எங்களுக்கு அவர் தெய்வம் தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம, வெறும் வேலை வாய்ப்ப பத்தி மட்டும் இல்லாம reference வாங்கி தரார் பாருங்க. அதுதான் உண்மையாலுமே பெரிய விஷயம். கெம்பஸ்ல ப்ளேஸ் ஆனவங்களுக்கு இது ரொம்ப சாதாரண விஷயம்... ஆனா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இது வாழ்க்கையையே அமைச்சி கொடுக்கும். வேலை கிடைச்சிதுனு வீட்ல அப்பா, அம்மாக்கிட்ட சொல்லும் போது அவுங்க சந்தோஷத்த பார்க்கனும். அப்ப தெரியும் அதோட அருமை!!!

Hats off ரவி அண்ணா!!!

மக்களே: அப்பறம் உங்க கம்பெனில இந்த மாதிரி ஏதாவது வேலை வாய்ப்பு இருந்து உங்களுக்கு உதவனும்னு தோனுச்சினா ரவி அண்ணாவிற்கு மெயில் பண்ணலாம்... (zyravi@yahoo.com)

அவர் வலைப்பூ பார்க்க இங்கே சொடுக்கவும்

71 comments:

Anonymous said...

அருமையான பதிவு...

செந்தழலாருக்கு ஒரு ஓ!!!

Arunkumar said...

Ravikku "Hats off"

Anonymous said...

ஆமாம் பாலாஜி,சரியாகச்சொன்னீங்க.
க்யூவில் நின்னு வந்ததால் அந்த வலி உங்களுக்கு தெரியுது.
உப்புமா அதைப்பற்றி- எனக்கும் அதே எண்ணம் தான்.3 வது பட்சம் தான்.

dondu(#11168674346665545885) said...

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகை. சிறிய நன்றியே அப்படியென்றால், நம்ம செந்தழல் ரவி செய்யும் பெரிய நன்றி எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஓகை said...

ரவி செய்து வரும் இந்த வேலை வாய்ப்பு தொண்டு மிகப் பிரமாண்டமானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்துகள். வாழ்த்துகள் ரவி. இதனால் பல வீடுகளில் இன்பம் பெருகும்.

இலவசக்கொத்தனார் said...

அவருக்குத்தான் நிறையா தடவை வாழ்த்து சொல்லிநாச்சு. உங்க பதிவுல இன்னும் ஒரு முறை.

வாழ்த்துக்கள் ரவி!

✪சிந்தாநதி said...

நல்லா புரிய வெச்சிருக்கீங்க

//ரவி அண்ணா//

உங்களுக்கு???

Anonymous said...

கண்டிப்பா பெருசாதான் பண்றார், அவருக்கு எத்தனை முறை வேணுமின்னாலும் நன்றி சொல்லலாம், எவ்வளவு முறை வேணுமின்னாலும் பாராட்டலாம்.

Boston Bala said...

ஆர்வத்துடன் தொடர்ந்து செயல்படும் ரவி, இன்னும் பலரை சென்றடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நாமக்கல் சிபி said...

//ஜி said...

அருமையான பதிவு...
//

மிக்க நன்றி!!!

செந்தழலாருக்கு ஒரு ஓ!!!//
ஒரு ஓ பத்தாது!!! பல ஜே!!!

VSK said...

'ரவி' என்றாலே சூரியன்!
அதிலும் செந்தழல்!

எங்கோ இரவில் மறைந்து , இருளைத் தராமல், செந்தழலாய் எரிக்கும் ஆதவனால்தான் அனைவருக்கும் பயன்!

அது போல இவர் இன்னும் பல வீடுகளில் ஒளி ஏற்றட்டும்!

வாழ்க! வளர்க!

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

Ravikku "Hats off"//

thx Arun...

நாமக்கல் சிபி said...

//வடுவூர் குமார் said...

