தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 19, 2007

அம்மா!!!

அம்மா
நீ என்ன அன்னப்பறவையா???
நான் செய்த தொந்தரவுகளை
மறந்துவிட்டு குறும்புகளை மட்டுமே
உன் மனதில் சேமித்து வைத்திருக்கிறாய்!!!

இருபது ஐட்டங்கள் இருக்கும் பஃபே
இருநூறில் சாப்பிட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லை
நீ செய்யும் ரசத்தின் சுவையை கூட!!!

நீ என் மீது வைத்திருக்கும்
அன்பின் அடியையும் முடியையும்
காண நான்முகன் நாராயணனோடு
ஈசனும் சேர்ந்துவிட்டானாம்...
தோல்வி உறுதி என்று தெரிந்தும்கூட!!!

நாத்திகம் பேசுபவர்கள்
கடவுளை பார்த்திருக்கிறாயா
என்று கேட்கும் போது
நான் சொல்வது
என் தாயை வந்து பார் என்று!!!

நான் சர்வாதிகாரியானால்
அன்பு என்ற வார்த்தையை
அகராதியிலிருந்து நீக்கிவிட்டு
அம்மா என்று மட்டுமே பயன்படுத்த
ஆணையிட்டிருப்பேன்...

ராமனுக்கு பதினான்கு ஆண்டுகள்
வனவாசம் எவ்வளவு கொடியது
என்று உன்னை பார்க்காத இந்த
ஒரு ஆண்டிலே புரிந்து கொண்டேன்!!!

66 comments:

Anonymous said...

வெட்டி என்னய்யா இதெல்லாம்????

வர வர over sentiயா போயிட்டே இருக்கீங்க!!!!!!!!!!

// நான் சார்வாதிகாரியானால் //

சர்வாதிகாரியானால் :)))

Anonymous said...

குறும்பகளை - குறும்புகளை
இருநூரில் - இருநூறில்
ஆணையிட்டுருப்பேன் - ஆணையிட்டிருப்பேன்

"அன்னையும் தந்தையும்தானே...
பாரில் அண்ட சராசரம் கண் கண்ட தெய்வம்..."
பாடலை திரையில் பாடியவரை கண்டு பிடிக்கவும் :))

இலவசக்கொத்தனார் said...

ஹோம்சிக், அதுனால கவுஜ? ஹச்சூ!ஹச்ச்சூ!

Anonymous said...

என்ன வெட்டி...

கவுஜ எழுத தெரியாதுன்னு சொல்லி... இப்படி பின்னி பெடல எடுக்குறீங்க...

Santhosh said...

நிஜத்தின் வரிகள், பிரிவின் சோகம், பாசத்தின் அடையாளம் நல்ல கவிதை வெட்டி. நிறைய பேருக்கு கவிதை வருவதில்லை அதனால் மனதினுள் சொல்கிறார்கள் :))

Anonymous said...

:(
:)

Anonymous said...

Good, but missing the punch :)

btw, did your folks get the acknowledgement from Udhavum Karangal ?

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...

வெட்டி என்னய்யா இதெல்லாம்????

வர வர over sentiயா போயிட்டே இருக்கீங்க!!!!!!!!!!

// நான் சார்வாதிகாரியானால் //

சர்வாதிகாரியானால் :)))//

இ.அரசி,
திடீர்னு எழுதனும்னு தோனுச்சி...
நல்லா இல்லையா???

நாமக்கல் சிபி said...

///அரை பிளேடு said...

குறும்பகளை - குறும்புகளை
இருநூரில் - இருநூறில்
ஆணையிட்டுருப்பேன் - ஆணையிட்டிருப்பேன்
//
மிக்க நன்றி!!!
மாத்திவிட்டேன்

//
"அன்னையும் தந்தையும்தானே...
பாரில் அண்ட சராசரம் கண் கண்ட தெய்வம்..."
பாடலை திரையில் பாடியவரை கண்டு பிடிக்கவும் :))//
இந்த பாட்டு எந்த படம்???

நாமக்கல் சிபி said...

//இலவசக்கொத்தனார் said...