ஆமாம் பாலாஜி,சரியாகச்சொன்னீங்க.
க்யூவில் நின்னு வந்ததால் அந்த வலி உங்களுக்கு தெரியுது.
//
அதை சொல்லத்தான் இந்த பதிவு.... கஷ்டப்பட்டவர்களுக்கு தான் அவர் செய்யும் பணியின் மகத்துவம் புரியும்...

//
உப்புமா அதைப்பற்றி- எனக்கும் அதே எண்ணம் தான்.3 வது பட்சம் தான்.//
உப்புமா, செய்யறது ரொம்ப சுலபம்... அதனால அடிக்கடி செஞ்சு இப்ப வெறுத்து போச்சி!!!

நாமக்கல் சிபி said...

//dondu(#4800161) said...

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

என்று கூறினார் வள்ளுவப் பெருந்தகை. சிறிய நன்றியே அப்படியென்றால், நம்ம செந்தழல் ரவி செய்யும் பெரிய நன்றி எவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

வாங்க ராகவன் ஐயா,
நீங்க சொல்றது ரொம்ப சரி!!!
அவர் பலருக்கு வாழ்க்கை அமைய பேருதவி சேய்கிறார்...

அதற்கு அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்...

Anonymous said...

ரவி அண்ணா க்கு ஒரு "ஓ"..அவரை பற்றி பதிவு போட்ட V.P க்கு ஒரு "ஓ"... :)
-Anonymous ஸ்னேகிதி.

நாமக்கல் சிபி said...

//ஓகை said...

ரவி செய்து வரும் இந்த வேலை வாய்ப்பு தொண்டு மிகப் பிரமாண்டமானது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஓகை....

Anonymous said...

செந்தழல் ரவிக்கு ஒரு 'ஓ' போட்டுருவோம்..

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கருத்துகள். வாழ்த்துகள் ரவி. இதனால் பல வீடுகளில் இன்பம் பெருகும்.//

ஆமாம் ஜி.ரா....
சத்தியமான வார்த்தைகள்!!!

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

அவருக்குத்தான் நிறையா தடவை வாழ்த்து சொல்லிநாச்சு. உங்க பதிவுல இன்னும் ஒரு முறை.

வாழ்த்துக்கள் ரவி!//

கொத்ஸ்,
எல்லாரும் வாழ்த்து சொன்னதுக்கும் நான் சொல்றதுக்கும் வித்யாசம் இருக்குது...

நான் பட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன்....

Anonymous said...

ஓஓஓஓஒ :))

ஒண்ணு இல்லை, அஞ்சு ஓ போட்டாச்சு :)

நாமக்கல் சிபி said...

//சிந்தாநதி said...

நல்லா புரிய வெச்சிருக்கீங்க
//

அதுக்கு தாங்க இந்த பதிவு...
நட்சத்திரம் இங்கே வந்து மின்னியதற்கு நன்றி!!!

//
//ரவி அண்ணா//

உங்களுக்கு???//
//
ஆமாம்... அவர் என் பள்ளி சீனியர்...

Anonymous said...

//Hats off ரவி அண்ணா!!!//

senshe

Anonymous said...

//Hats off ரவி அண்ணா!!! //

தலை வணங்குகிறேன் தலைவருக்கு !

Ravi ,
Please Keep the good show running forever.

வெட்டி : சுப்பர் Highlight. நன்றி

நாமக்கல் சிபி said...

//ILA(a)இளா said...

கண்டிப்பா பெருசாதான் பண்றார், அவருக்கு எத்தனை முறை வேணுமின்னாலும் நன்றி சொல்லலாம், எவ்வளவு முறை வேணுமின்னாலும் பாராட்டலாம்.//

விவா,
நச்சுனு சொன்னீங்க!!!

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...

ஆர்வத்துடன் தொடர்ந்து செயல்படும் ரவி, இன்னும் பலரை சென்றடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.//

தங்கள் பிரார்த்தனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம்!!!

நாமக்கல் சிபி said...

//SK said...

'ரவி' என்றாலே சூரியன்!
அதிலும் செந்தழல்!

எங்கோ இரவில் மறைந்து , இருளைத் தராமல், செந்தழலாய் எரிக்கும் ஆதவனால்தான் அனைவருக்கும் பயன்!

அது போல இவர் இன்னும் பல வீடுகளில் ஒளி ஏற்றட்டும்!

வாழ்க! வளர்க!//

SK ஐயா,
அவரால நிறைய பேருக்கு வாழ்க்கையில் வெளிச்சம் கிடைக்கும் என்பது நிச்சயம்!!!

கதிர் said...

மாடலிங் மன்னனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

Ravikku "hats off". Jobukaga kashtapattavangaluku Raviyin arumai puriyum.

Raviya pathy pathivu potta vetikku en "nandrigal".

keep it up vets.

Yogen

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

ரவி அண்ணா க்கு ஒரு "ஓ"..அவரை பற்றி பதிவு போட்ட V.P க்கு ஒரு "ஓ"... :)
-Anonymous ஸ்னேகிதி.//

ஓ போட்ட ஸ்னேகிதிக்கு நன்றி!!!

ரவி said...

பதிவுக்கு நன்றி சொல்லிக்கறேன் பாலாஜி !!!

நம்மால ஒருத்தர் வேலைக்கு போய் அந்த சந்தோஷத்தோட போன் செய்யும்போது ஏதோ மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் தான்...உடனே கேட்பேன்...வீட்ல அம்மா / அப்பாகிட்ட சொல்லிட்டயா என்று...சொல்லவில்லை என்றால் முதலில் அவங்களிடம் சொல்லு...சந்தோஷப்படுவாங்க என்பேன்...

நான் வேலைக்கு போன சமயம் அந்த நிறுவனத்தில் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு இல்லை...ஆறு மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய் என்றார்கள்...அப்போ எல்லாம் அங்கே கொடுக்கும் டீ தான் சாப்பாடு...

கல்லூரி முடிந்ததில் இருந்து வீட்ல காசு வாங்க மனது ஒத்துக்கலை...

பி.எஸ்.ஸி முடிந்து வீட்டில் இருந்து, கொஞ்ச நாளில் பொறுக்க முடியாம, ( நாட்டார் கடையில் சிகரெட்டுக்கு வெச்ச 20 ரூ கடனை கட்ட முடியலை) முதல் முதலா ஒரு ப்ரஸ்ஸுக்கு வேலைக்கு போனேன்...ப்ரிண்ட் அவுட் எடுக்க தெரியுமான்னாங்க...!!! அதுவரை மவுசையே தொட்டதில்லை...சும்மா ஒரு வேர்டு டாக்குமெண்டை ஓப்பன் செய்து அப்படியே க்ளிக்கினேன்...பைல் - பிரிண்ட் என்று இருந்தது...

உடனே ஏதோ மேஜிக் மாதிரி - ஏற்கனவே கனெக்ட் ஆகி இருந்த ப்ரிண்டர் - ஹச்.பி லேஸர் ஜெட் - என்று ஒரு படத்தோட - ப்ரிண்டிங் இண்ஸ்டக்ஷனெ ப்ரிண்ட் அவுட் எடுத்தது...

இண்டர்வியூ - பாஸ்...செலக்டட்...இருநூறு ரூவா சம்பளம்...அது தான் முதல் சம்பளம்...ஹி ஹி !!!

அதுக்கப்புறம் வேறிடத்தில் பணிசெய்து, கரஸ்ல எம்.எஸ்ஸி கணிப்பொறி முடித்து, வேலைக்காக சென்னையில் நாயா அலைந்து, ஒரு நல்லவரின் உதவியால் ப்ராஜக்ட் முடித்து, அங்கேயே சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து, பிறகு சொற்ப சம்பளம்...அதுல நன்பர்களுக்கு வேறு சோறு போடனும்...

சென்னையில் ரங்கநாதன் தெருவில் தங்கியிருந்தபோது நடேசன் ஸ்ட்ரீட்ல இருக்கும் ஆந்திரா மெஸ்ல ஒரு வேளை சாப்பாடுதான்...அதே ஆறு பேர்...வாங்கிக்கிட்டு வந்து ரூம்ல காக்கை போல பகிர்ந்து சாப்பிடுவோம்...அதெல்லாம் நியாபகம் வந்து ஒரே ப்பீலிங்ஸ் ஆப் இண்டியாவா போச்சு உங்க பதிவு...