ஹோம்சிக், அதுனால கவுஜ? ஹச்சூ!ஹச்ச்சூ!//

கொத்ஸ்,
என்ன செய்ய?
எப்பவுமே ஞாபகம் இருக்கு... ஆனா இப்ப கொஞ்சம் அதிகமாயிடுச்சி :-(

நாமக்கல் சிபி said...

//ஜி said...

என்ன வெட்டி...

கவுஜ எழுத தெரியாதுன்னு சொல்லி... இப்படி பின்னி பெடல எடுக்குறீங்க...//

ஐயய்யோ!!!
இது கவிதை எல்லாம் இல்லை...
சும்ம உடைச்சி உடைச்சி எழுதியிருக்கேன்...

( எல்லாம் ஒரு முயற்சிதான்... அது ஏன் நமக்கு வராதுனு)

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

நிஜத்தின் வரிகள், பிரிவின் சோகம், பாசத்தின் அடையாளம் நல்ல கவிதை வெட்டி. நிறைய பேருக்கு கவிதை வருவதில்லை அதனால் மனதினுள் சொல்கிறார்கள் :))//

ஆமாம் சந்தோஷ்...
அமெரிக்காவிலிருப்பதை விட அம்மாவுடன் இருப்பதே சந்தோஷம்...

ஆனால்...

நாமக்கல் சிபி said...

//Udhayakumar said...

:(
:)//

வாங்க சவுண்ட் பார்ட்டி!!!
ரொம்ப நாளா ஆளையே காணொம்!!!

கவிதை எழுதினா தான் வருவீங்களா???

நாமக்கல் சிபி said...

//SurveySan said...

Good, but missing the punch :)
//
Surveysan,
This is my first attempt for kavithai... hope i will improve in the future...

//
btw, did your folks get the acknowledgement from Udhavum Karangal ?//
Yeah!!! we got it and I have mailed u regarding that... Didn't u get that?

Anonymous said...

//Yeah!!! we got it and I have mailed u regarding that... Didn't u get that? //

Great! I am glad. i just saw the email. thx.

keep writing kavidhai's - its more challenging that writing prose. SK, Shailaja are the pioneers that I know of.

வெற்றி said...

வெட்டி,
அருமையான பொருள் நிறைந்த கவிதை. அம்மா, வாழும் தெய்வம்.

இப்போ நான் பெரியவனக வளர்ந்து விட்டேன். ஆனாலும் வீட்டுக்குப் போனால் "குளிராமல் நல்ல உடுப்பு போடுக்கொண்டு போ", "மழைக்கே நனையாதை" என்று அன்று காட்டிய அதே பாசத்தோடு அரவணைப்பவர்.
அம்மா பற்றிச் சொல்ல எனக்கு தமிழில் புலமை இல்லை.

Anonymous said...

//உன்னை பார்க்காத இந்த
ஒரு ஆண்டிலே புரிந்து கொண்டேன்!!!//
உண்மைதான் வெட்டி. உங்க மனசொட வலியை நல்லா சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இதை உங்கம்மா படிக்க வைங்க
இளா

Anonymous said...

// இ.அரசி,
திடீர்னு எழுதனும்னு தோனுச்சி...
நல்லா இல்லையா???
//

அய்யோ நான் நல்லா இல்லைனு சொல்லல வெட்டி.

ரொம்ப சூப்பரா இருக்கு :)))))

ஆமா உங்களுக்கு கவிதை வராதுன்னு யார் சொன்னது??!!!!!!!!

இவ்ளோ நல்லா எழுதறிங்க.......

keep it up :)))

Anonymous said...

பாலாஜி,

கவிதை நல்லாயிருக்குப்பா.....

Anonymous said...

பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....

ஓடிவா... ஓடிவா.... ஓடிவா...

Anonymous said...

ம்ம்..nice .அம்மா கிட்ட படிச்சுக் காமிச்சாச்சா
என்ன சொன்னாங்க?

கோபிநாத் said...

வெட்டி..
அருமையான கவிதை....கலக்கிட்டீங்க....

\\இருபது ஐட்டங்கள் இருக்கும் பஃபே
இருநூறில் சாப்பிட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லை
நீ செய்யும் ரசத்தின் சுவையை கூட!!!\\\

பின்னிட்டீங்க...