என்னைக்காவது ஒரு நாள் உங்களோட பேசும்போது என்னோட முழு கதையும் சொல்றேன் - அல்லது பதிவா போடுறேன்...

ஆனா என்னன்னே தெரியலை, என்னோட மேட்டர் எல்லாம் எக்ஸ்ப்ளைன் செய்தா கேட்கிறவங்க சிரித்து சிரித்து வயிறெல்லாம் புன்னாயிரும்...சமீபத்தில் முத்து தமிழினிக்கு அந்த அனுபவம்...!!!

என்னோட இ-மெயில் ஐடி மாத்திருங்க zyravi@yahoo.com

அது என்ன zy ? - எனக்கு முதல் முதலில் வேலை குடுத்த கம்பெனி zylog...

:)))))))))))))

ரவி said...

இதுல என்ன கொடுமைன்னா, நான் ஒரு மொக்கையான கொள்கையை வெச்சுக்கிட்டிருக்கேன்...அதாவது, ஏற்கனவே வேலையில் இருக்கறவனுக்கு பாடுபடக்கூடாது...( செய்யலாம், ஜஸ்ட் இமெயில் பார்வேர்ட் செய்யலாம்தான்)....ஆனால் படிச்சுட்டு வேலை இல்லாதவன் தான் என்னோட முதல் ப்ரிபரன்ஸ்...இதான் கொள்கை...

இங்கேதான் இடிக்கும்...என்ன்னன்னா, வேலை இல்லாதவனுக்கு எவனும் வேலை குடுக்கமாட்டான்...எக்ஸ்பீரியன்ஸ் இருக்கா ? பி.இ / எம்.ஸி.ஏ முடிச்சு 2 வருஷம் ஆச்சு, இன்னா பண்ணிக்கிட்டிருந்த ? ( டேய் வேலை தேடிக்கிட்டிருந்தேண்டா - அப்படீன்னு மனசுல தோனும், ஆனா சொல்ல முடியாது)....

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

செந்தழல் ரவிக்கு ஒரு 'ஓ' போட்டுருவோம்..//

தேவ்,
ஒரு ஓ பத்தாது!!!

நாமக்கல் சிபி said...

//பொன்ஸ் said...

ஓஓஓஓஒ :))

ஒண்ணு இல்லை, அஞ்சு ஓ போட்டாச்சு :)//

பொன்ஸக்கா,
அஞ்சு ஓவும் பத்தாது :-)

நாமக்கல் சிபி said...

///சென்ஷி said...

//Hats off ரவி அண்ணா!!!//

senshe//

மிக்க நன்றி senshe...

நாமக்கல் சிபி said...

//சுந்தர் / Sundar said...

//Hats off ரவி அண்ணா!!! //

தலை வணங்குகிறேன் தலைவருக்கு !

Ravi ,
Please Keep the good show running forever.
//
Sundar,
I am sure, he will do it forever...
But we need to support him...

//
வெட்டி : சுப்பர் Highlight. நன்றி//
இது நம்ம கடமை தானே :-))

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

மாடலிங் மன்னனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

ஓ!!! இது வேறையா????

நாமக்கல் சிபி said...

///Anonymous said...

Ravikku "hats off". Jobukaga kashtapattavangaluku Raviyin arumai puriyum.
//
u r absolutely right yogen...

//
Raviya pathy pathivu potta vetikku en "nandrigal".

keep it up vets.

Yogen//

thx a lot...

நாடோடி said...

ஆமா வெட்டி சத்தியமான வார்த்தைகள்.

வேலைக்காக கியுவில் நின்னது,
பைலை தூக்கிகொண்டு பட்டினியில் தெருத்தெருவாக அலைந்தது,
அவமானப்பட்டு துரதப்பட்டது,
சொந்தக்காரன்,ஊர்காரன்,இப்படி பல பேரிடம் நாய்போல் காத்திருந்தது ஒரு சிறு ரெபரஸ்சுக்காக, அதுவும் என்னைபோல் மெக்கானிக்கல் படித்துவிட்டு software மாறுவது என்பது,
இன்னும் பல உள்ளது.
அதுவும ஒரு புரோட்ட சாப்பிட்டு வாழ்ந்த நாட்கள்...

நானும் பலமுறை வேலைக்கு போனபின் என்னைபோல் உள்ளவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன் அல்லது கிடப்பில் போட்டு விட்டேன் என்றே சொல்லலாம்.

Anonymous said...

ஒரு நல்ல சேவையாளருக்கு 'ஓ' போடுவதில் நானும் கலந்து கொள்கிறேன். தமிழ்பதிவுகளுக்கு ஒரு புதிய பாதையை காட்டிய அவர்தம் பணி மிகச் சீரியது.

Anonymous said...

வெட்டி தம்பி, நண்பர் செந்தழல் ரவியுடன் எனக்கு அறிமுகம் இல்லை எனினும் அவரை தொட்டுப்பார்க்காத பிளாக்கர்களே என்பதை அறிந்தபோது அங்கேயும் எட்டி பார்த்தேன்.

கோயில் மாதிரி இருந்தது. ஒரு கும்பிடு போட்டுவிட்டு திரும்பிட்டேன். நம்ம பி.க யெல்லாம் இங்க வச்சிக்கப்படதுடா சாமின்னு ஓடியாந்துட்டேன்.

"செந்தழல் ரவி வசூல் செய்த அமவுன்ட் என்ன ஆனது?"அப்டீன்னு லக்கி பதிவு போடுறார்.

"குங்குமத்தில் செந்தழல் ரவி"ன்னு பதிவு வருது.

"செந்தழல் ரவி என்னத்த பெருசா செய்யறார்???" ன்னு நீங்க பதிவு போடறீங்க.உடனே மாங்கு மாங்குன்னு 40 பின்னூட்டம் பொல பொலன்னு கொட்டுது.

மகாலெஷ்மிக்கு கல்வி கண் விஷயம், இப்படியாக படிப்படியாக திரு.ரவி என் முன்னே நா.ஆ மாதிரி நிற்கிறார்.

சந்தோஷமாக அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் போல் பலரும் அவரின் சேவையை பாராட்ட வாய்ப்பளித்த தம்பி வெட்டிக்கும் பாராட்டுகள்.

இப்படிக்கு அபி அப்பா.

Anonymous said...

இந்த காலத்துல இப்படி ஒருத்தரா? நல்மணம் கொண்ட ரவிக்கு வணக்கங்கள்...

அவரின் பெருமையை மக்களுக்கு தெரியபடுத்தியதற்கு வெட்டிபயலுக்கு நன்றி...

ரவி said...

அதே சமயம், இந்த விஷயத்தை அங்கீகரித்து, தமிழ்மணத்தில் இடமும் ஒதுக்கித்தந்துந்துள்ள தமிழ்மணத்தை எவ்ளோ பாராட்டினாலும் தகும்..!!!

கார்த்திக் பிரபு said...

sooper padhivu nan innaiku kuda ravi ku oru company oda openings parriya mails anupinane..

ravi oda indha padhivai nan thinamum padipane..en frend kum mail anupuvane..valga ravi valarga vetti

Hariharan # 03985177737685368452 said...

ரவி வாழ்க!
ரவியின் இந்தச்சேவை தொடர வாழ்த்துக்கள்.

நல்ல சலனங்களை மக்கள் மனதில் ஏற்படுத்தும் இந்தப் பதிவிட்ட வெட்டிப்பயல் பாலாஜி வாழ்க!

Anonymous said...

மேன்மேலும் சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள் ரவி!!

Siva said...

வாழ்த்துக்கள் ரவி...
அறிமுகப்படுத்திய VP க்கும் நன்றி..

Anonymous said...

ரவிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அருமையான பதிவு இட்ட பாலாஜிக்கும் ஒரு ஓ!!!!!

கோபிநாத் said...

செந்தழல் ரவி அவர்களுக்கு
என் உளமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...
வாழ்க பல்லாண்டு...வாழ்க...

உங்களுக்கும் என் நன்றிகள் வெட்டி...

Anonymous said...

செயல் வீரன் செந்தழல் வாழ்க

Anonymous said...

செந்தழல் ரவி,

செயலில் அரபிப்புரவி.

நாமக்கல் சிபி said...

ரவி அண்ணா,
இந்த பதிவு நான் நட்சத்திர வாரத்துல போடனும்னு நினைச்சேன். நீங்க செய்யற பணியோட முக்கியத்துவம் எனக்கு தெரியும். ஆனா அந்த வாரம் நீங்க மகாலட்சுமிக்கு உதவ ஆரம்பிச்சதால இது அவ்வளவா மக்களை போய் சேராதுனு தான் பொறுமையா போடறேன்...

இப்பவும் எங்க ரூம்ல வேலை தேடற கூட்டம் ஒண்ணு இருக்கு. அதுல உள்ள நெளிவு சுளிவு எல்லாம் எனக்கும் தெரியும். நீங்க சொன்னதெல்லாம் நாங்களும் பண்ணோம்.

//( டேய் வேலை தேடிக்கிட்டிருந்தேண்டா - அப்படீன்னு மனசுல தோனும், ஆனா சொல்ல முடியாது//
இதே பிரச்சனை தான் எல்லா இடத்திலும்.

ஒருத்தனுக்கு வேலை கிடைச்சா அந்த ஏரியாவே திருவிழாதான்... ஆனா நான் கேக்கற குருதட்சினை மட்டும் கொஞ்சம் வித்யாசமானது... தம் அடிக்கறவனா இருந்தா அதை விட்டடனும். அவ்ளோ தான்...

உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

செந்தழலாருக்கும் அவரது பதிவை முகப்பில் காட்டும் தமிழ்மணத்திற்கும் பாராட்டுக்கள்.

நாமக்கல் சிபி said...

//நாடோடி said...

ஆமா வெட்டி சத்தியமான வார்த்தைகள்.

வேலைக்காக கியுவில் நின்னது,
பைலை தூக்கிகொண்டு பட்டினியில் தெருத்தெருவாக அலைந்தது,
அவமானப்பட்டு துரதப்பட்டது,
சொந்தக்காரன்,ஊர்காரன்,இப்படி பல பேரிடம் நாய்போல் காத்திருந்தது ஒரு சிறு ரெபரஸ்சுக்காக, அதுவும் என்னைபோல் மெக்கானிக்கல் படித்துவிட்டு software மாறுவது என்பது,
இன்னும் பல உள்ளது.
அதுவும ஒரு புரோட்ட சாப்பிட்டு வாழ்ந்த நாட்கள்...
//
நாலோடி,
நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை!!!
அந்த சமயத்தில் வேலையிலிருக்கும் யாராவது நம்மை ஓட்டினாலும் நமக்கு வேலையில்லாத காரணத்தாலே அப்படி பேசுகிறார்கள் என்று தோன்றும்...

சொந்தக்காரர்களை பார்க்கவே பயந்து நான் ஆறு மாதம் பெங்களூரிலிருந்தேன்.

கஷ்டம் அனுபவித்தவனுக்குத்தான் வலி தெரியும்!!! இந்த Reference தான் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது...

மக்களே இது Recommendation இல்லை... இதற்கு பிறகு தான் 3 - 4 ரவுண்ட் தேர்வு நடக்கும். இதில் நம்மை ரவுண்டு கட்டி அடித்துதான் வேலைக்கு எடுப்பார்கள்!!!

//
நானும் பலமுறை வேலைக்கு போனபின் என்னைபோல் உள்ளவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன் அல்லது கிடப்பில் போட்டு விட்டேன் என்றே சொல்லலாம். //
இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை... உங்கள் கம்பெனியில் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால் ரவி அண்ணாவிற்கு தெரிவிக்கலாம்...