\\ராமனுக்கு பதினான்கு ஆண்டுகள்
வனவாசம் எவ்வளவு கொடியது
என்று உன்னை பார்க்காத இந்த
ஒரு ஆண்டிலே புரிந்து கொண்டேன்!!!\\

அருமை...நல்லா எழுதறிங்க....

Anonymous said...

கவித ஆரம்பிக்கும்போதே அம்மா பேருல ஆரம்பிக்கிறீங்க... இனி தொடர்ந்து பல நல்லக் கவிதைகளை எதிர்பார்க்கலாம்...

Anonymous said...

beauty beauty beauty beauty

ungalukka kavidhai na pidikkaadhu/puriyaadhu?? :-)

வல்லிசிம்ஹன் said...

பாலாஜி,
ஒரு அம்மா தன் குழந்தையை
விட்டாள். இப்போது இங்கே
ஒரு குழந்தைப் பார்க்க ஆசைப் படுகிறது.
அம்மாவை வரச் சொல்லிக் கூப்பிடுங்கள். உங்களால் போக முடியாவிட்டால் அவர்கள் வரட்டும்.
அம்மாவுக்கு வேறு பெயர் வைக்க முடியாது.
அம்மா அம்மாதான்.

கப்பி | Kappi said...

ம்ம்ம்..


[
ம்ம் போடறது ஒரு பின்னூட்டமான்னு துப்பக்கூடாது...பீலிங்க்ஸ் :)))
]

நாமக்கல் சிபி said...

//
//SurveySan said...

//Yeah!!! we got it and I have mailed u regarding that... Didn't u get that? //

Great! I am glad. i just saw the email. thx.
//
np...
I am thankful to u...

//
keep writing kavidhai's - its more challenging that writing prose. SK, Shailaja are the pioneers that I know of//
yeah... I know that...
Its really tough to write kavithais..

but this one is just from heart... so didnt work too much for this...

நாமக்கல் சிபி said...

//வெற்றி said...

வெட்டி,
அருமையான பொருள் நிறைந்த கவிதை. அம்மா, வாழும் தெய்வம்.

இப்போ நான் பெரியவனக வளர்ந்து விட்டேன். ஆனாலும் வீட்டுக்குப் போனால் "குளிராமல் நல்ல உடுப்பு போடுக்கொண்டு போ", "மழைக்கே நனையாதை" என்று அன்று காட்டிய அதே பாசத்தோடு அரவணைப்பவர்.
அம்மா பற்றிச் சொல்ல எனக்கு தமிழில் புலமை இல்லை.

12:29 PM//

வெற்றி,
அம்மாவிற்கு பிள்ளைகள் எவ்வளவு வயதானாலும் குழந்தைகளே!!!

என் பாட்டி எங்க மாமாவிற்கு (60 வயசிருக்கும்) சாப்பாடு போடுவதும், கவனிச்சிக்கறதையும் நாங்க நிறைய தடவை ஓட்டியிருக்கோம்... ஆனா அந்த பாசம் உண்மையானதே!!!

நாமக்கல் சிபி said...

//Anonymous said...

//உன்னை பார்க்காத இந்த
ஒரு ஆண்டிலே புரிந்து கொண்டேன்!!!//
உண்மைதான் வெட்டி. உங்க மனசொட வலியை நல்லா சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இதை உங்கம்மா படிக்க வைங்க
இளா//

இளா,
நண்பர்களிடம் சொல்லி வீட்டுக்கு அனுப்ப சொல்லலாம்னு இருக்கேன்!!!

ஆனா நான் சொல்லியிருப்பது கோடியில் ஒரு பங்கு கூட இல்லை...

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...

// இ.அரசி,
திடீர்னு எழுதனும்னு தோனுச்சி...
நல்லா இல்லையா???
//

அய்யோ நான் நல்லா இல்லைனு சொல்லல வெட்டி.

ரொம்ப சூப்பரா இருக்கு :)))))

ஆமா உங்களுக்கு கவிதை வராதுன்னு யார் சொன்னது??!!!!!!!!

இவ்ளோ நல்லா எழுதறிங்க.......

keep it up :)))//

மிக்க நன்றி இ.அரசி...

இது அம்மாவை பத்தி இருக்கறதால சாதாரணமா இருந்தாலே ரொம்ப சூப்பரா இருக்கற மாதிரி தெரியும்...