நாமக்கல் சிபி said...

//மணியன் said...

ஒரு நல்ல சேவையாளருக்கு 'ஓ' போடுவதில் நானும் கலந்து கொள்கிறேன். தமிழ்பதிவுகளுக்கு ஒரு புதிய பாதையை காட்டிய அவர்தம் பணி மிகச் சீரியது. //

ஆமாம் மணியன்...
இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு...
Also Action speaks louder than words...

நாமக்கல் சிபி said...

அபி அப்பா,
அவர் பணியுன் மகத்துவம் புரிய வைக்கவே இந்த பதிவு. கஷ்டப்பட்டவர்களுக்கு அது தானகவே புரியும்...

மற்ற நபர்களுக்கு அவர் செய்வது காபி, பேஸ்ட் போல் தோன்றும்... எனக்கு ஆறு மாசத்துல வேலை கிடைச்சாலும் என் நண்பர்களுக்காக தேடி எனக்கு வேலை தேடுவதிலேயே மூன்று ஆண்டுகள் அனுபவமிருக்கிறது...

அதுவும் டெஸ்டிங்கில் எப்படி வேலை வாங்குவது என்று அவர் போடும் பதிவு அதிலும் அருமை!!!

என் ரூமில் டெஸ்டிங்கில் வேலை வாங்கியவர்கள் அதிகம்... They are almost into all MNCs...

நாமக்கல் சிபி said...

//k4karthik said...

இந்த காலத்துல இப்படி ஒருத்தரா? நல்மணம் கொண்ட ரவிக்கு வணக்கங்கள்...
//
ஆமாம் கார்த்திக்...
ரவி அண்ணா ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட... அந்த முகம் தான் தமிழ் மணத்தில் பலருக்கு தெரிந்த முகம்... ஆனா இந்த நல்ல உள்ளம் இப்பொழுதுதான் பலருக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது!!!

// அவரின் பெருமையை மக்களுக்கு தெரியபடுத்தியதற்கு வெட்டிபயலுக்கு நன்றி... //
நான் சும்மா சூரியனுக்கு டார்ச் அடிக்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//செந்தழல் ரவி said...

அதே சமயம், இந்த விஷயத்தை அங்கீகரித்து, தமிழ்மணத்தில் இடமும் ஒதுக்கித்தந்துந்துள்ள தமிழ்மணத்தை எவ்ளோ பாராட்டினாலும் தகும்..!!! //

ஆமாம் ரவி அண்ணா...
அதிலும் முதல் பக்கத்தில் அதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது!!!

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

sooper padhivu nan innaiku kuda ravi ku oru company oda openings parriya mails anupinane..

ravi oda indha padhivai nan thinamum padipane..en frend kum mail anupuvane..valga ravi valarga vetti //

கார்த்திக்,
ரொம்ப சந்தோஷம்...
தொடர்ந்து உன்னாலான உதவிகளை செய்யவும்...

நாமக்கல் சிபி said...

//Hariharan # 26491540 said...

ரவி வாழ்க!
ரவியின் இந்தச்சேவை தொடர வாழ்த்துக்கள்.

நல்ல சலனங்களை மக்கள் மனதில் ஏற்படுத்தும் இந்தப் பதிவிட்ட வெட்டிப்பயல் பாலாஜி வாழ்க! //

மிக்க நன்றி ஹரிஹரன்...
பல இடங்களில் ரவியை பாராட்டுகிறார்கள். அதனால் ஒரு சிலருக்கு மனதில் கேள்வி எழக்கூடும். அதை போக்கவே இந்த பதிவு!!!

Unknown said...

ரொம்ப கரெக்ட் பாலாஜி...அனுபவிச்சா தான் அதன் வலி புரியும்.! யாராச்சும் ஹெல்ப் பன்னுவாங்களான்னு ஏங்குற மனசுக்கு ஒரு சின்ன வார்த்தை எவ்வளவு உற்சாகம் தரும் என்பது நிறைய பேர் உணர்ந்து இருப்பாங்க...