முதல் அடி எடுத்து வெச்சிருக்கேன்...
அதிகமா தொந்தரவு கொடுக்க மாட்டேன்!!!

கதைல எப்பவாவது பயன்படுத்த தெரியனுமேனு பாக்கறேன்!!!

நாமக்கல் சிபி said...

//இராம் said...

பாலாஜி,

கவிதை நல்லாயிருக்குப்பா.....//

மிக்க நன்றி ராயல்...

நாமக்கல் சிபி said...

//சுந்தரா ட்ராவல்ஸ் said...

பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....
பாஸ்டன் டூ கள்ளக்குறிச்சி....

ஓடிவா... ஓடிவா.... ஓடிவா...//

இந்த மாதிரி ஏதாவது இருந்தா உடனே ஓடி வந்துடுவேனே!!!

நாமக்கல் சிபி said...

//லட்சுமி said...

ம்ம்..nice .அம்மா கிட்ட படிச்சுக் காமிச்சாச்சா
என்ன சொன்னாங்க?

//

இல்லைங்க...\
இன்னும் படிச்சி காமிக்கல...
நண்பர்கள் யாரிடமாவது சொல்லி ப்ரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப சொல்லனும்...

நாமக்கல் சிபி said...

//கோபிநாத் said...

வெட்டி..
அருமையான கவிதை....கலக்கிட்டீங்க....

\\இருபது ஐட்டங்கள் இருக்கும் பஃபே
இருநூறில் சாப்பிட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லை
நீ செய்யும் ரசத்தின் சுவையை கூட!!!\\\

பின்னிட்டீங்க...
//
மிக்க நன்றி!!!

\\ராமனுக்கு பதினான்கு ஆண்டுகள்
வனவாசம் எவ்வளவு கொடியது
என்று உன்னை பார்க்காத இந்த
ஒரு ஆண்டிலே புரிந்து கொண்டேன்!!!\\

அருமை...நல்லா எழுதறிங்க....//

மிக்க நன்றி கோபிநாத்...

நாமக்கல் சிபி said...

//ஜி said...

கவித ஆரம்பிக்கும்போதே அம்மா பேருல ஆரம்பிக்கிறீங்க... இனி தொடர்ந்து பல நல்லக் கவிதைகளை எதிர்பார்க்கலாம்...

//

ஜி,
அம்மாவை நினைச்சதால தான் கவிதையே ரொம்ப சுலபமா வந்துச்சி..
கண்டிப்பா இன்னும் முயற்சி செய்வேன்!!!

நாமக்கல் சிபி said...

//CVR said...

beauty beauty beauty beauty

ungalukka kavidhai na pidikkaadhu/puriyaadhu?? :-)//

என்னங்க தலைவா இப்படி கேக்கறீங்க...
எனக்கு கவிதை அதிகமா புரியாது... யாராவது விளக்கினாத்தான்

சரி வராதுனு சொல்றதைவிட இறங்கி தான் பார்ப்போமேனு தான் இந்த முயற்சி...

நாமக்கல் சிபி said...

//வல்லிசிம்ஹன் said...

பாலாஜி,
ஒரு அம்மா தன் குழந்தையை
விட்டாள். இப்போது இங்கே
ஒரு குழந்தைப் பார்க்க ஆசைப் படுகிறது.
அம்மாவை வரச் சொல்லிக் கூப்பிடுங்கள். உங்களால் போக முடியாவிட்டால் அவர்கள் வரட்டும்.
அம்மாவுக்கு வேறு பெயர் வைக்க முடியாது.
அம்மா அம்மாதான்.//

வல்லி அம்மா,
அம்மா இங்க வரதுக்கெல்லாம் ஆசைப்பட மாட்டாங்க... எப்படியும் நான் சீக்கிரம் ஊருக்கு போயி அம்மாவை பார்ப்பேன்...

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

ம்ம்ம்..


[
ம்ம் போடறது ஒரு பின்னூட்டமான்னு துப்பக்கூடாது...பீலிங்க்ஸ் :)))
]//

நீதான் சீக்கிரம் போக போறியே... அப்பறமென்னப்பா???

Unknown said...