இப்படி ஒரு சிலர் செயற நல்ல காரியம் இந்த மாதிரி பதிவுல அவங்களுக்கு மேலும் ஊக்கம் தரும்..நல்ல பதிவு! செந்தழல் ரவி செய்கிற இந்த நல்ல காரியம் தொடரனும்..அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

எல்லாத்துக்கும் ஒரு இனிஷியல் புஷ் தேவை..கண்டிப்பா அத வச்சு தான் இன்னிக்கு பெரிய ஆளா ஆகி இருப்பாங்க..மறந்தவங்க நியாபகபடுத்தி பாருங்க.!

வெற்றி said...

வெட்டி,
பதிவுக்கு நன்றி.

செந்தழல் ரவிக்கு என் வாழ்த்துக்கள்/பாராட்டுகள்/நன்றிகள்.

Anonymous said...

நண்பர் ரவிக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.

Anonymous said...

/எல்லாத்துக்கும் ஒரு இனிஷியல் புஷ் தேவை.கண்டிப்பா அத வச்சு தான் இன்னிக்கு பெரிய ஆளா ஆகி இருப்பாங்க./
ஆமா ஆமா சரியா சொன்னீங்க. இன்னிக்கு ஜிடபிள்யூ பிரசிடெண்டா இருக்காருன்னா, அவருக்கு இருக்குற இனிஷியல் புஷ் தான் காரணமாக்கும்.

ஏதோ இந்த பதிவுக்கு என்னாலான பின்னூட்டக்கயமை :)

Syam said...

இந்த template நல்லா இருக்கு வெட்டி...ஆனா comment section ல தான் பேர் எல்லாம் இப்படி தெரியுது...


இலவசக்கொத்தà®

Syam said...

இந்த பதிவ பத்தி ஒரு கமெண்ட் நேத்து போட்டேன் அத கானோம்?

Unknown said...

செந்தழல் ரவியென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

Anonymous said...

appavum vetti, ippovum vettiya?

vazhthukkal!

Anonymous said...

AAAAAAHHHHHH!!!! ICE! hm!! COLD!!

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

appavum vetti, ippovum vettiya?

vazhthukkal! //

எலேய்,
இங்க கமெண்ட்டுக்கே பதில் சொல்ல முடியாம கஷ்டப்படறது எனக்கு தான் தெரியும்...

எழுதறது பிடிச்சிருக்கேனு தொடர்ந்து எழுதிட்டு இருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

AAAAAAHHHHHH!!!! ICE! hm!! COLD!! //

நண்பரே,
அவருக்கு நான் ஐஸ் வைக்க தேவையில்லை... அவர் என் ஸ்கூல் சீனியர் தான்.

எனக்கு அவரோ, அவருக்கு நானோ பெருசா பின்னூட்டம் கூட போட்டுக்கறதில்லை...

அவர் செய்யும் காரியும் மிக சிறந்ததாக பட்டது. அதனால் அதை பதிவிட்டுள்ளேன்...

காலைல இருந்து ராத்திரி வரைக்கும் க்யூல நின்னு இண்டர்வியூ அட்டண்ட் பண்ணாம வந்தா உங்களுக்கு அந்த வலி தெரியும்...

இத்தனைக்கும் என் பர்செண்டேஜ் 80%

எந்த ப்ராக்டிக்கலிலும் 90 கீழ நான் எடுத்ததில்லை (எங்க க்ளாஸ்ல 90க்கு மேல எல்லா லேப்லையும் எடுத்த ஒரே ஆள் நான் தான்... காக்க பிடிச்சி இல்லை. என் இண்டர்னல் மார்க் படு கேவலமாத்தான் இருக்கும்)

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா... நல்லா படிச்சிம் ஒரு இண்டர்வியூ கூட அட்டெண்ட் பண்ண முடியலையேனு ஒரு விரக்திதான்...

நீங்க அவர் செய்யற காரியத்தை செய்யுங்க.. இதை விட பெருசா ஒரு போஸ்ட் நான் போடறேன்...