அருமையான கவிதை...அம்மா என்றும் அம்மா தான்!..மேலும் எழுதவும்..

Anonymous said...

hi bala

deepak again.. the nice thing about your blog is ,it never disappoints even if it doesnt match our expectation..

some of your blogs are exceptional some are good types

Anonymous said...

hi balaji

deepak again, the nice things about your blog is it never disappoints even if it fails to keep up the expectations.. some of your blogs are exceptional.. some are good ones.. this current blog falls in the second category

Anonymous said...

அம்மா, நீ ஒரு ராட்ஷசி. என்னமாய் தொடையை பிடித்து த்திருகுவாய்.தப்பி ஓடும் என்னை தாவிப்பிடித்து உன் கைகளை தண்ணியில் நனைத்து என் முதுகில் அறைவாய். நான் ஆனந்து வீட்டில் பிறந்து இருக்கலாம். ஜாலியா இருந்திருக்கும்.(ஆனந்துக்கு அம்மா அப்பவே செத்து போயிட்டாங்க!!!)-----இதெல்லாம் என் 10 முதல் 15 வயதில்...இப்போது நினைத்து பார்க்கிறேன்... சே..எவ்வளவு முரட்டுதனம் என்னிடம்.உன் ட்ரீட்மென்ட் என் விஷயத்தில் ரொம்ப சரி.இல்லாவிடில் இப்போது நான் ஒரு பொய்யனாகவோ, திருடனாகவோ,சமூகத்துக்கு தேவையற்றவனாகவோ இருந்திருப்பேன். 4 மாதம் முன்பு நான் விடுமுறைக்காக வந்த போது நிறைய நேரம் உன் மடியில் தலை வைத்து ஆசைதீர படுத்திருந்தேன். உன் வாசனை மாறவேயில்லை. உன் கைக்கு மட்டும் எப்படி அந்த பொசபொசப்பு. உன் சேலைக்கு மட்டும் எப்படி அந்த வழவழப்பு. அடுத்த விடுமுறைக்காய் இன்று முதலே கவுன்ட் டவுன் ஆரம்பித்துவிட்டது. ஆரம்பித்து வைத்த புண்ணியவான்கள் வெட்டி தம்பியும், துபாய்"தம்பி"யும்

Anonymous said...

நாத்திகம் பேசுபவர்கள்
கடவுளை பார்த்திருக்கிறாயா
என்று கேட்கும் போது
நான் சொல்வது
என் தாயை வந்து பார் என்று!!!

:)

G.Ragavan said...

வெட்டி...என்னடா பதிவு என்று பார்க்கும் பொழுதே 43 பின்னூட்டங்கள். பின்னூட்ட இளவரசன் என்று உனக்குப் பட்டம் கொடுக்கிறேன். வாழ்க. வளர்க.

அம்மா....அவளைப் பற்றி என்ன சொல்வது. எல்லாப் பாசங்களையும் பந்தங்களையும் துறந்தார் ஒருவர். அவரால் துறக்க முடியாதது அம்மா. இருக்கின்ற சொத்து சுகங்களையெல்லாம் விட்டுப் பரதேசியாகப் போகப் போனார். அப்பொழுது அம்மா கேட்டார். "மகனே துறவியாகப் போகிறாயே. உனக்குரிய கடமைகளைச் செய்து விட்டாயா?"

அவரும் சொத்து சேர்த்ததையும் மனைவிக்குக் கணவனாகிக் குழந்தை கொண்டதையும்...அந்தப் பெண் இன்னும் வாழச் செல்வம் வைத்திருப்பதையும் சொன்னார்.

அப்பொழுது துறவியாக புது வேட்டி தந்த அந்த அம்மா கேட்டார்..."மகனே....எனக்கு இன்னும் கொள்ளி போடவில்லையே அப்பா!"

அந்தக் கடமைக்காக தன்னுடைய ஊரெல்லையைக் கூடத் தாண்டாமல் இருந்தார். செய்தி வந்தது. கலங்கிப் போனார். காய்ந்த விறகுகளின் மீதும் வறட்டிகளின் மீதும் கிடத்தியிருந்தார்கள். அவைகளையெல்லாம் அப்புறப் படுத்தி விட்டு வாழை மட்டைகளில் மெத்தெனப் படுக்க வைத்தார். பாடினார்....கண்ணீர் உகுத்துப் பாடினார்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெத்துப்
பையல் என்ற போதே பரிந்தெடுத்து
என்றெல்லாம் பாடி...எப்பிறப்பில் காண்பேன் இனி என்று கதறுகிறார். இங்கு ஒரு சூட்சுமம் உள்ளது. அடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பட்டினத்தடிகள் தமக்கு அடுத்த பிறவி கிடையாது என்று அறிந்தவர். ஆகையால்தான்...இத்தோடு முடியப் போகும் அந்த உறவை நினைத்து நினைத்து கதறுகிறார். வாழைமட்டை பற்றி எரிகிறது. அவராலேயே பெற்ற அன்னையை உதற முடியவில்லையே....நாமெல்லாம்!

Anonymous said...

kalaketeenga V.P :)
-Anonymous ஸ்னேகிதி.

Arunkumar said...

kavithayilum kalakkureenga vetti. bostonukku parentsa koopidunga.

Anonymous said...

ஊருக்கு போயிட்டு வாங்க அப்பு...

- உண்மை

Anonymous said...

சேயுள்ளமே இப்படியெனில், தாயுள்ளம் எப்படியோ!!!

நாமக்கல் சிபி said...

//தமிழ்ப்பிரியன் said...

அருமையான கவிதை...அம்மா என்றும் அம்மா தான்!..மேலும் எழுதவும்.. //

மிக்க நன்றி சங்கர்...
கண்டிப்பாக முயற்சி செய்யறேன்...

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

hi bala

deepak again.. the nice thing about your blog is ,it never disappoints even if it doesnt match our expectation..

some of your blogs are exceptional some are good types //

Hi Deepak,
Thx a lot...

I am an amateur blogger trying to write different types of articles...

All the credits goes to my fellow bloggers who consistently support me...

நாமக்கல் சிபி said...

abi appa,

நானும் உங்களை மாதிரியே அம்மா கூட சண்டை போட்ட சமயங்கள் எல்லாம் உண்டு...

உங்களுக்கு பொண்ணு தான் முக்கியம்னு பனிரெணாவது படிக்கும் போது போய் மொட்டை மாடில படுத்துக்கிட்டு வீட்டுக்கு வர மாட்டேன்னு சண்டை போட்டிருக்கேன்...

அதை நினைச்சா இப்ப சிரிப்பா வருது :-)

நீங்க ஊருக்கு போறதுக்கு நான் ஒரு காரணம்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...

அப்பறம் தம்பியும் எங்க ஊர்க்காரர்தான்... இன்னும் அவர் பதிவ நான் படிக்கல...

நாமக்கல் சிபி said...

//தேவ் | Dev said...

நாத்திகம் பேசுபவர்கள்
கடவுளை பார்த்திருக்கிறாயா
என்று கேட்கும் போது
நான் சொல்வது
என் தாயை வந்து பார் என்று!!!

:) //

போர்வாள்,
நல்லா இருக்கானு சொல்லவேயில்லையே?

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

வெட்டி...என்னடா பதிவு என்று பார்க்கும் பொழுதே 43 பின்னூட்டங்கள். பின்னூட்ட இளவரசன் என்று உனக்குப் பட்டம் கொடுக்கிறேன். வாழ்க. வளர்க.//

ஆஹா... உங்களிடமிருந்து பட்டம் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி!!!

பட்டினத்தாருக்கே தாயன்பை விட முடியவில்லை என்றால் நாம் எம்மாத்திரம்???

தாயன்பின் சிறப்பே இதுதான்...

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

kalaketeenga V.P :)
-Anonymous ஸ்னேகிதி. //

ஸ்னேகிதியே,
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

kavithayilum kalakkureenga vetti. //
மிக்க நன்றி அருண்...

//bostonukku parentsa koopidunga. //
நானே சீக்கிரம் ஊருக்கு போயிட்டு வருவேன்...

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

ஊருக்கு போயிட்டு வாங்க அப்பு...

- உண்மை //

டேட் எல்லாம் கன்ஃபார்மாகி போன வாரம் தான் கேன்சலாச்சி... மேனஜர்கிட்ட சீக்கிரம் பேசனும்...

நாமக்கல் சிபி said...

//முகில் said...

சேயுள்ளமே இப்படியெனில், தாயுள்ளம் எப்படியோ!!! //

இதைவிட பல மடங்கு பாசத்துடனும், வருத்ததுடனும்!!!

Anonymous said...

//நீ என்ன அன்னப்பறவையா???
நான் செய்த தொந்தரவுகளை
மறந்துவிட்டு குறும்புகளை மட்டுமே
உன் மனதில் சேமித்து வைத்திருக்கிறாய்!!!//


அருமை !

Anonymous said...

கவிதை மிக அருமை வெட்டி..
தாய்‍-பிள்ளை மற்றொரு கோணத்தில் இங்கே
http://gurupaarvai.blogspot.com/ ஒரு விளம்பரம்தாங்கண்ணா :))

சேதுக்கரசி said...

நல்லா இருக்கு பாலாஜி.

யப்பா.. நல்லவேளை டெம்பிளேட்டை மாத்தினீங்க. இது வாசிக்க இன்னும் எளிதா இருக்கு (this is more readable-னு எழுத வந்தேன்... கோவி கண்ணனின் "சொல் ஒரு சொல்" பதிவைப் படிச்சிட்டு இங்கே வந்ததால உருப்படியான தமிழில் எழுதுவோமேன்னு தான்... :-))

Raji said...

Hmmm..naan yerkanavae unga blog visit panirukkaen..Naduvula konjam kanama poitaen...
Romba nalla irukkunga...
Thaniyilrundhu pirichu paal urinjum annam poola namba seyura kurumbu mattum gyabagam vachukkuradhu amma nu solli..First linelayae kai thattal vangiduraenga ....
Nalla vandhurukku..Thodurundhu kavidhai ezhdha en vazhthukkal...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

//நீ என்ன அன்னப்பறவையா???
நான் செய்த தொந்தரவுகளை
மறந்துவிட்டு குறும்புகளை மட்டுமே
உன் மனதில் சேமித்து வைத்திருக்கிறாய்!!!//


அருமை ! //

மிக்க நன்றி நண்பரே!!!

வெட்டிப்பயல் said...

// guru said...

கவிதை மிக அருமை வெட்டி..
தாய்‍-பிள்ளை மற்றொரு கோணத்தில் இங்கே
http://gurupaarvai.blogspot.com/ ஒரு விளம்பரம்தாங்கண்ணா :)) //

இதோ வந்துட்டேன் குரு :-)

வெட்டிப்பயல் said...

// சேதுக்கரசி said...

நல்லா இருக்கு பாலாஜி.
//
மிக்க நன்றி சேதுக்கரசி...

//
யப்பா.. நல்லவேளை டெம்பிளேட்டை மாத்தினீங்க. இது வாசிக்க இன்னும் எளிதா இருக்கு (this is more readable-னு எழுத வந்தேன்...
//
ஓ!!! எனக்கு என்னுமோ பழைய டெம்ப்ளேட் தான் பிடிச்சிருந்துது!!!

//
கோவி கண்ணனின் "சொல் ஒரு சொல்" பதிவைப் படிச்சிட்டு இங்கே வந்ததால உருப்படியான தமிழில் எழுதுவோமேன்னு தான்... :-)) //
எல்லா புகழும் கண்ணனுக்கேனு சொல்றீங்களா???

வெட்டிப்பயல் said...

//Raji.R said...

Hmmm..naan yerkanavae unga blog visit panirukkaen..Naduvula konjam kanama poitaen...
Romba nalla irukkunga...
Thaniyilrundhu pirichu paal urinjum annam poola namba seyura kurumbu mattum gyabagam vachukkuradhu amma nu solli..First linelayae kai thattal vangiduraenga ....
Nalla vandhurukku..Thodurundhu kavidhai ezhdha en vazhthukkal... //

மிக்க நன்றி ராஜி!!!
அப்பப்ப வந்துட்டு போங்க :-)

gurusri said...

ஹே வெட்டினு,பெர்ர வச்சுகிட்டு உருபடியான கவிதை கொடுத்திருக்கீங்க .சூப்பரு. அப்படியே pick up பன்னுங்க‌.